Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanavil Natkal
Vaanavil Natkal
Vaanavil Natkal
Ebook221 pages1 hour

Vaanavil Natkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனைவியை இழந்த ஒரு கோடீஸ்வர தொழில் அதிபர் - ராஜசேகர் - கல்லூரியில் படிக்கும் அவருடைய ஒரே செல்ல மகள் ஆர்த்தி - இவர்களுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம். - மனதை உடைத்துப் போடும் அதிரடி Climax.

Languageதமிழ்
Release dateJan 10, 2022
ISBN6580151607955
Vaanavil Natkal

Related to Vaanavil Natkal

Related ebooks

Reviews for Vaanavil Natkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanavil Natkal - V.R.P. Manohar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வானவில் நாட்கள்

    Vaanavil Natkal

    கதை
    திரைக்கதை
    வசனம்
    பாடல்கள்
    இயக்கம்

    V.R.P. மனோகர்

    V.R.P. Manohar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vrp-manohar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 1A

    காட்சி - 2

    காட்சி - 2A

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 4A

    காட்சி - 4B

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 8A

    காட்சி - 9

    காட்சி - 9A

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 12A

    காட்சி - 13

    காட்சி - 13A

    காட்சி - 14

    காட்சி - 14A

    காட்சி - 15

    காட்சி - 16

    காட்சி - 17

    காட்சி - 17A

    காட்சி - 17B

    காட்சி - 18

    காட்சி - 19

    காட்சி - 19A

    காட்சி - 20

    காட்சி - 20A

    காட்சி - 20B

    காட்சி 20C

    காட்சி - 20D

    காட்சி - 20E

    காட்சி - 20F

    காட்சி - 21

    காட்சி - 21A

    காட்சி – 22

    காட்சி - 22A

    காட்சி - 23

    காட்சி - 23A

    காட்சி - 23B

    காட்சி - 24

    காட்சி - 25

    காட்சி - 26

    காட்சி - 27

    காட்சி - 28

    காட்சி - 29

    காட்சி - 30

    காட்சி - 31

    காட்சி - 32

    காட்சி - 33

    காட்சி - 34

    காட்சி - 35

    காட்சி - 36

    காட்சி - 37

    காட்சி - 38

    காட்சி - 39

    காட்சி - 40

    காட்சி - 41

    காட்சி - 42

    காட்சி - 43

    காட்சி - 44

    காட்சி - 45

    காட்சி - 46

    காட்சி - 47

    காட்சி - 48

    காட்சி - 49

    காட்சி - 50

    காட்சி - 51

    காட்சி - 52

    காட்சி - 53

    காட்சி - 54

    காட்சி - 55

    காட்சி - 56

    காட்சி - 57

    காட்சி - 58

    காட்சி - 59

    காட்சி - 60

    காட்சி - 61

    காட்சி - 62

    காட்சி - 63

    காட்சி - 64

    காட்சி - 65

    காட்சி - 1

    இடம்: ECR ROAD பங்களா

    பாத்திரங்கள்: ராஜசேகர், ஆர்த்தி

    DAY / EXT

    ECR ROADல் ஒரு BMW கார் விரைந்து சென்று கொண்டிருக்கிறது. அந்தக் காரை முந்திச் செல்லும் வேகத்தில் குதிரையை வேகமாக ஒரு நபர் ஓட்டி வருகிறார். சில இடங்களில் காரை, குதிரை முந்துவதும் ஒரு சில இடங்களில் குதிரையை கார் முந்துவதுமாக ஒரு போட்டி நிலவுகிறது. இறுதியில் குதிரை காரை முந்திக் கொண்டு ஒரு பிரமாண்ட பங்களாவின் பார்க்கிங்கில் நுழைகிறது அங்கு ஏற்கனவே பலவிதமான உயர்ரக கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. குதிரையை அங்கு நிறுத்திவிட்டு குதிரையிலிருந்து அந்த நபர் குதித்து இறங்க, குதிரை பெருமூச்சு விட்டபடி இருக்க, கார் பின்னாலேயே வந்து நிற்கிறது. குதிரையிலிருந்து இறங்கிய நபர் முகக்கவசம், தலைக்கவசம் ஆகியவற்றை நீக்க, அது பெண் என்பது தெரிகிறது. காரிலிருந்து இறங்கும் ராஜசேகர், தன் மகள், குதிரையை ஓட்டி வந்த ஆர்த்தியை நோக்கி கைகளை விரித்த வண்ணம் வர, தன் நீண்ட கூந்தலை கோதி விட்டபடி ராஜசேகரை நோக்கி,

