Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Pattampoochiyin Kaadhal
Oru Pattampoochiyin Kaadhal
Oru Pattampoochiyin Kaadhal
Ebook337 pages1 hour

Oru Pattampoochiyin Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“ஒரு பட்டாம்பூச்சியின் காதல் “என்ற இந்த குறுநாவல் தொகுதியில் இருக்கக்கூடிய ஆறு கதைகளுமே காதல் அகராதிக்கு பொருள் சொல்லும் கருத்து நிரம்பிய காதல் கதைகள்.
காதலில் பல வகை உண்டு. உண்மைக்காதல், சொத்துக்கள் மீது ஆசை கொண்ட காதல், சொந்த காதல் இடம் மாறும் காதல், கட்டாய காதல், கரை மீறும் காதல்
இத்தனை காதல்களும் நம்மிடையே வித விதமான உருவங்களில் அன்றாடம் வந்து கொண்டுதானிருக்கின்றன.
காதல் ஒரு பரிசுத்த உணர்வு. அதை சரியாக புரிந்து கொண்டால் அது தெய்வீகமானது.
“காதல் போயின் சாதல்” என்றார் பாரதி. நம்மிடையே இருக்கக்கூடிய வக்கிரங்கள் ஒழிந்தால் காதல் என்றும் பரிசுத்தமாக இருக்கும். காதலிலே துரோகம், வஞ்சம், பழிவாங்கும் உணர்வு போன்ற பல உணர்வுகளை இருப்பதை இந்தத் தொகுதி கூறுகிறது.
ஆனால் முடிவு ஒன்றுதான்.
என்றுமே ஒரு தண்டனை காத்திருக்கிறது.
நீதி சாவதில்லை
தெய்வம் நின்று கொல்லும்
இதுதான் ஒரே முடிவு. அந்த முடிவுதான் ஆண்டவன் தரும் முடிவு
அந்த முடிவு நமக்கு ஆரம்பத்திலேயே தெரியாவிட்டாலும் முடிவிலே நமக்கு தெரியும்.
இதைச் சொல்லும் கதைதான் இந்த “பட்டாம்பூச்சியின் காதல்”
ஒவ்வொரு கதையிலும் ஒரு பாடம் உங்களுக்குக் கிடைக்கும்.
பாடத்தை சரியாக புரிந்து கொண்டால் கதையை சரியாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..படியுங்கள்
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580100806372
Oru Pattampoochiyin Kaadhal

Read more from Vimala Ramani

Related to Oru Pattampoochiyin Kaadhal

Related ebooks

Reviews for Oru Pattampoochiyin Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Pattampoochiyin Kaadhal - Vimala Ramani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு பட்டாம்பூச்சியின் காதல்

    Oru Pattampoochiyin Kaadhal

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vimala-ramani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஒரு பட்டாம்பூச்சியின் காதல்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    மன்னிக்கப்படாத பாவிகள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    பனி விழும் மலர்கள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அவன் அவள் ஆசிட்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    மகரந்தமில்லா மலர்கள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    ஜீவநதிகள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    ஒரு வெள்ளை ரோஜா சிவப்பாகிறது

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    ஒரு பட்டாம்பூச்சியின் காதல்

    1

    ‘ஆப்பிள்’ ஐபாடில் ஹெட்போன் வழியாக ராகேஷ், பாடல்களைக் கேட்டுக்கொண்டு, அந்த ரிதமுக்கு ஏற்ப தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.

    மதுரைக்குப் போகாதடி…

    ராகேஷ்… ராகேஷ்…

    அம்மாவின் குரல்… பாடல்களில் லயித்து காதுகளைப் பொத்தி வைத்திருந்த ராகேஷுக்கு கேட்கவில்லை.

    அம்மா ராகேஷை உலுக்கினாள். திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

    அம்மா…

    ஹெட்போனை கழட்டி வைத்தான். அது மெல்லிய குரலில் விடாமல் பாடிக்கொண்டிருந்தது.

    முதல்லே அந்தச் சனியனை நிறுத்து. அதென்ன எப்பப் பார்த்தாலும் மியூசிக் டைரக்டர் மாதிரி காதுலே குழாய்?

