Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முள் முனையில் முகிலா
முள் முனையில் முகிலா
முள் முனையில் முகிலா
Ebook93 pages30 minutes

முள் முனையில் முகிலா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னை.
அடையார் போட் கிளப் ரோட்டில் - சினிமா டைரக்டர் ஹரிஹரபுத்ரன் பங்களா. உதட்டில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க - பீர் வளர்த்துவிட்ட தொப்பையை - இடதுகை விரல்களால் செல்லமாய் வருடிக் கொண்டே - சுற்றிலும் உட்கார்ந்திருந்த பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
“வரிசையா மூணு சில்வர் ஜூபிளி படங்களைக் குடுத்திருக்கீங்க... இந்த வெற்றிக்கு எது காரணம்ன்னு நினைக்கறீங்க...?”
“நான் எடுத்துக்கிட்ட கதையம்சம்தான்...”
“இசைக்காகத்தான் படம் ஒடிச்சுன்னு சொல்றாங்களே...?”
“சம்பந்தப்பட்டவங்க அப்படி சொல்ல வெச்சுருக்காங்க... என் படங்களோட வெற்றிக்கு காரணம் நல்ல கதைதான்... இந்தக் கருத்தை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையே பட்டவர்த்தனமா எழுதியிருக்கு...”
“உங்க அடுத்த படம் என்ன...?”
“ஊமை புல்லாங்குழல்கள்...”
“லவ் ஸ்டோரியா...?”
“படத்தைப் பத்தி இப்ப எதுவும் சொல்றதுக்கில்லை...”
“ஹீரோ யாரு...?”
“என் படத்துக்கு ஹீரோ கதைதான்...”
“கமர்ஷியல் படமா… ஆர்ட் படமா...?”“ஓடினா... கமர்ஷியல் படம்... ஓடாட்டி... ஆர்ட் படம்னு சொல்லிக்கலாம்...”
“ஒரு பழம் பெரும் டைரக்டர் உங்களைப் பத்தி கருத்து தெரிவிக்கும்போது - ‘தலைக்கனம் பிடிச்சவர் ஹரிஹரபுத்ரன்’னு சொல்லியிருக்காரே...?”
“அவர் சொன்னது சரிதான்... ஏன்னா என்னோட - தலையில் நிறைய விஷயம் இருக்கிறதுனால - கனக்கத்தான் செய்யும்...”
“ஒரு பர்சனல் கேள்வி. கேக்கலாமா...?”
“கேக்க வேண்டாம்...”
“உங்க எதிர்கால லட்சியம் என்ன...?”
“எனக்கு மட்டுமில்லை... இந்த சினி ஃபீல்டில் இருக்கிற ஒவ்வொருத்தருக்கும்... பணம் சம்பாதிக்கிறதுதான் லட்சியம்... சினிமாக்காரங்ககிட்டே இதுமாதிரியான கேள்வியைக் கேட்காதீங்க... ரப்பிஷ்...!” கையிலிருந்த சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் இட்டு தீய்த்துக் கொண்டிருக்கும்போதே -
டீ பாயின் மேல் இருந்த அந்த டெலிபோன் கிணுகிணுத்தது.
ஹரிஹரபுத்ரன் ரிஸீவரை எடுத்தார்.
“ஹலோ...” மறுமுனையில் பெண் குரல்.
“அப்பா... நான் முகிலா பேசறேன்...”
ஹரிஹரபுத்ரன் உடம்பு பூராவும் மலர்ந்தார்.
“அடடே... நீயாம்மா? வழக்கமா ராத்திரி நேரம்தான் போன் பண்ணுவே... இப்ப என்னம்மா... திடீர்ன்னு...?”
“ஐயோ... அப்பா... நான்... இப்ப நியூயார்க்கிலிருந்து ஓவர்சீஸ் கால் மூலமா பேசலை...?”
“பின்னே...?”
“மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிலிருந்து...”ஆனந்தத்தில் அதிர்ந்தார் ஹரிஹரபுத்ரன்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
முள் முனையில் முகிலா

