Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒன்று இரண்டு இறந்து விடு
ஒன்று இரண்டு இறந்து விடு
ஒன்று இரண்டு இறந்து விடு
Ebook155 pages37 minutes

ஒன்று இரண்டு இறந்து விடு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காரைப் பார்த்ததும், வாயிலிருந்த பீடிக்கு வாலண்டரி ரிடையர்மெண்ட் கொடுத்த கூர்க்கா, காம்பௌண்ட் கேட்டை வேகவேகமாய் திறந்துவிட்டான்.
கார் உள்ளே நுழைந்து போர்டிகோவில் அதங்கி நின்றது. ஹரிஹரேஷ் காரை விட்டு இறங்காமல் கீதாம்பரியை ஏறிட்டான்.
“கீத்து...”
“ம்...”
“நீ படுத்து தூங்கு... நான் ஸ்டார்லைட் ஹோட்டல் வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்...”
கீதாம்பரி சிணுங்கிக் கொண்டே - அவனுடைய தோளில் குத்தினாள்.
“நீங்க அந்த ஸ்டோரி டிஸ்கஷனுக்கு போய்த்தான் ஆகணுமா...?”
“என்ன கீத்து... இப்படி கேட்டுட்டே... நாளைக்கு மத்தியானம் நாம் சிங்கப்பூர் புறப்படறோம்... திரும்பி வர ஒரு மாசமாயிடும்... இன்னிக்கு கே.ஜே.ஆர். மூவீஸ் கதையை பைனலைஸ் பண்ணிட்டுப் போனாத்தான்... நான் திரும்பி வர்றதுக்குள்ளே ஸ்கிரிப்ட் ரெடியாயிருக்கும்...”
“சரி... டிஸ்கஷன் முடிஞ்சு எத்தனை மணிக்கு வருவீங்க?”
“எப்படியும் மூணு மணி ஆயிடும்... எவ்வளவு நேரமானாலும் நான் வந்துடறேன். நீ எனக்காக தூங்காமே காத்திட்டிருக்க வேண்டாம் கீத்து.”
கீதாம்பரி காரைவிட்டுக் கீழே இறங்கினாள். காரைச் சுற்றிக் கொண்டு ஹரிஹரேஷிடம் வந்தாள்ஜெயக்குமாரைப் பத்தி போலீஸ் கம்பளையண்ட் தர வேண்டாமா...?
“நான் ஸ்டார்லைட் ஹோட்டலுக்குப் போற வழியில்தானே போலீஸ் ஸ்டேஷன்...? இன்ஸ்பெக்டர் அபு தாஹிர் ட்யூட்டியில் தான் இருப்பார். ஸ்ட்ராங்கா ஒரு கம்பளைய்ண்ட் எழுதி குடுத்துட்டு போயிடறேன்... வரட்டுமா...?”
“கொஞ்சம் குனிங்க...”
“எதுக்கு...?”
“குனிங்க... சொல்றேன்.”
ஹரிஹரேஷ் குனித்தான்.
அடுத்த விநாடி -
அவனுடைய கன்னத்தில் 'பச்' சென்று முத்தமிட்டாள் கீதாம்பரி. ஹரிஹரேஷ் புன்னகைத்து - “எதிர்பாராத இனிய அதிர்ச்சிக்கு என்னுடைய நன்றி...”
காரைக் கிளப்பினான்.
“சீக்கிரமா வந்துடுங்க.”
“ம்...”
கார் காம்பௌண்ட் கேட்டைக் கடந்து - ரோட்டில் பாய்ந்தது. போக்குவரத்து வெறிச்சோடிப் போயிருந்த சென்னை நகர ரோடுகளில் கார் பயணித்து - ஒரு பத்து நிமிஷத்தை விழுங்கியபின் - அந்த போலீஸ் ஸ்டேஷனின் வாசலுக்கு முன்னால் நின்றது.
ராத்திரி கேஸ் நான்கைந்தைப் பிடித்து மிரட்டிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் அபுதாஹிர் - ஹரிஹரேஷைப் பார்த்ததும் - இருக்கையை விட்டு எழுந்தார். (ஹரிஹரேஷின் ஹைஸ்கூல் நண்பன்)
“வாங்க டைரக்டர் ஸார்... என்ன இந்நேரத்துல... ஏதாவது ஸ்டுடியோ பிராப்ளமா...?”
“நோ... நோ... என்னோட பிராப்ளம் தான். ஒரு கம்பளையண்ட் கொடுக்கணும்...”கம்ப்ளைய்ண்ட் ... யார் மேலே...?”
“தொப்பியைக் கழட்டி வெச்சுகிட்டு... என்னோட கார்க்கு வாங்க இன்ஸ்பெக்டர்... கொஞ்சம் ப்ரெண்ட்லியா பேசணும்...”
அபுதாஹிர் அருகில் நின்றிருந்த கான்ஸ்டபிளை ஏறிட்டார்.
“யோவ் ட்ரிபிள் ஃபோர்... புடிச்சுட்டு வந்த நாலு கழுதைகள் மேலேயும் எப்... ஐ... ஆர். புக் பண்ணி உள்ளே தள்ளய்யா... நான் வந்ததும் முட்டிக்கு முட்டி தட்டலாம்...”
ஹரிஹரேஷும், அபுதாஹிரும் காரில் ஏறி உட்கார்ந்தார்கள். இன்ஸ்பெக்டர் அபு தொப்பியில்லாத தன் தலையை இரண்டு கைகளாலும் கோதிக்கொண்டே கேட்டார்.
“என்னடா, வீட்ல ஏதாவது பிராப்ளமா...?”
“ஆமா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி - கீதாம்பரியோட மொதல் புருஷன் நடு ரோட்ல எங்களை மறிச்சு... என்னையும் அவளையும் கேவலமா பேசினான்.”
“என்ன பேசினான்...? மிரட்டினானா?”
“மிரட்டலை...”
“பின்னே...?”

