Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaa... Vaa... Roja Penney
Vaa... Vaa... Roja Penney
Vaa... Vaa... Roja Penney
Ebook160 pages58 minutes

Vaa... Vaa... Roja Penney

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பணி ஓய்வு பெற்ற பின்னும் பணி இடத்தில் போய் எதாவது வேலை செய்து நிர்வாகத்துக்கு உதவியாக இருப்பேன் என அடம்பிடிக்கும் முதியவர் பற்றிய கதை-'அறுபதிலும் வேலை செய்வோம்'.

இறந்தவர் வீட்டுக்கு போனால் வெறும் துக்கம் மட்டும் விசாரித்து விட்டு வராமல் மொய் செய்வோம் என்கிறது -'மரணமொய்'.

பக்கோடா விற்பவர் தொழிலதிபன் என்கிறது -'தொழிலதிபன்' கதை வருங்கால கணவனுக்கு சமைக்க தெரிந்திருக்க வேண்டுமா இல்லையா பதில் சொல்கிறது -'சமைக்கத்தெரிந்தவன்'.

தேநீர் விடுதி நடத்தினால் முதலமைச்சர் ஆகலாம் யோசனை கூறுகிறது-'தேநீர் விடுதி'

திருமணம் முடிந்து வரும் உதவி ஆசிரியையை கோலாகலமாக வரவேற்கிறது பத்திரிகை அலுவலகம். இக்கதை தலைப்பு -வா வா ரோஜாப் பெண்ணே'

பேரனின் கடி தாத்தாவுக்கு பத்மபூஷன் விருது என்கிறது-'கடி'

ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமை பெற்ற தாய்க்கு தான் என்கிறது-'முஹம்மது அர்ஹான்' கதை. மொத்தத்தில் இருபது சிறுகதைகளும் வகைவகையான சித்தாரன்னவிருந்து படித்து புத்துணர்ச்சி பெறுங்கள்

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580111011089
Vaa... Vaa... Roja Penney

Read more from Arnika Nasser

Related to Vaa... Vaa... Roja Penney

Related ebooks

Reviews for Vaa... Vaa... Roja Penney

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaa... Vaa... Roja Penney - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வா... வா... ரோஜாப் பெண்ணே

    (20 சிறுகதைகள் தொகுப்பு)

    Vaa... Vaa... Roja Penney

    (20 Sirukadhaigal Thoguppu)

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    பொருளடக்கம்

    1. அறுபதிலும் வேலை செய்வோம்

    2. மரண மொய்

    3. தொழிலதிபன்

    4. மெஹா பாஸ் 3

    5. கட்டிப்பிடி வைத்தியம்

    6. சமைக்கத் தெரிந்தவன்

    7. தீபாவளி பலகாரம்

    8. தேநீர் விடுதி

    9. தூக்கணங் குருவி

    10. எழுத்து கிலோ 37000 ரூபாய்

    11. அநியாயத்துக்கு நல்லவன்டா நான்

    12. பூமர் அங்கிள்

    13. வா... வா... ரோஜாப் பெண்ணே

    14. கடி

    15. ஆம்பிளே பொம்பிளே

    16. பச்சை மிளகாய்

    17. சிக் பாஸும் பாரு கிவேதிதாவும்

    18. அந்தியில் பூத்த மலர்கள்

    19. டிரங்க் பெட்டி

    20. முஹம்மது அர்ஹான்

    1. அறுபதிலும் வேலை செய்வோம்

    மணி மேகலைப் பல்கலைக்கழகம்.

    விருந்தினர் மாளிகையின் மாநாட்டு அறை.

    பிரிவுபச்சார விழாவில் செல்லப்பன் அமர்ந்திருந்தார். வழித்து விடப்பட்ட திரேகம். சம்மர்கட் தலை கேசம். பவர் கிளாஸ் தேவைப்படாத கண்கள். ஹிட்லர் மீசை.

    பல்கலையில் முப்பத்தியேழு வருடங்களாக காவல்வீராக இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு கீழ் 265உடைமைக் காவலர்கள் பணிபுரிந்தனர். பல்கலைக்கழகத்துக்குள் வாகன திருட்டோ துறைகளில் பொருட்கள் திருட்டோ கால்நடைகள் நடமாட்டமோ இல்லாமல் கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டவர்.

