Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு!
முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு!
முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு!
Ebook338 pages1 hour

முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அண்ணன் நட்ராஜ் நின்றிருந்த தோரணையும், ‘யார்டி அவன்?’ என்று குரலை ஒரு மாதிரி இழுத்துக் கேட்ட விதமும், செளந்தர்யாவின் வயிற்றில் ஓர் அவஸ்தையான ரசாயனக் கலவையை ஏற்படுத்த... கையில் வைத்திருந்த தண்ணீர் பாத்திரம் தானாய் நழுவியது.
“டிங்… டிணார்…”
“அ... அண்ணா...!” செளந்தர்யாவின் பெரிய விழிகள் நட்ராஜ் முகத்திலேயே திகைத்து நின்றது. நெற்றியிலும் மேலுதட்டிலும் அவசர அவசரமாய் அரும்பிவிட்ட வியர்வைச் சரங்கள் - வழிய நேரம் பார்த்தன.
“அவன் யார்ன்னு கேட்டேன்...”
“வ... வந்து... வந்து...”
“பாத்திரம் விழுந்த சத்தம் கேட்டு - அறைக்குள் எட்டிப் பார்த்த சிவசாமி செளந்தர்யாவின் நிலைமையைப் பார்த்ததும் - முகம் மாறினார்.”
“டேய், என்னடா நடந்தது?”
அப்பாவைப் பொருட்படுத்தவில்லை நட்ராஜ். வாயில் இருந்த டூத் பேஸ்ட் நுரையை - சமையலறை ஜன்னல் வெளியே - தோட்டத்துச் செடிகள் மீது உமிழ்ந்து விட்டு செளந்தர்யாவின் பக்கம் கண்கள் சிவக்க திரும்பினான்.
“யாரவன்?”
எச்சில் விழுங்கினாள்.
“காதலிக்கிறாயா?”“ஆ... ஆமா...” சொல்லி முடிப்பதற்குள் உடம்பு பூராவும் சில்லிட்டுப் போன மாதிரியான உணர்வு.
“எத்தனை நாளா?”
“மூ... மூணு மாசமா...”
“அவன் பேர் என்ன?”
“வ... வ... வருண்.”
“என்ன ஜாதி?”
“ந... நம்ம... ஜாதிதான்.”
‘என்ன... அண்ணன் இவ்வளவு நிதானமாய் பேசிக் கொண்டிருக்கிறார்?’ என்று செளந்தர்யா நினைத்த விநாடி –
நட்ராஜ் கத்தினான்.
“ரோகிணி! என் பெல்ட்டைக் கொஞ்சம் எடுத்துட்டு வா.”
அந்தக் கத்தலுக்காகவே காத்திருந்த மாதிரி ரோகிணி சமையலறைக்குள் நுழைந்தாள். கையில் பாம்பு சட்டை உரித்த மாதிரியான பெல்ட்.
சிவசாமி பதறிப்போய் - நட்ராஜின் தோளைப் பற்றினார் “டேய்ய்...!”
“அப்பா! இவளைக் காலேஜுக்கு அனுப்பக் கூடாதுன்னு நான் முடிவு பண்ணினப்ப நீங்க என்ன சொன்னீங்க? ‘செளந்தர்யா படிக்க ரொம்பவும் ஆசைப்படறா. படிக்க வையேண்டா’ன்னு சொன்னீங்க. உங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு காலேஜுக்கு அனுப்பினேன். இப்ப இவ என்ன காரியம் பண்ணியிருக்கா தெரியுமாப்பா? இவ படிக்க ஆசைப்பட்டிருக்கா - ஆம்பிளை சுகத்துக்காக.”
