Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rajamaniyai Kaanomey!
Rajamaniyai Kaanomey!
Rajamaniyai Kaanomey!
Ebook255 pages1 hour

Rajamaniyai Kaanomey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதராஸிலிருந்து ராஜாமணி தன் குடும்பத்தோடு கும்பகோணம் செல்வதற்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தான். கும்பகோணம் ஸ்டேஷனில் வந்து இறங்கியபோது, திடீரென்று ராஜாமணி காணாமல் போய்விட்டான். குடும்பத்தில் உள்ள அனைவரும் அவனைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். அதன் பின்னர் நிகழ்ந்தது என்ன? ராஜாமணி கிடைத்தானா? இல்லையா? என்பதை காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580126609155
Rajamaniyai Kaanomey!

Read more from Devan

Related to Rajamaniyai Kaanomey!

Related ebooks

Reviews for Rajamaniyai Kaanomey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rajamaniyai Kaanomey! - Devan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ராஜாமணியைக் காணோமே!

    (சிறுகதைகள்)

    Rajamaniyai Kaanomey!

    (Sirukadhaigal)

    Author:

    தேவன்

    Devan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devan

    பொருளடக்கம்

    1. புது நாடகம்

    2. ராஜாமணியைக் காணோமே!

    3. மைசூர் மிருகங்கள்

    4. தூக்க மருந்து

    5. உயிருக்குயிரான விஷயம்

    6. தீபாவளி வியாபாரம்

    7. ராஜியின் பிள்ளை

    8. மயிலூர் பங்களா

    9. மின்னல் கொடி

    10. வால் நக்ஷத்திரம்

    11. ரங்கூன் பங்களா

    12. தேர்ந்த நடிகர்கள்

    13. வீரபாகுவின் சஞ்சலம்

    14. பெண்புலி!

    15. நடிகன் நாராயணன்

    1. புது நாடகம்

    (சின்ன ராஜாமணி சொன்னபடி)

    நானும் அம்பி மாமாவுமாக ஒரு டிராமாவுக்குப் போய்விட்டு வந்தோம். அது முதல் கொண்டு எனக்குச் சாதாரணமாய் எல்லோரையும் போல் வேஷ்டி, சொக்காய் போட்டுக்கிறதற்கே பிடிக்கமாட்டேனென்கிறது. ஒரு வேஷ்டி (இல்லாட்டா, சின்ன நிஜார்) மென்னியைப் பிடிக்கிறாப்லே ஒரு சட்டை இதெல்லாம் யாருக்கு வேண்டியிருக்கு? அதுக்கோசரம்தான் டிராமான்னு வைத்து, கலர் கலரா, விதம் விதமா, ‘டிரஸ்’ பண்ணிக்கிறாளோன்னு கூட எனக்குத் தோண்றது.

    டிராமா பார்த்ததே முதல் எனக்கு வேடிக்கையா, ‘டிரஸ்’ பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கு. என்னை வேஷம் போட்டுக்கொள்ளச் சொன்னால் நான் கள்ளன் வேஷம்தான் போட்டுக்குவேன் - உடம்பெல்லாம் கரி பூசிக் கொண்டு, முகமூடி போட்டுக்கொண்டு பட்டாக்கத்தியை இடுப்பிலே சொருகிக்கொண்டு, டுபாக்கி வைத்துக் கொண்டு.

    அப்பா சொல்றார் திருடன் வேஷம் போட்டுக்கிறதில் ஒன்றும் உபயோகமில்லை. இந்த நாளில்தான் முனிஸி பாலிடிக்காரர்களெல்லாம் வீட்டுவரி, கிஸ்திவரி, சம்பளவரி, உக்காந்தா எழுந்திருந்தா வரி அப்படின்னு எல்லாம் வேஷம் போட்டுக்காமேயே தாராளமாய்க் கொள்ளை அடிச்சுண்டு போறாளே? வேஷம் போட்டுண்டு என்ன பிரயோசனம்?