    ஆர்த்தி : DAD… எப்படி… நான்தானே ஜெயிச்சேன்…

    என்று கூறியபடி தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட அவளை நோக்கி,

    ராஜசேகர் : NO… NO… நீ எங்க ஜெயிச்ச… உன் குதிரைதான் ஜெயிச்சது…

    என்று கூறியபடி குதிரையை தட்டிக் கொடுக்க பொய்க் கோபத்துடன் கால்களை உதைத்தபடி ராஜசேகரை நோக்கி,

    ஆர்த்தி : NO… DAD… நீங்க என்னைய DISCOURAGE பண்றீங்க… நான் ஒரு நல்ல HORSE RIDER இல்லையா…

    என்று கேட்க அவளை மென்மையாக அணைத்தபடி,

    ராஜசேகர் : EVERYTHING IS JUST FOR FUN MY DEAR GIRL… YOU ARE REALLY A WONDERFUL GIRL… எல்லா ASPECTSலயும் உன்னைய அடிச்சுக்க ஆளே கிடையாது ஆர்த்தி… நீ எனக்கு கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு பொக்கிஷம்…

    என்று கூறியபடி அவள் நெற்றியில் முத்தமிட, அவர் பிடியிலிருந்து விலகி, வாசலில் நின்று அவர்களையே கன்னத்தில் கை வைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் ராஜசேகரின் தாயாரை நோக்கி,

    ஆர்த்தி : என் செல்ல பாட்டி என் LOVELY பாட்டி என்று கூறிய வண்ணம் பாட்டியை கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தமிட்டபடி,

    ஆர்த்தி : பாட்டி… நாளைக்கு நீங்க ஒரு குதிரைல வர்றீங்களாம்… நான் ஒரு குதிரைல… நமக்குள்ள குதிரைப் போட்டி OK வா… OK வா…

    என்று கேட்க,

    பாட்டி : போடி குட்டிப் பிள்ளை நானாவது குதிரை ஓட்டறதாவது… வேணுமின்னா ஒரு கழுதை வாங்கிக்கொடு… நல்லா மேய்ச்சுட்டு வர்றேன்…

    என்று கூறியபடி கழுதை மேய்ப்பது போல் பாவனை செய்ய, அங்கு வரும் ராஜசேகர், ஆர்த்தி இருவரும் கை கொட்டி சிரிக்க...

    காட்சி - 1A

    INT / DAY

    இடம்: ராஜசேகர் வீடு

    பாத்திரங்கள்: 50 வயது ராஜசேகர், அவரது தாயார் கஸ்தூரி, மகள் 20 வயது ஆர்த்தி மற்றும் P.A.

    பிரமாண்ட பங்களா நடுவில் ஆளுயர CRYSTAL விநாயகர் சிலை. தெய்வீகமான சூழல். விநாயகர் சிலைக்கு ராஜசேகர் தாயார் பூஜை செய்கிறார் ஆரத்தித் தட்டை CAMERAவை (ராஜசேகர்) நோக்கி நீட்ட, (ராஜசேகர்) கரங்கள் தீபத்தைத் தொட்டு வணங்கி, விபூதியையும், குங்குமத்தையும் எடுத்தபடி தன் தாயாரை நோக்கி,

    ராஜசேகரின்

    குரல் : ஒவ்வொரு நாளையும் மங்களகரமாக ஆரம்பிச்சு வைக்கிறீங்க அம்மா… ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா.

    கஸ்தூரி : உன்னைய மாதிரி ராஜா மாதிரி ஒரு பிள்ளை. தேவதை மாதிரி ஒரு பேத்தி… இதைவிட இந்த கிழவிக்கு வேற என்ன பாக்கியம் வேணும்?

    என்று கூற ராஜசேகர் POINT OF VIEWவில் கேமரா மாடி நோக்கி திரும்புகிறது.

    ராஜசேகரின்

    குரல் : HELLO ஆர்த்தி…

    மாடிப் படிக்கட்டுகளில் அழகிய தேவதை போல் இறங்கி வந்த வண்ணம்

    ஆர்த்தி : குட் மார்னிங் அப்பா… உங்களுக்கான இன்றைய COSTUME ரெடி…

    ராஜசேகர் POINT OF VIEWவில் கேமரா மாடியில் உள்ள அவர் அறையை நோக்கி நகர்ந்து உள்ளே நுழைந்து BED மீது எடுத்து வைக்கப்பட்டிருக்கும் டிரெஸ் மீது நிலைக்கிறது. டிரஸ்ஸை அணிந்து மாடியில் இருந்து படிக்கட்டில் இறங்கி வருகிறார் ராஜசேகர்.