    விழாவில் செல்லப்பனை அனைவரும் இந்திரன் சந்திரன் என பாராட்டினர்.

    பதிவாளர் செல்லபனுக்கு பொன்னாடை போர்த்தி ஒரு பவுன் மோதிரத்தை இடது மோதிர விரலில் அணிவித்தார்.

    கடைசியில் ஏற்புரை நிகழ்த்த செல்லப்பன் எழுந்தார். பிரிவுபச்சார விழாக்கள் தேவையற்றவை. ஒருவன் பணி சேரும் போது விழா வைக்கிறோமா, பின் எதற்கு அவன் பணி ஓய்வு பெறும்போது விழா எடுக்கிறோம்? எது எப்படி இருந்தாலும் உங்கள் அன்புக்கு நன்றி. பணி ஓய்வுடன் எனக்கும் பல்கலைக்கும் இடையே ஆன பந்தம் அறுந்துவிடவில்லை. என் ஆயுளுக்கும் இந்த பந்தம் தொடரும்!

    விழா முடிந்து விருந்து பரிமாறப்பட்டது.

    விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்த காரில் ஏறாமல் தனது பைக்கில் ஏறி வீடு பறந்தார் செல்லப்பன்.

    பொன்னாடையை மனைவிக்கு போட்டு மோதிரத்தை அவள் விரலில் பூட்டினார்.

    ஓடி ஓடி உழைச்சது போதும். இனியாவது நிம்மதியா ஓய்வெடுங்க. நேர நேரத்துக்கு மெண்டு நிதானமா சாப்பிடுங்க. மதியம் குட்டித்தூக்கம் போடுங்க. ஓய்வூதியத்ல பத்தாயிரத்தை மகனுக்கும் அய்யாயிரத்தை மகளுக்கும் மாசாமாசம் குடுங்க!

    ஏன் அவங்க சம்பாதிக்கலையா? என் பென்ஷன்லயிருந்து உதவித்தொகை அவங்களுக்கு எதுக்கு?

    எது சொன்னாலும் ஏறுக்குமாறா கேப்பீங்க. ரிட்டையர் ஆகி வீட்லயே இருக்கப் போறீங்க. இனி உங்களுக்கும் எனக்கும் தினம்தினம் உள்நாட்டு யுத்தம்தான்!

    சிரித்தார் செல்லப்பன்.

    மறுநாள் காலை. குளித்து புத்தாடை உடுத்தி தயாரானார் செல்லப்பன்.

    எங்க போறீங்க?

    வேலைக்குதான்!

    நேத்தோட நீங்க ரிட்டையர் ஆய்ட்டீங்க...

    இருக்கட்டுமே... என் இடத்துக்கு பதவி உயர்வு பெற்று வந்திருக்கும் காவல்வீரரை நான் தொந்திரவு பண்ணப் போறதில்லை. பல்கலையில் காலியாக கிடக்கும் பணிகளை தினம் தினம் கண்டுபிடிச்சு வேலை பாக்கப் போறேன்!

    தினக்கூலி அடிப்படைல வேலை பாக்கப் போறீங்களா?

    அட யாரடி இவ? எனக்கு பென்ஷன் மாதம் 45000 தரப் போரான்க. பென்ஷனில் பாதித்தொகை பெறுமானமுள்ள பணிகளை பல்கலைக்கழகத்துக்கு செஞ்சு தர போறேன்!

    இலவசமாகவா?

    இல்ல இல்ல... 45000 பென்ஷனுக்கு நான் ஒர்த் இல்லை. 25000 பென்ஷன் எனக்கு செரிக்கும். மீதி தொகைக்கு கார்டனரா, ஸ்வீப்பரா. செக்யூரிட்டியா, ஸ்கேவஞ்சரா வேலை பார்த்து கொடுக்கப் போறேன்!

    சரியான உளறுவாயனா இருக்கீங்களே... தவளை தன் வாயால் கெடும்!