    ராகேஷ் சிரித்தான்.

    சரி… நிறுத்திட்டேன்… என்ன?

    நாம மதுரைக்குப் போறோம்.

    ராகேஷுக்கு ஆச்சர்யம். இப்பத்தான் ‘மதுரைக்குப் போகாதடி’ என்று பாட்டில் அறிவிப்பு வந்தது. இப்போது அம்மா என்னடா என்றால், மதுரைக்குப் போகச் சொல்கிறாள்.

    என்ன விசேஷம் மதுரையிலே?

    மதுரையிலே விசேஷம் இல்லை. அதுக்குப் பக்கத்துல இருக்கிற நம்ம கிராமத்துலேதான் விசேஷம். குலதெய்வக் கோவிலுக்குப் போகணும். ஜோசியர்கிட்டே உன் ஜாதகத்தைக் காட்டி எப்ப கல்யாணம் ஆகும்னு கேட்டேன். ஜோசியக்காரர் சொன்னார் ‘குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக் கடன் பாக்கி. முதல்லே அதை செஞ்சு முடியுங்க. கல்யாணம் தானே செட்டில் ஆகும்’ அப்படீன்னார். நம்ம கிராமத்தைவிட்டு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு. உன் அப்பாவும் காலமான பிறகு, அந்தக் கிராமத்தையே மறந்துட்டோம். இப்ப மறுபடியும் போக வேண்டிய சூழ்நிலை…

    அம்மா பேசிக்கொண்டே போனாள்.

    அம்மா பேச்சு மெல்ல மெல்லத் தேய இவன் மனக் கண்ணில் கிராமம் விரிந்தது.

    பசுமை படர்ந்தது.

    இவனுள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன…

    2

    டேய் ராகு… பாவம்டா அந்தப் பட்டாம்பூச்சி… அதைப் பிடிச்சு இம்சை பண்ணாதே…

    இதோபார். என் பேர் ராகேஷ். நீ ராகு கேதுன்னு கூப்பிடாதே…

    எங்கம்மா சொல்லி இருக்காங்க. ராகு, கேது துஷ்டக் கிரகங்களாம். நீயும் துஷ்டன்தான். அழகான பட்டாம்பூச்சியைப் பிடிச்சு அதோட சிறகை கத்திரிச்சு நூல்லே கட்டி அதை ஏன்டா சித்திரவதை பண்றே?

    அழகா இருந்தா அப்படித்தான் நில்லு…

    இதோபார். என் பேர் நீலாயதாக்ஷி. நிலான்னு கூப்பிடு. ‘நில்லு’ன்னு கூப்பிடாதே…

    சரி… நில்லு… ஸாரி நிலா…

    நான் உன் பேச்சு கா… அந்தப் பட்டாம்பூச்சியை பறக்கவிடு. அப்பறமாத்தான் உன்னோட பேசுவேன்.

    ஐயோ… இனிமே அதால பறக்க முடியாது. அதான் ரெக்கையைக் ‘கட்’ பண்ணிட்டேன் இல்லை?

    பாவி…

    சரி… இதைக் கொண்டு போய் ஏதாவது ஒரு பூவிலே விட்டுடலாம். அது தானே பொழைச்சுக்கும்…

    மிக ஜாக்கிரதையாக நூலிலிருந்து பட்டாம்பூச்சியை எடுத்து அங்கிருந்த ஒரு செடியில் வைத்தான் ராகேஷ்.

    இரண்டு முறை தடுமாறியது. மூன்றாம் முறை பறக்க முயன்றது. கைதட்டிச் சிரித்தாள் நிலா.

    திடீரென்று எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று அந்தப் பட்டாம்பூச்சியைக் கொத்திக் கொண்டு போனது.

    நிலா அழுதாள்.

    அவளை ராகேஷால் சமாதானப்படுத்தவே முடியவில்லை…!

    3

    அம்மாவும், ராகேஷும் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

    முதல்லே மதுரையிலே இறங்கி மீனாட்சி அம்மனை தரிசனம் பண்ணிட்டுப் போயிடலாம்.

