Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nooru Kodi Thaagam
Nooru Kodi Thaagam
Nooru Kodi Thaagam
Ebook231 pages1 hour

Nooru Kodi Thaagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைத்தால் என்னென்ன அரசியல் பின்விளைவுகள் ஏற்படும் என்பதனை அங்கதசுவையுடன் விவரிக்கிறது டைட்டில் கதை. அரசியல், காதல், விஞ்ஞானம், ஆண்-பெண் உறவுச்சிக்கல்கள், இலக்கிய வாய்க்கால் சண்டைகள் இப்படி எல்லா தலைப்புகளிலும் கதைக்கருக்களை எப்படி தேர்ந்தெடுப்பது எப்படி என்று ஆர்னிகா சிறுகதைகளை படித்து வளரும் எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateOct 5, 2023
ISBN6580111010184
Nooru Kodi Thaagam

Read more from Arnika Nasser

Related to Nooru Kodi Thaagam

Related ebooks

Reviews for Nooru Kodi Thaagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nooru Kodi Thaagam - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நூறு கோடி தாகம்

    (25 சிறுகதைகள் தொகுப்பு)

    Nooru Kodi Thaagam

    (25 Sirukathaigal Thoguppu)

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மெட்ரோ இல்லம்

    2. குருபக்தி

    3. கணவனுக்குப்பின்

    4. கலைவாணி VS திரிபுரசுந்தரி

    5. அதை மட்டும்

    6. அவன் அப்படித்தான்

    7. டிப்ஸ்

    8. சோறு

    9. மருத்துவம் இலவசம்

    10. சி.ஜி. சார்

    11. நூறுகோடி தாகம்

    12. எல்லோருக்கும் எல்லாமும்

    13. மணிப்பர்ஸ்

    14. மின்னல் கூரியர்ஸ்

    15. சுனாமி

    16. முகமூடிகள் ஆயுதங்களாய்

    17. ஸ்ரீராமஜெயம்

    18. ஆசீர்வாதம்

    19. முகஸ்துதி

    20. யாருக்கும் தெரியாமல்...

    21. போதைக்குதிரை

    22. ஜி.ஆர்.ஜி. மருத்துவமனை

    23. அந்த நாள் ஞாபகம்

    24. தந்தை

    25. சாமியார்

    1. மெட்ரோ இல்லம்

    சிவசக்தி நகர். முதலாம் விரிவாக்கம் நான்காவது குறுக்கு தெரு.

    ஓட்டிவந்த புல்லட்டை கால் ஊன்றி நிறுத்தி ஹாரன் செய்தான் மோகன்.

    மனைவி ஓடிவந்து வெளி குட்டிக்கேட்டை திறந்து விட்டாள். பைக்கை ராம்ப்பில் ஏற்றித்தள்ளி உள்வாசலின் வலப்பக்கம் ஸ்டாண்டிட்டு நிறுத்தினான்.

    தூசி படிந்த ஹெல்மட்டை மனைவி உமாவிடம் நீட்டினான். தினம் காட்டுமன்னார்கோயில் ஆபிஸுக்கு போய்ட்டு வர்றது ஒரு போருக்கு போய்ட்டு வர்றமாதிரி இருக்கு!

    ‘ரொம்ப அலட்டிக்கிரான் மனுஷன்!’

    ஆமாமா!

    ஷுவைக்கழற்றி மரஸ்டாண்ட்டில் நிறுத்தினான். பின்னுக்கு சுருட்டி உரித்த ஷாக்ஸ்களை அவனே எடுத்துப்போய் அலசி ஈரம் உதறி காயப்போட்டான்.

    துளி டெட்டால் இட்ட நீரில் காதித்துண்டு அமிழ்த்தி எடுத்து உடம்பு துடைத்துக்கொண்டான். கழற்றிப்பார்த்த கீழ் உள்ளாடையின் உட்காருமிடத்தில் லட்சத்தீவு மாலத்தீவாய் ஓட்டைகள்.

    ‘பேசாம காடாத்துணி வாங்கி லங்கோடு ரெடி பண்ணிக்கலாம். காசு மிச்சமாகும்!’

    லுங்கியை உதறி கட்டிக்கொண்டான். தொளதொள டிசர்ட் அணிந்து கொண்டான். மனைவி கொடுத்த சூடான இனிப்பு நீரை டீயாக பாவித்து உறிஞ்சினான் மோகன்.