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
ஒன்று இரண்டு இறந்து விடு

Read more from ராஜேஷ்குமார்

Related to ஒன்று இரண்டு இறந்து விடு

Related ebooks

Related categories

Reviews for ஒன்று இரண்டு இறந்து விடு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒன்று இரண்டு இறந்து விடு - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    ஹோட்டல் சோழாவில் பார்ட்டி முடிகிறபோது சரியாய் பத்துமணி. ஹரிஹரேஷ் தன் மனைவி கீதாம்பரியோடு ஹாலை விட்டு வெளியே வர எத்தனித்தபோது - பத்திரிகை நிருபர்கள் காமிரா ப்ளாஷ்களோடு சூழ்ந்து கொண்டார்கள்.

    மிஸ்டர் ஹரிஹரேஷ்... உங்ககிட்டே சில கேள்விகள்... ஒரு அரைமணி நேரம் எங்களுக்காக ஒதுக்கித்தர முடியுமா...?

    ஹரிஹரேஷ் களைப்பான விழிகளோடு கீதாம்பரியைப் பார்த்தான். வியர்த்துப் போயிருந்த முகத்தை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டே கேட்டான்.

    என்ன கீத்து பண்ணலாம்...?

    கீதாம்பரி புன்னகைத்தாள்.

    தமிழ் பத்திரிகைகளோட ஆதரவு மட்டும் இல்லாமே இருந்திருந்தா. நான் ஒரு நடிகையாகவோ... நீங்க ஒரு டைரக்டராகவோ வளர்ந்திருக்க முடியாது... ஸோ... அவங்க பேட்டிக்காக கேட்கிற அரைமணி நேரத்தை நீங்க கொடுத்துதான் ஆகணும்...

    பத்திரிகை நிருபர்கள் கைதட்டினார்கள்.

    தாங்க்யூ மிஸஸ் கீதாம்பரி...

    காமிராக்கள் குத்தகைக்கு பேசின மாதிரி ஒன்றாய் பளிச்சிட்டு அடங்கின.

    என்னோட ஒய்ப் ஆர்டர்க்கு கட்டுப்பட்டு அரைமணி நேரத்தை போட்டிக்காக ஒதுக்கியிருக்கிறேன்... கேள்விகளை மளமளன்னு கேட்க ஆரம்பிச்சுடுங்க...

    சினிமாலயா பத்திரிகை நிருபர் முதல் கேள்வியைக் கேட்டார்.

    உங்க திருமண வாழ்க்கை உங்களுக்கு சந்தோஷமாருக்கா...?

    ஏன் அப்படி கேட்கறீங்க...?

    உங்க ரெண்டு பேரோட திருமணத்துக்கு வெளியே இருந்து நிறைய எதிர்ப்பு வந்ததா கேள்விப்பட்டோம்...

    எதிர்ப்பு வராமல் இருக்குமா...? நான் ஏற்கெனவே கல்யாணமானவன். முதல் மனைவியின் சம்மதத்தின் பேரில் - கீதாம்பரிக்கு தாலி கட்டியிருக்கேன். கீதாம்பரியும் ஏற்கெனவே கல்யாணமானவள். கோர்ட் மூலமாக கணவனிடமிருந்து டைவோர்ஸ் வாங்கிக்கொண்டு - உடனே எனக்கு கழுத்தை நீட்டியவள். என்னோட தரப்பிலேயும் சரி... அவளோட தரப்பிலேயும் சரி... நிறைய எதிர்ப்புகள் இருந்தது. இப்பவும் இருக்கு... அதைப்பத்தி - நானோ அவளோ கவலைப்படப் போறதில்லை...

    நாளைக்கு மத்தியானம் நீங்க ரெண்டுபேரும் சிங்கப்பூர் போறதா ஃபீல்ட்ல பேச்சு அடிபடுதே... உண்மையா...?

