Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panthayam Oru Viral
Panthayam Oru Viral
Panthayam Oru Viral
Ebook242 pages1 hour

Panthayam Oru Viral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580126704496
Panthayam Oru Viral

Read more from Ra. Ki. Rangarajan

Related to Panthayam Oru Viral

Related ebooks

Reviews for Panthayam Oru Viral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panthayam Oru Viral - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    பந்தயம் ஒரு விரல்

    Panthayam Oru Viral

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளக்கம்

    1. பந்தயம்: ஒரு விரல்

    2. இப்படியும் ஒரு பந்தயம்!

    3. கண்ணால் கண்ட சாட்சி

    4. அப்பாவின் ஆசை!

    5. ஒரே ஒரு பென்சில்

    6. விடிந்தால் சிரச்சேதம்

    7. சீனத்துச் சிற்பம்

    8. அர்த்தமுள்ள புன்னகை

    9. நகர மறுத்த தோட்டா!

    10. ஓசை

    11. நஷ்ட ஈடு!

    12. பயங்கர எறும்புகள்

    1. பந்தயம் ஒரு விரல்

    ரோடுல் டால்

    ஜமைக்காவில் ஓர் உல்லாச ஓட்டலில் தங்கியிருந்தேன். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. ட்ரிங்க் சாப்பிட்டேன். நீச்சல் குளத்தினருகே போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நடந்தேன். இதமான மாலை வெய்யிலில், சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருப்பது சுகமாக இருக்கும்.

    கையில் ஒரு கிளாசுடன் தோட்டத்தை அடைந்தேன். சிறிய அழகான தோட்டம். ஈச்சை மரங்களின் கீற்றுகள் காற்றில் சரசரவென்று சப்தித்துக் கொண்டிருந்தன. இலைகளின் கீழே பழுப்பு நிறக் காய்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கின.

    நீச்சல் குளத்தைச் சுற்றிலும் நிறையவே கான்வஸ் நாற்காலிகள் இருந்தன. கரையில் நீச்சல் உடையுடன் ஆண்களும், பெண்களும் வெய்யிலில் படுத்திருந்தார்கள். வண்ண வண்ணமான பெரிய குடைகள் விரிக்கப் பட்டிருந்தன. குளத்தில் நாலைந்து பெண்களும் பத்துப் பன்னிரண்டு ஆண்களும் தொப் தொப்பென்று தண்ணீரை அடித்துக் கொண்டும், பெரிய ரப்பர் பத்தைத் தூக்கிப் போட்டுக் கொண்டும் விளையாடினார்கள்.

    பெண்கள் இங்கிலீஷ்காரிகள் என்று தோன்றியது. அவன்கள் அமெரிக்கர்கள் போலிருந்தார்கள். அன்று துறைமுகத்தில் ஒரு அமெரிக்கக் கப்பல் வந்திருந்தது. அதில் மாலுமிப் பயிற்சி பெறும் மாணவர்கள் அவர்கள் என்று ஊகித்தேன்.

    ஒரு பெரிய மஞ்சள் குடையின் கீழே நான்கு காலி நாற்காலிகள் இருந்தன. அவற்றில் ஒன்றில் சாய்ந்து கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன் அந்தக் குள்ள ஆசாமியை, நீச்சல் குளத்தின் ஓரமாக விறுவிறுவென்று நடந்து வந்து கொண்டிருந்தான் அவன். நடுத்தர வயது இருக்கும். வெள்ளை வெளேரென்று உயர்ந்த ரக உடை அணிந்திருந்தான். தலையில் ஒரு பெரிய பனாமா தொப்பி அவன் நடையில் ஒரு குதி இருந்தது. ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே வந்தவன் என்னிடம் வந்ததும் புன்னகை செய்தாள் தானும் பதிலுக்குப் புன்னகை செய்தேன்.

    ஒரு நாற்காலியைக் காட்டி ப்ளீஸ், இங்கே உட்காரலாமா? என்றான். அவனுடைய ஆங்கிலப் பேச்சு கொச்சையாக இருந்தது. இங்கிலீஷ் பேசுகிற நாட்டைச் சேர்ந்தவனல்ல என்று ஓ. தாராளமாய் என்றேன். உட்கார்ந்தவன். சாயந்தர வேளைகள் ரொம்ப இனிமையாக இருக்கிறது. ஆனால் இங்கே ஜமைக் காவில் எல்லா மாலை வேளையுமே ஜோராய்த்தான் இருக்கும். இல்லையா?" என்றான்.

