Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தூரத்துப் பொன்மான்
தூரத்துப் பொன்மான்
தூரத்துப் பொன்மான்
Ebook291 pages1 hour

தூரத்துப் பொன்மான்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செளம்யா மறுபடியும் அந்த விளம்பர வாசகங்களை படித்தாள். “உங்களிடம் நல்ல ஜாதி வைரங்கள் இருக்கிறதா...? கேட்கும் விலை கொடுத்து வாங்க ஆர்வமாய் உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வரவும். கடிதத் தொடர்போ - டெலிபோன் பேச்சோ - வேண்டாம். எந்த நேரத்திலும் சந்திக்க வேண்டிய முகவரி: எம்.அடிசன், நம்பர் தர்ட்டி டூ, ரெயின்போ மிஸ்ட் ஹில், குன்னூர்.”
அவள் விளம்பரத்தைப் படித்துவிட்டு நிமிர்ந்தபோது - லட்சுமி அம்மாள் அந்த ஃபைலை புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
“மேடம்...”
“அந்த விளம்பரத்தைப் படிச்சியா...?”
“ப... படிச்சேன்…”
“அந்த அடிசனைப் பார்க்க நீதான் போகப் போறே... கார்லதான். டிரைவர் உன்கூட வருவான்...”
சௌம்யா உட்கார்ந்திருக்க லட்சுமி அம்மாள் தொடர்ந்தாள். “நீ அடிசனைச் சந்திச்சு சொல்ல வேண்டியதெல்லாம் இதுதான்... நல்ல ஜாதி வைரங்கள் இருக்கு... எப்ப வேணுமின்னாலும் பார்க்க வரலாம். வியாபாரம் ரகசியமாய் முடிய வேண்டும். யார்க்கும் தெரியக்கூடாது…”
“மேடம்...”
“சொல்லு...”
“விளம்பரம் குடுத்திருக்கிற அந்த அடிசன் எப்படிப்பட்டவர்ன்னு தெரியாமே... நாம மூவ் பண்றது சரியா மேடம்…?”லட்சுமி அம்மாள் தன் ஆரோக்கியமான பற்களைக் காட்டி புன்னகைத்தாள். “அந்த சந்தேகம் உனக்கு வரும்னு தெரியும். அடிசன் ரொம்பவும் நல்லவர். அற்புதமான ஜெம்மாலிஸ்ட்...”
“மேடம்! நீங்க அவரை...”
“பார்த்திருக்கேன்... போயிருக்கேன்... பழகுறதுல அடிசன் ரொம்பவும் இனிமையானவர்... கார்ல இங்கிருந்து குன்னூர் போக ரெண்டு மணி நேரம். அடிசன் கிட்டே ஒரு அரை மணி நேரப் பேச்சு... திரும்பவும் ரெண்டு மணி நேர பயணத்துல நீ இங்கே வந்துடலாம்... என்ன சொல்றே...?”
“சரி... சரி... மேடம்...”
“உன் முகத்துல சந்தோஷத்தைக் காணும். பயப்படறியா...?”
“இல்ல மேடம். போய்ட்டு வர்றேன்...”
“நீ எதுக்காக போறன்னு டிரைவருக்கு தெரியக்கூடாது. விஷயம் சுமுகமா இருக்கணும்...”
“எஸ் மேடம்.”
“நான் சொல்ற பேரையெல்லாம் நோட் பண்ணிக்க.”
சௌம்யா ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொள்ள லட்சுமி அம்மாள் கையில் வைத்திருந்த ஃபைலைப் புரட்டியபடியே சொன்னாள்.
“கிம்பர்லி-37, ஸோபியா-70, எட்டாரா-55, நீலாம்பர்-66.”
சௌம்யா குறித்துக் கொண்டதும் சொன்னாள்.
“இதெல்லாம் நம்மக்கிட்டே இருக்கிற டயமண்ட்ஸோட ஜாதிப் பெயர்கள். அடிசன் கேட்கும்போது அவர்கிட்டே சொல்லணும்.”
“எஸ் மேடம்.”
“போய் டிபன் சாப்பிட்டு கிளம்பு.”
சௌம்யா எழுந்தாள்கார் குன்னூரைத் தொட்டபோது ஒன்பதரை மணி. சூரியன் வானத்தில் இருந்தாலும் குளிர் உறைத்தது. ஜனங்கள் ஸ்வெட்டர்களோடும்; கம்பளி, குல்லாக்களோடும் நடந்து போனார்கள். ப்ளம்ஸும் வால்பேரியும் தள்ளுவண்டிகளில் நிரம்பியிருந்தன. ஊட்டி போகும் டூரிஸ்ட் பஸ்களில் வடநாட்டு முகங்கள் இந்தி சம்பாசணைகளோடு தெரிந்தன.
“டிரைவர்!”
டிரைவர் திரும்பி செளம்யாவைப் பார்த்தாள்.
“உங்களுக்கு ரெயின்போ மிஸ்ட் ஹில் தெரியுமா?”
“தெரியாதம்மா... நானே உங்ககிட்ட கேக்கலாம்னு இருந்தேன்...”
“சரி! அந்த டிராபிக் கான்ஸ்டபிள்கிட்டே கேப்போம்... வண்டியை அவர் பக்கமா கொண்டு போ...”
டிரைவர் கொண்டு போனான்.
டிராபிக்கை ஒழுங்குபடுத்த மறந்துவிட்டு - ஒரு பழக்கூடைக்காரியிடம் ராத்திரி பார்த்த சினிமாவைப் பற்றி கமெண்ட் அடித்து – சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் - செளம்யா, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று விளிப்பதைக் கேட்டதும் திரும்பினார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 11, 2024
தூரத்துப் பொன்மான்

