Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Lara
Lara
Lara
Ebook683 pages3 hours

Lara

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸிட்னி ஷெல்டன் எழுதிய மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று லாரா. எப்போதும்போல் இதையும் எடிட்டர் எஸ்.ஏ.பி. அவர்கள்தான் தேர்ந்தெடுத்து என்னிடம் தந்து மொழி பெயர்க்கும்படி சொன்னார். அவருடைய ஆசியினாலும் வரி காட்டுதலினாலும் இக்கதை வாசகர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றது. நல்ல மொழிபெயர்ப்பாளன் என்று எனக்குப் பெயர் வாங்கித் தந்தது.

லாரா தொடர்கதை முடிவிலிருந்த சமயம் நான் எழுதிய நிகழ்ச்சியை இங்கே சேர்ப்பது பொருத்தமாக இருக்கும். அது:

லாரா தொடர்கதை வெளியான தினத்தன்று ஆசிரியரவர்கள் என்னைக் கூப்பிட்டு, “நீங்கள் பார்த்தீர்களா?” என்று விளையாட்டுச் செய்திகள் கொண்ட பக்கத்தைப் பிரித்து ஒரு செய்தியைக் காட்டினார்.

‘லாரா - 277’ என்று தலைப்புப் போடப்பட்டிருந்தது. மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் வீரர் லாரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மாட்சில் 277 ரன்கள் குவித்திருந்தார். ‘அங்கே ஒரு லாரா - இங்கே ஒரு லாரா! எப்படி!” - என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஆசிரியர். எங்கள் இருவருக்குமே கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு.

லாரா கதை முடியும் சமயம் அதே லாரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்சில் 375 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்திருக்கிறார்.

ஆசிரியரவர்களின் அறைக்குள்ளே போய், பேப்பரைக் காட்டி, ‘இது எப்படி!’ என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது. அவர்தான் இல்லை. விசேஷம் என்னவென்றால், ப்ரையன் லாரா மேலும் மேலும் கிரிக்கெட் சாதனைகளைப் புரிந்து கொண்டு வருகிறார். இங்கிலாந்தில் ஒரே இன்னிங்ஸில் 501 ரன்கள் எடுத்து, அவர் செய்துள்ள சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது.

இந்த நாவலை வாசிக்கப் போகும் எல்லா வாசகர்களும், கற்பனைப் பாத்திரமான லாராவையும் அசல் பாத்திரமான லாராவையும் போல வெற்றிகள் பெற வாழ்த்துகள்.

- ரா. கி. ரங்கராஜன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126704283
Lara

Read more from Ra. Ki. Rangarajan

Related to Lara

Related ebooks

Reviews for Lara

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Lara - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    லாரா

    Lara

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    முன்னுரை

    ஸிட்னி ஷெல்டன் எழுதிய மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று லாரா. எப்போதும்போல் இதையும் எடிட்டர் எஸ்.ஏ.பி. அவர்கள்தான் தேர்ந்தெடுத்து என்னிடம் தந்து மொழி பெயர்க்கும்படி சொன்னார். அவருடைய ஆசியினாலும் வரி காட்டுதலினாலும் இக்கதை வாசகர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றது. நல்ல மொழிபெயர்ப்பாளன் என்று எனக்குப் பெயர் வாங்கித் தந்தது.

    லாரா தொடர்கதை முடிவிலிருந்த சமயம் நான் எழுதிய நிகழ்ச்சியை இங்கே சேர்ப்பது பொருத்தமாக இருக்கும். அது:

    லாரா தொடர்கதை வெளியான தினத்தன்று ஆசிரியரவர்கள் என்னைக் கூப்பிட்டு, நீங்கள் பார்த்தீர்களா? என்று விளையாட்டுச் செய்திகள் கொண்ட பக்கத்தைப் பிரித்து ஒரு செய்தியைக் காட்டினார்.

    ‘லாரா - 277’ என்று தலைப்புப் போடப்பட்டிருந்தது. மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் வீரர் லாரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மாட்சில் 277 ரன்கள் குவித்திருந்தார். ‘அங்கே ஒரு லாரா - இங்கே ஒரு லாரா! எப்படி!" - என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஆசிரியர். எங்கள் இருவருக்குமே கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு.

    லாரா கதை முடியும் சமயம் அதே லாரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்சில் 375 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்திருக்கிறார்.

    ஆசிரியரவர்களின் அறைக்குள்ளே போய், பேப்பரைக் காட்டி, ‘இது எப்படி!’ என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது. அவர்தான் இல்லை.

    விசேஷம் என்னவென்றால், ப்ரையன் லாரா மேலும் மேலும் கிரிக்கெட் சாதனைகளைப் புரிந்து கொண்டு வருகிறார். இங்கிலாந்தில் ஒரே இன்னிங்ஸில் 501 ரன்கள் எடுத்து, அவர் செய்துள்ள சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது.

    இந்த நாவலை வாசிக்கப் போகும் எல்லா வாசகர்களும், கற்பனைப் பாத்திரமான லாராவையும் அசல் பாத்திரமான லாராவையும் போல வெற்றிகள் பெற வாழ்த்துகள்.

    - ரா. கி. ரங்கராஜன்

    லாரா

    1

    ‘1991’ ம் வருடம், செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி, இரவு எட்டு மணி.

    ராட்சத வெள்ளைச் சிறகு போல் ஆகாயத்தில் நீந்திக் கொண்டிருந்த அந்தத் தனியார் விமானத்தை அடர்த்தியான கருமேகங்கள் ஆட்டிப் படைத்து கொண்டிருந்தன.

    "மிஸ் லாரா, தங்கள் சீட்பெல்ட்டை இறுக்கமாய்க் கட்டிக்கொள்கிறீர்களா?’ என்று பைலட் தன் இருக்கையிலிருந்த வண்ணம் ஒலிபெருக்கியில் கேட்டார். அவர் குரலில் கவலை தெரிந்தது.

    பதில் இல்லை.

    மிஸ் லாரா... மிஸ் லாரா... உங்களைத்தான்...

    ஆழ்ந்த சிந்தனைகளிலிருந்து அவள் விடுபட்டு, ஒ... ஆமாம். என்றாள். மகிழ்ச்சி நிறைந்த கடந்த காலங்களில், மகிழ்ச்சி நிறைந்த இடங்களில் அவள் மனம் மூழ்கியிருந்தது.

    வசதியாக இருக்கிறீர்களா? இந்த ஆட்டம் இன்னும் கொஞ்சம் நேரத்தில் சரியாகிவிடும்.

    ஓ, சௌகரியமாக இருக்கிறேன், ரோஜர்.

    ‘ஹூம் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கக் கூடாதா? இருந்து, இந்த விமானம் முறிந்து விழக்கூடாதா’ என்று எண்ணிக் கொண்டாள் லாரா. அப்படி நேர்ந்தால் எவ்வளவு பொருத்தமான முடிவாக இருக்கும்! ஆனால் எங்கேயோ ஏதோவொன்று தப்பாகிவிட்டது. எல்லாமே தப்பாகி விட்டது. அதைத்தான் விதி என்கிறார்கள் போலிருக்கிறது. விதியை எதிர்த்துப் போராட யாரால் முடியும்?

    கடந்த வருடத்தில் அவளுடைய வாழ்க்கை கட்டு மீறிக் கன்னா பின்னாவென்று சீர்குலைந்துவிட்டது. அனைத்தையுமே இழந்துவிடும் அபாயம் ஏற்பட்டிருந்தது.

