Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தீர்க்க சுமங்கலி
தீர்க்க சுமங்கலி
தீர்க்க சுமங்கலி
Ebook117 pages42 minutes

தீர்க்க சுமங்கலி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

துர்கா ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு திரும்பும் போது மாடி பால்கனியருகே இவள் வரவிற்காக காத்திருந்த வைத்தீஸ்வரன் கண்களில் பட்டார்.
இவளைக் கண்டதும் கதிரவனாய் முகம் பிரகாசிக்க கையை அசைத்துகாட்டி கீழே இறங்கி வந்தார்.
துர்கா நிதானமாய் நடந்தாள்.
அவள் செருப்புக்கடியில் மெத்தென்று வளர்ந்திருந்த பசும்புற்கள் நசுங்கிப்போயின. கண்ணுக்கெட்டிய வரை அழகிய செடி, கொடிகள், மலர்கள் என்று அந்த இடமே நந்தவனமாய் இருந்தது. கேட்டை திறந்து உள்ளே சென்றால் ஐம்பதடி தள்ளி வெண்ணிறமாய் பளபளத்தது அந்த சலவைக்கல் பங்களா!
மூன்று மாடிகளாய் உயர்ந்து கம்பீரமாய் நின்றிருந்தது?
“வா... துர்கா... இன்னைக்கென்ன இவ்வளவு லேட்?”
ஒரு குழந்தையின் துள்ளலோடு, ஆர்வத்தோடு, லேசாய் மூச்சு வாங்க வாசலில் வந்து விட்டார்.
“நான் தான் வந்துட்டேயிருக்கேனே... நீங்க ஏன் இப்படி ஓடி வர்றீங்க? மூச்சு வாங்குது...”
“அதைவிடு! ஏன் லேட்? நான் பதறிப்போய்ட்டேன். உங்கிட்டயிருந்து போனும் வரலே... நான் என்னன்னு நினைக்கிறது?” கவலையாய் கேட்டார்.
“அது சரி! ஒரு மணி நேரம்தானே லேட்டாச்சி. முகேஷ்க்கு இன்னைக்குப் பிறந்த நாள். கோவிலுக்குப்போய் அர்ச்சனைப் பண்ணிட்டு வந்தேன்! அதனாலதான் தாமதம்!”
“அடடா... நேத்தே எங்கிட்டே சொல்லி இருக்கலாமே! ஒரு நல்ல ப்ரெசன்ட்டை ரெடி பண்ணியிருப்பேனே! இப்ப மட்டும் என்ன... அப்படி ஒண்ணும் நாழியாயிடலை. இன்னைக்கு சமைக்க வேண்டாம். ஹோட்டல்லசாப்பிட்டுப்போம். முகேஷிற்கு பர்த்டே கிஃப்ட் வாங்க... இன்னைக்கு முழுக்க மெட்ராஸை ஒரு கலக்கு கலக்குவோம்!”
துர்கா சப்தம் வெளிவராமல் சிரித்தாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் வைத்தி.”
“என்ன வேண்டாம்? நோ... நோ...உன் பேச்சை நான் கேக்கப் போறதில்லே! இன்னைக்கு உன் கூடவே நானும் கிளம்பி முகேஷிற்கு என் கையால பரிசை கொடுக்கப் போறேன்!” கண்கள் மின்ன... உறுதியாய் பேசினார்.”
‘வேற வினையே வேண்டாம்!’ என்று நினைத்த துர்கா சங்கடமாய் சிரித்தாள்.
“உள்ளே போய் பேசலாமா?”
“சேச்சே... நான் ஒரு மடையன், தாராளமா உள்ளே வா...துர்கா!”
என்ற வைத்தீஸ்வரன் நாற்பத்தெட்டு வயதிற்கு ரொம்பவே தளர்ந்திருந்தார்.
செக்கச்சிவந்த நிறம். ஐந்தரை அடி உயரம். லேசாய் தொந்தி! அங்கிங்கே என்று தலையில் வெள்ளிக் கம்பிகள் தெரிந்தாலும், வழுக்கை விழவில்லை. வெள்ளை நிறத்தில் வேட்டியும், சட்டையும் ஒரு கையில் தங்க கைகடிகாரம். மற்றொரு கையில் பிரேஸ்லெட். கழுத்தில் நவரத்தின மாலை நெற்றியில் விபூதிபட்டை.
அந்த பங்களாவின் ஒவ்வொரு அடியும் பணத்தால் அளக்கப்பட்டிருந்தது. தேக்கில் இழைக்கப்பட்ட வேலைப்பாடுடன் கூடிய உயர்ரக பர்னிச்சர்கள் குஷன்வைத்து அமைக்கப்பட்டிருந்தது. வண்ண அலங்கார விளக்குகள், எடுபிடி வேலையாட்கள், தோட்டக்காரன், வாட்ச்மேன் என்று வீடு நிறைய பணியாட்கள் இருந்த போதிலும் கடந்த ஒரு வருடமாய் வைத்தீஸ்வரனுக்கு சமையல்காரி துர்காதான்.
சென்னை நகரின் முக்கிய புள்ளிகளில் ஒருவர் வைத்தீஸ்வரன். எல்லா பிஸினஸிலும் கால் பதித்து வெற்றி கொடி நாட்டி, மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளிக் கொள்பவர். அவர் இலட்சாதிபதி அல்ல. கோடீஸ்வரன். இருவரும் உள்ளே வந்தமர்ந்த மறுவினாடியே அவர் கம்பெனி ஜி.எம். துரைராஜ் வந்தார்.
“குட்மார்னிங் சார்!குட்மார்னிங்! உக்காருங்க துரை.”
சீட்டின் நுனியில் பட்டும் படாமல் அமர்ந்தார்.
“சார்...”
“சொல்லுங்க! என்ன விஷயம்? அதுக்கு முன்னால காபி சாப்பிடுங்க!” என்று கூறிவிட்டு வேலைக்காரனிடம் கண்களால் உத்தரவு போட்டார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
தீர்க்க சுமங்கலி

