Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engalin Anbar
Engalin Anbar
Engalin Anbar
Ebook793 pages4 hours

Engalin Anbar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்ரீநிவாச இராமானுஜன் இந்திய கணித வரலாற்றின் முடிசூடா இளவரசராக திகழ்கிறார். எண் கணிதத்தில் அவர் தந்தருளிய தேற்றங்கள், ஊகங்கள் இன்றளவும் உலக கணிதவியலாளர்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளதென்றால் அது மிகையாகாது. தமக்கு அதீத கணித சக்தி இருப்பதை உணர்ந்திருப்பினும் மற்றவர்களை போல வெறும் சுய முன்னேற்றத்தை கொடுக்கும் வாழ்க்கையை விரும்பாமல் கணிதத்தை தன் உயிர் மூச்சாக கருதி அதன் ரகசியங்களை அறிய அல்லும் பகலும் உழைத்து பெரும் சாதனைகளை புரிந்தார். இந்நூலில் இராமானுஜனின் விரிவான வாழ்க்கை நிகழ்வுகளையும், அவர் பெயரில் விளங்கும் அடையாளங்களையும், ஒரு சில கணிதக் குறிப்புகளையும் தெளிவாக கூற முயற்சித்துள்ளோம்.

இராமானுஜனை பற்றி ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கின்றன. ஆனால் மிகக் குறைந்த அளவிலேயே தமிழில் அவரை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு தாய் தமிழில் இராமானுஜனை பற்றி மிக விரிவான வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிடவேண்டும் என்ற உயரிய நோக்கோடு இப்புத்தகத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் போன்ற அனைத்து தரப்பினரும் படித்து மகிழும் வண்ணம் எளிய முறையில் ‘பை கணித மன்றம்’ சார்பாக ‘தேசிய கணித ஆண்டு' என அறிவிக்கப்பட்ட 2012 ல் இந்தியாவின் தலைசிறந்த கணித மேதையான ஸ்ரீநிவாச இராமானுஜனின் காவியத்தை உங்களிடம் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்.

பை கணித மன்றம்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580113101757
Engalin Anbar

Related to Engalin Anbar

Related ebooks

Reviews for Engalin Anbar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engalin Anbar - Pie Mathematics Association

    http://www.pustaka.co.in

    எண்களின் அன்பர்

    Engalin Anbar

    Author:

    இரா. சிவராமன்

    R. Sivaraman

    For other books

    http://www.pustaka.co.in/home/author/pie-mathematics-association

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    Bruce Berndt Message

    When mathematicians describe Ramanujan's mathematics, they use the words, beautiful, elegant, surprising, remarkable, amazing, fantastic, ingenious, and clever, for example.  It may seem surprising to you that descriptions such as beautiful are used, for you might think that beautiful should be reserved for speaking about a painting, a landscape, or your mother.  However, when mathematicians encounter one of Ramanujan's elegant formulas or arguments demonstrating its truth, we often exclaim, What a beautiful result! or What an ingenious proof!  Except possibly for Euler, no one established so many beautiful formulas as Ramanujan. But these beautiful formulas did not just fall out of the sky onto Ramanujan's slate.  They arose from hard work and devotion to mathematics.  If one wishes to create interesting and beautiful mathematics, one must have the willingness to concentrate for long periods, do calculations, and often wander down wrong paths before one gains the necessary insights to prove a beautiful theorem or formula.

    I hope that readers will be inspired by this book to turn to Ramanujan's  mathematics to experience the beauty of his ideas.  Although much of Ramanujan's work is deep, much can also be appreciated at more elementary levels. May Ramanujan's mathematics so inspire each reader of this book.

    Best  wishes,

    Bruce Berndt

    Dept. of Mathematics

    University of Illinois

    1409 West Green St.

    Urbana, IL 61801

    George Andrews Message

    It is my great pleasure to recommend this new book on Ramanujan, Ramanujan has been a central figure in my life as a mathematician.  When W.N. Bailey gave his professorial, inaugural lecture, he paid tribute to Ramanujan and closed his account with the following lines: He [Ramanujan] certainly had a great effect on my own work, and I think that probably, if Ramanujan had not lived, I should not now be the new Professor of Mathematics at Bedford College. I feel similarly. I have Ramanujan to thank for almost every good thing that has happened in my mathematical career.  Many of Ramanujan's ideas are still vibrant and exciting topics. It is thrilling to learn of such wonderful achievements done by someone who had many obstacles to overcome.  I hope that all who read about Ramanujan will find inspiration for their own lives.

    George E. Andrews

    Evan Pugh Professor of Mathematics (Penn State)

    Member, National Academy of Sciences (USA)

    Past President, American Mathematical Society

    Robert Kanigel Message

    Photo Courtesy: Felix Rust

    In the almost quarter-century since I visited South India to research my book about Ramanujan, I have been heartened to see that interest in the great Indian mathematician has grown enormously.  I would never have guessed back then that the life of a mathematician could hold such interest to so many, but I am delighted that it has worked out as it has.

    In 1988 and again last year, I met many young South Indians, and found myself wondering how many of them, given the right opportunities, education, and encouragement could excel – not just in mathematics but in all areas of intellectual and cultural life.  If the institutions of society, whether public or private, social or familial, have any one duty or responsibility, it’s to encourage, in every way possible, the blossoming of young people into all they can become.  Ramanujan needed help from his friends.  We all do.

    In mathematics, the Pie Mathematics Association is furnishing just such encouragement and help.  I applaud its efforts.

    Sincerely,

    Robert Kanigel

    Professor of Science Writing

    Massachusetts Institute of Technology (MIT, USA)

    Michel Waldschmidt Message

    Srinivasa Ramanujan was an exceptional mathematician, he is unique, there is no other one like him. As such, he should not be considered as a model, but as a source of inspiration. His life and work already had a strong influence on young people around the world, especially in India, who decided to devote their life to mathematics, like him. They will be rewarded: the life of a mathematicians is something very special, few people experience such excitements of discovering new theorems, of unveiling the hidden beauty of pure science. I wish that this new book, realized by someone fully devoted to the promotion of mathematics towards young students, will have such beautiful consequences of attracting more young students to become mathematicians. 

    Professor Michel Waldschmidt

    Université Pierre et Marie Curie Paris 6 

    Institut de Mathématiques de Jussieu 

    Former President of  Société Mathématique de France (French Mathematical Society)

    Member of Editorial Boards of  Acta Arithmetica.  Springer Verlag: Grundlehren der mathematischen Wissenschaften.  (World Scientific) Series on Number Theory and Its Applications. Chamchuri Journal of Mathematics. Annales des sciences mathématiques du Québec. South Pacific Journal of Pure & Applied Mathematics.  Southeast Asian Journal of Mathematics, honorary editor.

