Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parappatharkku Mun Konjam
Parappatharkku Mun Konjam
Parappatharkku Mun Konjam
Ebook151 pages4 hours

Parappatharkku Mun Konjam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Indhumathi
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466718
Parappatharkku Mun Konjam

Read more from Indhumathi

Related to Parappatharkku Mun Konjam

Related ebooks

Related categories

Reviews for Parappatharkku Mun Konjam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parappatharkku Mun Konjam - Indhumathi

    1

    "ஸ்ரீராம்..."

    பதில் வரவில்லை.

    எம்.எஸ். ஸ்ரீராம்...

    அதற்கும் பதில் இல்லை. வகுப்பு ஆசிரியை லில்லி சாமுவேல்- தலையை உயர்த்தி கண்ணாடி வழியாக, ஸ்ரீராமின் இடத்தைப் பார்த்தார். அவன் உட்கார்ந்திருந்தான். ஞாபகமற்றவனாக வெளியில் தூரத்தில் எங்கோ வெறித்துக்கொண்டு இருந்தான்.

    ஆசிரியையின் குரல் காதில் விழாதவனாக தெரிந்தான்.

    அவன் இப்படி இருப்பது இது முதல் முறை இல்லை. எத்தனையோ தடவை இதேபோல் இருந்து, ஆசிரியை கண்டித்து இருக்கிறார்.

    ‘ஸ்ரீராம், ஏன் இப்படி இருக்கிறாய்? நீ வகுப்பைவிட்டு வெளியே போகலாம்’ என்று கடிந்து இருக்கிறார். வேறு மாதிரியும் தண்டித்து உள்ளார். ஆங்கில வகுப்பான நாற்பது நிமிடங்களும், வெளியில் நின்றுவிட்டு- மணி அடித்ததும், லில்லி சாமுவேல் வெளியில் போகிறபோது பின்னாலேயே ‘ஸ்டாப் அறை வரை போவான்.

    ‘ஸாரி மிஸ், இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன் மிஸ்...’ என்று கெஞ்சுவான்.

    இதோடு எத்தனை முறை இப்படி மன்னிப்பு கேட்டிருக்கேன்னு நினைச்சுப் பாரு, ஆனா, ஒரு தடவையாவது திரும்பச் செய்யாமல் இருந்திருக்கிறாயா? ‘ஸாரி’ என்கிற வார்த்தை வெறுமனே சொல்லிவிட்டுப் போவதில்லை. அர்த்தம் இல்லாதது இல்லை. உதட்டில் இருந்து வருவதும் இல்லை. மனசின் அடித்தளத்தில் இருந்து வரணும். நிஜமாக ‘நாம் செய்தது தவறு’ என்று உணரணும். அப்படி உணருகிற மாணவன், திரும்ப அதே தவறைச் செய்ய மாட்டான். மேலும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் மன்னிப்பு!

    ஸ்ரீராம் தலை குனிந்து, சட்டை நுனியை விரலால் முறுக்கியபடி பேசாமல் இருப்பான். அந்த நிலமையில் அவனைப் பார்க்க லில்லி சாமுவேலுக்குப் பரிதாபமாக இருக்கும். ஏதோ ஒரு இரக்கம் நெஞ்சைச் சூழ்ந்துகொள்ளும். தன் எட்டு வயதுப் பையன் பீட்டர் சாமுவேலின் நினைவு வரும். ஆனால், பீட்டர் இப்படி இருக்கமாட்டான். நிதானமாகப் பேசமாட்டான். படபடவென்று பொரிந்து கொட்டுவான். துறுதுறுவென்று இருப்பான். நிறைய சண்டை போடுவான்.

    சைக்கிளை அதிவேகமாக மிதிப்பான். விளையாடுவான். மரம் ஏறிக் குதிப்பான். பெரியதாய் சிரிப்பான். சக பையன்களை கலாட்டா பண்ணுவான். எட்டு வயதுப் பையன் எப்படி துடிப்பாக இருக்க வேண்டுமோ, அப்படி இருப்பான். அப்படித்தான் இருக்க வேண்டும். அது மாதிரி இருப்பதுதான் இயல்பு, சகஜமானது. அதேபோன்றுதான் எல்லாப் பையன்களும் இருந்தார்கள்.

    ஆனால், அப்படி இல்லாமல்- இந்த ஸ்ரீராம் மட்டும் மிகவும் வித்தியாசமானவனாக இருந்தான். யாரோடும் பேசாமல் ஒதுங்கி நின்றான். எல்லாச் சிறுவர்களும் விளையாடப் போகும்போது, இவன் மட்டும் தனித்துக் காணப்பட்டான். பகல் சாப்பாட்டைக்கூட தனியாக ஓர் ஓரமாக உட்கார்ந்தே சாப்பிட்டான். வகுப்பிலும் கலகலப்பாகப் பழகுவதில்லை... பேசுவதில்லை. எது கேட்டாலும் எழுந்து, சட்டை நுனியைச் சுருட்டி- தலை குனிந்தே நின்றிருப்பான்.

