Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தான் - தன் சுகம்
தான் - தன் சுகம்
தான் - தன் சுகம்
Ebook107 pages58 minutes

தான் - தன் சுகம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அஞ்சலி பி.காம் முடித்ததும் தெரிந்த கம்பெனியில் சொல்லி சித்தப்பா வெங்கட்தான் வேலை வாங்கித் தந்தார்!
எடுத்த எடுப்பில் பதினைந்தாயிரம் சம்பளம்! பத்துமணி முதல் ஆறு மணி வரை!
அஞ்சலி குஷியாகி விட்டாள்.
இங்கே அம்மா மல்லிகா வாயைப் பிளந்து விட்டாள்!
“இதப்பாருடி! சாரதி சம்பளத்தை எடுத்து குடும்பச் செலவை நடத்திட்டு, உன் சம்பளத்துல சீட்டு கட்டி, நகை - துணி எல்லாம் வாங்கிடலாம்! புரியுதா?”
அஞ்சலி பதிலே சொல்லவில்லை!
முதல் மாச சம்பளம் வந்ததுமே பத்தாயிரம் ரூபாய்க்கு அவளுக்கு ட்ரஸ், மேக்கப் சாதனங்கள் - செருப்புகள் என வாங்கிக் குவித்தாள்.
இரண்டு பெரிய பைகளோடு வந்தாள்.
“என்னடீ இது அக்ரமம்? ஏண்டீ இப்பிடி செலவழிச்சே?”
“படிக்கற காலம் வரைக்கும் யூனிஃபார்ம் தவிர, ரெண்டே ரெண்டு செட் ட்ரஸ்! அதுவும் மகா மட்டம். விதம்விதமா மத்தவங்க உடுத்தறதைப் பார்த்து நான் பட்ட அவமானம் எனக்குத்தான் தெரியும். உன் புருஷன் என்ன கிழிச்சார்?”
“ஏண்டீ இப்பிடி பேசற? அவர் உனக்கு அப்பா!”
“ஆமாம்! ஒரு பொம்பளையை கர்ப்பமாக்கிட்டா, அந்த ஆளுக்குப் பேரு அப்பாவா? அதுக்கு தனி சாமர்த்தியம் வேணுமா?”“அறைஞ்சேன்னா பாரு! ஒரு அம்மாகிட்ட பேசற பேச்சாடீ இது?”
“நீ ஒரு நல்ல அம்மாவா எப்ப நடந்திருக்கே? வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டிருக்கியா? பொங்கி வச்சிடுவே, கடமைக்கு! அதை நாங்களும் தின்னு தொலைக்கணும்!”
“ஏண்டீ இப்பிடி பேசற? நான் என்னடீ செய்வேன்? உங்கப்பா தர்றதை வச்சுத்தானே நான் குடும்பம் நடத்த முடியும்?”
“நீ கேட்டு வாங்கணும்! ரெண்டு புள்ளைகளை ஆளாக்கணும்னு சொல்லி, அந்த ஆள் சட்டையை புடிச்சிருக்கணும். போராடி குடித்தனம் செஞ்சிருக்கணும். உனக்கு ரெண்டு வேளை சோறு கிடைச்சா போதும்னு கம்முனு இருந்துட்டே!”
“இது நியாயமாடீ?”
“இதப்பாரு! நீயோ, உன் புருஷனோ எங்களை ஆளாக்கலை! அப்புறம் கேள்வி கேக்க மட்டும் யோக்யதை இருக்கா! கம்முனு இரு!”
“சர்டீ! பத்தாயிரம் ரூபாய்க்கு உனக்கு வாங்கிட்டே! மீதி அஞ்சாயிரம் எங்கே?”
“எனக்கு கைச் செலவுக்கு வேண்டாமா! சாரதி சம்பாதிக்கறானில்லை? கேட்டு வாங்கு!”
“உங்கப்பனும் ஒழுங்கா குடும்பம் நடத்தலை! நீங்க ரெண்டு பேரும் ஆளானதும் ஆனந்தப்பட்டேன். இப்ப உங்ககிட்ட பிச்சை எடுக்க வேண்டியிருக்கு. என் தலையெழுத்து!”
சாரதி உள்ளே வந்தான்!
“என்ன சொல்றானு கேட்டியாடா?”
“இதப்பாரம்மா! இந்த வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிப் போட்டு, வீட்டு நிர்வாகத்துக்கும் நான் பணம் குடுத்துர்றேன்!”
“எங்கே தர்ற! மளிகை, பால், காய் எல்லாத்துக்கும் கணக்குப் போட்டுத் தர்றே! என் கைல சல்லிக்காசு இல்லையே?எதுக்கு? குடும்பம் நடக்குதா இல்லையா?”
“உங்கப்பா தர்றது கொஞ்சமா இருந்தாலும் அதை என் கைல தந்துட்டுப் போவார்!”
“அவர் டூர்ல இருக்கார்! வேற வழியில்லை! நான் உள்ளூர்லதானே இருக்கேன்! இதப்பாரு! தேவைகள் நிறைவேறுதா இல்லையா? உன் கைக்கு எதுக்குக் காசு? தாறுமாறா செலவழிக்க நான் விடமாட்டேன்!”
சாரதியின் ஸ்டைல் இது!
மளிகை சாமான்கள், பால், காய்கறிகள் போன்ற பொருட்களுக்கு கணக்குக் கேட்டு எண்ணி எண்ணித்தான் தருவான்!
பத்துரூபாய் குறையுமே ஒழிய கூடாது!
மல்லிகா நொந்து போனாள்!
சாரதிக்கு இந்த ரெண்டு வருடங்களில் சம்பளம் கூடி விட்டது! அடிக்கடி வெளிநாட்டுக்குப் போவது.. உள்ளூர் ப்ரொஜக்ட் என நன்றாக உழைத்ததால, சம்பளம் அறுபதாயிரத்தைத் கடந்து விட்டது! ஆனால் அதை வீட்டில் சொல்லவில்லை!
“ஏண்டா! உன் கூடப்படிச்சவங்க சம்பளம் நிறைய உயரும் போது உனக்கு மட்டும் அதே சம்பளமா?”
மல்லிகா விடவில்லை! கிளறினாள்.
“என் தகுதிக்கு இதுதான் கிடைக்கும்!”
வாயடைத்து விடுவான்!
ஆனால் வீட்டுக்குத் தரும் பணம் போக, சேமிக்கத் தொடங்கி விட்டான்.
மூன்று வருடங்கள் ஓடி விட, சேமிப்பில் பன்னண்டு லட்சம் சேர்ந்து விட்டது!
அஞ்சலிக்கு வரன் பார்க்க வேண்டும் என்று மல்லிகா ஆரம்பித்து விட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
தான் - தன் சுகம்