“டேய், நிறுத்துடா. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டுப் போகாதே. இந்த வயசுல இதெல்லாம் சகஜம். அந்தப் பையன் யாரு, என்னான்னு விசாரிப்போம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த குடும்பமாய் இருந்தா...”
“சம்பந்தம் பேசலாம்னு சொல்றீங்களா?ஆமா! பையன் நம்ம ஜாதின்னு செளந்தர்யா சொல்லிட்டா. ஜாதி பிரச்னை ஓவர். வேற ஏதாவது பிரச்னைகள் இருக்கான்னு பார்த்துட்டு...”
ரோகிணி குறுக்கிட்டாள். “உங்க அப்பா பேசறதைப் பார்த்தீங்களா! பொண்ணைக் கையும் களவுமாக பிடிச்சுக் குடுத்திருக்கோம். இத்தனை குடித்தனங்கள் இருக்கிற தெருவுல, நெஞ்சில கொஞ்சம் கூட பயம் இல்லாமே, காலங்காத்தால வீட்டு வாசலுக்கு முன்னாடி ஒருத்தனோட உங்க பொண்ணு பேசிண்டிருக்கான்னு சொன்னா, நாம சொன்னதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் பொண்ணோட கல்யாணத்தைப் பத்திப் பேசிட்டிருக்கார்.”
வந்த இருமலை அடக்கிக் கொண்டு சிவசாமி பேசினார்.
“வேற என்னம்மா பண்றது? உன் புருஷன் மாதிரி என் பொண்ணை என்னால் பெல்ட்டால் அடிக்க முடியாது. அந்த இருதயமும் எனக்கு இல்லை. அப்படி அடிக்கச் சொல்லி பெல்ட்டைக் கொண்டு வந்து குடுக்க என் பெண்டாட்டியும் உயிரோடு இல்லை.”
“பார்த்தீங்களா, உங்கப்பா பேசற குத்தல் பேச்சை?”
நட்ராஜ் ரோகிணியை ஏறிட்டான். “இப்ப பேசிட்டிருக்கிறது எங்க அப்பா இல்லை ரோகிணி. பேங்க்ல அவர் தன் பொண்ணு கல்யாணத்துக்காக போட்டு வெச்சிருக்கிற இரண்டு லட்ச ரூபாய் டெபாஸிட் பணம்... அவராச்சு, அவர் பொண்ணாச்சு. எப்படியோ போகட்டும். என்னைப் பெத்த கடனுக்காகவும், என் கூடப் பொறந்த பாவத்துக்காகவும் இரண்டு பேர்க்கும் சோத்தைப் போட்டுடறேன்.”
“டேய்! என்ன பேச்சுடா பேசறே.”
“இதோ பாருங்கப்பா. நீங்க ஒரு ஸ்கூல் ஹெட் மாஸ்ட்ரா இருபது வருஷம் ஒர்க் பண்ணி ரிட்டையரானவங்க. உங்களுக்கெல்லாம் புத்தி சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை. நீங்களாச்சு, உங்க பொண்ணாச்சு. அவ காதலிக்கிற பையன் யார்ன்னு கேட்டு, கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணுங்க. அண்ணன் அண்ணிங்கிற முறையில் நாங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு வர்றோம். கலந்துக்கிறோம்.கையிலிருந்த பெல்ட்டை அறையின் மூலையை நோக்கி ஆத்திரமாய் வீசிவிட்டு நட்ராஜ் வெளியேற - ரோகிணி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கணவனைப் பின்தொடர்ந்தாள்.
அவர்கள் போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிவசாமி தன் பாதங்களை மெத்தென்று தாக்குகிற ஓர் உணர்ச்சியில் கீழே குனிந்து பார்த்தார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு!