    ம்... சொல்லு ஸ்ரீராம். இந்தப் பாட்டை அன்னிக்கே நடத்தி இருக்கேன். இன்னிக்குப் படிச்சிட்டு வரச் சொல்லி இருக்கேன். முதல் வரி கூடவா உனக்குத் தெரியலை?

    .....

    இப்படி வாயைத் திறக்காமல் ஏன் கழுத்தை அறுக்கிறாய்... படிச்சிட்டு வரலையா?

    .....

    படிக்கலைன்னா... ‘படிக்கலை’ன்னு சொல்லேன்?

    .....

    சரி. இதற்கும் பதில் சொல்லலைன்னா வெளியே போய் நில்லு...

    அதற்கு மட்டும் உடனடியாகக் கீழ்ப்படிந்து, வெளியில் போய்விடுவான். வகுப்பில் மற்ற பையன்களுடன் உட்கார்ந்து இருப்பதைவிட இப்படி வெளியில் போய் நிற்பது அவனுக்குச் சுலபமான விஷயமாக இருப்பதாகப்பட்டது.

    ஒரு மணி நேரமானாலும் அப்படி நின்றுகொண்டிருப்பதில் எந்தக் கஷ்டமும் இல்லாததாகத்தெரிய-அதன்பின்னரே லில்லி சாமுவேல் அவனை வெளியில் அனுப்புவதைக் குறைத்துக்கொண்டு, இவன் எதிலும் சுவாரசியமற்று இருக்க என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்க முனைந்தார். மற்ற ஆசிரியைகளிடம், ஒரு வகுப்பு ஆசிரியையின் பொறுப்பில் விசாரிக்கலானார்.

    ஏன், சகுந்தலா டீச்சர். நீங்க 5-வது வகுப்பு ‘ஏ’ பிரிவுக்கு கணக்கு எடுக்கறீங்க இல்ல...? ஸ்ரீராம் நடவடிக்கை எப்படி?

    ஆசிரியைகளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் நோட்டுப் புத்தகங்களைத் திருத்திக் கொண்டிருந்த சகுந்தலா தலை உயர்த்திச் சட்டென்று பிடிபடாமல் கேட்டார்.

    எந்த ஸ்ரீராம்?

    இந்த வருஷம் புதுசா சேர்ந்தானே, அந்தப் பையன்.

    யாரு? வெள்ளையா, சோகை பிடிச்ச மாதிரி ஒல்லியா, முகத்தை எப்போதும் சோகமா வச்சிட்டிருப்பானே, அந்தப் பையனா?

    அவனேதான்.

    கணக்குல ரொம்ப வீக்’தான்...

    படிப்பைப் பற்றி நான் கேட்கலீங்க. வகுப்பில் எப்படி இருக்கான்?

    அவனைத் தேடித்தான் கண்டுபிடிக்கணும். அத்தனை அமைதி.

    ‘தான் கேட்ட கேள்விக்கு ஏற்ற வகையில் பதில் வராததால், அதற்கு மேல் கேள்வி கேட்பதை நிறுத்திக்கொண்டார். சகுந்தலா சின்னப் பெண். இன்னமும் கல்யாணம் ஆகாதவர். பொழுது போக வேலையில் சேர்ந்திருக்கும் ரகம். சிறுவர்களை மனோதத்துவ ரீதியில் ஊடுருவிப் பார்க்க இயலாத முதிர்ச்சி இன்மை. அதனால் அவரைவிட்டு, விஞ்ஞான ஆசிரியை சுபத்ரா, சரித்திர ஆசிரியை பார்வதி, பூகோள ஆசிரியை கனகவல்லி, தமிழ் ஆசிரியை சீதாலட்சுமி என்று தனித் தனியாக விசாரித்தார்.

    ஓ... ஸ்ரீராம்... அந்தப் பையன்தானே! அவனுக்கு ஏதோ மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும்னு தோணுது. இல்லாது போனால் அப்படி இருக்க மாட்டான்.

    எப்பவும் சோர்ந்த மாதிரி சுரத்தே இல்லாமல் இருக்கான்! கேட்ட கேள்விக்குக்கூட பதில் சொல்லமாட்டேங்கிறான்.

    பழைய மாணவன் என்றாலும் ஓரளவு அவனது பின்னணி புரியும். இவன் புதுசு. இந்த வருஷம்தான் சேர்ந்திருக்கான். பள்ளிக்கூடம் திறந்து இன்னும் மூன்று மாசம்கூட ஆகலை. அதற்குள் என்ன சொல்ல முடியும்? ஒருவேளை அவன் படித்த பழைய பள்ளிக்கூடச் சூழ்நிலை வேறு மாதிரி இருந்ததோ என்னவோ? அந்த நண்பர்களை மறக்க முடியாமல் சங்கடப்படுகிறானோ என்று நினைக்கிறேன்.