    கோப்பையை வைத்துவிட்டு தொலைக்காட்சி பெட்டி நோக்கி நடந்தான்.

    மூங்கில் இருக்கையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான் பத்து வயது மாது. அவனது கையில் ரிமோட். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் ‘கிரிக்கெட் கோல்டில்’ இந்தியா - பாகிஸ்தான் பதினைந்து வருடங்களுக்கு முன் ஆடிய பழைய ஒன்டே மேட்ச்சின் ஹைலைட்ஸ் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

    மாது! ஹெச்.பி.ஒ. மாத்து!

    முடியாது. போ!

    புது மேட்ச்சுன்னா கூட பரவாயில்லை. நீ பொறக்றதுக்கு முன்னாடி நடந்த மேட்ச்சை போய் திறந்தவாய் மூடாம பாக்றியே, நியாயமா? இதில ஆடின எல்லோரும் கிரிக்கெட்லயிருந்தே ரிட்டையர் ஆய்ட்டா ஒண்ணு ரெண்டு பேர் செத்தும் போய்ட்டா!

    பேசாம இரு. உனக்கு ஒண்ணும் தெரியாது. பழசையும் ஒண்ணுவிடாம பாத்துவச்சாத்தான் பழசையும் புதுசையும் கம்பேர் பண்ணி கிரிக்கெட் அறிவை தாறுமாறா வளத்துக்கமுடியும்!

    கிரிக்கெட் அறிவை தாறுமாறா வளத்து ஐஸிஐ மெம்பர் ஆகப்போறியா? அல்லது பிஸிஸிஐ மெம்பர் ஆகப்போறியா? அல்லது ஐஸிஸியின் எலைட் பேனல் அம்பயர் ஆகப்போறியா? குட்ரா, நான் ‘ஹாலோமேன்’ பாக்கனும்!

    அதுல ‘ஆய்’ சீன் வரும்னு நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு ரிமோட் கேக்றியாக்கும். தர முடியாது. போ, போய் சூரியன் எப்.எம். அல்லது கே.எல். ரேடியோஸ் கேள்!

    புத்தகத்தின் ஒரே பக்கத்தை படிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்த மகள் வித்யா க்ளுக்கென்று சிரித்தாள்.

    மோகன் கோபமாய் திரும்பி, நாங்க பேசிக்கிட்டுக்றத நீ ஏன் கவனிக்ற? நீ இப்டி இருந்தா ப்ளஸ்டூ பாஸ் பண்றதே சந்தேகம்தான்!

    வித்யா மீண்டும் படிப்பதுபோல் பாவனை தொடர்ந்தாள்.

    கோபத்தை வீசியெறிந்து விட்டு பலபடிகள் கீழிறங்கி வந்தான் மோகன். தொகுதி பங்கீட்டில் கலைஞர் பாமக ராம்தாஸுக்காக இறங்கி வந்தது போல்.

    உனக்கு என்னவெல்லாம் வாங்கிக் குடுத்திருக்கேன்? உனக்கு என்னவெல்லாம் வாங்கிக் குடுக்கக் காத்திருக்கேன்? நீயும் நானும் அப்பனும் மகனும் போலவா பழகுறோம்? இன்னைக்கி சண்டே கூட ஏன் எக்ஸ்ட்ரா வொர்க் போறேன்? உங்களுக்கெல்லாம் சம்பாதிச்சு போடத்தானே? நான் வாங்கிக்குடுத்த டிவி பொட்டில கேவலம் ஒரு இங்கிலீஷ் படம் பாக்க எனக்கு உரிமையில்லையா? நீ பாக்ற கிரிக்கெட் கோல்டை திரும்பத்திரும்பத்தான் போட்டு கழுத்தறுக்றானே? அப்ப பாக்கவேண்டியதுதானே? குடுத்திருடா ரிமோட்டை. எட்டு டு எட்டரை ந்யூஸ் ஓடிக்கிட்டு இருக்கும். பாத்துட்டு எட்டரை டு ஒன்பது கிரேஸிமோகன் சீரியல் பாத்துட்டு ‘ஹாலோமேன்’ தாவிடுவேன். ப்ளீஸ்டா. ப்ளீஸ் ப்ளீஸ்டா!

    பொண்டாட்டிக்கும் புள்ளைகளுக்கும் செய்றதை சொல்லிக்காட்டலாமா நீ? அல்பம் அல்பம்! எலக்ட்ரிக் ட்ரெயின் பெக்கர் மாதிரி ரிமோட் பிச்சை கேக்றியே, சரியா?