    அருகில் அவனைக் கவனித்த போது ஐம்பது வயது இருக்குமென்று தோன்றியது. பூர்விகம் இத்தாலியோ, எல்.பயினோ தெரியவில்லை. ஆனால் மெக்ஸிகோ, பிரேசில் போன்ற தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றில் குடியேறியவன் என்பது நிச்சயம்,

    அதோ குளிக்கிறார்களே, யார் அவர்கள் நம் ஓட்டலில் தங்கி இருக்கிறவர்கள் மாதிரி தெரியவில்லையே? என்றான்.

    மாலுரிப் பயிற்சிக்காக வந்திருக்கும் அமெரிக்க இளைஞர்கள் என்றேன்.

    அமெரிக்கர்கள் தான் அப்படிச் சத்தம் போடுவார்கள் என்றாள் தொப்பிக்காரன்.

    குளித்துக் கொண்டிருந்தவர்களில் பலர் வெளியே வந்து விட்டார்கள் ஒருவன் எனருகில் வந்து, இந்த நாற்காலிகளில் யாரும் இல்லையே? என்று கேட்டான்

    அவனுடன் அந்த இங்கிலீஷ் பெண்களில் ஒருத்தி வந்திருந்தாள், யாரும் இல்லை, உட்காரலாம் என்றேன்.

    தாங்க்ஸ், என்று கூறி உட்கார்ந்தான். கையில் ஒரு டவலை சுருட்டி வைத்திருந்தான் அதைப் பிரித்தான். ஒரு சிகரெட் பாக்கெட்டும் லைட்டரும் எடுத்தான். என்னிடம் பாக்கெட்டை! நீட்ட, நான் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டேன். அந்தப் பெண் ஒன்று எடுத்துக் கொண்டாள்.

    தொப்பிக்காரன், ''வேண்டாம். என்னிடம் சுருட்டு. இருக்கிறது." என்று சொல்லிச் சட்டைப் பையிலிருந்து ஒரு சுருட்டை எடுத்துக்கொண்டான். சின்னக் கத்தரிக்கோலால்! சுருட்டின் முனையை வெட்டினான்!

    இதோ என்ற இளைஞன் தனது சிகரெட் லைட்டரை அவனிடம் நீட்டினான்,

    இந்தக் காற்றுக்கு அது நிற்காது. அணைந்துவிடும் என்றான் தொப்பிக்காரன்.

    அணையாது. எரியும், என்றான் அமெரிக்கன். பதினெட்டு, பத்தொன்பது வயதுதான் இருக்கும் அவனுக்கு. எனவே பையன் என்றே சொல்லலாம்.

    தொப்பிக்காரன், இன்னும் பற்ற வைக்காதிருந்த சுருட்டை வாயிலிருந்து எடுத்துவிட்டு, தலையைச் சாய்த்துக் கோணலாக அந்தப் பையனைப் பார்த்தான். "எப்பவுமே எரியும் என்கிறாய்?

    நிச்சயமாய். க்ளிக் பண்ணியதும் எரியும். ஒரு தடவை கூடத் தவறியது கிடையாது.

    தொப்பிக்காரனின் சாய்ந்த தலை சாய்ந்தபடியே இருந்தது. பையனைக் கூர்ந்து பார்த்து, அதாவது, உன்னோட லைட்டர் எப்பவுமே எரியும் என்கிறாய்? என்று மறுபடி கேட்டான்.

    ஆமாம், என்றான் அந்தப் பையன் விடாப்பிடியாக. லைட்டரை நீட்டிப் பிடித்துக் கொண்டு, க்ளிக் பண்ணிய உடனே எரியும். ஒரு தடவைகூட எரியாமல் இருந்ததில்லை, என்று தன் சிகரெட் லைட்டரைப் பற்றிப் பீற்றிக்கொண்டான்.

    ஒரு நிமிஷம், என்று கூறி டிராபிக் கான்ஸ்டபிள் மாதிரி உள்ளங்கையை உயர்த்தினான் தொப்பிக்காரன். பையனை விசித்திரமாகப் பார்த்துவிட்டு, புன்சிரிப்புடன், இந்த லைட்டர் எரிவதைப் பற்றிப் பந்தயம் கட்டலாமா? என்றான்.

    ஓ, தாராளமாய்க் கட்டலாம் என்றான் பையன்.

    உனக்குப் பந்தயம் கட்டுவதென்றால் பிடிக்குமா?

    எப்பவும் பிடிக்கும்.

