Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuruvi Koodu
Kuruvi Koodu
Kuruvi Koodu
Ebook86 pages32 minutes

Kuruvi Koodu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையின் நாயகியான அர்ச்சனா கணவனை இழந்து நிர்கதியாக இருக்கிறாள். அர்ச்சனாவின் இந்த தனிமையில் கௌதம் என்பவன் வருகிறான். கௌதமிற்கு தனியாக ஒரு குடும்பம் இருக்கிறது. மனைவியை பிரிந்து வாழ்கிறான். குருவிக்கூடு போல் இருக்கும் கௌதமின் குடும்பம் கலைந்து கிடக்கிறது. இந்த கூட்டை அர்ச்சனா சேர்த்து வைப்பாளா? இனி நடப்பதை படித்து அறியுங்கள்.

Languageதமிழ்
Release dateMay 18, 2024
ISBN6580155610937
Kuruvi Koodu

Read more from Lakshmi

Related to Kuruvi Koodu

Related ebooks

Reviews for Kuruvi Koodu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuruvi Koodu - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    குருவிக் கூடு

    Kuruvi Koodu

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    அலங்கார மேஜையின் ஆளுயரக் கண்ணாடி முன் அர்ச்சனா நின்று கொண்டிருந்தாள்.

    ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு விரைய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருக்கவில்லை.

    கஞ்சி மொடமொடப்புடன் பெட்டி போட்ட ஆரஞ்சு வண்ணச் சேலையும், அதற்கேற்ற ரவிக்கையும் அணிந்து கெண்டு தலை முடியை வாரிக் கட்டிக்கொண்டு அவள் வெளியே புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள்.

    ஆரஞ்சு வண்ண வாயில் புடவை அவளுக்கு மிகவும் எடுப்பாகத் தானிருந்தது.

    சில தினங்களுக்கு முன் அவள் தனது அலுவலகத்திற்கு இதே சேலையைக் கட்டிக்கொண்டு போனபோது கௌதம் சொன்னது நினைவுக்கு வரவே தனக்குள் மெள்ளச் சிரித்துக் கொண்டாள்.

    இந்த நிறம் உனக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கு. நீ அலுவலகத்தின் முன் பக்கத் தோட்டத்திற்குள் நுழையும்போது மாடியிலிருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். நெருப்புப் பிழம்பு நடந்து வந்து கொண்டிருந்ததைப் போன்றதொரு பிரமிப்பு ஆமாம்! உண்மையில் நீ நெருப்புக்குச் சமமானவள் உன்னை யாரும் எளிதில் அணுகவே முடியாது கண்டிப்பும் கறாருமாக நீ நடந்து கொள்ளும் முறை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கு.

    அவள்... தன் உருவத்தைக் கண்ணாடியில் மேலும் கீழும் பார்த்தபடி லேசாக முறுவலித்துக் கொண்டாள். அவனோடு ஒப்பிடும்போது நிறத்தில் அவள் கொஞ்சம் மட்டந்தான். நிழலில் அமர்ந்து வேலை செய்தாள். அதனால் அவளது மாநிற மேனி வெய்யிலில் கருக்காது வெளுத்திருந்தது.

    ஓங்கி உயரமாக, ஒடிசலாக இருந்தாள். அத்துடன் வயது தெரியாத ஓர் இளமைத் தோற்றம். அது அவர்கள் வீட்டுப் பரம்பரைச் சொத்து.

    வரைந்து வைத்தது போன்ற புருவங்கள், வரிசைப் பற்கள், இடைவரை தொங்கிய வழவழவென்ற நீண்ட கூந்தல், அவளது தோற்றத்திற்குக் கவர்ச்சி ஊட்டின.

    கௌதம் அவளைவிட உயரமாக இருந்தான். கொஞ்சம் பருமனான உடல் வாகு. சிரிக்கும் பொழுது தெரிந்த சிங்கப் பற்கள் முகத்திற்குக் களைகட்டின. தன் சுருண்ட கிராப்பு முடியை அவன் மேலே வழித்துவாரிக் கொண்டிருந்த விதம் அவளுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. எந்தவித உடை அணிந்தபோதிலும் அவனது தோற்றம் நிறத்தில் எல்லாமே பொருத்தமாக இருப்பதாக அவளுக்குத் தெரிந்தது.

