Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai Maamani
Kolai Maamani
Kolai Maamani
Ebook88 pages30 minutes

Kolai Maamani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466930
Kolai Maamani

Read more from Devibala

Related to Kolai Maamani

Related ebooks

Related categories

Reviews for Kolai Maamani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai Maamani - Devibala

    1

    மாலை நேரச் சென்னை, மின்சாரப் பூக்களை கொண்டையில் சூடி, தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது.

    ரத்த நிற மாருதிக்கு ஓய்வு கொடுத்து விட்டு, அந்த ஏழு மாடி கான்க்ரீட் சாக்லெட்டுகளுக்கு முன்னால் தன் பூட்ஸ் காலைப் பதித்தான் ரஞ்சன்.

    ‘டக்... டக்’ கென்ற சீரான ஒலியோடு ஹாலைக் கடந்து, லிப்ட் முன்னால் நின்றான். ஐந்தை அழுத்தி வெளிச்ச எழுத்துக்களில் பார்வையை படர விட்டான்.

    லிஃப்ட் வாய் திறந்து ‘வா’ என்றது, இவனை வாங்கிக்கொண்டு, சட்டென எழும்பி, காணமல் போனது.

    ஐந்தில் வெளிப்பட்டு, காரிடாரில் மிதந்து, கடைசி அறையைத் தேர்ந்தெடுத்தான். கதவின் மேலிருந்த அந்தப் பொத்தானை ரஞ்சன் அழுத்த,

    கதவில் பச்சை எலக்ட்ரானிக் ஆங்கில எழுத்துக்கள் ஜனித்தன.

    PLEASE WELCOME கதவு தானாகத் திறந்து கொள்ள, நுழைந்தான்.

    வா ரஞ்சன்! ஆண்மையைப் பூசிக்கொண்ட குரலுக்குச் சொந்தக்காரன் அனில்.

    ரஞ்சன் எதிர் இருக்கையில் உட்கார்ந்தான்.

    மின்சாரக் குளிர் இதமாக வருடிக் கொடுத்தது. மெல்லிய லாவண்டர் மணம் நாசியைக் காதலித்தது. விஸ்தாரமான அறையில் சகல நவீனங்களும் பங்கு கேட்டன...

    அனிலுக்குப் பின்னால், கனமான கர்ட்டன் விலகி, கண்ணாடிகளின் ஊடே சென்னை நகரம் நகர்ந்து கொண்டிருந்தது.

    அனில், நீளமான அந்த அயல் நாட்டு சிகரெட் பெட்டியைத் திறந்து ரஞ்சன் பக்கமாக நீட்டிவிட்டு, தானும் ஒன்றை உருவிப் பற்ற வைத்துக் கொண்டான். நாசியின் வழியே புகையைக் கசியவிட்டவன்,

    சொல்லு ரஞ்சன்!

    நீதான் சொல்லணும் அனில்!

    யூ ஹேவ் டன் எ மார்வலஸ் ஜாப். என் எதிரியை வேரோட கிள்ளியாச்சு. டர்ட்டி பாஸ்டர்ட்ஸ்! அந்த பீஷ்மர் எனக்கெதிரா நூத்தெட்டு ப்ராடக்ட்களை உருவாக்கி, மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்து, என்னோட ஆணிவேரையே ஆட்டம் காண வெச்சான். இப்ப அவனும் செத்தாச்சு. அவன் பிள்ளை விஜய்க்கு பதிலா நீ வந்துட்ட. எக்ஸலன்ட்!

    இதுல நம்ம பெருமை எதுவுமே இல்லை அனில். அந்த கல்பனா கோஷ்டியை அப்படியே ஃபாலோ பண்ணினோம். ஒருத்தரை ஒருத்தர் கவிழ்க்க ஆசைப்பட்டு கும்பலோட கோவிந்தானு எல்லாரும் போய்ச் சேர்ந்தாங்க. நம்ம வேலை சுலபமாச்சு.

