Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siva Bakthi Uyarvukku Vithitta Naayanmarkal!!
Siva Bakthi Uyarvukku Vithitta Naayanmarkal!!
Siva Bakthi Uyarvukku Vithitta Naayanmarkal!!
Ebook450 pages2 hours

Siva Bakthi Uyarvukku Vithitta Naayanmarkal!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“திருக்கயிலாயத்தை விடச் சிறந்த இடம் ஒன்று உண்டென்றால் அது என் நினைவு மாறாத அடியவர் மனமே!” என்று உமையன்னைக்கு உரைக்கிறார் சிவபெருமான். “அடியவர் மனதிலே நாம் அகமகிழ்ந்து வாசம் செய்கிறோம்” என்று நந்தி தேவருக்கும் கூறுகிறார். அடியவரை வழிபட்டால் போதும்; அனைத்தும் நிறைவேறும்.

நாயன்மார்களுடைய வரலாற்றைக் கவிச்சுவையுடன், பக்திரசத்துடன் கூறுகின்றது சேக்கிழாரின் பெரிய புராணம். தமிழ் இலக்கியங்களில் நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580173610572
Siva Bakthi Uyarvukku Vithitta Naayanmarkal!!

Related to Siva Bakthi Uyarvukku Vithitta Naayanmarkal!!

Related ebooks

Reviews for Siva Bakthi Uyarvukku Vithitta Naayanmarkal!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siva Bakthi Uyarvukku Vithitta Naayanmarkal!! - Aroor Sundarasekar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிவபக்தி உயர்வுக்கு வித்திட்ட நாயன்மார்கள்!!

    Siva Bakthi Uyarvukku Vithitta Naayanmarkal!!

    Author:

    ஆரூர் சுந்தரசேகர்

    Aroor Sundarasekar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/aroor-sundarasekar

    பொருளடக்கம்

    முன்னுரை

    சிறப்புரை

    என்னைப் பற்றி...

    சிவபக்தி உயர்வுக்கு வித்திட்ட நாயன்மார்கள்!!

    1.அதிபத்த நாயனார்!!

    2.அப்பூதி அடிகள் நாயனார்!!

    3.அமர்நீதி நாயனார்!!

    4.அரிவாட்டாய நாயனார்!!

    5.ஆனாய நாயனார்!!

    6.இசைஞானியார் நாயனார்!!

    7.இடங்கழி நாயனார்!!

    8.இயற்பகை நாயனார்!!

    9.இளையான்குடி மாறநாயனார்!!

    10.உருத்திர பசுபதி நாயனார்!!

    11.எறிபத்த நாயனார்!!

    12.ஏயர்கோன் கலிக்காம நாயனார்!!

    13.ஏனாதி நாத நாயனார்!!

    14.ஐயடிகள் காடவர்கோன் நாயனார்!!

    15.கணநாத நாயனார்!!

    16.கணம்புல்ல நாயனார்!!

    17.கண்ணப்ப நாயனார்!!

    19.கலிக்கம்ப நாயனார்!!

    20.கழறிற்றறிவார் நாயனார்!!

    21.கழற்சிங்க நாயனார்!!

    22.காரி நாயனார்!!

    23.காரைக்கால் அம்மையார்!!

    24.குங்கிலியக்கலய நாயனார்!!

    25.குலச்சிறை நாயனார்!!

    26.கூற்றுவ நாயனார்!!

    27.கோச் செங்கட் சோழ நாயனார்!!

    28.கோட் புலி நாயனார்!!

    29.சடைய நாயனார்!!

    30.சண்டேஸ்வர நாயனார்!!

    31.சத்தி நாயனார்!!

    32.சாக்கிய நாயனார்!!

    33.சிறப்புலி நாயனார்!!

    34.சிறுத்தொண்ட நாயனார்!!

    35.சுந்தரமூர்த்தி நாயனார்!!

    36.செருத்துணை நாயனார்!!

    37. சோமாசிமாற நாயனார்!!