    அப்பா ஒருதரம் டிராமாவிலே பவுடர் போட்டுண்டு ஆடினாராம். பவுடர் மூஞ்சியிலே நன்னா ஒட்டிண்டுத்தாம். ஆனமட்டும் அலம்பியும் விடமாட்டேன்னுடுத்தாம். ஆத்துக்கு வந்து, தட்டானை அரம்கொண்டுவரச் சொல்லி, அதை ராவி எடுத்தாராம்.

    எனக்கு வேஷம் போட்டுக்கணும்னு ரொம்ப ஆசையாக இருக்கு. ஆனால் நல்ல டிராமாவாக இல்லாதபோது எப்படி வேஷம் போட்டுக்கிறது? நல்ல டிராமான்னா, நிறையத் திருடன், கள்வன், டுபாக்கி எல்லாம் வரணும். வர தீபாவளி அன்னிக்கி எங்காத்து இரண்டாங்கட்டிலே கரி உள்ளிலே டிராமா போடப் போகிறோம். டிக்கட் இரண்டு தம்பிடி வைக்கலாம்னு நினைக்கிறேன். நான்தான் முக்கியமான திருடன் வேஷம் போட்டுக்கொள்ளப் போகிறேன். அடுத்த வீட்டு ஜயராமன் எனக்குச் சேவகன். ஜயராமனுக்குச் சேவகன் வேஷம் போட்டுக் கொள்வதில் அவ்வளவு திருப்தி இல்லை. நல்ல சேவகனாக வேறே கிடைக்கவில்லை.

    பள்ளிக்கூடம் லீவ் விட எத்தனை நாள் இருக்குன்னு போர்டிலே கணக்குப் போட்டுப் பார்த்தேன். இன்னும் ஏகப்பட்ட நாள் இருக்கு. கிளி மூக்கு உபாத்தியாயர் அதை இன்னும் அதிகமாகத் தோணும்படி அடித்து விடுவார். லீவுக்கு முந்தி ஓர் உபத்திரவம் இருக்கு - பரீட்சை நான் மட்டும் சர்க்காரில் இருந்தால் பரீட்சையே கூடாதுன்னு அடித்து விடுவேன் இல்லாவிட்டால் வாத்தியார் எல்லோரையும் உக்கார்த்தி வைச்சுப் பரீட்சை எழுதச் சொல்லி விடுவேன்.

    நான் ஆடப்போகிற பெரிய டிராமாவுக்கு இப்போதுதான் வேஷம் போட்டுப் பார்க்கிறோம். அதை நான்தான் எழுதினேன். நான்தான் ஆடப் போகிறேன். சின்னச் சின்னப் பேர்வழிகள் 3, 4 பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னைப்போல் ஜோராய் ஆட முடியாதுன்னு தோன்றும். என்னைவிட எவனாவது நன்னா ஆட முடியுமானால் முன்னால் வாருங்கள் ன்னேன். ‘அப்படித் தைரியமாய் வந்தால் முதுகில் பளார் பளார்னு கொடுத்துடுவேன்’ன்னு முன்னாலேயே சொல்லி வைத்துவிட்டு ஜயராமனைக் கிட்டே கூப்பிட்டு, மாதிரிக்கு இரண்டு அவன் முதுகிலே கொடுத்துக் காண்பித்தேன். எல்லாப் பசங்களும் பேசாமல் இருந்து விட்டார்கள். அது சரிதானே?

    அதோடே டிராமா நான் எழுதினது. எனக்கு முக்கிய வேஷம் இல்லைன்னால் நான் அப்பா சாவிக்கொத்தில் இருந்து தெரியாமல் கழட்டிக்கொண்டு போய்விடுவேன். திருடன் வேஷக்காரனுக்குப் பேனாக் கத்திகூட இல்லைன்னால் அப்புறம் என்ன உபயோகம்?

    சரி, உள்ளிலேயே டிராமாவை ஆடிப்பார்க்கத் தீர்மானித்தோம். முதலிலே நான் எல்லாப் பசங்களுக்கும் அதை வாசித்துக் காண்பித்தேன். அதை என் காப்பி நோட்டில் எழுதி இருக்கிறேன். இன்னும் கொஞ்ச நான் கழித்து இதை நூறு இருநூறு ரூபாய்க்குக்கூட விற்று விடலாம். என் மாமா வைரக் கடுக்கன் வேணும்னு அவன் மாமனாரைக்கேட்கப் போறானாம். கொஞ்சம் பொறுத்துக்கோ மாமா இதை வித்த உடனே நான் பண்ணிப்போடறேன். ஒத்தரையும் போய் நீ கேட்காதே ன்னுதான் சொன்னேன்.