    இந்த ஆறுமாசம் வெற்றிகரமா நீ விஜய்யா தாக்கு பிடிச்சு, வியாபார நுணுக்கங்களையெல்லாம் தெரிஞ்சு எனக்கு சொல்லிட்ட. தேங்க்ஸ் டு மை டியர் ரஞ்சன்!

    அடுத்த ஸ்டெப்பா, நீ சொன்னபடி, சொத்துக்களையெல்லாம் விற்று, கேஷா மாத்தி வெச்சாச்சு. அது சம்பந்தப்பட்ட எல்லா டாக்குமென்ட்களும் இந்தப் பெட்டில இருக்கு அனில்!

    வெரிகுட்... வெரிகுட்!

    இனிமே நீ சொன்னபடி, உன் கம்பெனில என்னை பார்ட்னரா சேர்த்துக்கப் போற!

    ஷ்யூர்... சரி பாதி பங்கு உனக்குண்டு ரஞ்சன்... த பாரு, லீகலா உன் பேருக்கு எல்லாத்தையும் ரெடி பண்ணி டாக்குமென்ட் போட்டாச்சு. இனி நீயும் நானும் சமம். விஜய் சொத்து எவ்ளோ?

    ஆரம்பத்துல நாலு கோடி, எல்லாமா வித்தப்ப, கிட்டத்தட்ட ஆறுகோடிக்கு வந்திருக்கு

    நைஸ், நம்முதும் சேர்த்து பத்துக்கு மேல வரும். ஆளுக்குப் பாதி. சரிதானா ரஞ்சன்?

    தேங்க் யு அனில்!

    இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பத்தரை - பன்னண்டு ராகு காலம். இப்ப பதினொண்ணு. பன்னண்டுக்கு மேல பத்திரங்கள்ள நீ கையெழுத்துப் போடு ரஞ்சன். இனிமே மாஸ்க்கை நீ கழட்டிக்கலாம். சொத்துக்களை வித்து கேஷ் பண்ணியாச்சு. எல்லாம் முடிஞ்சாச்சு. இனிமே விஜய்க்கு அவசியமில்லை.

    ஒரு பஸ்ஸரை அழுத்தினான் அனில்.

    பக்கத்து மேஜையில் இருந்த கலர் டிவியில், வாசலில் வந்து நின்ற பெண் தெரிந்தாள்.

    கம்ப்யூட்டர் எழுத்துக்களில் விரல்களை ஒத்தினான்.

    ‘DRINKS’ என்றது கதவு எழுத்துக்கள்.

    அடுத்த மூன்றாவது நொடியில், அந்த ஆங்கிலோ இந்திய மாது, கையில் ட்ரேயுடன் உள்ளே நுழைந்தாள். விலகினாள்.

    எடுத்துக்க ரஞ்சன். லெட் அஸ் ஸெலப்ரேட் திஸ்!

    ஷாம்ப்பெயின் தள்ளாடிய கோப்பைகளில் ஒன்றை எடுத்து, சியர்ஸ் சொல்லி, மெல்ல உறிஞ்சத் தொடங்கினார்கள் இருவரும்.

    இன்னும் ஒண்ணு பாக்கியிருக்கு ரஞ்சன்!

    என்ன?

    மாஸ்க்கை உடனே நீ எடுக்க வேண்டாம். இந்த வேலையும் முடியணும். கோமால படுத்திருக்காளே சொப்னா, அவளை அம்போனு விட முடியாது.

    ஸோ?

    கொன்னுரு!

    இது அவசியம் தானா அனில்? இந்த கோமாவே ஏறத்தாழ மரணம் தானே?

    "நான் சொல்றது புரியலை உனக்கு. இப்ப அவ விஜய் மனைவி. திடீர்னு கோமா வந்து படுத்திட்டா. விஜய் அவளுக்கு தனி நர்ஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1