Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிரித்தாள்... மரித்தாள்..!
சிரித்தாள்... மரித்தாள்..!
சிரித்தாள்... மரித்தாள்..!
Ebook79 pages26 minutes

சிரித்தாள்... மரித்தாள்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எப்பம்மா கல்யாணம் முடிந்தது?" கொஞ்சம் ஆண்தனமான குரலில் கேட்டாள். அந்த கொண்டை போட்ட லேடீ டாக்டர்.
 "நாலு வருஷம் முன்னால!"
 "இதுதான் முதல் மருத்துவ முயற்சியா?"
 "ஆமாம்!"
 "ஒரு வருஷம் முடிஞ்சாலே, உடனே வரணும்மா. ஏன் செய்யலை?"
 "ஸாரி டாக்டர். தோணலை!"
 "இப்ப தோணிருச்சாக்கும்? உள்ள வாம்மா. உன் பேர் என்ன சொன்ன?"
 ஸ்கீரினுக்குப் பின்னால் ஸ்பாட் லைட் எரிய, டாக்டரின் குரலும், ரஞ்சனியும் பதிலும் ஆனந்த் காதுக்கு விழவில்லை.
 முதலில் டாக்டர் வெளியே வர, புடவையை சரி செய்தபடி ரஞ்சனி வெளிப்பட்டாள்.
 "என்ன டாக்டர்?"
 "பார்த்த வரைக்கும் யூட்ரஸ் சரியாத்தான் இருக்கு. முதலில் உங்க செமனை டெஸ்ட் பண்ணணும். எழுதித் தர்றேன். ஏதாவதொரு க்ளீனிக்கல் லேப்ல டெஸ்ட் பண்ணி நாளைக்கு சாயங்காலம் ரிப்போர்ட் கொண்டு வாங்க! எல்லாம் சரியா இருந்தா நீ... எப்பம்மா குளிச்ச...?"
 "போன சனிக்கிழமை டாக்டர்!"
 "வெல்... எல்லாம் சரியா இருந்தா, அடுத்த பிரியட்ஸ்குள்ள உனக்கொரு டி அன்ட் ஸி பண்ணிரலாம்.""அது பயமா டாக்டர்?" ஆனந்த் அவசரமாகக் கேட்க,
 "டைலேட்டரல் அன்ட் க்யூரட் டேஜ்... நத்திங் பட் க்ளினிங். நாளைக்கு காலைல செமன் கலெக்ட் பண்ணி டெஸ்ட்டுக்கு குடுத்துருங்க. இன்னிக்கு ராத்திரி எதுவும் வேண்டாம் புரிஞ்சுதா?"
 நாணத்துடன் ரஞ்சனி தலை கவிழ ஆனந்த் பர்ஸைத் திறந்தான்.
 அன்று இரவு வெகு நேரம் தூக்கம் பிடிக்காமல் புரண்டு, படுத்தான்.
 'நாளை டெஸ்ட்டுக்குத் வரவேண்டும்... என்ன ரிசல்ட் வரும்?
 நீ தகப்பனாக முடியாது. அதற்கான தகுதி உனக்குக் கிடையாது என்று சொல்லுமா அந்த ரிப்போர்ட்?'
 அவசரமாக அந்த எண்ணத்தை அழித்தான்.
 'இந்த வம்சத்து ஆம்பளைங்க காற்று பட்டாக்கூட கர்ப்பம் தரிக்கும்!'
 அம்மாவுக்கு மனதுக்குள் நன்றி சொன்னான்.
 கண்களை மூடிய போது, கனவில் அழுக்கு சாக்ஸோடு வந்த குழந்தை, 'அவுத்து விடுப்பா' என்றது.
 புரண்டு படுத்தபோது கை சரிய, பக்கத்துப் படுக்கை காலி.
 விழித்தான்.
 பால்கனியில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.
 பின்னால் வந்து தோளில் கை போட்டான்.
 "தூக்கம் வரலியாடா?"
 கன்னத்தைத் தொட்டான்.
 ஈரம் உணர்ந்தான்.
 "அழறியா கண்ணமா?"
 ".....""உனக்கு எல்லாம் சரியா இருக்குனுதானே சொன்னாங்க அந்த டாக்டர்!"
 "அதனாலதான் அழறேன் ஆனந்த்!"
 "புரியலை!"
 "உங்க ரிப்போர்ட்டும் சரியா வரணும்னு பயப்படறேன்!"
 "ஏன் பயம்?"
 "நீ மலடினு சொல்லிட்டாக்கூட சகிச்சுக்கலாம். உன்னைத் தாயாக்க தகுதியில்லாத உன் புருஷன்னு சொல்லிட்டா எப்படீப்பா தாங்கிக்க முடியும்? தாயார் நிலை வேற. எந்தத் தாயுமே தன் மகன் மேல குறையிருந்தாலும் அதை மூடி மறைச்சுட்டு மருமக மலடினு சொல்லிடுவா அதே சமயம் தன் மகளா இருந்தா போகட்டுமே கொஞ்ச நாள்னு பூசி மெழுகுவா, அது தாய் ஆனா மனைவி தன் கணவனை குறை சொல்றதை ஒரு நாளும் ஒப்புக்கமாட்டா ஆனந்த்."
 "யாருக்கு இந்த விளக்கம்?"
 "விளக்கமில்லை. மனசு... அதோட ஓலம்."
 "விடு வந்து படு. என்ன வந்தாலும் சந்திக்கற தெம்பு வேணும். கோழைத்தனம் கூடாது. போ... போய் தூங்கு."
 அவளைச் சொல்லிவிட்டு அவனால் தூங்க முடியவில்லை.
 மறு நாள் விடிந்ததும்.
 பரபரப்போடு இயங்கினான்.
 'குமரன் க்ளீனிக்கல் லேபில்' செமனை டெஸ்ட்டுக்குக் கொடுத்து விட்டு, ஆபீஸ் போனான்.
 பகல்பொழுது முழுவதும் ஆபீசில் இருப்பு கொள்ளவில்லை.
 நாலு மணிக்குத்தான் ரிப்போர்ட் கிடைக்கும்.
 இரண்டு மணிக்கு மேல் அவனால் ஆபீசில் உட்கார முடியாமல் அவஸ்தை அதிகமானது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 21, 2023
ISBN9798223761266
சிரித்தாள்... மரித்தாள்..!