    பெரிய பேமிலிபேக் ஐஸ்கிரீம் வாங்கித்தரேன். ரிமோட்டைக் குடுத்திடு! ஹாலோமேன் முடிஞ்சதும் ரிமோட்டை தந்திடுறேன். நீ எது வேணாலும் பாத்துக்க!

    யார ஏமாத்தப் பாக்ற? நீ சொல்ற ஹாலோமேன் முடிய பதினோறு மணியாய்டும். நான் தூங்கிப் போய்டுவேன். நீ எஃப் டிவி பாக்க ஆரம்பிச்சிருவ.

    பாண்டி காங்கிரஸ் கண்ணன் போல் கோபமுகம் காட்டினான் மோகன்.

    என்னடா அட்டூழியம் பண்ற? பெத்தப்பன் நாஞ்சொல்றேன்! ரிமோட்டைக்குடு!

    கெஞ்சி பாத்த கெதறி பாத்த, பாச்சா பலிக்கல. இப்ப மிரட்டிபாக்றியாக்கும். தரமுடியாது என்ன பண்ணுவ?

    டாடின்னா உனக்கு ரெண்டு கொம்பா முளைச்சிருக்கு? ரிமோட் தரமுடியாது. போய்யா!

    வலுக்கட்டாயமாக ரிமோட்டை மோகன் மாது கையிலிருந்து பிடுங்க மினி ஈராக் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. மாது அழுது புரண்டு ரகளை பண்ணினான். தனது சட்டை பொத்தான்களை அறுத்துவிட்டுக்கொண்டான்.

    கணவனுக்கும் மகனுக்கும் இடையே உமா பூத்தாள். உமாவுக்கு உறுதுணையாக மகள் வித்யா.

    ரிமோட் பிடுங்கித் தந்தீன்னா நைட் சாப்பிடமாட்டேன் மம்மி!

    சரிடா சரிடா. நான் உன் டாடிய சமாதானம் பண்றேன். (ரிமோட்டை குடுத்திடு புருஷா. நைட்டு ‘விஷயம்’ உண்டு) ரிமோட்டை குடுத்திடுங்க! (ஏறக்குறைய பிடுங்கி) இந்தாடா மாது!

    மீண்டும் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தான் மாது, லஞ்சமாய் இரண்டு பைவ் ஸ்டார் சாக்லேட்டுகள் வாங்கிக் கொண்டு.

    தந்தையை பார்த்து நெற்றியில் அடித்துக்கொண்டு படிப்பதுபோல் நடிக்கப்போனாள் வித்யா. மனைவியுடன் சமையலறை ஒதுங்கினான் மோகன்.

    பத்துவயசு பொடியனை கண்டிக்காம கட்ன புருஷனை கண்டிக்றியேடி?

    என்ன பண்றது? காலம் மாறிப்போய்டுச்சே!

    எல்லாம் சரி. நைட்டு உண்டுதானே ‘விஷயம்’?

    ம்ஹிம். உங்கள ஏமாத்தி ரிமோட்டை மாதுகிட்ட கையளிக்க பொய் சொன்னேன். நான் இப்ப ‘சுமோ பயில்வான்!’ புரியுதா?

    அடிப்பாவி!

    கிரகஸ்தனாயிருந்த நீங்க வனபிரஸ்தம் போக வேண்டிய வயசை தாண்டிட்டீங்க. இன்னும் நாக்கைத் தொங்க போட்டுக்கிட்டு நீங்க அலைஞ்சா எப்டி?

    இரவு தயிர்சாதம் சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு தனியாகப்போனான் மோகன். படுக்கையில் குப்புற விழுந்து தூங்கிப்போனான்.

    ***

    மறுநாள் இரவு, பைக்கின் பில்லியனில் கட்டி வந்திருந்த மினிபோர்ட்டபிள் டிவியை வீட்டுக்குள் தூக்கி வந்தான் மோகன்.

    என்ன கூத்து இது?

    ஒனிடா ப்ளாக் அண்ட் ஒய்ட் டிவி டியூல வாங்கிட்டு வந்திருக்கேன். என் ரூம்ல கலர்டிவிய பிட் பண்ணி நான் விரும்பினதை பாத்துப்பேன்! ப்ளாக் அண்ட் ஒயிட்ல மாது கிரிக்கெட் பார்க்கட்டும்!

