Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaasi Tamil Sangamam
Kaasi Tamil Sangamam
Kaasi Tamil Sangamam
Ebook150 pages46 minutes

Kaasi Tamil Sangamam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காசி இந்தியாவின் புனித நகரம் மட்டுமல்ல. நம் தமிழை வளர்த்த நகரமுமாகும். மகாகவி பாரதியின் கவிமனம் காசியில்தான் வளர்ந்தது. காசி வடநாட்டின் பகுதியாக இருந்தாலும் பல சம்பிரதாயங்களும் சடங்குகளும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாகவே இன்றும் அங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழு காசி தமிழ்ச் சங்கமத்திற்குச் செல்லும் பயணத்தை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் பயணத்தின் மூலம் காசியின் பெருமை, புனிதம், வரலாறு, பண்பாடு, தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் அதனுடன் உள்ள வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றை ஆசிரியர் சுவையாக விளக்குகிறார்.

இந்தியாவில் பல மதங்களும் கலாசாரங்களும் மொழிகளும் இருந்தாலும், இந்திய மக்களிடையே அடிநாதமாக ஓடி அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பண்பாட்டுப் பெருமையை நேர்த்தியாக எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம். மனதைக் சுவரும் தமிழில் எழுதி இருக்கிறார் வித்யா சுப்ரமணியம்.

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580105711058
Kaasi Tamil Sangamam

Read more from Vidya Subramaniam

Related authors

Related to Kaasi Tamil Sangamam

Related ebooks

Related categories

Reviews for Kaasi Tamil Sangamam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaasi Tamil Sangamam - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காசி தமிழ் சங்கமம்

    (பயண அனுபவம்)

    Kaasi Tamil Sangamam

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    சில மாதங்கள் முன்பு என்னிடம் எந்த ஜோதிடரேனும் வந்து, நீ விரைவில் காசிக்குச் சென்று வருவாயென்று கூறியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். காசிக்குச் செல்வதென்பது எனது நீண்ட நாள் கனவுதான் என்றாலும் இப்போதைக்குச் செல்லும் எண்ணமிருக்கவில்லை. அடுத்த ஆண்டில் செல்வதற்குத்தான் நானும் எனதொரு தோழியும் முடிவு செய்திருந்தோம்.

    ஆனால் ஈசனோடு அயோத்தி ராமனும் நம்மைக் காணவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் நாம் அவர்கள் முன்பு நின்றுதானே ஆகவேண்டும்.

    2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரதப்பிரதமர் மோதிஜி அவர்கள் காசி தமிழ் சங்கமம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டபோது எனக்கெல்லாம் இதில் சென்று வரும் வாய்ப்பு எங்கே கிடைக்கப்போகிறது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் என்னையும் மீறி எனக்குள் ஒரு ஆசை ஏற்படத்தான் செய்தது. ஆனால் இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று கூட உண்மையில் எனக்குத் தெரியவில்லை. அப்படியே தெரிந்து கொண்டு விண்ணப்பித்தாலும் பல லட்சம் விண்ணப்பங்களுக்கு இடையில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே கேள்விக்குறி. எனவே நான் அந்த ஆசையைக் கைவிட்டேன். ஆயினும் ஈசனுடன் நான் தினமும் மானசீகமாகப் பேசினேன்.

    நான் வணங்கும் ஈசனே, ராஜ யாத்திரையாக வாவென்று இரண்டுமுறை கைலாசத்திற்கு அழைத்தாய், சாகசப் பயணம் செய்து வா என ஆதி கைலாஷ் அழைத்தாய். பொதிகை மலையின் உச்சியைக் காணச் செய்தாய். சதுரகிரியும், பர்வதமலையும் ஏற வைத்தாய். கொல்லிமலைக் காட்டினூடே கால்நடையாக மலையேறி வந்து தரிசிக்கும் அனுபவத்தைத் தந்தாய், நான் சற்றும் எதிர்பாராமல், என்னை உஜ்ஜெயின் வரவழைத்து மஹாகாலேஸ்வரனாகவும், நர்மதையின் கரையில் ஓங்காரேஸ்வரனாகவும் எனக்கு காட்சி தந்தாய். இன்னும் எத்தனை எத்தனையோ ஊர்களுக்கும் என்னை வரவழைத்து உன் சிவரூபம் காட்டினாய். ஆனால் ஏன் இன்னும் ஹிந்துக்களின் புனித நகரமாகிய காசிக்கு மட்டும் என்னை அழைக்க மறுக்கிறாய்? எப்போது அழைப்பாய்? எப்போது வாரணாசியில் காசி விஸ்வநாதனாக நான் உன்னைக் காண்பேன்?

    இப்படி நான் புலம்பும்போதெல்லாம் நீ மௌனமாக புன்னகைத்தாய். அதன் பொருள், நேரம் வரும், அதுவரை காத்திரு என்பதாக நான் புரிந்து கொண்டேன்.

    நான் அவனிடம் விண்ணப்பித்து காத்திருந்தேன். உண்டா இல்லையா? என்ற என் கேள்விக்கு அவனிடமிருந்து கிடைத்த பதில் வெறும் மௌனம் மட்டுமே...! அவனது மௌன மொழி எனக்குப் புரியாததால், பத்துநாட்கள் முன்புவரை கூட இதற்கான நேரம் கனிந்து வருவதை என்னால் உணரமுடியவில்லை.

