Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vana Maaligai
Vana Maaligai
Vana Maaligai
Ebook143 pages1 hour

Vana Maaligai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜனார்த்தனும், விதுபாலாவும் அமைதியான சூழலை தேடி அவர்களுக்கு சொந்தமான வன மாளிகைக்கு செல்கின்றனர். அங்கு தன் பள்ளி தோழி கஸ்தூரியை விதுபாலா சந்திக்கிறாள். அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களை விருந்துக்கு அழைக்கின்றனர். அங்கு அவர்களையும் அவர்களின் குடும்ப சூழ்நிலையையும் பற்றி அறிந்து கொள்கின்றனர். பின், அம்மாளிகையில் நடந்த மர்மங்கள் என்ன? அம்மர்மத்திற்கான தீர்வுகள் என்ன? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateMay 4, 2024
ISBN6580109911064
Vana Maaligai

Read more from Kanchana Jeyathilagar

Related to Vana Maaligai

Related ebooks

Reviews for Vana Maaligai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vana Maaligai - Kanchana Jeyathilagar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வன மாளிகை

    Vana Maaligai

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    அந்த ஐந்து நட்சத்திர விடுதி உணவகத்தின் இதமான ஒளி, மெல்லிய இசைக்கு ஏற்ப, அங்கே கூடியிருந்தவர்கள் மிக மிருதுவாகவே பேசினார்கள்.

    அவ்வப்போது கிளம்பிய சிரிப்பு மட்டும் மத்தாப்பாய் மின்னித் தணிந்தது.

    எட்டு பேருள்ள குழு ஒன்று அமர வசதியாய், இரு சதுர மேஜைகள் இணைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஆண்கள் முதல் பார்வைக்கு இளைஞர் கூட்டமெனத் தெரிந்தாலும், நெருங்கி அவர்களின் பேச்சை கவனிக்க, அவர்கள் நாற்பதுகளை தாண்டியவர்கள் என்பது தெளிவு.

    முன்பு ஐம்பதை எட்டிய ஒரு ஆண், பெரும்பாலும் மாமனாராகி, தாத்தாவாயிருக்கவும் கூடும்! கடமைகளை முடித்த அயர்வோடு, வருங்காலம் பற்றிய அச்சமும் சேர்ந்து அவர்களை வதக்கியிருக்கும்.

    ஆனால், இவர்கள் வாழ்க்கை ஓட்டத்தில் ஜெயித்த பூரிப்புடனிருந்தார்கள்!

    இருபது வருஷங்களுக்கு முன்னே, பெண்களைப் பற்றி பேசி கிளுகிளுத்திருக்கக் கூடியவர்கள்தான்... ஆனால், இப்போது பெரும் நிறுவனங்களின் தலைமைப் பதவிகளும் அவை கொண்டுவந்த தாராள சம்பளமும் அதிகாரமும் அவர்களுக்கு வேறு சுவைகளைக் காட்டியிருந்தன! அவர்கள் உடைகளின் நயம், பேச்சிலும் தோற்றத்திலும் அசைவுகளிலும் கூட படிந்திருந்தது! இயல்பான உடைகளிலும் கூட தனித்து தெரியக்கூடிய தோரணையில் இருந்தார்கள் ஒவ்வொருவரும்.

    அந்த ஆறு பேரில் அன்றைய நாயகன் ஜனார்த்தன்... அவர்களை அழைத்தது அவன்தான்.

    அவன் தந்த விருந்தோடு விவரத்தையும் ஏற்றவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர ஆரம்பித்திருந்தனர்.

    துணிச்சலான முடிவுதான் உன்னது, ஜனா. ஆனா 48 வயதில் வேலையை உதறுவது இஸ் இட் வைஸ்?

    சீனியர் வைஸ் - ப்ரெஸிடன்ட்! சம்பளம் மாதம் ஆஞ்சாறு லட்சங்கள் - அதுபோக வெளிநாட்டு ட்ரிப்ஸ், போனஸ்னு, ராஜ வாழ்க்கை...

    முன்னே மாதிரி, சகலத்திற்கும், ஆபீஸில் நாம ஓட வேண்டியதில்லை - ஏவினால் போதும். வேலை நடக்கும். பாராட்டுக்கள் தம் பாக்கெட்டிற்குள் விழும்.

