Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulaga Natchathirangal
Ulaga Natchathirangal
Ulaga Natchathirangal
Ebook413 pages2 hours

Ulaga Natchathirangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகளாவிய சினிமா பற்றி தகவல்கள், செய்திகள், முக்கியமான திரைப்படத்துறையினரின் வாழ்க்கை வரலாறுகள் அனைத்தையும் முழுக்க முழுக்கப் படித்துத் தெரிந்து கொண்ட நடிகர்கள் எனக்குத் தெரிந்தவரை கமல்ஹாசன் அவர்கள்தான். அவருக்கு அடுத்தவராக நான் நடிகர் ராஜேஷைச் சொல்வேன். அத்தனையும் இவருக்கும் அத்துபடி.

ராஜேஷை வைத்து நான் 'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படத்தை எடுத்த காலகட்டத்திலேயே அவருடைய உலக சினிமா பற்றிய அறிவு என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

கமல்ஹாசனையும் ராஜேஷையும் இணைக்கும் ஒரு சின்னத் தகவல் ஒன்று உண்டு.

'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படம் நான் எடுக்க நினைத்தபோது அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முற்றிலும் புதியவர்களையே போடுவது என்று தீர்மானித்திருந்தேன். எல்லாப் புதுமுக நடிக நடிகையர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். விகடகவி பாத்திரத்திற்கு சின்னஞ்சிறு இளைஞனான ராஜேஷைத்தான் நான் தேர்வு செய்து வைத்திருந்தேன்.

படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு முன் ஒரு சின்ன யோசனை! மிகவும் நுணுக்கமான, அதே நேரத்தில் மிகக் கடினமானதுமான அந்த விகடகவி பாத்திரத்தில் முற்றிலும் புதியவரான ராஜேஷினால் ஈடு கொடுக்க முடியுமா என்கிற ஒரு சந்தேகம் எனக்கும் தயாரிப்பாளர் அரங்கண்ணல் அவர்களுக்கும் ஏற்பட்டது.

இதைப்பற்றிப் பேசிக்கொண்டே காரில் ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்க அய்யங்கார் தெருவில் வந்து கொண்டிருந்தோம். இடது பிளாட்பாரத்தில் கமல்ஹாசன் தற்செயலாக நடந்து வந்து கொண்டிருந்தார். 'அரங்கேற்றம்' திரைப்படம் வெளியாகி விட்ட காலகட்டம் அது.

கமலைப் பார்த்தவுடன் காரை நிறுத்தச் சொல்லி கமலைப் பார்த்து, "எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?'' என்று நான் கேட்க, "வீட்டுக்குத்தான்" என்று கமல் சொல்ல, அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு நேராக அரங்கண்ணல் அலுவலகத்திற்கு வந்தடைந்தோம்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் விகடகவி வேடத்திற்குப் பொருத்தமானவர் கமல்தான் என்று முடிவு எடுக்கப்பட்டது.

"இந்தக் கதாபாத்திரத்தை தெருவில் போகிறவன்கூட நன்றாகச் செய்துவிட முடியும் என்று நினைத்துத்தான் என்னைத் தெருவில் இருந்து பிடித்துக் கொண்டு வந்தீர்களா" என்று கமல் அப்பொழுதே தமாஷாகச் சொன்னதும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

ராஜேஷ் அவர்களைப் பிறகு வரவழைத்து இந்த மாற்றத்தைச் சொன்னவுடன் பெரிய அதிர்ச்சிக்கு அவர் உள்ளானார். எப்படியும் இந்த இழப்பைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு ஈடுகட்டுகிறேன் என்று ராஜேஷுக்கு உறுதியளித்து அனுப்பி வைத்தேன்.

இந்த உறுதி 'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படத்தில் ஈடு செய்யப்பட்டது.

இன்றைக்கு ராஜேஷ் அவர்கள் தமிழ்த் திரையுலகில் ஒரு சிறந்த நடிகராகவும் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபராகவும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ராஜேஷ் அவர்களுடைய திரைக்கலைஞர்கள் பற்றிய தகவல்களும், திரை நுணுக்கங்கள் பற்றிய அறிவும் வருங்கால இளைஞர்களுக்கும், முக்கியமாக சினிமா மாணவர்களுக்கும் பெரும்பயன் தரும் விதமாகவும், அவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும் விதத்தில் இந்த நூலை ராஜேஷ் அவர்கள் திறம்பட எழுதியிருக்கிறார்.

