Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anamika
Anamika
Anamika
Ebook113 pages43 minutes

Anamika

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனாமிகா ஒரு அழகான பெண். அவளுக்கென்று அழகான குடும்பம். அம்மா, அப்பா அண்ணன், அண்ணி என்று அவள் வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தது. திடீரென்று அவள் வாழ்வில் 'தியா' மீது காதல் ஆழமாக வேரூன்றியது. ஆனால் அந்த காதலும் வேறு திசைக்கு(நிஷா) நகர்ந்தது. இதனால் அனாமிகா துவண்டு போனாளா? இல்லை தியாவுக்கு பாடம் புகட்டினாளா? வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580135508060
Anamika

Read more from Anitha Kumar

Related to Anamika

Related ebooks

Reviews for Anamika

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anamika - Anitha Kumar

    https://www.pustaka.co.in

    அனாமிகா

    Anamika

    Author:

    அனிதா குமார்

    Anitha Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anitha-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷன் அந்த ராத்திரி நேரத்திலும் உயிர்ப்பாக இருந்தது. ஜனங்கள் பிளாட்பாரத்தை அடைத்துக்கொண்டு நின்றார்கள். எஞ்சின் இல்லாத ‘ப்ளு மவுண்டன்’ பிளாட்பாரத்தில் இருட்டான போகிகளோடு நின்றிருந்தது. இரண்டாவது பிளாட்பாரத்தில் வரப்போகும் சார்மினார் எக்ஸ்பிரசுக்காக நிஷா காத்திருந்தாள். ‘ஹிக்கின் பாதம்ஸ்’ புக் ஸ்டால் அருகே நின்றிருந்த அந்த உருவம் நிஷாவையே பார்த்த வண்ணம் இருந்தது.

    நிஷா டைட் ப்ளூ நிற ஜீன்சும் டைட் ஆஷ்கலர் டீஷர்ட் அணிந்திருந்தாள். அவள் உடை அவள் அழகை மேலும் கூட்டியது. பொறுமையிழந்து ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து சேம்சங் செல்போனை எடுத்து ஆதிக்கு போன் பண்ணினாள்.

    ஆதி சார்மினார் ஏ.ஸி. கோச்சில் ஹெட்செட்டில் உற்சாகமாக பாப் மியூஸிக் கேட்டுக் கொண்டிருந்தான். மியூஸிக் சட்டென கட்டானதும் நிஷாவிடம் இருந்து கால் வந்தது.

    ஹேய் நிஷா

    என்னடா ஆதி உன்னை இன்னும் காணோம்.

    எங்கே வந்துக்கிட்டு இருக்கே.

    இதோ பக்கத்தில் வந்துட்டேன் ஒரு டென்மினிட்ஸ் கண்ணை மூடிக்கோ நான் உன் கண் முன்னால் வந்து நிற்பேன். சீக்கிரம் வாடா டென் டேஸ் உன்னைப் பார்க்காம நான் எப்படி எல்லாம் தவிச்சு போயிட்டேன் தெரியுமா

    உன்னை விட்டு பிரிஞ்சு இருக்கணும்னு எனக்கு என்ன ஆசையா நிஷா, ஆபீஸ் விஷயமா ஐதராபாத் போக வேண்டியதாயிடுச்சு. உனக்காக ஒயிட் பாரஸ்ட் கேக் வாங்கிட்டு வந்திருக்கேன். உன்னை பார்த்ததும் முதலில் இந்த பெரிய கேக்கை உன்கிட்ட குடுக்கணும்.

    வாவ் எனக்கு இப்பவே நாக்கு ஊறுதுடா அவன் பக்கத்தில் இருந்து கேக் பாக்ஸை ஓபன் பண்ணி கேக்கை படம்பிடித்து நிஷாவிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினான் ஆதி.

    ஆதி ஒயிட் பாரஸ்ட் கேக்கை பார்க்கப் பார்க்க எனக்கு இப்பவே சாப்பிடணும் போல இருக்குடா கேக் ரொம்ப பெருசா இருக்கு பார்த்து பத்திரமா எடுத்துட்டு வா.

    ஷூயர் ஷூயர்

    சென்ட்ரல் ஸ்டேஷனை நெருங்க நெருங்க சார்மினார் எக்ஸ்பிரஸின் வேகம் குறைந்தது. நகர்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்டும் டக்கென நின்றன.

