Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sugamana Ragasiyam - Part 2
Sugamana Ragasiyam - Part 2
Sugamana Ragasiyam - Part 2
Ebook121 pages46 minutes

Sugamana Ragasiyam - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதுவிற்கு கடிதம் எழுதிய நாகேஷ் என்பவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து அவன் உயிரை காப்பாற்றி, பிரபஞ்சன் தன் வீட்டில் பார்த்துக் கொள்கிறான். நாகேஷின் ஒரு வயது குழந்தைக்கு மதுவை அம்மாவாக நியமிக்கிறான். பிரபஞ்சன் எதற்காக இதை எல்லாம் செய்தான். நாகேஷின் குழந்தையை இவன் குழந்தையாக ஏற்றுக் கொள்வதற்கு காரணம் என்னவாக இருக்கும். முடிவில் மதுவின் ரகசியம் மதுவிற்கு தெரிய வந்ததா? இல்லையா? என்பதை பார்ப்போம்!

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580100610962
Sugamana Ragasiyam - Part 2

Read more from Devibala

Related to Sugamana Ragasiyam - Part 2

Related ebooks

Reviews for Sugamana Ragasiyam - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sugamana Ragasiyam - Part 2 - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சுகமான ரகசியம் - பாகம் 2

    Sugamana Ragasiyam - Part 2

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம்: 01.

    அத்தியாயம்: 02.

    அத்தியாயம்: 03.

    அத்தியாயம்: 04.

    அத்தியாயம்: 05.

    அத்தியாயம்: 06.

    அத்தியாயம்: 07.

    அத்தியாயம்: 08.

    அத்தியாயம்: 09.

    அத்தியாயம்: 10.

    அத்தியாயம்: 11.

    அத்தியாயம்: 12.

    அத்தியாயம்: 13.

    அத்தியாயம்: 14.

    அத்தியாயம்: 15.

    அத்தியாயம்: 16.

    அத்தியாயம்: 17.

    அத்தியாயம்: 18.

    அத்தியாயம்: 19.

    அத்தியாயம்: 20.

    அத்தியாயம்: 21.

    அத்தியாயம்: 22.

    அத்தியாயம்: 23.

    ஒரு முன் கதை:

    மது...பிரபஞ்சன் கல்யாணம் நடக்க, யாரோ அனுப்பும் கடிதம். அதில் மதுவுக்கு ஏற்கனவே ஒருவனிடம் தொடர்பு இருப்பதாக தகவல் வர, அது பிரபஞ்சனின் சீட்டாட்ட நண்பன் செல்வத்திடம் கிடைக்க, அவன் மதுவை ப்ளாக் மெயில் செய்ய முயல்கிறான். மதுவை மயக்கத்தில் கெடுத்த நாகேஷ், இங்கே விபத்தில் அடிபட, பிரபஞ்சனே அவனை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கிறான். மதுவை கொடைக்கானலில் மயக்கத்தில் அவன் கெடுத்ததால், அவள் அதிர்ச்சியில் கோமாவுக்கு போய், அதில் கர்ப்பமாகி, குழந்தை பெற்ற பிறகு தெளிகிறாள். அவள் கர்ப்பப்பையில் இருந்த பெரிய கட்டியை அகற்றியதாக டாக்டர் அகிலாவும் பெற்றவர்களும் பொய் சொல்லி, குழந்தையை அனாதை விடுதியில் சேர்க்க, தான் குழந்தை பெற்றதே மதுவுக்கு தெரியாது. தான் பாவம் செய்ததை உணர்ந்த நாகேஷ், தேடிப்பிடித்து வந்து, குழந்தையை வாங்கி கொண்டு போய் வளர்க்கிறான். மதுவுக்கு பிரபஞ்சனுடன் கல்யாணம் நடக்க, இப்போது விபத்தான நாகேஷை, பிரபஞ்சனே ஆஸ்பத்திரியில் சேர்க்க, மது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதே ஆஸ்பத்திரிக்கு வர, ஒரு கட்டத்தில் பிரபஞ்சனுக்கு மனைவி பற்றிய கடந்த கால உண்மை தெரிகிறது. அவள் குழந்தை பெற்றது அவளுக்கே தெரியாது...அவளுக்கு ஏற்பட்டது ஒரு விபத்து என புரிந்து கொள்ளும் நல்ல கணவன் பிரபஞ்சன். அவன் மனைவி, தான் கெடுத்த மது என அறியாத நாகேஷ். குழந்தையுடன் என்னை திண்டுக்கல்லுக்கு அனுப்பி விடுங்கள். அந்தப்பெண் வாழ வேண்டும் என கை கூப்புகிறான் நாகேஷ். பிரபஞ்சன் மனைவிக்கு அதை தெரியாமல் காப்பாற்ற முடிவு செய்கிறான். முதல் பாகம் முடிகிறது. இனி இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம்.