Read more from ராஜேஷ்குமார்

Related to முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு!

Related ebooks

Related categories

Reviews for முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு! - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    முள் கிரீடம்!

    1

    அலாரம் சிணுங்கியதுமே செளந்தர்யா விழித்துக் கொண்டாள்.

    ராஜவீதி சௌடாம்பிகை அம்மன் கோயிலிலிருந்தும், கோட்டை மேடு மசூதியிலிருந்தும் ஸ்பீக்கர்கள் வழியாய் திருவெம்பாவையும், அல்லாஹ் ஹூ அக்பர் கூவலும் கலந்து கதம்பமாய்க் கேட்டது. ‘இந்த நிமிஷத்தில் சர்ச். மணியோசையும் கேட்டால் எவ்வளவு பொருத்தமாய் இருக்கும்...?’ - செளந்தர்யா யோசித்தபடியே எழுந்தாள் ஜன்னல் வழியே வைகறை இருட்டு இன்னமும் கெட்டியாகவே இருந்தது. பக்கத்து வீட்டுப் பன்னீர் மரம் மார்கழிக் குளிர்காற்றில் வாசனையை மட்டும் அனுப்பி வைத்தது.

    செளந்தர்யா படுக்கையைச் சுருட்டி வைத்து விட்டு வீட்டுப் பின்பக்கம் போனாள். கார்ப்பரேஷன் தண்ணீர் குழாய் தண்ணீர் வருவதற்கு அறிகுறியாய் வெறும் காற்றை ‘சர்...புர்’ என்று வெளியிட்டு உறுமிக் கொண்டிருந்தது ஹோஸ் பைப்பை எடுத்து அதன் ஒரு வாயை குழாய்க்கு கொடுத்து, மற்றொரு வாயைத் தொட்டிக்குள் போட்டாள்.

    இருமல் சத்தம் கேட்டது.

    திரும்பினாள்.

    அப்பா.

    கழுத்துக்கு மப்ளரை சுற்றிக் கொண்டு, கையில் பால் கூப்பனோடு நின்றிருந்தார். இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு முறைத்தாள் சௌந்தர்யா.

    பூத்துக்கு கிளம்பிட்டீங்களாக்கும்?

    ஆ... ஆமாம்ம்மா.

    கூப்பனை அந்த ஜன்னல் திட்டு மேல வையுங்கப்பா. வாசல் தெளிச்சுட்டு நான் போய்ட்டு வந்துடறேன்.

    அட, நீ ஏம்மா சிரமப்படறே? நீ வீட்டு வேலையைப் பாரு. நான் பொடி நடையாகப் போயி...

    செளந்தர்யா வேகவேகமாய் வந்து, அப்பா சிவசாமியின் கையில் இருந்த பால் கூப்பனைப் பறித்தாள். படபடவெனப் பொரிந்தாள்.

    ராத்திரி பூராவும் ‘லொக் லொக்’ன்னு இருமிட்டுருந்ததை நான் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். இந்தப் பனியில் போனா... அவ்வளவுதான்.

    சிவசாமி சிரித்தார்.

    இன்னிக்கு நேத்தா நான் இருமிட்டுருக்கேன். இந்தப் பனியெல்லாம் என்னை ஒண்ணும் பண்ணாதம்மா.

    நீங்க என்ன சொன்னாலும் சரிப்பா. இன்னிக்கு உங்களை பால் பூத்துக்குப் போகவிடமாட்டேன்.

    அட, கூப்பனைக் குடும்மா.

    மாட்டேன்.

    பிடிவாதம் பிடிக்காதேம்மா. இப்பப் போனா பூத்துல கூட்டம் இருக்காது. போனதும் பால் பாக்கெட்டை வாங்கிட்டு வந்துடுவேன்.

    மாட்டேன். கூப்பனைத் தர மாட்டேன்.

    ப்ளக்.

    "பக்கத்து அறையின் கதவுத் தாழ்ப்பாள் விலகியது. கதவு திறக்க, அண்ணி ரோகிணியின் தூக்கம் கெட்ட முகம் - தலை சிலுப்பியிருக்க, குங்குமப் பொட்டு கலைந்தது தெரிந்தது.

    அப்பாவும் மகளும் காலங்காத்தால சண்டை போட்டு தூக்கத்தை ஏன் கெடுக்கறீங்க? ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் போய்ப் பாலை வாங்கிட்டு வர வேண்டியதுதானே?

    அது... வந்து அண்ணி வெளியே பனி ஜாஸ்தியா இருக்கு. அப்பாவோட உடம்புக்கு...

    எல்லாம் ஒத்துக்கும். பால் பூத்துல போய்ப் பாரு. உங்கப்பா வயசுல இருக்கிறவங்கதான் பால் வாங்க வந்திருப்பாங்க. நீ என்னமோ அதிசயமா பேசிட்டிருக்கே. பால் கூப்பனை அவர் கையில குடு.

    அண்ணி ரோகிணி பேச வாயைத் திறந்து விட்டால் அவ்வளவு சுலபத்தில் மூடமாட்டாள். அவளுடைய கோபத்தை அதிகப்படுத்தாமல் கூப்பனை அப்பாவிடம் கொடுக்க, அவர் வாங்கிக் கொண்டு வேகவேகமாய் நகர முயன்றார்.

    மாமா...

    நின்று மருமகளை ஏறிட்டார்.

    என்னம்மா?