Read more from ஆர்.மணிமாலா

Related to தீர்க்க சுமங்கலி

Related ebooks

Reviews for தீர்க்க சுமங்கலி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தீர்க்க சுமங்கலி - ஆர்.மணிமாலா

    1

    "சஷ்டியை நோக்க சரவண பவனார்...

    சிஷ்டருக்கு தவுஞ் செங்கதிர் வேலோன்...

    பாதமிரண்டில் பண்மணி சதங்கை...

    கீதம் பாட கிண்கிணி ஆட..."

    பூஜையறையில் கண்கள் மூடி... மனம் உருகி பாடிக் கொண்டிருந்தாள் துர்கா! திரைச்சீலை அசந்தநேரம் பார்த்து ஜன்னல் வழியே வெளிச்சம் உள்ளே புகுந்தது.

    புரண்டு படுத்த முகேஷ் நேரமாகி விட்டதை உணர்ந்து கட்டிலில் எழுந்தமர்ந்தான்.

    கீழேயிருந்து படியேறி மேலே வந்து காதில் மோதியது சஷ்டி கவசம். முகேஷ் நமுட்டாய் சிரித்துக்கொண்டான். இதையெல்லாம் பாடக் கூட ஒரு யோக்கியதை வேண்டாமா?

    இடுப்பிலிருந்து நழுவிய லுங்கியை இழுத்து சரியாக கட்டிக் கொண்டு பாத்ரூம் நோக்கிப்போனான்.

    பூஜையிலிருந்து வெளிப்பட்ட துர்கா தலை உயர்த்தி மாடியைப் பார்த்தாள்.

    மூகேஷின் அறைக்கதவு திறந்திருந்தது. ‘காபி கொண்டு போகலாமா?’ உதித்த எண்ணத்தை உடனே ரப்பர் போட்டு அழித்தாள்.

    வேண்டாம். அவன் முகம் கொடுத்து பேசாத போது நான் தரும் காபியை மட்டும் குடிப்பானா என்ன?’ நினைத்த போதே... நெஞ்சில் கனம் ஏறிக்கொண்டது. பெருமூச்சு விட்டபடி சமையல்கட்டுக்குள் நுழைந்த துர்காவிற்கு நாற்பத்தாறு வயது. இந்த வயதிலும் கட்டு விட்டுப்போகாத உடம்பு. ஒரு முடி கூட நரைக்கவில்லை. சிவந்த நிறத்தோடு எண்ணெய் கலந்தது போல் ஒருமினுமினுப்பு. டிவைன் ஃபேஸ் என்பார்களே... அது அப்படியே துர்காவிற்குத்தான் பொருந்தும். அப்படியொரு தெய்வீகமான அழகு சிரிக்கும் போது மின்னல் வெட்டும் வைரக்கல் மூக்குத்தி, வட்டவடிவ செந்நிற திலகம், மெட்டியில் ஒலிக்கும் சலங்கை அத்தனையும், கர்ப்பகிரகத்திலிருந்து சிலை உயிர்பெற்று வந்து விட்டதோ... என்று கையெடுத்துக்கும்பிட வைக்கும் தோற்றம்.