    முதலில் ஆடினது அவ்வளவு சரியாக வரவில்லை. ஏன்னா, நான் திருடன் வேஷம் போட்டுண்டேன். இரண்டு பையன்கள் கீழே மண்டி போட்டுண்டு குதிரை வேஷம் போட்டுண்டா அவா மேலே துணியைப் போட்டு மூடி, நான் ஏறி உட்கார்ந்து ஓட்டினேன். அப்போது குதிரையினுடைய பின்பாதிக்கு அதுடைய முன்பாதி எங்கே போகிறதென்று தெரியவில்லை. ஆகையால் குதிரை வேஷம் வேண்டாமென்று தள்ளி விட்டேன். டிராமாவின் பெயர்,

    ஆசாமணி அல்லது கொள்ளைக்கூட்டத் தலைவன்.

    வீட்டிலே இருக்கிற கரியெல்லாம் பாழாப்போறதுன்னு அம்மா கூச்சல் போடறாள் அம்மாமி சிரிச்சுண்டு பேசாமே இருக்காள் பாவம், சாது, நல்லவள் அவளை இனாமாக டிராமா பார்க்கலாம்னு சொல்லி, ஒரு ‘பஸ்ட் கிளாஸ்’, பாஸ் கொடுத்துடப் போறேன் டிராமாவிலே முக்கியமாய் ஆடறபேர்.

    1. ஆசாமணி - கொள்ளைக்கூட்டத் தலைவன்.

    2. ஜயராமன் - சேவகன்.

    அதில் பெரியாஸீன் கீழே பாருங்கள்:

    ஆசாமணி முகத்திலே வெற்றிக்குறியுடன்: ஓஹோ நீ அகப்பட்டாயா? வா இங்கே!

    கிளி மூக்கு வாத்தியார்: இரக்கம் பிரபுவே, இரக்கம்!

    ஆசாமணி: ஓஹோ? ஓஹோ! இப்போ இரக்கம் காட்டச் சொல்றயே! அப்போ நான் சின்னப்பயலாயிருக்கும்போது இரக்கம் காட்டினாயா? பொல்லாத வாத்தியாரே! ஓ கொடூரமான கிளிமூக்கே!

    கி: ஓ ஆசாமணி பிரபுவே! இப்போது மட்டும் மன்னித்து விடுங்கள்!

    ஆ (கொடூரமாய்): முடியாது! பழிக்குப் பழி! பழிக்குப் பழி ! ஓஹோ ஓஹோ! சேவகர்கள்! சுட்டுத் தள்ளுங்கள்!

    ஜயராமன் (வணக்கமாய்): உத்தரவுப்படி, பிரபுவே!

    (உடனே இரண்டு சீனு வெடிக் கட்டுகள், நாலைந்து யானை வெடிகள் எல்லாம் விடவேண்டியது)

    ஆசாமணி: (இங்கும் அங்குமாய் அலைந்து கொண்டு): எல்லாத் துஷ்ட வாத்தியார்களும் அதமாகக்கடவது!

    2. ராஜாமணியைக் காணோமே!

    1

    விசேஷ தினங்களில் பெரிய ரயில்வே ஸ்டேஷன்களில் அபாயம் ஏற்படாமல் பகவானே நேரில் கவனித்துக் கொள்கிறாரென்றுதான் தோன்றுகிறது. நாலைந்து பிளாட்பாரங்களிலும், படிக்கட்டுகளிலும், தாழ்வாரங்களிலும் கசமுச வென்று ஓயாமல் பேசும் ஜனங்கள் ஒரு சுண்டுவிரல், கைப்பிரம்புகூட நுழைக்க இடமில்லாமல் நிரம்பியிருக்கிறார்கள்.