    இனிமேல் எதுவும், எதுவுமே தப்பாகப் போகாது என்று எண்ணிக் கசப்புடன் சிரித்துக் கொண்டாள் லாரா. தப்பாகப் போவதற்கு என்ன மிச்சம் இருக்கிறது!

    காக்பிட்டின் கதவைத் திறந்து கொண்டு பைலட் வெளியே வந்தார். தன் பிரயாணியை வியந்து போற்றும் பார்வையுடன் ஒரு நிமிடம் நின்றார். என்ன அழகான பெண்மணி! பளபளக்கும் கரிய கூந்தல் தூக்கி வாரப்பட்டு மகுடம் போல் முடியப்பட்டிருந்தது. அப்பழுக்கில்லாத சருமம், அறிவுக் கூர்மை நிறைந்த பூனைக் கண்கள். ரெனோவிலிருந்து புறப்பட்ட பிறகு உடை மாற்றிக் கொண்டிருந்தாள். வெள்ளை நிற இரவு கவுன் சற்றே தோளிலிருந்து இறங்கி, ஆளை மயக்கும் மேனி லேசாய்த் தெரிந்தது. வைரமும் மாணிக்கமும் கலந்த நெக்லெஸ் கழுத்தை அலங்கரித்தது.

    பைலட்டுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவளைச் சுற்றியிருந்த சாம்ராஜ்யம் இடிந்து நொறுங்கிச் சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதமாகப் பத்திரிகைகள் அவளை ஈவிரக்கமில்லாமல் தாக்கிக் கொண்டிருக்கின்றன, அப்படியும் இவளால் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது!

    போன் வேலை செய்கிறதா, ரோஜர்?

    இல்லை என்று தோன்றுகிறது மிஸ் லாரா. இந்தப் புயல் காரணமாகப் பல கோளாறுகள். லா கார்டாவை அடைய ஒரு மணி நேரம் தாமதமாகும். ஸாரி...

    ‘என் பிறந்த நாள் பார்ட்டிக்கு லேட்டாகத்தான் போக முடியும்.’ என்று எண்ணிக் கொண்டாள் லாரா. இன்னேரம் எல்லாரும் வந்திருப்பார்கள். அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதி, நியூயார்க் கவர்னர், மேயர், ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரை டஜன் நாடுகளிலிருந்து - பைனான்சியர்கள்... யாரையெல்லாம் கூப்பிட வேண்டும் என்று அவளே பட்டியல் தயாரித்துத் தந்திருந்தாள்.

    காமெரான் பினாஸா என்று தன் ஒட்டலின் விருந்து மண்டபம் இந்த நிமிடம் எப்படி இருக்கும் என்று அவளால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. பெரிய பெரிய லஸ்தர் விளக்குகள் வைரம் போல் வெளிச்சத்தை வாரியிறைக்கும்... இரு நாறு விருந்தினர்களுக்காக இருபது மேஜைகள் போடப்பட்டிருக்கும். அவற்றின்மீது அருமையான லினன் துணி விரிக்கப்பட்டு, வெள்ளியிலும் உயர்ந்த ரகப் பீங்கான்களிலும் பாத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். மேஜைகளின் நடுவே வெள்ளை வெளேரென்ற பூங்கொத்துக்கள் வைக்கப்பட்டிருக்கும்...

    வெளியே பரந்த வரவேற்பறையில், இரண்டு புறத்திலும் மதுபான பார்கள், நடுவே ஏராளமாய் உணவு வகைகள்- பஃபே விருந்து. பக்கெட் பக்கெட்டாக ஐஸில் போட்டு வைத்துள்ள ஷாம்பேய்ன் புட்டிகள். பத்து அடுக்குக் கொண்ட பர்த்டே கேக் சமையலறையில் தயாராகிக் கொண்டிருக்கும். வேலையாட்களும் பணிப் பெண்களும் அவரவர் இடத்தில் தயாராக நின்றிருப்பார்கள்.

    நடன மண்டபத்தில் ஓர் இசைக் குழு காத்திருக்கும். அவர்கள் இசைக்கப் போகும் சங்கீதத்திற்கேற்ப விருந்தினர்கள் நடனமாடுவார்கள். ராத்திரி பூரா கேளிக்கை

    அவளுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக.

    நாற்பதாவது பிறந்த நாளை.

    டின்னர் அற்புதமாக இருக்கும். என்னென்ன ஐட்டம் இருக்க வேண்டுமென்று அவளே பார்த்துப் பார்த்து மெனு தயாரித்துத் தந்திருந்தாள்.

    மூச்சை நிறுத்தக்கூடிய பிரமிப்பான பார்ட்டி நடக்கப் போகிறது.

    நான் தலையை நிமிர்த்தி நடப்பேன். விருந்தினர்களை நேருக்கு நேராகச் சந்தித்துப் பேசுவேன்.

    எனக்கு எதுவுமே நேரவில்லை என்பது போல.

    நான் சாதாரணப் பெண் அல்ல. நான் லாரா லாரா காமெரான்.

    விமான தளத்தில் இறங்கியபோது ஒன்றரை மணி லேட்டாகிவிட்டது.

    பைலட்டை நோக்கித் திரும்பினாள் லாரா. இன்று ராத்திரி நாம் ரெனோவுக்குத் திரும்ப வேண்டும், ரோஜர். எத்தனை நேரமானாலும் பரவாயில்லை.

    நான் தயாராக இருப்பேன், மிஸ் லாரா.

    வெளியே அவளுக்காக லிமோஸின் காருடன் டிரைவர் காத்திருந்தான்.

    நீங்கள் இன்னும் வரவில்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன், மிஸ் லாரா.

    பருவ நிலை சரியில்லாததால் விமானம் தாமத மாகிவிட்டது. சீக்கிரமாய் வண்டியை ஓட்டு

    இதோ மேடம்.

    காருக்குள்ளிருந்த டெலிபோனை எடுத்து ஜெர்ரியின் நம்பரைச் சுழற்றினாள்.

    பார்ட்டிக்கான எல்லா ஏற்பாடுகளையும் அவன்தான் கவனித்துக் கொண்டிருந்தான். விருந்தினர்கள் வசதியாக இருக்கிறார்களா என்று அவனை விசாரிக்க விரும்பினாள்.

    ஆனால் மணி அடித்துக் கொண்டிருந்தது. யாரும் எடுக்கவில்லை.

    நடன மண்டபத்தில் இருக்கிறான் போலிருக்கிறது.

    வேகமாய்ப் போ, மாக்ஸ்.

    சரி மேடம்.

    காமெரான் பிளானபா ஒட்டலைக் காணும் போதெல்லாம் அவள் நெஞ்சு பெருமையில் விம்முவது வழக்கம், காரணம், அது அவளே கட்டிய சொந்தப் படைப்பு. ஆனால் இப்போது அதைப் பற்றி நினைக்கக் கூட நேரம் இருக்க வில்லை. நடன மண்டபத்தில் எல்லாரும் காத்துக் கொண்டிருப்பார்கள்.

    சுழல் கதவைத் திறந்து கொண்டு பிரம்மாண்டமான வெராந்தாவுக்குள் நுழைந்தாள். உதவி மானேஜரான கார்லோஸ் அவளைக் கண்டதும் விரைந்து வந்தார்.

    மிஸ் காமெரான். வந்து...

    எல்லாம் அப்புறம். என்று கூறிவிட்டு, நடையைத் தொடர்ந்தாள்.

