Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வானவில் குற்றம்
வானவில் குற்றம்
வானவில் குற்றம்
Ebook99 pages24 minutes

வானவில் குற்றம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ப்ரதாப் உலுக்கியதில் சட்டென்று கண் விழித்தாள் அஞ்சலா. பேசிக்கொண்டே வந்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே ஞாபகம் இல்லை. ப்ரதாப்பின் தோளில் தலையை சாய்த்து - உட்கார்ந்திருந்தபடியே தூங்கி விட்டிருந்தாள்.
ட்ரெயின் வேகமாய்த் தடக்கிக் கொண்டு இருந்தது. இரண்டு பக்கமும் ஜன்னல்களுக்கு வெளியே அடர்த்தியாய் இருட்டு. கொஞ்சமாய்த் திறந்திருந்த ஷட்டர் வழியே ஐஸ் தடவின காற்று ஜில்லென்று கம்பார்ட்மென்ட்டுக்குள் பாய்ந்து - உடம்புக்குள் ஊசியாய் ஏறியது.
அஞ்சலா கண்களை தேய்த்துக் கொண்டே கேட்டாள்.
“நல்லூர் வந்தாச்சா?”
“நெருங்கிட்டோம்...”
“மணி எத்தனை...?”
“பதினொன்னு பத்து...”
“இதுக்கு முன்னாடி அந்த ஊருக்குப் போன தில்லைன்னு சொன்னீங்க இல்லையா?”
“ஆமா.”
“புதுசா அந்த ஊருக்குள்ள இந்த ராத்திரில இறங்கி... எங்காவது எசகுபிசகா மாட்டிக்கப் போறோம் பிரதாப்...”
“டோண்ட் ஒர்ரி! நான் எல்லா விபரமும் விசாரிச்சிட்டு தான் புறப்பட்டேன். ரெயில்வே ஸ்டேஷன் வாசல்லயே ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கு... அந்த ஸ்டாண்ட்ல எத்திராஜ்ன்னு கேட்டா எல்லோருக்குமே தெரியும்... நேராஅவர் வீட்ல கொண்டு போய் விட்டுருவாங்க... எதுக்கும் இருக்கட்டுமேன்னு... ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து அவர் வீட்டுக்கு போற வழியை படம் போட்டு வாங்கி வச்சிருக்கேன்... இவ்வளவு ரிஸ்க் எடுத்து வர்றோம்... அதுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யாம வந்துருவேனா?”
“உங்க மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு...! காலைல எத்திராஜ்க்கு ஃபோன் பண்றதா சொன்னீங்களே... பண்ணினிங்களா?”
“பண்ணினேன். அவர் நமக்காக காத்திட்டிருக்கிறதா சொன்னார்.”
அடுத்த அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு -
ஜன்னலுக்கு வெளியே இருந்த அடர்த்தியான இருட்டுக்கு நடுவே - சில வெளிச்சப் புள்ளிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.