Read more from ராஜேஷ்குமார்

Related to தூரத்துப் பொன்மான்

Related ebooks

Related categories

Reviews for தூரத்துப் பொன்மான்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தூரத்துப் பொன்மான் - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    கிழக்கில் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து சூடாகிக் கொண்டிருந்தான். குளித்துவிட்டு பாத்ரூமினின்றும் வெளிப்பட்ட செளம்யா தலை ஈரத்தை தேங்காய்ப்பூ துவாலையால் துவட்டிக் கொண்டே பூஜையறைக்குள் நுழைந்தாள். உதட்டுக்குள் துர்கா நாமாவளி வேகவேகமாய் புரண்டது.

    தேவி துர்கையே ஜெயதேவி துர்கையே... அம்மே நாராயணா... பத்ரே நாராயணா... லட்சுமி நாராயணா... பத்தும் பறந்தாலும்... பற்று வைக்க நீயுண்டு...

    சௌம்யா...!

    அம்மாவின் குரல் இருமலோடு பக்கத்து அறையிலிருந்து கேட்டது. செளம்யா எட்டிப் பார்த்தாள்.

    என்னம்மா...?

    நீ குளியல் ரூமுக்குள்ளே இருக்கும்போது... பக்கத்து வீட்டு கலா வந்திருந்தா. உனக்கு லட்சுமி அம்மாகிட்டேயிருந்து போன் வந்ததாம்.

    செளம்யா கோபப்பட்டாள். என்னம்மா... இவ்வளவு சாவகாசமா சொல்றே...? நான் குளியலறைக்குள்ளே இருக்கும்போதே சொல்லியிருக்க வேண்டியதுதானே...?

    சொன்ன செளம்யா அவசர அவசரமாய் பூஜையறையை விட்டு வெளிப்பட்டு பக்கத்து அறைக்குள் நுழைந்து - ஒரு புடவையை செலக்ட் செய்து உடம்புக்குக் கொடுத்தாள். கண்ணாடி பார்த்து லேசாய் பவுடர் பூசி ஸ்டிக்கர் பொட்டை நெற்றியின் மத்தியில் ஒட்டிக் கொண்டு - அரக்க பரக்க வெளியே வந்தாள். வீட்டின் முன்பக்க வராந்தாவில் கட்டிலைப் போட்டுக்கொண்டு - போர்வைக்குள் புகுந்திருந்த - அவளுடைய அப்பா கோதண்டம் குரல் கொடுத்தார்.

    அம்மா செளம்யா...

    செளம்யா வெறுப்பாய் நின்றாள்.

    ம்...

    என்னம்மா இந்நேரத்துக்கே வேலைக்கு கிளம்பிட்டியா?

    எனக்கு போன் வந்திருக்காம்... கலா வீட்டுக்கு போறேன்.

    போனா...? யார்கிட்டயிருந்து...?

    லட்சுமி அம்மாகிட்டேயிருந்து...

    உனக்கு சம்பளம் தர்ற முதலாளியம்மாவாச்சே... போய்ட்டு வா... போய்ட்டு வா...!

