Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puratchi Thuravi
Puratchi Thuravi
Puratchi Thuravi
Ebook161 pages58 minutes

Puratchi Thuravi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கையில் ஒரு புத்தகம் இல்லாமல் அறிஞர் அண்ணாவைப் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். அது உண்மைதான். எழுதாத நேரங்களில், மேடை ஏறாத நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகம் படித்துக் கொண் டிருப்பது அவர் வழக்கம்.
உயிருக்குப் போராடிக்கொண்டு, மருத்துவமனையில் படுத்திருந்த சமயம் கூட, ஏதோ ஒரு நாவல் படித்துக் கொண்டிருக்கிறார் என்று க.ராசாராம் சொன்னதாக நிருபர் பால்யூ ஒருமுறை தெரிவித்ததும், அது என்ன புத்தகம் என்று தெரிந்து வரும்படி சொன்னார் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.
மேரி கொரெல்லி என்ற நாவலாசிரியை எழுதிய Master Christian என்பதுதான் அந்த நாவல் எனத் தெரிந்தது. அண்ணா காலமான சமயம் அந்தப் புத்தகத்தைக் கடையில் வாங்கினார் எஸ்.ஏ.பி. தானும் படித்துவிட்டு, என்னையும் படிக்கச் சொன்னார். பெரிய நாவலாக இருந்த அதை அப்படியே மொழி பெயர்க்க வேண்டாமென்றும் சுருக்கமாக எழுதுமாறும் என்னைப் பணித்தார். அண்ணா கடைசியாகப் படித்த புத்தகம் என்ற குறிப்புடன், புரட்சித் துறவி என்ற இந்த நாவலை சுருக்கி, சுமார் 25 வாரங்களுக்கு நான் எழுதினேன்.
இதை எழுதிய மேரி கொரெல்லியின் உண்மைப் பெயர் மேரி பெக்கே. விக்டோரியா மகாராணி உட்பட இங்கிலாந்தின் பெரிய மனிதர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் முதலான பலரின் நட்பையும், பாராட்டையும் பெற்றவர். ஷேக்ஸ்பியரின் பிறந்த ஊரை அழகுபடுத்தியவர். கத்தோலிக்க மதத்தில் இருந்த சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதையே தன் எழுத்தின் லட்சியமாகக் கொண்டிருந்தார். புரட்சித் துறவி யும் அவரது கருத்தை வரையுறுத்துவதாகவே அமைந்துள்ளது. கதை தெரிஞ்சும் வருகிற சிறுவன் மானுவேல் உண்மையில் ஏசுநாதர்தான் என்பதுபோல அவர் எழுதியிருந்ததைப் பலர் ஆட்சேபித்தார்கள், எதிர்த்தார்கள். பொதுவாகவே ஆண்களை வெறுக்கும் மனோபாவம் கொண்டவர் இவர். எந்த ஆணாவது தொட்டால் சீறிவிடுவார்.
இந்த நாவலைச் சுருக்கமாக எழுதியதாலும், அப்போது மொழிபெயர்ப்பு விஷயத்தில் எனக்கு அனுபவம் போதாமல் இருந்ததாலும் புரட்சித் துறவியைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என்று கூற முடியாது. பாத்திரங்களும் அவர்களின் பெயர்களும் அதிகம். எனினும் வாசகர்கள் இதை ஆர்வத்துடன் படித்துப் பாராட்டினார்கள்.
ரா. கி. ரங்கராஜன்
Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580126705955
Puratchi Thuravi

Read more from Ra. Ki. Rangarajan

Related to Puratchi Thuravi

Related ebooks

Reviews for Puratchi Thuravi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puratchi Thuravi - Ra. Ki. Rangarajan

    http: //www.pustaka.co.in

    புரட்சித்துறவி

    Puratchi Thuravi

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http: //pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    முன்னுரை

    கையில் ஒரு புத்தகம் இல்லாமல் அறிஞர் அண்ணாவைப் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். அது உண்மைதான். எழுதாத நேரங்களில், மேடை ஏறாத நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகம் படித்துக் கொண் டிருப்பது அவர் வழக்கம்.