    பால் வாங்கிட்டு அப்படியே அடுத்த தெரு பார்மஸியில் இந்த மருந்து வாங்கி வந்துடுங்க.

    ஆகட்டும்மா.

    செளந்தர்யா! நீ போய் வேலையைப் பாரு. இப்ப மணி என்ன?

    அஞ்சே கால்.

    குழாய்ல தண்ணி வந்துடுச்சா?

    இன்னும் வரலை, கொஞ்சம் நேரத்துல வந்துடும்.

    சரி, மளமளன்னு வேலைகளைப் பாரு. கோலம் போட அரை மணி நேரம் உட்கார்ந்துடாதே. சரியா ஆறரை மணிக்கு ஹீட்டரைப் போட்டுட்டு ஹாட் வாட்டர் ரெடியானதும் என்னை எழுப்பு.

    தலையாட்டினாள் செளந்தர்யா.

    அறைக்குள்ளிருந்து அண்ணன் நட்ராஜ் குரல் தூக்கக் கலக்கமாய் கேட்டது. ரோகிணி, அங்கே என்ன ‘தொண தொண’ன்னு பேசிட்டிருக்கே. வந்து படு. இந்த வீட்ல மனுஷன் நிம்மதியாத் தூங்க முடியாது.

    வந்துட்டேன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள். ரோகிணி கத்துவது கேட்டது.

    உங்க அப்பாவும் உங்க தங்கச்சியும் அடிக்கிற கூத்து இருக்கே சொல்லி மாளாது. பொண்ணுக்காக அவர் உருகறதும், அப்பாவுக்காக மகள் உருகறதும் கண் கொள்ளாக் காட்சி.

    செளந்தர்யா ஒரு புன்னகையோடு, குளியலறையை நோக்கிப் போனாள்.

    குளித்து முடித்து ஈரத்தலை காய்வதற்காகத் தலையில் டவலைச் சுற்றிக் கொண்டு வாசலுக்குக் கோலம் போட வந்தாள் சௌந்தர்யா. வைகறை இருட்டு இன்னமும் சாயம் போகாமல் இருந்தது. சாலையோர வேப்ப மரத்தில் பறவைகளின் க, கா, கி, கீ, கு... கூ... சத்தம். திருவெம்பாவை தெளிவாய் கேட்டது.

    மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

    வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து

    போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டிங்கன்

    ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே... என்னே...!

    செளந்தர்யாவுக்கு உடம்பு வியர்த்தது. கூடவே அம்மாவின் ஞாபகமும் வந்தது. அம்மா உயிரோடு இருந்த வரைக்கும் ஒவ்வொரு மார்கழி மாதமும் விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, பக்கத்தில் இருக்கிற சௌடேஸ்வரி அம்மன் கோயிலுக்குப் போய்விடுவார்கள். அம்மா திருவெம்பாவை பாட்டுக்கு அர்த்தம் சொல்லிக் கொண்டே வருவாள்."

    சட்டென்று அப்பாவின் ஞாபகம் வந்தது செளந்தர்யாவுக்கு. பால் பூத்துக்குப் போனவரை இன்னும் எங்கே காணோம்?

    ‘ஒரு வேளை பால் வரவில்லையா?’

    போடுகிற கோலத்தை நிறுத்திவிட்டு, கவலையாய் தெரு முனையைப் பார்த்தாள். வெறிச்சோடியிருந்தது.

    ‘அண்ணி மருந்துக் கடைக்கு வேறு போகச் சொல்லியிருக்கிறாள். அதையும் வாங்கிக் கொண்டு தானே வரவேண்டும்.’

    பெருமூச்சோடு மறுபடியும் கோலம் போட குனிந்தவள், காதுகளில் அந்த ‘ஷ்...ஷ்...ஷ்...’ சத்தம் கேட்டது.

    சரேலென நிமிர்ந்தாள்.

    வேப்ப மரத்துக்குப் பின்னால் இருந்து, அந்த இளைஞன் முகம் எட்டிப் பார்த்தது.

    செளந்தர்யாவின் முகத்தில் சோடியம் வேப்பர் வெளிச்ச சந்தோஷம். வருண்...!