    ரகசியம் பரம ரகசியம்

    அத்தியாயம்: 01.

    டாக்டர் வந்து நாகேஷை பரிசோதித்தார். பிரபஞ்சன் கூடவே இருந்தான். டாக்டர் என்ன சொல்வாரோ என்ற கலக்கம் பிரபஞ்சன் முகத்தில் இருந்தது. நண்பர் மூலம் அனாதை விடுதியில் இருக்கும் தன் ஒரு வயது குழந்தை நிஷா.

    நீங்க டிஸ்சார்ஜ் ஆகலாம் நாகேஷ். ஆனா வெளியூருக்கு போகக்கூடாது. பயணம் ஆபத்தை உண்டாக்கும். இங்கே உறவுக்காரங்க வீட்ல ரெண்டு மாசம் இருந்து, உங்க உடம்பு குணமான பிறகு, போகலாம். பிரபஞ்சன் நீங்க என்ன சொல்றீங்க?

    சரி டாக்டர். அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்!

    அந்த நேரம் அப்பா துரைசாமி உள்ளே வர, விவரம் கேட்க,

    நம்ம வீட்டுக்கு நாகேஷை கூட்டிட்டு போயிடலாமே தம்பி. உன் நண்பருக்கு இதைக்கூட செய்யலைன்னா எப்படீ?

    பிரபஞ்சன் ஒரு நொடி தடுமாறி போனான். மதுவை, போதையில் கெடுத்தவன் இவன். அவள் பெற்ற இவனது குழந்தையுடன் விலகி போனவன், ஒரு கட்டத்தில் அதை வளர்க்க முடியாமல் அவளிடம் ஒப்படைக்க நினைக்க விபத்து. இதை தண்டனையாக நினைத்து குழந்தையுடன் ஊருக்கு போக நினைக்கும் நேரம், டாக்டர் போகக்கூடாது என்கிறார். உண்மை புரியாமல் தன் மருமகளை கெடுத்தவனை, தன் வீட்டில் வைத்து பராமரிக்க, அப்பா சம்மதம் சொல்கிறார்.

    தான் கெடுத்த மதுவின் கணவன் பிரபஞ்சன், என நாகேஷுக்கு தெரியாது.

    அப்பா! இவருக்கு ஒரு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு. அது இப்ப காப்பகத்துல இருக்கு.!

    ஏன்? அதோட அம்மா எங்கே?

    நாகேஷை பார்த்த பிரபஞ்சன், வாய் திறக்க, நாகேஷ் முந்திக்கொண்டு,

    அவ பிரசவத்துல இறந்துட்டா சார். எனக்கு வேற யாருமில்லை.!

    அடப்பாவமே. இத்தனை கஷ்டமா உங்களுக்கு? குழந்தை காப்பகத்துல இருக்கட்டும். நீங்க எங்க வீட்டுக்கு வந்துடுங்க.!

    இல்லை சார். குழந்தையை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. என்னை திண்டுக்கல்லுக்கு அனுப்பிடுங்க ப்ளீஸ்.!