    சமையலறையில் அமிர்தம் கொத்தவரங்காயை நறுக்கிக்கொண்டிருந்தாள். இவள் வருவதைப் பார்த்ததும் காபியை எடுத்து அவள் பக்கமாய் வைத்தாள்.

    அக்கா... நான் கோவில் வரைக்கும் போய்ட்டு வந்துடறேன். அவர் எழுந்தா சொல்லிடுங்கோ!

    இன்னைக்கென்ன? திங்ககிழமைதானே? வைத்திக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ? நக்கலாய் கேட்டாள் அமிர்தம்.

    நடுரோட்டில் நிற்கவைத்து துணியை உருவிவிட்டது போல் துடித்துப்போனாள்.

    முகேஷ்க்கு இன்னைக்குப் பிறந்த நாள்! என்றாள் சன்னமாக!

    அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

    ஓஹோ...! இந்த ஆத்துல வழக்கமா யாரோட பிறந்த நாளையும் கொண்டாடறதில்லையா... அதனால ஒண்ணுமே தெரியலை. சரி... கோவிலுக்குப் போய்ட்டு வீட்டுக்கு வருவியா? இல்லே அப்படியே அந்த வீட்டுக்கு போய்டுவியா?

    ‘அந்த’ என்ற வார்த்தைக்கு அதிகமாய் அழுத்தத்தை சேர்த்திருந்தாள் அமிர்தம்.

    வருவேன்... முகேஷுக்கு பீட்ரூட் அல்வான்னா ரொம்ப பிடிக்கும். என் கையால் அதை நான் செய்யணும். அப்புறம் இந்த கொத்தவரங்காயை சமைக்கவேண்டாம்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். உங்க தம்பிக்கு இது ஆகாது. பித்தத்தைச்சேர்க்கும்.

    இதை சாப்பிட்டுதான் பித்தம் சேரணுமா அவனுக்கு? ஏற்கனவே எக்கச் சக்கமாக ஏறியிருக்கிறதாலேதானே பித்துக்குளித்தனமா காரியம் பண்ணியிருக்கான்

    சுற்றிச் சுற்றி மறுபடி அதே டாபிக்கை தொடவும், இதற்கு மேல் இவளிடம் பேசுவது மரியாதையாகாது என்று உணர்ந்தவள் வாயை மூடிக்கொண்டு வெளியேறினாள்.

    போகும் அவளை... அசிங்கத்தை காலால் மிதித்து விட்ட அருவருப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

    கலிகாலம்! எந்த வீட்டில் நடக்கும் இப்படியொரு கூத்து? இவளெல்லாம் ஒரு பொம்பளைன்னு எப்படிதான் தெருவிலே இறங்கி நடக்கிறாளோ... பகவானுக்கே வெளிச்சம்! அளவுக்கதிகமாக படிச்சிட்டா... மூளை வேலை செய்யாது போல... இல்லாவிட்டால் என் தம்பி இப்படியொரு கேணத்தனமான ஈனத்தனமான காரியத்தை செய்வானா? இப்படிப்பட்ட வீட்டிலே இருக்கிறது எனக்குத்தான் அவமானம். என்ன பண்றது? நாலு சுவரும் மூணு வேளை சோறும் இங்கேதான் உனக்குன்னு என் தாலிய அறுத்து அனுப்பி வச்சிட்டானே ஈஸ்வரன். ஹூம்... எல்லாம் தலையெழுத்து! இவளோட காத்துப்பட்டாலே எட்டு ஊரு பாவம் சேர்ந்து வந்து ஒட்டிக்கும். ஆனா இவளோட நிழல்லே இல்லே என்னை உக்கார வச்சிட்டான். நல்லவேளை... இந்த கண்றாவியெல்லாம் பார்க்க... பெத்தவங்க உயிரோட இல்லை... அது வரைக்கும் ஷேமம்!