    38. தண்டியடிகள் நாயனார்!!

    40. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்!!

    41. திருநாவுக்கரசு நாயனார்!!

    42. திருநாளைப் போவார் நாயனார்!!

    43. திருநீலகண்ட நாயனார்!!

    44. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்!!

    45. திருநீலநக்க நாயனார்!!

    46. திருமூல நாயனார்!!

    47. நமிநந்தியடிகள் நாயனார்!!

    48. நரசிங்கமுனையரைய நாயனார்!!

    49. நின்றசீர் நெடுமாற நாயனார்!!

    50. நேச நாயனார்!!

    51. புகழ்ச்சோழ நாயனார்!!

    52. புகழ்த்துணை நாயனார்!!

    53. பூசலார் நாயனார்!!

    54. பெருமிழலைக் குறும்ப நாயனார்!!

    55. மங்கையர்க்கரசியார் நாயனார்!!

    56. மானக்கஞ்சாற நாயனார்!!

    57. முருக நாயனார்!!

    58. முனையடுவார் நாயனார்!!

    59. மூர்க்க நாயனார்!!

    60. மூர்த்தி நாயனார்!!

    61. மெய்ப்பொருள் நாயனார்!!

    62. வாயிலார் நாயனார்!!

    63. விறன்மிண்ட நாயனார்!!

    முன்னுரை

    இந்த புத்தகத்தை சிவலோக பதவி அடைந்த எனது தகப்பனாருக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்

    திருக்கயிலாயத்தை விடச் சிறந்த இடம் ஒன்று உண்டென்றால் அது என் நினைவு மாறாத அடியவர் மனமே! என்று உமையன்னைக்கு உரைக்கிறார் சிவபெருமான். அடியவர் மனதிலே நாம் அகமகிழ்ந்து வாசம் செய்கிறோம் என்று நந்தி தேவருக்கும் கூறுகிறார். அடியவரை வழிபட்டால் போதும்; அனைத்தும் நிறைவேறும்.

    நாயன்மார்களுடைய வரலாற்றைக் கவிச்சுவையுடன், பக்திரசத்துடன் கூறுகின்றது சேக்கிழாரின் பெரிய புராணம். தமிழ் இலக்கியங்களில் நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

    சேக்கிழார் சென்னையை அடுத்த குன்றத்தூரில் அவதரித்தவர். அவருடைய இயற்பெயர் அருள்மொழித்தேவர். இவர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர். சேக்கிழாருக்குத் தேவாரப் பாடல்களில் ஆழ்ந்த நாட்டமும் தமிழ் நாட்டு ஊர்களைப் பற்றிய ஆராய்ச்சியும் நிரம்பியிருந்தது. இலக்கியங்களில் ஈடுபாடுடைய சோழ அரசன், தன் அரசவையில் மந்திரியாக இருந்த சேக்கிழாரிடம், சிவனடியார்களின் வரலாற்றைக் காப்பியமாகப் பாட வேண்டுமென்று விரும்பினான். சோழ அரசனின் விருப்பத்தினை சேக்கிழார் ஏற்றார்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் திருத்தொண்டத்தொகை பாட அடி எடுத்துத் தந்த சிவபெருமானே, நம்பியாண்டார்நம்பி திருவந்தாதிக்கும் அடி எடுத்துத் தந்தார். பின் அவரைத்தொடர்ந்து சேக்கிழாருக்கு ‘திருத்தொண்டர் புராணம்’ உரைக்க ‘உலகெலாம்’ என்று சொல் எடுத்துக் கொடுத்தார். அவரும் சிதம்பரத்தில் இறைவனுடைய சந்நிதானத்தில் இருந்து அதைப் பாடி அரங்கேற்றினார்.