    உயிருக்குப் போராடிக்கொண்டு, மருத்துவமனையில் படுத்திருந்த சமயம் கூட, ஏதோ ஒரு நாவல் படித்துக் கொண்டிருக்கிறார் என்று க.ராசாராம் சொன்னதாக நிருபர் பால்யூ ஒருமுறை தெரிவித்ததும், அது என்ன புத்தகம் என்று தெரிந்து வரும்படி சொன்னார் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.

    மேரி கொரெல்லி என்ற நாவலாசிரியை எழுதிய Master Christian என்பதுதான் அந்த நாவல் எனத் தெரிந்தது. அண்ணா காலமான சமயம் அந்தப் புத்தகத்தைக் கடையில் வாங்கினார் எஸ்.ஏ.பி. தானும் படித்துவிட்டு, என்னையும் படிக்கச் சொன்னார். பெரிய நாவலாக இருந்த அதை அப்படியே மொழி பெயர்க்க வேண்டாமென்றும் சுருக்கமாக எழுதுமாறும் என்னைப் பணித்தார். அண்ணா கடைசியாகப் படித்த புத்தகம் என்ற குறிப்புடன், புரட்சித் துறவி என்ற இந்த நாவலை சுருக்கி, சுமார் 25 வாரங்களுக்கு நான் எழுதினேன்.

    இதை எழுதிய மேரி கொரெல்லியின் உண்மைப் பெயர் மேரி பெக்கே. விக்டோரியா மகாராணி உட்பட இங்கிலாந்தின் பெரிய மனிதர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் முதலான பலரின் நட்பையும், பாராட்டையும் பெற்றவர். ஷேக்ஸ்பியரின் பிறந்த ஊரை அழகுபடுத்தியவர். கத்தோலிக்க மதத்தில் இருந்த சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதையே தன் எழுத்தின் லட்சியமாகக் கொண்டிருந்தார். புரட்சித் துறவி யும் அவரது கருத்தை வரையுறுத்துவதாகவே அமைந்துள்ளது. கதை தெரிஞ்சும் வருகிற சிறுவன் மானுவேல் உண்மையில் ஏசுநாதர்தான் என்பதுபோல அவர் எழுதியிருந்ததைப் பலர் ஆட்சேபித்தார்கள், எதிர்த்தார்கள். பொதுவாகவே ஆண்களை வெறுக்கும் மனோபாவம் கொண்டவர் இவர். எந்த ஆணாவது தொட்டால் சீறிவிடுவார்.

    இந்த நாவலைச் சுருக்கமாக எழுதியதாலும், அப்போது மொழிபெயர்ப்பு விஷயத்தில் எனக்கு அனுபவம் போதாமல் இருந்ததாலும் புரட்சித் துறவியைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என்று கூற முடியாது. பாத்திரங்களும் அவர்களின் பெயர்களும் அதிகம். எனினும் வாசகர்கள் இதை ஆர்வத்துடன் படித்துப் பாராட்டினார்கள்.

    ரா. கி. ரங்கராஜன்

    ***

    1

    பிரெஞ்சு நாட்டின் தேசிய நிறுவனங்களிலிருந்து இறைவன் வெளியேற்றப்பட்டிருந்த காலம் அது. ஆயினும், நாடு கடத்தப்பட்ட தெய்வத்தின் மாண்பு, வானத்தில் பரவியிருந்த ஆழ்ந்த ஒளியிலும், நதியின் வெள்ளிமயமான உச்சிக் கிளைகளிலும் வெளிப்பட்டு, கண்ணுக்குத் தெரிந்த பொருள்களுக்கெல்லாம் ஏதோ ஒரு தெய்விகத் தன்மையை ஊட்டி அவற்றை உருமாற்றிக் கொண்டுதான் இருந்தது.

    டிங் டாங்! டிங் டாங்!