    எண்களின் தன்மைகளை கண்டறிந்து இவ்வுலகையே பிரமிக்க வைத்த எண்களின் அன்பருக்கு ஒன்று முதல் ஐநூறு வரையிலான எண்களை கொண்டு அவரது உருவத்தை வடித்த அற்புத ஓவியர், எங்கள் இனிய நண்பர் திரு. பிரபாகருக்கு எங்கள் மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    பை கணித மன்றத்தைப் பற்றி . . .

    'பை கணித மன்றம்’,  கணித அச்சத்தை முடிந்தவரையில் நீக்குவதற்காகவும்,  மாணவர்கள் கணித பாடத்தை விரும்பி, அனுபவித்து பயில்வதற்காகவும்,  கணிதம் நம் அன்றாட வாழ்வில் எவ்வளவு பின்னி பிணைந்திருக்கிறது என்று தெளிவுப்படுத்த ஏற்படுத்திய மன்றமாகும். இம்மன்றம் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையாக , 18 ஜூன் 2007 அன்று துவங்கப்பட்டது.

    மன்றத்தின் முக்கிய குறிக்கோள்கள்:

    1 .  கணிதத்தால் ஏற்படும் அச்சம் மற்றும் வெறுப்பை நீக்குதல்.

    2.  மாணவர்கள் மற்றும் கணித பயிற்சியாளர்களுக்கு கணித பாடத்தை புதிய, எளிய வழிமுறையைக்  கொண்டு பயிற்றுவித்தல்.

    3.  கணித ஆர்வலர்களுக்கும்,பொதுமக்களுக்கும் கணிதத்தின் அழகையும், நுணுக்கங்களையும், பல்வேறு பயன்பாட்டினையும் எடுத்துரைத்தல்.

    4.  கணிதத்தை அனைவரும் விரும்பும் வகையில் பிரபலப்படுத்த உலகப்புகழ் வாய்ந்த கணித அறிஞர்கள் மூலம் சொற்பொழிவுகள் அமைத்தல் மற்றும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிலரங்கங்கள் நடத்துதல்.

    5.  ஏழை,  எளிய தகுதியுடைய மாணவர்களுக்கும், உடல் ஊனமுற்ற  மாணவர்களுக்கும் ஓராண்டிற்கான படிப்புதவித் தொகை வழங்கி,  அவர்களுடைய மேற்படிப்பிற்கு வழிவகுத்தல்.

    6.  கணிதத்தின் தன்மையையும், அழகையும் அனைவரிடமும் கொண்டுசேர்க்க ஆண்டிற்கு ஒரு புத்தகம் வெளியிடுதல்.

    மன்றத்தில், கணித பாடத்தில் உள்ள தேற்றங்கள், வழிமுறைகளை விளக்க பல விதமான கணித மாதிரிகளை பயன்படுத்தி மாணவர்கள் விரும்பும் வகையில் கணிதத்தின் உண்மைகளை கொண்டு சேர்க்க வழி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மன்றத்திலுள்ள நானூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஒளி நாடாக்கள், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் உள்ள அனைத்து முக்கிய கருத்துக்களை மாணவர்களுக்கு விளக்க உதவுகின்றன.  இந்த ஒளி நாடாக்கள் மூலம் மாணாக்கர்கள் தங்கள் மனதில் கருத்துக்களை நன்கு பதிய வைத்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இதில் கணிதத்தில் எண்கள், முடிவிலி, அரிய கணித உண்மைகள், கணித மாமேதைகளின் வாழ்க்கை வரலாறுகள், மற்றும் கணித வரலாறு பற்றியும், அறிவியலில் புவிஈர்ப்பு , அகிலம், சார்புஇயல், ஒளி, பூமியின் இயற்கை பொருட்கள் போன்றவைகளும்  அடங்கும்.  மாணவர்கள் ஆர்வம் கொள்ளும் வகையிலும், எளிதாக புரிந்து ரசிக்கவும் நாற்பதுக்கும் மேற்பட்ட கணித சுவரொட்டிகள் உதவுகின்றன. 

    மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணித ஆர்வலர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஐம்பது மிக முக்கிய கணித மாமேதைகளின் அரிய உருவப்படங்கள் ‘Photoshop’ மென்பொருள் மூலம் தயார்செய்யப்பட்டுள்ளன. இம்மன்றம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட  நிகழ்ச்சிகளை தென் இந்தியாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தியிருக்கிறது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கங்களும் அடங்கும்.

    இம்மன்றத்தின் சார்பில் இதுவரை கணிதத்தை பற்றிய நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இம்மன்றத்தில் இதுவரை எண்பது உறுப்பினர்கள் வரை உள்ளனர்.  விருப்பமும், ஆர்வமும் உள்ள அனைவரும் இம்மன்றத்தில் உறுப்பினராவதை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் கணிதத்தை மேம்படுத்துவதற்கு எங்களால் இயன்ற முயற்சிகளை உட்கொள்ள முனைகிறோம்.

    நிர்வாக குழு

    பை கணித மன்றம்

    சென்னை – 94

    முகவுரை

    உலக அளவில் பிரசித்தி பெற்ற மாபெரும் கணித மேதையான ஸ்ரீநிவாச இராமானுஜனின் 125 வது பிறந்த நாளை இந்தியா அண்மையில், வெகு விமர்சையாக கொண்டாடியது. பாரத பிரதமர் சில மாதங்களுக்கு முன்பு, இராமானுஜனின் பிறந்த நாளான டிசம்பர் மாதம் 22 ஆம் நாளை தேசிய கணித தினம் என இந்திய அரசின் சார்பில் அறிவித்தார்.

    இந்த அறிவிப்பு அனைவரையும்  பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் 2012ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. "இந்தியாவின் தலைசிறந்த குடிமகன்  ஸ்ரீநிவாச இராமானுஜன்" என  பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்த அறிவிப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் அளவில்லா இன்பப் பெருக்கில் ஆழ்த்தியிருக்கும்.

    ஸ்ரீநிவாச இராமானுஜன் இந்திய கணித வரலாற்றின்  முடிசூடா இளவரசராக திகழ்கிறார். எண் கணிதத்தில் அவர் தந்தருளிய தேற்றங்கள், ஊகங்கள் இன்றளவும் உலக கணிதவியலாளர்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளதென்றால் அது மிகையாகாது. தமக்கு அதீத கணித சக்தி இருப்பதை உணர்ந்திருப்பினும் மற்றவர்களை போல வெறும் சுய முன்னேற்றத்தை கொடுக்கும் வாழ்க்கையை விரும்பாமல் கணிதத்தை தன் உயிர் மூச்சாக கருதி அதன் ரகசியங்களை அறிய அல்லும் பகலும் உழைத்து பெரும் சாதனைகளை புரிந்தார். இந்நூலில் இராமானுஜனின் விரிவான வாழ்க்கை நிகழ்வுகளையும், அவர் பெயரில் விளங்கும் அடையாளங்களையும், ஒரு சில கணிதக் குறிப்புகளையும் தெளிவாக கூற முயற்சித்துள்ளோம். இப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும்  இராமானுஜனின் வாழ்க்கை  நிகழ்வுகளின் தேதிகள் எங்களுக்கு தெரிந்த அளவில் சரியாக உள்ளதாக நம்புகிறோம். இவைகளில் ஏதேனும் சந்தேகமோ, கருத்தோ இருப்பின் எங்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