    அம்மா சொன்னாள்.

    மதுரை இவனுக்குப் புதிதல்ல. மதுரை மீனாட்சி அம்மனும், முக்குறுணிப் பிள்ளையாரும், அம்மன் சந்நிதிக் கடைகளும்… அம்மன் சந்நிதியில் இருக்கும் பூக்கடைகளும்… அத்தர் வாசனைகளும்… இரவுக் கடைகளும்…

    இவன் மேற்படிப்பே மதுரையில்தான். தினம் தினம் கிராமத்திலிருந்து பஸ் ஏறி மதுரை வந்து படிப்பான். மதுரை பஸ் ஸ்டாண்டும், அதன் எதிரில் இருக்கும் மங்கம்மாள் சத்திரமும், காலேஜ் ஹவுஸ் டிபனும்…

    அது ஒரு கனாக்காலம்!

    மதுரையின் சித்திரைத் திருவிழாவும், தமுக்கம் மைதானக் கூட்டங்களும்…

    டேய் ராகு… ஸாரி ராகேஷ், இந்தத் தடவை நீ மதுரையிலே இருந்து எனக்கு வளையல் வாங்கிட்டு வர்றியா? அம்மன் சந்நிதிக் கடையிலே அழகழகான முத்து மாலை கிடைக்குமாம். ஒண்ணு வாங்கிட்டு வா… நான் காசு தந்துடறேன்…

    சீ போ… நீ ஒன்றும் காசு தர வேண்டாம்… ஆனா வளையல் அளவு…?

    இரு… என் வளையல் ஒண்ணைக் கழட்டித்தரேன்… அளவு பாத்து வாங்கிட்டு வா…

    ஓகே…

    அவள் வளையல் தந்தாள். இவன் தன் பள்ளிப் பையில் அதைப் போட்டுக் கொண்டான். பிறகு மறந்தே போனான்.

    ஒவ்வொரு வார முடிவிலும் இவன் வளையலோடு வருவான் என்று நிலா காத்திருந்தாள்.

    இவன் மட்டும்தான் வந்து கொண்டிருந்தான்.

    அப்போதுதான் அந்தச் செய்தியை ராகேஷ் சொன்னான்.

    நிலா அதிர்ந்தாள்.

    4

    கார் ஒரு குழியில் இறங்க தூக்கி வாரிப்போட்டது ராகேஷுக்கு… திடுக்கிட்டு விழித்தான்.

    டிரைவர் பாத்துப் போப்பா… குண்டு, குழியை அவாய்ட் பண்ணி ஓட்டு…

    இல்லீங்க ஐயா… ஒரு சின்னப் பொண்ணு… ஒரு பட்டாம்பூச்சியைத் துரத்திக்கிட்டு நடு ரோட்டுக்கு வந்திடுச்சு. அந்த பொண்ணு மேலே வண்டி ஏறிடாம இருக்கத்தான் திருப்பினேன். வண்டி குழியிலே இறங்கிடிச்சு…

    ராகேஷ் பார்த்தான்.

    ஒரு சிறு பெண் ஒரு பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஓடிக் கொண்டிருந்தாள்!

    அவன் கண்முன் நிலாவே ஓடி வருகிற மாதிரி…

    டயர் பஞ்சராயிடிச்சுங்க ஐயா. அம்மா…! மர நிழல்லே இருங்க. பத்தே நிமிஷத்துலே டயர் மாத்திடறேன்…

    டிரைவர் சொன்னார்.

    அம்மாதான் புலம்பினாள்.

    என்ன தெய்வக்குத்தமோ இப்படி அபசகுனமா பாதி வழியிலே நின்னுட்டோம். அம்மா தாயே மீனாட்சி… ஏதாவது தப்பு பண்ணி இருந்தா மன்னிச்சுடு தாயே. எல்லாம் நல்லபடியா நடக்கட்டும். ராகேஷுக்குக் கல்யாணம் ஆனவுடனே உன் சந்நிதானத்துக்கு வந்து தங்கத் தேர் இழுக்கறேன்…

    ராகேஷ் யோசித்தான்.

