Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ragasiyam T-117
Ragasiyam T-117
Ragasiyam T-117
Ebook121 pages1 hour

Ragasiyam T-117

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்திய ராணுவத்தின் ரகசித்தை திருட நினைக்கும் தேச விரோதிகள். அப்படி என்ன ரகசியம் "பைல் நம்பர்-டீ-117" உள்ளது? அதை கைப்பற்றுவதற்காக போடப்படும் திட்டங்கள், அதனால் பலியாகும் இளம்பெண். இளம்பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை தேடி அலையும் பரத்-சுசிலா. இறுதியில் தேசவிரோத செயல் தடுக்கப்பட்டதா? விறுவிறுப்பான கதைக் களத்தில் நாமும் பயணிப்போம்.

Languageதமிழ்
Release dateDec 27, 2022
ISBN6580100908210
Ragasiyam T-117

Read more from Pattukottai Prabakar

Related to Ragasiyam T-117

Related ebooks

Reviews for Ragasiyam T-117

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ragasiyam T-117 - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ரகசியம் T-117

    Ragasiyam T-117

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    22 மாநிலங்களையும், 9 யூனியன் பிரதேசங்களையும், நாட்டின் முதல் குடிமகன் என்கிற பெருமையைத் தவிர வேறெந்த அதிகாரத்தையும் செயல்படுத்தும் மரபில்லாத ஜனாதிபதியையும் கொண்ட...

    டீ, காபி, சணல், தோல் பொருள்கள், இரும்பு தாதுக்கள், துணி வகைகளை ஏற்றுமதி செய்து, இயந்திரங்கள், கெமிக்கல் பொருள்கள், பெட்ரோலியம் பொருள்கள். மின்சார பொருள்களை இறக்குமதி செய்யும்…

    3.280.483 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்ட, அதை உயர்த்திக்கொள்ள சீனாவுடன் புதிய பேச்சு வார்த்தைகள் துவங்கியுள்ள, அக்டோபர் இரண்டாம் தேதிகளில் மறக்காமல் பறவை எச்சங்களைத் துடைத்துக் கழுவி, மாலை போட்டு மகாத்மா நினைவாக பள்ளிக் குழந்தைகளுக்கெல்லாம் பத்து பைசா சாக்லெட் விநியோகித்து மகிழும்...

    இந்தியாவின் தலைநகரில் பார்லிமெண்ட் - பட்ஜெட் கூட்டத் தொடரில் ஏக பிஸியாய் இருந்தது.

    பட்ஜெட் மீதான விவாதத்தின்போது கழுத்து நரம்பு புடைக்க, வழக்கம்போல ஒரு எதிர்கட்சி எம்.பி., எம்பி, எம்பி பேசினார் கீழ்க்கண்டவாறான தமிழாக்கத்தில்.

    அமைதி விரும்பும் நாடு. சமாதான நாடு என்றெல்லாம் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும் பேசுகிறீர்கள். ஆனால் இராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகை கணிசமாகக் குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உள்நாட்டுக் கலவரங்களை ஒடுக்கவே நமது இராணுவத்திற்கு நேரம் சரியாய் இருக்கிறது.

    ராணுவ மந்திரி, கேள்வி கேட்ட உறுப்பினருக்கு பதில் அளிக்கும் முன்பாக தனது ஷெர்வானியின் மேல் பட்டனை நிமிண்டிக் கொண்டார்.

    அமைதியும், சமாதானமும் நமது நாட்டின் அடிப்படையான, அசைக்க முடியாத கொள்கைகள் என்பதில் உறுப்பினருக்குச் சந்தேகம் வரவே கூடாது. அதே சமயம் நம்மைச் சுற்றி உள்ள சில நாடுகள் நட்பு என்னும் போர்வைக்கு அடியில் நயவஞ்சகத் திட்டங்கள் சில எப்போதுமே வைத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. நட்பு பேசிக்கொண்டே, கலாச்சாரப் பரிமாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே... அணு ஆயுதச் சோதனைகளை அவ்வப்போது நடத்துவதோடு, நவீனரக போர் ஆயுதங்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன அந்த நாடுகள். உண்மை நிலை இப்படியிருக்க... நாம் விரும்பாத, சில அசம்பாவிதச் சூழ்நிலைகள் துவங்கும் நேரத்தில் நாம் சமாதானம் பேசிக்கொண்டிருக்க முடியாது. சரியான பதிலடி கொடுக்க நாம் என்றும் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பிட்ட அந்த நாடுகளை ‘நாம் எதற்கும் தயாராய் இருக்கிறோம்' என்று மறைமுகமாக உணர்த்த நமது இராணுவத்தின் பலத்தையும் உயர்த்த வேண்டியதாகிறது, நவீனப் படுத்த வேண்டியதாகிறது. இந்த வருடம் மிகவும் நவீன ரக போர் தளவாடங்கள் நாற்பது வாங்கப்படுகிறது. பாதுகாப்பு நலன் கருதி இங்கே விரிவாகக் குறிப்பிட இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அமர்ந்தவுடன் தண்ணீர் குடித்தார் மந்திரி.