    இப்புத்தகத்திற்காக வாழ்த்து செய்திகளை வழங்கிய பேராசிரியர்கள் ப்ரூஸ் பெர்ன்ட், ஜார்ஜ் ஆண்ட்ரியூஸ், ராபர்ட் கநேகள் மற்றும் மிசேல் வால்ட்ச்மிட் ஆகியோருக்கு எங்கள் மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இப்புத்தகம் எழுதுவதற்காக கும்பகோணம் சென்ற பொழுது அங்கு எங்களுக்கு உதவிய பெருமக்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறோம். இப்புத்தகத்தை அச்சிட்டு வெளியிட எங்களுக்கு நிதியுதவி அளித்த பெருமக்களுக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். இதை மேண்மையான முறையில் அச்சிட்டு வழங்கிய  Mani Offset Printers என்ற அச்சகத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.   

    இராமானுஜனை பற்றி ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கின்றன. ஆனால் மிகக் குறைந்த அளவிலேயே தமிழில் அவரை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு தாய் தமிழில் இராமானுஜனை பற்றி மிக விரிவான வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிடவேண்டும் என்ற உயரிய நோக்கோடு இப்புத்தகத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் போன்ற அனைத்து தரப்பினரும் படித்து மகிழும் வண்ணம் எளிய முறையில் ‘பை கணித மன்றம்’ சார்பாக ‘தேசிய கணித ஆண்டு' என அறிவிக்கப்பட்ட 2012 ல் இந்தியாவின் தலைசிறந்த கணித மேதையான  ஸ்ரீநிவாச இராமானுஜனின் காவியத்தை உங்களிடம் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம். 

    பை கணித மன்றம்

    டிசம்பர் 2012

    சென்னை - 94

    பொருளடக்கம்

    பகுதி I   இராமானுஜன் வாழ்க்கை

    1.இளையப் பருவம்

    2. கும்பகோணம்- ஒரு கண்ணோட்டம்

    3. பள்ளிப் பருவம்

    4. கல்லூரிப் பருவம்

    5. வாழ்க்கைப் பயணம்

    6. ஆதரவாளர்களை நாடி

    7. மலரும் முயற்சிகள்

    8. இங்கிலாந்தில் இராமானுஜன்

    9. தாயகம் திரும்புதல்

    பகுதி II இராமானுஜன் நினைவாக

    பகுதி III மேதையின் மகத்தான கணிதம்

    பிற்சேர்க்கை I

    பிற்சேர்க்கை II

    பிற்சேர்க்கை III

    பிற்சேர்க்கை IV

    பிற்சேர்க்கை V

    துணை நூற்பட்டியல்

    பகுதி  - I  

    இராமானுஜன் வாழ்க்கை

    இளையப் பருவம்

    இப்புவியே போற்றும் தலைசிறந்த கணித மேதையான ஸ்ரீநிவாச இராமானுஜன், 1887 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22 ஆம் நாள் (வியாழக்கிழமை) ஈரோட்டில், தெப்பக்குளம்  அருகில் அமைந்த தன் தாய் வழி பாட்டனார் திருநாராயணய்யங்கார் இல்லத்தில்,  சூரியஸ்தமனம்  6:20 மணிக்கு அஷ்டமி  40:37 உத்திரட்டாதி 60,  மிதுன லக்னம் கூடிய சுபவேளையில், ஸ்ரீ பாரத்வாஜ கோத்திரத்தில் , ஸ்ரீ ஸ்ரீநிவாசய்யங்காருக்கு ஜேஷ்ட புத்திரனாக (முதல் குழந்தையாக) அவதரித்தார். இராமானுஜனின் ஜென்ம நக்ஷத்திரம் உத்திரட்டாதியாகும். இராமானுஜனின் தாயார் திருமதி. கோமளத்தம்மாள் ஆவார்.

    1. இராமானுஜன் ஜாதக குறிப்பு

    கோமளத்தம்மாளுக்கும், ஸ்ரீநிவாசய்யங்காருக்கும்  திருமணமாகி சில வருடங்கள் வரையில் புத்திர பாக்கியம் அமையாததால், கோமளத்தம்மாளின் தந்தை   திருநாராயணய்யங்கார் தங்கள் குல தெய்வமான நாமக்கல் நாமகிரி தாயாரிடம் வேண்டியதாகவும்  அதன் பேரில் நாமகிரி தாயார் கோமளத்தம்மாளின் அன்னை கனவில் உதித்து உன் மகளின் மூத்த பிள்ளையின் நாவில் நான் குடியிருப்பேன் என கூறியதின் பேரில்   திருநாராயணய்யங்கார் நாமகிரி தாயாருக்கு காணிக்கை முடிந்து வைத்தார். இச்சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே     1887 ஆம் ஆண்டு கோடையில் திருமதி கோமளத்தம்மாள் கர்ப்பமுற்றார். 

    நாமக்கல் நாமகிரி தாயார் (இப்புகைப்படத்தை வழங்கிய திரு.J. பிரபாகருக்கு எங்கள் நன்றி)

    இதனால் கோமளத்தம்மாள் இராமானுஜனின் பிறப்பையே கடவுள் முடிவு செய்ததாகவும், இராமானுஜனின் எல்லா சாதனைகளுக்கும் நாமகிரி தாயாரே காரணம் என நம்பினார். இக்கருத்தையே இராமானுஜன் பிறந்தது முதல் அவருக்கு போதித்தார். இக்காரணத்தினால் இராமனுஜனும் தன் வாழ்வில் நிகழ்ந்த அனைத்திற்கும் கடவுளே உறுதுணையாக தன்னுள் இருந்து செயல்படுவதாக கருதினார். இதனை An Equation to me, means nothing unless it expresses a thought of God என்ற இராமானுஜனின் மேற்கோள் மூலம் நாம் அறியலாம்.

    கோமளத்தம்மாளின் புகைப்படம் ஒன்று கிடைத்தாலும் அவரது தந்தையின் புகைப்படம் ஏதும் நமக்கு கிடைக்கப் பெறவில்லை.

    3. இராமானுஜனை ஈர்ந்தெடுத்த புண்ணிய தாய் திருமதி.கோமளத்தம்மாள்

    ஜோதிடத்தில்  பயிற்சி மற்றும் விருப்பம் உள்ளவர்களுக்கு இராமானுஜத்தின் ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இராமானுஜன் தன் வாழ்வில் வறுமையால் வாடியதையும், அதீத அறிவும், ஆற்றலையும் பெற்று உயரிய  இடத்தை எட்டும் வல்லமை பெற்றதையும், குறைந்த ஆயுள் பெற்ற செய்திகளையும் மேற்கண்ட ஜாதக கட்டங்கள் மூலம் அறியலாம். இராமானுஜனின் தாயார் கோமளத்தம்மாள் ஜோதிட சாஸ்திரத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவராக விளங்கியதால் தன் மகன் இராமானுஜனின் மேற்கண்ட குறிப்புகளை அவரே நன்கறிந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே கோமளத்தம்மாள் இராமானுஜனின் பேரில் அளவுக்கடந்த பாசத்தையும், அக்கறையும் கொண்டவராக திகழ்ந்தார்.