ரயிலின் வேகம் குறைந்திருந்தது. ப்ரதாப் எழுந்து கொக்கியில் மாட்டியிருந்த ஹேண்ட்பேகைக் கையில் எடுத்துக் கொண்டான்.
“அஞ்சலா... ஸ்டேஷன் வந்தாச்சுன்னு நினைக்கறேன்...”
“இங்கே எவ்வளவு நேரம் நிக்கும்...?”
“ரெண்டு நிமிஷம்ன்னு சொன்னாங்க.
ரயிலில் பிரேக் பிடிக்கும் சப்தம், எண்ணெய் வறண்ட கேட் திறப்பது போல் 'ரீச்' சென்று தண்டவாளத்தில் எதிரொலித்தது.
தொடர்ந்து - ட்யூப் லைட் வெளிச்சங்களும் - பிளாட்பாரமும் கண்ணில் விழுந்தன.
அஞ்சலாவும் பிரதாப்பும் கம்பார்ட்மென்டின் கதவு அருகே வந்தார்கள்.
அவர்களைத் தவிர நாலைந்து பேர் அந்த ஸ்டேஷனில் இறங்குகிற முஸ்தீபுகளில் இருந்தார்கள்.
ரயிலின் இயக்கம் மெல்ல மெல்லக் குறைந்து சைபராகியதுமற்ற ஆசாமிகள் இறங்கியதைத் தொடர்ந்து அஞ்சலாவும், பிரதாப்பும் ப்ளாட்பாரத்துக்கு வந்தார்கள். சின்ன ஸ்டேஷன் போலத்தான் தோற்றமளித்தது.
ஒரே ஒரு ஆள் மட்டும் 'காபி... காபி' என்று கத்தியபடி கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டாய் - சென்று கொண்டிருக்க - மற்றபடி நிசப்தம்.
“காப்பி சாப்பிடறியா அஞ்சலா...?”
“ரயில்வே ஸ்டேஷன் காபிக்கு அந்த குழாய் தண்ணியே பெஸ்ட்.”
கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரின் அறையைக் கடந்தார்கள். குறுகலான வெளியேறும் வழியில் நுழைந்து ஸ்டேஷன் வாசலைத் தொட்டார்கள். நேர் எதிரே சில ஆட்டோக்கள் முகத்தைக் காட்டிக் கொண்டு தெரிந்தன. அதற்கு அப்பால் ஜிப்சி கூட்டங்கள் வானமே கூரையாய் உருண்டிருந்தார்கள். ஆட்டோ ஸ்டாண்டை நெருங்கினார்கள்.
பின் சீட்டில் சுருண்டு படுத்திருந்த டிரைவரைத் தட்டி எழுப்பினான் ப்ரதாப். டிரைவர் சிலுப்படித்துப் போன கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு எழுந்தார். சாராய நெடி நாசிக்குள் மூர்க்கமாய் இறங்கியது. கிருதாவை நோக்கிப் போன மீசையும், கழுத்தில் மாட்டியிருந்த தாயத்துக் கயிறும் ரெளடித் தனம் கொடுத்தது.
“எங்க போகணும்...?”
பிரதாப் இடத்தைச் சொன்னதும் - நிமிர்ந்தார்.
“எத்திராஜ் வீட்டுக்கா...!”
கேட்டுக் கொண்டே அஞ்சலாவை மேலும் கீழும் பார்த்தார்...
அஞ்சலா ப்ரதாப்பின் கையைப் பற்றிக் கொண்டாள்.
அவன் தோளோரம் கிசுகிசுத்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
வானவில் குற்றம்