    முண்டியடித்துக்கொண்டு, பிளாட்பாரத்தில் முன் வரிசையை அடைந்தவர்கள், குதிகாலிலும் கட்டை விரலிலுமாய் எப்படியோ ஓரத்தில் நின்று சமாளித்துக் கொள்கிறார்கள். ரயில் வந்துவிட்டால் ஸ்டேஷனுக்கு வெளியிலிருப்பவர்கள் உள்ளே வர, மாடிப்படியில் நிற்பவர்கள் தாழ்வாரத்தில் இறங்க, தாழ்வாரத்தில் நிற்பவர்கள் பிளாட்பாரத்திலிருப்பவர்களை நெருக்கித் தள்ளுகிறார்கள். இவற்றையெல்லாம் கவனிக்கப் போனால், பிளாட்பாரத்தில் நிற்பவர்கள் அவ்வளவு பேரும் ரயிலின் மேல் விழ வேண்டுமென்றுதான் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அப்படி ஒன்றும் நேருகிறதில்லை.

    இவ்வளவு சம்பிரமத்தில், பாதிப்பேர் தப்பான பிளாட்பாரத்தில் இருக்கிறார்கள். மற்றப் பாதிப்பேர் அப்படியேதானிருக்கிறார்கள்; ஆனால் அது விஷயம் அவர்களுக்கே தெரியாது. கடைசியில் எல்லாரும் எங்கேயோ போய்க்கொண்டு தானிருக்கிறார்கள்.

    தீபாவளி நெருங்கிவிட்டது எல்லா ஊர்களிலும் ஜனங்கள் வெகு உத்ஸாகமாக இருக்கிறார்கள். பலர் உற்றார் உறவினர் வீட்டுத் தலைதீபாவளிக்குச் செல்கிறார்கள். அப்படி மதராஸிலிருந்து போகிறவர்களில் ராஜாமணியும் ஒருவன். அவனுடன் அவன் தகப்பனார் ரொம்ப சாது, கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவன் தாயார் நல்ல சமர்த்து, நாலு வயது சரஸு நல்ல பிடிவாதம் எல்லாரும் இருந்தார்கள். இவர்களைத் தவிர இன்னும் அவன் பெரியம்மா கொஞ்சம் இளைத்தவள், பாட்டி கொஞ்சம் பருத்தவள், தாத்தா முன்கோபக்காரர் அடுத்த வீட்டு மீனாட்சிப்பாட்டி கொஞ்சம் பருத்து, கொஞ்சம் இளைத்து, முன்கோபக்காரி முதலியவர்களும் இருந்தார்கள். இவர்களுள் ரொம்ப பொறுமைசாலி ராஜா மணிதான். அவனுக்கு இரண்டு வயது இளையவளான சரஸு வழியெல்லாம் அவனை மிரட்டிக்கொண்டே வந்தாள். ஒருவேளை அவள் அம்மா அவனை மிரட்டுவதைப் பார்த்த பழக்கமாயிருக்கலாம் ஆனால் ராஜாமணி மட்டும் இரண்டு பேரையும் லக்ஷ்யம் செய்யாமல், அம்மாவின் கைக்கு எட்டாத தூரத்தில் ஏதோ யோசனை செய்தபடியே வந்துகொண்டிருந்தான்.

    நெருக்கடி பட்டுக்கொண்டு வரும்போது அப்பாவைக் கூப்பிட்டு அம்மா உங்களைத்தானே! டிக்கட்டெல்லாம் பத்திரமா இருக்கிறதா? என்று கேட்டாள்.

    என்னையா கேட்கிறாய்? என்னிடமில்லையே! உன்னிடம்தான் அப்போதே கொடுத்துட்டேனே! என்று சொன்னார் அப்பா.

    பாட்டியின் பெரிய மடிசஞ்சிக்குப் பின்னால் மறைந்து கொண்டுவந்த சின்ன ராஜாமணி, ஆமாம், அப்பா! அம்மா வாங்கிண்டா! என்று தன் மெல்லிய குரலில் கூவினான்.