    நடன மண்டபத்தின் கதவுக்கு வெளியே நின்று சீராக மூச்சு விட்டு, தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

    அவர்களை எதிர்நோக்க நான் தயார்.

    புன்சிரிப்புடன் கதவைத் திறந்தவன்.

    அடுத்த வினாடி அதிர்ச்சியில் சிலையாகி நின்றாள்.

    மண்டபம் இருட்டில் மூழ்கியிருந்தது.

    தனக்கு ஸர்ப்ரைஸ் தர வேண்டுமென்று திட்ட மிட்டிருக்கிறார்களா, என்ன?

    கையைத் துழாவி, கதவின் அருகேயிருந்த ஸ்விட்சைப் போட்டாள்.

    அந்த விஸ்தாரமான மண்டபமெங்கும் விளக்குகள் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சின. ஆனால்-

    யாரும் இல்லை. ஒருத்தரென்றால் ஒருத்தர் கூட இல்லை.

    உறைந்து போய் நின்றாள் லாரா.

    இருநூறு விருந்தினர்களும் எங்கேதான் போனார்கள்? என்னதான் ஆயிற்று?

    சரியாய் எட்டு மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தோமே? இப்போது மணி எட்டாகப் போகிறதே!

    அவ்வளவு பேரும் எப்படி மாயமாய் மறைந்திருக்க முடியும்? ஏதோ இட்சிணி வேலை மாதிரியால்லவா இருக்கிறது?

    ஆளே இல்லாது மண்டபத்தின் எல்லாப் பக்கங்களிலும் பார்வையைச் சுழற்றினாள்.

    காலி காலி!

    அவள் உடம்பு நடுங்கியது.

    போன வருஷம் இதே நாள், இதே பிறந்த நாள் பார்ட்டியின் போது, இதே மண்டபம்-

    அவளுடைய நண்பர்களால் நிறைந்து வழிந்தது. சங்கீதமும் சிரிப்பும் அலைமோதின.

    நன்றாய் நினைவிருக்கிறது...

    சரியாய் ஒரு வருஷம் முன்பு, இதே தேதியில்.

    காலை ஐந்து மணிக்குத் தேகப் பயிற்சியில் ஆரம்பித்து அடுக்கடுக்காக எவ்வளவு வேலைகள் இருந்தன!

    டி.வி. யில் பேட்டி, ஜப்பானிய பாங்க்கர்களுடன் விவாதம், போன் கால்கள், கடிதங்கள், மேயருடன் சந்திப்பு, பெரிய பெரிய தொழிலதிபர்களுடன் விருந்து, பேச்சு வார்த்தை...

    எல்லாம் முடிந்து இரவு எட்டு மணிக்கு, கேமரான் பிளாஸா நடன மண்டபத்தில் பிறந்த நாள் பார்ட்டி நடை பெற்றது.

    அன்று காலை ஐந்து மணிக்கு அவள் தேகப் பயிற்சிக்கான உடைகளை அணிந்துகொண்டு காத்திருந்தாள். பயிற்சியாளர் கென் லேட்டாக வந்தான்.

    ஸாரி மிஸ் லாரா. அலாரம் அடிக்காமல் இருந்து விட்டது...

    சரி, சரி. சீக்கிரம் ஆரம்பி. இன்று எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது.

    அரை மணி நேரம் தண்டால் எடுத்த பிறகு விறுவிறு வென்று மற்ற உடற்பயிற்சிகளைச் செய்தாள்.

    ‘அப்பா இவளுக்கு எப்படிப்பட்ட உடம்பு’ இருபத்தொரு வயசு இளம் பெண் தோற்றாள்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் கென். இங்கே வருவதென்றால் அவனுக்குத் தனி மகிழ்ச்சி. லாராவைப் பார்க்க... லாராவின் அருகில் இருக்க... லாரா எப்படி என்று யாரேனும் கேட்டால், ‘அவள் வயது பத்து’ என்று சொல்வான்.

    கடினமான பயிற்சிகளைச் சுலபமாகச் செய்து முடித்தாள் அவள். ஆனால் அவள் மனம் அதிலே ஈடுபடவில்லை.

    பயிற்சிகள் முடிந்ததும் கென் புறப்பட்டான். வருகிறேன், மேடம். உங்களை டி.வி. யில் ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் பார்க்கப் போகிறேன். என்றான்.

    என்னது என்றாள் லாரா. அந்தத் தொடர் நிகழ்ச்சியில் அன்று அவள் பேச வேண்டுமென்று ஏற்பாடு. மறந்தே போய் விட்டது. ஜப்பானிய பாங்க்காரர்களைச் சந்திக்கப் போவது குறித்தே எண்ணிக் கொண்டு இருந்து விட்டாள்.

    நாளை வருகிறேன் மேடம்.

    நாளைக்கும் லேட்டாய் வராதே.

    ஷவரில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு காலைச் சிற்றுண்டி அருந்தினாள். திராட்சைப் பழம், பயறு பருப்பு வகைகள், பாலில்லாத டீ இவைதான் அவளுடைய காலை உணவு.

    சாப்பிட்டு முடித்ததும் படிப்பு அறைக்குச் சென்றாள். செக்ரட்டரியைக் கூப்பிட்டு, வெளிநாடுகளுக்குப் போட வேண்டிய கால்களை நான் ஆபீஸ் வந்த பிறகு போட்டுக் கொடு, ஏழு மணிக்கு டி.வி. நிலையத்தில் இருக்க வேண்டும். டிரைவர் மாக்ஸிடம் காரைக் கொண்டு வரும்படி சொல்லு.

    ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சி நல்லபடி நடந்தது. அதை நடத்தும் ஜோன் லண்டன் என்ற பெண் மணி வழக்கம் போல் மதிப்பும் மரியாதையுமாகப் பேசினாள்.

    நீங்கள் கடைசியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது உலகத்திலேயே மிக உயரமான அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, கடைக்கால் எடுத்திருந்தீர்கள். நினைவிருக்கிறதா? ஏறத்தாழ நாலு வருஷம் இருக்கும்...

    லாரா தலையசைத்தாள். ஆமாம், ஆமாம். அடுத்த வருஷம் கட்டிடம் முடிந்துவிடும்.

    வீட்டு மனைகள் வாங்குவது, விற்பது, கட்டிடம் கட்டுவது - இது போன்ற ரியல் எஸ்டேட் பிஸினளெல்லாம் பொதுவாக ஆண்களின் சாம்ராஜ்யமாயிற்றே? அதிலே நீங்கள் புகுந்து ரொம்ப வெற்றிகரமாக விளங்குகிறீர்கள்? உதாரணமாக ஒரு கட்டிடம் எழுப்ப மனை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

    மனையை நான் தேர்ந்தெடுப்பதில்லை. மனைதான் என்னைத் தேர்ந்தெடுக்கிறது. என்றாள் லாரா, "காரில் போய்க் கொண்டிருப்பேன். ஒரு காலி மனை எதிர்ப்படும். ஆனால் அதைக் காலி மனையாக நான் பார்க்க மாட்டேன். அதிலே ஓர் அழகான ஆபீஸ் கட்டிடத்தைத்தான் பார்ப்பேன். அல்லது அருமையான குடியிருப்பு அபார்ட்மெண்ட்டைப் பார்ப்பேன். அங்கே ஜனங்கள் சந்தோஷமாக, வசதியாக வசிப்பதைக் காண்பேன். நான் கனவு காண்கிறேன்.