    இசுக்கு புசுக்கு. நீ பிளாக் அண்ட் ஒயிட் டிவில கண்டது கழியது பாரு நான் கலர்ல பாத்துப்பேன்!

    அதுசரி எக்ஸ்ட்ரா கனக்‌ஷனுக்கு எக்ஸ்ட்ரா காசு கேப்பானே கேபிள்காரன்!

    நாம சொன்னாத்தானே?

    சரியான ஆணாதிக்க வீடுடா இது! நான்கூடத்தான் விரும்பி நண்பகல்ல சன், விஜய், டிடிஒன் பாப்பேன். எதுக்கும் ஸேப்பா எனக்கும் ஒரு தனி டிவி வாங்கித் தந்திருங்க!

    ப்ளஸ்டூ பரிட்சை முடிச்சதும் எனக்கும் ஒரு டிவி தேவை. இப்பவே ரிசர்வ் பண்ணி வச்சுக்கிறேன்!

    இரு கைகளையும் உச்சந்தலையில் வைத்துக்கொண்டான் மோகன்.

    கடவுளே கடவுளே! டிவி கிறுக்கு புடிச்ச என் குடும்பத்தை காப்பாத்து!

    உங்க டிவி கிறுக்கை மொதல்ல கை கழுவினா நாங்களும் சரியாய்டுவோம்!

    உழைச்சிட்டு வர்றவனும் வீட்ல உக்காந்து மொட்டை அதிகாரம் பண்றவங்களும் ஒண்ணா?

    உங்க சம்பாத்தியத்துக்கு ரெண்டு மடங்கு சமமா நான் வீட்டுக்கு உழைகுறேன். நான் என்னைக்காவது மெழுகுவர்த்தியா எரிஞ்சு இக்குடும்பத்தை காப்பாத்றத உங்களை மாதிரி சொல்லிக் காட்டியிருக்கிறேனா?

    நீங்க ரெண்டுபேரும் ரிட்டையர்மெண்ட்டுக்கு பிறகு எங்களை அண்டிதான் வாழ்ந்தாகனும். அன்னைக்கி வாழப்போற வாழ்க்கைக்கு நீங்க கட்ற அட்வான்ஸ்தான் அப்பாவின் சம்பாத்தியமும் அம்மாவின் உழைப்பும்!

    சமையலறையில் இரவுச்சமையலில் ஈடுபட்டிருந்த பங்கஜம் சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். பங்கஜத்தை வீட்டுவேலை செய்யவும் சமையல் உதவி செய்யவும் சொந்த ஊரிலிருந்து அழைத்து வந்திருந்தான் மோகன். பங்கஜம் மோகனுக்கு தூரத்து சொந்தமும் கூட. அந்த உரிமையில் பங்கஜத்தின் குரல் அடிக்கடி வீட்டுக்குள் உயர்ந்து ஒலிக்கும்.

    எய்யா... இது வீடா மங்கம்மா சத்திரமா? எந்நேரமும் சத்தம் குய்யாமுய்யான்னு...

    இது டிவி பிரச்சனை. உனக்கு சம்பந்தமில்லாதது மட்டுமல்ல தேவை இல்லாததும் கூட. போ, போய் உன் வேலையக் கவனி!

    யார் சொன்னது? உங்க டிவி பிரச்சனை எனக்கு சம்பந்தமில்லாதது தேவையில்லாததுன்னு யார் சொன்னது?

    பின்ன?

    எல்லார் கோரிக்கையும் உரக்க ஒலிச்சு அடங்னவுடன் என் கோரிக்கைய வைக்கலாம்னு பாத்தேன். சரி சபைக்கு வந்தாச்சு. என் கோரிக்கையையும் சமர்ப்பிச்சிடுறேன். எனக்கு ஹிந்தி புரியுதோ இல்லையோ ஜோனிடிவி ப்ரோக்ராம்கள்தான் ரொம்ப பிடிக்குது. அதுல ‘பூகிஊகி’-ன்னு கூட ஒரு டான்ஸ் ப்ரோக்ராம் போடுவான். படுசூப்பரு. எய்யா மோகரு! நா சமையக்கட்டு வேலைகளை கவனிச்சிக்கிட்டே ஜோனி டிவி பாக்க தோதா எதாவது ஒரு குட்டிகலர் டிவி வாங்கி சுவத்து உச்சில பிக்சு பண்ணிடு. ஓசியா தரவேணாம் நீ. என் மாச சம்பளத்ல வேணா பத்து பத்து ரூபாயா பிடிச்சுக்க!

