Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

குறட்டை (சத்தம்) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது: வீட்டில் இருக்கும் அனைவரும் நன்றாகத் தூங்குவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது.
குறட்டை (சத்தம்) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது: வீட்டில் இருக்கும் அனைவரும் நன்றாகத் தூங்குவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது.
குறட்டை (சத்தம்) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது: வீட்டில் இருக்கும் அனைவரும் நன்றாகத் தூங்குவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது.
Ebook112 pages37 minutes

குறட்டை (சத்தம்) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது: வீட்டில் இருக்கும் அனைவரும் நன்றாகத் தூங்குவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது.

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குறட்டை ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் பாதிப்புகள் மற்றும் அதற்கு கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைகள் போன்ற குறட்டை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. உடல் எடைக் குறைப்பு மற்றும் தூங்கப் போவதற்கு முன் மது அருந்துவதைத் தவிர்ப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் மருந்துக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய மூக்கின் மேல் ஒட்டக்கூடிய பட்டைகள் (நேசல் ஸ்ட்ரிப்) மற்றும் ஈரப்பதத்தை அதிகரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தெரிந்துகொள்வோம். மேலும் அறுவை சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான நேர்மறை காற்று பாதை அழுத்த (CPAP) சிகிச்சை போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம். குறட்டை ஏற்படுவதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிவது மற்றும் அதற்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவ சேவை வழங்குநருடன் எவ்வாறு ஆலோசிப்பது போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம்.
மேலும், குறட்டை விடும் நபர் மற்றும் அவருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள்ளும் துணைவரின் தூக்கத் தரத்தை மேம்படுத்துவது, குறட்டை விடுவதினால் உறவில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் வசதியான மற்றும் உகந்த சூழலை

அமேசான் தளத்தில் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் நூலாசிரியர்களில் ஒருவர் ஓவன் ஜோன்ஸ், இவர் வேல்ஸ் நாட்டின் பாரி நகரத்தைச் சேர்ந்தவர், இவர் பல நாடுகளில் வசித்திருக்கிறார் மேலும் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். ௧௯ 70 ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியத்தில் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, ​​அவர் உளவாளிகளுடன் தொடர்ந்து பழகினார். பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்குப் பிறகு, சுரினாம் நாட்டில், ​​1982 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அவருக்குத் தொடர்பிருக்கிறது மற்றும் அவர் கூலிப்படையை சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். பின்னர், ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தபோது, ​​பாலைவனப் புயல் ஏற்பட்டபோது பாரி நகரிலிருந்து ஜிப்ரால்டருக்கு நான்கு பேர் பயணம் செய்த குழுவில் துடுப்பு வளிக்கும் அடிமையாக பயணம் செய்தார் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் படகில் அவர்கள் பயணம் செய்தார்கள். அந்தப் பயணத்தின் போது, ​​அவர்கள் பயணித்த படகு ஏறக்குறைய ஒரு ரஷ்ய எண்ணெய் டேங்கர் மற்றும் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் - தி அட்லாண்டிக் சேலஞ்சர் ஆகியவற்றில் மோதியது. 2004 ஆம் அண்டு முதல், அவர் பெரும்பாலும் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தாய்லாந்து நாட்டில் வசித்தார். அவர் இப்போது தனது மனைவியுடன் அவரது ஆள் அரவமற்ற வடக்கு பகுதியில் இருக்கும் விவசாய கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார் மேலும் கதை எழுதுவது மற்றும் அவர் எழுதிய கதைகளை அதிகளவில் மொழிபெயர்ப்பு செய்வது போன்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
Languageதமிழ்
PublisherTektime
Release dateMar 25, 2023
ISBN9788835450382
குறட்டை (சத்தம்) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது: வீட்டில் இருக்கும் அனைவரும் நன்றாகத் தூங்குவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது.
Author