    4. ஸ்ரீ மத் இராமானுஜர்

    வைணவ பெரியார் "ஸ்ரீ மத் இராமானுஜர் வியாழக்கிழமை பிறந்தது போல, தன் குழந்தையும்  வியாழக்கிழமையிலேயே பிறந்ததனாலும், தன் குழந்தையும்  வைணவ பெரியார் போல பேரும் புகழும் அடையப்போவதை, ஜாதகத்தின் மூலம் அறிந்த   கோமளத்தம்மாள், 1888 ஆம் ஆண்டு ஜனவரி   1 ஆம் தேதி ஈரோட்டில் தன் குழந்தைக்கு ஸ்ரீ நிவாச இராமானுஜன் என நாமம் சூட்டி தொட்டிலிட்டார். கோமளத்தம்மாள் தன் மகனுக்கு இராமானுஜன் என்ற பெயரை சூட்டினாலும், தன் குழந்தையை சின்னசாமி (குட்டி கடவுள்") என்றே செல்லமாக அழைத்தார். இப்பெயரே இராமானுஜனின் உற்றார், உறவினர்களிடையே நிலைக்க தொடங்கியது.

    சில மாத காலம், தான் ஈன்ற குழந்தை இராமனுஜனுடன் தன் பெற்றோர் இல்லத்தில் இருந்த   கோமளத்தம்மாள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர்   9 ஆம் தேதி  கும்பகோணத்தில்   எண். 17, சாரங்கபாணி சந்நிதி தெருவில் அமைந்துள்ள தன் கணவரின் இல்லத்திற்கு (புக்காம்) வந்தடைந்தார். (இன்று இராமானுஜனின் இல்லம்  54 என்ற எண்ணை கொண்டு அதே தெருவில் அமைந்துள்ளது). அன்றைய சூழலிலும், இன்றைய சூழலிலும் தோன்றும் இராமானுஜன் இல்லத்தை கீழ் காணலாம்.

    எண் 54 ஐ கொண்டு தோன்றும் இன்றைய இராமானுஜன் இல்லம்

    இராமானுஜனின் தந்தை ஸ்ரீநிவாசய்யங்கார் கும்பகோணத்தில்,  ஒரு ஜவுளி விற்பனை நிலையத்தில் குமாஸ்தாவாக மாதம் இருபது ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். குழந்தை இராமானுஜன் கும்பகோணம் வந்தடைந்த பின் இராமானுஜனின் பெற்றோர் குடும்ப செலவை இருபது ரூபாய் மாத சம்பளத்தை கொண்டு சமாளிக்க முடியாமல் திணறினர். இந்த நிலையை புரிந்து கொண்ட   கோமளத்தம்மாள் சில குழந்தைகளுக்கு பாட்டு பயிற்றுவித்தும், சமையல் செய்து கொடுத்தும், இருபதிலிருந்து இருபத்தைந்து  ரூபாய் வரை கூடுதலாக சம்பாதித்து குடும்ப சூழ்நிலையை சமாளித்தார்.

    இரண்டு வயதளவில் இருந்த குழந்தை இராமானுஜனுக்கு, திடீரென உடல் முழுக்க பெரியம்மை  (Chicken Pox) முத்து தெளித்தாற்போல வாரியிருந்தது.  கோமளத்தம்மாள் சமயபுரம் மாரியம்மனை நெஞ்சுருக  வேண்டியதின் பேரில் மூன்று, நான்கு நாட்களில் படிப்படியாக இராமானுஜனின் உடலில் குடிகொண்டிருந்த பெரியம்மை இறங்கி,   உடல் நிலை குணமானது. இராமானுஜன் இச்சம்பவத்திலிருந்து குணமடைந்த நிகழ்ச்சி நாமகிரி தாயாரின் அருள் தான் என மிக தின்னமாக கோமளத்தம்மாள் நம்பினார்.   இதற்கு காரணம் அந்நாளில் பத்தில் நான்கு குழந்தைகள் வெவ்வேறு நோய்களினால் மாண்டன. இராமானுஜனின் உடல் பெரியம்மையிலிருந்து விடுபட்டு தேறிவந்தாலும், இராமானுஜனின் முகத்தில் அம்மையின் வடுக்கள் ஆங்காங்கே தென்பட்டது.

    இராமானுஜன் முகத்தில் காணும் அம்மை வடுக்கள்

    இராமானுஜனுக்கு  பெரியம்மை  இறங்க உப்பிலியப்பன் பெருமாள் மற்றும் திருப்பதி வேங்கட பெருமானுக்கும் முடி இறக்க வேண்டியதின் பேரில்   1890 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இராமானுஜனுக்கு முடி இறக்கி தன் பிரார்த்தனையை  கோமளத்தம்மாள் பூர்த்தி செய்தார். இராமானுஜன் பெரியம்மையிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தது ஒரு அரிய நிகழ்வாக கருதினர். ஏனென்றால் அதேசமயத்தில் கும்பகோணத்தில் சுமார் நாலாயிரம் பேர் அம்மையில் வாடி உயிர் துறந்தனர். பத்து குழந்தைகளில், மூன்று அல்லது நான்கு குழந்தைகள் ஒரு வயதை அடையும் முன்னரே இறந்தன. மேலும் இராமானுஜன் பத்து வயது அடைந்த தருணத்தில் கும்பகோணத்தில் அதி பயங்கரமாக பரவிய காலரா என்கிற வாந்தி, பேதி நோய் சுமார் பதினைந்தாயிரம் உயிர்களை சுருட்டி வாரி சென்றது.

    இராமானுஜனின் சொந்த குடும்பத்திலேயே இச்சம்பவங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக இராமானுஜன் ஒன்றரை வயது அடைந்த பொழுது  சடகோபன் என்கிற ஆண் குழந்தையை  கோமளத்தம்மாள் ஈன்றார். பிறந்த மூன்று மாதங்களிலேயே அக்குழந்தை மாண்டது. 1891 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இராமானுஜனுக்கு சுமார் நான்கு வயதான தருணத்தில், கோமளத்தம்மாள்  அம்புஜவல்லி என்ற பெண் குழந்தையை  ஈன்றார். அக்குழந்தையும்  1892  பிப்ரவரி மாதத்தில் மாண்டது. இராமானுஜன் ஆறரை வயதை அடையும் பொழுது கோமளத்தம்மாள் சேஷன் என்ற ஆண் குழந்தையை ஈன்றார்.  அக்குழந்தையும் அந்த ஆண்டின் இறுதிக்குள் மாண்டது. ஆனால் சில வருடங்களுக்கு பின்னர் பிறந்த இரண்டு குழந்தைகள் இறப்பின் பிடியிலிருந்து விலகி பிழைத்தனர். குறிப்பாக   1898 ல்,  இராமானுஜனுக்கு பத்து வயது இருந்த பொழுது, லட்சுமி நரசிம்மன் என்ற குழந்தையையும் ஏழு வருடங்களுக்கு பின்னர் திருநாராயணன் என்ற குழந்தையையும் கோமளத்தம்மாள் ஈன்றெடுத்தார்.