    கடைசி மணியின் கடைசி எதிரொலி ஓய்ந்தது. கூடைக்காரப் பெண்கள் மீண்டும் வீடு நோக்கி நகரலானார்கள். குழந்தைகள் நாலா திசையிலும் பறந்தார்கள். படகுக்காரர், நதியின் திருப்பத்தில் நழுவிப் பார்வையினின்று மறைந்தார். மணியோசைக்குப் பின் சூழ்ந்த மௌனத்தினூடே சூரியன் அஸ்தமித்தது. தேவாலயத்தின் அழகிய ரோஜா நிற ஜன்னல் வழியாகத் தெறித்த கதிரவனின் கடைசிக் கிரணங்கள், மன்னர்களின் சமாதிகளூடே நவரத்தினங்களை உதிர்த்தன. ஓர் அகலமான கதிர், மரணாவஸ்தை என்று அழைக்கப்படும் அழகிய ஒரு பளிங்குச் சிற்பத்தின் மீது சாய்வாக விழுந்தது.

    விறைப்பான தசைகள், விம்மும் நரம்புகள், வீங்கிய கண்ணிமைகள். ஒரு பலசாலியான மனிதனுடைய மரண வேதனையை இரக்கமில்லாமல் சித்திரித்திருந்தது சிற்பியின் ஆற்றல்மிக்க சிற்றுளி. இன்பப் பிரியர்களுக்கு அருவருப்பு ஊட்டக் கூடிய காட்சிதான்.

    நீட்டிய கரங்களுடன் சற்றே குனிந்து நிற்கும் கன்னி மரியின் அருள் வடிவத்திற்குச் சிறப்பூட்டினாற் போலவே அந்தப் பளிங்கு உருவத்தின் மீதும் சூரிய ஒளி மென்மையாகத் தவழ்ந்தது.

    ஊதுவத்தி மணத்தினிடையே, பிரார்த்தனைகளாலும் மௌன விரதங்களாலும் செறிவு ஊட்டப்பட்ட சூழலின் மத்தியில், இறப்பின் சின்னங்கள் மீதும் இறவாமையின் அறிகுறிகள் மீதும் அஸ்தமன சூரியன் இளம் சிவப்பைப் பெய்து கொண்டிருந்த ஆலயத்திற்குள், யோசனை வசப்பட்டவராய் உலவிக் கொண்டிருந்தார் கார்டினல் பான்பிரே. ஒல்லியான. உயரமான உடல். துறவால் மெலிவுற்ற முக அமைப்பு. தற்கால உலகத்தின் பழக்கவழக்கங்களை ஏற்காமல், ஏற்க முடியாமல், தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அறிஞர்களுக்கும் சிந்தனையாளர்களுக்குமே உரிய உள்வாங்கிய தோற்றம். தெய்விக அமைதி படர்ந்த தெளிவான, உறுதிமிக்க கண்கள். மன வலிமையைக் காட்டும் மோவாய், அவரது முகத்தில் கண்ணியம் இருந்தது. நன்மைக்காகவே பயன்படுத்தப்படும் பலம் இருந்தது. தயக்கம், கோழைத்தனம் ஈனபுத்தி, பலவீனம் இவற்றின் வரைகோடுகள் ஒன்று கூட இல்லை. மரணத்தைச் சித்திரிக்கும் சிற்பத்தின் அருகே வந்ததும் அவர் பெருமூச்சுவிட்டார். பிரார்த்தனையில் ஈடுபட்டாற் போல் அவர் உதடுகள் அசைந்தன. குறுகிய மனித வாழ்க்கையின் பரிதாபத்துக்குரிய வரலாறு அந்தப் புராதனமான சிற்பச் செல்வத்தில் சொல்லப்பட்டிருந்தது. உச்சியில், அன்னையின் மார்பை அணைத்துக் கொண்டிருக்கும் பச்சைக் குழந்தை. அடுத்தாற்போல், கீழே, வில்லினின்று அம்பு எய்யும் வீறுபடைத்த இளைஞன். பிறகு வாழ்க்கையின் சிகரத்திலிருக்கும் குதிரை வீரன். கடைசியாக, சமாதியின் மேல், இறுதி மூச்சுக்காக உடலை முறுக்கிக் கொண்டிருக்கும் நோயாளி.