Read more from தேவிபாலா

Related to தான் - தன் சுகம்

Related ebooks

Reviews for தான் - தன் சுகம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தான் - தன் சுகம் - தேவிபாலா

    1

    இந்தக் கதையின் நாயகன் சாரதி என்ற பார்த்தசாரதி!

    இவன் குணாதிசயத்தைப் புரிந்து கொண்டு விட்டால் - அதுதான் இந்தக் கதை.

    இப்போது சாரதிக்கு இருபத்திஏழு வயது! சுயநலத்தின் உச்சகட்டம் யாரென்றால் அது இந்த சாரதிதான்!

    சாரதியின் அப்பா அதற்குமேல! அவர் தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் மனிதர்!

    விற்பனை பிரதிநிதி உத்யோகம்!

    ஒரு சுமாரான தனியார் நிறுவனத்தில் உத்யோகம். ரொம்பவும் சுமாரான சம்பளம்! சாரதி மூத்த பையன்! அவனைவிட மூன்று வயது குறைந்த தங்கை அஞ்சலி!

    சாரதியின் அம்மா குடும்பத் தலைவி!

    அப்பா மாதத்தில் இருபது நாட்களும் டூரில் இருப்பார். சம்பளத்தை மட்டும் மனைவி மல்லிகாவிடம் தந்து விடுவார்!