    இராமானுஜனின் இளைய சகோதரர் திருநாராயணன்

    இராமானுஜனின் சகோதரர்களும், சகோதரியும் உடனுக்குடன் மாண்டதால் வெகு காலமாக இராமானுஜன் ஒற்றை பிள்ளையாகவே வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் இத்தனை இறப்புகளிலிருந்தும் இராமானுஜனை மீட்டு வாழ வைத்தது, ஒரு சகாப்தம் படைக்கவே என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இராமானுஜனின் குடும்ப விவரத்தை கீழ்காணும் படத்தின் மூலம் அறியலாம்.

    இராமானுஜன் பிறந்த மூன்றாண்டுகள் வரை பேசாமலிருந்ததால் மிக வேதனையடைந்த   கோமளத்தம்மாள்,  குழந்தை இராமானுஜனை, காஞ்சிபுரத்தில் இருந்த  தன் தகப்பனாரிடம் எடுத்து சென்று ஏதாவது பரிகாரம் செய்யலாம் என எண்ணி குழந்தையை காஞ்சிபுரத்திற்கு கொண்டு சென்றார். அச்சமயம் காஞ்சிபுரத்தில் கருடசேவை நடந்தேறி கொண்டிருந்தது. அங்குள்ள பெரியோர்கள்,   குழந்தை இராமானுஜனுக்கு அக்ஷ்ராப்பியாசம் செய்து வைத்தால் வெகு விரைவில் பேசுவான் என்று கூறிய  யோசனைப்படி, கோமளத்தம்மாள் 1890 ஆம் ஆண்டு மே மாதம்  29 ஆம் நாளில் (ஞாயிற்று கிழமையில்)  தன் உறவினர்களில் ஒரு பெரியவரை அழைத்து அரிசியில் இராமானுஜனின் கைவிரலை பிடித்து அக்ஷ்ராப்பியாசம் நடத்தி வைத்தார்.

    குழந்தை இராமானுஜனுக்கு சுமார் ஐந்து மாதங்கள் வரை அவரது இல்லத்திலேயே    அக்ஷ்ரம் கற்று கொடுக்கப்பட்டது. இதுவரை பேசாமலிருந்த குழந்தை இராமானுஜன் நன்கு பேச ஆரம்பித்தான். இதை கண்ட இராமானுஜனின் பெற்றோர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.  சிறிது சிறிதாக பேசி எழுத கற்றுக்கொண்ட இராமானுஜனை பள்ளியில் சேர்த்து முறையான கல்வி போதிக்க விரும்பினார் கோமளத்தம்மாள்.

    1890 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் தேதி (சனிக்கிழமை) விஜயதசமியான திருநாளன்று, காஞ்சிபுரம் தேரடியில் அமைந்த ஓர் திண்ணைப் பள்ளியில் இராமானுஜனை சேர்த்தனர். திண்ணைப் பள்ளியில் வேதங்களையும் அதனை ஓதும் விதத்தையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தனர். ஆனால் இராமானுஜன் அந்த வேதங்களின் அர்த்தத்தையும் தன்மையையும் நன்கறிய விரும்பினான். அர்த்தமும், ஆழமும் அறியாமல் வெறும் வேத மந்திரங்களை நினைவிற்கொண்டு அப்படியே ஒப்பிக்க இராமானுஜன் விரும்பவில்லை. பொதுவாகவே தன்னுள்ளே பல கேள்விகளை கேட்டு அதற்கான உண்மையான பதிலை அறிய குழந்தை இராமானுஜன் ஆசைப்பட்டான். உதாரணமாக உலகின் முதல் மனிதன் யார்? இப்புவி எவ்வாறு தோன்றியது? பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும்   உள்ள தொலைவு என்ன? நாம் கற்கும் கல்வியை எவ்வாறு பயன்படுத்தலாம்? நதி, மலை, மேகம் போன்ற இயற்கை படைப்புகளின் இரகசியங்கள் என்ன? என்பவை போன்ற பல அர்த்தமுள்ள கேள்விகளுக்கு விடை காண முயன்றான்.

    ஆனால் இக்கேள்விகளுக்கான முழு விடையை ஆசிரியர்கள் சரியாக விளக்க முடியாததால், இராமானுஜனுக்கு பள்ளி வாழ்வில் அவ்வளவாக நாட்டம் இல்லாமல் போயிற்று. இத்தருணத்திலிருந்தே இராமானுஜன் தன் சுய சிந்தனையில் தனக்கு ஏற்றவாறு கற்க விரும்பினான். இப்பண்பே இராமானுஜனுக்கு மிகப்பெரிய பலமாக தன் இறுதி காலம் வரை விளங்க காரணமாக அமைந்தது.

    கோமளத்தம்மாளின் தந்தை ஒரு கடன் பிரச்சனையால் தம் வேலையை இராஜினாமா செய்து காஞ்சிபுரத்தை விட்டு கும்பகோணம் செல்ல நேரிட்டது. திண்ணைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் முறையை விரும்பாமல் சுமார்  இரண்டாண்டு காலம் வரை ஒரு பள்ளி விட்டு வேறு பள்ளி மாறி மாறி எங்கும் விருப்பமில்லாமல் இருந்த இராமானுஜனும் , கோமளத்தம்மாளும்  கும்பகோணத்திற்கு சென்றனர். 1894 மார்ச்சில் கோமளத்தம்மாள் இராமானுஜனை  கும்பகோணத்தில் ஒரு திண்ணைப் பள்ளியில் சேர்த்தார். பின்னர் கும்பகோணத்தில் உள்ள காங்கேயன் ஆரம்ப பள்ளியில் சேர்த்தனர். அதில் சில மாதங்கள் பயின்ற இராமானுஜனை  தன் தந்தை திருநாராயணய்யங்கார் இருப்பிடமான மதராஸிற்கு  (இன்றைய சென்னை) கல்வி பயில கோமளத்தம்மாள் அனுப்பி வைத்தார்.  மதராஸில்  பள்ளிக்கே செல்ல விரும்பாத இராமானுஜனை ஒரு காவல்துறை  ஏட்டு மூலம் மிரட்டி பள்ளிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. விருப்பமில்லாத ஆறு மாத காலத்தை கழித்த இராமானுஜனை  1895 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில் மீண்டும் கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்தனர். நவம்பர்  1897 ல் காங்கேயன் ஆரம்ப பள்ளியின் தொடக்க நிலைத் தேர்வில் இராமானுஜன் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார்.  இத்தேர்வு கும்பகோணத்தில் அமைந்த Porter Town Hall எனும் இடத்தில் நடந்தது.