மிகப் பிரபலமான உலக நட்சத்திரங்களில் ஐவரின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூலில் கையாண்டிருக்கிறார். சுவையுடன் எழுதப்பட்ட இந்த நூலில் இதுவரை நாம் கேட்டறியாத தகவல்கள் ஏராளம்.

சினிமா மாணவர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மாணவர்களும், வாழ்க்கையில் போராடி மாபெரும் வெற்றி பெற்ற இந்தக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து அதன் மூலம் நல்ல பயன் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

ராஜேஷ் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன். இந்த நூல் மிகப்பெரிய வெற்றியைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்.

- பிரியமுடன்

-கே. பாலசந்தர்

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580131605150
Ulaga Natchathirangal

Read more from Actor Rajesh

Related to Ulaga Natchathirangal

Related ebooks

Reviews for Ulaga Natchathirangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulaga Natchathirangal - Actor Rajesh

    http://www.pustaka.co.in

    உலக நட்சத்திரங்கள்

    Ulaga Natchathirangal

    Author:

    நடிகர் ராஜேஷ்

    Actor Rajesh

    For more books

    http://www.pustaka.co.in/home/author/actorrajesh-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அர்த்தமுள்ள புத்தகம்!

    கற்பதும் கற்பிப்பதுமாக...!

    பாராட்டுரை - சிவகுமார்

    சினிமா...

    பாராட்டுரைக்கு நன்றி

    என்னுரை

    1 கிளிண்ட் ஈஸ்ட்வுட்

    2 மார்லன் பிராண்டோ

    3 மர்லின் மன்றோ

    4 ஆல்பசினோ

    5 ரொனால்டு ரீகன்

    முன்னுரை

    கே. பாலசந்தர்

    சென்னை – 600 004

    8.11.2008

    உலகளாவிய சினிமா பற்றி தகவல்கள், செய்திகள், முக்கியமான திரைப்படத்துறையினரின் வாழ்க்கை வரலாறுகள் அனைத்தையும் முழுக்க முழுக்கப் படித்துத் தெரிந்து கொண்ட நடிகர்கள் எனக்குத் தெரிந்தவரை கமல்ஹாசன் அவர்கள்தான். அவருக்கு அடுத்தவராக நான் நடிகர் ராஜேஷைச் சொல்வேன். அத்தனையும் இவருக்கும் அத்துபடி.

    ராஜேஷை வைத்து நான் 'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படத்தை எடுத்த காலகட்டத்திலேயே அவருடைய உலக சினிமா பற்றிய அறிவு என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

    கமல்ஹாசனையும் ராஜேஷையும் இணைக்கும் ஒரு சின்னத் தகவல் ஒன்று உண்டு.

    'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படம் நான் எடுக்க நினைத்தபோது அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முற்றிலும் புதியவர்களையே போடுவது என்று தீர்மானித்திருந்தேன். எல்லாப் புதுமுக நடிக நடிகையர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். விகடகவி பாத்திரத்திற்கு சின்னஞ்சிறு இளைஞனான ராஜேஷைத்தான் நான் தேர்வு செய்து வைத்திருந்தேன்.

    படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு முன் ஒரு சின்ன யோசனை! மிகவும் நுணுக்கமான, அதே நேரத்தில் மிகக் கடினமானதுமான அந்த விகடகவி பாத்திரத்தில் முற்றிலும் புதியவரான ராஜேஷினால் ஈடு கொடுக்க முடியுமா என்கிற ஒரு சந்தேகம் எனக்கும் தயாரிப்பாளர் அரங்கண்ணல் அவர்களுக்கும் ஏற்பட்டது.

    இதைப்பற்றிப் பேசிக்கொண்டே காரில் ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்க அய்யங்கார் தெருவில் வந்து கொண்டிருந்தோம். இடது பிளாட்பாரத்தில் கமல்ஹாசன் தற்செயலாக நடந்து வந்து கொண்டிருந்தார். 'அரங்கேற்றம்' திரைப்படம் வெளியாகி விட்ட காலகட்டம் அது.