    எனது தந்தை 19.04.2021 காலமான போது மனச்சஞ்சலமாக இருந்த நேரத்தில் விகடகவி டிஜிட்டல் வீக்லி குடும்பத்தினரான திரு.ராஜேஷ்கன்னா, திரு.வேங்கடகிருஷ்ணன் மற்றும் ஹாங்காங் திரு.ராம் அவர்கள் ஒரு வருடத்திற்கு நாயன்மார்களின் வரலாற்றை எழுதும்படி என்னை ஊக்கபடுத்தினார்கள். எனது தந்தையையும் ஒரு நாயன்மாராக மனதில் இருத்தி, எளிய நடையில் 63 நாயன்மார்கள் வரலாற்றினை எழுதினால் யாவரும் படித்துப் பயன்பெறுவார்கள் என்ற நோக்கத்தில் சிவபக்தி உயர்வுக்கு வித்திட்ட நாயன்மார்கள் என்ற தலைப்பில் சிவபக்தியிலும், அடியவர் பக்தியிலும் உருகி நின்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைச் சிவனருளால் வாரம் ஒரு நாயன்மார்களை என்னால் இயன்றவரை விளக்கமாகவும் சுருக்கமாகவும் எழுதியுள்ளேன்.

    இந்நூலைச் சிறந்த முறையில் E Book மற்றும் புத்தகமாகவும்

    வெளியிடும் Pustaka Digital Media திரு.ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,

    ஆரூர் சுந்தரசேகர்

    (சு.சேகர்)

    சிறப்புரை

    ஆரூர் சுந்தரசேகர் விகடகவி டிஜிட்டல் வீக்லியில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆன்மிக கட்டுரைகளைச் சிறப்பாக எழுதி வருகிறார்.

    ஆரூரார் என்றழைக்கபடும் இவர் விகடகவி வாசகர்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார் என்பதை விகடகவி வாசகர் மெயிலில் வந்துள்ள வாசகர்களின் விமர்சனங்களே சாட்சி.

    அவருடைய கட்டுரையில், பண்டிகைகள் குறிப்பாகப் பொங்கல், தீபாவளி, நவராத்திரி மற்றும் ஆடி, கார்த்திகை, மார்கழி மாத சிறப்புகளையும் அதன் தொடர்பான ஆன்மிகத்தையும் தெள்ளத் தெளிவாக தன் எழுத்து மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். மேலும் மகான்கள் பற்றியும், தெரியாத பல கோயில்கள் பற்றியும், ஆன்மீகமும் அறிவியலும் என்ற தலைப்பிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார்.

    ஆரூராரின் தகப்பனார் கொரானாவில் காலமான சமயத்தில், அவருடைய மன அமைதிக்காக நாயன்மார்கள் பற்றி விகடகவியில் எழுதச் சொன்னோம். அவரும் எங்களது வார்த்தைக்கு மதிப்பளித்து, சிவபக்தி உயர்வுக்கு வித்திட்ட நாயன்மார்கள் என்ற தலைப்பில் வாரம் ஒரு நாயன்மார் என்று எழுத ஆரம்பித்தார். அத்தொடரும் நல்லமுறையில் வாசகர்களைச் சென்றடைந்தது. இந்த தொடரை, தற்போது சிவபக்தி உயர்வுக்கு வித்திட்ட நாயன்மார்கள் என்ற தலைப்பில் E Book மற்றும் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார் ஆரூர் சுந்தரசேகர்.

    விகடகவி குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புத்தகம் வெளிவருவது விகடகவியாருக்கு மகிழ்ச்சி.

    விகடகவியில் வாராவாரம் ஆன்மீக கட்டுரைகள் எழுத ஆரம்பித்த அவர்

    இன்று தனிப்புத்தகம் வெளியிட ‘விகடகவி’ ஒரு வித்தாக அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது.

    ஆரூர் சுந்தரசேகர் அவரது எழுத்துப்பணி மேன்மேலும் விரிவடைந்து, பல புத்தகங்கள் வெளியிட்டு வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க ஆரூரார் எழுதிய தெய்வங்கள் அனைத்தும் துணை புரிய வாழ்த்துகிறேன்.