    கும்பகோணம் - ஒரு கண்ணோட்டம்

    கும்பகோணம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. சங்க காலம் தொட்டே சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள்  மற்றும் வெவ்வேறு ஆட்சி அமைப்பிற்கு உட்பட்டு மிக சிறப்பாக விளங்கிய  நகரமாகும். தஞ்சை மாவட்டத்தில் இரண்டாம் முக்கிய மாநகராட்சியாக கும்பகோணம் விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார்   79  அடி உயரத்தில் அமைந்த எழில்மிகு நகரமாகும். கும்பகோணத்திற்கு வடக்கே காவிரி ஆறும்,  தெற்கே அரசலாறும் பாய்ந்து மேலும் எழிலூட்டுகின்றன.

    (திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பாதையில் காவேரி ஐந்து கிளை ஆறுகளாக திரிந்து செல்கிறது. அதில் ஒன்று தான் அரசலாறு என்ற ஆறாகும்)

    கும்பகோணம் வழி செல்லும் காவிரி

    தஞ்சாவூரிலிருந்து வடகிழக்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியிலிருந்து கிழக்கு திசையில் 96  கிலோமீட்டர் தொலைவிலும்,  சென்னையிலிருந்து 273 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணம் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் கும்பகோணம் பெரும் புகழ் பெற்று விளங்கியது.   1866 ல் கும்பகோணம் நகராட்சி அந்தஸ்தை பெற்றது. கும்பகோணத்தில் பித்தளை, வெண்கலம், செம்பு மற்றும் ஈயம் ஆகிய உலோகங்களினால் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் புகழ்பெற்றவை. மேலும் பட்டு, பருத்தி (பஞ்சு) வகை துணிகள், சேலைகள் மிக பிரசித்தமானவை. மட்பாண்ட தொழில், சர்க்கரை உற்பத்தி, அரிசி உற்பத்தி, நீலச்சாயம் தயாரித்தல் போன்றவை கும்பகோணத்தில் முக்கிய தொழில்களாக கருதப்படுகின்றன.

    பல முக்கிய ஆலயங்கள் கும்பகோணத்தில் அமைந்ததனால் கும்பகோணத்தை "ஆலயங்களின் நகரம் (Temple City) என்றழைப்பர். குறிப்பாக கும்பகோணத்தில்  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம்" எனும் குடமுழுக்கு விழா உலகப்புகழ் பெற்றதாகும். இவ்விழா கொண்டாடப்படும் காரணமே மிக சுவையான மற்றும் ஊரின் பெயருக்கு காரணமாக திகழ்கிறது. இக்காரணம் தொன்று  தொட்டு இன்றுவரை மக்களால் நம்பப்படும் கதையாகும்.  

    உயிர்களை படைக்கும் கர்த்தாவாக விளங்கும் பிரம்மா, அவ்வப்போது  உறங்குவதற்கு செல்வார். அவ்வாறு உறங்க செல்லும்பொழுது உலக உயிர்கள் பேரழிவிற்கு உட்படும். பெருங்கடல்கள் வானுயர (இன்றைய சுனாமியை போல) எழுந்து கிராமம் மற்றும் நகரங்களினுள்  சீறிப்   பாய்ந்து  எல்லா உயிரினங்களையும் அழிக்கும். இந்த அழிவை பிரம்ம பிரளயம் என்று கூறுவர். இதிலிருந்து உயிர்களை மீட்க சிவபெருமான் குறிப்பிட்ட சில மக்களை தேர்ந்தெடுத்து,  உயிரணுக்களை கொண்ட விதைகளை மாதிரியாக எடுத்துக்கொண்டு அதை அமுதத்துடன் கலந்து ஒரு பானையில் (கும்பம்) அடைத்து அப்பானையை இமாலய மலையின் (Mount Everest) உச்சியில் வைக்குமாறு அருளினார்.

    பிரம்ம பிரளயம் நடந்தேறிய தருணத்தில் அது உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் (எதிர் பார்த்ததைப் போல) சூறையாடியது. அமுதத்தையுடைய பானையை தயாரித்த மக்களையும் பிரம்ம பிரளயம் விட்டு வைக்கவில்லை. மேலும் வானுயர சீறிப்பாய்ந்த பெருங்கடல் இமாலய மலையின் உச்சியில் பொருத்தியிருந்த பானையையும் இழுத்து சென்றது. நாளடைவில் பெருங்கடலின் மூலம் உருவான நீர், வற்ற துவங்கியவுடன் அப்பானையும் அங்குமிங்கும் சென்று இறுதியில் கும்பகோணம் வந்தடைந்தது.

    இந்நிகழ்விற்குப்  பின் சிவபெருமான்,  வேடன் ரூபத்தை அடைந்து கும்பகோணம் வந்தடைந்த பானையை, சரியான கோணத்தில் ஒரு அம்பை எய்து உடைத்தார். இதனால் பானையில் அமுதத்துடன் கலந்திருந்த உயிரணுக்கள் சிதறியதால் புவியில் மீண்டும் உயிர்கள் தோன்ற ஆரம்பித்தன. இச்சம்பவம் நடந்தேறிய இடமே இன்றைய மகாமக குளமாகும். கும்பத்தை சரியான கோணத்தில் எய்தி, இப்புவியை காத்ததால் இத்தலத்திற்கு கும்பகோணம் (கும்பம் - கோணம்) என்ற பெயர் நிலைத்ததாக கூறப்படுகிறது.  வேடன் ரூபத்தில் வந்து உயிர்களை காத்ததால் இங்குள்ள சிவபெருமானுக்கு கும்பேஸ்வரர் என்ற பெயர் நிலைத்தது. இதனாலேயே கும்பகோணத்தில் அமைந்த ஆலயங்களில் மிகச்  சிறப்பு மிக்க ஆலயமாக கும்பேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.  இவ்வாறு பூமியில் பேரழிவு ஏற்படும் காலத்தில் எல்லாம், உயிர்களை மீண்டும் மீட்கும் வல்லமைப் பெற்று விளங்கும் புண்ணிய இடமாக விளங்குகிறது கும்பகோணம்.

    இந்த விழாவில் கலந்து கொள்ளும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் அங்குள்ள இருபது கிணறுகளில் உள்ள தீர்த்தத்தினால் (புண்ணிய நீர் -   Holy Water ) தம்மை நனைத்து கொண்டு, மகாமக குளத்தில் மூழ்கி பின் காவிரி ஆற்றில் குளித்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வர். 

    பிரசித்தி பெற்ற கும்பகோண மகாமக குளம்

    கும்பகோணத்தை பாஸ்கர ஷேத்ரம், கும்பம், குடந்தை என்ற பெயர்களைக் கொண்டும் அழைப்பர். முன்னதாக கும்பகோணம், குடமுக்கு என்ற தமிழ் பெயரால் அழைக்கப்பட்டது. சங்க காலத்தில் கும்பகோணத்தை குடவாயில் என்றழைப்பர்.