    கமலைப் பார்த்தவுடன் காரை நிறுத்தச் சொல்லி கமலைப் பார்த்து, எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?'' என்று நான் கேட்க, வீட்டுக்குத்தான்" என்று கமல் சொல்ல, அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு நேராக அரங்கண்ணல் அலுவலகத்திற்கு வந்தடைந்தோம்.

    அடுத்த பத்தாவது நிமிடத்தில் விகடகவி வேடத்திற்குப் பொருத்தமானவர் கமல்தான் என்று முடிவு எடுக்கப்பட்டது.

    இந்தக் கதாபாத்திரத்தை தெருவில் போகிறவன்கூட நன்றாகச் செய்துவிட முடியும் என்று நினைத்துத்தான் என்னைத் தெருவில் இருந்து பிடித்துக் கொண்டு வந்தீர்களா என்று கமல் அப்பொழுதே தமாஷாகச் சொன்னதும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

    ராஜேஷ் அவர்களைப் பிறகு வரவழைத்து இந்த மாற்றத்தைச் சொன்னவுடன் பெரிய அதிர்ச்சிக்கு அவர் உள்ளானார். எப்படியும் இந்த இழப்பைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு ஈடுகட்டுகிறேன் என்று ராஜேஷுக்கு உறுதியளித்து அனுப்பி வைத்தேன்.

    இந்த உறுதி 'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படத்தில் ஈடு செய்யப்பட்டது.

    இன்றைக்கு ராஜேஷ் அவர்கள் தமிழ்த் திரையுலகில் ஒரு சிறந்த நடிகராகவும் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபராகவும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    ராஜேஷ் அவர்களுடைய திரைக்கலைஞர்கள் பற்றிய தகவல்களும், திரை நுணுக்கங்கள் பற்றிய அறிவும் வருங்கால இளைஞர்களுக்கும், முக்கியமாக சினிமா மாணவர்களுக்கும் பெரும்பயன் தரும் விதமாகவும், அவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும் விதத்தில் இந்த நூலை ராஜேஷ் அவர்கள் திறம்பட எழுதியிருக்கிறார்.

    மிகப் பிரபலமான உலக நட்சத்திரங்களில் ஐவரின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூலில் கையாண்டிருக்கிறார். சுவையுடன் எழுதப்பட்ட இந்த நூலில் இதுவரை நாம் கேட்டறியாத தகவல்கள் ஏராளம்.

    சினிமா மாணவர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மாணவர்களும், வாழ்க்கையில் போராடி மாபெரும் வெற்றி பெற்ற இந்தக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து அதன் மூலம் நல்ல பயன் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

    ராஜேஷ் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன். இந்த நூல் மிகப்பெரிய வெற்றியைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    - பிரியமுடன்

    கே. பாலசந்தர்

    *****

    அர்த்தமுள்ள புத்தகம்!

    இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு பல நாட்கள் படித்ததைப் பற்றியே என் மனம் சுற்றிச்சுற்றி வந்தது. அர்த்தமுள்ள ஒரு நூலின் வெற்றி என்பது இதுதான்!

    இங்கே, விரிவாகவும், கூர்மையாகவும், வார்த்தைச் சிக்கனத்தோடும், உலகின் ஐந்து பெரிய அற்புதக் கலைஞர்கள் பற்றிய உணர்வுபூர்வமான வாழ்க்கைப் பதிவு விளக்கப்பட்டுள்ளது. இந்த ஐவரும் தங்கள் வாழ்வில் எத்தனை எளிய சோதனைகளையும், தோல்விகளையும், இழப்புக்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள், அவற்றையெல்லாம் தாண்டி முன்னேறி உலகம் மறக்கமுடியாத நடிகர்களாக தங்களையும் உயர்த்தி, தாங்கள் சார்ந்த சினிமாவையும் மிகப்பெரிய உயரத்திற்குக் கொண்டு சென்றார்கள் என்ற வியப்புக்குரிய இந்த விபரங்கள் எல்லாம் யாருக்காக? சினிமாவில் தனித்துவமான சாதனைகளைச் செய்யத் துடிப்பவர்களுக்கும், தாங்கள் 'சாதித்து' விட்டதாக தப்பான பிரமையில் இருப்பவர்களுக்கும்தான்!