    அவள் வேலை செய்த நிறுவனத்தில்தான் கௌதம் வேலை பார்த்து வந்தான்.

    உமா கெமிகல்ஸ் என்னும் அந்தக் கம்பெனிக்கு கல்கத்தாவிலிருந்த தலைமை அலுவலகமும் பெங்களூர், சென்னை இரண்டிலும் கிளை அலுவலகங்களும் இருந்தன.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவன் கல்கத்தாவிலிருந்தும் மாற்றலாகி உத்தியோக உயர்வுடன் சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தான். கம்பெனியின் விற்பனைப் பகுதியில் தலைமை அலுவலராக வந்து சேர்ந்த அவனைப் பற்றி மெல்லப் பல கிசுகிசுக்கள் காற்று வாக்கில் அவள் காதுகளில் விழுந்தன.

    வேலைக்கு வந்து ஓர் ஆண்டுகாலம் ஆகியும் அவன் அவளை சந்திக்கும்போது வலியப் பேசவோ, யார் எனத் தெரிந்துகொள்ளவோ முற்பட்டதில்லை. அந்த அலுவலகத்திலிருந்த யாரிடமும் அவன் நெருங்கிப் பழக முயன்றதேயில்லை. பட்டும் படாமலுமாக மிகவும் விட்டேத்தியாகத்தான் இருந்தான்.

    அவளைவிட உயர் அதிகாரியாக இருக்கிறோம் என்ற கர்வம் போலிருக்கிறது எனத்தான் எண்ணினாள்.

    அந்த ஆண்டு கம்பெனியின் வருஷ விழாவின் விருந்தின்போது அவன் பக்கத்தில் அவள் அமர நேரிட்டது.

    என் பெயர் கௌதம்... நான் விற்பனைப் பகுதியில் போன ஆண்டுதான் வந்து சேர்ந்தேன்... என்று தன்னை அவன் அறிமுகம் செய்துகொண்டான்.

    ‘எனக்குத் தெரியும் உங்களைப் பற்றிச் சில கிசுகிசுக்களைக் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்’ என அவள் சொல்ல முடியாதே!

    என் பெயர் அர்ச்சனா நான் அக்கௌண்ட் செக்‌ஷனில் வேலை பார்க்கிறேன்... இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது...

    நான் சென்னையைச் சேர்ந்தவன்தான். கல்கத்தாவிலும், பெங்களூரிலும் வேலை காரணமாகக் கொஞ்ச காலம் தங்கியிருந்தேன்.

    நானும் சென்னையைச் சேர்ந்தவள்தான்... இங்கேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். காஞ்சிபுரத்தைத் தாண்டி வெளியூர் பக்கம் சமீபத்தில் போன நினைப்பே இல்லை. அவள் லேசாகச் சிரித்தாள். அவனும் சிரிப்பில் கலந்து கொண்டான்.

    இப்படி மெள்ள ஆரம்பித்த சிநேகம்.

    பின்னர் அவளைக் கம்பெனியின் வாயிற்புறத்துப் பெரிய தோட்டத்திலோ, மாடிப்படிகளிலோ, லிப்ட்டிலோ எங்கே கண்டபோதிலும் நேச பாவத்துடன் புன்னகைத்தான்.

    அவளும் பதிலுக்கு முறுவலித்தாள்... பின்னர்... உணவு நேரத்தின் போது...

    அவள் வேலை செய்த பகுதிக்கு எதேச்சையாக வருவது போல வரத் தொடங்கினான். அவள் மேஜை எதிரே வந்து உட்கார்ந்து பேச்சுக் கொடுத்தான்.

    அவர்களது நட்பு வேகமாக விருத்தியடைந்தது.

    ஒரு நாள் அவளைத்

    Enjoying the preview?
    Page 1 of 1