Read more from Devibala

Related to சிரித்தாள்... மரித்தாள்..!

Related ebooks

Related categories

Reviews for சிரித்தாள்... மரித்தாள்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிரித்தாள்... மரித்தாள்..! - Devibala

    1

    "லெட்சுமாங்குடி, கோபிநாத்!"

    யெஸ் ஸர்!

    விக்கிர பாண்டியம், அருள் செல்வன்!

    பிரசன்ட் ஸர்!

    உளேன் அய்யா!

    ஆவடி பாண்டியன்!

    ஆஜர்!

    எல்லாரும் வந்தாச்சா? அப்புறமா கேள்விக் கேக்கக்கூடாது. இப்பவே சொல்லிர்றன். ‘டேபிரேக்’ விஷயமா நாலு கேஸ்ல ஒரே நேரத்துல பிரசன்னா மண்டையை பிய்ச்சிட்டு அலையறதால இதுல கடைசிலதான் வர முடியும். அதுவும் உங்களுக்காக, சரிதானா?

    விசில் சப்தம்.

    பாரெக்ஸ் குழந்தை தத்தித் தத்தி நடந்து வந்து சடாரென இடது பக்கம் ஒடித்துத் திரும்ப, படம் அப்படியே ஃப்ரீஸ் ஆகி, டப்பாவானது.

    அதை அணைடீ எளவு! குரலெடுத்து அலறிய அம்மாவை, புருவம் உயர்த்திப் பார்த்தான் ஆனந்த்.

    ஏம்மா சத்தம் போடற? டி.வி. என்ன செஞ்சது உன்னை? ‘கண்மணி பூங்கா’ல பக்கத்து வீட்டு சுதாக்குட்டி ஆடப்போவுது!

    எனக்கு எந்தக் கருமாந்திரமும் வேண்டாம்!

    ஏன் அமங்கல வார்த்தைகளா வருது உன்வாய்ல?

    மங்கலம் ஏது இந்த வீட்ல. டி.வில கொளந்தை, பக்கத்து வீட்ல கொளந்தை, நம்ம வூட்டைத் தவிர, ஊர்ல எல்லா இடத்துலேயும் இதுதான்... எனக்கு மட்டும் இருக்காதா? குரல் தேய்ந்து அழுகையாகச் சிதறியது.

    அதுவரை மௌனமாக இருந்த ரஞ்சனி சடாரென எழுந்து உள்ளே போனாள்.

