Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhal Virpanai
Nizhal Virpanai
Nizhal Virpanai
Ebook106 pages39 minutes

Nizhal Virpanai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அஜய் சர்மா இந்திய ராணுவ அதிகாரி, இவரிடம் புதிதாக நிறுவப்போகிற ராணுவ தடங்கள் பற்றிய ஃபைல் வருகிறது. இதை களவாட கண்ணபிரான் வருகிறான். கண்ணபிரான் மூலம் ராணுவ ரகசிய ஃபைல் உளவாளிக்கு கிடைத்ததா? முன்னாள் நடிகை சூர்யா, ராஜ் கணேஷ், மற்றும் அஸ்வின் கொலையில் உள்ள மர்ம முடிச்சுகளை பரத் சுசிலா அவர்களின் பாணியில் தீர்வு கண்டனரா? வாருங்கள் நிழல் விற்பனையை வாசிக்க...

Languageதமிழ்
Release dateFeb 25, 2023
ISBN6580100908119
Nizhal Virpanai

Read more from Pattukottai Prabakar

Related to Nizhal Virpanai

Related ebooks

Reviews for Nizhal Virpanai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhal Virpanai - Pattukottai Prabakar

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    நிழல் விற்பனை

    Nizhal Virpanai

    Author :

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முதல் பாகம்

    இரண்டாம் பாகம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    முதல் பாகம்

    இனிமேல் தான் இருக்கிறது

    கதைச் சுருக்கம்:

    சென்னையில் உள்ள ஒரு இராணுவ உயர் அதிகாரி, லெப்டினண்ட் அஜய்ஷர்மா. இந்தியா புதிதாக நிறுவப்போகிற இராணுவ தளங்கள் பற்றிய குறிப்பு காகிதங்கள் OPERATION BLUE DOG என்று தலைப்பிட்ட ஃபைலில் அவரிடம் வருகிறது.

    இந்த ரகசிய காகிதங்களின் நகல் எடுத்துத் தந்தால் பதினைந்து லட்சம் தருவதாக ஒரு உளவாளி, கண்ணபிரானிடம் பொறுப்பு தருகிறான். அவன் வில்சன், சுனில் மல்ஹோத்ரா என்ற பெயரில் அறை எடுத்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.

    கண்ணபிரான் முன்னாள் நடிகையான சூர்யாவை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறார். சூர்யாவை இயல்பாக அஜய் ஷர்மாவை சந்திக்கவைத்து, பழகி, மயக்கி, ஒரு மைக்ரோ கேமிரா மூலம் அந்த ரகசிய காகிதங்கள் ஆறையும் போட்டோ எடுப்பது திட்டம்.

    சூர்யாவுக்கு ஒரு காதலன் ராஜ்கணேஷ். சூர்யாவும் ராஜ்கணேஷும் சேர்ந்து கண்ணபிரானை ஏமாற்றி நேரடியாக வில்சனிடம் டீலிங் வைத்துக்கொள்ள திட்டமிடுகின்றனர். சூர்யாவை கண்காணிக்க கண்ணபிரான் அஸ்வின்னை நியமிக்கிறார்.

    சூர்யா சாமர்த்தியமாக அந்த காகிதங்களை புகைப்படம் எடுத்து ஆறு நெகடிவ்களாக மாற்றிவிடுகிறாள். அதைப் பெற அஸ்வின் முயலும்போது தப்பித்து ஓடுகிறாள். சினிமா தியேட்டருக்கு ப்ரியா என்னும் இளம் பணக்கார பெண்ணும் அவள் காதலன் தாசும் வந்திருக்கிறார்கள். அந்த தியேட்டருக்குள் உயிருக்கு பயந்து ஓடி வரும் சூர்யா, ப்ரியா அருகில் அமர்கிறாள். ஒரு கவரை கொடுத்து தபாலில் சேர்க்க சொல்லிவிட்டுப் போய்விடுகிறாள்.

    அஸ்வின், சூர்யாவை கொலை செய்து தியேட்டர் டாய்லெட் அறையில் போட்டுவிட்டு அவள் கைப்பையுடன் கண்ணபிரானிடம் திரும்பி அதில் நெகடிவ்கள் கொண்ட கவர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.

    போலீஸ் கொலை சம்பவத்திற்கு பிறகு நுழைகிறது. சூர்யா கொலை செய்தி பத்திரிக்கைகளில் வெளிவருகிறது. சில தடயங்கள் மூலம் தன் ரகசிய காகிதங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டதை அறியும் அஜய்ஷர்மா, அதை சூர்யா தபாலில் சேர்க்கச் சொன்ன கவரில்தான் இருக்கிறது என்பதை அறிகிறார். அந்த கவர் அவள் காதலன் ராஜ்கணேஷின் முகவரி எழுதப்பட்ட கவர் என்றும் அறிந்து ராஜ்கணேஷை தேடி வருகிறார். ரகசிய நெகடிவ்களை மீட்பதற்காக.