    கீழ்காணும் தமிழிலக்கிய பாடல்களின் மூலம் கும்பகோணம் மற்றும் மகாமகத்தின் சிறப்பினை உணரலாம்.

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கல்வியில் மேண்மையுற்று விளங்கக்கூடிய பள்ளி, கல்லூரிகள் கும்பகோணத்தில் அமைந்ததனால் கும்பகோணம் "தென் இந்தியாவின் கேம்ப்ரிட்ஜ்"  என்ற பெருமையைப் பெற்ற நகரமாக திகழ்ந்தது. இதற்கு சான்றாக பல அறிஞர்கள் கும்பகோணத்தில் பயின்று வெவ்வேறு துறைகளில் இந்திய அரசு பொறுப்புகளில் உயரிய பதவிகளை பிற்காலத்தில் வகித்தனர். (இங்கிலாந்தில் கேம் என்ற ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் அமையப் பெற்றிருந்த நகரத்தை  கேம்ப்ரிட்ஜ் என்று அழைத்தனர். அதே போல் காவிரி ஆற்றின் குறுக்கே பெரிய பாலம் அமையப் பெற்று கும்பகோணம் விளங்கியதால் கும்பகோணம்  "தென் இந்தியாவின் கேம்ப்ரிட்ஜ்"  என்ற தலைப்பை பெற்றது என சிலர் கருதுவர்). 

    கும்பகோணம்-சென்னை வழி செல்லும் நெடுஞ்சாலை குறுக்கே ஓடும் காவேரி

    இராமானுஜன் இல்லம் இருந்த தெருவில் அமைந்த சாரங்கபாணி பெருமாள் கோயிலும் கும்பகோணத்தில் சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றாகும். இராமானுஜனின் இல்லத்திலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இராமானுஜனுக்கு சாரங்கபாணி கோயிலும், காவிரி ஆறும் கும்பகோணத்தில் மிகப் பிடித்தமானவை.

    இராமானுஜன் இல்லத்திலிருந்து சில அடி தூரத்தில் காட்சியளிக்கும் சாரங்கபாணி பெருமாள் கோயில்

    சாரங்கபாணி பெருமாள்

    குழந்தை இராமானுஜனும் பிற்காலத்தில் கணிதத்தில் ஒரு மாமேதையாக திகழ்வதற்கு தயாராக, பெரும் பேரும், புகழும் பெற்ற கும்பகோணத்தில் காத்திருந்தான்.

    பள்ளிப் பருவம்

    ஐயர்/ ஐயங்கார்

    இராமானுஜனின் குடும்பம் ஏழ்மையில் வாடினாலும், மிக ஆச்சாரமான குடும்பமாக விளங்கியது. இன்றளவும் பெரும்பாலான ஐயங்கார் குடும்பங்கள் இந்த ஆச்சாரத்தை கடைபிடித்து வாழ்கின்றனர். தென் இந்தியாவில் ஹிந்து காலச்சாரத்தில் இரு முக்கிய பிரிவுகள் உள்ளன. சிவபெருமானை மூல தெய்வமாக தொழும் குழுவினரை சைவர்கள் எனவும் பெருமாளை (விஷ்ணு) மூல தெய்வமாக தொழும் குழுவினரை வைணவர்கள் எனவும் அழைப்பர். சைவர்களை  ஐயர்கள் எனவும் வைணவர்களை ஐயங்கார்கள் எனவும் அழைப்பர். சைவர்கள் பெருமாளையும் தொழுவர், ஆனால் பெரும்பாலான வைணவர்கள் சிவபெருமானை தொழுவதில்லை. ஆதலால் ஐயங்கார்கள், ஐயர்களை விட ஒருபடி மேலானவர்கள் என்ற கருத்தே, இவ்விரு குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பெரிதளவில் நிலைக்க காரணமாய் அமைந்தது. ஆனால் இன்று இந்த சூழ்நிலை சற்று மாறி உள்ளது. 

    இராமானுஜனும் ஐயங்கார் குடும்பத்தை சார்ந்ததால் மிக ஆச்சாரமாக பெரும் பக்தியுடன் இருந்தார். இராமானுஜன் தினமும் பள்ளிக்கு செல்லும் முன் கோமளத்தம்மாள், அவரது தலை முடி மற்றும் கொண்டையை நன்றாக சீவி அதில் சிறு புஷ்பங்களை வைத்து அலங்கரிப்பார் . மேலும் இராமானுஜனின் நெற்றியில் திருமண்ணை (நாமம்) நேர்த்தியாக இட்டு விடுவார். இந்த திருமண், ஐயங்கார் குடும்பங்களின் சின்னமாகக்  கருதப்படுகிறது. (நெற்றியின் குறுக்கே மூன்று இணைக் கோடுகள் கொண்ட விபூதி பட்டைகள், ஐயர் குடும்பங்களின் சின்னமாகக் கருதப்படுகிறது).

    இராமானுஜனின் அடிப்படை குணங்கள்

    பள்ளிக்கு செல்லும் முன் இராமானுஜன் தன் தெருவில் அமைந்துள்ள சாரங்கபாணி கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்டு, பின் தன் தாயார் கோமளத்தம்மாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து செல்வார். கோமளத்தம்மாளே இராமானுஜனுக்கு தகுந்த ஆடைகளை அணிவித்து, தேவையான புத்தகங்களை பையில் போட்டு இராமானுஜன் கையில்  சிலேட் எனும் கற்பலகையை கொடுத்து காங்கேயன் பள்ளி வரை தானே கையை பிடித்து அழைத்து சென்று விடுவார். இராமானுஜனும் பள்ளியில் கற்றுக் கொடுப்பதை நேர்த்தியாக கவனித்து நன்கு பாடங்களை கற்கலானார். மற்ற மாணவர்களிடம் அதிமாக பழக விரும்பாத இராமானுஜன், தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தார்.

    மாலையில் பள்ளி முடிந்து இல்லம் திரும்பியவுடன், நண்பர்களுடன் வெளியே எங்கும் விளையாட செல்லாமல் தன் பாடத்தை குறிப்பாக கணிதத்தை தன் இல்லத்தின் படுக்கையறையில் உள்ள ஜன்னல் திண்ணையில் அமர்ந்து பயிற்சி செய்வார். சக மாணவர்கள், நண்பர்கள் தெருவில் தனக்கெதிரே விளையாடிய பொழுதும் அதை பொருட்படுத்தாமல் இராமானுஜன் தன் முழு சிந்தனையையும் கணிதத்தின் மேலேயே செலுத்தினார்.