    கனவுகளைப் பலிக்கும்படி செய்கிறீர்களே, அது தான் விசேஷம் என்று பாராட்டினாள் அந்தப் பெண்.

    ஜப்பானிய பாங்க்காரர்கள் ஏழே முக்காலுக்கு வருவதென்று ஏற்பாடாகியிருந்தது.

    முந்தின இரவுதான் அவர்கள் டோக்கியோவிலிருந்து வந்திருந்தார்கள். பன்னிரண்டு மணி நேர விமானப் பயணம்.

    அவ்வளவு காலையில் நாங்கள் வருவது கஷ்டமாக இருக்குமோ? என்று அவர்கள் முணுமுணுத்தார்கள். ஆனால் லாரா, ஸாரி, ஜென்ட்டில்மென். எனக்கு வேறு நேரமே கிடையாது. நமது மீட்டிங் முடிந்தவுடனேயே நான் தென் அமெரிக்காவுக்குக் கிளம்ப வேண்டியிருக்கிறது என்று சொல்லிவிட்டாள்.

    இரவு பகல் மாறிப் போன குழப்பத்தால் இரவு பூரா அவர்கள் சரியாகத் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்டிருப்பார்கள். அது தெரிந்து, வேண்டுமென்றேதான் காலையில் பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்திருந்தாள் லாரா.

    2

    ஜப்பானிய ஃபைனான்ஸியர்கள் மொத்தம் நாலு பேர் வந்திருந்தார்கள். குள்ளமான தோற்றம், மரியாதையான நடத்தை. ஜப்பானிய மன்னர்களின் பட்டாக்கத்தியை போலக் கூர்மையான அறிவு.

    நியூயார்க் ஆறாவது அவென்யூவில் இருந்த காமெரான் ஸென்ட்டர் என்னும் அலுவலகத்தில் சந்திப்பு நடை பெற்றது. லாரா திட்டமிட்டிருக்கும் ஓட்டல் காம்ப்ளெக்ஸில் நூறு கோடி டாலர் முதலீடு செய்வதற்காக அவர்கள் வந்திருந்தார்கள். விஸ்தாரமான கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வந்ததும் ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுகளை லாராவிடம் கொடுத்து வணக்கம் சொன்னார்கள். லாரா நன்றி கூறி, பதிலுக்குத் தானும் பரிசுகள் வழங்கினாள். பரிசுகள் சாதாரண மணிலா அல்லது பழுப்புக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்தன. அது லாரா தன் செக்ரட்டரிக்கு இட்டிருந்த கட்டளை. ஜப்பானியர்களுக்கு வெள்ளை நிறம் மரணத்தைக் குறிக்கும் என்பதும், கண்ணை உறுத்தும் வண்ணங்கள் அவர்களுக்குப் பிடிக்காது என்றும் லாராவுக்குத் தெரியும்.

    லாரா திட்டமிட்டிருந்தபடியே அந்த ஜப்பானியர்கள் இன்னும் தூக்கக் கலக்கம் அகலாமல் இருந்தார்கள். லாராவின் உதவிப் பெண் ட்ரிஷியா, லாரா சொல்லியிருந்தபடி அவர்களுக்கு டீயும் லாராவுக்குக் காப்பியும் கொண்டு வந்து வழங்கினாள். காப்பியாயிருந்தால் தேவலை என்று வந்திருந்தவர்களுக்குத் தோன்றியது. மரியாதையை முன்னிட்டு மறுப்புச் சொல்லாமல் டீயையே அருந்தினார்கள்.

    கோப்பைகள் காலியானவுடன் ட்ரிஷியா மறுபடியும் டீயையே நிரப்பினாள். அதுவும் லாரா முன்னதாகவே சொல்லியதிருந்ததுதான்.

    லாராவின் இணை நிர்வாகியான கெல்லர் உள்ளே வந்தார். ஐம்பது வயதிருக்கும். சோனி மனிதர். தலை கலைந்து, உடைகள் கசங்கியிருந்தன. அப்போது தான் படுக்கையிலிருந்து எழுந்து வந்தவர் மாதிரியே எப்போதும் காட்சியளிப்பார் அவர்.

    வந்திருந்தவர்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தாள் லாரா. முதலீடு சம்பந்தமான விவரங்களை அவர்களுக்கு வழங்கினார் கெல்லர்.

    பார்த்தால் உங்களுக்கே தெரியும், ஜென்டில்மென். என்றாள் லாரா. இந்த ஓட்டல் காம்ப்ளெக்ஸ்க்கான முதல் ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. விருந்தாளிகளுக்காக எழுநூற்றிருபது பகுதிகள் இருக்கும். பொதுவான இடம் முப்பதாயிரம் சதுர அடி... ஆயிரம் கார்களை நிறுத்துவதற்காக இட வசதி செய்திருக்கிறோம்.

    லாராவின் குரல் சுறுசுறுப்புடன் இயங்கியது. அவ்வளவுக்கவ்வளவு அந்த ஜப்பானியர்கள் தங்கள் தூக்கக் கலக்கத்தை விரட்டியடிக்கப் படாத பாடுபட்டார்கள். பன்னிரண்டு மணி நேர விமானப் பயணத்துக்குப் பிறகு நேற்றிரவுதான் வந்திருந்தார்கள். எனவே ‘ஜெட்லாக்’ என்னும் பகலிரவுக் குழப்பத்திலிருந்து இன்னும் விடுபட வில்லை.

    இரண்டு மணி நேரத்தில் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது- முற்ற முழுக்க வெற்றிகரமாக. அது லாரா எதிர்பார்த்ததுதான். ஐம்பதாயிரம் டாலர் கடன் வாங்குவதைக் காட்டிலும் நாறு கோடி டாலர் முதலீடு செய்யும்படி பண்ணுவது சுலபமான காரியம் என்பதை அவள் அனுபவ பூர்வமாக எப்போதோ அறிந்திருந்தாள்.

    ஜப்பானியர்கள் புறப்பட்டு சென்றதும், லாராவின் பொதுத் தொடர்பு அதிகாரியான ஜெர்ரி வந்தான். ஹாலிவுட்டில் விளம்பர நிர்வாகியாக இருந்து அனுபவம் பெற்றவன்.

    அன்று காலை டி.வி. யில் லாரா கொடுத்த பேட்டி பிரமாதமாக அமைந்திருந்தது என்று கூறிவிட்டு, ஏகப்பட்ட பேர் டெலிபோனில் கூப்பிட்டுப் பாராட்டினார்கள். என்று தெரிவித்தான். பிறகு என்னென்ன பிரபலமான பத்திரிகைகளில் அவளைப் பற்றிய கட்டுரையோ அட்டைப் படமோ வருகிறதென்பதை விவரித்தான்.

    லாரா தன் மேஜையை நோக்கி நடந்தபடி, ம்... பரவாயில்லை என்று மட்டும் சொன்னான்.

    ஃபார்ச்சூன் பத்திரிகையிலிருந்து பேட்டிக்காக இன்று மாலை வருகிறார்கள் என்றான் ஜெர்ரி.

    இல்லை. அதை மாற்றிவிட்டேன்.

    ஜெர்ரிக்கு ஆச்சரியம். ஏன்?

    அந்தப் பத்திரிகையின் நிருபரை இன்று என்னுடன் பகலுணவுக்கு வரும்படி சொல்லியிருக்கிறேன்.

    ஆ. ஆமாம். அவர்களைக் கொஞ்சம் சரிப்படுத்த வேண்டியதுதான்.

    இன்டர்காம் பட்டனை அழுத்தி, கேத்தி, நீ வரலாம். என்றாள்.