    ஆசிரியர்

    என்னைப் பற்றி...

    பெற்றோர்

    தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் ஶ்ரீ சுந்தரம்- தாயம்மாள் என்கிற மீனாட்சி தம்பதிகளுக்கு 02 - 10 - 1960ல் மூத்த மகனாய் பிறந்தேன்.

    குடும்பம்

    அதே மதுரையில் திருமதி. பாலமீனாட்சிக்கும் எனக்கும் 12 - 09 - 1991 திருமணம் நடந்தேறியது. எனது மனைவி உடல் நலக்குறைவு காரணமாக 27 - 07 - 2013ல் காலமானார். எனக்கு சாய்சுதா என்ற மகளும், சந்திரமௌலி என்ற மருமகனும், மகள்வழி பேரன் சாய் மனோஜ் கிருஷ்ணா மற்றும் சாய்சங்கர் என்ற மகனுடன் நலமுடன் வாழ்ந்து வருகின்றேன்.

    கல்வித்தகுதி

    காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் S.S.L.C (1976-1977) தேர்வு பெற்றேன். பின் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள

    AM JAIN Collegeல்  PUC படித்தேன். தொழிற்கல்வி படிக்கும் ஆர்வத்தில் collegeல் படிப்பைத் தொடராமல் Montfort Technical Instituteல் தொழிற்கல்வியைப் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். மேலும் தொழிற்கல்வி படிக்கும் ஆர்வத்தில் வேலை பார்த்துக்கொண்டே DME, AIME முதலியவற்றை Correspondence & Direct Courses மூலமாகத் தேர்வு பெற்றேன்

    தொழில்

    Montfort Technical Instituteல் தொழிற்கல்வியைப் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் campusல் AUDCO INDIAல்

    Apprenticeship முடித்தேன். காலில் ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக அந்த கம்பெனியில் தொடரமுடியவில்லை.

    பின்பு ADDISON TOOLSல் எனது பணியைத் தொடர்ந்தேன். சுயதொழில் செய்யும் ஆர்வத்தில் கம்பெனியி்லிருந்து வெளி வந்து SAI ENGINEERING PRODUCTS என்ற small scale industryஐ தொடங்கி 12 வருடங்கள் சிறப்பான முறையில் நடத்தினேன். finance problems காரணமாகத் தொழிற்சாலையை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் மீண்டும் எனது தொழிற்பணி BABCOCK BORSIG POWER என்ற ஜெர்மன் கம்பெனியில் தொடர்ந்தது… மீண்டும் break… Company lockdown…

    சோளிங்கரில் TVS group companyல் (Real Talent) மறுபடியும் பணியில் தொடர்ந்து, சென்னையில் TVS group companyல் (Brakes India) 2018ல் Engineer ஆகப் பணி ஓய்வு பெற்றேன்.

    ஆன்மீக எழுத்து பணி

    நான் சிறு வயது முதற்கொண்டு நூல்களைப் படிக்கும் வழக்கம் கொண்டிருந்தேன். ஆனால் எழுதுவதில் ஆர்வம் காட்டவில்லை. பணி ஓய்வு பெற்றவுடன் எனது தந்தையின் மரபணு (Gene) காரணமாக மனதில் ஏதோ எழுதும்படி ஒரு உந்துதல் ஏற்பட்டது. (எனது தந்தை ஶ்ரீ சுந்தரம் அவர்கள் அரசாங்க வேலைக்கு (Deputy collector Retired) வருவதற்கு முன் மளிகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே தினசரி, வார இதழ்களில் துணுக்குகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியிருக்கிறார். கொரொனா காலத்தில் 19-04-2021ல் காலமானார்)