    செளம்யா வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் இறங்கி - எதிரேயிருந்த கலாவின் வீட்டுக்குள் நுழைந்தாள். வாயில் டூத் பிரஷ்ஷும் பற்பசையுமாய் எதிர் கொண்டாள் கலா.

    என்ன, தலைக்குளியலா?

    ஆமா...

    உங்க மேடம் உனக்கு போன் பண்ணியிருந்தாங்க...

    ஏதாவது சொன்னாங்களா...?

    நீ குளிச்சிட்டு வந்ததும் போன் பண்ணச் சொன்னாங்க...

    போன் பண்ணிக்கட்டுமா...?

    தாராளமா... சொல்லிவிட்டு கலா வாஷ்பேசினை நோக்கிப் போக - செளம்யா டெலிபோனை நெருங்கி, ரிஸீவரை எடுத்துக் கொண்டாள். டயலில் எண்களை சுழற்றிவிட்டு - மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டதும் குரல் கொடுத்தாள்.

    ஹலோ...

    எஸ்... மறுமுனையில் லட்சுமி அம்மாளின் குரல் கேட்டது.

    குட் மார்னிங் மேடம்...

    குட் மார்னிங் செளம்யா! நீ உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா... ஒரு அவசரமான வேலை...

    அரை மணி நேரத்துக்குள்ளே வந்தா போதுமா... மேடம்?

    ம்... வா...! வரும்போதே... அப்படியே...

    சொல்லுங்க மேடம்...

    யாராவது டெலிபோனுக்கு பக்கத்துல இருக்காங்களா?

    இல்ல மேடம்...

    வரும்போது அந்த சிவப்பு ஃபைலைக் கொண்டாந்துடு. வீட்ல அதை பத்திரமான இடத்துலதானே வெச்சிருக்கே...?

    ஆமா மேடம்...

    சரி... இப்ப மணி ஆறே கால்... ஆறே முக்காலுக்கு உன்னை இங்கே எதிர்பார்க்கிறேன்...

    வந்துடறேன் மேடம்... ரிஸீவரை வைத்துவிட்டு திரும்பினாள் சௌம்யா. கலா வாஷ்பேசினிலிருந்து வந்தாள்.

    என்ன உன்னோட மேடத்துக்கிட்டே பேசிட்டியா…?"

    பேசிட்டேன்...

    ஆமா அவங்ககிட்ட பேசும்போது... வார்த்தைக்கு வார்த்தை மேடம் போட்டுத்தான் பேசணுமா...?

    அப்படியெல்லாம் இல்லை. ஒரு மரியாதைதான்.

    மேடத்துக்கு எவ்வளவு வயசிருக்கும்?

    நாற்பது...

    இவ்வளவுதானா...? நான் அறுபதுக்கு மேலே இருக்கும்ன்னு நினைச்சேன். நாற்பதுன்னா சின்ன வயசுதான்... அழகா இருப்பாங்களா?

    ஜம்ன்னு இருப்பாங்க...

    நல்ல நிறமா...?

    கனிஞ்ச எலுமிச்சம்பழ நிறம். தலையில் ஒரு முடி நரையில்லை.

    கேட்கும்போதே பொறாமையா இருக்கு...

    நீ பொறாமைப்படற அளவுக்கு... அவங்க சந்தோஷமா இல்லை.

    ஏன் அப்படி சொல்றே? சொத்துதான் ஏழு தலைமுறைக்கும் சேர்ந்து இருக்கே...

    ஒரு பொண்ணுக்கு சொத்து இருந்தா மட்டும் போதுமா...?

    ஓ... அந்த அம்மாவுக்கு புருஷன் இல்லாததைப்பத்தி சொல்றியா? இந்தக் காலத்து பணக்கார பொம்பளைங்களுக்கு புருஷனைக் காட்டிலும் பணம்தானே பெரிசா தெரியும்...

    என்னோட மேடம் அப்படிப்பட்டவங்க இல்லை...

    புருஷன் சாகும்போது மேடத்துக்கு என்ன வயசு...?

    முப்பத்தஞ்சு...

    புருஷன் எப்படி செத்தாரு...?

    சாவகாசமா வந்து சொல்றேன்... கலா...! நான் உடனே புறப்பட்டாகணும்... மேடம் ஏதோ ஒரு அவசர காரியமா வரச் சொல்லியிருக்காங்க...