    இப்படி அழுத்தமாகச் சொல்ல வைத்ததற்காக, திரு. ராஜேஷ் எடுத்துக் கொண்டுள்ள இப்புத்தக முயற்சிக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    இன்றைய தமிழ்ச் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில், அதுவும் யதார்த்தமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் மிகச்சில நடிர்களில் ஒருவர் திரு. ராஜேஷ்.

    நானறிய, திரு. ராஜேஷ் அவரது இளம்பிராயம் தொட்டு இன்று வரை, மிகச்சிறந்த புத்தகங்கள் பலவற்றையும் தேடித்தேடிக் காதலித்துப் படிப்பவர். இந்த வகைக் காதலில் அவர் என்றுமே சளைத்ததில்லை.

    அதே சமயம், தான் படித்து வியக்கும் பலதரப்பட்ட வரலாற்று வியப்புக்களை பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என ஆசைப்படும் நல்ல உள்ளம் அவருக்கு இருக்கிறது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் 'உலக நட்சத்திரங்கள்'. இந்த வகையில், திரு. ராஜேஷ் உயர்வகை நல்ல சினிமாவை எந்த அளவு உண்மையாகக் காதலிக்கிறார் என்பதை இந்நூல் புரிய வைக்கிறது.

    'உலக நட்சத்திரங்கள் ஐந்து பேர் மட்டும்தானா?' என்று நாம் அவசரப்பட்டுவிடக் கூடாது. இதர பெரிய உலக நட்சத்திரங்களைப் பற்றி இதுபோல விரிவாக எழுதப்பட வேண்டுமெனில், இதுபோன்ற புத்தகங்கள் அடுத்தடுத்த அவரால் எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை உணர முடிகிறது. அப்படி நாம் உணர்வதை திரு. ராஜேஷ் அவர்களிடம் நமது அன்பான கோரிக்கையாக வைக்க வேண்டும். திக்குத் தெரியாமல் திண்டாடும் திறமைசாலிகளான இளம் நடிகர்களுக்கு இந்நூல் மிகப்பெரிய வழிகாட்டி; ஆனால், குழந்தைகள் பொம்மை வைத்து விளையாட ஆசைப்பட்டு அடம்பிடிப்பது போல, சினிமாவில் நடிப்பதையும் கூட பலரும் அப்படி விளையாட்டுத்தனமாக நினைப்பது எப்பேர்ப்பட்ட தவறு என்பதையும் இந்த நூல் சொல்லாமல் சொல்கிறது. இந்த நூலின் தொடர்ச்சியாகப் பல நூல்களை திரு. ராஜேஷ் அடுத்தடுத்துத் தரவேண்டும் என்பதற்கு இதுவே காரணம்.

    உலக அளவில், ஒரு கலைஞன் தனது தனித்துவமான நடிப்பாற்றலைக் கொண்டு உலக மக்கள் அனைவரையும் வியக்க வைப்பது என்பது சாதாரணப்பட்டதல்ல. அப்பேர்ப்பட்ட அந்த நடிகனின் சாதனைக்கான காரணம், 'அவனது அதிர்ஷ்டம்' என்றோ, 'அவன் வசதி படைத்த, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன்' என்றோ எவராவது கூறினால், அது அருவருப்பான அறியாமையே. அப்படிப்பட்ட உன்னத நடிகர்களின் நடிப்புத் திறன் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் தங்களுக்கு வாய்க்கும் சாதகபாதகமான சந்தர்ப்ப சூழ்நிலைகள், தோல்விகள், அவமானங்கள், விபத்துக்கள், இழப்புக்கள் எல்லாவற்றையும் கடந்து கடைசியில் ஜெயித்து உலக அங்கீகாரம் பெறுவார்கள். ஆனால் 'வெற்றிகளை ஈட்டிவிட்டோம்' என்று திருப்திப்பட்டு அத்தோடு நின்றுவிட மாட்டார்கள். எவ்வளவுதான் உலகப்புகழ் பெற்றுவிட்டாலும், அவர்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். தங்களின் வெற்றிப் பயணத்தில் புதிய புதிய பரிமாணங்களை அடைய முயற்சிப்பார்கள். அத்தகைய மாபெரும் கலைஞர்களுக்கு 'மரணம் ஒன்றுதான் ஓய்வாக இருக்க முடியும்' என்பதை இந்த நூல் விவரிக்கும்போது, இதைப் படிக்கும் திரைப்படக் கலைஞர்கள் மட்டும் அல்ல, சமூகத்தின் பலதரப்பட்ட பாதைகளில் பயணிப்பவர்களும் தங்களின் வாழ்விற்கான ஆழமான அர்த்தங்களை உணர வழி உண்டு. ஆக, இந்நூல் எல்லோர்க்கும் பொதுவானது.