Owen Jones

Author Owen Jones, from Barry, South Wales, came to writing novels relatively recently, although he has been writing all his adult life. He has lived and worked in several countries and travelled in many, many more. He speaks, or has spoken, seven languages fluently and is currently learning Thai, since he lived in Thailand with his Thai wife of ten years. "It has never taken me long to learn a language," he says, "but Thai bears no relationship to any other language I have ever studied before." When asked about his style of writing, he said, "I'm a Celt, and we are Romantic. I believe in reincarnation and lots more besides in that vein. Those beliefs, like 'Do unto another...', and 'What goes round comes around', Fate and Karma are central to my life, so they are reflected in my work'. His first novel, 'Daddy's Hobby' from the series 'Behind The Smile: The Story of Lek, a Bar Girl in Pattaya' has become the classic novel on Pattaya bar girls and has been followed by six sequels. However, his largest collection is 'The Megan Series', twenty-three novelettes on the psychic development of a young teenage girl, the subtitle of which, 'A Spirit Guide, A Ghost Tiger and One Scary Mother!' sums them up nicely. After fifteen years of travelling, Owen and his wife are now back in his home town. He sums up his style as: "I write about what I see... or think I see... or dream... and in the end, it's all the same really..."

Related to குறட்டை (சத்தம்) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது

Related ebooks

Reviews for குறட்டை (சத்தம்) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    குறட்டை (சத்தம்) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது - Owen Jones

    குறட்டைச்சத்தம் ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது

    … மற்றும் வீட்டில் இருக்கும் அனைவரும் நன்றாகத் தூங்குவதை உறுதிப்படுத்துவது.

    நூலாசிரியர்

    Owen Jones

    ஓவன் ஜோன்ஸ்

    வெளியீடு

    மேகன் பதிப்பகச் சேவைகள்

    https://meganthemisconception.com

    உரிமை © ஓவன் ஜோன்ஸ் 2023

    Table of Contents

    வணக்கம், குறட்டை ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது… மற்றும் வீட்டில் இருக்கும் அனைவரும் நன்றாகத் தூங்குவதை உறுதிப்படுத்துவது என்ற இந்த புத்தகத்தை வாங்கியதற்கு நன்றி!

    ஓவன் ஜோன்ஸ்

    பொருளடக்கம்

    குறட்டை மற்றும் அது ஏற்படுவதற்கான காரணங்கள் ஓர் அறிமுகம்

    உங்கள் உடல் நலம் மற்றும் உறவுகளில் குறட்டை விடுவதினால் ஏற்படும் விளைவுகள்

    குறட்டை விடுவதைக் குறைக்க எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள்

    குறட்டைச்சத்தம் ஏற்படுவதில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடல் எடையின் பங்கு

    ஸ்லீப் அப்னியா (உறக்க மூச்சிடைநிற்பு) பற்றி தெரிந்துகொள்வோம்

    தொண்டை மற்றும் வாய்ப் பகுதியிலுள்ள தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள்

    மூக்கின் மேல் ஒட்டக்கூடிய பட்டைகள் (நேசல் ஸ்ட்ரிப்) மற்றும் ஈரப்பதத்தை அதிகரிக்கும் சாதனங்களின் (ஹுமிடிஃபையர்) பயன்பாடு

    குறட்டை விடுவதைக் குறைக்க பக்கவாட்டில் படுத்துத் தூங்குவது

    குறட்டை ஏற்படுவதில் மதுபானம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தின் பங்கு

    தூக்க பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நோய்கள்

    உங்கள் துணைவரை இழப்பதற்கு முன், குறட்டை ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது

    ஸ்லீப் அப்னியா மானிட்டர்கள் (கண்காணிக்கும் சாதனங்கள்)

    குறட்டை விடுவதை தவிர்க்க இயற்கை சிகிச்சை முறைகள்

    குறட்டைச்சத்தம் ஏற்படுவதை தடுக்க சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கக்கூடிய பரிந்துரைக்கப்படாத மருந்துகளின் பயன்பாடு

    ஸ்லீப் அப்னியா என்றால் என்ன, எனக்கு அது இருக்கிறதா?