    மத்திய அரசாங்கத்தில் 77லட்சம் ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியம் 2.54 லட்சம் கோடி. தமிழ்நாட்டில் 715761 ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியம் 39508கோடி. அம்பத்திஎட்டு வயசுல அறுபது வயசுல ஓய்வூதியர்கள் அனைவரும் படுத்தபடுக்கை ஆகிடுறாங்களா? குறைஞ்சபட்சம் அவங்க 15வருஷம் உழைக்கலாம்!

    எங்க உழைக்க சொல்றீங்க?

    எந்த துறையில் வேலை பாத்தாங்களோ அதே துறையில் கீழ்மட்டபணிகளை ஓய்வூதியர்கள் செய்யலாம். யாருடைய பணிக்கும் இடைஞ்சல் இல்லாம கூடுதலா ஒரு பைசா கேக்காம ஆத்மார்த்தமா வேலை பார்க்கலாம்!

    ஏற்கனவே உழைச்சு ஓடா தேஞ்சவங்களை கக்கூஸ் கழுவ சொல்றீங்க குப்பைகூட்டச் சொல்றீங்க!

    எல்லாரையும் சொல்லல. ஆரோக்கியமா இருக்றவங்க நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி பணப்பயன் எதிர் பாராத பணி செய்யலாம்!

    எல்லா நாட்டுலயும் பென்ஷன் தரத்தானே செய்றாங்க?

    தொண்ணூறு சதவீத நாடுகளில் பென்ஷன் தரப்படுவதில்லை. பின்லாந்தில் மிகசிறப்பான ஓய்வூதியம் தரப்படுகிறது!

    நீங்க பின்லாந்தில் பிறந்திருக்கலாம்!

    பணிக்காலத்தில் வேலை செய்யாமல் ஒப்பேத்தினவர்களுக்கும் கடுமையாக லஞ்சம் வாங்கி குவித்தவர்களுக்கும் ஓய்வூதியம் தரக்கூடாது. பழைய ஓய்வூதியதிட்டம் தேவையற்றது. புதிய ஓய்வூதியத் திட்டம் பரவாயில்லை.

    நண்டு கொழுத்தா வளைல இருக்காதுன்னுவாங்க. அது மாதிரி இருக்குது உங்க திமிர் பேச்சு...

    கேஸ் மானியம் வேண்டாம்னு எழுதி குடுத்த மாதிரி ஓய்வு பெற்ற உயர்நடுத்தர மக்கள் தங்கள் ஒய்வூதியத்தை விட்டு தரலாம்!

    மக்களை எதனைவிட்டுக் கொடுத்தாலும் அது கார்ப்ரேட்டுகளுக்கான சலுகையாவுல மாறுது!

    அரசியல் பேசாதே செல்லம்!

    பெரிய பதவில இருந்துட்டு இப்ப நண்டான்சிண்டான் வேலைகளை பார்ப்பேன்னு சொல்றீங்களே உங்களுக்கு வெக்கமாயில்ல?

    நான் ஏன் வெக்கப்படனும்? பல்கலையின் கீழ்மட்டபணிகளை கூடுதல் செலவாகாமல் ஓய்வூதியர்கள் கவனித்துக் கொள்வது பல்கலையின் நிதிசுமைய குறைக்கும் தானே?

    போலி சான்றிதழ் கொடுத்து பணி சேர்ந்தவர்களை உயர்பணி பெற்றவர்களை நீக்கினாலே கூடுதல் நிதி சுமை குறையுமே...

    அவர்களின் மீது போட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே!

    நீங்கள் மட்டும் பணிக்கு போகிறீர்களா? அல்லது உங்க நண்பர்கள் யாரையாவது கூட்டிச் செல்கிறீர்களா?

    இன்று நான் மட்டும்தான்... நிறைய ஒய்வூதியர்கள் என்னை பின்தொடர்வர்

    தினம் எத்னி மணி நேரம் பணி செய்வீர்கள்?

    எட்டு மணி நேரம் உடல் ஒத்துழைக்காவிட்டால் நான்கு மணிநேரம்...

    நாசமா போங்க... பென்ஷன் வர்றதில எதாவது ஏடாகூடம் பண்ணீங்க... உங்களை தொம்சம் பண்ணிடுவேன்!