    இனிதான் விமானத்தில் பிஸினஸ் - க்ளாஸ் வரும்பா! ஷாம்பெய்ன் சீப்பிட்டு, ஏர் - ஹோஸ்டெஸ்ஸுடன் சின்னதாய் ஃப்ளர்ட் பண்ர குஷியெல்லாம் இருக்கு.

    ஒரு நண்பர் ஆசைக் காட்ட, ஜனார்த்தனை கல்லூரி காலத்திலிருந்து தெரிந்த பரத் கைகளை காற்றில் ஆட்டினான்.

    தட்ஸ் நாட் ஜனா! அவனுக்கு வைஃப் விதுபாலாவோடு போறதே போதும்! லக்ஸரி ட்ரிப்ஸ் - மனைவியோடு? நீ எவ்வளவு சேமித்து வைத்திருந்தாலும், அதெல்லாம் நம்ப காசில் சாத்தியமில்லை ஜனா. இன்னும் பத்து வருஷ சர்வீஸ், சம்பாத்தியம் - ஏன் விடற?

    அதில் ஈஸிஆர் ஏரியாவில் ரெண்டு பீச் ஹவுஸஸ் வாங்கிப் போடு. பிறகு வாடகையே லட்சங்களில் வரும்.

    ஆளாளுக்கு ஆலோசனை தந்த நண்பர்களை ஒரு சுற்றுப் பார்த்தான் ஜனார்த்தன் - ஆக யாரும் தன் திட்டம், யோசனையை அங்கீகரிக்கவில்லை!

    ஒரு மடக்கே மிச்சமிருந்த ‘ஷாம்பெய்ன்’னை குடித்து முடித்தவன், அம்மெல்லிய குவளையை உருட்டியபடி பதில் தந்தான்.

    "ஒருவனின் ஆசைக்கும் திறமைக்கும் இடைவெளி அதிகமிருந்தால் அவன் வாழத் தெரியாதவன்.

    இரண்டும் ஒன்றியிருந்தால் அவன்... வாழும் மனுஷன்!

    முன்னே வாசிச்சு நான் ஒப்புக்கொண்ட சித்தாந்தம் இது."

    இப்போ நீ வசதியாய் வாழற... வெற்றிகரமாயும் கூட!

    ஷுயர். ஷேர்ஸில் அப்பப்போ விளையாடுவேன். ஆக என் வருமானம் மாசம் பத்து லட்சங்களுக்கு மேலே.

    எதிரே இருந்த சில ஜோடி கண்களில் பொறாமை எட்டிப் பார்த்தது.

    ஆனா நான் கனவு கண்ட வாழ்க்கை இதல்ல... தான் படிச்சது கிராம ஸ்கூலில் - திருநெல்வேலி ஏரியாவில் சின்ன கிராமம்... பிறகு அப்பாக்கு டவுனில் வேலை மாற்றலானதால், மற்ற ஊர்களையும் பார்த்தாலும், காலேஜ் போன பிறகும், என் விடுமுறைகள் தாத்தாவின் கிராமத்தில்தான்.

    எனக்கு நினைவிருக்குது - ஏன் நான்கூட தென்காசி, குற்றாலம் எல்லாம் உங்ககூட வந்திருக்கேனே - புன்னகைத்தான் பரத்.

    அந்த பசுமை, அமைதி, ஏகாந்தத்திற்காய் ரொம்ப ஏங்கறேன், பரத். தாத்தாவின் கல்வீடு மிக பெரிசில்லைன்னாலும், கம்பீரம்...

    சுற்றிலும் நிறைய நிலமும், தாராளமாய் மரங்களும் உண்டு. அந்த காற்று... டிவைன்.

    பரத் ரசனையாய் சொல்ல ஜனார்த்தனின் கண்கள் மின்னின.

    இப்போ நா பார்த்திருக்கற வீடு அந்த சாயலில் இருக்குது பிரபா. பழங்கால பொக்கிஷம்னு சொல்லலாம். அதை நான் கற்பனை செய்ததைவிட அபாரமான ஸெட்டிங், நாமெல்லாரும் நம் பின் இருபதுகளில் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தோம் -

    யெஸ் – காலேஜ் - மேட்ஸ் என்பது போல ஆபீஸ் மேட்ஸ்.

    பிறகும் தொடர்பில் இருந்தோம். அதான் உங்களுடன் என் முடிவை ‘ஷேர்’ பண்ணனும்னு பட்டது.

    சரி ஜனா. நீ உன் வைஃப்பிடம் விவரம் சொன்னியா? அவங்க ரியாக்ஷ்ன் என்ன?