    எஸ் மேடம், என்று பதில் வந்தது.

    நீங்கள் போகலாம் ஜெர்ரி என்று விடை கொடுத்தாள் லாரா. நீங்களும் உங்கள் ஆட்களும் லாரா டவர்ஸ் பற்றியே முழுக் கவனம் செலுத்த வேண்டும்... என்ன?

    செலுத்திக் கொண்டுதான் இருக்கிறோம், மேடம்...

    போதாது. இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். லாரா டவர்ஸ் பற்றிய கட்டுரை ஒவ்வொரு தினசரியிலும் ஒவ்வொரு பத்திரிகையிலும் வரவேண்டும். உலகத்திலேயே உயரமான கட்டிடமாக இருக்கப் போகிறது அது. ஆமாம், உலகத்திலேயே! யாரைப் பார்த்தாலும் அதைப் பற்றியே பேச வேண்டும். கட்டி முடிக்கப்பட்டதும், நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு ஜனங்கள் வந்து, கடைக்கு இடம் வேண்டும் என்றும், குடியிருக்க அபார்ட்மெண்ட் வேண்டும் என்றும் நம்மைக் கெஞ்ச வேண்டும்.

    சரி மேடம்.

    அவன் புறப்பட்டுச் சென்றதும் லாராவின் அலுவலக செக்ரட்டரியான கேத்தி வந்தாள். முப்பது வயதுள்ள நீக்ரோ பெண். கச்சிதமாக உடையுடுத்தி, பளிச்சென்று இருந்தாள்.

    அந்தப் பத்திரிகை நிருபரைச் சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறோமே, அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை விசாரித்து வைத்துக் கொண்டாயா?

    தெரிந்து கொண்டேன், மேடம். நன்றாக ரசித்து ருசித்துச் சாப்பிடுகிறவராம் அவர். என்று கூறிய கேத்தி, என்னென்ன உணவுகளுக்குப் பிரத்தியேகமாக ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்தாள்.

    நல்லது. என்னுடைய பிரைவேட் டைனிங் அறையில் நாங்கள் சாப்பிடும்படி ஏற்பாடு செய்.

    அந்தப் பேட்டி அதிக நேரம் போய்விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும், மேடம். ஏனென்றால் மெட் ரோபாலிட்டன் பாங்க்கர்களுடன் உங்களுக்கு இரண்டரை மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறது.

    அதை மூன்று மணிக்கு மாற்று. அவர்கள் இங்கேயே வரும்படி ஏற்பாடு பண்ணு.

    கேத்தி அதைக் குறித்துக் கொண்டாள். உங்களுக்கு வந்திருக்கும் கடிதங்களைப் படித்துச் சொல்லட்டுமா மேடம்?

    சொல்லு.

    குழந்தைகளுக்கான ஃபௌண்டேஷன் உங்களைச் சிறப்பு விருந்தினராக வரும்படி அழைத்திருக்கிறது. இருபத்தெட்டாம் தேதி.

    வேண்டாம். நான் மிகவும் சந்தோஷப்பட்டதாக எழுதி, நன்கொடை செக் அனுப்பிவிடு.

    செவ்வாய்க்கிழமையன்று டுல்ஸாவில் ஒரு மீட்டிங்...

    ரத்து செய்துவிடு.

    மன்ஹாட்டன் மகளிர் சங்கம் உங்களை விருந்துக்குக் கூப்பிட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை.

    வேண்டாம். நன்கொடைக்காகத்தான் - கூப்பிடுகிறார்கள் என்று தோன்றினால் செக் அனுப்பு.

    நீங்கள் விருந்துக்கு வந்து சொற்பொழிவு ஆற்று வேண்டுமென்று அறிவியக்கக் கூட்டமைப்பு அழைத்திருக்கிறது. நாலாம் தேதி.

    அதற்கு என்ன பண்ணலாம் என்று யோசனை பண்ணி வை.

    உடற்பயிற்சியாளர் கழகத்தில் நன்கொடை திரட்டுவதற்காக ஒரு கூட்டம் நடக்கிறதாம். சிறப்பு விருந்தினராக நீங்கள் வரவேண்டுமென்று கூப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அதே தேதியில் நீங்கள் சான் பிரான்ஸிஸ்கோவில் இருக்க வேண்டும்.

    சரி, இவர்களுக்கும் நன்கொடை செக் அனுப்பி விடு.

    ஸர்ப் தம்பதி அடுத்த சனிக்கிழமை ஒரு டின்னர் பார்ட்டி வைத்திருக்கிறார்கள்.

    போனால் நன்றாயிருக்கும். பார்க்கலாம் என்றாள் லாரா. க்றிஸ்டியன் சர்பும் அவர் மனைவி டெபோராம் நல்ல நண்பர்கள், அவர்களைப் பார்ப்பது லாராவுக்குப் பிடித்தமான விஷயம்.

    அன்றைய நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டாள் லாரா.

    கேத்தி, என்னைப் பார்த்தால் எவ்வளவு பேர் தெரிகிறது?

    என்னமேடம்?

    என்னை நன்றாகப் பார். எவ்வளவு பேர் தெரிகிறேன்?

    நீங்கள் ஒருத்தர்தான், மேடம்.

    ஆமாம். இருப்பது நான் ஒருத்திதான். இன்று ஒரே நாளில் இரண்டரை மணிக்கு மெட்ரோபாலிடன் பாங்க்கர்ஸ், நாலு மணிக்கு வட்டாரக் கமிஷன், ஐந்து மணிக்கு மேயர், ஆறேகால் மணிக்கு ஆர்க்கிடெக்டுகள், ஆறரை மணிக்கு ஹவுசிங் கமிஷன், ஏழரைக்குக் காக்டெயில் பார்ட்டி, எட்டு மணிக்கு என் பிறந்த நாள் பார்ட்டி. இவ்வளவையும் என் ஒருத்தியாலே சமாளிக்க முடியுமா? அடுத்த தடவை எனக்காக நிகழ்ச்சிகள் தயாரிக்கும்போது மூளையை உபயோகிக்கப் பார்...

    "ஸாரி மேடம். நீங்கள் சொன்னபடி...’

    நான் சொல்வதெல்லாம் நீ உன் மூளையை உபயோகித்து வேலை செய்ய வேண்டும் என்பதுதான். என்னைச் சுற்றி மக்குகள் இருப்பது எனக்குப் பிடிக்காது. ஆர்க்கி டெக்டடுகள், ஹவுசிங் கமிஷன் இரண்டையும் வேறு நேரத்துக்கு மாற்றி அமை.

    சரிமேடம். என்றாள் கேத்தி, கொஞ்சம் ரோஷத்துடன்.

    குழந்தை எப்படி இருக்கிறது?

    அந்தக் கேள்வி கேத்தியை ஆச்சரியப்படுத்தியது. டேவிட் டேவிட்டைக் கேட்கிறீர்களா? நன்றாயிருக்கிறான். ஃபைன்.

    இப்ப நன்றாய் வளர்ந்திருப்பானே?

    இரண்டு வயசாகிறது. மேடம்.

    எந்த ஸ்கூலில் சேர்ப்பது என்று ஏதாவது யோசனை பண்ணி வைத்திருக்கிறாயா?

    இன்னும் இல்லை. அதற்குள்ளேயா...

    அப்படி எண்ணாதே. தப்பு. நியூயார்க்கில் குழந்தையை நல்ல ஸ்கூலில் சேர்க்க வேண்டுமென்றால், குழந்தை பிறப்பதற்கு முன்பே யோசனை செய்ய ஆரம்பிக்கணும்.