    தப்பு.

    அம்மா செய்தாளா? இவன் செய்தானா?

    தங்கத் தேரை இழுத்துவிடலாம். தன் பாவ மூட்டைகளை எப்படி இழுப்பது? எப்படி சுமப்பது?

    ராகேஷ் மரத்தடியில் கடந்த காலத்தில் மூழ்கினான்.

    5

    என்ன சொல்றே ராகேஷ்?

    நிலா கேட்டாள்.

    ஆமாம்… நிலா. என்னை காலேஜ் படிப்பு படிக்க, மெட்ராஸ் அனுப்பப் போறாங்க… அங்கேயே ஹாஸ்டல்லே தங்கிக்கணுமாம். லீவுக்குத்தான் ஊர் வர முடியும்.

    நிலா பேசாமல் இருந்தாள்.

    எனக்கு வளையல் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு, நீ வாங்கியே தரலை… தெரியுமா?

    இதென்ன பிரமாதம்? அந்த வளையல் என் ஸ்கூல் பேக்லேதான் இருக்கு. நான் ஊருக்குப் போறதுக்குள்ளே உனக்கு வளையல் வாங்கித் தரேன். பிராமிஸ்…

    அவனால் வளையல் வாங்கித் தரவே முடியவில்லை. பள்ளிப் பையிலேயே அந்த வளையல் இரண்டாக உடைந்து கிடந்தது. இதை நிலாவிடம் சொல்லப் பயந்து இவன் நாட்களைக் கடத்தினான். கடைசியில் இவன் சென்னை கிளம்பும் நாளும் வந்தது…

    கிளம்பலாமா ஐயா?

    டிரைவர் கேட்டபோது கண்களைத் திறந்த ராகேஷ் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தான்.

    கார் கிளம்பியது.

    இவன் கனவுகள் தொடர்ந்தன.

    6

    இவன் சென்னை கல்லூரியில் தன் மேற்படிப்பைத் தொடர்ந்தான். இவன் லீவுக்கு கிராமம் வர நினைத்தபோதெல்லாம் அப்பா தடுத்து விடுவார்.

    இந்த கோர்ஸ் படி… சென்னையில் நிறைய சம்மர் கோர்ஸ் இருக்கிறது. வாய்ப்பை நழுவ விடாதே. பயன்படுத்திக்கொள். நீ நல்ல மார்க் வாங்கினால்தான் உன்னை யூ.எஸ். அனுப்ப முடியும், படி… படி…

    இவனும் படித்தான். படித்துக் கொண்டே இருந்தான். ஒவ்வொரு சமயம் மனத்துள் பட்டாம்பூச்சி பறக்கும். அப்பாவிடம் எப்படிக் கேட்பது? ஒருமுறை அம்மாவுடன் ஃபோனில் பேசியபோது கேட்டான்.

    "ஏம்மா… நான் நம்ம கிராமம் வந்தே ரெண்டு மூணு வருஷத்துக்கு மேலாகுது. இந்தத் தடவை வரேன்மா.

    அப்பாகிட்டே சொல்லி வை. என்னை வரவே விடமாட்டேங்கறார்."

    அந்தத் தடவை அவன் கிராமம் திரும்பினான். கிராமமே மாறி இருந்தது. அப்பா கிராமத்து வீட்டை புதுப்பித்திருந்தார். இவன் படிப்புக்காக நில புலன்களை விற்ற சமாச்சாரம் தெரிந்தது. இருக்கிற வீட்டையும் விற்று விடலாம் என்ற எண்ணமாம்.

    இந்தக் கிராமத்துலே என்ன இருக்கு. விவசாயம் பண்ணுற நிலையிலே நாம இல்லை. குத்தகைக்காரன் ஏமாத்தறான். அப்பாவுக்கு அதையெல்லாம் நிர்வாகம் பண்ண முடியலை. அதனால நிலத்தையெல்லாம் கொடுத்தாச்சு. இந்த வீட்டையும் கொடுத்துட்டா இந்தக் கிராமத்துலே வேற என்ன இருக்கு?

