Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arjunanukkaga Alla Namakke
Arjunanukkaga Alla Namakke
Arjunanukkaga Alla Namakke
Ebook75 pages25 minutes

Arjunanukkaga Alla Namakke

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்ரீகிருஷ்ணர் அருளிய பகவத்கீதையை பலரும் பல விதமாக படைத்து ஆன்மிக சிந்தனைகள் உலகில் பரவ காரணமாக இருக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் யுத்தகளத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்க என்ன காரணம்? தன் உற்றார் உறவினர் நண்பர்கள் சூழ்ந்திருக்க கலங்கி நிற்கும் அர்ஜுனனை முன்னிலை படுத்தி நமக்கே அவர் உபதேசித்தது. ஒரு சிறு கல்லை கண்ணருகே வைத்து கொண்டு மலையென மயங்கி கிடக்கிறோம். போர் களத்தில் 700 ஸ்லோகங்களை உபதேசித்து கொண்டிருக்க முடியுமா? சாதாரண மக்களாகிய நமக்கு எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய கருத்துக்கள் புலப்படும்.

சொல்பவர் கண்ணன் அடிபணிந்து கேட்பவர், ஆயக்கலைகள் நிபுணர், ஸ்ரீகிருஷ்ணரின் ஆருயிர் நண்பர். அவருக்கு கண் இமைக்கும் நேரம் போதும் வாழ்க்கை தத்துவம் புரிய. பின் இந்த 700 ஸ்லோகங்கள் ஏன்? சிந்தனைக்கு எட்டியது.... பகவத் கீதை "அர்ஜூனனுக்காக அல்ல...... நமக்கே" ஒரு புதிய பார்வையில், பாமரனாய் பாமரனுக்கு புரிய பகவத்கீதைக்கு ஒர் எளிய அறிமுகம் தர முயன்றுள்ளேன். பகவத்கீதைக்கு உரை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். ஆன்மிக வாழ்வில் முக்கிய இன்றியமையாத சில தகவல்களையும் தர முயன்றுள்ளேன்.

ராகவ யாதவீயம் பலரும் அறியாத ஒன்று. பலரும் அறிய ஒரு சிறிய அறிமுகம் தந்துள்ளேன். பாண்டி ஸ்ரீஅரவிந்த் ஆசிரமம் ஸ்ரீஅன்னை மக்கள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். சில நிகழ்வுகளை தந்துள்ளேன். வேதத்தில் சிறிது நுழைந்து வந்துள்ளேன். குற்றம் குறையிருப்பின், முழு பொறுப்பேற்கிறேன், மன்னித்தருள வேண்டுகிறேன். தவறுகளை திருத்த வாய்ப்பளிக்க வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580178911099
Arjunanukkaga Alla Namakke

Related to Arjunanukkaga Alla Namakke

Related ebooks

Reviews for Arjunanukkaga Alla Namakke

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arjunanukkaga Alla Namakke - V. Dhayalan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அர்ஜுனனுக்காக அல்ல நமக்கே

    Arjunanukkaga Alla Namakke

    Author:

    வெ. தயாளன்

    V. Dhayalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-dhayalan

    பொருளடக்கம்

    வேதம்

    உத்கீதம்

    அர்ஜுனனுக்காக அல்ல... நமக்கே

    பதினெண் புராணங்கள்

    ராகவ யாதவீயம்

    கயா சிரார்த்தம் சிறப்புக்கள்

    ரமண மகரிஷி

    புத்தாண்டு

    அந்த ஒரு நிமிடம்

    அன்னை என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள்.

    வெள்ளை தாடி

    அம்மா...

    வேதம்

    வேதம் முழுவதும் மந்திரங்கள் நிரம்பியிருக்கின்றன. மிகவும் நியமமாகவும் ஆசாரமாகவும் இருந்து, ஜபம் செய்ய வேண்டும்

    சர்க்கரை சுவையானது என்று கேட்பதை விட அது ஒரு துளி நம் வாயில் விழும் போது நாம் அனுபவிக்கும் சுகமே அலாதியானது தான். அது போன்றது தான் வேதமும்.

    வேதம் சுருதி. அதைக் காதினிலே கேட்டு, அப்படியே வாக்கில் தாரணம் பண்ண வேண்டும். புத்தகத்தை பார்த்துப் படிப்பதல்ல.

    ரிஷயோ மந்தர த்ரஷ்டார

    ... ரிஷிகள் மந்திரத்தை பார்த்தவர்கள். கண்ணால் பார்ப்பது என்று அர்த்தம் அல்ல. ஒலி ரூபமான மந்திரங்களை, அநாதியான சப்தங்களை கிரகித்துக் கொள்கிறார்கள். அவர்கள் சுவடிகளில் பதிவு செய்ததை வேதவியாசர் நான்காகப் பிரித்து தந்தார்.