    உண்மைதான்... நானும் கீதாம்பரியும் ஒரு மாத காலம் சிங்கபூர்ல இருந்துட்டு வர்றதுக்காக - நாளைக்கு மத்தியானம் புறப்படறோம்...

    ஒரு வயதான நிருபர் தலையைச் சொறிந்து கொண்டே கேட்டார். இதை ஹனிமூன் ட்ரிப்ன்னு நாங்க வெச்சுக்கலாமா...?

    நீங்க வெச்சுக்க முடியாது. நாங்கதான் வெச்சுக்கணும்...

    ஹால் முழுக்க சிரிப்பு பரவியது.

    மிஸஸ் கீதாம்பரி... உங்ககிட்டே ஒரு கேள்வி...

    'ம்... கேளுங்க..."

    புதுப்படங்களை நீங்க ஒத்துக்கிறதில்லையாமே...?

    ஆமா...

    ஏன்...?

    இனிமே நடிக்க வேண்டாம்ன்னு பார்க்கிறேன்...

    உங்களை மாதிரியான - ஒரு திறமையான நடிகை தமிழ், பீல்டை விட்டு போறது அவ்வளவு ஆரோக்கியமா எனக்குத் தெரியலை... வருஷத்துக்கு ரெண்டு படங்களிலாவது நடிக்கலாமே...

    நான் வேண்டாம்ன்னு முடிவு பண்ணி ஒருமாசமாச்சு...

    உங்க கணவர் ஹரிஹரேஷ் உங்களை நடிக்க வேண்டாம்ன்னு சொல்றாரா?

    அவர் என்னோட சுதந்திரத்துல குறுக்கிடறதில்லை... இது நானா எடுத்த முடிவுதான்... இதுவரைக்கும் அறுபத்தெட்டு படம் பண்ணியிருக்கேன். அதுல இருபது படம் ஜூபிலி போயிருக்கு. முப்பத்திரெண்டு படம் நூறு நாள் ஓடியிருக்கு... ஒரு தடவை ஊர்வசி விருது வாங்கியிருக்கேன். என்னோட முதல் கல்யாணம்... அவசர அவசரமா நடந்த ஒரு அலங்கோலக் கல்யாணம்... எனக்கு கணவனா வாய்ச்சவர்...

    கையை உயர்த்தினான் ஹரிஹரேஷ். கீத்து... வேண்டாம்... பழசைக் கிளறாதே... நடந்ததையெல்லாம் மறக்கத்தான் நீயும் தானும் வாழ்க்கையில இணைஞ்சிருக்கோம். சட்டப்படி நீ உன்னோட முதல் கணவன்கிட்டயிருந்து பிரிஞ்சுட்டே... இனிமே அவரைப்பத்தி நீ எதுவுமே பேசக்கூடாது...

    சரி... பேசலை... வாய் மேல் தன் நீளமான பொன்னிற விரலை வைத்துக்கொண்டாள் கீதாம்பரி.

    தேவி பத்திரிகையின் நிருபர் தயக்கமான முகபாவத்தோடு கீதாம்பரியை ஏறிட்டார்.

    நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை உங்ககிட்டே கேட்கலாமா?

    என்ன கேள்விப்பட்டீங்க?

    ரெட்டிகாரு ஒரு புதுப்படத்திற்கு புக் பண்ண உங்க வீட்டுக்கு வந்ததாகவும் - நீங்க அவரை மரியாதைக்குறைவா பேசி தொரத்திட்டதாகவும் சொல்றாங்களே உண்மைதானா?

    கீதாம்பரி புன்னகைத்தாள்.

    நான் அப்படி நடந்துகிட்டது உண்மைதான்... அதுக்கான காரணத்தையும் இப்ப சொல்றேன்... கேட்டுக்குங்க... ரெட்டிகாரு அட்வான்ஸ் பணத்தோடு வந்து - புதுப் படத்துல நடிக்கக் கூப்பிட்டார். நான் இனிமே நடிக்கப் போறதில்லைன்னு சொன்னேன். உடனே என்னைப் பத்தி மோசமாக பேச ஆரம்பிச்சார். என்னோட கடந்தகால சம்பவங்களைக் கிளறினார். அவர் ரொம்பவும் மோசமா பேசினதைக் கேட்டிட்டிருந்த என்னோட வீட்டு சமையல் ஆள் சங்கர சுப்பு... கோபம் தாங்காமே செருப்பை எடுத்துக் காட்டிட்டான். உடனே அவர் எகிறி குதிக்க, நான் திட்ட - ரோட்ல ஜனம் கூடி...

    பேட்டியை முடிச்சுக்கலாமா...?

    ஹரிஹரேஷ் வாட்ச்சைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

    Enjoying the preview?
    Page 1 of 1