Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marana Kadigaaram
Marana Kadigaaram
Marana Kadigaaram
Ebook160 pages54 minutes

Marana Kadigaaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரதாப் ஒரு வளரும் கிரிக்கெட் வீரன். விளையாடும் முதல் டெஸ்ட் மேட்ச்சில் விஞ்ஞான சதியால் முதல் பந்தைக்கூட வீசமுடியாமல் ஆட்டக்களத்தின் நடுவே சிதறுகிறான். எதிர்காலம் இருண்டு அவநம்பிக்கையாய் இந்தியா திரும்பிய பிரதாப்பை அவனது காதலி ஜென்னிபர் நம்பிக்கையூட்டி விஞ்ஞான சதியை முறியடித்து, மீண்டும் கிரிக்கெட் விளையாட வைக்கிறாள். அடுத்த டெஸ்ட் மேட்ச்சில் இமாலய வெற்றி பெறுவானா? பிரதாப். அவர்களது காதலும் கைகூடுமா? விஞ்ஞான சதி திட்டம் நிறைவேறியதா? வாசித்து அறிவோம்…

Languageதமிழ்
Release dateApr 11, 2022
ISBN6580111007781
Marana Kadigaaram

Read more from Arnika Nasser

Related to Marana Kadigaaram

Related ebooks

Related categories

Reviews for Marana Kadigaaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marana Kadigaaram - Arnika Nasser

    https://www.pustaka.co.in

    மரண கடிகாரம்

    Marana Kadigaaram

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    என்னுரை

    'மரண கடிகாரம்' கல்கண்டு வார இதழில் தொடரில் வெளிவந்து வாசகரிடையே மெஹா வெற்றியை கொண்ட நாவல். நாவலில் வரும் பிரதாப் ஒரு வளரும் கிரிக்கெட் வீரன். விளையாடும் முதல் டெஸ்ட் மேட்ச்சில் விஞ்ஞான சதியால் முதல் பந்தைக்கூட வீசமுடியாமல் ஆட்டக்களத்தின் நடுவே சிதறுகிறான் எதிர்காலம் இருண்டு அவநம்பிக்கையாய் இந்தியா திரும்பிய பிரதாப்பை அவனது காதலி ஜென்னிபர் நம்பிக்கயூட்டி விஞ்ஞான சதியை முறியடித்து, மீண்டும் கிரிக்கெட் விளையாட வைக்கிறாள். அடுத்த டெஸ்ட் மேட்ச்சில் இமாலய வெற்றி பெறுகிறான் பிரதாப். அவர்களது காதலும் கைகூடுகிறது.

    எனக்குப் பிடித்த கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து கவிதைத்துவமான காதலை இடை இடையே கலந்து தன்னம்பிக்கை உணர்வை முன்னிலைப்படுத்தி எழுதிய 'மரண கடிகாரம்' நான் எழுதிய நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது.

    என்றென்றும் அன்புடன்,

    ஆர்னிகா நாசர்

    1

    பல்கலைக்கழகம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. குல்மொஹர் மரங்கள் தரையில் வெல்வெட் கம்பளங்கள் விரித்திருந்தன. பல்கலைக்கழகத்திற்கு கிரிக்கெட் விளையாடவரும் மற்ற பல்கலை வீரர்களை அலங்கார வளைவுகள் வரவேற்றன. வர்ண வர்ணக் கொடிகள் நடப்பட்டிருந்தன.

    பல்கலைக்கழக பெவிலியன் விஸ்தாரமாய் அமைந்திருந்தது. தடகளப் போட்டிகளுக்கும் கிரிக்கெட்டுக்கும் சேர்த்தே உபயோகப்படும் விதமாய் மைதானம் வட்ட வடிவமாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தைச் சுற்றி கான்கிரீட் காலரிகள் காணப்பட்டன. பெவிலியனிலும் காலரிகளிலும் மாணவ மாணவியர் குழுமம் வண்ணத்துப் பூச்சி மாநாடாய் பிரமை தந்தது.

    பெண்கள் பகுதியில் ஜென்னிபர் இருந்தாள்

    ஜென்னிபர் ஒரு கிரானைட் நிலா. சுருள் சுருள் கேசம் குதிரைவால் அமைத்து. நெற்றியில் சிதறிய முன்னுச்சிக் கேசம். நீள்வட்ட முகம். மனிஷா கொய்ராலா கண்கள், நீண்டு சரிந்த நுனியில் கனத்த மூக்கு. ஸ்ட்ராபெரி உதடுகள். இளமை உடலின் ஒவ்வொரு செல்லிலும் மைக்ரோ வானவில் விசிறியிருந்தது. அகன்ற தோள் குறுகிய இடை, அகன்ற உட்காருமிடம், ரேஸ் குதிரை நேர்த்தியில் கால்கள், ஐந்து ஐந்தாய் கீறிய வாழைப் பூ போல் கால் விரல்கள்.