    கூட்டம் நிறைவு பெற்று இரண்டு செயலாளர்களுடன் மந்திரி வெளியே வந்ததுமே... பத்திரிகைக்காரர்கள் மொய்த்துக்கொண்டார்கள்.

    என்ன தளவாடம் நாம் வாங்கப்போகிறோம்…?

    விமானங்கள் என்று யூகிக்கிறோம். சரியா?

    எந்த நாட்டில் இருந்து வாங்குகிறோம்?

    வாங்கப்பட்டுவிட்டதா? இல்லை திட்டம் காகித அளவில்தானா?

    ஆயுதங்களை அதிகப்படுத்தி வருவதாகத் தாங்கள் குறிப்பிட்டது எந்த நாட்டை?

    பாகிஸ்தான் எல்லையில் நமது வீரர்கள் நான்கு பேர் சுடப்பட்டதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

    போர் அபாயம் ஏதாவது குறிப்பால் உணரப்படுகிறதா?

    பிரதமரின் அடுத்த மாத ரஷ்யப் பயணத்திற்கு உள் நோக்கம் ஆதரவை வலுப்படுத்திக்கொள்வதா?

    மந்திரி அத்தனைக் கேள்விகளையும் புன்னகையுடன் வாங்கிக் கொண்டு, மொத்தமாக அவர்களைப் பார்த்து, விபரீத அர்த்தங்கள் கொடுத்து எதையும் எழுதிவிடாதீர்கள். ஏதேனும் செய்தி உங்களுக்குத் தருவதற்கு இருந்தால் அதை அமைச்சரகம் மூலமாக வெளியிடுவேன். நன்றி என்று கைக்கூப்பிவிட்டு விருட்டென்று தனது காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

    பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் பார்த்துக்கொண்டார்கள். முணு முணுத்தார்கள்.

    மறுநாள் ஒரு தமிழ் தினசரி செய்தியை இப்படி வெளியிட்டிருந்தது.

    இந்தியா - ஆயுத பலம் அதிகரிப்பு!

    எதிரி நாடுகளுக்கு பதிலடி!

    பார்லிமெண்டில் மந்திரி தகவல்:

    நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நம் தமிழக எம்.பி. குண சேகரின் ஒரு கேள்விக்கு இராணுவ மந்திரி பதில் அளித்தபோது...

    நம்மைச் சுற்றியுள்ள சில நாடுகள் தங்கள் ஆயுத பலத்தை அதிகப்படுத்தி வருவதால் நாமும் அதே நடவடிக்கைகளில் இறங்க வேண்டியுள்ளது என்றும், நவீன ரக போர் தளவாடங்கள் நாற்பது வாங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

    பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொன்னார். நமது சிறப்பு நிருபரின் விசாரணையில்...

    மத்திய புலனாய்வுத்துறை சில திடுக்கிடும் தகவல்களை அமைச்சகத்திற்குக் கொடுத்திருப்பதன் விளைவாகவே இந்த நடவடிக்கை என்பது தெரியவருகிறது. விரிவான தகவல்கள் விரைவில் வெளிவரும்.

    2

    யோக மகராஜ் கசக்கிக் கொண்டு கண் விழித்தபோது அவரெதிரில் சலஃபன் அணைத்த பூங்கொத்துக்களைத் தனித் தனியாக நீட்டிக்கொண்டு ஒரே குரலில், ஹேப்பி பர்த் டே டு யு டாடி என்றனர் மூவரும்.

    யெஸ், யெஸ்... என்று மகராஜ், இரண்டு கைகளாலும் மூன்று பேரையும் பறவை போல அணைத்து ஆளுக்கொரு

    Enjoying the preview?
    Page 1 of 1