Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arakkanai Vendra Kullan
Arakkanai Vendra Kullan
Arakkanai Vendra Kullan
Ebook108 pages44 minutes

Arakkanai Vendra Kullan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுவர்களை கவர்ந்திழுக்கும் 16 மாயாஜால மந்திர தந்திரக் கதைகள் அடங்கியது. சிறுவர்களை கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்து குஷிப்படுத்தும் அருமையான சிறுவர்கதைகள்.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580160810870
Arakkanai Vendra Kullan

Read more from Natham S. Suresh Babu

Related to Arakkanai Vendra Kullan

Related ebooks

Reviews for Arakkanai Vendra Kullan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arakkanai Vendra Kullan - Natham S. Suresh Babu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அரக்கனை வென்ற குள்ளன்

    Arakkanai Vendra Kullan

    Author:

    நத்தம் எஸ். சுரேஷ்பாபு

    Natham S. Suresh Babu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/natham-s-suresh-babu

    பொருளடக்கம்

    1. கோச்சடையான்!

    2. பூமிக்கு வந்த நட்சத்திரம்!

    3. ராஜா மோதிரம்!

    4. குளவி நண்பன்!

    5. ரத்ன மாலா!

    6. மந்திரபொம்மை!

    7. அரக்கனை வென்ற குள்ளன்!

    8. எலி தந்த பரிசு!

    9. தவளை ராணி!

    10. தங்க மீன்!

    11. ஈர்க்குச்சி மனுசன்

    12. ஆலமரத்து பூதம்!

    13. எழிலி!

    14. சுயநலமிக்க பூதம்!

    15. பட்டுச் சட்டை!

    16. விவேகன் பெற்ற வாழ்வு!

    1. கோச்சடையான்!

    வெகு காலத்திற்கு முன்னே விக்கிரமபுரி என்ற நாட்டிலே ஒரு வயதான தம்பதிகள் வசித்து வந்தார்கள். அவர்களது மகன் மருமகள் இறந்துவிடவே அவர்களின் பேரன் மட்டும் அவர்களுடன் வசித்து வந்தான். இளவயதுக்காரனான அவன் இரக்க குணம் மிக்கவன். அந்த வயதான தம்பதிகளால் வேலை எதுவும் செய்ய முடியாது. பேரனோ வேலை செய்யும் அளவிற்கு வளர வில்லை. அதனால் அவர்கள் அன்றாடப் பொழுது கழிவதே பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.

    வயதான தம்பதிகள் பக்கத்து வீட்டில் வசதியான பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் சொல்லும் எடுபிடி வேலைகள் ஏதாவது பேரன் செய்வான். அதற்கு அவர் தரும் சப்பாத்தி துண்டுகள் அல்லது வீணான பழங்கள் ஏதாகிலும் அவர்களின் அரைவயிற்றை கழுவ உதவியது. மூதாட்டி சில சமயம் அவர்கள் வீட்டு தோட்டத்தில் விளையும் சில கீரைகள் பழங்கள் ஆகியவற்றை வீதியில் கடைபரப்பி விற்பாள். அப்படியும் அவர்களுக்கு எந்த நிரந்தர வருமானம் கிடையாது.

    ஆனாலும் பேரன் கோவிந்துவிற்கு மிகுந்த இரக்க குணம். தனக்கு கிடைக்கும் உணவையும் பிறருக்கு பகிர்ந்து கொடுத்து உண்பான். தோட்டத்தில் மேயும் பறவைகள், அணில்கள் போன்றவற்றிற்கு ஏதாவது தீணி போட்டுக்கொண்டிருப்பான். அவனது பாட்டியோ புலம்பிக் கொண்டிருப்பாள். இருக்கும் தானியங்களையும் இப்படி பறவைகளுக்கும் அணில்களுக்கும் இரைத்துவிட்டால் நம் பிழைப்பு என்னாகும்? நாம் என்ன அவ்வளவு பணக்காரர்களா? என்பாள்.

    ஆனால் கோவிந்து அதை காதில் வாங்கிக்கொள்ளமாட்டான். வீட்டில் இருந்தால் இருக்கும் சில தானியங்களையும் பறவைகளுக்கு கொடுத்துவிடுவான். பக்கத்து வீட்டுக்காரன் தோட்டத்தில் ஒரு பறவைகளும் மேயாது. இவன் வீட்டிலோ கோவிந்தை கண்டாலே பறவைகள் மொய்த்துக் கொள்ளும். இதை பார்த்து வயிற்றெரிச்சல் படுவான் பக்கத்து வீட்டுக்காரன்.

    ஒரு நாள் கோவிந்த் காலையில் விளையாடிவிட்டு திரும்பும்போது சாலையில் ஒரு குட்டி நாய் அடிபட்டுக் கிடந்தது. அதனருகே சென்ற கோவிந்த் அதை தூக்கி வந்து காயங்களை துடைத்து மருந்து இட்டான். பின்னர் அதை வீட்டிற்கு எடுத்துவந்துவிட்டான்.

    வீட்டில் அவனது பாட்டி சத்தம் போட்டாள். ஏய்! கோவிந்த்! இங்கு நமக்கு சோற்றுக்கே வழியில்லை! இந்த ஜீவனை வேறு ஏன் கொண்டுவந்தாய்? இதை வளர்ப்பது நம்மால் ஆன காரியம் இல்லை! எங்காவது விட்டுவிட்டு வந்துவிடு என்றாள்.