    தொப்பிக்காரன் தன் சுருட்டைப் பார்த்தவாறு சிறிது யோசனையில் ஆழ்ந்தான். அவன் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. இந்தப் பையனை மாட்ட வைப்பதற்காக ஏதோ தந்திரம் செய்யப் பார்க்கிறான் என்று தோன்றியது.

    தலையை நிமிர்த்தியவன் மெதுவாகச் சொன்னான்: நல்லது. எனக்கும் பந்தயம் கட்டுவதென்றால் ரொம்பப் பிடிக்கும். அருமையான பந்தயமாக வைப்போம். பிரமாதமான, பெரிய பந்தயம்! என்ன?

    இருங்கள், இருங்கள்,'' என்றான் பையன். பெரிய தொகையெல்லாம் என்னால் பந்தயம் வைக்க முடியாது. அரை டாலர், ஒரு டாலர் அவ்வளவுதான். இந்த ஊரில் டாலரா, ஷில்லிங்கா? ஏதோ அந்த மாதிரி சின்னத் தொகைதான் கட்ட முடியும்."

    'ஊகூம்' என்கிற மாதிரி தொப்பிக்காரன் தலையை ஆட்டினான். சும்மா தமாஷுக்குத் தானே பந்தயம் கட்டுகிறோம்? நான் சொல்வதைக் கேள். ஓட்டலில் என் அறைக்குப் போவோம். அங்கே காற்று எதுவும் அடிக்காது. நீ உன் லைட்டரைச் சேர்ந்தாற்போல் பத்து தடவை ஏற்றிக் காட்ட வேண்டும். ஒரு தடவை கூட எரியாமல் இருக்கக் கூடாது. பத்துத் தடவையும் எரியணும், சேர்ந்தாற்போல்.

    ஓ! நிச்சயமாக முடியும்! என்றான் பையன்.

    ஆல்ரைட். அப்போ நீ பந்தயத்துக்குத் தயார்?

    கண்டிப்பாய். ஒரு டாலர் பந்தயம் கட்டுகிறேன், என்றான் பையன்.

    என் பங்குக்கு நான் பெரிய பந்தயமாகவே வைக்கிறேன். ஏனென்றால் நான் பணக்காரன். தாராள மனசு உள்ளவன். ஓட்டல் வாசலில் என்னுடைய பெரிய கார் இருக்கிறது. கேடிலாக் கார். உங்கள் நாட்டிலே செய்தது. அதைப் பந்தயம் வைக்கிறேன்.

    அம்மாடியோ! என்ற பையன் நாற்காலியில் சாய்ந்து கொண்டு வாய்விட்டுச் சிரித்தான். என்னாலெல்லாம் அவ்வளவு பெரிய சமாச்சாரம் பந்தயம் கட்ட முடியாது!

    இதோ பார், பத்தே பத்துத் தடவை- சேர்ந்தாற் போல் உன் லைட்டரை ஏற்றிக் காட்டுகிறாய். அவ்வளவுதான். சொகுசான கேடிலாக் கார் கிடைக்கும்! கேடிலாக் கார் என்றால் உனக்குப் பிடிக்கும் இல்லையா?

    ஏன் பிடிக்காமல்? நன்றாய்ப் பிடிக்கும், என்று சிரித்தான் பையன்.

    அப்புறம் என்ன? நான் என் கேடிலாக் காரைப் பந்தயம் வைக்கிறேன்.

    நான்? நான் என்ன வைப்பது? என்றான் பையன்.

    தொப்பிக்காரன் இன்னமும் தன் சுருட்டைப் பற்ற வைக்கவில்லை. அதன் மீதிருந்த சிவப்பு லேபிளைக் கவனமாக, ஜாக்கிரதையாகப் பிரித்து எறிந்து கொண்டே, உன்னால் முடியாத எதையும் பந்தயம் வைக்கும்படி நான் சொல்ல மாட்டேன் என்றான்.

    சரி, என்னதான் பந்தயம் வைக்கட்டும்?

    "சுலபமான பந்தயம் தான்.

    நல்லது சொல்லுங்கள்.

    ரொம்பச் சின்ன சமாச்சாரம். உன்னால் கொடுக்கக் கூடியது. ஒரு வேளை நீ தோற்றுப் போனால்கூட அது ஒரு பெரிய இழப்பாக இருக்காது, என்ன?

    என்னவென்று சொல்லுங்கள்.

    உன் இடது கை சுண்டு விரல்.

    என்ன? என்று கூவி விட்டான் பையன். அதுவரை அவன் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து விட்டது.