Read more from ராஜேஷ்குமார்

Related to முள் முனையில் முகிலா

Related ebooks

Related categories

Reviews for முள் முனையில் முகிலா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முள் முனையில் முகிலா - ராஜேஷ்குமார்

    1

    கொடைக்கானல் கெட்டியான பனி மூட்டத்தோடு விடிந்து கொண்டிருந்தது. தைல மரங்களின் உச்சியில் மட்டும் பிறந்த சூரியனின் ஆரஞ்சு வெளிச்சம் ஒட்டியிருந்தது. லேக்கின் நீர் பரப்பிலும் - ப்ரியாண்ட் பார்க்கிலும் - தைரியமாய் சில மேகங்கள் தரையிறங்கி - காற்றோடு ஒடி பிடித்து விளையாடியது. வோர்தன் ஹோட்டல், இண்டியன்க்ளப், இங்கிலீஷ் க்ளப், கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல் - மூஞ்சிக்கல் ரெஸ்ட் ஹவுஸ் - கட்டிடங்கள் - பனிப்புகைக்குள் கண்ணாமூச்சி விளையாட்டை ஆடிக்கொண்டிருந்தன.

    "அப்பர் லேக் ரோட்டில் வேகமாய் போய்க் கொண்டிருந்த அந்த மெர்ஸிடஸ் வேனை ஒரு இளைஞன் ஓட்டிக் கொண்டிருக்க - பக்கத்தில் அவன் தோளையொட்டியபடி ஒரு பெண். இரண்டு பேருமே முப்பது வயதுக்குள் இருந்தார்கள். ஏறக்குறைய சம உயரம். ஸ்வெட்டர்களில் நுழைந்து - தலைக்கு பனி குல்லாக்களை கொடுத்திருந்தார்கள். இளைஞனின் உதட்டு இடுக்கில் - புகையும் சிகரெட் தொற்றியிருந்தது.

    ஆதித்... அந்தப் பெண் கூப்பிட்டாள்.

    ம்... நாசித் துவாரங்களில் சிகரெட் புகையை விட்டபடியே அவளை திரும்பிப் பார்த்தான் அவன்.

    சில்வர் காஸ்கேட்டுக்குப் போக சரியான வழி எதுன்னு யார் கிட்டேயாவது கேட்டு தெரிஞ்சுக்கிறது பெட்டர்...

    மேப்தான் கையில் இருக்கே...?

    அது ஏமாத்திடும். காட்ரோடுகள் திசை மாறுவது தெரியாது. அந்த பேக்கரிக்குப் பக்கத்தில் வேனை நிறுத்து... விசாரிக்கலாம்.

    ஆதித் வேனின் வேகத்தைக் குறைத்து - பேக்கரி வாசலில் பிரேக் போட்டான். எஞ்சின் துடித்துக் கொண்டிருக்க - தலையை நீட்டி - பேக்கரிக்குள்ளே கம்பளியைப் போர்த்திக் கொண்டிருந்த நபரிடம் கேட்டான்.

    சில்வர் காஸ்கேட் எப்படிப் போகணும்...?

    கம்பளிக்குள் இருந்த ஆள் அசையாமல் பேசினான்.

    சில்வர் காஸ்கேட்க்கு போகணும்ன்னா மதுரை போற காட்ரோட்டை பிடிக்கணும்...

    இங்கிருந்து எவ்வளவு தூரம்...?

    சரியா எட்டு கிலோ மீட்டர்... வேன் நகர்ந்தது.

    ஆதித் கையிலிருந்த – கடைசி சென்டிமீட்டர் சிகரெட்டை - ரோட்டோரமாய் சுண்டிவிட்டு சொன்னான்.

    யதுவந்தனுக்கு நாம ஒரு லெட்டர் போட்டு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிகிட்டே வந்திருக்கலாம்...

    ஏன்... அவர் இருக்க மாட்டார்ன்னு நினைக்கிறியா...?