    அம்மா கேட்டாள்.

    "என் நிலா… நிலா இருக்கும்மா… இந்தக் கிராமத்துல பட்டாம்பூச்சிகள் இருக்கு. இந்தக் கிராமத்திலே சலசலத்து ஓடும் ஆறு இருக்கு. இந்தக் கிராமத்துலே ஈர உடையுடன் ஆற்றில் குளித்த பெண், அரசமரத்தடி பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றும் அற்புதக் காட்சி இருக்கு.

    நம்ம குலதெய்வக் கோவில் இருக்கு. அது மலைக்கு மேலே இருக்கு. அந்த மலையிலேதான் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த ஒரு பழைய கோட்டை இருக்கு.

    எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். கண் குளிரக் காண வேண்டும்." இவன் மெல்ல திக்கித் திக்கிக் கேட்டான்.

    ஏம்மா… நம்ம கிராமத்துலே மணியக்காரர் குடும்பம் ஒண்ணு இருந்ததே…

    இங்கே எத்தனையோ குடும்பம் இருந்தது…

    இல்லேம்மா. அவங்க வீட்டிலேகூட ஒரு பொண்ணு… பேரு என்ன… ஆ… நிலா… அவ என்னோட இந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்திலே கூடப் படிச்சா…

    அந்தப் பொண்ணா?

    அம்மா கேட்டாள். தன் ஆர்வத்தை அடக்கிக் கொண்டு…

    ஆ… ஆமாம்… என்றான்.

    அதை ஏன் கேக்கறே?

    ஏ… ஏன்… என்னாச்சு…?

    அந்தப் பொண்ணுக்கு அவ அப்பன் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டான்.

    அப்பறம்…?

    அப்பறம் என்ன? அந்தப் பொண்ணு நம்ம கிராமத்து மலைக்கோட்டை உச்சியிலிருந்து குதிச்சு தற்கொலை பண்ணிட்டா. யாரையும் லவ் பண்ணினாளோ என்னவோ… சொல்லித் தொலைக்கலாம் இல்லை? அநியாயமா உயிரைக் காவு கொடுத்துட்டா…

    இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    ‘டேய் ராகேஷ்… எனக்கு வளையல் வாங்கித் தர்றியா?’

    ‘ராகேஷ்… மதுரை சித்திரைத் திருவிழாவுக்குக் கூட கூட்டிட்டுப் போறியா?’

    இவன் வளையல் வாங்கி வரப் போகிறான் என்று மலை உச்சியில் நின்றபடி, கிராமத்துக்குள் வரும் ஒற்றையடிப் பாதையைப் பார்த்திருப்பாளோ?

    அவள் வளையல்கள் மட்டும் உடையவில்லை!

    அவளே உடைந்து போனாள்!

    எந்த சந்திப்பிற்காக இவன் கிராமம் தேடி ஓடி வந்தானோ, அந்த சந்திப்பே நிகழாமல் பிரிந்து விட்டானோ?

    அன்று மாலை பைத்தியக்காரன் மாதிரி மலைக் கோவிலுக்குப் போனான்.

    வழியெல்லாம் பூத்திருக்கும் பூக்களிலிருந்து பட்டாம்பூச்சிகள் பறந்தன.

    ஒவ்வொரு பூச்சியின் வண்ணச் சிறகுகளிலும் நிலாவின் முகம் தெரிந்தது.

    பட்டாம்பூச்சி சிறகுகளை விரித்து மலர்களில் அமர்ந்த காட்சியைப் பார்த்தபோது, நிலா கைகளை ஆட்டி ஆட்டி இவனுக்கு ‘டாடா’ சொல்வது போலத் தெரிந்தது.

    நிலா யாரையாவது காதலித்தாளா? யாரை?

    ஏதோ ஒரு குற்ற உணர்வு…

    மலைக்கோட்டை உச்சியில் சுற்றிச் சுற்றி வந்தான். எந்த இடத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டிருப்பாள்?

    இந்த இடமா?

    பயங்கரப் பள்ளத்தாக்காகத் தெரியும் இந்த இடமா?