    அடி ஆத்தா கோவம் வந்துருச்சு மகாராணிக்கு பெத்துக் குடுக்க துப்பில்லாட்டியும் இதுக்குக் குறைச்சலில்லை.

    டி.வி. பார்க்க வந்த அக்கம் பக்கம், அதைவிட சுவாரசிமான இதில் கவனம் திருப்ப, சங்கடமாக உணர்ந்த ஆனந்த் எழுந்து அடுத்த அறைக்கு வந்தான்.

    உடனே மின்சாரம் போய் இருள் சூழ்ந்தது. காத்திருந்த அண்டை அசல், எழுந்து வெளியேறத் தொடங்க, எல்லாரும் போனதும் வாசல் கதவைச் சாத்தி விட்டு உள்ளே வந்தான் ஆனந்த்.

    பக்கத்து வீட்டுல லைட் எரியுதே! அம்மா.

    நான் தான் மெயினை அணைச்சேன்! சொல்லிக்கொண்டே அதைப் போட்டான் ஆனந்த். விளக்குகள் எரிந்தன.

    ஏண்டா?

    பின்ன என்னம்மா. நம்ம வீட்டு பிரச்சனை, தெரு முழுக்க நாறணுமா? ஏம்மா இது தெரியலை உனக்கு.

    என் சோகம் எனக்கு!

    தப்பா எடுத்துக்காதேம்மா.பொம்பளையா இருக்கற நீ அதே ரக உணர்வுகளை புரிஞ்சுகணும்!

    வக்காலத்தா? நம்ம பரம்பரை ஆம்பளைகளுக்கு தோஷம் கிடையாது. காற்று பட்ட கர்ப்பம் தரிக்கும் ஆம்மா...

    அப்ப ரஞ்சனியை... முடிக்காமல் அவன் நிறுத்த.

    புரிஞ்சுகிட்டா சரி...

    இனிமேல் பேசக்கூடாது. அம்மாவை வயப்படுத்த ஆண்டவன் கூட கஷ்டப்படக் கூடும். தொடர்ந்து பேசினால் ஆவேசம் அதிகமாகும். அலறல் வாசல் கதவைக் கடக்கும். தெருவில் தலைகள் ஜனிக்கும். குடும்பப் பிரச்சனை தேசிய கவலையாகி அவரவர் ஆலோசனைகள் வரை வந்து நிற்கும்.

    ஆனந்த் வாய் மூடி உள்ளே போனான். சாப்பாடு மௌனமாகக் கழிந்தது.

    படுக்கையறை வரும் வரை அந்த மௌனம் நீடித்தது. பேருக்கு ஒரு புத்தகம் கையில் ஏந்தி, ரஞ்சனி வரவுக்காக காத்திருந்தான்.

    பத்தரைக்கு கதவு தாளிடும் சப்தம் காதைத் தொட்டது.

    அரைக் கண்களால் கவனித்தான். பால் டம்ளரை டீபாயில் வைத்து விட்டு கட்டிலைச் சுற்றிக்கொண்டு மௌனமாக வந்த ரஞ்சனி கால்களை துடைத்துக்கொண்டு படுக்கையில் ஏறினாள்.

    தலையைச் சரித்து திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

    அவளையே கவனித்த ஆனந்த் சின்னக் குரலில் –

    இது எனக்குப் பிடிக்கலை!

    பதிலில்லை.

    குற்றம் செய்யாதவங்களுக்கு தண்டனை தர்றது. பாவம்!

    .....

    எனக்கு தாயார்தான் அமையலை... பெண்டாட்டியுமா? நான் செஞ்ச மகாபாவம்!

    சடக்கென எழுந்து உட்கார்ந்தவள்.

    திரும்பினாள்.

    என் வலி புரியலையாப்பா உனக்கு!

    புரியுது!

    அப்புறம் கேள்வி கேக்கறியே!

    நான் என்ன செய்யட்டும், சொல்லு!

    நமக்கு கல்யாணம் முடிஞ்சு எவ்ளோ காலமாச்சு?

    வர்ற செப்டம்பர், நாலாவது வெட்டிங்டே!

    முயற்சிகள் செஞ்சோமா?

    அதான் தினமும்...

    அவன் சீரியசாக முகத்தை வைத்து கொண்டு ஆரம்பிக்க தன்னையும் மீறிச் சிரித்து விட்டாள்.

    "ஈஸியா இருடா. இப்பத்தான் எனக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1