Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paalai Veliyil Naan Payanitha Nagarangal
Paalai Veliyil Naan Payanitha Nagarangal
Paalai Veliyil Naan Payanitha Nagarangal
Ebook122 pages40 minutes

Paalai Veliyil Naan Payanitha Nagarangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சி.ஜே. ஷாஜஹான் பொறியாளராக, பன்னாட்டு நிறுவனங்களின் பொதுமேலாளராக, இந்தியாவிலும், வளைகுடா நாடுகளிலும் பணிபுரிந்த இவரின் சிறுகதைகளும்,நாவல்களும் தமிழின் தலைமையிதழ்களில் வெளிவந்திருக்கின்றன. ஆனந்த விகடனில் வெளியான ‘ கோலம் ‘ என்ற இவரது சிறுகதை மத நல்லிணக்கத்திற்கான சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தமிழக அரசின் முதற் பரிசான ரூ 10,000 பரிசு பெற்றது.

இவருடைய சமூக மற்றும் அரசியல் கட்டுரைகள் ஆங்கில நாளேடுகளான The Hindu, The Indian Express, Arab News, Saudi Gazettee –ல் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்.

நார்வேயிலிருந்து ஜப்பான் வரை உலக நாடுகளனைத்திற்கும் பயணம் செய்துள்ள இவர் சென்னையிலுள்ள தலைமைத் திறன் வளர்க்கும் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளராகப் ( Motivational Speaker ) பங்காற்றி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352854066
Paalai Veliyil Naan Payanitha Nagarangal

Read more from C.J. Shahjahan

Related authors

Related to Paalai Veliyil Naan Payanitha Nagarangal

Related ebooks

Related categories

Reviews for Paalai Veliyil Naan Payanitha Nagarangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paalai Veliyil Naan Payanitha Nagarangal - C.J. Shahjahan

    http://www.pustaka.co.in

    பாலை வெளியில் நான் பயணித்த நகரங்கள்

    Paalai Veliyil Naan Payanitha Nagarangal

    Author:

    சி.ஜே. ஷாஜஹான்

    C.J. Shahjahan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/cj-shahjahan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பயணித்த நகரங்கள்

    பயணிப்பதற்கு முன் சில வரிகள்

    டெமாஸ்கஸ் (சிரியா)

    அலெக்ஸாண்ட்ரியா (எகிப்து)

    கெய்ரோ(எகிப்து)

    இஸ்தான்புல்(துருக்கி)

    அம்மான் (ஜோர்டான்)

    ஜெத்தா (சவுதி அரேபியா)

    பயணித்த  நகரங்கள்.

    பயணிப்பதற்கு முன் சில வரிகள்……..

    பயணங்கள் என்றுமே இனிமையானவை.

    பிறந்து வளர்ந்த சொந்தக் கிராமத்திற்குப் பயணம் செல்லும்பொழுதும் பஸ்ஸிலும் ரயிலிலும் பழக்கமேயில்லாத முகங்கள்கூட சில மணித்துளிகள் புன்முறுவலுடன் உரையாடுவது இதமாகத்தானிருக்கிறது. இங்கே முகங்கள் அந்நியப்பட்டிருந்தாலும், மொழியும் பண்பாடும்,உடையும் உணவும் ஒன்றாக இருப்பதால் உறவாடுவதும் எளிமையாகிவிடுகிறது.

    இதுவே வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்பொழுது எல்லாமே அந்நியப்பட்டு, மொழியும் பண்பாடும் தடைச்சுவராக, மனம் தனிமைப்பட்டுப் போகிறது. இந்தத் தனிமையையும் மீறி புதிய சூழ்நிலையில் பூத்த புத்தம் புதிய உறவுகள் எனது வெளிநாட்டுப் பயணங்களில் மறக்கமுடியாத அனுபவம்.

    உலக அரங்கில் அரபு நாடுகளின் கருத்துப் பதிவுகள் பெட்ரோல் உற்பத்தியையும், பயங்கரவாத வன்முறையையுமே சுற்றி வருகின்றன. வேலை வாய்ப்பு தேடிச் சென்ற இந்தியர்களால் துபாயும் குவைத்துமே நமக்கு மிகவும் நெருக்கமாகி அந்தப் பகட்டு மின்மினி வாழ்க்கைத் தரமே அரபு நாடுகளின் பண்பாட்டியலென தவறானப் புரிதலை நாம் உள்ளடக்கியிருக்கிறோம்.. மனித நாகரிகத் தோற்றத்தின் முதல் பதிவே சிரியா, ஈராக், ஏமன் போன்ற நாகரிகத் தொட்டில்களில்தான் உருவாகியது என்பதுதான் வரலாற்று உண்மை.

    இத்தகைய நாடுகளில் பயணம் செய்தபொழுது என்னோடு நெருங்கிப்போனப் பாச உறவுகளைப் பற்றியப் பதிவுதான் இந்தப் பயணக்கதை. எல்லைகளை மறந்து உள்ளங்களைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்.

    இதில் துருக்கி அரபு நாடாக இல்லாவிட்டாலும், பல நூற்றாண்டுகள் அரபு நாடுகளை ஆட்சி புரிந்த நாடென்பதால் கான்ஸ்டாண்டி நோபிள் என்ற வரலாற்றுப் புகழ் மிக்க இஸ்டான்புல்லையும் இதில் சேர்த்திருக்கிறேன்.

    'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பழந்தமிழ்க் கவிஞனின் வார்த்தைகளில்தான் எத்தனை சத்தியம்?