    சொன்னது கேட்கவில்லையா? பந்தயத்தில் ஜெயித்தால் நீ என் கேடிலாக் காரை எடுத்துக் கொள்ளலாம். தோற்றால் உன் சுண்டு விரலை நான் எடுத்துக் கொள்வேன். ஸிம்பிள்!

    புரியவில்லையே? சுண்டு விரலை எடுத்துக் கொள்வதென்றால்?

    அதை வெட்டி எடுத்துக் கொள்வேன்!

    ங்கம்மாடி! என்று அதிர்ந்து போனான் பையன். இந்த மாதிரி கிறுக்குத்தனமான பந்தயமெல்லாம் எனக்கு வேண்டாம். ஒரு டாலர், அரை டாலர் என்றால் சரி. கட்டுகிறேன்.

    'ஹூம்! அவ்வளவுதானா!' என்கிற மாதிரி தோள்களைக் குலுக்கிக் கொண்டான் தொப்பிக்காரன். க்ளிக் பண்ணியவுடனே தவறாமல் எரியும் என்று பிரமாதமாய் ஜம்பம் அடித்துக் கொள்கிறாய். ஆனால் பந்தயம் கட்டு என்றால் மாட்டேன் என்கிறாய். சரி, விடு! என்று சொல்லிவிட்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.

    அந்தப் பையன் மெளனமாக நீச்சல் குளத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்..

    தான் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொள்ளவில்லை என்பது சட்டென்று நினைவு வந்தது போலும். லைட்டரைத் தட்டினான். கைகளைக் குவித்துக் கொண்டதால், காற்றில் அணையவில்லை. மெல்லிய மஞ்சள் ஒளியில் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

    எனக்கும் என்றேன்.

    ஸாரி, மறந்துவிட்டேன், என்று கூறி எழுந்து வந்து என் சிகரெட்டையும் பற்ற வைத்தான். நான் தாங்க் யூ என்றதும் தன் நாற்காலிக்குப் போய் உட்கார்ந்து கொண்டான்.

    இங்கே உனக்கு நன்றாய்ப் பொழுது போகிறதா? என்று அவனைக் கேட்டேன்.

    ஓ, நன்றாய் என்றான்.

    சிறிது நேரம் மௌனம் நிலவியது.

    அந்தத் தொப்பிக்காரன் ஒரு பித்துக்குளித்தனமான பந்தயத்தைச் சொல்லி இந்தப் பையனின் மனசைச் சஞ்சலப்படுத்தி விட்டான் என்று தெரிந்தது. அசையாமல் உட்கார்ந்திருந்த போதிலும் அவனுக்குள் ஒரு தவிப்பு, வேகமாக எழுந்து வேகமாக வளர்வதைக் கண்டேன். நாற்காலியில் இருப்புக் கொள்ளாமல் அசைந்து கொண்டிருந்தான். பிடரியைத் தேய்த்து விட்டுக் கொண்டான். முழங்கால்களின் மீது இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு தாளம் போட்டான்.

    கடைசியில் தொப்பிக்காரனிடம், உங்கள் பந்தயம் என்ன, மறுபடி சொல்லுங்கள். ஓட்டலில் உங்கள் அறைக்குப் போகிறோம். நான் சேர்ந்தாற்போல் பத்துத் தடவை என் லைட்டரை ஏற்றிக் காட்ட வேண்டும். காட்டி விட்டால் உங்கள் கேடிலாக் கார் எனக்குச் சொந்தம். ஒருமுறை எரியத் தவறினாலும் நான் என் இடது கை சுண்டு விரலை உங்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்படித்தானே? என்றான்.

    அதே தான். ஆனால் நீ தான் பந்தயத்துக்குப் பயப்படுகிறாய்? என்று தொப்பிக்காரன் சீண்டினான்.

    நான் தோற்றால் என்ன செய்யணும்? விரலை நீட்டுவேன். நீ வெட்டுவாய் இல்லையா? என்றான் பையன்.

    அது சரிப்படாது. நான் வெட்டப் போகும் சமயம் நீ கையை இழுத்துக் கொண்டு விடுவாய். அதனால் பந்தயம் ஆரம்பிப்பதற்கு முன்னால் உன்னோட ஒரு கையை மேஜையில் கட்டி வைத்துவிட்டு, கையில் கத்தியோடு நிற்பேன். லைட்டர் எரியத் தவறினால் உடனே விரலை வெட்டி விடுவேன்.

    உங்கள் கார் புதுசா, பழசா? என்றான் பையன்.