    மேஜை மீதிருந்த சின்ன நோட்டில் குறித்து வைத்துக் கொண்டான் லாரா. டால்ட்டன் ஸ்கூலின் பிரின்ஸிபாளை எனக்குத் தெரியும். டேவிட்டின் பெயரை பதிவு செய்து வைத்துக் கொள்ளுபடி சொல்கிறேன்.

    ரொ... ரொம்பத் தாங்க்ஸ் மேடம்.

    லாரா அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை, சரி, நீ போகலாம்.

    கேத்தி வெளியேறினாள். தன் எஜமானியம்மாளை நேசிப்பதா, வெறுப்பதா என்று அவளுக்குத் தெரியவில்லை. லாரா என்ட்டர்ப்ரைஸஸ் நிறுவனத்தில் அவள் வேலைக்குச் சேர்ந்தபோது, பலபேர் அவளைப் பயமுறுத்தினார்கள். அந்த பொம்பளை ஒரு இரும்புப் பட்டாம் பூச்சி, காலில் சக்கரம் கட்டிக் கொண்டிருக்கிற பிசாசு என்றார்கள். லாராவிடம் செக்ரட்டரியாக இருப்பவர்கள், எத்தனை நாள் வேலை செய்தோம் என்று கேலண்டரைப் பார்ப்பதில்லை. கடிகாரத்தைத்தான் பார்ப்பார்கள் என்றார்கள்.

    முதல்முறை லாரா அவளைப் பேட்டி கண்டது கேத்திக்கு நன்றாய் நினைவிருந்தது.

    அரை டஜன் பத்திரிகைகளில் அவள் லாராவின் புகைப்படங்களைப் பார்த்திருந்தாள். ஆனால் அதையெல்லாம் தூக்கி அடிக்கிற மாதிரி இருந்தார் நேரில் பார்த்த போது. என்ன அசத்தலான அழகு!

    கேத்தியைப் பற்றிய விவரங்களை லாரா தெரிந்து வைத்திருந்தாள், நிமிர்ந்து பார்த்து, உட்கார் கேத்தி. என்றாள். அவளிடமிருந்து ஒரு சுறுசுறுப்பு அலை புறப்பட்டு, சுற்றுப்புறச் சூழ்நிலைகளையெல்லாம் வியாபிப்பது போல இருந்தது கேத்திக்கு.

    "என்னோட ரெண்டு செக்ரட்டரிகள் போய்விட்டார்கள். எல்லாம் ஒரே கந்தல் கூளமாக இருக்கிறது இங்கே. அவசரம், தெருக்கடி என்றால் உன்னால் சமாளிக்க முடியுமா?’

    முடியுமென்றுதான் நினைக்கிறேன்.

    நினைக்கிறேன் கினைக்கிறேனெல்லாம் வேண்டாம். முடியுமா, முடியாதா?

    இந்த வேலையே வேண்டாம் என்று அந்த நிமிடம் கேத்திக்குத் தோன்றியது. இருந்தாலும், முடியும், மேடம் என்றாள்.

    நல்லது. ஒரு வாரத்துக்கு நீ எப்படி வேலை செய்கிறாய் என்று பார்க்கிறேன். இங்கே லாரா என்ட்டர் பிரைஸஸில் செய்யும் வேலையை பற்றியோ, என்னைப் பற்றியோ வெளியே மூச்சு விடமாட்டேன் என்று நீ எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும். அதாவது, பேட்டி, புத்தகம் முதலிய சமாசாரம் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது. இங்கே நடப்பது அத்தனையும் அந்தரங்கமானவை புரிகிறதா?

    புரிகிறது.

    ஆல்ரைட்.

    இப்படித்தான் கேத்தியின் வேலை ஆரம்பமாயிற்று. ஐந்து வருடங்களுக்கு முன்பு, இந்தக் காலத்தில் எஜமானியம்மாளைக் கேத்தி வெறுத்திருக்கிறாள்; நேசித்திருக்கிறாள்; வியந்திருக்கிறாள்; சபித்திருக்கிறாள். ஆரம்பத்தில் ஒருநாள் அவள் கணவன், அந்தம்மாளைப் பற்றி என்னென்னவோ சொல்கிறார்களே, எப்படி இருக்கிறாள்? என்று கேட்டான்.

    கஷ்டமான கேள்வி. வித்தியாசமான பெண். பார்த்ததும் மயக்கம் போட்டு விழுகிற மாதிரி அழகு, எனக்குத் தெரிந்து இந்த மாதிரி உழைக்கிறவர் யாருமே கிடையாது. எப்போதுதான் தாங்குவாளோ, கடவுளுக்கே வெளிச்சம். எந்த வேலையும் அப்பழுக்குச் சொல்ல முடியாதபடி கனகச்சிதமாக இருக்க வேண்டும். அவள் கீழே வேலை செய்கிறவர்கள் செத்தார்கள்! அவள் அலாதியான மேதை. சில சமயம் அற்பத்தனமாக இருப்பாள். சில சமயம் வஞ்சம் தீர்க்கிற மாதிரி இருப்பாள், சில சமயம் நம்பவே முடியாத அளவுக்குத் தாராளமாய் இருப்பாள்.

    கேத்தியின் கணவன் புன்னகை செய்து, "மொத்தத்தில் ஒரு பெண் என்கிறாய்?’ என்றான்.

    கேத்தி புன்னகை செய்யவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்து.

    அவள் எப்படிப்பட்டவள் என்று எனக்குப் புரிய வில்லை. ஒரோர் சமயம் பயமாய்க்கூட இருக்கிறது.

    சேசே ரொம்பத்தான் ஒவராகச் சொல்கிறாய்?

    இல்லை... நிஜமாய்த்தான் சொல்கிறேன். யாராவது அவளுக்குக் குறுக்கே நின்றால்... கொலை கூடச் செய்வாள். என்றாள் கேத்தி.

    வெளிநாட்டுக் கால்களையும், ஃபேக்ஸ்களையும் கவனத்தானதும், பஸ்ஸரை அழுத்தி சார்லியை வரச் சொன்னாள் லாரா. நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் அவனுடைய பொறுப்பில் இருந்தன.

    ஒரு நிமிடத்துக்கெல்லாம் சார்லி வந்தான். என்ன, மேடம்?

    நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு நீ கொடுத்திருக்கும் பேட்டியைப் படித்தேன். என்றாள் லாரா.

    அவன் முகம் பிரகாசமாயிற்று. நான் இன்னும் பார்க்கவில்லை. எப்படி இருந்தது மேடம்?

    லாரா என்ட்டர்ப்ரைஸஸ் பற்றியும் நமக்கு இருக்கும் சில பிரச்சினைகனைப் பற்றியும் நீ அதில் சொல்லியிருந்தாய்.

    அவன் முகம் கறுத்தது. வந்து... அந்த ரிப்போர்ட்டர்... நான் சொன்னது சிலதை... தப்பாய் எழுதியிருக்கலாம்...

    ரைட், நீ வேலையிலிருந்து நின்று கொள்.

    என்ன... ஏன்?

    நீ வேலையில் சேர்ந்தபோது, யாருக்கும் எந்தப் பேட்டியும் கொடுப்பதில்லை என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறாய்.

    வந்து... யார்... யார் என் வேலையைப் பார்ப்பார்கள்?