    ஆர்த்தி கைதட்டி ராஜசேகரை நோக்கி,

    ஆர்த்தி : அப்பா… YOU LOOK SO GREAT அப்பா… GREAT

    என்று கூற ஆர்த்தியை நோக்கி,

    ராஜசேகர் : THANK YOU MY LITTLE SWEET GIRL… ஒவ்வொரு நாளும் எனக்கான டிரஸ், வாட்ச், கண்ணாடி இப்படி எல்லாமே SELECT பண்றது நீதானே… உன்னோட SELECTION TASTEம் எப்பவுமே GREATதான் அதனால தான் நான் எப்பவுமே ஸ்மார்ட்டாகவே தெரிகிறேன்…

    என்று கூறி ராஜசேகர் சிரித்துவிட்டு திரும்ப அங்கு P.A கோபால் ENTRY, P.A.வை நோக்கி,

    ராஜசேகர் : இன்னைக்கு என்னோட புரோகிராம் என்ன மிஸ்டர், கோபால்.

    என்று கேட்க, கையில் உள்ள MEMO PADஐப் பார்த்த வண்ணம் ராஜசேகரிடம்

    P.A : இன்னைக்கு வழக்கம்போல பத்து மணிக்கு FACTORY VISIT. 11 மணிக்கு INTERNAL AUDITORS கூட மீட்டிங்… 12 மணிக்கு BANK OFFICERS மீட்டிங்… 1 மணிக்கு LUNCH 3 மணிக்கு நம்ம EXPORTERS கூட MEETING… இதுதான் சார் இன்றைய AGENDA

    ராஜசேகர் : THANK YOU… கோபால் என்று கூறிவிட்டு ஆர்த்தியை நோக்கி,

    ராஜசேகர் : OK ஆர்த்தி செல்லம் நாளைக்கு நம்ம வீட்டுல என்ன விசேஷம்னு சொல்லு பாக்கலாம்.

    ஆர்த்தி சற்று யோசித்து விட்டு உதட்டை பிதுக்கிய வண்ணம் தன் பாட்டியை நோக்கி ஓடிவந்து பாட்டியின் தோளைக் கட்டிக் கொண்டு பாட்டியிடம்

    ஆர்த்தி : பாட்டி… பாட்டி… நாளைக்கு நம்ம வீட்ல என்ன விசேஷம் பாட்டி ப்ளீஸ்… சொல்லுங்க பாட்டி

    என்று கெஞ்ச, சற்று பிகு செய்த வண்ணம்,

    கஸ்தூரி : எனக்குத் தெரியும்… ஆனா சொல்ல மாட்டேன்… நல்லா யோசி பாப்போம்.

    ஆர்த்தி கை கால்களை சின்னக் குழந்தை போல் உதறிக் கொண்டு P.A.வை நோக்கி,

    ஆர்த்தி : கோபால் Uncle கோபால் Uncle உங்களுக்குத் தெரியுமா நாளைக்கு என்ன விசேஷம்னு…

    என்று கேட்க P.A. சிறிய புன்னகையுடன் ஆர்த்தியை நோக்கி

    கோபால் : தெரியும் சின்னம்மா… ஆனா நானும் சொல்ல மாட்டேன்.

    பொய்க் கோபத்துடன்

    ஆர்த்தி : யாரும் ஒண்ணும் சொல்ல வேண்டாம்… நானே கண்டுபிடிச்சிகிறேன்…

    என்று கூறியபடி ராஜசேகர் கையைப் பிடித்து இழுத்தபடி,

    ஆர்த்தி : வாங்க டிரைவர்… காரை எடுங்க… காலேஜீக்கு லேட்டாயிடுச்சு.

    என்று கூற ராஜசேகர் பொய்க் கோபத்துடன் ஆர்த்தி தலையில் குட்ட… ஆர்த்தி வலிப்பது போல் ஆ எனக் கூறிவிட்டு தன் பாட்டியை

    நோக்கி

    ஆர்த்தி : டாட்டா பாட்டி…

    என்று கூறியபடி ராஜசேகரும் ஆர்த்தியும் வீட்டின் வெளியே செல்கின்றார்கள்.

    காட்சி - 2

    CAR INT /DAY

    இடம்: ரோடு

    பாத்திரங்கள்: ராஜசேகர்,

    Enjoying the preview?
    Page 1 of 1