Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aah Aah!
Aah Aah!
Aah Aah!
Ebook100 pages1 hour

Aah Aah!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓவியர் பிரசன்னாவை நமச்சியவாயம் என்பவர் சந்தித்து தனது வீட்டுக்கு வர சொல்கிறார். நமச்சிவாயத்தின் தங்கை பேரழகி செந்தளிரை பார்க்காமலே வரைந்து காட்டினால் அவளை திருமணம் செய்து வைப்பேன் என கூறுகிறார் நமச்சிவாயம். 15நாள் அவகாசம் 10 க்ளுக்கள் தருவாள் செந்தளிர். செந்தளிரை அச்சு அசலாய் வரைய வேண்டும். செந்தளிரை துல்லியமாக வரைந்து போட்டியில் ஜெயிக்கிறான் பிரசன்னா. செந்தளிரின் அழகில் துர்ஆவிகள் மயங்கி அவளை சுற்றி வருகின்றன. ஆவிகளின் முதல் பலி பிரசன்னாவின் உதவியாளன் வேலு. பிரசன்னாவுக்கு தொடர் திகில் அனுபவங்கள். முதலிரவில் செந்தளிருக்கு பதில் வேறொரு பெண். செந்தளிருடன் உறவு கொள்ளும் போது இரு வேறு பெண்கள் தெரிகின்றனர். தினமும் செந்தளிர் இரண்டு லிட்டர் நல்லெண்ணெயும் ஒரு கிலோ உப்பும் தின்கிறாள் என வேலைக்காரி பொய் கூறுகிறாள். திருமணத்திற்கு பின் பிரசன்னாவின் முதுகில் 21 பிறைவடிவ மச்சங்கள். தோட்டக்காரர் கொலை. செந்தளிரின் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் மர்மமான முறைகளில் கொல்லப்படுகின்றனர்.

இறுதியில் தெரிகிறது செந்தளிர் உண்மையில் யார் என நான்காவது பரிமாணத்திலிருந்து ஒன்பதாவது பரிமாணம் வரை போக விசேஷ காலணியும் ஆவிகளை கொல்லும் விசேஷ துப்பாக்கியும் டியாராவுக்கு கிடைக்கிறது. செந்தளிர் நல்லவளா கெட்டவளா? அவள் சொன்ன ஆவிகள் கதை உண்மையா இல்லையா? பேய்தனமான க்ளைமேக்ஸ். ஆர்னிகாநாசரின் திகில் கதைகளில் தூள் டாப்டக்கர் நாவல்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580111006387
Aah Aah!

Read more from Arnika Nasser

Related to Aah Aah!

Related ebooks

Related categories

Reviews for Aah Aah!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aah Aah! - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    ஆ... ஆ...!

    Aah… Aah…!

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser
    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    லீராயல் மெரிடியன். கான்ப்ரன்ஸ் ஹாலில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஓவியங்களில் பிரதானமாய் ஆரஞ்சு நிறம் காணப்பட்டது. அனைத்து ஓவியங்களுக்கும் ‘பெண்மை’ எனும் பொதுதலைப்பு சூட்டப்பட்டிருந்தது.

    ஓவியங்களை வரைந்து கண்காட்சிக்கு வைத்த பிரசன்னா மிடுக்காய் நின்றிருந்தான். பிரசன்னா, வயது 26. உயரம் 5'6". மஞ்சள் கலந்த வெள்ளை நிறம். முன் வழுக்கை ஆரம்பித்திருக்கும் தூக்கிச் சீவப்பட்டிருக்கும் வகிடு இல்லாத கேசம். கதகளிக்கும் புருவங்கள். ஆயிரம் ஆயிரம் அதீதகற்பனைக் காட்சிகளை உள்வாங்கியிருக்கும் கண்கள். சரத்குமார் மூக்கு. ஆண்மை துளிர்க்கும் மீசை. ஆயிரம் இஸங்கள் பேசும் உதடுகள்.

    வெள்ளை நிற ஜீன்ஸும் இரத்தச்சிவப்பு நிற அரைக்கை சட்டையும் அணிந்திருந்தான் பிரசன்னா. கண்களில் பவர்கிளாஸ். சட்டைப்பையில் உலா தொலைபேசி.

    ஓவியக் கண்காட்சிக்கு வந்து போகிறவர்களை பிரசன்னாவின் உதவியாளன் தனது மினி வீடியோ கேமிராவுக்குள் சேமித்துக் கொண்டிருந்தான்.

