Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Netherland Muthal Rome Varai
Netherland Muthal Rome Varai
Netherland Muthal Rome Varai
Ebook95 pages36 minutes

Netherland Muthal Rome Varai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது ஒரு பயணக் கட்டுரை நூல். இதை படிக்கும் பொழுது நெதர்லாந்து துளிப் தோட்டத்தின் அழகையும், பாரீஸ் நகர ஈபிள் டவரின் பிரமிப்பூட்டும், சுவிட்சர்லாந்து பனிமலைகளின் குளிர்ச்சியையும், இத்தாலியின் புகழ்பெற்ற வெனிஸ், ஃபிளாரன்ஸ், ரோம் நகர வீதிகளில் நடை பயின்ற உற்சாகத்தையும் உங்களுக்கு தரும். மேலும் இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும் தருணம் மூன்று உலக அதிசயங்களையும், உலகின் புகழ்பெற்ற பல இடங்களையும் நீங்களே சுற்றிப் பார்த்து விட்டு வந்த உணர்வைத் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580143610616
Netherland Muthal Rome Varai

Related to Netherland Muthal Rome Varai

Related ebooks

Related categories

Reviews for Netherland Muthal Rome Varai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Netherland Muthal Rome Varai - Neasa

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நெதர்லாந்து முதல் ரோம் வரை

    Netherland Muthal Rome Varai

    Author:

    நேசா

    Neasa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/neasa

    பொருளடக்கம்

    முன்னுரை

    நெதர்லாந்து முதல் ரோம் வரை

    துலிப் தோட்டம்

    பாரீஸ்

    டிஸ்னி லேண்ட்

    லூவ்ரே மியூசியம்

    மோனாலிசா

    ஈபிள் டவர்

    மாண்ட் மார்ட்டே

    மவுலின் ரூஜ்

    சுவிஸ்

    சுவிட்சர்லாந்து

    ஜுங்ஃப்ரோ சிகரம்

    டிட்லிஸ்

    சேப்பலின் பாலம்

    சில்தோர்ன்

    ட்ரும்மேல்பாஸ் நீறுற்று

    இத்தாலி

    வெனீஸ் தீவு

    பைசா கோபுரம்

    பிளாரன்ஸ்

    ரோம்

    கொலோசியம்

    ட்ரெவி நீரூற்று

    வாட்டிகன் சிட்டி

    முன்னுரை

    குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலா அதுவும் பனி பிரதேசத்துக்குக்கு எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம், அதை முழுமையாக அனுபவித்தோம். அந்த அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதில் இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையே இந்தப் பயணக் கட்டுரையை எழுத என் மனம் உந்தியது.

    இருபது வருடங்களுக்கு முன்னர் நூலகத்தில் இருந்து எடுத்து வந்து படித்த பயண புத்தகம் ஒன்று என் மனதில் நீங்கா இடம் பிடித்தது. அது ஒரு பயண கட்டுரையாக இருந்தாலும் அதில் படித்த பல காட்சிகள் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அந்த அளவிற்கு மிகவும் சுவாரஷ்யமாக எழுதி இருப்பார் அதன் ஆசிரியர். நான் எழுத ஆரம்பித்த உடன் எனக்கும் அது போல ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆவல் வந்தது, எனவே நாங்கள் சென்ற இந்த சுற்றுலா அனுபவத்தையே அதற்கு பயன்படுத்திக் கொண்டேன்.

    நான் பார்த்த, அனுபவித்து, ரசித்த காட்சிகளை அப்படியே காட்சிப்படுத்த முயன்றிருக்கிறேன், படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.

    - நேசா

    நெதர்லாந்து முதல் ரோம் வரை

    நாம் ஏதாவது வெளிநாட்டுக்குச் சுற்றுலாச் செல்வோமா? என்பது அண்மை காலத்தில் என்னவர் சொல்லும் தாரக மந்திரமாக இருந்தது. என் பிள்ளைகளும் அம்மா போலாம்மா என சேர்ந்துகொள்ள சரி இந்த வருடம் எப்படியும் வெளிநாட்டுச் சுற்றுலா செல்வது என தீர்மானம் ஆயிற்று. சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவனம் மூலம் ஏற்பாடும் செய்யப்பட்டது.

    இரண்டு மாதத்திற்கு முன்பு வரை பனிப்பிரதேசத்துக்கு இப்படி ஒரு சுற்றுலாச் செல்வோம் என நான் எதிர்பார்க்கவில்லை, சொல்லி வைத்து சட்டென்று முடிவாகிவிட்டது. அந்த இடத்திற்குத் தேவையான உடைகளை வாங்கி சேகரித்துப் பயணத்திற்குத் தயாரானோம்.