    'அற்புதமான கலைஞர்கள் எல்லாம் உலகிற்குச் சொந்தமானவர்கள் - பொதுவானவர்கள்' என்ற கருத்தில், இங்கே ஐந்து உலக நட்சத்திரங்களைப் பற்றிச் சொல்லும்போது, காரண நேர்த்தியோடு தமிழ் சினிமாவில் பெருமைக்குரிய நடிகர்களைப் பற்றியும் பொருத்தமான இடங்களில் ஒப்பிட்டு விவரிக்கும் அழகு எழுத்தாளனின் தனிச்சிறப்பு.

    திரு. ராஜேஷ் அவர்களுக்கு எனது நன்றி நிறைந்த பாராட்டுக்கள்.

    வாழ்க அவரது புத்தகக் காதல்!

    வாழ்க அவரது சினிமாக் காதல்!

    - பிரியமுடன்

    மகேந்திரன்

    *****

    கற்பதும் கற்பிப்பதுமாக...!

    என் உள்ளம் பெரிதும் மதிப்பதும், பெரிதும் ஆதங்கமாய் பாவப்படுவதும் இரு சமூகத்தினரைப் பற்றி! ஒருவர் நோய் தீர்க்கும் மருத்துவர். மற்றொருவர் அறிவூட்டும் ஆசிரியர்.

    எல்லோரையும் போல் இரவில் இல்லறத்தில் இன்புற எத்தனிக்கும் மருத்துவர் வீட்டுக்கதவு 'ஐயா காப்பாற்றுங்கள்' என்று தட்டப்படும் போது, மறுக்க முடியாது திறக்கப்படும். அப்படி ஒரு சகிப்புத் தன்மைக்கு, எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அது ஈடுசெய்யும் கைமாறாக நிறைவு பெறாது. அதேபோல்தான் ஆசிரியர் சமூகத்தின் சகிப்புத் தன்மையும்.

    ''வழிப்போக்கர்களுக்காக சாலையின் இருபுறமும் நிழல்தரும் மரங்களை அசோகர் நட்டார்" என்று வருட ஆரம்பத்தில் ஒரு ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்களுக்காகப் பாடம் எடுப்பார். வருட முடிவில் அந்த மாணவர்கள் மேல் வகுப்பிற்குப் போய்விட, மீண்டும் வரும் புதிய மாணவர்களுக்கு மீண்டும் அசோகர் மரங்களை நட்டார் என்று தன் ஆயுட்காலத்தில் பாதி வரை ஆசிரியர் மரம் நடும் பணியினைத் தொடர்ந்து கொண்டே இருப்பது... 'பொறுமைக்கு பூமாதேவி' என்பது எந்த அளவு பொருந்துகிறதோ இல்லையோ, ஆசிரியர்களின் வாழ்க்கை மட்டும் சாலப்பொருந்தும் கண்கூடு.

    இப்படி சகிப்புத் தன்மைக்கு சவாலான இத்தொழிலை சலிப்புடன் காலம் கடத்துவோர் சிலர் இருப்பினும், பெரும்பாலானோர் நாட்டின் சிறப்பான எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் மிக முக்கிய பொறுப்பு நம்முடையது என்றே லயித்து ரசித்து உழைத்து வருகின்றனர். அதனால்தான் எனது திரைப்படங்களில் நான் ஏற்று நடித்து சில ஆசிரியர் கதாபாத்திரங்களுக்கு என் மனதில் நிலைத்த சில நல்லாசிரியர்களின் இயற்பெயரையே சூட்டி மகிழ்ந்து பெருமைப்பட்டேன். பெருமைப்படுத்துவதை இன்றளவும் கடமையாகத் தொடர்கிறேன். அப்படி ஒரு மரியாதைக்குரிய ஆசிரியர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் நண்பர் ராஜேஷ் அவர்கள். அவர் பல வருட காலம் செவ்வனே அப்பணியை ஆற்றிவிட்டு, இன்று திரைக்கு வந்து புதிய பல தொழில்களில் வெற்றி பெற்ற வண்ணம் சிறந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். இருப்பினும், இன்னும் ஆசிரியர் பணியை தொடர்வதில் அவருக்கு அலாதியான பிரியமும் மனசாந்தியும் கிட்டுகிறது என்பதற்கு சான்றே 'உலக நட்சத்திரங்கள்' என்று அவர் எழுதிய இந்த நன்னூல் ஆகும்.

