Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கலையும் கனவுகள்..!
கலையும் கனவுகள்..!
கலையும் கனவுகள்..!
Ebook89 pages30 minutes

கலையும் கனவுகள்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரேணுகா பொறுமை இழந்து கொண்டிருந்தாள். பத்தாவது தடவையாகத் திரும்பிப் பார்த்தாள். மணலும், நான்கைந்து டூ வீலர்களும், வலைகளும், மீனவர்களும்தான் தெரிந்தார்கள். மணி பார்த்தாள், மூன்றரை! ஈஷ்வருக்கு ஏன் பங்க்சுவாலிடி என்பதே இல்லை என்று மறுபடி நினைத்தபோதே எரிச்சலாக இருந்தது. காக்க வைக்கிற பழக்கம். முன்னால் வந்துதான் உட்கார்ந்திருக்கட்டுமே என்கிற நினைப்பா? ஸ்டூடன்ட்தானே நீ, என்னை மாதிரி பொறுப்பான வேலை செய்கிற ஆள் இல்லையே என்கிற அலட்சியமா? என் மேல் இவ்வளவுதான் அக்கறையா?
 "ரொம்ப நேரமாச்சா ரேணு...?"
 பதில் சொல்லாமல் சாய்ந்து உட்கார்ந்தாள்.
 ஈஷ்வர் பூப்பந்ததை அவளிடம் நீட்டினான். மணலில் கிடந்த செங்கல்லைத் தள்ளிவிட்டு உட்கார்ந்தான்.
 "ஏய் ரேணு... கோவிச்சுகிட்டியா...?"
 "கோவமா...? அப்படின்னா...? எதுக்குப்பா கோவிக்கணும்? மனுஷன்னா கோபம் வரும்... நான் யார்? மனுஷப் பிறவியா என்ன...? ஏதோ ஒரு ஜந்து..."
 "ஏன் படபடப்பா பேசறே ரேணு...? கொஞ்சம் லேட்டாய்டுச்சுதான்... பர்மிஷன்லதான் வரேன், தெரியுமில்லே...? மறுபடி ஓடணும்... சேர்மன் விசிட் நாளைக்கு... அட்மினிஸ்ட்ரேஷன் காஸ்ட் பத்தி ஸ்டேட்மென்ட் இனிமேத்தான் ரெடி பண்ணணும்... புரிஞ்சுக்கணும்மா நீ... எவ்வளவு ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு தெரியுமா?"
 "அப்படின்னா எனக்குப் பொறுப்பில்லேங்கறீங்களா...? இர்ரெஸ்பான்ஸிபிள்... அப்படித்தானே...? தாங்க்யு..." முகம் சிவக்க அவள் படபடத்தாள்.
 "ஐயோ ரேணு..." அவன் புன்னகைத்தபடி அவள் கையைப் பற்றிக் கொண்டான்"கரும்பு இனிக்குதேன்னா, கல்கண்டு கசக்குதுன்னா அர்த்தம்... என்னடா நீ!... இன்னும் குழந்தையாவே இருக்கே! சட்டக் கல்லூரி படிக்கிறே... இன்னும் ரெண்டு வருஷத்துல கறுப்பு கோட் மாட்டிக்கிட்டு, 'நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர்...'னு ஜட்ஜைப் பார்த்துப் பேசப்போறே. என்கிட்ட போய்ச் சண்டை போடறியே..."
 ரேணுகா குளிர்ந்துவிட்டாள். வரவழைத்துக்கொண்டிருந்த கோபத்தைத் தள்ளிவிட்டாள். அவன் பக்கம் திரும்பினாள்.