    அதற்கெல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது. நீ போகலாம்... என்றாள் லாரா.

    3

    ஃபார்ச்சூன் பத்திரிகை நிருபருடன் விருந்து சாப்பிட்டு முடித்தாள் லாரா. நிருபர் பெயர் தாம்ஸன். தடித்த பிரேம் மூக்குக் கண்ணாடி அணிந்து, அறிவு ஜீவி போன்ற தோற்றத்தில் இருந்தார்.

    சாப்பாடு ரொம்பப் பிரமாதம். எல்லாமே எனக்குப் பிடித்த வகைகள். தாங்க்ஸ். என்றார்.

    எனக்கும் ரொம்ப சந்தோஷம். என்றாள் லாரா.

    எனக்காக நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம்.

    இதிலே சிரமம் என்ன? என்று லாரா புன்னகை செய்தாள். ஓர் ஆண் மகனின் இதயத்தைப் பிடிக்க வேண்டும் மென்றால் வயிற்று வழியாகப் போக வேண்டும் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார்.

    பேட்டியைத் தொடங்குவதற்கு முன்னால் என் இருதயத்தைப் பிடிக்க வேண்டும் என்பது உங்கள் எண்ணம். அப்படித்தானே?

    கரெக்ட், என்று லாரா புன்னகை செய்தாள்.

    உங்கள் நிறுவனத்துக்கு ஏகப்பட்ட தலைவலிகள் ஏற்பட்டிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்களே? அது எவ்வளவு தூரம் உண்மை

    லாராவின் புன்னகை மறைந்தது. என்ன சொல்கிறீர்கள் புரியவில்லையே?

    சும்மா சொல்லுங்கள். இதையெல்லாம் மறைத்துக் கொண்டிருக்க முடியாது. உங்கள் சொத்துக்களில் பெரும் பாலானவை ஏகப்பட்ட கடன் பாக்கிகளில் சிக்கி முழுகிக் கொண்டிருக்கிறதாம். நீங்கள் கொடுத்திருக்கும் செக் சூரிட்டிகள் பைசா பெறாதவையாம். லாரா என்ட்டர்ப்ரைஸஸ் ஏகப்பட்ட கோல்மால்கள் செய்து தாக்குப் பிடிக்கப் பார்க்கிறதாம். ஊரில் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள்.

    லாரா சிரித்தாள். அப்படியா பேசிக் கொள்கிறார்கள்! என் வார்த்தையை நம்புங்கள், மிஸ்டர் தாம்பன். இந்த மாதிரி அசட்டு வதந்திகளையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். ஒன்று செய்கிறேன். என் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய விளக்கமான அறிக்கை அனுப்புகிறேன் உங்களுக்கு. அதைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். சரிதானா?

    ஓ, அது போதும். அப்புறம் இன்னொரு விஷயம், புதிய ஒட்டல் திறப்பு விழாவின்போது உங்கள் கணவர் கண்ணில் படவில்லையே?

    லாரா ஒரு பெருமூச்சு விட்டாள், வர வேண்டுமென்று ரொம்ப ஆசைப்பட்டார் பிலிப். துரதிர்ஷ்டவசமாக இசை நிகழ்ச்சிக்காக வெளியூரில் இருக்கும்படி நேர்ந்துவிட்டது.

    மூன்று வருஷத்துக்கு முன்னால் அவருடைய இசை நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். அற்புதமான கலைஞர். உங்களுக்குக் கல்யாணமாகி ஒரு வருடம் ஆகியிருக்கும் இல்லை?

    ஆமாம், என் வாழ்க்கையிலேயே மிகச் சந்தோஷமான வருஷம். தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. என்றாள் லாரா. நான் அடிக்கடி வெளியூர்களுக்குப் போக வேண்டியிருக்கிறது. பிலிப்புக்கும் அப்படித்தான். ஆனால் எப்போது வெளியூர் போனாலும் அவருடைய ரெகார்டுகளைக் கேட்டுக் கொண்டே இருப்பேன்.

    தாம்ஸன் புன்னகை செய்தார், அவருக்கும் அப்படித் தான். எந்த ஊருக்குப் போனாலும் நீங்கள் கட்டிய கட்டிடத்தைப் பார்க்க முடியுமே!

    நீங்கள் என்னை ரொம்பப் புகழ்கிறீர்கள்.

    இல்லை, உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நீங்கள் கட்டிடங்கள் கட்டியிருக்கிறீர்கள். குடியிருப்புக் கட்டிடங்கள், அலுவலகக் கட்டிடங்கள், சங்கிலித் தொடரான ஓட்டல்கள் - இப்படி எவ்வளவோ உங்களுக்குச் சொந்தமாக இருக்கின்றன, இல்லையா? எப்படி இவ்வளவும் செய்திருக்கிறீர்கள்?

    லாரா புன்சிரிப்புடன், எல்லாம் மாஜிக்தான். என்றாள்.

    விளையாடாதீர்கள். நீங்கள் ஒரு புதிர்.

    புதிரா? நானா? எப்படி?

    இந்த நிமிஷம், நியூயார்க்கிலேயே கட்டிடம் கட்டுவோரில் நீங்கள்தான் மிக வெற்றிகரமானவராக இருக்கிறீர்கள். இந்த நகரத்தில், காலி மனைகளில் பாதிக்கு மேல் உங்கள் பெயரில்தான் இருக்கின்றன. உலகத்திலேயே உயரமான கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் போட்டியாளர்கள் உங்களுக்கு இரும்புப் பட்டாம் பூச்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காலம் காலமாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் துறை இது. இதிலே புகுந்து கொடி கட்டிப் பறக்கிறீர்கள்...

    அதிலே உங்களுக்கு வருத்தமா மிஸ்டர் தாம்ஸன்

    அதில் வருத்தமில்லை. ஆனால் உண்மையில் எப்படிப்பட்டவர் நீங்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிய வில்லையே என்பதுதான் வருத்தம். உங்களைப் பற்றி இரண்டு பேரிடம் அபிப்பிராயம் கேட்டால் மூன்று விதமான அபிப்பிராயம் வருகிறது. நீங்கள் அற்புதமான பிஸினஸ் வுமன் என்று எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். இதெல்லாம் வெறுமே அதிர்ஷ்டத்தால் வந்தது என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நான் எவ்வளவோ கட்டிடக் கம்பெனிகளைப் பார்த்திருக்கிறேன். கட்டிட வேலை செய்யும் அத்தனை பேரும் முரட்டு ஆண்கள். அவர்களிடம் வேலை வாங்குவது ரொம்பக் கஷ்டம். உங்களைப் போன்று ஒரு பெண் எப்படி அவர்களிடம் ஒழுங்காக வேலை வாங்க முடியும்?

    உங்களைப் போன்ற பெண் என்றா சொன்னீர்கள்? என்னை போன்ற பெண் யாருமே கிடையாது என்று புன்னகை செய்தாள் லாரா. சரியஸாகச் சொல்வதானால். அந்தந்தத் துறையில் மிகச் சிறந்தவர்கள் யார் உண்டோ அவர்களை நான் வேலைக்கு அமர்த்திக் கொள்கிறேன். அவர்களுக்குக் கை நிறையச் சம்பளம் தருகிறேன்.

    ரொம்பச் சாதாரணம் மாதிரி இந்தப் பெண்பிள்ளை சொல்கிறாள். என்று நினைத்துக் கொண்டார் அந்த நிருபர். இவள் எதைச் சொல்லாமல் இருக்கிறாளோ, அதில்தான் உண்மையான கதை இருக்கிறது.