    வருண் அவளுடைய காதலன். இருவரும் மூன்று மாதமாய் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரிக்குப் போகும் போது பார்த்துக் கொள்வதோடு சரி. வருணை வீட்டுப் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லியிருந்தும், இந்த அதிகாலை வேளையில் வந்திருக்கிறான்.

    ‘எதற்காக இருக்கும்?’

    செளந்தர்யா சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு எதுக்காக வந்தீங்க? என்று அபிநயித்துக் கேட்டாள்.

    அவன் வா என்றான்.

    வேண்டாம். அண்ணன் பார்த்துவிட்டால் பெல்ட் அடியில் முதுகுத் தோல் உரிந்து போய்விடும் அவள் அபிநயித்துக்காட்ட அவன் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மறுபடியும் ‘வா’ என்று தலையசைத்து கூப்பிட்டான்.

    சௌந்தர்யா எகிறுகிற இருதயத் துடிப்போடு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கோலப் பொடி கிண்ணத்தோடு வருணை நெருங்கினாள்.

    என்னங்க வருண், வீட்டுக்கே வந்துட்டீங்க? நான்தான் வீட்டுப் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?

    ஸாரி செள... இன்னிக்கு என்னமோ காலையில் கண் விழித்ததுமே உன்னை பார்க்கணும் போல இருந்தது. அதுதான் ஜாக்கிங் போற ரூட்டை மாத்திக்கிட்டு இந்தப் பக்கமா வந்துட்டேன். ஆஹா... எவ்வளவு திவ்யமான காட்சி...

    திவ்யமான காட்சியா?

    ஆமா. தலையில ஈர டவலை சுத்திக்கிட்டு, இந்த மார்கழிப் பனியில குனிஞ்சு கோலம் போடற அழகு இருக்கே... ஆஹா!

    சரி சரி இடத்தை மொதல்ல காலி பண்ணுங்க. பால் பூத்துக்குப் போயிருக்கிற அப்பா எந்த நிமிஷத்திலும் வந்துடுவார். அண்ணனும் அண்ணியும் உள்ளார இருக்காங்க. அக்கம் பக்கத்து வீடுகள்ல இருக்கிற யாராவது பார்த்துட்டாலும் வம்பு. உடனே கிளம்புங்க. வீட்டுப் பக்கம் வர்ற வேலையையெல்லாம் இனிமே வெச்சுக்காதீங்க.

    ஏன் தான் இப்படி பயப்படறியோ?

    பயப்படாம என்ன பண்றது? எங்க அண்ணனுக்கு வர்ற கோபத்தைப் பத்திதான் உங்கக்கிட்டே சொல்லியிருக்கேனே...! அப்பா மூலமா அண்ணனுக்கு நம்ம விவகாரத்தைத் தெரியப்படுத்தற வரைக்கும் ஜாக்கிரதையா இருந்தே ஆகணும்... போங்க... போங்க…

    ஏன் பிச்சைக்காரனைத் தொறத்தற மாதிரி தொறத்தறே. நீ பாட்டுக்கு கோலம் போட்டுகிட்டு இரு. நான் இந்த மரத்துக்குப் பின்னாடி இருந்து ரெண்டு நிமிஷம் பார்த்துட்டுப் போயிடறேன். நீ கோலம் போடற அழகு இருக்கே...

    அய்யோ. என்று மெல்ல சிணுங்கி, இடது கை விரல்களால் நோகாமல் தலையில் அடித்துக் கொண்டாள். செளந்தர்யா.

    இது கூட அழகாகத்தான் இருக்கு.

    உங்களை...

    இந்த கோபம் கூட அழகா இருக்கு.

    அய்யய்யோ…

    என்ன?

    அப்பா வந்துட்டிருக்கார்.

    வருண் வேப்ப மரத்துக்குப் பின்னால் சட்டென்று ஒண்டிக் கொள்ள, செளந்தர்யா மறுபடியும் கோலத்துக்கு வந்தாள்.

    சிவசாமி இருமிக் கொண்டே நெருங்கினார். கையில் பால் கவர் தளும்பியது. கோலத்தை இழைத்துக் கொண்டே கேட்டாள் சௌந்தர்யா.

    ஏம்பா இவ்வளவு நேரம்? பால் வேன் வரலையா?