    பிரசன்னாவின் ஓவியங்களைப் பற்றிய புத்தகங்களும் ஸி.டி.களும் தனியே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    கலைஞர்கள் பிரசன்னாவிடம் அவன் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்களை பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    நீங்கள் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்கள் எவ்வகை இனத்தை சேர்ந்தவை?

    இன்ட்டுஜுவலிஸம்!

    ஒரு ஓவியத்தில் பெண்ணுக்கு, மூன்று மார்பகங்கள் வரைந்திருக்கிறீர்களே?

    அந்த மூன்றாவது மார்பகம் ஞானப்பால் சுரக்கும் இயல்பு கூடியது!

    உங்கள் ஓவியங்களில் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் மிகச்சிறிய மார்பகங்களே உள்ளன - அது ஏன்?

    இந்திய ஆண்கள் கனத்த கொங்கைகள் மீது மயக்கம் கொண்டிருந்தனர். அந்த மயக்கம் தற்சமயம் இல்லை. சிறிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்தது. அந்த தாழ்வு மனப்பான்மையும் தற்சமயம் இல்லை. சிறிய மார்பகங்கள் விடுதலையின் அடையாளம். மார்பகங்கள் பற்றிய ஒரு மேற்கத்திய பார்வை இந்திய ஆண்களுக்குள்ளும் இந்திய பெண்களுக்குள்ளும் ஊடுருவி விட்டது என முழுக்க நம்புகிறேன்!

    உங்களின் பார்வையில் 'பெண்மை' என்பது என்ன?

    பெண்மை என்பது இவ்வுலகின் ஆதார உந்து சக்தி. பெண்மை இல்லாவிட்டால் இவ்வுலகம் காணாமல் போய்விடும். பெண்மை தலைமைப் பண்புகள் முழுக்க நிறைந்த விருப்ப அடிமை. பெண்மை கவிதைகளும் ஓவியங்களும் ஆடல் பாடல்களும் கேளிக்கைகளும் நிறைந்ததொரு உல்லாச நகரம். பெண்மை காமமும் காதலும் வழிந்தோடும் ஒரு விசித்திர தேனீர் கோப்பை, ஒரே நேரத்தில் அகழ்வாராய்ச்சிக்கும், கட்டடக்கலைக்கும் உதவும் ஆலோசனை குறிப்பேடு!

    பெண்மை பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே... உங்களுக்கு திருமணமாகிவிட்டதா?

    இல்லை!

    காதலித்த அனுபவம் உண்டா?

    இல்லை!

    பின்னெப்படி பெண்மை பற்றி இவ்வளவு விரிவாக விளக்கி பேசுகிறீர்கள்?

    பதில் பேசமால் சிரித்தான் பிரசன்னா.

    திருமணம் செய்து கொள்வீர்கள் தானே?

    நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்!

    எப்போது?

    இந்த வருடமே!

    உங்களுக்கு வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?

    அதை உங்களிடம் விவரிக்க மனம் ஒப்பவில்லை!

    தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவனை ஒரு மெண்மையான கை தொட்டது. திரும்பினான் பிரசன்னா. இளவயது சரத்பாபு போல் ஒரு 35 வயது ஆண் நின்றிருந்தான்.

    மிஸ்டர் பிரசன்னா! கொஞ்சம் தனியே வரமுடியுமா?

    யோசித்தபடி தனியே போனான் பிரசன்னா. சொல்லுங்க. எதுக்கு தனியா கூப்ட்டீங்க?

    ஒரு விசிட்டிங் கார்ட்டை நீட்டினான் புதியவன்.

    எனது பெயர் நமச்சிவாயம். என்னுடைய முகவரி விசிட்டிங் கார்ட்டில் உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை. மாலை நான்கு மணிக்கு எங்கள் வீட்டுக்கு வாருங்கள். ஓர் ஆச்சரியமான சந்தோஷம் அங்கு உங்களுக்காக காத்திருக்கிறது! சொன்னவன் பிரசன்னாவின் பதில் எதிர்பாராமல் கிளம்பிப் போனான்.

    வெள்ளைப்பூண்டு வாசனை ஒரு சுழலாய் கிளம்பி பிரசன்னாவின் முன் சுழன்று பின் வேகமாய் வாசல் வெளியேறியது!

    *****

    2

    நார்த்போக் ரோட்.

    ரெக்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்.

    செலுத்தி வந்த காரை எதிர்புற சாலையின் நடைமேடை ஒட்டி

    Enjoying the preview?
    Page 1 of 1