    கண்ணபிரானும், அஸ்வினும் இதே விபரங்களை அறிந்து அவர்களும் ராஜ்கணேஷை தேடி வருகிறார்கள். தபாலில் வரும் கவரை மிரட்டல் முனையில் பெற்று பிரித்து பார்க்கும்போது உள்ளே நெகடிவ்கள் இல்லை. விழிக்கிறார்கள். ராஜ்கணேஷை மிரட்டும்போது ஏற்படும் போராட்டத்தில் அஸ்வினும், ராஜ்கணேஷும் சண்டையிட கண்ணபிரான் ராஜ்கணேஷை சுட்டுவிடுகிறார். ராஜ்கணேஷ் அஸ்வினை கத்தியால் குத்தி கொலை செய்துவிடுகிறான். ஓடிவிடுகிறார் கண்ணபிரான்.

    இந்த சம்பவம் அனைத்தையும் பதுங்கி நின்று பார்க்கும் இராணுவ அதிகாரி அஜய்ஷர்மா அந்த கவரை எடுத்துப் பார்க்க... சின்ன சின்ன ஆறு நெகடிவ்கள். கவரில் ஒட்டப்பட்ட ஸ்டாம்புகளை பிய்த்ததும் கிடைக்கின்றன.

    இந்தக் கட்டத்தில், போன நாவலின் கடைசி சில பாராக்களை, அஜய்ஷர்மாவின் எண்ண ஓட்டங்களை இனி அப்படியே படியுங்கள் இதோ:

    பன்னிரெண்டு ஐந்து பைசா ஸ்டாம்புகளையும் பிய்க்க ஒன்று விட்டு ஒன்றில் ஒரு நெகடிவ் என்கிற ரீதியில் ஆறு நெகடிவ்களும் கிடைத்தன. அட! இது உளவு வேலை பார்ப்பவர்கள் பயன்படுத்தும் தந்திரம்! இது அந்த சூர்யாவுக்கு எப்படி எட்டிற்று?

    வெளிச்சத்தில் வைத்துப் பார்க்க அவை ‘OPERATION BLUE DOG’ ஃபைல் காகிதங்களின் நெகடிவ்கள்தான் என்று அறிய முடிந்தது.

    சூர்யா இறந்தாயிற்று. விபரம் தெரிந்த அந்த காதலன் இறந்தாயிற்று. சூர்யாவைக் கொன்ற அந்தப் பையனும் கொலை செய்யப்பட்டுவிட்டான். இந்த நெகடிவ்விற்காக இனி அந்த பெரிய மனிதன் (கண்ணபிரான்) யாரிடம், எப்படி முயன்றாலும் கிடைக்கப்போவதில்லை. நடுவில் அவன் போலீசில் அகப்பட்டாலும் சூர்யாவை தரன் நியமித்ததாகச் சொல்லி மாட்டிக்கொள்ளவேமாட்டான்.

    ஆக, என் அஜாக்கிரதையால், பெண் சபலத்தால் இழந்த இராணுவ ரகசியம் என்னிடமே இப்போது பத்திரமாய் வந்து சேர்ந்துவிட்டது. அப்பாடா! இனி என் மனதில் குற்ற உணர்வு கிடையாது. நான் என் மேலதிகாரிகளுக்கு நடந்த உண்மைகளைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

    ஆனால்...

    இந்த அம்பாசிடர் கார் மனிதன் (கண்ணபிரான்) யாருக்கு விற்பதற்காக இந்த ரகசியத்தை அடைய முயன்றான்? நிச்சயமாக அவனுக்கு பொறுப்பு ஒப்படைத்தவன் வேறு ஏதோ பகை நாட்டின் ரகசிய உளவாளியாகத்தான் இருப்பான்.

    நான் தேசத்திற்கு ஏற்படுத்த இருந்த ரகசிய இழப்பிற்கு ஈடு செய்தாக வேண்டும். பிராயச்சித்தம் தேடியாக வேண்டும் அது, அந்த ரகசிய உளவாளியை என் தனி முயற்சியால் பிடிப்பதாக ஏன் இருக்கக்கூடாது?

    இந்த நபரைப் பொறுத்தவரை (கண்ணபிரான்) அந்த நெகடிவ்சை ப்ரியாதான் எடுத்துவிட்டதாக நினைக்கிறான். அந்த நினைப்பையே ஒரு தூண்டிலாக பயன்படுத்தி இவனையும், அந்த உளவாளியையும் பிடிக்க முயற்சி

    Enjoying the preview?
    Page 1 of 1