    கலாவிடம் விடை பெற்றுக் கொண்டு - தன் வீட்டு வாசலை மிதித்தபோது... அப்பா கோதண்டம் வாசற்படி இறங்கிக் கொண்டிருந்தார்.

    எங்கேப்பா கிளம்பிட்டீங்க...?

    அப்படியே வாக்கிங் போய்ட்டு வரலாம்ன்னு.

    பொய் சொல்லாதீங்கப்பா... அந்த பாழாப்போன சாராயத்தைக் குடிக்கத்தானே கிளம்பிட்டீங்க...?

    இல்லேம்மா...

    சட்டைப்பையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க...? எடுங்க பார்க்கலாம்...

    ஒத்த ரூபாதாம்மா இருக்கு...

    பொய்... எங்கே பார்க்கலாம்... அவ எதிர்பார்க்காத நிமிஷத்தில் சட்டை பைக்குள் கையை விட்டாள் செளம்யா. ஐந்து ரூபாய் நோட்டு வெளியே வந்தது.

    இதுதான் ஒத்த ரூபாயா...?

    பணத்தை குடுத்துடும்மா...

    ஏம்பா... காலங்காத்தாலே... வெறும் வயித்துல - அந்த விஷத்தை விழுங்கித்தான் ஆகணுமா...?

    இன்னிக்கு மட்டும்...

    சே! உங்களுக்கு எத்தினி வாட்டி புத்தி சொல்லியிருப்பேன்... இந்த அஞ்சு ரூபா உங்களுக்கு எங்கிருந்து கிடைச்சது...?

    ………….

    என்னோட பர்ஸிலிருந்துதானே எடுத்தீங்க...?

    .....

    சொல்லுங்கப்பா...

    ஆமா... எடுத்தேன்... அதுக்கென்ன இப்போ...?

    அம்மாவுக்கு மருந்து மாத்திரை வாங்கறதுக்காக பர்ஸில அம்பது ரூபா வெச்சிருந்தேன்... இப்படி குடிக்கிறதுக்காக பணத்தை எடுத்தா... அம்மாவுக்கு மருந்து எப்படி வாங்கறதாம்...?

    கோதண்டம் கோபமாய் பார்த்தார்.

    என்னடி... சம்பாதிக்கிற திமிரா...? நீ பணம் தரலைன்னா நான் குடிக்காமே இருந்துடுவேனா... இந்த கோதண்டம் கையை நீட்டினா... கடன் தர்றதுக்கு எத்தனையோ பேர் இருக்காங்க... துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வேகமாய் தெருவில் இறங்கினார்.

    செளம்யா உள்ளே நுழைந்தாள். அம்மாக்காரி ராஜம் சுவர்க்கு சாய்ந்து - கண்களில் நீர் காட்டினாள்.

    உங்கப்பாவை திருத்த இந்த ஜென்மத்துல முடியாது... செளம்யா. பேசாம அவர் கேட்ட பணத்தைக் குடுத்துடு... எப்படியோ குடிச்சு சீரழியட்டும்...

    நீ சும்மா இரும்மா. இனிமே நான் அப்படி விடப் போறதில்லை. அப்பாவை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுன்னு எனக்குத் தெரியும்...

    என்னமோ பண்ணுடியம்மா... - பெரு மூச்சுவிட்டாள் ராஜம்.

    நேரம் சரியாய் ஆறே முக்கால். தேக்கு மரத்தாலான பளபளப்பான கதவைத் தள்ளிக் கொண்டு - லட்சுமி அம்மாளின் அறைக்குள் நுழைந்தாள் சௌம்யா. அன்றைய ஆங்கில நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த லட்சுமி அம்மாள் நிமிர்ந்தாள்.

    ஃபைலைக் கொண்டு வந்தியா...?

    கையிலிருந்த ஃபைலை நீட்டினாள் செளம்யா. அதை வாங்கி மடியில் வைத்துக் கொண்டவள் - எதிரேயிருந்த நாற்காலியைக் காட்டினாள்.

    உட்கார் செளம்யா.

    செளம்யா உட்கார்ந்தாள்.

    டிபன் சாப்பிட்டியா...?

    இல்ல மேடம்...

    இங்கேயே டிபன் சாப்பிட்டுக்கோ...! இன்னும் கொஞ்ச நேரத்துல நீ குன்னூர் போக வேண்டியிருக்கும்...