    டாக்டர் அதை அனுமதிக்கலை நாகேஷ். நீங்க ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேண்டாம். நாங்க பேசிட்டு உங்களுக்கு வேற ஏதாவது ஏற்பாட்டை செய்யறோம். வாடா தம்பி.!

    அப்பா, மகன் வெளியே வர, பிரபஞ்சன் அம்மா ஈஸ்வரி இருந்தாள். மதுவுடன் அவள் அம்மா சுப்பு இருக்க, அப்பா சந்தானம் மட்டும் இங்கே இருந்தார். டாக்டர் சொன்னதை மனைவி ஈஸ்வரியிடம் துரைசாமி சொன்னார்.

    அந்த நாகேஷ் பயணப்பட கூடாதாம்.

    நம்ம வீட்ல வச்சு பராமரிக்கலாம். நம்ம பிரபஞ்சனுக்கு உதவின மனுஷனை, நாம விட்ர முடியுமா?

    மதுவின் அப்பா சந்தானம் விசுக்கென நிமிர்ந்தார்.

    அதுல சிக்கல் இருக்கு ஈஸ்வரி. இவரோட ஒரு வயசு பெண் குழந்தை இப்ப காப்பகத்துல இருக்கு. தாய் பிரசவத்துல இறந்திருக்கா. இவருக்கு வேற யாரும் இல்லை.!

    அப்பா சந்தானத்தால் அங்கு உட்கார முடியவில்லை.

    ‘இந்த நாகேஷ் மதுவை கலைத்தவன் தான். மது பிரசவித்த குழந்தையை, டாக்டர் அகிலா அன்றே கேத்தி காப்பகத்தில் சேர்த்து விட்டாரே. அது எப்படி இவன் கைக்கு வந்தது?’

    தாயில்லா தன் குழந்தையை பிரிஞ்சிருக்க இவர் தயாரா இல்லை.!

    எதுக்குங்க? குழந்தையோட அவர் நம்ம வீட்டுக்கு வரட்டும். நான் குழந்தையை பாத்துக்கறேன்.!

    சந்தானத்துக்கு அடுத்த அதிர்ச்சி.

    தான் குழந்தை பெற்றதே மதுவுக்கு தெரியாது. அவள் குழந்தை அவள் வீட்டுக்கே வருதா? இதென்ன மோசமான விதி? இதை எப்படியாவது தடுத்து, திண்டுக்கல்லுக்கு பேக் பண்ணணும்!

    நீங்க வேலைக்கு போறவங்க சம்பந்தியம்மா. பிசியான பெண்மணி. யாரோ பெத்த குழந்தையை உங்களால பார்த்துக்க முடியுமா? மது எப்ப டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருவானு தெரியலை!

    அவர் குறுக்கே நுழைய, பிரபஞ்சன் அவரை பார்த்தான்.

    ‘ஓரளவுக்கு உண்மை தெரிஞ்ச பெத்தவங்க பயப்படறாங்க’

    பிரபஞ்சா! நாகேஷை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம். குழந்தை எந்த காப்பகத்துல இருக்குனு கேளு. நாம போய் தூக்கிட்டு வந்திடலாம். ஆளை நியமிச்சு குழந்தையை பராமரிக்கலாம்.!

    சரிம்மா. நான் டாக்டர் கிட்ட பேசி, டிஸ்சார்ஜ் கேக்கறேன்.!

    மதுவை கூட வீட்ல வச்சு பார்த்துக்கலாம். ஒரு நர்சை ஏற்பாடு செஞ்சுகலாம்.!

    அது வேண்டாம் சம்பந்தியம்மா. இங்கே நாங்க பாத்துக்கறோம்.!

    சந்தானம் குழம்பி போய் நின்றார்.

    ‘ஆடு...புலி...இரண்டும் ஒரே இடத்திலா?’

    அத்தியாயம்: 02.

    மாப்பிள்ளை பிரபஞ்சனை மதுவுக்கு துணையாக வைத்து விட்டு, மதுவின் அப்பா சந்தானம்,

    Enjoying the preview?
    Page 1 of 1