    டிசம்பர் ஆறாம் தேதி முற்பகல் ஒரு தொலைபேசி அழைப்பு வர, எடுத்து பேசினேன்.உங்கள் காசி பயணம் உறுதி செய்யப்பட்டது நாளை மறுநாள் பதினோரு மணிக்கு எக்மோர் வந்து விடவும். உங்கள் பி.என்.ஆர் நம்பரைக் குறித்துக் கொள்ளுங்கள்...! ஒருவேளை உங்களால் வரமுடியாதென்றால் இன்று மாலைக்குள் எங்களுக்குத் தெரிவித்துவிடுங்கள் என்றது அந்த இனிமையான பெண் குரல். இத்தனை கனிவான அன்பான, அக்கறையான குரலை நான் கேட்டதில்லை. பேசியவர் ஐஐடி மெட்ராஸில் இருந்து காசி தமிழ் சங்கம ஒருங்கிணைப்பாளர் பேசுவதாகக் கூறினார். அவரது பெயர் கேட்டேன். கலைசெல்வி ஸ்ரீநிவாஸ் என்றார்.இந்த அழைப்புக்காகத்தானே நான் காத்துக் கொண்டிருக்கிறேன். என் பயணத்தை இப்போதே உறுதி செய்கிறேன் என்றேன்.நல்லதுமா எழும்பூர் ஸ்டேஷனில் பார்ப்போம்" என்றபடி போனை வைத்தார் அவர்.

    வெகுநாளாக ஏங்கித் தவித்த என் காசி பயணம் ஒரு நொடியில் உறுதியாகவும், நான் திகைத்துதான் போனேன். சொல்ல இயலாத பரவசத்தில் ஆழ்ந்தேன். இது கனவா நனவா என்று ஒருமுறை என்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். இடையில் ஒரே ஒரு நாள்தான் இருந்தது. அதற்குள் தேவையானவற்றை எல்லாம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். என் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை அலை அலையாய் ஒருவித சந்தோஷ அதிர்வு பரவிற்று. நான் பரபரப்பாய் என் பயணப் பெட்டியை தயார் செய்தேன். எனது பயணப்பெட்டி சிலமணி நேரங்களில் தயாரானது.

    ***

    மறுநாள் விடியற்காலை மூன்றரைக்கெல்லாம் எனக்கு விழிப்புவர, வெளியில் வந்து மேற்கு வானிலிறங்கும் நிலவை ரசித்துக் கொண்டிருந்தேன். இதைத்தான் அவனருளால் அவன் தாள் வணங்கி எனச்சொல்கிறோம். அப்படித்தான் திடீரென அவன் என்னைக் காசி தமிழ் சங்கமம் மூலமாக அழைத்தான். அதுவும் ராஜமரியாதையுடன் நான் காசிக்கு வரவேண்டுமென்று வரமும் தந்தான்.

    குறித்த நேரத்தில் நான் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்தேன். அங்கே நுழைவிடத்திலேயே காசி தமிழ் சங்கமம் என்ற பதாகையுடன் ஒரு டேபிள் சேர் போட்டிருந்தது. அங்கே எங்கள் அனைவரது ஆதார் அட்டையின் நகல்களைப் பெற்றுக்கொண்டு எங்களுக்கு கழுத்தில் மாட்டிக்கொள்ளும் ஒரு அடையாள அட்டையும் `காசி தமிழ் சங்கமம்’ என்று பொறிக்கப்பட்ட அழகான ஒரு சணல் பையும் கொடுத்தார்கள். ஜிப் பொருத்தப்பட்ட அந்த சணல் பை எங்கள் பயணத்தில் மிகவும் உபயோகமாக இருந்தது.

    நேரமாக ஆக சிவனடியார்கள், சிவாச்சார்யார்கள், மற்றும் ஈசனின் அருளால் காசி தமிழ் சங்கமம் மூலம் பயணிக்க அனுமதி கிடைத்த சாதாரணர்கள் என்று பலரும் வந்து கொண்டேயிருந்தனர். ரயிலடியே சிவமயமாகி விட்டாற்போலிருந்தது. எங்கும் சிவ நாமம் ஒலித்தது. ரயில் புறப்படும் முன்பு எங்களை வழியனுப்ப ஐ.ஆர்.சி.டி,சி, ஊழியர்கள், ஐஐடி பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பா.ஜ.க.வைச் சேர்ந்த பெரும்புள்ளிகள், எம்.எல்.ஏக்கள், மத்திய மந்திரிகள் என்று பலரும் எழும்பூர் ரயிலடியில் குவியத் துவங்க, ரயிலடியே கலகலத்தது. வந்தேமாதரம், பாரத் மாதாகி ஜெய், ஹர் ஹர் மஹாதேவ், ஜெய்ஸ்ரீராம் என கோஷங்கள் முழங்கின,

    என்னோடு போனில் பேசிய தேவதை கலைச்செல்வி எங்கள் அனைவரையும் வழியனுப்ப, ரயில் நிலையத்திற்கு நேரிலும் வந்து எங்களோடு அன்பாகப் பேசி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

    ***

    சரி காசி தமிழ் சங்கமம் என்றால் என்ன? இதைப்பற்றி தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இருப்பினும் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன். ஹிந்து தர்மத்தின் ஆன்மீக நகரம் எனப்படும் காசி எனும்

    Enjoying the preview?
    Page 1 of 1