Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellam Aavi Mayam
Ellam Aavi Mayam
Ellam Aavi Mayam
Ebook97 pages37 minutes

Ellam Aavi Mayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111002588
Ellam Aavi Mayam

Read more from Arnika Nasser

Related to Ellam Aavi Mayam

Related ebooks

Related categories

Reviews for Ellam Aavi Mayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellam Aavi Mayam - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    எல்லாம் ஆவி மயம்

    Ellam Aavi Mayam

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    வானப் பெண் இரவுக் கூந்தலை விரித்திருந்தாள். மணி நள்ளிரவுக்கு இன்னும் இரண்டு மணிநேரம். ஷ்ரவன் தயாரானான். தன்னுடைய டெலஸ்கோப், கேமிரா, உபரியாக பைனாகுலர், பாக்கட் டைரி முதலியவற்றை சேகரித்துக் கொண்டான். தலைக்கு உல்லன் மப்ளர், உடலுக்கு பூப்போட்ட ஸ்லீவ்லெஸ் ஸ்வெட்டர் அணிந்து கொண்டான். பிளாஸ்க்கில் சிக்கரி கலப்பில்லாத காபி நிறைத்துக் கொண்டான்.

    தூக்கக் கலக்கத்தில் அம்மா வெளிப்பட்டாள்.

    மகனை பரிவாய் பார்த்தபடி, பனி செமத்தியா கொட்டுது. இன்னைக்கும் போவணுமா ஷ்ரவன்? என்றாள்.

    ஆமம்மா. நீ பேசாம தூங்கு… என்றான். மெலிதாய் அலிஷாவின் பாடல் ஒன்றை ஹம் பண்ணியபடி சேமிக்கப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் மொபெட்டில் புறப்பட்டான் ஷ்ரவன்.

    ஷ்ரவன் இரவு நேர வானத்தை ஆராயும் அமெச்சூர் அபசர்வர். தன்னுடைய போஸ் க்ராஜுவேட் டிகிரியை அஸ்ட்ரானமியில் முடித்துவிட்டு, கடந்த நான்கு வருடங்களாக வானத்தைக் காதலிக்கிறவன். மணி மாலை ஏழைத்தாண்டி விட்டால் உர்ஷே மெனாரிஸைப் பார்த்து கண்ணடிப்பவன்.

    வாகனம் ஊருக்கு வெளியே நான்கு கிலோமீட்டர் தூரத்தில் ஓடும் ஆற்றின் மணற்படுகையை நெருங்கியது. வாகனத்தின் OFF பட்டன் அமுக்கினான். வாகனம் 'கக்' என்று நின்றது. இறங்கி வாகனத்தை ஸ்டாண்டிட்டான். ஒரு கனத்த படுக்கை விரிப்பை எடுத்து பலமாய் உதறி மணலில் விரித்தான். டெலஸ்கோப்பை வானம் பார்க்க வைத்து ஸ்டாண்டில் பொருத்தினான். கேசுவலாய் ஒரு முறை கண் வைத்து வானம் பார்த்தான். ஓ.கே.

    மணலில் ஓய்வாய் கால் நீட்டி அமர்ந்து கை விரல்களில் நெட்டி முறித்தான் ஷ்ரவன். பின் 140 நொடி சேதாரத்தில் முழங்காலிட்டு குனிந்து டெலஸ்கோப்பில் வானம் உறுத்தான்.

    வடக்கு வானத்து நட்சத்திரங்கள், தெற்கு வானத்து நட்சத்திரகள் வழக்கம் போல் இவனைப் பார்த்து ஷாய்! ஹலோ! சொல்லின.

    இரண்டு மணி நேரம் பார்த்துக் களைத்தவன் அப்படியே மணலில் மல்லாந்து கண் மூடினான்.