    இந்தப் பயணங்களின் முயற்சிக்குப் பெரிதும் துணைபோன எனது சவூதி நண்பரும் தொழிலதிபருமான ஷேக் ஹானி அப்துல் அஜீஸ் சாப் அவர்களுக்கும் , இந்நூலைப் பதிப்பிக்க ஊக்கமளித்த மணிமேகலை பிரசுரத்தின் ஆசிரியர் திரு. ரவி தமிழ்வானன் அவர்களுக்கும் மற்றும் புஸ்தகா டிஜிட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. பத்மனாபன் அவர்களுக்கும் என் இதயத்து நன்றிகள்.

    அன்பு

    சி. ஜே.ஷாஜஹான்

    பயணக்கதை :

    டெமாஸ்கஸ் (சிரியா)

    கல்யாண வீட்டுக் கலகலப்பை மிஞ்சுமளவுக்கு சிரிப்பும் அரட்டையுமாக இருந்தது அந்த உணவு விடுதி. குடும்பம் குடும்பமாக ஆண்களும் பெண்களும் குட்டையான மேஜைகளின் முன் வாய் விட்டு சிரித்துக் கொண்டிருக்க வகைவகையான அரேபிய உணவுவகைகளை மிகச் சுறுசுறுப்பாகப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள் பணியாளர்கள். மூலையிலிருந்த இளைஞர் கூட்டமொன்று அரேபியப் பாடலொன்றுக்குப் பலமாகக் கைதட்டிக்கொண்டிருந்தது.

    அழகுப்பதுமைகளாக அரேபியப்பெண்கள். சிலர் ஜீன்ஸ், டி ஷர்ட்டுடன் ஐரோப்பியர்களைப் போல உடையணிந்திருந்தாலும் பெரும்பாலான பெண்கள் கறுப்பு அபயா (பர்தா) அணிந்திருந்தார்கள். யாரும் முகத்தை மட்டும் மூடுவதில்லை. ஆண்கள், பெண்கள் இருவருமே நல்ல சிவந்த நிறம்.

    இங்கே ஒரே சமயத்திலே அறுநூறு பேர் சாப்பிடலாம். அப்படியும் ரிஸர்வ் செய்யாவிட்டால் ஒருமணி நேரம் காத்திருக்கணும். டெமஸ்கஸிலேயே சிரியன் வகை அரேபியச் சாப்பாடு இங்கேதான் ரொம்பச் சுவையாக இருக்க்கும். என்ன, சி. ஜே. பிடிச்சுருக்கா?

    பக்கத்திலிருந்த நண்பர் ஹோம்ஸி அரைகுறை ஆங்கிலத்தில் கேட்டபொழுது ‘பாபாகனுஜ் என்ற சுட்ட கத்திரிக்காய் மசியலை குப்ஸில் (நம்மூர் தந்தூரி ரொட்டி) நனைத்து சுவைத்தவாறே பிரமாதம்" என்று சொன்னேன். சிதம்பரம் பக்கம் நடராஜர் கோவிலைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் இட்லிக்குத் தொட்டுக்க கொத்சு தருவார்கள். அதே போன்ற சுவை.

    2

    சிரியாவில் உணவை ஆர்டர் செய்யும்பொழுது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லையென்றால் எடை தாங்காமல் டேபிள் விழக்கூடிய அளவுக்கு வகை வகையான உணவு வகைகளை  நிரப்பிக் கொண்டே போவார்கள்.

    எங்கள் முன்னாலிருந்த இருக்கைகளில் மலர்க்கூட்டமென இளம்பெண்கள் சிலர் வந்தமர்ந்தார்கள். கல்லூரிப் பெண்களுக்கேயுரிய கலகலப்பான அரட்டை. அந்தக் கூட்டத்திலேயே நான் மட்டுமே இந்தியன் என்பதால் எல்லோருடைய பார்வையும் என்னைச் சற்று சுவாரஸ்யமாகப் பார்ப்பது புரிந்தது.

    சிரியாவிற்கு இந்தியர்கள் வருவதே மிகவும் குறைவாம். மற்ற அரபு நாடுகளைப் போல இரு நாடுகளுக்கிடையே வணிகப் பரிமாற்றமோ, பண்பாட்டுப் பரிமாற்றமோ அதிகமில்லாததே இதற்கான காரணமாக இருக்கலாம்.

    திடீரெனெ எதிரிலிருந்த இளம்பெண்கள் என்னைச் சுட்டிக்காட்டி சிரித்த காரணம் புரியாது நான் பக்கத்திலிருந்த எங்கள் கம்பெனியின் சிரியன் கிளை பர்சனல் மேனேஜரான பாத்திமாவைப் பார்த்தேன்.

    ஒண்ணுமில்லே மிஸ்டர் சி. ஜே. நீங்க இந்தியரான்னு கேட்டாங்க.. ஆமாம்னு சொன்னேன். அவங்களுக்கு உங்க இந்தி சினிமான்னா ரொம்ப உயிராம். உங்களை ஒரு பாட்டுப் பாடச் சொல்றாங்க..

    அமெரிக்காவில் எம்.பி.ஏ பட்டம் பெற்று நண்பர் ஹோம்ஸியிடம் பணிபுரியும் பாத்திமா மொழிபெயர்த்துச் சொன்னார்.

    பாட்டா.. அதுவும் முன்பின் தெரியாத எல்லோர் முன்னால்.. அதுவும் இப்படி உணவு விடுதியிலா…..

    3

    நமது இந்தியர்களுக்கேயுரிய தயக்கம்… கூச்சம்.

    "அப்ப.. நாங்களே பாடவா..

    Enjoying the preview?
    Page 1 of 1