Read more from ராஜேஷ்குமார்

Related to வானவில் குற்றம்

Related ebooks

Related categories

Reviews for வானவில் குற்றம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வானவில் குற்றம் - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒன்று

    அந்தச் சிறிய டேப்ரிகார்டரில் ஒற்றை ஸ்பீக்கரிலிருந்து கந்தர் ஷஷ்டி கவசம் மெலிசான வால்யூமில் தவழ்ந்து கொண்டிருக்க பழைய மாடல் பிம்பாம் சுவர்க் கடிகாரம் சற்றுக் கரகரத்த சுருதியில் ஆறு முறை அடித்தது.

    ஜன்னலுக்கு வெளியே மாலை நேரம் மந்தாரமான சூரிய வெளிச்சத்தில் இருந்தது.

    வெங்கடேசன் சாயங்கால பூஜையை முடித்துக் கொண்டு அந்தக் குறுகலான பூஜையறையை விட்டு வெளியே வந்தார். ஐம்பத்திரண்டு வயதுக்கு இன்னமும் திடகாத்திரமாகவே தெரிந்தார். வெற்று மார்பில் நரைத்த முடி புசுபுசுத்தது.

    மைய அறையில் போடப்பட்டிருந்த ஈஸி சேரில் உட்கார்ந்தவர். பக்கவாட்டில் தெரிந்த கதவுக்கு அப்பால் பெரியவள் காதம்பரியும், சின்னவள் அஞ்சலாவும் கல்யாணப் பத்திரிகைகளைப் பிரித்து வைப்பதில் மும்முரமாய் இருப்பதை உணர்ந்தார்.

    பூஜை புனஸ்காரமெல்லாம் முடிஞ்சுதா? - குரல் கேட்டுத் திரும்பினார் வெங்கடேன்.

    மனைவி பார்வதி டம்ளரை நீட்டியபடி நின்றிருந்தார். அவளைப் பார்த்ததுமே மனசில் நிற்கிற சமாச்சாரங்கள் - இரண்டு பெரிய சைஸ் குங்குமப் பொட்டு அமெரிக்கன் டயமண்ட் பதித்த தங்க மூக்குத்தி.

    - வெங்கடேசன் பால் டம்ளரை வாங்கிக் கொண்டதும் பார்வதி தூணுக்கு சாய்ந்து உட்கார்ந்தபடி சொன்னாள்.

    "மத்தியானம் தரகர் சாம்பசிவம் வந்திருந்தார்.

    என்னவாம்?

    வேற வேலையா இந்தப்பக்கம் வந்தாராம். கல்யாண வேலையெல்லாம் எந்த அளவுல இருக்குன்னு பார்த்திட்டுப் போக உள்ளே நுழைஞ்சாராம்.

    அந்த ஆளுக்கும் பொழுது போகணுமே?

    ஆனா எனக்கென்னவோ அவர் விஷயத்தோடதான் வந்தார்ன்னு படுது...

    ஏன் அப்படிச் சொல்றே...?

    சந்தடி சாக்கில் விசாரிச்சார்

    என்ன?

    தங்கம் விலை திடுதிப்பென்று உசந்துடுச்சே... என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டார்.

    அதுக்கென்ன அர்த்தம்.

    நீங்களே சொல்லுங்க...

    பேசின பவுனை நம்மால போட முடியுமான்னு தரகருக்கு சந்தேகம்.

    இது தரகருக்கு வந்த சந்தேகமா எனக்குத் தோண்ல்லீங்க.

    பின்னே...?

    மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு வந்த சந்தேகத்தை தரகர் உரசிப் பார்த்துட்டு போக வந்திருக்கார்.

    சில விநாடிகள். மவுனம் காத்த வெங்கடேசன் பின் தலையை ஆட்டினார்.

    இதில் தப்பெதுவும் இருக்கறதா எனக்குப் படலை...

    தப்பு இல்லையா?

    ஆமா...! நேரடியா கேக்காம... தரகர் மூலமா நாசூக்கா விசாரிச்சிருக்காங்களேன்னு நாம சந்தோஷப்படணும்...

    நம்ம வார்த்தையில நம்பிக்கை இல்லாமத்தானே இப்படி விசாரிச்சிருக்காங்க. சொன்ன நகையைப் போடாம் நாம் ஏமாத்திருவமா என்ன...?

    நீ... உன் பக்கத்தை மட்டும் பார்த்துப் பேசிட்டிருக்கே... கொஞ்சம் அவங்க கோணத்திலிருந்தும் பாரு...

    எனக்கென்னமோ தரகர் வந்தது மனசுக்கு சுருக்ன்னு இருக்கு.

    வெங்கடேசன் அவளைப் பார்த்து புன்னகைத்தார்.

    "காதாம் பரி வலது காலை லேசா விந்தி விந்தி நடக்கறாங்கறதைக் காரணம் காட்டி எத்தனை பேர் அவளைத் தட்டிக் கழிச்சிட்டுப் போயிருக்காங்க. அப்படி இருக்கறப்போ இவங்க அவளை கல்யாணம்

    Enjoying the preview?
    Page 1 of 1