    கட்டேல போறவனே! ஒத்தாசையா ஒரு காரியம் செய்யத் துப்புக் கிடையாது. இனிமேல் ஏதாவது பேசு, முதுகை உறிச்சுப்பிடறேன் என்று அம்மா அவனை எச்சரித்துவிட்டு, என்னிடம் கிடையாது. எங்கே போய்த் தொலைத்தீர்களோ! என்று பதில் கொடுத்தாள்.

    இப்போது சரஸு ராஜாமணியிடம் காதோடு காதாய், அம்மாவோடே எதிர்த்து வாதாடலாமாடா, கழிப்பே! என்று ஓர் அதட்டல் போட்டாள்.

    டிக்கட் பாட்டியிடமும் இல்லை. தாத்தா முன் கோபத்திலேயே கண்ணாயிருப்பவராதலால் அவருக்கு இதெல்லாம் காதில் போட்டுக்கொள்ள அவகாசமில்லை. இதனிடையில் மீனாக்ஷிப்பாட்டி, எனக்கு இதெல்லாம் தெரியாது. எப்படியோ என்னைக் கும்பகோணத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து விடுங்கோ. என்னிடம் திரும்பி சார்ஜுக்குத்தான் பணம் இருக்கு என்று சொல்லிவிட்டாள். பாவம்! அப்பா பாடு ரொம்ப சிரமமாய்ப்போய்விட்டது. அடியே! எங்கேயாவது இடுப்பிலேதான் சொருகிக் கொண்டிருப்பாயடி! என்று பரிதாபமாய்ச் சொன்னார்.

    ஆமாம், அப்பா! இடுப்பிலேதான் சொருகிக் கொண்டாள் என்று ராஜாமணியின் குரல் மீனாக்ஷிப் பாட்டியின் ஸத்துமாப் பொட்டலத்துக்குப் பின்னாலிருந்து கேட்டது.

    அம்மா, ராஜாமணியின் பக்கமாய்க் கையை ஓங்கினாள். பார்த்துத்தான் விடேன், ஓர் ஆசைக்கு என்று அப்பா சற்றுத் தைரியமாகவே கேட்டுக்கொண்டார். அம்மாவின் இடுப்பிலிருந்து நாலைந்து ரூபாய் சில்லரையும், முழு டிக்கட்டுகளும் அரை டிக்கட்டுகளுமாக வெளிப்பட்டன. "என் கையிலே மாத்திரம் அந்த வாண்டு அகப்படட்டும், சொல்றேன்’’ என்று சொல்லிக்கொண்டாள் அம்மா.

    இப்போது ஒரு பெரிய கூட்டம் வந்து இவர்களையெல்லாம் நெட்டித்தள்ளிற்று. வாசற்படிகள், மாடிப் படிகள் மூலம் சிரமமின்றித் தள்ளிக்கொண்டு போகப் பட்டார்கள்.

    படிக்கட்டுகளைக் கடந்ததும், ராஜாமணி காட்டிய வழிகளெல்லாம் சரியாகவும், அம்மா சொன்னதெல்லாம் தவறாகவும் இருந்தன. அவன் அதற்காக வேறு திட்டுகள் வாங்கிக்கொண்டான். இதையெல்லாம் பார்த்து சரஸு இரகசியத்தில் அவன் கன்னத்தைக் கரைத்து, பேசாமே வாடா! என்று சொன்னவுடன் அவன், இனி வாயைத் திறப்பதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டான்.

    இந்த அமர்க்களங்களுடன் மீனாட்சிப் பாட்டி இரண்டு தரம் காணாமற்போய் அகப்பட்டு அவள் ஸத்துமாப் பொட்டலமும பொத்தலாகப் போய்விட்டது. ஒருவழியா ஒரு மூன்றாம் வகுப்பு வண்டியைப் பார்த்து ஏறி உட்கார்ந்ததும் எல்லாரும் ராஜாமணியைத் தவிர ஒரு பெருபெருமூச்சவிட்டு, அப்பா! என்றார்கள் ரயிலும் கிளம்பிவிட்டது.

    ஒருவழியாய்க் கும்பகோணத்திலே போய் இனிமேல் இறங்கிக்கொள்ளலாம் என்றாள் அம்மா.