    புத்தம் புதுசு. போன வருஷம் தான் வாங்கினேன். ஆனால் அதைப் பற்றி என்ன பேச்சு? நீ தான் பந்தயம் கட்டத் தயாராயில்லையே? அமெரிக்கர்களே இப்படித்தான். பந்தயம் என்றதும் ஜகா வாங்கி விடுவார்கள்.

    அந்தப் பையன் அவனுடன் வந்த இங்கிலீஷ் பெண்ணைப் பார்த்தான். பிறகு என்னைப் பார்த்தான். சரி, பந்தயம் கட்டுகிறேன், என்றான்.

    சபாஷ்! என்று தொப்பிக்காரன் தன் கைகளைத் தட்டிப் பாராட்டினான். என்னைப் பார்த்து, நீங்கள்... என்னவோ சொல்வார்களே, என்ன அது? ரெஃபரி, நடுவர், நீங்கள் நடுவராக இருக்க வேண்டும், என்றான்.

    இது அபத்தமான பந்தயம். எனக்குப் பிடிக்கவில்லை, என்றேன்.

    எனக்கும்தான், என்று முதல் முறையாக அந்த இங்கிலீஷ் பெண் பேசினாள். முட்டாள்தனமான, பைத்தியக்காரத்தனமான பந்தயம்!

    நான் தொப்பிக்காரனைக் கேட்டேன்:

    இந்தப் பையன் பந்தயத்தில் தோற்றால் விரலை வெட்டுவேன் என்கிறீர்களே, சீரியஸாகத்தான் சொல்கிறீர்களா?

    சீரியஸாகத்தான் சொல்கிறேன். இவன் ஜெயித்தால் கேடிலாக் கார் தருகிறேன் என்று சொன்னதும் சீரியஸாகத்தான். சரி, வாருங்கள், என் ரூமுக்குப் போகலாம்,'' என்று தொப்பிக்காரன் எழுந்து கொண்டான். நீ டிரெஸ் மாற்றிக் கொள்ள வேண்டுமா?" என்று பையனைக் கேட்டான்.

    வேண்டாம், இப்படியே வருகிறேன், என்ற பையன், என்னிடம், ''நீங்கள் நடுவராக வந்தால் நன்றாயிருக்கும்," என்றான்.

    சரி, வருகிறேன். ஆனால் இந்தப் பந்தயம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை, என்றேன்.

    நீயும் வா, சும்மா வேடிக்கை தானே? என்று அந்தப் பெண்ணையும் அவன் அழைத்தான், அவளும் வந்தாள்.

    தோட்டத்தின் வழியே எங்களை அழைத்துச் சென்றான் தொப்பிக்காரன். இப்போது அவனிடம் ஒரு குஷி ஏற்பட்டிருந்தது..

    ஓட்டலுக்குள் நுழையும்போது, வாசலில் நின்றிருந்த பச்சைநிறக் கேடிலாக் காரைக் காட்டினான். அதுதான் என் கார். உனக்குப் பிடித்திருக்கிறதா?

    ஓ, நன்றாய் இருக்கிறது, என்றான் பையன்.

    பந்தயத்தில் ஜெயித்து அதை எடுத்துக்கொள் என்று கூறியபடி தொப்பிக்காரன் தன் அறைக்குச் செல்ல, நாங்களும் பின்தொடர்ந்தோம்.

    முதலில் கொஞ்சம் ட்ரிங்க் சாப்பிடுவோம், என்று சொல்லி எல்லாருக்கும் ஊற்றிக் கொடுத்தான். பிறகு பஸ்ஸரை அழுத்தி, ஓட்டல் வேலைக்காரியை வரவழைத்தான். பர்ஸிலிருந்து ஒரு நோட்டு எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு, இது உனக்கு இனாம். நீ போய் மூன்று பொருள் கொண்டு வர வேண்டும். ஒரு சுத்தி, நாலைந்து ஆணி, ஒரு கத்தி, சமையலறையில் கேட்டால் கொடுப்பார்கள்- சின்னக் கசாப்புக் கத்தி. என்ன?

    கசாப்புக் கத்தியா? என்று திடுக்கிட்டாள் வேலைக்காரி.

    தொப்பிக்காரன் மறுபடியும் அழுத்தமாக ஓட்டல் வேலைக்காரியிடம் சொன்னான்: "ஆமாம், கசாப்புக் கத்தி தான் வேண்டும். சமையலறையில் வைத்திருப்பார்களே, அதைக் கேட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1