    மலர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி. நர்ஸிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஜென்னிபர் 19 வயது நிரம்பியவள். உயரம் 5'5’’. நீலநிற பட்டு சுடிதார் உடுத்தியிருந்தாள். மார்பு பகுதியிலும் இரு கை நுனிகளிலும் தங்க நிற எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தது. தங்கப் புள்ளிகள் நிறைந்த கால் சராய் அணிந்திருந்தாள். இளநீலத் துப்பட்டா போர்த்தியிருந்தாள். காதுகளில் ஸ்டட். கழுத்தில் முத்துமாலை. வலதுகையில் மட்டும் ஆக்ஸிடைஸ்டு மெட்டல் வளையல்கள். கால்களில் தங்ககொலுசும் ஷீ மாடல் அலங்கார செருப்பும் இரு முயல் காதுகள் தொங்கும் தொப்பியைத் தலையிலும் அணிந்திருந்தாள்.

    ஜென்னிபருடன் பத்துக்கு மேற்பட்ட தோழிகள் வந்திருந்தனர்.

    அனைவரின் கைகளிலும் கஞ்சிரா, ஜால்ரா, ட்ரம்ஸ், போலீஸ் விசில், பாங்கோஸ் போன்ற வாத்தியங்கள். அவர்களின் விருப்பம் நூறு சதவீதமும் மேட்ச் பார்க்க அல்ல; மேட்ச் நடக்கும்போது கலாட்டா செய்து கூட்டத்தை மகிழ்விக்க.

    தோழிகளுடன் ஜென்னிபர் நிற்கும்போது ஜென்னிபர் மட்டும் கண்ணைப் பறிக்கும் வர்ணத்திலும் தோழிகள் சோகையாய் கறுப்பு வெள்ளையிலும் தெரிந்தனர்.

    பெவிலியனின் மைக் அலறியது.

    இன்னும் சிறிது நேரத்தில் பல்கலைக்கழங்களுக்கு இடையே ஆன கிரிக்கெட் மேட்சின் இறுதியாட்டம் நடைபெற இருக்கிறது. உஸ்மானியா பல்கலைக்கழகமும் மலர் பல்கலைக்கழகமும் மோத இருக்கின்றன!

    அறிவிப்பு காலரிகளில் எதிரொலித்தது. கூட்டம் ஆரவாரித்தது. ஜென்னிபர் அண்ட் கோ வாத்தியம் இசைத்தனர். இரு அணி காப்டன்களும் அம்பயருடன் நடந்தனர். டாஸ் சுண்டிவிடப்பட்டது. மலர் பல்கலையே டாஸ் ஜெயித்தது.

    பேட்டிங் செய்ய மலர் பல்கலைத் துவக்க ஆட்டக்காரர்கள் களத்துக்கு நடந்தனர். அவர்களுடன் பீல்டிங் அணி.

    இரு துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவன்தான் பிரதாப்.

    இருபது வயதான பிரதாப் 5' 8" உயரமிருந்தான். மெக்கானிகல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிப்பவன், நகாஷ் செய்யப்பட்ட குட்டி ரஜினிகாந்த்தாய் துறுதுறுத்தான். கழுத்தில் மைனர் செயின், துடிதுடிப்பாய் ஹெவி பேட்டைச் சுழற்றியபடி நடந்தான்.

    பிரதாப் நடந்து செல்வது மட்டும் பளபளக்குப் வர்ணத்திலும் சுற்றியுள்ளோர் சோகையான கறுப்பு வெள்ளை நிறத்திலும் தெரிந்தனர்.

    ஜென்னிபர் வாத்திய இசை கேட்டு திசை திரும்பினான் பிரதாப்.

    ஜென்னிபர் கண்களில் பிரதாப் பட்டான். பிரதாப்! கண்களில் ஜென்னிபர் பட்டாள். பரஸ்பரம் ஜரிகை நந்தவனம் பூத்தது. மென்தால் சுவைத்த நாக்கு போல அவளின் இதயம் ஜிருஜிருத்தது. ரத்த ஓட்டத்தில் மின்சார சிலிர்ப்பு.