    ஆசிரியராக அவர் கற்பித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் ஒரு நல்ல மாணவனாகவும் அவர் திகழ்கிறார் என்பதும் அதை நாளைய இளைய சமுதாயத்திற்கு கற்பிக்க விரும்புகிறார் என்பதும், இப்புத்தகத்தில் உள்ளடங்கிய ஏராளமான செய்தித் திரட்டுகள் சான்று கூறும்.

    லட்சிய வெறிகொண்ட நம் முன்னேற்றப் பாதையில், தடைப்படுத்தும் பல விஷயங்களை சாமர்த்தியமாக தாங்கிக்கொண்டு தாண்டிப்போவது ஒரு ரகம். தாண்டும் பொழுதே பின்னால் வர உள்ள அடுத்த சந்ததிக்கு, அப்படித் தடைப்படுத்திய இடங்களை அடையாளக் குறியீடிட்டு அவனது முன்னேற்றத்தை சுலபமாக்குவது மற்றொரு ரகம்! அதே உயர்வான ரகம்! உண்மையான சாதனையாளனின் பொது நோக்கான ரகம்!

    உழைப்பால் உயர்ந்தோர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் மூலம் படிப்பவர்கள் மனதில் தன்னம்பிக்கை எனும் வீரியமுள்ள விதையை ராஜேஷ் ஊன்றியுள்ளார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    கற்பித்தல் எனும் சமூகப்பணியை செய்து வந்த நண்பர் ராஜேஷ், இன்னும் கற்றுக்கொண்டும், கற்பித்துக்கொண்டும் மென்மேலும் சிறப்புற இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

    - அன்புடன் உங்கள்

    கே. பாக்யராஜ்

    *****

    பாராட்டுரை

    சிவகுமார்

    தியாகராய நகர், சென்னை - 17

    தமிழ்த்திரைப்படக் கலைஞர்களில் தொடர்ந்து படிக்கின்ற பழக்கம் உள்ளவர்கள் மிகவும் சொற்பம். நண்பர் ராஜேஷ் சிறுவயது முதலே படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர். பள்ளி ஆசிரியராகவும் இருந்ததனால் கூடுதல் ஆர்வம் படிப்பதில் அவருக்கு ஏற்பட்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை.

    ஹாலிவுட் திரையுலகம், வரலாறு படைத்த நிறுவனங்கள், சரித்திரம் படைத்த இயக்குநர்கள், ஒரே படத்தில் உலகப்புகழ்பெற்ற நடிகர், நடிகையர், இசையமைப்பாளர் வரலாறுகளைக் கரைத்துக் குடித்திருப்பவர்.

    இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் ஹாலிவுட் படங்களின் வளர்ச்சி, வீழ்ச்சி, தொலைக்காட்சிகளின் தாக்கம், ஐரோப்பிய படைப்பாளிகளின் படைப்புகள், ஹாலிவுட் திரையுலகை எப்படி செயலிழக்கச் செய்தன என்பனவற்றை அவர் பேச ஆரம்பித்தால் நமக்கு பசியே மறந்துபோகும்.

    சமீபத்தில் கிளிண்ட் ஈஸ்ட்வுட், மார்லன் பிராண்டோ, மர்லின் மன்றோ, ஆல்பசினோ, ரொனால்டு ரீகன் ஆகிய ஐந்து ஹாலிவுட் கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்.

    தமிழகத்து கதாநாயகர்கள் ஒரு வேளை முழுச்சாப்பாடு கிடைக்காமல் நாடகக் குழுக்களில் கஷ்டப்பட்டு வாழ்ந்த கதையெல்லாம் நாம் படித்திருக்கிறோம்.