    வடக்கு வானத்து நட்சத்திரங்களின் ஒன்றிலிருந்து வாசல் கதவு திறந்தது. அதிலிருந்து ஓர் அதி அற்புதமான அழகி வெளிப்பட்டாள். ஒற்றை ரோஜா போல முழு நிலவை பிரபஞ்ச இருட்டும் கூந்தலில் காதுக்கு மேல் செருகியிருந்தாள். கலவை நிற நட்சத்திரங்களை கோர்த்து ஆடையாய் அணிந்து கொண்டு தூங்கும் ஷ்ரவன் நோக்கிப் பறந்து வந்தாள். பனி ஜில்லிப்பில் கண் விழித்தான். விழித்தவன் அவளைப் பிடித்து ஒரு முத்தம் பதிக்க உலக ஆர்வமாய் அணைக்க

    கனவு கலைந்தது. ஷ்ரவன் விதிர்த்து எழுந்தான். கையில் ரேடியம் டயல் கடிகாரம் 12:45:40 என்றது.

    வைத்த பணம் பெட்டியில் பத்திரமாக உள்ளதா என அடிக்கடி அடிக்கடி திறந்து பார்க்கும் திடீர் பணக்காரனைப் போல பதட்டமாய் வானத்தைப் பார்த்தான் ஷ்ரவன். கோடி முறை அதிர்ந்தான்.

    கால்களால் பறந்து டெலஸ்கோப் பார்த்தான். கண்களுக்குள் ஆச்சரிய பயம் இமயம் கொண்டது. அகல விழிகள் விரிந்தன.

    வாவ்வ்வ்வ்!

    மீண்டும் மீண்டும் உறுத்தான்.

    ஆறாவது மேக்னிடியூடில் டெல் பினஸ்க்கும் ஸெக்னஸ்க்கும் சற்றுத் தள்ளி ஒரு ராட்சச சிவப்பு வெளிச்சம்!

    டெலஸ்கோப் லென்ஸின் பவர் உச்சம் வைத்து அதன் அமைப்பை ஆராய முயன்றான் ஷ்ரவன். இவன் பார்க்க பார்க்க அதன் வெளிச்சம் அதிகமானது.

    என்னவாயிருக்கும்?

    வானக்கிழவனின் தீபாவளியா?

    நட்சத்திர சிறுவர்களின் ஹோலியா?

    என்னவாயிருக்கும்?

    மகாயோசிப்பில் நிலைத்தான் ஷ்ரவன்.

    அடுத்து என்ன செய்வது?

    ஒரே வழி இங்கிருந்து 10கி.மீ தூரத்தில் இருக்கும் பிரதான வானவெளி ஆராய்ச்சி நிலையம் போய் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஒளி வேகத்தில் எழுந்தான் ஷ்ரவன். பொருத்திய டெலஸ்கோப்பை பாகங்களாக பிரித்து கிட்பேக்கில் வைத்து ஜிப்பினான். படுக்கை விரிப்பை உதறி மடக்கினான். பிளாஸ்க்கை எடுத்து வைத்தான். சூரிய சக்தி மொபெட்டில் பேயாய் பறந்தான்.

    நள்ளிரவு இருட்டை வெளிச்சம் பீய்ச்சி கலைத்தவாறே மொபெட் - முன்னூறு மீட்டர் வட்ட பிரதிபலிப்பு ரேடியோ டெலஸ்கோப் உள்ள அந்த வான ஆராய்ச்சி நிலையத்தை நெருங்கியது. அதி அவசரமாய் வாகனம் நிறுத்தி காவலாளியிடம் பாய்ந்தான் ஷ்ரவன்.

    பீடி புகைத்துக் கொண்டிருந்தவன் அரைத் தூக்க கண்களுடன் திரும்பினான்.

    யாருய்யா நீ?

    நான் அமெச்சூர் அப்சர்வர். உள்ளே அவசரமா போவணும்…

    முன் அனுமதி வச்சிருக்கியா?

    இல்ல. ரொம்ப முக்யமான விஷயம்…

    எதாயிருந்தா எனக்கென்ன? உள்ள விடமுடியாது…

    மு-டி-யா-தா? ரண்டடி முன்னேறி முஷ்டி மடக்கி இரு தொடர் குத்துகளை காவலாளி முகத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1