    தொமீர்!

    டமால்!

    டட்டமார்!

    மோகன் மயங்கி விழுந்தான். மாது ஸ்லோமோஷனில் திரும்பி பார்த்துவிட்டு தொடர்ந்து இன்னொரு பழைய கிரிக்கெட் ஒளிபரப்பை ரசிக்க ஆரம்பித்தான்.

    சாதாரணமா மயங்கி விழுந்த மாதிரி தெரியலியே... செமத்தியா ஜின் அடிச்சிட்டு வந்து மயங்கி விழுந்த மாதிரி தெரியுதே! மனைவி உமா முணுமுணுத்தாள்.

    2. குருபக்தி

    முத்தையா நகர் விரிவாக்கம். நான்காவது குறுக்குத்தெரு. பூஞ்செடிகள் சூழ்ந்த போர்டிகோ கூடிய சிரசில் டிஷ் ஆன்ட்டெனா சூடிய ஆடம்பர பங்களா அது.

    இரண்டாவது படுக்கையறையில் குப்புறப்படுத்திருந்தான் வினாயக். முதல் படுக்கையறையிலிருந்து அலார சப்தம் விடாது ஒலித்தது.

    ஐம்பது டெஸிபல் தொந்திரவு. போர்வையை விசிறியடித்தபடி எழுந்தான் வினாயக். வினாயக்கின் வயது 20. முதுகலை சமுத்திர தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படிப்பவன். அறைவிளக்கை உயிர்ப்பித்து மணி பார்த்தான். நேரம் அதிகாலை 4.30 மணி.

    ‘இனி தூங்கி கிழிச்சமாதிரிதான். வரவர இந்தப்பா லொள்ளு தாங்க முடியல. வருஷத்ல அறுபது எழுபதுநாள் ஐயப்பன் கோயிலுக்கு போய் விசேஷ அர்ச்சனைகள் யாரார் பேருக்கோ செஞ்சு தொலைக்கிராரு. ஒரு விசேஷ அர்ச்சனைக்கு 500 ரூபாய். வருஷத்துக்கு கணக்கு பார்த்தா தொகை எங்கயோ போய் நிக்குது. பண நஷ்டத்தோட இல்லாம வாரத்துக்கு ஒரு நா ரெண்டு நா தூக்க நஷ்டம் வேற!’ அறையை விட்டு வெளியே வந்தான்.

    அம்மா காபி போட்டுக்கொண்டிருந்தாள். அப்பாவோ குளியலறை புகுந்திருந்தார்.

    குட்மார்னிங்மா!

    வாடா வினாயக்!

    என்ன இன்னைக்கும் அப்பா ஐயப்பன் கோயிலுக்கு விசேஷ அர்ச்சனை ப்ளஸ் அபிஷேகம் பண்ண கிளம்பிட்டாரா?

    ஆமாடா!

    எதுக்காகம்மா இதெல்லாம்?

    நீ அவரோட பெர்ஷனல் ரூமை பாத்திருக்கல்ல. சுவர் முழுக்க பள்ளிகல்லூரி குரூப் போட்டோக்கள்தான். அவரோட பீரோ முழுக்க அவருக்கு பல்வேறு நிலைகளில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் ஆசிரியைகளின் நினைவு போற்றும் சமாச்சாரங்கள். அவருடைய டைரியில் அவரின் ஆசிரியர்களின் பிறந்தநாள் திருமணநாள் தேதிகள் குறித்து வைத்திருப்பார். அந்த நாட்களில் ஐயப்பன் கோயிலுக்குப்போய் குறிப்பிட்ட ஆசிரியர் பெயருக்கு விசேஷ அர்ச்சனை செய்வார். இறந்து போன ஆசிரியருக்கு திதி கொடுக்கவும் அவர் தவறுவதில்லை. கேட்டா ‘அவங்க நல்லா சொல்லிக்குடுத்ததினாலதானே நான் இந்த நிலைக்கு முன்னேறியிருக்கேன்’னுவார். நானும் அவர் சந்தோஷத்ல எதுக்கு தலையிடனும்னு தொடர்ந்து பார்வையாளரா இருக்கேன்!

    விசேஷ அர்ச்சனைக்கும் அபிஷேகத்துக்கும் நீ அவரோட போனதில்லையா?

    இல்லை!

    "அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1