    இல்லை பாட்டி! இது மிகவும் சின்ன குட்டி! சாலையில் அடிபட்டு கிடந்தது. பார்க்க பாவமாக இருந்தது. நான் வளர்த்துக் கொள்கிறேனே! என்னுடைய உணவில் சிறிது இதற்கு கொடுத்துக் கொள்கிறேன். என்று வாதாடி அதை வளர்க்க ஒப்புதல் பெற்றுக் கொண்டுவிட்டான்.

    இரண்டொரு நாளில் அந்த நாய்க் குட்டியின் காயங்கள் ஆறிவிட்டது. அதன் ரோமங்கள் பொன்னிறமாக பளபளத்தது. புசுபுசுவென அழகாக காட்சி அளித்தது.

    கோவிந்த் எந்த நேரமும் அந்த நாய்க்குட்டியுடன் திரிந்தான். பக்கத்துவீட்டுக்காரன் இதை பார்த்ததும் அதிசயித்தான். அட இந்த நாய்க்குட்டி புசுபுசுவென அழகாக இருக்கிறதே! இது எப்படி உனக்கு கிடைத்தது? எனக்கு கொடுத்துவிடேன்! உனக்கு நிறைய தானியங்களும் பழமும் தருகிறேன் என்று கேட்டான்.

    மாட்டேன்! இதை நான் வளர்க்கிறேன்! கொடுக்க முடியாது. இது என் உயிர் நண்பன்! யாருக்கும் தரமாட்டேன்! என்றான் கோவிந்த்.

    சரி அப்படியா? உன் நண்பன் பேர் என்ன சொல்லு? என்றான் வேடிக்கையாக பக்கத்து வீட்டுக்காரன்.

    அப்போதுதான் கோவிந்திற்கு நாய்க்குட்டிக்கு இன்னும் எந்த பெயரையும் வைக்க வில்லை என்று தோன்றியது. இதற்கு இன்னும் நான் பெயர் வைக்க வில்லை என்றான்.

    அப்படியா? நான் ஒரு பெயர் சொல்லட்டுமா?

    ம் சொல்லுங்கள்!

    சடையன்! என்று வைத்துக் கொள்! முடி சடைசடையாக இருக்கிறதே! என்றான் பக்கத்து வீட்டுக்காரன் நக்கலாக.

    அட! புதுமையாக இருக்கிறதே! என்பெயர் கோவிந்த் நான் வளர்க்கும் நாய் சடையன்! கோச்சடையான்! அருமை! என்று துள்ளிக்குதித்து ஓடினான் கோவிந்த்.

    அன்றுமுதல் கோச்சடையான் என்று கூப்பிட்டு பழக்கினான். அதுவும் மிகவும் நன்றாக அவனுடன் பழகியது. அவனது பாட்டி மட்டும் அவ்வப்போது திட்டுவாள். அதை அவன் காதில் வாங்குவது இல்லை. ஒரு பத்து பதினைந்து நாள் கடந்திருக்கும். அதிகாலை கோவிந்த் கண் விழித்தபோது பக்கத்தில் படுத்திருந்த கோச்சடையானை காணவில்லை! பதறிப்போய் தேடினான்.

    கட்டிலின் அடியில் இருந்து "லொள்’ என்று சத்தம் வரவே எட்டிப்பார்த்தான். அங்கு கோச்சடையான் படுத்துக் கிடந்தது. அதன் உடலில் ஒரு ரோமங்கள் கூட இல்லை! அனைத்தும் கீழே உதிர்ந்து கிடந்தது. அது பேசத்தொடங்கியது. அன்பு கோவிந்த்! நான் ஒரு தேவதை! ஒரு சாபத்தால் நாயாக பிறக்க நேரிட்டது. ஒரு பட்சத்திற்கு ஒரு முறை என்னுடைய ரோமங்கள் உதிர்ந்து விடும். பின்னர் ஒரு நாள் முழுவதும் சூரிய ஒளி படாமல் இருந்தால் மீண்டும் வளரத் தொடங்கி விடும். இந்த ரோமங்கள் அனைத்தும் சூரிய ஒளி பட்டதும் தங்கமாக மாறிவிடும். இதை எடுத்துக் கொள். இதை யாரிடமும் கூறாதே! உன்னுடைய இரக்க குணம் என்னைக் கவர்ந்தது. உனக்கு உதவவே இங்கு வந்தேன். என்னை இன்று வெளியில் அழைக்காதே! இந்த ரோமங்களை சூரிய ஒளியில் வை. அவை தங்க ரோமங்களாகும். அவற்றை விற்று விடு. என்றது கோச்சடையான்.

    கோவிந்திற்கு எல்லாம் அதிசயமாக இருந்தது. கோச்சடையானை தூக்கி முத்தமிட முயன்றான். அது என்னை தூக்காதே! என் உடல் எல்லாம் வலிக்கிறது. ரோமங்கள் எல்லாம் உனக்காக உதிரச் செய்துவிட்டேன். இவை இல்லாமல் என்னால் வெளியே வர முடியாது. இன்னும் இரண்டுநாள் ஆகும் பழையபடி வளர என்றது.

    கோவிந்த் அந்த ரோமங்களை சூரிய ஒளியில் காட்டினான். அவை தங்க இழைகளாக மாறியது. வியந்து போன அவன் அதை எடுத்துச் சென்று தாத்தா- பாட்டியிடம் காண்பித்தான். அடேய்!

    Enjoying the preview?
    Page 1 of 1