    யாரம்மா இந்த வண்டி கும்பகோணம் போறதுன்னு சொல்றது? புதுச்சேரி அல்லவா போறது! என்றான் மூலையில் உட்கார்ந்திருந்த ஓர் ஆசாமி.

    கும்பகோணம் போகவில்லையா?

    இல்லை, அம்மணி!

    ஐயையோ! எனக்கு அப்போதே தெரியுமே! என்று அம்மா கத்தினாள். வண்டி இப்போது முப்பது மைல் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது.

    அப்போது ராஜாமணி, நான் வண்டி மேலே எழுதியிருந்ததைப் பார்த்தேன். புது-புது- பு-து-ச்-புதுச்-சே- புதுச்சே- என்று சொன்னான்.

    வாயை மூடிக்கோடா, நாயே! இத்தனை நாழி தெரிஞ்சுண்டுதான் பேசாமேயிருந்தாயா? உன்னை…

    நீதான், ‘பேசாதே, பேசாதே’ன்னு வைதேயே அம்மா?

    நல்ல பிள்ளை, இது? என்று மீனாட்சிப் பாட்டி முகவாய்க்கட்டையில் கையை வைத்துக்கொண்டாள்.

    மூலையில் உடகார்ந்திருந்த ஆசாமி, ஒண்ணும் முழுகிப் போகலிங்க பதறாதீங்க! விழுப்புரத்திலே வண்டி மாற்றிக்கொள்ளலாம் என்று சொன்னான். பிறகுதான் எல்லோருக்கும் மனது சமாதானம் ஏற்பட்டது.

    இதற்குத்தானா இவ்வளவு தடபுடல்? என்றாள் அம்மா.

    ஆனாலும் அம்மா இந்தப் பிள்ளைக்கு வாய் ஜாஸ்திதான் என்றாள் பாட்டி.

    இனிமேல் இந்தப் பயலை ஓரிடத்திற்கும் அழைத்துக் கொண்டே வரக்கூடாது என்று முடிவு கட்டினார் தாத்தா.

    ***

    2

    விழுப்புரத்தில் வண்டி மாறிய பிறகுதான் ஒருவழியாய் நிம்மதி ஏற்பட்டது. வண்டியில் ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஒருவர், இவர்களை உற்றுப் பார்த்துவிட்டு, ‘அம்மா! குஞ்சும் குழந்தைகளுமாக வந்திருக்கிறீர்கள். கதவுப் பக்கத்தில் குழந்தைகளை விடாமல் ஜாக்கிரதையாயிருங்கள். நேற்றைக்குதான் ஒரு பையன்..." என்று ஆரம்பித்தார்.

    விழுந்து விட்டானா? என்று கேட்டாள் பாட்டி.

    விழவில்லை ஆனால் விழுந்த மாதிரிதான் யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டான். கறுப்பாய், மீசை வைத்துக்கொண்டு, அம்மைவடு மூஞ்சியாய்... இல்லை பையனுக்குத்தான் அம்மைவடு மூஞ்சி போலிருக்கிறது. எப்படியிருந்தாலும் அவனுக்குத்தான் மீசை உண்டுபையனுக்கு இல்லை... பாவம்! அந்தத் தாயார் தகப்பனாரைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது.

    இருக்காதோ, ஐயோ பாவம்! இந்தப் பிள்ளை இருக்கே, (ராஜாமணியைச் சுட்டிக் காட்டி) ஆறு வயது இந்த ஆடிக்கு நிறைகிறது. அடிச்சாலும் தெரியறதில்லை, வசாலும் தெரியறதில்லை. சொல்லிக்காமே வாசல்லே போயிண்டேயிருக்கு. பகவான்தான் காப்பாற்றிக் கொடுக்கணும்...

    இது மட்டும் இல்லை அம்மா! இன்னொரு பையன் எங்கள் தெருவிலேயே, இதேமாதிரி காணாமல் போய் விட்டான்.

    இதே மாதிரியா?

    இதே பேர்வழிதானாக்கும்?

    கறுப்பாய், உயரமாய் ஒரு பெண்பிள்ளை...