    கிளம்பினார் செல்லப்பன்.

    பதிவாளர் அறை. பதிவாளர் வரவேற்றார். வாங்க செல்லப்பன் வாட் கேன் ஐ டு பார் யூ!

    ஒரு வருகை பதிவேட்டை நீட்டினார் செல்லப்பன். இதில இன்னைக்கி கையெழுத்து போட்டிருக்கேன். பொறியியல் புலத்தில் முளைத்துள்ள தேவையற்ற பார்த்தீனிய செடிகளை அகற்ற போகிறேன்!

    மறு பணியமர்த்தல் செய்ய மாட்டோம் எக்ஸ் சார்ஜன்ட்!

    எனக்கு வழங்கப்படும் ஒய்வூதியத்தில் பாதிய இந்த பணிகளுக்கான சம்பளமாக எடுத்துக் கொள்வேன்!

    நான் பதிவாளர். என் பணி ஓய்வுக்கு பிறகு நான் அலுவலக உதவியாளர் பணி பார்க்க வேண்டுமா? இது தவறான முன்னுதாரணம். பேசாமல் வீட்டுக்கு போங்கள். ஓய்வூதியம் இல்லாவிட்டால் உங்கள் மனைவி மக்கள் பரம்பைசாவுக்கு மதிக்கமாட்டார்கள். சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்!

    நான் ஒய்யூதியம் வேண்டாம் என சொல்லவில்லையே. உடலில் திராணி இருக்கும் மட்டும் நான் வேலை பார்த்த இடத்துக்கு நன்றிக்கடனாக இருக்க விரும்புகிறேன். பல்கலை பணியால்தான் மகள்மகனை படிக்க வைத்து ஆளாக்கி திருமணமும் செய்து கொடுத்தேன். எந்த வேலையும் இழிவல்லவே...

    சரி போய் வேலை பாருங்கள். நீங்களே ஒரே வாரத்தில் ஓடிவிடுவீர்கள்!

    வேலைபார்த்துக் கொண்டிருக்கும் போது ஓய்வூதியசங்க தலைவர் தனது உறுப்பினர்களுடன் ஓட்டமும் நடையுமாய் ஓடி வந்தார். ஏற்கனவே பல பேருக்கு நாம பென்ஷன் வாங்றது கண்ணை உறுத்திக்கிட்டு இருக்கு. நீங்க துரோகியா மாறாதிங்க. கத்திய தூக்கி போட்டுட்டு வீட்டுக்கு போங்க...

    முடியாது!

    தினக்கூலி உறுப்பினர்களும் தொகுப்பூதிய ஊழியர்களும் திரண்டு வந்தனர். ஏற்கனவே நாங்க பணி நிரந்தரம் செய்ய சொல்லி போராடிக்கிட்டு இருக்கம். நீங்க இதில குறுக்குசால் ஓட்டாதிங்க. நீங்க ஒருஅம்பது பேர் வந்து கீழ்மட்ட பணிகளை கவனித்தால் கீழ்மட்ட ஊழியர்களின் தேவையில்லாம போகும். ஒரு ஆறுமாசம் போனவுடன் உங்களுக்கு தொகுப்பூதியம் ஒண்ணு கேட்டு வாங்க ஆரம்பிச்சிடுவீங்க. உங்களுக்கு இரண்டு வருமானம் போறீங்களா இல்ல உங்களை குண்டுக்கட்டா தூக்கிட்டு போய் உங்க வீட்ல வீசட்டா?

    வாய் தகராறு கைகலப்பாய் மாறியது.

    தொடர்ந்து மூன்றுமணி நேரம் சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. இறுதியில் பதிவாளர் அறிவித்தார்.

    பணிஓய்வு பெற்றதை ஜீரணிக்க முடியாத திரு. செல்லப்பன் கடுமையாக மனநலம் பாதிக்கப் பட்டுள்ளார். அவரை மனநலமருத்துவ பிரிவில் அனுமதிக்க உத்திர விடுகிறேன்!

    பல்கலைக்கழக ஆம்புலன்ஸ் வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1