Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Who-Done-It Kathaigal - Antha Oru Iravil!
Who-Done-It Kathaigal - Antha Oru Iravil!
Who-Done-It Kathaigal - Antha Oru Iravil!
Ebook57 pages23 minutes

Who-Done-It Kathaigal - Antha Oru Iravil!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபல வக்கீல் மாதவியின் தற்கொலை அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மாதவியின் மருத்துவர் ரோகிணிக்கு அவரது இறப்பில் சந்தேகம் எழுகிறது. புதிதாய் பதவியேற்ற ஐபிஎஸ் அதிகாரியான நந்தாவிற்கு மாதவியின் குடும்பத்தினர், அவரிடம் பணிபுரிபவர்கள், அவரின் தொழில் விரோதிகள் எனப் பலரின் மீது சந்தேகம் எழுகிறது. அனைவரும் நினைப்பது போன்று மாதவி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை, ரோகிணி நினைப்பது போன்று மாதவியின் மரணத்தில் ஏதேனும் மர்மம் இருக்கின்றதா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை நந்தாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580175510717
Who-Done-It Kathaigal - Antha Oru Iravil!

Related to Who-Done-It Kathaigal - Antha Oru Iravil!

Related ebooks

Reviews for Who-Done-It Kathaigal - Antha Oru Iravil!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Who-Done-It Kathaigal - Antha Oru Iravil! - Barani Priya G Nadarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஹூ-டன்-இட் கதைகள் – அந்த ஒரு இரவில்!

    Who-Done-It Kathaigal - Antha Oru Iravil!

    Author:

    பரணிப்ரியா G நடராஜன்

    Barani Priya G Nadarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/barani-priya-g-nadarajan

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் - 1

    காவல் ஆணையர் ரஞ்சன் அறைக்கு வெளியில் அமர்ந்திருந்த நந்தாவிற்கு உள்ளே நடக்கும் உரையாடல்களில் ஒரு சில வார்த்தைகள் காதில் வந்து விழுந்தன. நந்தா, ஐ.பி.எஸ். பயிற்சி முடித்துவிட்டு தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் தன் பொறுப்புக்களை ஏற்கும் முன்னர் காவல் ஆணையர் ரஞ்சனை சந்திக்க வந்திருந்தான். ரஞ்சன் துணை ஆணையர் மாதவனுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

    மாதவன்! என்னால உங்க முடிவுக்கான காரணத்தைப் புரிஞ்சுக்க முடியுது. அதை மாத்திக்க சொல்லிக் கேட்கவும் மனசில்லை. ஆனா டிபார்ட்மெண்ட் ஒரு திறமையான சின்சியர் போலீஸ் ஆஃபிஸரை கண்டிப்பா மிஸ் பண்ணும். நீங்க வாலண்டரி ரிடையர்மென்ட்ல இங்கிருந்து கிளம்பறதுக்கு முன்னாடி என் பொண்ணுக்காக இந்தக் கேஸை தீர்த்துக் கொடுத்துட்டு போகணும். அதோட உங்க போஸ்ட்கு வரப்போற நந்தாவுக்கு உங்களோட சேர்ந்து வேலை செய்யிற வாய்ப்பு கிடைச்சா அது அவருக்கு ஒரு நல்ல அனுபவமாகவும் இருக்கும் என்றார் ரஞ்சன்.

    கண்டிப்பா சார்! என்று சுருக்கமாகப் பதிலளித்தார் மாதவன்.

    அடுத்து தன்னை ரஞ்சன் அழைக்கப் போகிறார் என்பதை உணர்ந்த நந்தா அறையின் உள்ளே செல்லத் தயாரானான். அழைப்பு வந்ததும் விரைவாக அறையின் உள்ளே சென்ற நந்தா, ரஞ்சன் மற்றும் மாதவன் முன்பு தன் வலக்கையை தன் நெற்றியில் வைத்து வணங்கினான். மாதவனை இதுவரை சந்தித்திராத போதிலும் அவரைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான் நந்தா. சுட்டெரிக்கும் பார்வை, கரை படாத கை, துள்ளியமான கணிப்பு, அவரால் தீர்க்க முடியாத மர்மங்கள் எதுவும் இல்லை. ஆனால் இப்பொழுது அவன் பார்த்தது கனிவான கண்களுடன் சாந்தமாக அமர்ந்திருந்த மாதவனை.

    ரஞ்சன் அவர்கள் இருவரிடமும் வழக்கு சம்பந்தமான விவரங்களைக் கூறினார்.

    ஒரு வாரம் முன்னாடி ஃபேமஸ் லாயர் மாதவி ஸ்ட்ரெஸ்ல தற்கொலை பண்ணி இறந்தது உங்களுக்கு நல்லாவே தெரியும். நியூஸ்ல பார்த்திருப்பீங்க. அவங்க ஒரு ஆஸ்த்மா நோயாளி. ஆஸ்த்மா அட்டாக் வந்தப்போ அவங்க மருந்து எடுத்துக்காம சூஸைட் லெட்டர் எழுதி வெச்சுட்டு இறந்துட்டாங்க. அவங்க கண்டிப்பா தற்கொலை செஞ்சிருக்க மாட்டாங்கனு என் பொண்ணு ரோகிணி நினைக்கிறா என்று வழக்கை மேலும் விவரித்தார் ரஞ்சன்.

    சார், எந்தக் காரணத்தால உங்க பொண்ணு அப்படி நினைக்கிறாங்க? போலீஸ்கு கிடைச்ச எல்லா விஷயங்களும் அது தற்கொலைனு உறுதி செஞ்சுதே என்று தன் சந்தேகத்தைக் கேட்டான் நந்தா.

    "ரோகிணி ஒரு மனநல மருத்துவர். மாதவி என் பொண்ணோட பேஷண்ட். மாதவி ரொம்ப வருஷமா டிப்ரஷன்ல இருந்திருக்காங்க. ஆனா இப்போ நல்லா குணமாகிட்டு வந்திருக்காங்க. திடீர்னு அவங்க தற்கொலை செய்யிறதுக்கு காரணம் எதுவும் இல்லைனு ரோகிணி நினைக்கிறா. நீங்க ஒரு தடவை அவளை சந்திச்சீங்கனா அவ இன்னும் விவரங்களைச் சொல்லுவா. தேவைப்பட்டா

    Enjoying the preview?
    Page 1 of 1