    வெளிநாட்டுக்குப் போயிருந்தா...?

    அவர் சமீபத்தில் தான் வெளிநாட்டுக்கு போயிருந்தார்ன்னு பேப்பர்ல நியூஸ் பார்த்தேன்...

    பனிப்புகை மண்டிக் கிடந்த ரோட்டில் - வேனின் வேகத்தை அதிகப்படுத்தினான் ஆதித், ரோட்டின் இரண்டு பக்கத்திலும் வளர்ந்திருந்த - யூகலிப்டஸ் குற்று மரங்கள் வரிசை பிறழாமல் கூடவே ஓடி வந்தன. சரியாய் பதினைந்து நிமிஷ பயணம்.

    சில்வர் காஸ்கேட் வந்தது. சுற்றிலும் மலை சிகரங்கள். அவைகளின் உச்சியில் - கொத்து கொத்தாய் ஒட்டிக் கொண்டிருக்கும் பால்நிற மேகங்கள். உடம்பை தைத்துப் பார்க்கும் ஊசிக் காற்று. அந்தக் காற்றில் ஈஷியிருக்கும் பிடிபடாத மூலிகை மணம்.

    ரோட்டோர சின்கோனா மரத்தின் அடித்திண்டில் - ஒரு தகரம் அரையப்பட்டிருக்க - அதில் ஒரு அம்புக் குறி போடப்பட்டு - WAY TO YADHUVANDAN ZOOLOGICAL PARK - பெயிண்ட் எழுத்துக்கள் தெரிந்தது.

    வேன் குதித்து குதித்து - இருநூறு மீட்டர் தூரம் உள்ளே போனதும் - அந்த இடம் ஒரு காட்டுக்குள் இருப்பதைப் போன்ற சூழ்நிலையை தோற்றுவித்தது. குளிர் அதிகமாய் உறைத்தது.

    இன்னும் ஒரு ஐம்பது மீட்டர் தூரம் உள்ளே போனதும் - மூடப்பட்டிருந்த பெரிய காம்பௌண்ட் கேட் அவர்களை மறித்தது.

    ஹார்ன் அடித்தான் ஆதித்.

    வாட்ச்மேன் ஒருவன் முண்டாசு கட்டிய மப்ளர் தலையை வெளியே நீட்டினான்.

    யாரு...?

    ஆதித் கத்தினான்.

    புரபஸர் யதுவந்தனை பார்க்கணும்...

    விஸிட்டிங் கார்டு வெச்சிருக்கீங்களா...? கேட்டான்.

    இந்தா... தன் சட்டை பையில் வைத்திருந்த கார்டை எடுத்து நீட்ட வாட்ச்மேன் வாங்கிக் கொண்டு உள்ளே போனான்.

    அந்தப் பெண் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு பரவசித்தாள்.

    ஆதித்! இடம் எவ்வளவு அழகாயிருக்கு பார்த்தீங்களா...? க்ளைமேட் அதைவிட ஃபைன் நாம் திட்டத்துக்கு ஏற்ற சீதோஷ்ணம்...

    யதுவந்தன் - நம்ம திட்டத்துக்கு ஒத்துக்குவார்னு நினைக்கறியா?

    கண்டிப்பா ஒத்துக்குவார்...

    எனக்கு கொஞ்சம் உதைப்பா இருக்கு...

    திட்டத்தைப் பத்தி நாம சொல்ற விதத்துல... சொன்னா, யதுவந்தன் ஒத்துக்குவார்னு நினைக்கிறேன்...

    பார்ப்போம்...

    இரண்டு நிமிஷங்களுக்கு பிறகு - கேட் அகலமாய் திறந்து - கொள்ள வாட்ச்மேன் குரல் கொடுத்தான்.

    வேனை உள்ளார கொண்டு போயிடுங்க... ஸார்...! புரபசர் ஜி-ஸ்பாட்ல இருக்கார்...

    வேனை கிளப்பிக் கொண்டு உள்ளே போனான் ஆதித். பாதை சுத்தமாயிருந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1