    குன்னூர்...? எதுக்கு மேடம்?

    இந்த பேப்பர்ல வந்திருக்கிற விளம்பரத்தைப் பாரு லட்சுமி அம்மாள் கையிலிருந்த ஆங்கில பேப்பரை விரித்துக்காட்டி - எட்டாவது பத்தியின் ஒரு மூலையைக் காட்டினாள்.

    ஆங்கிலத்தில் இருந்த அந்த விளம்பர வாசகங்களை படித்துப் பார்த்தாள் சௌம்யா. அவளுடைய அழகான - ரோஜா நிற முகம் - சட்டென்று குழப்பத்தில் விழுந்து நிறம் இழந்தது. நெற்றியில் வியர்வை தோரண முத்துக்களைக் காட்டியது.

    2

    செளம்யா மறுபடியும் அந்த விளம்பர வாசகங்களை படித்தாள். உங்களிடம் நல்ல ஜாதி வைரங்கள் இருக்கிறதா...? கேட்கும் விலை கொடுத்து வாங்க ஆர்வமாய் உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வரவும். கடிதத் தொடர்போ - டெலிபோன் பேச்சோ - வேண்டாம். எந்த நேரத்திலும் சந்திக்க வேண்டிய முகவரி: எம்.அடிசன், நம்பர் தர்ட்டி டூ, ரெயின்போ மிஸ்ட் ஹில், குன்னூர்.

    அவள் விளம்பரத்தைப் படித்துவிட்டு நிமிர்ந்தபோது - லட்சுமி அம்மாள் அந்த ஃபைலை புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

    மேடம்...

    அந்த விளம்பரத்தைப் படிச்சியா...?

    ப... படிச்சேன்…

    அந்த அடிசனைப் பார்க்க நீதான் போகப் போறே... கார்லதான். டிரைவர் உன்கூட வருவான்...

    சௌம்யா உட்கார்ந்திருக்க லட்சுமி அம்மாள் தொடர்ந்தாள். நீ அடிசனைச் சந்திச்சு சொல்ல வேண்டியதெல்லாம் இதுதான்... நல்ல ஜாதி வைரங்கள் இருக்கு... எப்ப வேணுமின்னாலும் பார்க்க வரலாம். வியாபாரம் ரகசியமாய் முடிய வேண்டும். யார்க்கும் தெரியக்கூடாது…

    மேடம்...

    சொல்லு...

    விளம்பரம் குடுத்திருக்கிற அந்த அடிசன் எப்படிப்பட்டவர்ன்னு தெரியாமே... நாம மூவ் பண்றது சரியா மேடம்…?

    லட்சுமி அம்மாள் தன் ஆரோக்கியமான பற்களைக் காட்டி புன்னகைத்தாள். அந்த சந்தேகம் உனக்கு வரும்னு தெரியும். அடிசன் ரொம்பவும் நல்லவர். அற்புதமான ஜெம்மாலிஸ்ட்...

    மேடம்! நீங்க அவரை...

    பார்த்திருக்கேன்... போயிருக்கேன்... பழகுறதுல அடிசன் ரொம்பவும் இனிமையானவர்... கார்ல இங்கிருந்து குன்னூர் போக ரெண்டு மணி நேரம். அடிசன் கிட்டே ஒரு அரை மணி நேரப் பேச்சு... திரும்பவும் ரெண்டு மணி நேர பயணத்துல நீ இங்கே வந்துடலாம்... என்ன சொல்றே...?

    சரி... சரி... மேடம்...

    உன் முகத்துல சந்தோஷத்தைக் காணும். பயப்படறியா...?

    இல்ல மேடம். போய்ட்டு வர்றேன்...

    நீ எதுக்காக போறன்னு டிரைவருக்கு தெரியக்கூடாது. விஷயம் சுமுகமா இருக்கணும்...

    எஸ் மேடம்.

    நான் சொல்ற பேரையெல்லாம் நோட் பண்ணிக்க.

    சௌம்யா ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொள்ள லட்சுமி அம்மாள் கையில் வைத்திருந்த ஃபைலைப் புரட்டியபடியே சொன்னாள்.

    கிம்பர்லி-37, ஸோபியா-70, எட்டாரா-55, நீலாம்பர்-66.

    சௌம்யா

    Enjoying the preview?
    Page 1 of 1