    பத்து வயது சிவாஜி கொல்லங்கோட்டிலிருந்து பொள்ளாச்சிக்கு 25 மைல் தூரம் நடந்தே வந்த கதையும், பொள்ளாச்சியிலிருந்து திருச்சி சென்று மூன்று ஆண்டுகளாகப் பிரிந்த தாயாரைப் பார்க்க கையில் இருந்த காசு போதாமல் கோவை அருகே போத்தனூர் சென்று அங்கு ஒரு நாடகத்தில் நடித்து வந்த காசையும் சேர்த்து பஸ் பிடித்து திருச்சி போனார் என்று படித்திருக்கிறோம்.

    திண்டுக்கல்லில் நாடகக் குழு முகாமிட்டிருந்தபோது ஒரு வேளையாவது நடிகர்கள் சாப்பிடட்டும் என்று 10 படி அரிசி வாங்கி வந்து சாம்பார் சாதம் போல ஒன்றை வானலியில் வேக வைத்தபோது இன்னும் கொஞ்சம் வேக வேண்டும் என்று அறிந்து இரண்டு லிட்டர் தண்ணீர் உள்ளே ஊற்றி எரித்திருக்கிறார்கள். வெந்தபின்பு இறக்கி வைத்தால் ஒரே கெரசின் வாடை. அவசரத்தில் ஊற்றியது 2 லிட்டர் தண்ணீர் இல்லை சீமை எண்ணெய். அன்றிரவும் எல்லோரும் பட்டினி.

    நாடகமில்லாத நாட்களில் திருட்டுத்தனமாக கம்பெனி வீட்டு சுவரேறிக் குதித்து 2 1/2 அணா டிக்கெட்டில் பானுமதி நடித்த 'சொர்க்க சீமா' படம் பார்த்தபோது பானுமதியின் 'பாவுரமா' பாடல் கேட்டு, உருகி, சாவதற்குள் இந்த அம்மாவோடு ஒரு படத்தில் நடிக்க முடியுமா என்று சிவாஜி ஏங்கிய நாட்கள் உண்டு. எம்.ஆர்.ராதா நாடகக் குழுவில் நடித்து வந்த சிவாஜி அன்றைய தினம் அதே மேடையில் நாட்டியமாடி முடித்த பத்மினியின் ஆடை ஆபரணங்களை மடித்துக் கொடுத்துவிட்டு உங்களோட ஒரு படத்திலாவது நடிக்கணும்மா என்று பத்மினியிடம் கூறியவை வரலாறு.

    வால்டாக்ஸ் ரோடு வீட்டில் துணை நடிகராக தங்கியிருந்த எம்.ஜி.ஆர் தினமும் இரவில் தன் உடைமையாக வைத்திருந்த ஒரு ஜிப்பா, பனியன், வேஷ்டி, ஜட்டியைத் துவைத்துக் காயப்போட்டு காலையில் செம்புக்குள் சுடு கறித்துண்டைப் போட்டு இஸ்திரி போட்டு அணிந்துகொண்டு நியூடோன் ஸ்டுடியோ வரை நடந்துபோய் வாய்ப்புக் கேட்பார்.

    'ராஜா மாதிரி இருக்கே, உனக்கு எப்படி சின்ன வேஷம் தர்றது ராமச்சந்திரா' என்று திருப்பி அனுப்பி விடுவார்கள்.

    'ஆசானே மாசம் 400 ரூபாய் பணம் தர்றாங்க. அந்தச் சம்பளத்தை அப்படியே உங்ககிட்ட கொடுத்திடறேன். படத்தில் ஒரே ஒரு குளோசப் ஷாட் போடுங்க ஆசானே. லாங் ஷாட்ல கூட்டத்தோட கூட்டமா நிக்கிறதால முகம் சரியா தெரிய மாட்டேங்கிறது' என்று டைரக்டர் சுந்தர்லால் நட்கர்னியிடம் எம்.ஜி.ஆர் கெஞ்ச, 'ராமச்சந்திரா காசு வாங்கிகிட்டுதான் குளோசப் போடணுமா? நானே போடுவேன். ஆனா உனக்கு அனுமார் மூஞ்சி, தெத்துப் பல்லு, குளோசப்ல காட்டுனா ஜனங்க சிரிச்சிடுவாங்கப்பா' என்று அவர் சொன்ன சம்பவம்.

    நயாகரா நகரத்தின் ஒரு நாள் மேயராக சிவாஜிக்கு மரியாதை செய்த நிகழ்ச்சி.