    (இதிலிருந்து, தான் இறைவன் அருள் பெற்று பெரிய மேதையாகும் அறிவையும், திறனையும் பெற்றிருந்தாலும் அந்த ஆற்றலை உணர்வதற்கு கடின உழைப்பும் தியாகமும் கொண்டிருக்க வேண்டும் என்ற பெரும் உண்மையை இராமானுஜன் மற்றவர்களுக்கு உணர்த்தினார். இந்த குணம் இன்றைய இளைய சமுதாயத்திற்கு சிறந்த பாடமாகும்).

    இராமானுஜன் இப்படத்தில் காணும் திண்ணையில் அமர்ந்து கணக்கை போட்டுக்கொண்டே தன் தோழர்கள் விளையாடுவதை காண்பார்

    இராமானுஜனுக்கு தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற கிராமிய கலைகளில் மிகுந்த ஈடுபாடுண்டு. அவ்வப்போது தன் ஊரில் நடைபெறும் தெருக்கூத்தை கண்டு மகிழ்வார். மேலும் இராமானுஜனுக்கு கைமுறுக்கு, தட்டை போன்ற பலகாரங்கள் மிக பிடித்தமானவை. ஆகையால் இராமானுஜன் பள்ளி முடிந்து இல்லம் வந்தபிறகு கோமளத்தம்மாள் அவருக்கு ஏதேனும் பலகாரம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  இராமானுஜனும் அப்பலகாரங்களை மிக விரும்பி உண்பார். ஏதேனும் நாளில் பலகாரம் இல்லையெனில், இராமானுஜன் கீழே பிரண்டு பிரண்டு அழுவாராம். இவ்வாறு செய்வதை கண்ட  கோமளத்தம்மாளின் தந்தை   திருநாராயணய்யங்கார், இராமானுஜனை கீரிப்பிள்ளை என கேலி செய்வார்.

    தெருக்கூத்தில் நிகழும் ஒரு காட்சி

    வறுமை

    இராமானுஜன் குடும்பம் வறுமையில் வாடியதால், குழந்தைகளுக்கு  மட்டும் தான் இரவு வேளையில் உணவு மீதமிருக்கும். அநேக நாட்களில் இராமானுஜனின் பெற்றோர்கள் இரவில் பட்டினியாக தான் இருக்க நேர்ந்தது. இரவில் சிறிதளவு சாதம் மிஞ்சியிருந்தால் அதை மறுநாள் காலையில் தயிர்சாதமாக (பழையது) கொடுப்பார்.    பழைய தயிர்சாதம் இராமானுஜனுக்கு மிக பிடித்தமான உணவாகும். அதிலும் தயிர்சாதத்திற்கு குழம்போ அல்லது ஊறுகாயோ இல்லையெனில் அதில் வாழைப்பழத்தையோ அல்லது பலாப்பழத்தையோ கலந்து உண்பது இராமானுஜனுக்கு கொள்ளை பிரியமாகும்.

    உபநயனம்

    ஐந்து வயது நிரம்பிய இராமானுஜனுக்கு  உபநயனம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் விரும்பினர். (ஐயர் மற்றும் ஐயங்கார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு   5,7,9,11,13,15,… போன்ற ஒற்றை படை அகவை அடையும் பொழுது உபநயனம் என்ற பூநூல் அணிவிக்கும்  நிகழ்ச்சியை விமர்சையாக நிகழ்த்தி வைப்பர். இந்த பூநூலே ஐயர் மற்றும் ஐயங்கார்களின் அடையாளமாகக் கருதப்படும்).

    இராமானுஜனின் தந்தை புண்ணிய ஷேத்ரங்கள் சென்று வழிபட நினைத்து தன் குடும்பத்துடன் இராமேஸ்வரம் சென்றார். அங்கு தரிசனம் செய்துவிட்டு காளையார் கோயிலில் ஒரு விழாவையும் காணச் சென்றார். பின் தன் இல்லம் திரும்பும் வழியில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் இராமானுஜனுக்கு உபநயனமும் செய்து வைத்தார். இராமானுஜனும் உபநயனம் முடிந்த பின் செய்ய வேண்டிய சந்தியாவந்தனம் என்ற நித்ய கர்ம பிரார்த்தனைகளை கவனமாக கற்றுக்கொண்டு அதை முறை தழுவாமல் பின்பற்றினார். (சந்தியாவந்தனம் என்பது வேத மந்திரங்கள் அடங்கிய ஸ்லோகங்கள் கொண்ட  பிரார்த்தனை முறையாகும்.  இதை     பூநூல்     அணிந்தவர்கள் தினம்தோறும் கடைப்பிடிப்பது காலந்தொட்டு வரும் பழக்கமாகும்).

    டவுன் உயர் நிலை பள்ளி – கும்பகோணம்

    இராமானுஜன் ஐந்தாம் வகுப்பு முடிந்த பின், கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் முதல் பருவம் (இன்றைய ஆறாம் வகுப்பு) என்ற வகுப்பில் சேர்க்கப்பட்டார். அக்காலத்தில் கும்பகோணத்தில் டவுன் உயர்நிலைப் பள்ளி  மிக பிரசித்தி பெற்ற பள்ளியாக விளங்கியது.

    டவுன் உயர் நிலைப் பள்ளி – கும்பகோணம்

    பிரமிக்கும் பூஜ்ஜியங்கள்

    இராமானுஜனுக்கு   பன்னிரெண்டு வயது இருந்த பொழுது தான், முதன் முதலில் கணிதத்தில் அதீத ஆற்றலும், திறனும் வெளிப்பட்டதாக தெரிகிறது. கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில்,  இராமானுஜன் மூன்றாம் பருவம் ( Third Form  -  இன்றைய எட்டாம் வகுப்பு) எனும் வகுப்பில் மாணவராக அமர்ந்திருந்தார். அப்பொழுது எண்கணிதம் பயிற்றுவிக்கும் அப்பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு வகுத்தல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அத்தருணத்தில் ஆசிரியர் பத்து பழங்கள் என்னிடம் இருக்குமெனில், அப்பழங்களை ஐந்து மாணவர்களுக்கு சமமாக பிரித்துக் கொடுத்தால் ஒவ்வொரு மாணவனுக்கும், எத்தனை பழங்கள் கிடைக்கும்? எனக் கேட்டார்.  அதற்கு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இரு பழங்கள் கிடைக்கும் என பதிலளித்தனர். இதைக் கேட்ட ஆசிரியர்   10/5=2 என்பதாலேயே ஒவ்வொருவருக்கும் இரு பழங்கள் கிடைக்கும் என விளக்கினார். அதேபோல் மூன்று பழங்களை, மூன்று மாணவர்களுக்கு சமமாக பிரித்துக் கொடுத்தால் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு பழமே கிடைக்கும் என்பதை   3/3 = 1 மூலம் விளக்கினார். இதனால் பழங்களின் எண்ணிக்கையும், பிரித்துக் கொடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஒரே அளவில் உள்ளதெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு பழமே கிடைக்கும் என்பதை x/x = 1  மூலம் விளக்கினார். 

    இதைக் கேட்ட இராமானுஜன் "ஐயா, எனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1