    அவருக்கு வரும் பேட்டா, இன்சென்டிவ் இந்த மாதிரி பணத்தை அவர் தன் செலவுக்கு வைத்துக் கொள்வார்.

    மது, மாது என அவர் சக்திக்கு தக்கபடி எல்லா பழக்கங்களும் உண்டு!

    சம்பளப் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த வேண்டிய கட்டாயம் மல்லிகாவுக்கு! பெரும்பகுதி பிறந்த வீட்டு ஆதரவுதான். அப்பா, தம்பிகள் என அதிகமாக அவளைத் தாங்கிப் பிடித்ததால் குடும்பம் ஓடியது!

    மகா சிக்கனம். அப்படி நடந்தால்தான் குடும்பம் ஓடும்!

    காலை ஒரு சோற்றைப் பொங்கி, ஒரு குழம்பும் வைத்தால் இரவு வரை அது ஓடும்!

    காய்கறிகள், பால் எல்லாம் ரொம்பவே குறைச்சல்!

    வாடகை வீடு!

    அதிகம் துணிமணிகள் வாங்க மாட்டாள்.

    வருடத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்குப் பிறந்த வீட்டிலிருந்து பண்டிகை நாட்களுக்கு துணிமணிகள் வரும்!

    எல்லாக் குழந்தைகளையும் போல எல்லா வசதிகளும் சாரதிக்கும் அஞ்சலிக்கும் கிடைக்கவில்லை!

    அதனால் ஏக்கப் பெருமூச்சு அதிகம்!

    ஓட்டல் சாப்பாடு - பலகாரங்கள் - விதம்விதமான உடைகளை மற்ற பிள்ளைகள் போடும் போது பெருமூச்சு விட்டுத்தான் பழக்கம். எதுவும் கிடைக்காது!

    இதனால் உண்டான ஆதங்கத்தில் அஞ்சலி கோபக்காரியாக மாறிவிட்டாள்!

    மற்றவர்களைப் பார்த்து பொறாமை பிடுங்கித்தின்னும்!

    அது ஆத்திரமாக வெடிக்கும். வீட்டில் எந்த நேரமும் ஏக்கப் பெருமூச்சும் அழுகையும் தான்!

    என்னை ஏண்டீ படுத்தற? உங்கப்பனுக்கு பொறுப்பு இல்லை! முன்னேறி மேலே வரணும் - பொண்டாட்டி, புள்ளைகளை நல்லா வாழ வைக்கணும்னு அக்கறை இல்லை! கொண்டு வந்து தர்றதை வச்சுத்தானே நான் குடித்தனம் நடத்த முடியும்? எனக்கு மட்டும் சொந்த வீடு, நகைகள், சேலைனு வாங்கிக்க ஆசையில்லையா? எதுக்கும் நான் குடுத்து வைக்கலை! பிறந்த வீட்ல ஏதாவது குடுத்தா உண்டு! இதுக்கு மேல என்னைப் போட்டுப் படுத்தினா நான் ஓடிப்போயிடுவேன்!

    பக்கத்து வீட்டு ஆன்ட்டி பேங்க்ல உத்யோகம். அங்கிள் ரயில்வேல வேலை! நீயும் நிறையப் படிச்சிருந்தா, இப்ப வேலைக்குப் போகலாமில்லையா?

    என்னை யாரு படிக்க வச்சது? எஸ்.எல்.சி தாண்டினதே பெரிசு!

    உனக்கு மூளையில்லை!

    இருக்கறது போதும்டி! அவரவருக்குனு ஒரு வாழ்க்கை இருக்கும்! அதைத் தாண்டி குதிக்கணும்னா நடக்காது!

    குழந்தைகளின் புலம்பல் மொத்தமும் அம்மாவிடம்தான்.

    அப்பாவிடம் எதுவும் எடுபடாது! அவருக்கு பற்றுதலும் அறவே இல்லை! டூர் இல்லாத நாட்களில் பிள்ளைகளுடன், மனைவியுடன் சந்தோஷமாகக் கழிப்போம் என்றிருக்க மாட்டார்!