    ஒரு மெல்லிய புன்னகை கார்டிலைன் உதடுகளை அசைத்தது. இங்கு, முடிவாக இருக்கலாம். ஆனால் அங்கே – ஆரம்பம்.

    பக்தியோடு அவர் கண்களை உயர்த்தினார். தமது மார்பில், கருநீல ரிப்பனில் தொங்கும் வெள்ளிச் சிலுவையைத் தொட்டுக்கொண்டார். ஆறு மணி ஆகிவிட்டதை ஆலயமணி ஒலிபரப்பி ஓய்ந்த மாத்திரத்தில், மெல்லிய பியானோ போன்ற ஆர்கன் இசை இலேசாக மிதந்து வெள்ளமாகப் பெருகி, ஆலயம் முழுவதையும் நிறைத்தது.

    ஆர்கன்காரர் இந்த நேரத்தில் கூட வாசிக்கிறாரே! அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. கம்பீர இசையும், மாலையாகச் சேர்ந்து ஏனோ அவர் உள்ளத்தைச் சற்றே கலங்க வைத்தன. எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனின் ஏதோ ஒரு தெய்விக அறிவிப்பு அவர் இதயத்தைத் தடவினாற்போலிருக்கவே, அவரால் பிராத்தனை செய்யவும் முடியவில்லை, யோசிக்கவும் இயலவில்லை. காரணமில்லாத ஒரு நடுககம். மூலையில் சில நாற்காலிகள் இருந்தன. அவற்றில் ஒன்றை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார். அமைதிக்கும் மௌனத்துக்கும் நடுவில், அவர் அடிக்கடி படித்திருந்த அந்தப் பழக்கப்பட்ட வாக்கியம் புதுக் கருத்தோடு அவர் காதுகளில் மோதிற்று.

    தேவகுமாரன் மீண்டும் வரும் போது, பூமியில் தெய்வ நம்பிக்கையைக் காண்பார் என்று நினைக்கிறாயா?

    திடுக்கிட்டவராய் கண்களினின்று கையை எடுத்து விட்டு, கார்டினல் சுற்றுமுற்றும் நோட்டம் விட்டார். யார் பேசினது!

    தேவகுமாரன் மீண்டும் வரும்போது, பூமியில் அவர் தெய்வ நம்பிக்கைளைக் காண்பாரா? அவர் சிந்தனையில் மூழ்கினார். இசை ஓய்ந்தது. மெல்ல எழுந்தார்.

    ஆம் தெய்வ நம்பிக்கையைத் தேவகுமாரன் கண்டிப்பாகக் காண்பார். ஒரு சிலரிடமாவது காண்பார். துக்கத்தில் அமிழ்ந்தவர்கள், அடக்கம் உள்ளவர்கள், ஏழைகள், பொறுமைசாலிகள், மனித சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட தியாகிகள் - இவர்களிடத்தில் அவர் தெய்வ நம்பிக்கையைக் காண்பார். யாரை மீட்பதற்காக அவர் உயிர் துறந்தாரோ, அவர்களிடத்தில் அரிய, உயர்ந்த குண நலன்களைக் காண்பார். ஆனால் அறிவாளிகள் என்று சொல்லப்படுகிறவர்களிடத்திலும், போற்றுதலுக்கு உரிய புத்திசாலிகள் என்போரிடம் அதைக் காணமாட்டார். மக்களுக்குப் போதனை செய்கிறவர்களிடத்தில் அதை அவர் காணமாட்டார். புத்தகம் எழுதிக் குவிப்பவர்களால் தாம் ஏளனம் செய்யப்படுவதை அவர் உணர்வார்.

    அவர் தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார். கோடிக் கணக்கான ஆத்மாக்களை மீட்க மதம் தவறிவிட்டதே, ஏன்? பிழை யாருடையது?

    ஆலய வாசலை நோக்கி நடந்த துறவி, புனித தீர்த்தத்தைத் தொட்டுச் சிலுவைக் குறி

    Enjoying the preview?
    Page 1 of 1