    குறட்டை விடுவதில் ஸ்லீப் அப்னியாவின் பங்கு மற்றும் அதற்கான சிகிச்சைகள்

    குறட்டை விடுவதை நிறுத்துவதற்கான முதல் ஐந்து குறிப்புகள்

    துயில்மயக்க நோய் (நார்கோலெப்ஸி) - ஓர் அறிய வகை தூக்கக் கோளாறு

    குறட்டை விடுவதால் ஏற்படும் உணர்ச்சி ரீதியான பிரச்சனைகள்

    ஸ்லீப் அப்னியா (தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல்) உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் சூழல்கள்

    குறட்டை விடுவதிலிருந்து விடுபட்டு ஒரு நிம்மதியான இரவு தூக்கத்திற்கான மருந்துகள்

    தூக்கமின்மைக்கான மூலிகை மருந்துகள்

    தூக்கத்தில் நடக்கும் குழந்தைகள்

    தூக்க சம்பந்தட்ட கோளாறுகள் மற்றும் ஆரோக்கியமான உடல்நலம்

    பேபி ஸ்லீப் அப்னியா மானிட்டர்கள்

    ஸ்லீப் அப்னியா (Sleep Apnoea) அல்லது ஸ்லீப் அப்னோயா (Sleep Apnea)?

    தொடர்பு விவரங்கள்

    வணக்கம், குறட்டை ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது… மற்றும் வீட்டில் இருக்கும் அனைவரும் நன்றாகத் தூங்குவதை உறுதிப்படுத்துவது என்ற இந்த புத்தகத்தை வாங்கியதற்கு நன்றி!

    இந்த தகவல்கள் உதவியாக, பயனுள்ளதாக மற்றும் லாபகரமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    உலகில் பல லட்சக்கணக்கானவர்களைப் பாதிக்கும் ஒரு சாதாரணப் பிரச்சனை குறட்டை விடுதல்.  ஒருவர் தூங்கும்போது, அவர் வெளிப்படுத்தும் கடுமையான அதிர்வுச் சத்தத்தினால் குறட்டை வெளிப்படுகிறது மற்றும் சுவாசப் பாதையின் ஒரு பகுதி தடைப்படும்போது குறட்டை ஏற்படலாம்.  குறட்டைச்சத்தம், குறட்டை விடும்  நபர்களை மட்டும் பாதிக்கவில்லை மாறாக அவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் துணைவர்களையும் பாதிக்கிறது மற்றும் அது  எரிச்சல் மற்றும் மனக்கசப்பு போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது. 

    மேலும், நாள்பட்ட குறட்டை விடும் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சர்க்கரை நோய் (நீரழிவு) போன்ற கடுமையான நோய்ப் பாதிப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாகலாம். நீங்கள் அல்லது உங்களது அன்பிற்குரியவர்,  குறட்டை விடுபவராக இருந்தால், இந்த புத்தகம் குறட்டை விடுவதைத் தடுப்பதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.       

    குறட்டை ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் பாதிப்புகள் மற்றும் அதற்கு கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைகள் போன்ற குறட்டை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. உடல் எடைக் குறைப்பு மற்றும் தூங்கப் போவதற்கு முன் மது அருந்துவதைத் தவிர்ப்பது போன்ற  வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் மருந்துக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய மூக்கின் மேல் ஒட்டக்கூடிய பட்டைகள் (நேசல் ஸ்ட்ரிப்) மற்றும் ஈரப்பதத்தை அதிகரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தெரிந்துகொள்வோம். மேலும் அறுவை சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான நேர்மறை காற்றுப் பாதை அழுத்த (CPAP) சிகிச்சை போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம். 

    குறட்டை ஏற்படுவதன் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிவது மற்றும் அதற்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவ சேவை வழங்குநருடன் எவ்வாறு ஆலோசிப்பது போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம்.

    மேலும், குறட்டை விடும் நபர் மற்றும் அவருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் துணைவரின் தூக்கத் தரத்தை மேம்படுத்துவது, குறட்டை விடுவதினால் உறவில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் வசதியான மற்றும்  உகந்த சூழலை எவ்வாறு உருவாக்குவது போன்றவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

    இந்த புத்தகம், குறட்டை விடுவதைச் சிறந்த முறையில் கையாள்வது மற்றும் ஒட்டுமொத்த தூக்கத் தரத்தை மேம்படுத்துவதற்கான புரிதல் மற்றும் குறிப்புகளை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் குறட்டை விடுபவர் அல்லது குறட்டை விடுபவருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்பவர், இவ்விரண்டில் யாராக இருந்தாலும், குறட்டை ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் பாதிப்புகள் மற்றும் கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள இந்த புத்தகம் உதவியாக இருக்கும் மேலும் உங்களால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். 

    Enjoying the preview?
    Page 1 of 1