 "சிரியேன்... ஒரு தடவைதான்..."
 சிமிழ் மாதிரி இருந்த இதழ்களை விரித்தாள்.
 "அப்பாடா... இப்பதான் மூச்சே வருது எனக்கு..." என்றான் அவள் நாசியை இழுத்தவாறு.
 "ஜாதிமல்லி... ரொம்ப பிடிக்கும்னு சொல்வியே... வெச்சுக்கயேன்..."
 "ஏன், உங்களுக்குப் பிடிக்காதா...?" வாழையிலை நாரைப் பிரித்தாள்.
 "பாதி பிடிக்கும், பாதி பிடிக்காது..."
 "பூவுல ஏது பாதி பாதி, ஈஸ்வர்?"
 "மல்லி பிடிக்கும்... ஜாதி பிடிக்காது..."
 "ஓ..." என்று சிரித்தாள்.
 "பூவுக்குக் கூட ஜாதி பிரிச்சிருக்காங்க... இல்லே?"
 "நல்ல வேளை, எந்த ஜாதின்னு குறிப்பிட்டு வெக்கலியே, அது வரைக்கும் சரிதான்..."
 காற்று இப்போது நன்றாகக் குளிர்ந்து விட்டது. அளவில் அதிகமான ஈரப் பதம் இருந்தது. கூட்டம் கூட வரத் தொடங்கி விட்டது.
 "வெச்சுக்கோ ரேணு... உன் வட்ட முகத்துக்குத் தலை நிறையப் பூரொம்ப அழகா மேட்ச் ஆகும்."
 வைத்துக் கொண்டாள். வாசனை சுற்றுப்புறத்தை உடனடியாக ரம்மியமாக்கிவிட்டது. ஒரு நாள் வாழ்க்கை என்றாலும் அசத்தலாக வாழ்ந்து காட்டி விடுகிற பூக்கள்..ம்."
 "இந்த சண்டே மீட் பண்ண முடியாது..."
 "ஏன்...?"
 "செங்கல்பட்டு போறோம்..."
 "ஏன்...? என்ன விசேஷம்...?"
 "குலதெய்வத்தோட கோவில் அங்க இருக்கு... தண்டு பரமேஷ்வரின்னு... பொங்கல்... படையல்னு... வருஷா வருஷம் செய்யறதுதான்..."
 "நீங்களும் போகணுமா...?"
 "பின்ன...? வரலேன்னு சொன்னா கண்ல தண்ணியே வந்துடும் அம்மாவுக்கு... ஒரு வார்த்தை பேசமாட்டார் அப்பா... கண்ணாலேயே எரிச்சுடுவார்..."
 "அட!... இவ்வளவு பயமா?"
 "பயம் இல்லே ரேணு... மரியாதை..." என்றவன் கொஞ்சம் இடைவெளி விட்டுச் சொன்னான்.
 "என் மேல் உயிர் அவங்களுக்கு... கல்யாணமாகிப் பத்து வருஷம் குழந்தையில்லாம இருந்திருக்காங்க... ஏகப்பட்ட கோவில், பிரார்த்தனை, பரிகாரம்... சொந்தம் சுற்றம்னு நெறைய கேலி, கிண்டல், அட்வைஸ்... தண்டு பரமேஷ்வரி கோவிலுக்கு வந்து அங்க ப்ரதட்சணம் செஞ்சப்புறம்தான் நான் பொறந்தேனாம்... ஒரு வார்த்தை கடிஞ்சு பேசினதில்லே எங்கம்மா இதுவரைக்கும் ரேணு..."
 மவுனமாக அவள் வெள்ளை நுரையையே பார்த்தாள். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223369622
கலையும் கனவுகள்..!

