Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoorigai Thurogam
Thoorigai Thurogam
Thoorigai Thurogam
Ebook85 pages39 minutes

Thoorigai Thurogam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466381
Thoorigai Thurogam

Read more from Devibala

Related to Thoorigai Thurogam

Related ebooks

Related categories

Reviews for Thoorigai Thurogam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoorigai Thurogam - Devibala

    16

    1

    உள்ளே நுழைந்த அந்தப் பெண்ணை ஏற இறங்க பார்த்தான் ப்ரேம்.

    என்ன சொல்லி உன்னைக் கூட்டிட்டு வந்தாங்க?

    ஓவியம் வரைய மாடலா நிக்கணும்னு!

    என்ன ஓவியம்னு சொன்னாங்களா?

    நிர்வாண ஓவியம்னு

    அதுக்கு உனக்கு முழு சம்மதம் தானே?

    சம்மதம் என் பிரச்சனையில்லை. மாடலா நிக்க மட்டுமில்லை, என்னையே தரவும் நான் தயாரா இருக்ககேன். அதுல கிடைக்கற பணத்துல என் அடுப்பு புகைஞ்சா சந்தோஷப்படுவேன்!

    சுரீலென்றது ப்ரேமுக்கு

    இது கலைம்மா, விபச்சார விடுதியில்லை

    அந்தக் கலையும் உங்களுக்கு பணத்தையோ, புகழையோ சம்பாதிக்கத்தானே? என் மூலதனம் இந்த உடம்பு மட்டும்தான். எப்படி வேணும்னாலும் நீங்க பயன்படுத்திக்கலாம்!

    பெல் அடித்தான் ப்ரேம்.

    ப்யூன் வர,

    பி.ஆர்.ஒ.வை வரச்சொல்லு!

    பி.ஆர்.ஓ... என்றழைக்கப்பட்ட வனிதா அசைந்து அசைந்து வந்தாள்.

    என்ன ப்ரேம்?

    பணத்தைக் கொடுத்து இந்த லேடியை அனுப்பு!

    உபயோகப்படுத்தலையா, நல்ல ஸ்ட்ரக்சர் ப்ரேம்!

    நோ... வறுமை காரணமா, மனசு விகாரப் பட்டாச்சு. அது உடம்புல தெரியும். உதவாது. அனுப்பிரு. நாளைக்கு நல்ல பார்ட்டியா கொண்டு வா!

    பத்தாவது நிமிடம் புறப்பட்டு விட்டான் ப்ரேம்.

    ப்ரேம் பற்றி சுருக்கமாக:

    ஓவியத்தில் அதிக ஈடுபாடுள்ள 28 வயது பட்டதாரி இளைஞன். சில நிர்வாண ஓவியங்கள் அகில இந்திய ரீதியின் பரிசுகளை அள்ளிக் கொண்டு வந்து குவிக்க, அதையே தொடர்ந்து செய்து வருகிறான்.

    பெண்ணின் பிறந்த எழில், புனிதம் என்ற பார்வையில் தெளிவாக உள்ளவன் ப்ரேம்.

    இன்று வரை திருமணம் செய்து கொள்ளாதவன்

    அதனால் தாயின் கோபத்துக்கு ஆளானவன்.

    என்ன ப்ரேம் இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட?

    மாடல் சரியா அமையல. பசிக்குதும்மா. சாப்பாடு ரெடியா?

    வா. சாப்பிடலாம்!

    ஏம்மா ஒரு நாள் உன் கையால சேமியா கேசரி பண்ணே. சாப்ட்டு ரொம்ப காலமாச்சு!

    அதுக்கென்ன? இன்னிக்கே செஞ்சுட்டாப் போச்சு. நீ கேட்டதையெல்லாம் நான் நிறைவேத்தறேன். நான் கேட்டதை மட்டும் நீ நிறைவேத்த...

    ஆரம்பிச்சிட்டியா?

    எனக்கு வயது அறுபது ப்ரேம், நாலு புள்ளைங்க தவறி, கடைசியா நிலைச்சது நீ மட்டும்தான். உன் மேல எத்தனை பாசம் வச்சிருக்கேன் தெரியுமா? உன் பிள்ளையை மடில போட்டுட்டு குளிப்பாட்டி சோறு ஊட்டி... நடக்குமா இதெல்லாம்?

    அம்மாவின் கண்கள் திறந்து கொண்டது.

    அம்மா... நான் சொல்ற காரணத்தைக் கொஞ்சும் புரிஞ்சுபியா?

    சொல்லுப்பா!

    என் தொழில் தெரிஞ்சிட்டா யாரும் பெண் தர முன் வரமாட்டாங்கம்மா. தன் கணவன் தினம் தினம் பெண்களை நிர்வாணமா பார்க்கறவன்னு தெரிஞ்சா அதை கலைக் கண்களோட ஏத்துக்கற மனசு எந்த மனைவிக்கும்மா உண்டு!

    அதுக்காக?

    அது மட்டுமில்லைமா பெண் நிர்வாணத்தை புனிதமா பார்த்துப் பழகிட்ட நான்... ஷ் வேண்டாம்மா? உங்கிட்ட எப்படி சொல்வேன் நான் அதை?

    அப்ப காலம் முழுக்க நீ இப்படியே இருக்கப் போறியாப்ரேம்!

    கலைக்கு என் வாழ்க்கையை அர்ப்பணிச்சா தப்பாம்மா?

    மனசு வந்து, மனைவியா வர ஒருத்தி சம்மதிச்சா?

    வரட்டும். பார்த்துக்கலாம். ஒரு அப்பளம் போடு!

    டெலிபோன் ஒலித்தது

    யாருனு பாரும்மா!

    அம்மா எடுத்ததும், மிஸ்டர் ப்ரேம் இருக்காரா?

    நீங்க யாரு?

    அவரோட ரசிகை. புவனா என் பேரு

    கொஞ்சம் லைன்ல இருக்க முடியுமா? அவன் சாப்பிடறான்.

    அவரை நேர்ல நான் பார்க்கணும். அனுமதி உண்டா?

    ப்ரேம் வந்து விட்டான்.

    ஹலோ சார். லலித் கலா அகாடமில் உங்க மாஸ்டர் பீஸ் ஒண்ணு பார்த்தேன். வாவ்! உங்களை நேர்ல பார்க்கணுமே நான்!

    வாங்களேன்!

    எப்ப?

    இப்ப வேணும்னாலும் வரலாம். நான் ஃப்ரீதான்!

    விலாசம் கேட்டுக் கொண்டு, ரிசீவரை வைத்தாள்.

    ப்ரேம் ஒரு ஆங்கில நாவலை கையிலெடுத்துக் கொண்டு ஹால் சோபாவில் சரிந்தான்.

    அம்மா டிவியில் பழைய சிவாஜி படம் ஒன்றை போட்டுக் கொண்டு அதில் மூழ்கிப் போனாள்.

    நாற்பது நிமிடத்தில் ஆட்டோ வந்து நின்றது வாசலில், உள்ளே நுழைந்தாள் புவனா. எளிமையான கைத்தறிச் சேலை, இளம் சாம்பல் நிறத்தில் இரட்டை ஜடை மார்பில் துள்ள, வசீகரமாக

    Enjoying the preview?
    Page 1 of 1