    மேட்ச் ஆரம்பித்தது.

    முதல் பந்து வீசப்படுவதை ஆக்ரோஷமாய் பாங்கோஸ் அடித்து வரவேற்றாள் ஜென்னிபர்.

    கிரகாம் கூச் போல் மட்டையை அந்தரத்தில் ஆட்டியபடி பந்தை எதிர் கொண்டான் பிரதாப்.

    அதிரடி ஆட்டக்காரன்!

    வலது ஸ்டம்ப்பை இலக்கு வைத்து எகிறி வந்தது வேகப்பந்து. அசாத்திய வலுவுடன் பந்தை லாங் ஆனுக்கு, மேல் தூக்கினான் பிரதாப்

    சந்தேகமில்லாத மிகப்பெரிய சிக்ஸர்!

    பந்து காலரி மக்களிடம் போய் விழுந்தது.

    அவ்வளவுதான்...

    உற்சாக சீழ்க்கை அடித்து ஒரு மினி நடனம் ஆடினாள் ஜென்னிபர்.

    இப்படி ஒரு பேட்டிங் சாகசத்தை பழைய விவியன் ரிச்சர்ட்ஸ்கூட நடத்திக் காட்ட முடியாது. மைதானத்தின் சகல இடங்களுக்கும் பந்து பறந்தது. வேகப்பந்து வீச்சையும் சுழற்பந்து வீச்சையும் கால்தூசி போல் எதிர் கொண்டான் பிரதாப். மட்டைப் பிடிப்பு தீபாவளி நிகழ்த்தினான். பந்து வீச்சாளர்களின் இதயத்தை நொறுக்கினான்.

    82 பந்துகளில் 168 ரன்கள் குவித்தான். அடித்த ரன்களில் 25 பவுண்டரிகள், எட்டு சிக்ஸர்கள். அடுத்த ஓவரில் இன்னொரு சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனான் பிரதாப்.

    பீல்டிங் அணி ஆசுவாசித்தது. ஹெல்மட்டைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு பிரதாப் வருவதைக் கூட்டம் அலாஸ்காவுக்குக் கேட்கும் குரலில் ஆரவாரித்தது.

    வாத்தியம் இசைக்கும் ஜென்னிபரிடம் திரும்பினான் பிரதாப்.

    ஆயிரம் கண்கள் பார்வையாகாமல் ஜென்னியின் கண்கள் மட்டும் விஸ்வரூபித்தன.

    ஒரு மைக்ரோ நொடிதான்

    ஒரு பறக்கும் முத்தத்தைப் பிரதாப் நோக்கி வீசினாள். ஜென்னிபர்.

    மானசீகத்தில் இரு செர்ரி உதடுகள் பறந்து வந்தன.

    பிரதாப்பின் கன்னத்தில் மோதி விழுந்தன.

    பிரதாப் சங்கோஜித்தான்.

    ஆட்டம் தொடர்ந்தது. மலர் பல்கலைக்கழகம் 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழந்து 316 ரன்கள் குவித்தது.

    உணவு இடைவேளைக்குப் பின்,

    உஸ்மானியா பல்கலை அணியினர் மட்டை பிடிக்க வந்தனர்.

    பந்து வீச வந்தான் பிரதாப்.

    இருபது தப்படிகள் ஓடிவந்து காற்றில் ஏறிப் பந்தை வீசினான். டென்னிஸ் லில்லி போல் பந்து வீச்சு. அவுட்சைட் ஆப் தி ஆப் ஸ்டம்ப் பறந்த பந்து மட்டையாளனின் மட்டையில் வழுக்கி விக்கெட் கீப்பருக்கு கேட்ச் ஆனது. 'முட்டை' போட்ட உஸ்மானியா மட்டையாளன் ஏமாற்றமாய் பெவிலியனுக்கு நடந்தான்.

    தொடர்ந்த ஆட்டத்தில் நெருப்புப் பொறி பறந்தது.

    இரு தவணைகளில் பத்து ஓவர் வீசினான் பிரதாப். 16 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தான்.

    பிரதாப் ஒவ்வொரு விக்கெட் எடுக்கும்போதும் ஜென்னிபர் இசைத் திருவிழா நடத்திக் காட்டினாள்.

    உஸ்மானியா பல்கலைக்கழகம் 30.3 ஓவர்களிலேயே அனைத்து

    Enjoying the preview?
    Page 1 of 1