    உன் கனவு, பழங்கால வீடு எங்கேயிருக்குது - சென்னைக்குப் பக்கத்திலா?

    திண்டுக்கல் பக்கம் ஆத்தூர் ரோடில்... சொல்லப்போனா ‘பக்கா’ ரோடு கூட கிடையாது - அதான் அந்த அமைதியும் பசுமையும்.

    சற்றுமுன் பொறாமை துளிர்த்த கண்களில் இப்போது பரிதாபம் தெரிந்தது.

    என் கேள்விகளுக்கு நீ பதில் சொல்லலலை - வைஃப் என்ன சொன்னாங்க? ஷி இஸ் ஆல்ஸோ வொர்கிங், இல்லையா?

    யெஸ். காலேஜ் ப்ரொபஸர். ஆனா லாக் - டவுன் சமயம் ஆன் - லைன் டீச்சிங் பழகிட்டா. எக்னாமிக்ஸ் கிளாஸஸ் அங்கிருந்தே கூட நடக்கும்!

    ஹா! எப்படி ஸிட்டி - லைஃப், ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் விட்டுட்டு ரோடில்லாத ஒரு வீட்டிற்கு வர சம்மதிச்சாங்க?

    வாட் அபௌட் யுவர் டாட்டர்ஸ்?

    அபியா - ரயா இல்லையா? கெட்டிக்கார பிள்ளைங்க.

    பரத் புருவம் உயர்த்தினான்.

    மேற்படிப்பிற்கு ரெண்டு பேருமே வெளிநாடு போயாச்சு. அதுவும் ஸ்காலர்ஷிப்பில்! மூத்தவ இந்த வருஷம் படிச்சு முடிப்பா - ஏறக்குறைய வேலை கிடைச்சாச்சு.

    ஆக நீ சுதந்திரமாய் முடிவெடுத்திட்ட? குட் லக்.

    ஆக நீ விவசாயம் பார்க்க போற?

    அப்படி சொல்ல முடியாதுப்பா. நான் வாங்கியிருக்கும் வீடு ஏறக்குறைய எழுபது வருஷ பழையது. டேனிஷ் ஆள் கட்டினது - ஸோ அங்குள்ள டைல்ஸ், ஜன்னல் அமைப்பு, கூரை, சுவர், தோட்டம் கூட அலாதியான அமைப்பில் இருந்தது... நெருக்கமாய் வேற வீடுங்க, ஆள் நடமாட்டம் கிடையாது...

    பூட் பங்களா போலிருக்குமோ?

    ஷ்... பாமரத்தனமாய் பேசாதே ரிஷி! வைன், நகை, நட்பு, வீடு எல்லாம் பழசாக ஆக மதிப்பு கூடும்.

    புதுப்பிக்கறது தொல்லையான வேலையாச்சே?

    பர்மா தேக்கும், கருங்கல்லும், ஜன்னல்களுக்கு இட்டாலியன் வர்ண கண்ணாடிகளுமாய்... வந்து பார்த்த காண்ட்ராக்டர் பிரமிச்சுட்டார்.

    பெருமிதமாய் தோள் குலுக்கினான் ஜனார்த்தன்.

    ஆக வேலை ஆரம்பிச்சாச்சு?

    ரெண்டு டாய்லெட்ஸ், நவீனப்படுது - தண்ணீர் பிரச்சனையே நேராது - வீட்டின் முன்னே சமுத்திரம்போல அணை தண்ணீர் - காமராஜர் சாகர் அணை, நானூறு ஏக்கரில் - மேற்கு தொடர் மலைகளின் செழிப்பில்.

    காட்டு மிருகங்க தண்ணீருக்கு வருமோ?

    குடிச்சுட்டுப் போகட்டுமே - நாம பார்த்து ரசிக்க வேண்டியது... தான்!

    இப்போது நட்பு வட்டம் குழப்பமாய் தோள் குலுக்கியது...!

    அவர்களின் பார்வையில் பிரதிபலித்த உணர்வு புரியாத, ஜனாவும் குழம்பினான்...

    2

    நண்பர்களின் கேள்விகள் இன்னும் ஜனார்த்தனை குடைந்தன... அதில் அவனுக்கு தன் மனைவியின்மீது நன்றியும் நேசமும் பெருகின!

    பளீர் மஞ்சள் இரவு உடையில் தன்னருகே வந்து எலுமிச்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1