    தன் கதாநாயகியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன எம்.ஜி.ஆர் ஒரு லட்சம் ரூபாய்க்கு வைரக் கற்களை வாங்கி நாயகியின் தலையில் கனகாபிஷேகம் செய்த சம்பவம், என்று நமக்கு எப்படி சோக வரலாறுகளும், சாதனை வரலாறுகளும் இருக்கின்றனவோ அவற்றிற்கு இம்மியும் குறையாமல் ஹாலிவுட் நட்சத்திரங்கள் வறுமையில் பிறந்து தாய், தகப்பனைப் பிரிந்து, எல்லாவித கூலி வேலையும் செய்து, நிறைய அவமானங்கள் பட்டு, காதலித்து, மணந்து, விவாகரத்து செய்து, தற்கொலை செய்து உலகப் புகழ்பெற்று சாதனை புரிந்திருக்கிறார்கள் என்பதை இந்த நூலைப் படித்தால் புரிந்து கொள்ள முடியும்.

    நீங்கள் அவற்றைப் படித்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை இங்கே குறிப்பிடாமல் தவிர்க்கிறேன்.

    உலக சினிமாவை, கலைஞர்களை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது நிச்சயம் விருந்தாக அமையும்.

    அன்புடன்

    சிவகுமார்

    *****

    சினிமா...

    வியாபாரமாக அதில் முதலீடு செய்யப்படும் பொருளாதாரம் நேரிடையாக, மறைமுகமாக ஈடுபட்டிருக்கின்ற தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உள்வாங்கியிருக்கும் தொழில்நுட்பம், விஞ்ஞானம், ஈட்டுகின்ற பணம், சமூகத்தின் மீது செலுத்துகின்ற ஆதிக்கம்... இதையெல்லாம் வைத்து கணக்கிடும் போது தமிழில் சினிமா சார்ந்த புத்தகங்கள் மிக மிகக் குறைவானதாகவே இருக்கிறது.

    ராஜேஷ்... தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்று நான் கருதும் காலகட்டத்தில் அறிமுகமாகி பல அர்த்தமுள்ள படங்களில் தோன்றியவர். அவர்மீது அளவு கடந்த மரியாதை எனக்குண்டு. கொஞ்சம் பொறாமையும்கூட.

    நடிக்க வருவதற்கு முன் அவர் ஆசிரியர் வேலை செய்து வந்ததாய் சொல்லிக் கொள்வதுண்டு. நான் அதை நம்பியதில்லை. ஏனென்றால் வழக்கமாய் ஆசிரியர்களுக்கென வரையறுக்கப்பட்ட குணங்கள் அவரிடம் ஒன்றுகூட கண்டதில்லை.

    நான் அவரைக் கண்காணித்தவரையில் அவர் ஒரு மாணவராகவே தெரிகிறார். எப்போதும் புதுப்புது கருத்துக்களை தேடிக் கண்டுபிடித்து அதை தெரிந்து கொள்வது, பின் புரிந்து கொள்வது, அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது.

    ஞானத்தைப் பகிர்ந்து கொள்தல் எவ்வளவு மேன்மையான குணம். எத்தனை பேருக்கு அக்குணம் வாய்த்திருக்கிறது. தெரிந்தவற்றை தனக்குள்ளே பொத்தி வைத்துக்கொள்ளும் கருமித்தனம் அவருக்கு இல்லை. கம்யுனிஸம் பற்றி அவருடைய எளிய விளக்குதலில் கேட்கவேண்டும். சட்டென்று புரிந்து போகும்.

    சினிமா... இலக்கணமற்ற, கற்றல் தேவையற்ற ஒரு திறமை. அது தானாய் வருவது என்று நம்புகின்ற தமிழ்ச்சூழலில்... ராஜேஷின் சினிமா பற்றிய அறிதலும், கற்றலும் உண்மையில் மெச்சத்தக்கவை.

    சினிமா பற்றிய கோட்பாடுகளை, கருத்துக்களை, விவரங்களை தேடிக் கண்டுபிடித்து படிக்கின்ற அவர் வேட்கை அலாதியானது.

    சினிமா பற்றி மட்டுமல்ல... எக்கருத்தானாலும் சரி... விவாதங்களின் போது அவருக்குத் தெரியாத ஒரு கருத்து

    Enjoying the preview?
    Page 1 of 1