    கீழே ஓடுகின்ற ஆற்றில் குதித்திருப்பாளோ?

    இரைந்து அழுதான்… கதறினான்…

    நிலா…

    7

    அம்மா சொன்னாள்.

    ஆமாம்பா… நிலா கூட வந்தாச்சு… இருட்டியாச்சே… வண்டி நடுவழியிலே பிரேக் டவுன் ஆனதால எல்லாமே லேட். சரி… இன்னிக்கு மதுரையிலே தங்கிட்டு காலையிலே அம்பாளை தரிசனம் பண்ணிட்டு அப்பறமா நம்ம கிராமம் போகலாம்.

    வீடு, வாசல், நில புலம் எல்லாவற்றையும் விற்றுவிட்டு அப்பாவும், அம்மாவும் சென்னைக்கே வந்துவிட்டார்கள்.

    தாம்பரத்தில் வாடகை கம்மி என்பதால் அங்கே ஒரு வீட்டைப் பிடித்தார்கள். இவன் ஹாஸ்டல் வாழ்க்கை முடிவடைந்தது. வீட்டிற்கே வந்துவிட்டான்.

    இதெல்லாம் பத்து வருடங்களுக்கு முன் நடந்தவை. இவனை அமெரிக்கா அனுப்ப வேண்டும் என்று கனவு கண்டவர், தானே பறந்து போய்விட்டார்!

    ஒரு விபத்து…

    இரவு நேரத்தில் நடு வீதியில் லாரிக்காரன் ஒருவன் இடித்துவிட்டுப் போக, நட்ட நடு வீதியில் தூக்கி வீசி எறியப்பட்டு உதுவுவார் யாருமின்றி ஜீவ மரணப் போராட்டத்தில் கிடந்தவரை யாரோ ஒரு புண்ணியவான் ஆஸ்பத்திரியில் சேர்க்க, விலாசம் அறிந்து இவர்களுக்கு விபரம் வர, இவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஆஸ்பத்திரி போவதற்குள் கோமா ஸ்டேஜில் ஐ.ஸி.யூ.வில் தன் நினைவின்றிக் கிடந்தவரை இவர்கள் கண்ணாடிக் கதவு வழியாகப் பார்த்துக் கண்ணீர் விட்டார்கள்.

    பல லட்ச ரூபாய் செலவு, பத்து நாளைய ஆஸ்பத்திரி வாசத்திற்குப் பிறகு, அப்பாவைப் பிணமாகத்தான் இவர்களால் வீட்டிற்கு கொண்டு வர முடிந்தது.

    இவன் மேற்படிப்பு, அமெரிக்க கனவு அப்பாவின் மரணத்துடன் முடிந்து போனது.

    அதன்பின்…?

    ராகேஷ்…

    யாரோ மென்மையாக அழைத்தார்கள்.

    ராகேஷ் கண் விழித்தான். அப்போதுதான் தெரிந்தது அது ஹோட்டல் அறை என்பதும், அம்மா எதிரில் நின்று கொண்டிருப்பதும்.

    இவன் படுக்கையில் எழுந்து அமர்ந்தான்.

    என்னம்மா இந்த நேரத்திலே? தூங்கலையா? காலையிலே கோவிலுக்குப் போகணும். கிராமம் போகணும்…

    பல வருஷங்களுக்குப் பிறகு நம்ம ஊருக்குப் போறதால தூக்கம் வரலியா?

    உம்… பல வருஷங்களுக்குப் பிறகு நம்ம தவறுகளை திரும்பிப் பாக்கறதாலயும் தூக்கம் வரலைப்பா…

    என்னம்மா சொல்றே…?

    ஒரு முக்கியமான சமாச்சாரம் சொல்லணும். அதை என் மனசுலே போட்டு இத்தனை வருஷமா மூடி மறைச்சுட்டு வந்தேன். இப்போ குலதெய்வக் கோவிலுக்குப் போறதுக்கு முன்னால அதையெல்லாம் சொல்லலேன்னா நெஞ்சு வெடிச்சே நான் செத்துடுவேன்.

    அம்மா விசும்பினாள்.