    நிஷாவை விட அந்த உருவம் ஆதியை ஆர்வமாய் தேடியது. ஆதி தனது டிராபிசூட்கேஸ், ஹோண்டா பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு, ஒவ்வொருத்தராய் இறங்க அவர்கள் பின்னால் இறங்கினான். ஆதி ப்ளூ கலர் ஜீன்ஸும் ரவுண்ட் நெக் ப்ளாக் டீஷர்ட்டும் அணிந்திருந்தான். வலது கையால் தன் தலை கேசத்தை கோதி விட்டுக்கொண்டு தாடியை நெருடிவிட்டான். ஆதியை கண்டால் எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் அவ்வளவு அழகான ஆண்மகன். பெரிய கேக் பாக்ஸை இடது கையில் இறுக்கமாக பிடித்தபடி கம்பார்ட்மெண்டில் இருந்து இறங்கினவுடன் அவன் கண்கள் நிஷாவை தேடின.

    ஆதி இருந்த ஏ.ஸி. கோச்சை தேடிக்கொண்டு ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்டாக கடந்து பிளாட்பார்மில் வேக வேகமாக நடந்தாள் நிஷா. அவள் மனம் முழுவதும் ஆதியை பார்க்கப் போகிறோம் என்று உற்சாகமாய் இருந்தது. அவன் அவளுக்காக வாங்கி வந்த கேக்கை உடனே சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

    டிராலி சூட்கேஸை பிளாட்பாரத்தில் இழுத்துக்கொண்டு நிஷாவை தேடியபடி மெல்ல நடந்தான் ஆதி. அவனை நோக்கி வேகவேகமாக வந்த அந்த உருவம் கூட்டத்தை விலக்கி செல்வதுபோல் சென்று ஆதியின் மீது வேகமாக மோத ஆதி கையில் பிடித்திருந்த கேக் பாக்ஸ் கீழே விழ ஆதியும் சற்று தடுமாறி கீழே விழப் போனவன் கேக் பாக்ஸின் மீது கையை ஊன்றி டக்கென்று எழுந்து கொண்டான்.

    ‘யார் இவ்வளவு வேகமாக இடித்து தள்ளிவிட்டு ஒரு ஸாரி கூட சொல்லாமல் சென்றது’ என்று ஆதி பார்த்தான். அந்த உருவம் வெகுதொலைவில் சென்றுவிட்டது தெரிந்தது. அந்த உருவத்தின் உயரம் நடை இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது ஒரு பெண் என்று தெரிந்தது. கருநீல கலர் டிராக்ஸ் பாண்ட்டும் கருநீல கலர் டீஷர்ட்டில் இருந்த, கேப் தலை முழுவதும் மூடி இருந்தது. ‘பொதுவாக பாய்ஸ்தான் கேப் வைத்த டீஷர்ட் போடுவாங்க கேர்ள்ஸ்கூட போடுறங்களா’ என்று நினைத்தபடி திரும்பினான் ஆதி. அந்த காட்சியை கண்டு ஒரு கணம் நிஷா அதிர்ந்து போனாள்.

    ஒயிட் பாரஸ்ட் கேக் பிளாட்பாரத்தில் சின்னாபின்னமாய் சிதைந்து கிடந்தது. ‘ஓ மை காட் நிஷாவுக்காக வாங்கின கேக் இப்படி ஆயிடுச்சே’

    ஹேய் ஆதி நிஷா உற்சாகமாய் ஓடிவந்து அவன் தோளை சுற்றி கையை போட்டு அவனை கட்டிக் கொண்டாள்.

    ஹாய் நிஷா மிஸ் யூ ஸோ மச்

    ஐ மிஸ் டு யூ டூ ஆதி கேக் எங்கடா? நிஷாவின் கண்கள் டிராலி சூட்கேஸையும் ஹோண்டா பேக்கையும் மாறிமாறி பார்த்தன.

    எங்கடா கேக்? சீக்கிரம் எடு! இப்பவே எனக்கு சாப்பிடணும் போல இருக்கு.

    அது வந்து நிஷா ஒரு ஒரு... மாடு என்மேல மோதி கேக் கீழே விழுந்து எல்லாம் போச்சு. அங்க பாரு என்று அவளிடம் காண்பித்தான்.

    கேக் சின்னாபின்னமாய் பிளாட்பாரத்தில் கிடந்தது. அதை பார்த்து நிஷா ஏமாற்றமடைந்தாள்.

    என்னடா இது. ஒரு கேக்கை ஒழுங்கா கொண்டுவர தெரியாதா? நீ ஒரு இடியட் ஆதி?

    "ஏய் ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு என்னை

    Enjoying the preview?
    Page 1 of 1