Read more from V.Usha

Related to கலையும் கனவுகள்..!

Related ebooks

Related categories

Reviews for கலையும் கனவுகள்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கலையும் கனவுகள்..! - V.Usha

    1

    ரேணுகா திடும்மென்று விழித்துக் கொண்டாள். வெளியே இருட்டு இன்னும் விலகவில்லை. நாலு நாலேகால் மணிதான் இருக்கும். இப்போதெல்லாம் இப்படித்தான் தூக்கம் எப்போது போகிறது எப்போது வருகிறது? தெரியவில்லை. ஜூன் முதல் தேதியிலிருந்துதான் இப்படி என்று நினைத்துக் கொண்டாள். சிரிப்பு வந்தது. அன்றைக்குத் தான் ஈஷ்வரும் அவளும் ஐ லவ்யு சொல்லிக் கொண்டார்கள்

    எழுந்து உட்கார்ந்தாள்.

    ஜன்னல் வழியாகச் சாம்பல் நிற வானம் மெல்ல மெல்ல இருளுக்கு விடை கொடுத்துக் கொண்டிருந்தது. பறவைகளின் சாம்ராஜ்யம் ஆரம்பித்து விட்டது. மணிகளை ஆட்டியபடி பாலுக் கோனாரின் எருமைகள் நடக்கிற சப்தம் கேட்டது.

    ஈஷ்வர்...

    இப்போது என்ன செய்து கொண்டிருப்பாய்?

    இழந்து போன தூக்கமும் கவிந்து போன எண்ணங்களுமாய்ப் படுக்கையின் நடுவில் உட்கார்ந்திருப்பாயா? இல்லை, சரியான தூங்குமூஞ்சியாய்ப் போர்வை போர்த்திக் குறட்டை விடுவாயா?

    நானும் கும்பகர்ணியாகத்தான் இருந்தேன் ஈஷ்வர். தெரியுமா உனக்கு? பக்கத்திலேயே போஃபர்ஸ் வெடித்தாலும் புரட்டிப்போடமுடியாத அளவுக்குத் தூங்குமூஞ்சியாக, புழுவை விட கேவலமாகப் பார்த்து அண்ணி கேலிச் சிரிப்புடன் ‘தூங்கியே கெட்ட குடும்பம்’ என்று முணுமுணுப்பதைக்கூடக் கேட்டிருக்கேன். அப்பேர்ப்பட்ட நான் நாலு மணிக்கெல்லாம் புத்துணர்சியுடன் எழுந்து உட்கார்ந்திருக்கிறேன்.

    நீ எப்படி ஈஷ்வர்?

    தூக்கம் இழந்தாயா?

    ஏகப்பட்ட நினைவுகளைச் சுமக்கிறாயா?

    அங்கே எதைப் பார்த்தாலும் என் முகம் தெரிகிறதா?

    நேரில் பார்க்கும்போது இதையெல்லாம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதோடு சரி. ஆனால், நாம் சந்திக்கும்போது பேசுகிற விஷயங்களே மாறிவிடுகின்றன, இல்லையா?

    எழுந்தாள். கிழக்கு வெளுத்துக் கொண்டு வந்தது.

    பால்வாசனையைச் சுமந்து வந்து காற்று அறைக்குள் இறக்கி விட்டுப் போனது.

    உடனே காபி குடிக்க வேண்டும் போலிருந்தது.

    ஆறு மணிக்குக் குறைந்து அண்ணி எழுந்திருக்க மாட்டாள். அதற்குப்பிறகு சோர்ந்திருக்கவும் மாட்டாள்.

    இன்றைக்கு நானே காபி போட்டால் என்ன?

    சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டது சின்னப்பெண் போலத் துள்ளி எழுந்தாள். குளியலறைக்குள் நுழைந்து பத்து நிமிடங்களில் வெளியே வந்தாள். பாலை எடுக்கலாம் என்று கிச்சனுக்குள் கால் வைக்கையில் ஆச்சரியம் காத்திருந்தது.

    மாதவி பால்கவரை வெட்டிக் கொண்டிருந்தாள்.

    குட்மார்னிங் அண்ணி... என்ன அதற்குள்ள எழுந்தாச்சு இன்னிக்கு...?

    பல் தேச்சியா...? என்றாள் மாதவி உடனடியாக.

    ஓ... இப்பத்தான்...

    போய்ப் படி...