    கடையில் தொங்கும் எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் சரி, நீங்கள் எவ்வளவு வெற்றிகரமான பெண் மணி என்று எழுதிவிட்டார்கள். நான் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எழுதலாமென்று பார்க்கிறேன். உங்கள் வாழ்க்கையின் பின்னணி என்னவென்று எந்தப் பத்திரிகையிலும் வந்தது கிடையாது.

    அவளுக்குப் பின் புறம், சுவரில் மாட்டியிருக்கும் ஓர் உருவப் படத்தைக் காட்டினாள். அவர்தான் என் தந்தை ஜேம்ஸ் காமெரான். அவள் குரல் மென்மையாக ஒலித்தது. என் வெற்றிகளுக்கு அவர்தான் காரணம், நான் அவருக்கு ஒரே குழந்தை. என் சின்ன வயதிலேயே அம்மா இறந்து விட்டாள். என்னை வளர்த்ததெல்லாம் என் அப்பா தான். எங்கள் குடும்பம் ஸ்காட்லந்தில் இருந்தது. ரொம்ப ரொம்ப வருடங்களுக்குமுன் அங்கிருந்து இங்கே வந்து நோவா ஸ்கோஷியாவில் குடியேறிவிட்டது - கிளேஸ் பே என்ற இடத்தில்.

    க்ளேஸ் பேயா?

    ஆமாம். அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டி யுள்ள இடம். மீனவர்கள் நிறைந்த சின்னக் கிராமம், பிரெஞ்சுக் காரர்கள் முதல் முதலில் அங்கே குடியேறி க்ளோஸ் பே என்று பெயர் வைத்தார்கள். ஐஸ் வளைகுடா என்று அர்த்தம். இன்னும் கொஞ்சம் காப்பி சாப்பிடுகிறீர்களா. மிஸ்டர் தாம்ஸன்?

    வேண்டாம். தாங்க்ஸ்.

    ஸ்காட்லந்தில் என் தாத்தாவுக்கு ஏராளமான நிலம் இருந்தது. என் அப்பா மேலும் சேர்த்தார். பெரும் பணக் காரர் அவர். இன்றும்கூட ஸ்காட்லாந்தில் எங்களுக்குச் சொந்தமான கோட்டை இருக்கிறது. எட்டு வயதானபோது எனக்கென்று சொந்தமாக ஒரு குதிரை இருந்தது. என் உடைகளை லண்டனில்தான் வாங்குவார்கள். பிரம்மாண்டமான மாளிகையரில் நாங்கள் வசித்தோம். ஏகப்பட்ட வேலைக் காரர்கள். தேவதைக் கதைகளில் வருமே, அந்த மாதிரியான வாழ்க்கை! பழைய நினைவுகளின் எதிரொலி போல் அவள் குரலில் ஜீவன் ததும்பியது.

    குளிர் காலம் வந்தால் போதும், பனிச்சறுக்கு விளையாடப் போய்விடுவோம். ஹாக்கிப் போட்டிகளைப் பார்ப்போம். கோடை காலம் வந்தால் கடற்கரைதான் எங்கள் வாசஸ்தலம். நீச்சல்கள், விருந்துகள், நடனங்கள்...

    லாரா பேசப் பேச, நிருபர் வேகமாய்க் குறித்துக் கொண்டிருந்தார்.

    எட்மான்ட்டன், கால்காரி. ஒன்ட்டாரியோ முதலிய நகரங்களில் என் தந்தை நிறையக் கட்டிடங்கள் கட்டினார். வீட்டு மனைகள் வாங்குவதும், கட்டுவது மாசு, ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்பது அவருக்கு ஒரு விளையாட்டுப் போல் ஆகிவிட்டது. அதில் அவருக்கு ஒரே மோகம். நான் ரொம்பச் சின்னவளாயிருந்தபோதே அந்த விளையாட்டை எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டார். எனக்கும் அதிலே மோகம் ஏற்பட்டு விட்டது.

    அவள் குரல் உணர்ச்சி நிரம்பியதாக இருந்தது. ஒன்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மிஸ்டர் தாம்ஸன். கட்டிடம் கட்டுவதற்குத் தேவையான பணம், செங்கல், இரும்பு அதெல்லாம் எனக்கு முக்கிய மில்லாத விஷயம். மனிதர்கள்! மனிதர்கள்தான் எனக்கு முக்கியம், வேலை செய்வதற்கும் வசிப்பதற்கும் செளகரியமான இடம் மனிதர்களுக்குத் தேவை. குழந்தை குட்டிகள் பெற்று, குடும்பம் நடத்த அவர்களுக்கு இடம் தேவை. அதை என்னால் கட்டித் தர முடிகிறது. என் தந்தை அதைத்தான் முக்கியமாக நினைத்தார். எனக்கும் அதுதான் முக்கியமென்று ஆகிவிட்டது.

    தாம்ஸன் நிமிர்ந்து பார்த்தார். முதன் முதல் நீங்கள் ரியல் எஸ்டேட் பிஸினஸைத் தொடங்கியது எப்போது? நினைவிருக்கிறதா?

    நிச்சயமாய் லாரா முன்புறமாய்க் குனிந்து கொண்டு சொன்னாள். அது என்னுடைய பதினெட்டாவது பிறந்த நாள். எனக்கு என்ன பரிசு வேண்டுமென்று என் அப்பா கேட்டார். அப்போது எங்கள் காரில் புதிது புதிதாக மனிதர்கள் வந்து குடியேறிக் கொண்டிருந்த சமயம். நாளுக்கு நாள் நெரிசல் அதிகமாகி கொண்டிருந்தது. நிறைய வீடுகள் தேவை என்று என் தந்தையிடம் சொன்னேன். அபார்ட் மெண்ட்டுகள் கொண்ட சின்னக் கட்டிடம் ஒன்று கட்ட ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன். அதற்குத் தேவையான பணத்தை என் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தார். ஆனால் இரண்டு வருஷத்தில் சம்பாதித்து அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன். பிறகு பாங்க்கில் கடன் வாங்கி இரண்டாவது கட்டிடம் கட்டினேன். இருபத்தொரு வயதான போது மூன்று கட்டிடங்கள் எனக்குச் சொந்தமாக இருந்தன. எல்லாமே வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டவை.

    உங்கள் தந்தைக்கு உங்களைப் பற்றி ரொம்பப் பெருமையாக இருந்திருக்கும். இல்லையா?

    கதகதப்பான புன்னகையொன்று லாராவின் உதட்டில் மலர்ந்தது. ஆமாம், ரொம்பப் பெருமை. எனக்கு லாரா என்று பெயர் வைத்தவர் அவர்தான். அது ஒரு பழைய ஸ்காட்லந்து பெயர். லத்தீன் மொழியிலிருந்து வந்தது. ‘பிரபலமான,’ ‘புகழ் பெற்ற’ என்று அதற்கு அர்த்தம். நான் ரொம்பப் புகழ் பெற்றவளாக விளங்கப் போகிறேன் என்று என் சின்ன வயது முதல் தந்தை சொல்லி வந்திருக்கிறார். அவள் புன்னகை தேய்ந்தது. ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார். அதற்கான வயதில்லை, இளம் வயது. கொஞ்சம் நிறுத்தி விட்டுச் சொன்னாள், "வருடம் தவறாமல் நான் ஸ்காட்லந்துக்குப் போய் அவருடைய கல்லறையரில் அஞ்சலி செலுத்திவிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1