    ஜைமினியிடத்தில் சாம வேதத்தை ஒப்படைத்தார்.

    வைசம்பாயனரிடத்தில் யஜூர் வேதத்தையும்,

    ஸுமந்துவிடம் ரிக் வேதத்தையும்,

    பைலரிடம் அதர்வண வேதத்தையும் ஒப்படைத்தார்.

    மேலும் தொடர்வதற்கு முன்

    ஸ்ரீ பரமாச்சாரியார்கள் வேதம் பற்றி நமக்கு அருளியதை பருகுவோம்.

    "ஒவ்வொரு சப்தத்தால் ஒவ்வொரு விளைவு வெளி உலகில் உண்டாகிறது. ஆராய்ச்சியாளர்கள் சிலவிதமானசப்தங்களை ஸ்வரஸ்தானங்களில் அமைத்து ஒரு ஏரிக்குப் பக்கத்தில் திரும்பத்திரும்ப வாசித்த போது, அதிலிருந்து உண்டான அதிர்வுகளால் ஜலத்தின் மேலே ஒளியானது தூள்தூளாகப் பிரகாசித்துக் கொண்டு, அப்புறம் அந்த ஒளித் துகள்களெல்லாம் ஒழுங்கான ஒரு வடிவத்தில் அமைந்தன.

    ஒவ்வொரு விதமான ஸ்வர வரிசைக்கும் இப்படி ஒரு ஒளி உருவம் உண்டாயிற்று. இதன் மூலம் வேத மந்திர சப்தங்களால் தேவதா ரூபங்களின் தரிசனம் பெற முடியும் என்பதை நம்ப முடிகிறது.

    வேத சப்தங்கள் வெளிச் சூழலில் பரவிக் கொண்டிருப்பதாலேயே லோகத்தில் பரம மங்களம் உண்டாகும். அப்படிப்பட்ட சக்தி அந்த மந்திரங்களுக்கு இருக்கிறது. சப்தம் மட்டுமில்லாமல், அதன் ஸ்வரஸ்தானத்துக்கும் சக்தி உண்டு.

    மந்திர மகிமையில் பட்ட மரம் கூடத் துளிர்க்கும் என்பதைத் திருவானைக்காவில்பிரத்தியட்சமாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். ஜம்பு என்கிற வெண் நாவல் மரம்தான் அங்கே ஸ்தல விருட்சம். அதனாலேயே அந்த ஊருக்கு ஜம்புகேசுவரம் என்று பெயர் இருக்கிறது. அங்கேயிருந்த ஸ்தல விருட்சம் பட்டுப்போய் ஒரே ஒரு பட்டைதான் ஏதோ கொஞ்சம் உயிரை வைத்துக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் கானாடுகாத்தான் செட்டியார்கள் திருப்பணி செய்தார்கள். அப்போது இந்த பட்ட மரத்துக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் செய்தார்கள். மந்திர சக்தியால் அப்போதே அது தளிர்த்தது."

    ...ஸ்ரீ பரமாச்சாரியார்கள்

    இக் கட்டுரைக்கு உற்ற துணையாக இருந்து உதவும் அனைத்து மகான்களின் பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

    வேதங்கள் நான்கு

    1. ருக் வேதம்

    2. யஜுர் வேதம்

    3. சாம வேதம்

    4. அதர்வண வேதம்

    உபநிஷதங்கள் 108.

    ஆனால் அங்கீகரிக்கப்பட்டவை பத்து மட்டுமே.

    ஈச, கேந, கட, பிரச்ந, முண்டக, மாண்டூக்ய, தைத்திரி!

    ஐதரேயம், சாந்தோக்யம், ப்ருஹதாரண்யம் தச!

    ... ஸ்ரீ மகா பெரியவர்.

    வேதங்களும் அதனைச் சார்ந்த உபநிஷதங்களும்.

    ருக் வேதம்...

    1. ஐதரேய உபநிஷதம்.

    யஜூர் வேதம்...

    1.ஈசோப உபநிஷதம்,

    2. கடோபநிஷதம்

    3. தைத்திரீய உபநிஷதம்

    4. மஹா நாராயண உபநிஷதம்.

    5. ப்ருஹதாரண்யக உபநிஷதம்.

    சாம வேதம்...

    1. கேன உபநிஷதம்

    2.

    Enjoying the preview?
    Page 1 of 1