    அதிகாலை நான்கு மணிக்கு சென்னை விமான நிலையத்தில் ஆரம்பித்தது எங்களது பயணம். பன்னிரண்டு பேர் கொண்ட சிறு குழு தான் ஆயினும் அது முழுமையாக ஒன்றிணைந்தது என்னவோ ஆம்ஸ்டர்டாமில்.

    எங்கள் குடும்பத்தில் நான், எனது கணவர், எங்களது இரு மகன்கள் என நான்கு பேர் மட்டுமே இங்கிருந்து கிளம்பினோம். சென்னை வெளிநாட்டு விமான முனையம் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பல்லாங்குழி ஆடும் பாவையர் கூட்டம் ஒருபுறம், பம்பரம் விட்டு மகிழும் சிறார் குழு ஒருபுறம் என மிக அழகான சிற்ப வேலைப்பாடுகள் வெகு அற்புதம். உற்சாகமாய் அதன் அருகில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம், காத்திருந்து அழைப்பு வந்ததும் விமானம் ஏறினோம்.

    அபுதாபிக்கு நான்கு மணி நேர பயணம் தான் ஆனால் இரவு முழுவதும் உறக்கம் இல்லாத காரணத்தால் ஏறியதும் தூக்கம் கண்களைச் சுழற்றியது. பயணிகளின் நிலை அறிந்து விமானத்தின் ஜன்னல் அனைத்தும் கருப்பு நிற பிளாஸ்டிக் திரைகளால் வெளிச்சத்தை மங்கச் செய்து விட்டனர், எனவே தடைபடாத நல்ல உறக்கம். அதனால் அபுதாபியில் இறங்கும் பொழுது புதுத்தெம்போடு தரையிறங்கினோம்.

    பெங்களூரில் இருந்து கிளம்பிய ஒரு குழு அபுதாபியில் எங்களுடன் வந்து இணைந்தது. அதில் இந்தச் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்த நிறுவனத்தில் இருந்து ஒருவர் தன் மனைவியுடன் வந்திருந்தார், மேலும் வேலையில் இருந்து ஒய்வு பெற்ற ஒரு தம்பதியர். அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று சேர்ந்து எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

    பின்னர் சிறிது நேர காத்திருப்புக்குப் பின் ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானத்தில் ஏறி எங்களது ஏழு மணி நேர நீண்ட பயணத்தைத் துவக்கினோம். நாங்கள் அமர்ந்திருந்தது விமானத்தின் நடுவிலே அமைந்திருந்த இருக்கைகள், எனவே வெளியே வேடிக்கைப் பார்க்க வழியில்லை. ஒரு தமிழ் படமும் ஒரு ஆங்கில கார்ட்டூன் படமும் பார்த்து எனது பயண நேரத்தைக் கடத்தினேன்.

    நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் வந்து இறங்கியதும் மற்றொரு குழுவிற்காக ஒருமணி நேரம் காந்திருக்க வேண்டி வந்தது. அவர்கள் லண்டன் பயணம் முடிந்து எங்களுடன் வந்து சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. பொழுது போக வேண்டுமே அங்கிருக்கும் கடைகளுக்குச் சென்று விண்டோ ஷாப்பிங் செய்து நேரத்தைப் போக்கினோம்.

    மற்றொரு குழுவில் இரண்டு கணவன் மனைவி ஜோடி அவர்களும் வந்து எங்களுடன் இணையவும் நாங்கள் செல்வதற்காக ஏற்பாடு செய்திருந்த சிறிய வேன் ஒன்றில் ஏறி ஆம்ஸ்டர்டாமில் நாங்கள் தங்க இருக்கும் அறைக்குக் கிளம்பினோம்.

    வேனில் செல்லும் போதே குளிர்க்காற்று உடலை வருடியது. நான் டிசம்பர் மாதத்தில் இங்கேயே ஸ்வெட்டர் போடும் ஆள் அதனால் கைப்பையில் வைத்திருந்த ஸ்வெட்டரை எடுத்துப் போட்டுக் கொண்டேன்.

    விமான நிலையத்திலிருந்து ஒரு அரைமணி நேர பயணத்தில் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்த இந்திய ஓட்டல் இருந்தது அங்கே வயிறார இரவு உணவை முடித்துக் கொண்டு பின் நாங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1