    அந்த நாட்களும் ஊர் சுற்றுவது... சரக்கடிப்பது என்று தன் சுகம் மட்டுமே!

    மல்லிகாவுக்கு அலுத்துப் போய் விட்டது!

    சதாசிவத்தின் தம்பி நன்றாகப் படித்து அடிக்கடி வெளிநாடு போய் சம்பாதித்து வரும் மனிதன்!

    அண்ணன் குடும்பத்தின் மேல் பற்று கொண்டவர்.

    நிறைய செய்வார்.

    சித்தப்பா என்றால் சாரதி, அஞ்சலி இருவருக்கும் பயம், பக்தி, நிறைய எதிர்பார்ப்பு எல்லாம் உண்டு!

    சித்தியால் எந்தத் தடையும் இல்லை!

    ஒரே ஒரு பெண் மட்டும் - சுஜாதா!

    சாரதி, அஞ்சலி இருவரையும் நல்ல பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிப்பு செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் சித்தப்பா வெங்கட்தான்!

    வருடத்துக்கு இரு முறை துணிமணிகள், தீபாவளி நேரத்தில் பட்டாசு, பலகாரங்கள் என அண்ணன் குடும்பத்துக்கு தன்னால் முடிந்ததைச் செய்யும் வெங்கட்!

    சாரதி +2 முடித்ததும் இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விட்டதும் வெங்கட்தான்!

    சாரதிக்கு படிப்பில் ஆர்வம் இருந்ததால் பள்ளிக்கூடத்தில் நன்றாகப் படித்து எண்பது சதவீதம் கடந்து விட்டதால், பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது!

    வெங்கட்தான் பணம் கட்டினார்!

    சதாசிவம் அதற்கொரு நன்றிகூடச் சொல்லவில்லை! மல்லிகா அதற்குமேல்! வெங்கட் இவர்களுக்கு செய்யக் கடன்பட்டவர் என்பது போல இருந்து விட்டார்கள்!

    சித்தி சாரதாவுக்கு இதுதான் எரிச்சல்!

    முடியாமல் தான் கொட்டி விட்டாள்!

    என்னங்க! உங்க அண்ணன் குடும்பத்துக்கு நீங்க செய்யறதை நான் எப்பவுமே தடுத்ததில்லை! அதை ஏத்துக்கிட்டு சந்தோஷமா ஒரு வார்த்தை கூட வராதா? நீங்க செய்யக் கடமைப்பட்டவர்ங்கற மாதிரி ஒரு மெதப்பு! நல்லாருக்குதா?

    விடு சாரதா! சதாசிவம் எப்பவுமே அப்படித்தான்! தானும் செய்யமாட்டான். மத்தவங்க செஞ்சா நன்றி சொல்லவும் மாட்டான். இந்த அளவுக்கு ஒரு குடும்பத்துக்கு சோறு போடறதே உசத்தி!

    என்ன பேசறீங்க! அவர் பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு அவர் செய்யறது தியாகமா?

    அப்படி அவன் சொல்லலை! அது அவன் காரெக்டர்!

    சரி! உங்க அண்ணி மல்லிகா அதுக்கு மேல இருக்காங்க! வீட்டுக்குப் போனா, காபி குடிக்கறியானு கேக்க மாட்டாங்க! நம்ம வீட்டுக்கு வந்தா, நாலு வாழைப்பழம் கூட வாங்கிட்டு வரமாட்டாங்க! என்னங்க பண்பாடு இதெல்லாம்!

    விடு! அவங்களுக்கும் ஆசைப்பட்ட எதுவும் கிடைக்கலை! நிறைய மனக்குறை இருக்கு! இவன் சரியில்லை! அதை ஈடுகட்டத்தான் நான் செய்யறேன்!

    நமக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு!

    நான் கைநிறைய சம்பாதிக்கறேன். நம்ம குழந்தைக்கு ஒரு குறையும் வராது! சரியா?

    இதுதான் நிலை!

    சாரதி மூன்றாவது வருடம்

    Enjoying the preview?
    Page 1 of 1