    இதற்கு முன்னால் எங்கே படிச்சானாம்?

    பெங்களூரில் ஏதோ தனியார் பள்ளின்னு சொன்னதாக ஞாபகம்.

    எதுவாக இருந்தாலும் பையன் ஏன் இப்படிக் கூட்டுக்குள் ஒடுங்கும் நத்தையாக இருக்கான்னு புரியலை? இவனை இப்படியே விடக்கூடாது சுபத்ரா. எதனாலோ அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கான்னு தெரியுது. அது என்னன்னு கண்டுபிடிச்சு, அவன் ஒடுங்கும் கூட்டை உடைச்சு வெளியில் கொண்டு வரணும். முதல்ல அவன்கிட்டே பேசிப் பார்க்கணும்.

    ஒரு விநாடி யோசித்த தமிழ் ஆசிரியை சீதாலட்சுமி சொன்னாள்: இவன்கிட்டே பேசறதைவிட இவனுடைய அம்மா, அப்பாவைக் கூப்பிட்டுப் பேசறது நல்லதுன்னு நினைக்கிறேன்.

    அப்படியா?- என்று தயங்கிய லில்லி சாமுவேல், "அவனுக்கு அம்மா இருக்காங்களா... தெரியுமா உங்களுக்கு? பொதுவாக அம்மா இல்லாத பசங்களுக்குத்தான், இந்த மாதிரியான செயல்பாடுகள் இருக்கும். சிறகு

    முறிந்த மாதிரி சங்கடப்படுவாங்க."

    நீங்க நினைக்கறதும் சரி. ஆனா, இவனுக்கு அம்மா இல்லைங்கறதை உறுதி பண்ணிட்டு கேட்கலாம்.

    இல்லை, இந்த மூன்று மாசத்துல கிட்டத்தட்ட எல்லாக் குழந்தைகளுடைய அம்மாவும் பள்ளிக்கூடத்துக்கு வந்து, தங்கள் பையன்கள் எப்படிப் படிக்கிறாங்கன்னு விசாரிச்சிட்டுப் போயிட்டாங்க. ஆனால், இந்த ஸ்ரீராம் வீட்டில் இருந்து மட்டும் இதுவரை யாரும் வரலை. புதுப் பள்ளிக்கூடமாயிற்றே, எப்படி இருக்கு? எந்த மாதிரி பாடம் நடத்தறாங்க? பையன் எப்படிப் பழகறான்? ‘கிளாஸ் டீச்சர் யாருன்னு தெரிஞ்சுக்கக்கூட வரக்காணோமே?

    ஓ... அதை வைத்து இவனுக்கு அம்மா இல்லைன்னு முடிவு பண்ணிவிட முடியாது. சில பெற்றோர்கள், இந்த ஆர்வமெல்லாம் இல்லாமலே இருப்பார்கள்.

    "ஆஹா, அதெல்லாம் நம்ம காலம். நான் என்ன படிக்கிறேன்னு தெரிஞ்சுக்காமல்கூட எங்க அம்மா இருந்து இருக்கிறாள். தேர்ச்சி அறிக்கை வந்த அன்னிக்கு மட்டும்தான் அப்பாவுக்கு நான் எப்படிப் படிக்கிறேன்னு தெரியும். ஒண்ணு- ஒரு கத்தல் கத்திட்டு, கையெழுத்து போட மாட்டேன்னு அடம் பிடிச்சு, என்னை அழ வைச்சு இரண்டு நாளுக்கு அப்புறம் போட்டுத் தருவார். அதற்கப்புறம் ஒரு தடவை கூட பக்கத்துல வந்து என்ன படிக்கிறேன், என்ன நடத்தி இருக்காங்கன்னு கேட்கமாட்டார். ஏதாவது புரியலைன்னாலும் கிட்டே போய்க் கேட்க முடியாது. எரிந்து விழுவார்.

    இப்போ பெற்றோர்கள் அப்படியா இருக்காங்க? எதற்கும் பள்ளிக்கூடத்துக்கு ஓடி வந்துடறாங்க. கேள்வி மேல் கேள்வி கேட்கறாங்க.

    எல்லாவற்றையும் விசாரிக்கிறாங்க, ஒரு பொறுப்பு உணர்ச்சியோடு நடந்துக்கறாங்க. அதனால் அப்படிச் சொல்லவே முடியாது."

    நீங்க சொல்றது சரிதான். அதனால்தான் ஏன் ஸ்ரீராமின் அம்மாவோ, அப்பாவோ ஒரு முறை கூட அப்படி வந்து விசாரிக்கலைன்னுதான் கேட்கறேன்.

    "முதல்

    Enjoying the preview?
    Page 1 of 1