    "அதெல்லாம் வந்துட்டதம்மா. உன் அண்ணி கேட்ட மருந்து அடுத்த தெரு பார்மஸியில கிடைக்கலை. மெயின் ரோடு பார்மஸிக்குப் போய் வாங்கிட்டு வந்தேன். அம்மாடி... சொன்னவர் கால் மூட்டைப் பிடித்துக் கொண்டு வாசற்படியிலேயே உட்கார்ந்து விட்டார்.

    உங்களை யாரப்பா மெயின் ரோட்டுக்குப் போகச் சொன்னது? பக்கத்து தெரு பார்மஸியில் கிடைக்கலன்னா... வந்துட வேண்டியதுதானே?

    அதெப்படிம்மா? மருந்துன்னு கேட்டப்புறம் போகாமே இருக்க முடியுமா? எனக்குக் கொஞ்சம் வெந்நீர் வெச்சுக்குடும்மா.

    நீங்க உள்ளே போய்ப் படுங்கப்பா. நான் வந்துடறேன்.

    சிவசாமி எழுந்து தளர்வாய் உள்ளே போக - சௌந்தர்யா வேக வேகமாய்க் கோலத்தை இழைத்து விட்டு எழுந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மரத்துக்குப் பின்னால் நின்றிருந்த வருணுக்கு - கையசைத்து விட்டு, உதட்டை பொய்யாய்ப் பழிப்பு காட்டியபடி உள்ளே போனாள்.

    அப்பா ஈஸிச் சேரில் சாய்ந்து உட்கார்ந்து - இருமலை அடக்குவதற்காக நெஞ்சைத் தடவிக் கொண்டிருந்தார்.

    ஒரு நிமிஷம்பா. வெந்நீர் தர்றேன்.

    சமையலறைக்குள் வேகவேகமாய் நுழைந்தாள். கேஸ் அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு பாத்திரத்தில் தண்ணீர் மொண்ட விநாடி -

    பின்னால் தொண்டை கனைப்புச் சத்தம் கேட்டது.

    க்கும்...

    அண்ணா நட்ராஜ்.

    டூத் பேஸ்ட் வாயோடு கேட்டான்.

    யார்டி... அவன்...?

    ………….

    2

    அண்ணன் நட்ராஜ் நின்றிருந்த தோரணையும், ‘யார்டி அவன்?’ என்று குரலை ஒரு மாதிரி இழுத்துக் கேட்ட விதமும், செளந்தர்யாவின் வயிற்றில் ஓர் அவஸ்தையான ரசாயனக் கலவையை ஏற்படுத்த... கையில் வைத்திருந்த தண்ணீர் பாத்திரம் தானாய் நழுவியது.

    டிங்… டிணார்…

    அ... அண்ணா...! செளந்தர்யாவின் பெரிய விழிகள் நட்ராஜ் முகத்திலேயே திகைத்து நின்றது. நெற்றியிலும் மேலுதட்டிலும் அவசர அவசரமாய் அரும்பிவிட்ட வியர்வைச் சரங்கள் - வழிய நேரம் பார்த்தன.

    அவன் யார்ன்னு கேட்டேன்...

    வ... வந்து... வந்து...

    பாத்திரம் விழுந்த சத்தம் கேட்டு - அறைக்குள் எட்டிப் பார்த்த சிவசாமி செளந்தர்யாவின் நிலைமையைப் பார்த்ததும் - முகம் மாறினார்.

    டேய், என்னடா நடந்தது?

    அப்பாவைப் பொருட்படுத்தவில்லை நட்ராஜ். வாயில் இருந்த டூத் பேஸ்ட் நுரையை - சமையலறை ஜன்னல் வெளியே - தோட்டத்துச் செடிகள் மீது உமிழ்ந்து விட்டு செளந்தர்யாவின் பக்கம் கண்கள் சிவக்க திரும்பினான்.

    யாரவன்?

    எச்சில் விழுங்கினாள்.

    காதலிக்கிறாயா?

    ஆ... ஆமா... சொல்லி முடிப்பதற்குள் உடம்பு பூராவும் சில்லிட்டுப் போன மாதிரியான உணர்வு.

    எத்தனை நாளா?

    மூ... மூணு மாசமா...

    அவன் பேர் என்ன?

    வ... வ... வருண்.

    என்ன ஜாதி?

    "ந...

    Enjoying the preview?
    Page 1 of 1