    முதன் முதலில் (2019) எனது சித்தப்பா ஆரூர் ஆர். சுப்பிரமணியன் விகடகவி என்ற டிஜிட்டல் வீக்லியில் பக்தி ஸ்பெஷல் வந்துள்ளது அதில் ஏதாவது எழுது என்று சொன்னார். அவர் சொல்லியபடி ஆன்மீக கட்டுரை எழுத ஆரம்பித்து, இன்று விகடகவி டிஜிட்டல் வீக்லியில் ஆசிரியர் குழுவில் ஒருவராக உயர்ந்துள்ளேன். விகடகவியில் மதன் சார், ராவ் சார், சுபாவெங்கட் மேடம் மற்றும் விகடகவி குடும்பத்தினர் என்னை மேன்மேலும் மெருகூட்டினார்கள். இதைத்தவிர அக்னி மலர்கள், சத்வித்யா, போன்ற பத்திரிகைகளிலும், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்களிலும் ஷீரடி சாயிபாபா அருளாலும், எனது தந்தையின் அருளாசியுடன் தொடர்ந்து ஆன்மீக கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகள், முதலியன எழுதி வருகிறேன்.

    வணக்கம்

    ஆரூர் சுந்தரசேகர் (சு. சேகர்)

    S.SEKAR

    FF-B,, Block A, Poornapushkala Apartments,

    Plot.No.2, Door No.16, K.A.P Viiswanathan Street,

    Maruthi nagar, Rajakilpakkam, Chennai 600073

    Mobile no. 9841987360

    சிவபக்தி உயர்வுக்கு வித்திட்ட நாயன்மார்கள்!!

    "பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்

    பெரிது பெரிது புவனம் பெரிது

    புவனமோ நான்முகன் படைப்பு

    நான்முகன் கரியமால் உந்தியில் உதித்தோன்

    கரிய மாலோ அலைகடல் துயின்றோன்

    அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்

    கலசமோ புவியிற் சிறுமண்

    புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்

    அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்

    உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்

    இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்

    தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" – ஔவையார்

    இந்த உலகம் மிகப் பெரியது அப்போ இந்த உலகம் தான் பெரிதா? இல்லையில்லை அதை பிரமன் படைத்தான் அப்போ பிரமன் தான் பெரியவனா? இல்லையில்லை பிரமன் திருமாலின் உந்தியில் (தொப்புள்) வந்தவன் அப்போ திருமால் பெரியவனா? இல்லையில்லை திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவன் அப்போ கடல் தான் பெரிதா? இல்லையில்லை அந்த அலைகடலும் குறுமுனி அகத்தியர் கையில் அடக்கம் அப்போ அகத்தியர் தான் பெரியவரா? இல்லையில்லை அகத்திய முனி கும்பம் எனும் மண் பானையில் பிறந்தவன் அப்போ மண்ணாகிய பூமி தான் பெரிதா? இல்லையில்லை இந்த பூமி ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனுக்கு ஒரு தலைதாங்கற அளவு தான் அப்போ ஆதிசேஷன்கிற பாம்பு தான் பெரிய ஆளா? இல்லையில்லை அந்த பாம்பு உமையம்மையின் சுண்டுவிரல் மோதிரமாக இருக்கிறது அப்போ உமையம்மை தான் பெரியவரா? இல்லையில்லை உமையம்மை இறைவன் சிவபெருமானின் இடப்பக்கத்தில் ஒடுக்கம் அப்போ சிவபெருமான் தான் பெரியவரா? இல்லையில்லை பெருமானே அடியார் பெருமக்களின் உள்ளங்களில் அவர்களின் அன்பில் கட்டுண்டு கிடக்கிறார் என்றால் அவ்வளவு மகிமை வாய்ந்த அடியவர்கள் நாயன்மார்கள் பெருமையை என்னவென்பது என்பது தான் பாடலின் பொருள்

    இறைவனை அடைய சுலபமான வழி பக்தி மார்க்கம், பக்தி மார்க்கத்தின் முதன்மையானவர்கள் நாயன்மார்கள்.

    புராணத்தில் சொல்லப்பட்ட பக்தியை நடைமுறை வாழ்க்கையில் காண்பித்தவர்கள் நாயன்மார்கள்.