    என்னம்மா சொல்றே…?

    சொல்றேன்… உன் கல்யாணம் நடக்காததுக்குக் காரணம் குலதெய்வத்தோட பூஜை பண்ணாத குறை மட்டும் இல்லை…

    பின்னே…?

    ஒரு பெண்… தெய்வம் போன்ற ஒரு பெண்ணை… ஒரு பெண்ணை… அந்தப் பொண்ணோட சாபம்தாம்பா எல்லாத்துக்கும் காரணம்…

    எ… என்னம்மா… புரியும்படியா சொல்லு…

    சொல்றேன்…

    அம்மா சொல்ல ஆரம்பித்தாள்.

    இவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

    இவனுக்கு மெய் சிலிர்த்தது… கோபம் வந்தது… ஆத்திரம் வந்தது…

    அழுகையும் வந்தது…

    ஒரு பட்டாம்பூச்சியின் சிறகுகளை இவன் மட்டும் சிதைக்கவில்லை…

    இந்தக் குடும்பமே அதன் மென்மையான வண்ண வண்ணச் சிறகுகளைக் கத்தரித்து வீழ்த்தி… அதை நாசமாக்கி…

    கடவுளே…

    ராகேஷ் அழுதான்…

    8

    குலதெய்வத்திற்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. மலை உச்சியில் அமைந்துள்ள அந்தத் தெய்வத்தின் கோவிலுக்கு ராகேஷும், அம்மாவும் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அம்மாவிற்கு மூச்சு வாங்கியது. நடு நடுவில் இளைப்பாறி பின், தன் பயணத்தைத் தொடர்ந்தாள். ஒவ்வொரு முறை எழும்போதும் ராகேஷின் உதவி தேவைப்பட்டது. அவன் கைகளைப் பிடித்தபடிதான் எழுந்தாள்.

    கேவலம்… படி ஏறுவதற்கே மற்றவர்களின் உதவிக்குக் காத்திருக்கும் தாய்.

    எப்படி, எப்படி அந்தக் கொடூரச் செயலுக்கு தானும் உடந்தையாக இருந்து உதவினாள்?

    நிலா அந்தக் கடைசி நேரத்தில் அழுதிருப்பாளோ? இல்லை கெஞ்சி இருப்பாளோ?

    ஒரு தாயின் கருணை உள்ளம் என்னவாயிற்று?

    மரண சாசனத்தில் கையெழுத்திட எப்படி மனம் வந்தது? அப்பா உயிருடன் இருந்திருந்தால்…? இதோ இந்த உச்சி மலையிலிருந்து…

    உடுக்கை சப்தம் கேட்டது.

    பூஜை முடிந்து பூசாரி குறி சொல்ல ஆரம்பித்து விட்டார். அதோ… இவன் தாய் கைகட்டி வாய் புதைத்து அவர் முன் நிற்கிறாள்.

    ராகேஷ் பார்த்துக் கொண்டிருந்தான்.

    தெய்வங்கள் பழி எடுக்காது. தெய்வ நீதி என்றும் பொய்க்காது. தப்பாது.

    இவன் குடும்பத்திற்கு அந்தத் தெய்வம் என்ன தீர்ப்பு வழங்கி இருக்கிறது?

    இவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

    அலங்கரிக்கப்பட்ட குல தெய்வத்தின் கழுத்தில் சூடப்பட்டிருந்த மாலையிலிருந்து ஒரு புஷ்பம் உதிர்ந்தது.

    புஷ்பம்… வண்ண மலர்… வண்ணத்துப் பூச்சியின்… பட்டாம்பூச்சியின் வண்ணம் போல…

    புஷ்பம் உதிர்ந்தால் நல்ல சகுனமா?

    உதிர்ந்த புஷ்பம்… புறக்கணிக்கப்பட்ட மலரா?

    புறக்கணிக்கப்பட்டவைகள் நல்லவைகளா?

    பிரிந்து விடுவோம் என்று தெரிந்தும், மலரைச் சுமக்க செடி மறுப்பதில்லை!

    Enjoying the preview?
    Page 1 of 1