    காபி குடிக்கணும் போலிருக்கு அண்ணி...

    நானே கொண்டு வந்து தரேனே...

    எக்ஸாமுக்கு நெறைய டயமிருக்கே...

    மொத நாள் படிச்சா போதும்னு சொல்றியா?

    மாதவி அடுப்பைப் பற்ற வைத்தாள்.

    அப்படி இல்லை அண்ணி... வந்து... காபி குடிச்சா ஃப்ரஷ்ஷா இருக்கும்தானே? அப்போ நல்லா படிக்கலாமே!

    மாதவி முகத்தை மட்டும் திருப்பி நாத்தனாரைப் பார்த்தாள்.

    என்ன அண்ணி இவள்? சலிப்பாக வந்தது. எப்போது வெடுக்கென்று பேசுவாள், எப்போது அணைத்துக் கொள்வாள், எப்போது அண்ணனிடம் போட்டுக் கொடுப்பாள்? ஒரே ரகசியம்தான் எல்லாம். வானிலை, அதுவும் மலை தேசத்து வானிலை மாதிரி மாறிக் கொண்டே இருக்கிற மனநிலைதான் மாதவி...

    சரி... நில்லு இங்கயே... காபி குடிச்சிட்டே போய்ப் படி...

    தாங்க்யு அண்ணி...

    எதுக்காக நாலு மணிக்கே எழுந்துட்ட...?

    யாரோ பிடிச்சு எழுப்பின மாதிரி முழிப்பு வந்தது அண்ணி...

    யார் அந்த யாரோ?

    ரேணுகா விழித்தாள். இதயத்திற்குள் படபடப்பு ஓடியது. ஈஷ்வரின் புன்சிரிப்பு முகம் கண்ணில் வந்தது போனது.

    என்ன ரேணு, யோசனை?

    பால் கடமையே கண்ணாகப் பொங்கியது. பாத்திர விளிம்பு வருகிறவரை காத்திருந்து விட்டு மாதவி கச்சிதமாக அடுப்பை அணைத்தாள். பதமாக இறங்கியிருந்த டிகாஷனையும் பாலையும் கலந்தாள்.

    படிப்பெல்லாம் எப்படிப் போய்க்கிட்டிருக்கு? என்றாள் சர்க்கரை பாட்டிலை எடுத்தபடி.

    ஏன்...? நல்லாத்தான் போகுது...

    பொய் சொல்லி நம்பறவங்களை ஏமாத்தறாங்களே... இ.பி.கோ.ல ஏதாவது செக்ஷன் இருக்கா அதுக்கு?

    என்ன கேட்கிறாள்? ரேணுகா திடுக்கிட்டாள்.

    மனசுல ஒண்ணை வெச்சுகிட்டு வெளில ஒண்ணு பேசறாங்களே... இதுக்கு சட்டப்பூர்வமா யோசிச்சு எழுதியிருக்காங்களான்னு கேட்டேன்... இந்தா கா...பி... என்று மாதவி நீட்டினாள்.

    ஃபர்ஸ்ட் இயர்ல அதெல்லாம் வரலே... செகண்ட் இயர்ல வருதான்னு இனிமேத்தான் பார்க்கணும்...

    பயந்துட்டியா, க்ராஸ் எக்ஸாமின் பண்றேன்னு?

    இல்லையே... என்று சிரிக்கப் பார்த்தாள்.

    கமான் ரேணு... மாதவி அவள் தோளைத் தட்டினாள்.

    "நாலு மணிக்கு எழுந்து படுக்கைல ஒக்காந்திருந்ததைப் பார்த்துத்தான் நானும் எழுந்தேன்... படிக்கிற பொண்ணு, அதுவும் லா காலேஜ்ல படிக்கிற பொண்ணு! எவ்வளவு பாடம் இருக்கும்! சரி, பரிட்சை நேரமோ

    Enjoying the preview?
    Page 1 of 1