    என்னக்கா? பொளம்பிண்டே கறிகாய் நறுக்கறே! பார்த்து... விரலையும் சேர்த்து வெட்டிண்டுட போற... கிண்டலாய் கேட்டபடி வாசலில் வந்து நின்றார் ரத்னகுமார்.

    அப்போது தான் குளித்து விட்டு வந்திருப்பார் போலும். ‘கமகம’வென சோப்பின் மணம் அறை முழுக்க வியாபித்தது. வெற்றுடம்பில் ஒரு பூத்துவாலை அணைத்துக் கொண்டிருந்தது.

    வாப்பா... வா... எந்திரிச்சிட்டியா?

    என்ன கேள்வியிது? உன் முன்னாடி முழுசா நிக்கறேனே. தூக்கத்துல நடக்கற வியாதியெல்லாம் எனக்கில்லே!

    தூங்கறா மாதிரி நடிக்கறவாளுக்கெல்லாம் அந்த வியாதி வராதுன்னு எனக்குத் தெரியும்! காபியை கலக்கிய படி சொன்னாள்.

    என்ன பூடகமாப் பேசறே?

    நான் என்ன பேசறேன்னு நிஜமாவே உனக்குப் புரியலே? புரியும். புரிஞ்சாலும் தெரிஞ்சா மாதிரி காட்டிக்க மாட்டே! ஏன்னா நீ டாக்டர். ரொம்ப படிச்சவன். அதனாலேயே பண்ற காரியம் தப்புன்னாக் கூட ஒப்புக்க மாட்டே!

    மொதல்ல காபியை குடு!

    பார்த்து... ரொம்ப சுடுது! என்றபடி காபியை தம்பியிடம் நீட்டினாள்.

    அந்தக் கவனம் கூடவா எனக்கில்லாம போயிடுச்சின்னு நினைக்கிறே? ரத்னகுமார் காபியை உறிஞ்சியபடி கேட்டார்.

    உம் பொண்டாட்டியை நெருப்புன்னு தெரிஞ்சும், அது சுட்டு பொசுக்கிடும்னு தெரிஞ்சும் அதுல இறக்கி விட்டிருக்கியே... அதனால எச்சரிக்கை பண்ணினேன்... தப்பா? அமிர்தம் பூடகமாய் சொன்னாள்.

    என்னதான் உடன்பிறந்த தம்பி என்றாலும் ரத்னகுமாரிடம் அதிகமாய் பேசமாட்டாள் அமிர்தம். அவன் டாக்டர், அதிகம் படித்தவன். தன் இரண்டு பெண்களை முன்னின்று செலவு பண்ணி கல்யாணம் செய்து கரை ஏற்றியவன் என்ற மரியாதை காரணமாக... வாய் மூடி நிற்பாள். குடும்ப விஷயங்களில் கூட தலையிடமாட்டாள்.

    ரத்னகுமார் பெற்றோருக்கு அமிர்தமும், அவரும் மட்டும் தான். ஓரளவு வசதியான குடும்பம்தான். ஒரே மகள் அமிர்தத்தை பாளையங்கோட்டையில் சொந்தமாய் மளிகை கடை வைத்திருந்த பவித்ரனுக்கு மணமுடித்து வைத்தனர். சின்ன வயதிலேயே ரத்னகுமார் படிப்பில் படுசுட்டி. இரக்க. சுபாவம் அதிகம். தெருவில் காலொடிந்து கிடக்கும் நாய்களைக் கண்டால் உடனே வீட்டிற்கு தூக்கி வந்து காயத்திற்கு மருந்திட்டுதானே வளர்க்கும் உபகார எண்ணமிருந்தது. அவர் மனம் தன்னாலேயே மருத்துவ படிப்பை நாடியது. ஒரே பிள்ளையின் ஆசையை நிறைவேற்றுவதை விடவா சொத்து பத்து அவசியம் என்று நிலம், நீச்சுகளை விற்று ரத்னகுமாரை டாக்டருக்கு படிக்க வைத்தனர். அவரும் படித்து தேறி... மதுரையிலிருந்து சல்லடைபோட்டு தேடி துர்காவை தேர்ந்தெடுத்து அவருக்கு மனைவியாக்கிய

    Enjoying the preview?
    Page 1 of 1