    கறுப்பாய், உயரமாக, மீசை வைத்துக்கொண்டு ஒருத்தன் கொண்டு போய்விட்டான். இதெல்லாமிருக்கட்டும். போன மாதத்திலே அடுத்த வீட்டிலே நாலு வயதுப் பெண் ஒண்ணு காணாமல்போய்...

    ***

    3

    கும்பகோணம் ஸ்டேஷனில் மழை தூறிக்கொண்டு இருந்தது. பாட்டி ராஜாமணியை, வாயை மூடிக்கொண்டு குழந்தையைக் கவனித்துக்கொண்டு சேர்ந்தாப்போல் வாடா! என்று எச்சரித்துக் கொண்டிருக்கும்போதே மீனாட்சிப் பாட்டி ரயில் புட்போர்டில் சறுக்கி விழுந்து விட்டாள்.

    ராஜாமணி சட்டென்று வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான் அவனுக்கு அப்போது மனதிலிருந்த கோபத்தில் போயும் போயும் அடுத்து வீட்டு மீனாட்சிப் பாட்டியிடம் இரக்கம் காட்ட உத்தேசமில்லை.

    அப்பா திடுக்கிட்டுப் போய்விட்டார் ராஜாமணி சிரிக்காதே! சிரிக்காதே! என்றார்.

    கடன்காரா! இங்கே நிக்காதே என் கண்ணின் முன்னாலே! என்று கத்தினாள் அம்மா அவள் கடைசி வார்த்தைகளில் கொஞ்சம் சிரிப்பும் கலந்தே வந்தது.

    ராஜாமணி ஓடிப்போய்க் கடைசியில் நின்றுகொண்டான். ஸத்துமாப் பொட்டலத்தைச் சுருட்டிக்கொண்டு, மீனாட்சிப் பாட்டி மெதுவாய் எழுந்து எல்லாருடனும் புறப்பட்டாள். ஸ்டேஷனுக்கு வெளியில் வந்ததும், அம்மா எல்லாம் சரியாயிருக்கிறதா என்று சரிபார்த்தாள். முப்பத்திநான்கு மூட்டைகள் பாட்டி பருமனாப், தாத்தா கோபமாய், அப்பா சாதுவாய், சரஸு பிடிவாதமாய், பெரியம்மா இளைத்தவளாய், மீனாட்சிப்பாட்டி, கைக்குழந்தை - அம்மா இன்னொரு முறையும் பார்த்தாள். ராஜாமணியைக் காணவில்லை!

    ‘ஐயையோ! என் கண்மணியை எங்கேயோ காணோம்! யாரோ கொண்டுபோய் விட்டான்! என்ன சமத்தாய் இருந்ததடி அது!" என்று கத்தினாள் அம்மா.

    என்ன சமத்தடி! என்றாள் பாட்டி.

    அது கெட்டுப் போகிறதற்குத்தான் அவ்வளவு புத்திசாலியாயிருந்ததோடி! என்றாள் பெரியம்மா.

    நீங்கள் எல்லாருமாகச் சேர்ந்து அந்தக் குழந்தையைப் படுத்தாத பாடெல்லாம் படுத்தினீர்கள். இப்போது, ‘சமர்த்து, சர்க்கரைக்குட்டி’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறீர்கள் என்று மெதுவாகச் சொன்னார் அப்பா.

    நீங்கள் பேசாமல் தானே இருங்கோ. குழந்தையைக் காணோமே என்று ஒரு பரபரப்புக் கிடையாது. குற்றம் கண்டுபிடியுங்கோ" என்றாள் அம்மா.

    தலைக்கொரு மூலையாய்ப் போய்க் குழந்தையைத் தேடத் தீர்மானித்தனர். எல்லாரும் கடைசியில் ஓரிடத்தில் வந்து சந்திக்க வேண்டுமென்று ஏற்பாடு அப்பா அங்கேயே இருந்து கொண்டு, சரஸுவையும், கைக் குழந்தையையும் வைத்துக்கொண்டு அவர்கள் அழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதென்று

    Enjoying the preview?
    Page 1 of 1