    சிவபக்தி உயர்வுக்கு வித்திட்டவர்கள் நாயன்மார்கள்:

    நாயன்மார்கள் என்ற சொல் தலைவன் என்ற வகையில் பொருள் கொள்ளப்படுகிறது.

    அறுபத்துமூன்று நாயன்மார்களும் சமயத்தையும், மொழியையும், மனித வாழ்க்கைக்கான பண்பையும், பக்தியையும் வளர்த்தார்கள். பக்தி என்பது செயலில் இல்லை. அன்பில் உள்ளது என்பதை எடுத்துரைத்தனர். ஒவ்வொருவருடைய பக்தியும் ஒன்றுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும்.

    நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து செய்து வந்தவர்கள். இவர்கள் அனைவருமே சிவத்தொண்டே உயிர் மூச்சாக வாழ்ந்தவர்கள். சிவ பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவத்தொண்டுக்காகவே தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள்.

    இறையருளுக்கு பக்தி மட்டுமே போதுமானது என்றும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பது இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக அமைந்துள்ளது.

    நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய திருத்தொண்டத் தொகையில் நாயன்மார்கள் மொத்தம் அறுபது. சுந்தரமூர்த்தி நாயன்மாரின் மறைவுக்கு பின் சில ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய அறுபது நாயன்மார்களை சற்று விரிவாய் திருத்தொண்டர் திருவந்தாதியில் பாடினார். அதில் திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் சேர்த்து அறுபத்தி மூவராக்கினார்.

    அறுபத்தி மூன்று நாயன்மார்களில் மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கி.பி 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையாரே பெண் நாயன்மார்களில் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் அம்மையாரின் இயற்பெயர்புனிதவதி ஆகும். இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பெண்நாயன்மார் மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற நாயன்மாரின் மனைவியான மங்கையர்கரசி யாவார். மூன்றாவது பெண் நாயன்மாராக இடம்பெற்றவர், திருநாவலூரை சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவிஇசைஞானி.

    நாடுகளின் அடிப்படையில் நாயன்மார்கள்:

    அன்றைய நாடுகளின் அடிப்படையில் நாயன்மார்கள் பின்வருமாறு வாழ்ந்துள்ளனர்

    சேர நாட்டில் இரண்டு நாயன்மார்கள்,

    சோழ நாட்டில் முப்பத்தேழு நாயன்மார்கள்

    தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள்

    நடு நாட்டில் ஏழு நாயன்மார்கள்

    பாண்டிய நாட்டில் ஐந்து நாயன்மார்கள்

    மலை நாட்டில் இரண்டு நாயன்மார்

    வட நாட்டில் இரண்டு நாயன்மார்கள்

    கோயிலின் பிரகாரத்தில் அறுபத்து மூவர்:

    நாயன்மார்களுக்கு பெரிய சிவன் கோயிலின் சுற்றுபிரகாரத்தில் அறுபத்து மூவர் கற்சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோக உற்சவர் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்குஅறுபத்து மூவர் திருவீதி உலா என அழைக்கப்படுகிறது.

    அறுபத்து மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவன் கோயில்களில்நால்வர் என்றழைக்கப்படும்அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின் உருவச்சிலைகளாவது வைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை-மயிலாப்பூரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம்அறுபத்து மூவர் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

    நாயன்மார்களின் அவதார ஸ்தலங்கள்:

    நாயன்மார்கள் பிறந்த ஸ்தலங்களைநாயன்மார்களின் அவதார ஸ்தலங்கள் என்று அழைக்கின்றனர். இவற்றில் ஐம்பத்தி எட்டு ஸ்தலங்கள் தமிழகத்தில் உள்ளது. மற்றும் பாண்டிச்சேரி(காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற விகிதத்தில் ஸ்தலங்களும் உள்ளது.

    நாயன்மார்களின் மூன்று விதமான முக்தி:

    நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முக்தி அடைந்ததாக கூறப்படுகின்றது.

    குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்தியொரு நாயன்மார்கள். அடியாரை வழிப்பட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்தியொரு நாயன்மார்கள் ஆவார்கள்.

    அரசக்காலத்தில் நாயன்மார்களுக்கென்று பிரத்யேகமான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

    சுந்தரமூர்த்தி நாயன்மாரின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். அவர் பாடிய அறுபது நாயன்மார்களை வாழ்க்கை வரலாற்றினையும், அத்துடன், நம்பியாண்டார் நம்பி அடிகள் எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் திருத்தொண்டர் புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இதுவே பெரியபுராணம் எனப் பெயர் பெற்று பன்னிரண்டாம் திருமுறையாகத் திகழ்கிறது.

    இவை நாயன்மார்களின் பற்றிய பொதுவான தகவலாகும். இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு நாயன்மாரைப் பற்றி அகர வரிசையில் தொடர்ந்து தெரிந்துக்கொள்வோம்.

    ஓம் நமச்சிவாய.!

    நற்றுணையவது நமசிவாயவே.!!

    திருச்சிற்றம்பலம்.

    1.அதிபத்த நாயனார்!!

    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் எந்தவிதமான படிப்பும் படித்தவரில்லை, கோயில் கோயிலாக சுற்றி வந்தவரும் இல்லை, எப்பொழுதும் பூஜை, புனஸ்காரம் என்று இருந்தவரும் இல்லை, அது குறித்து அறிந்திருக்கும் குலத்திலேயும் பிறக்கவில்லை.

    இறைவனின் அருள் கிடைக்க படிப்போ, விரதமோ, பொருளோ தேவையில்லை.. தூய்மையான மனமும், இறை நம்பிக்கையும் இருந்தால் போதும் என அதிபத்த நாயனாரின் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

    அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று வழங்கப்படுகிறது.

    இவரை "விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்" என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிடுகிறார்.

    நாகை கடற்கரையில் உள்ள நுளைப்பாடி என்று அழைக்கப்பட்ட நம்பியார் நகர் குப்பத்தில், பரதகுலத்தினராய் வலைத்தொழில் மரபில் தோன்றியவரே அதிபத்த நாயனார்

    ஒவ்வொருவருக்கும் பக்தியை வெளிப்படுத்த ஒவ்வொரு விதமான நியதி இருக்கும். இவருக்கு சிவன் மீதுள்ள பக்தியால், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் நாளில் மீன் பிடித்து கரையேறியவுடன், முதல் மீனை சிவனை நினைத்து கடலில் விடுவது வழக்கம். வலையில் சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும், அதனைச் சிவபெருமானுக்கு என்றே அவர் கடலில் விட்டுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவார். எக்காரணம் கொண்டும் இந்த கொள்கையை அவர் ஒரு நாளும் கைவிட்டதில்லை.

    சிவபெருமான் மேல் கொண்ட பக்தியின் காரணமாக, தன்னால் இயன்ற இந்த செயலை சிவத் தொண்டாக புரிந்து வந்தார்.

    அதிபத்தரின் இறைபக்தியை உலகறியச் செய்யும் விதமாய் சிவபெருமான் ஒரு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி, அதிபத்தர் வீசும் வலையில் மீன்கள் சிக்குவது குறைய ஆரம்பித்து. இதனால், அதிபத்தரின் குடும்பம் வறுமையில் வீழத் தொடங்கியது. சிவபக்தியில் மட்டும் அதிபத்தருக்கு சிறிதளவும் பக்தி குறையவில்லை.

    அதிபத்தர் ஒரு நாள் மீன் பிடிக்கச் செல்கையில் வலையில் விலை மதிப்பற்ற ஒரு தங்க மீன் சிக்கியது. அந்த தங்க மீன் தக தக வென மின்னியது, அவருடன் மீன் பிடிக்க வந்தவர்கள் உன்னுடைய

    Enjoying the preview?
    Page 1 of 1