Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbu
Anbu
Anbu
Ebook77 pages29 minutes

Anbu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில நேரங்களில் சில விடயங்கள் நடக்கும் காரணங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் அந்த நிகழ்ச்சி நடந்த பிறகு, நமக்குக் கிடைக்க கூடிய வாழ்க்கைப் பாடம் நிகழ்ச்சியின் காரணத்தைப் பற்றியத் தெளிவை நமக்குத் தரும். அப்படிப்பட்ட ஒரு கதை தான் இது. உண்மையில் ஒரு சிறு நாய் குட்டியின் வாழ்க்கையே கதையாக இங்குச் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றது, நாய்க்குட்டியின் வாழ்க்கை எம் குடும்பத்தில் பலருக்கு அன்பு என்ற பாடத்தைப் புகட்டியது. இங்கு கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளனவே தவிர அந்த நாய்க்குட்டியின் வாழ்க்கை அனுபவம், நமக்கெல்லாம் அன்பைப் பற்றிய ஒரு பாடமாக அமைகிறது. அன்பின் சோகமான வாழ்க்கையை விட அதன் வாழ்க்கை எங்கள் குடும்பத்திற்குக் கற்றுக் கொடுத்தப் பாடம் மிகப் பெரியது.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580151707972
Anbu

Related to Anbu

Related ebooks

Reviews for Anbu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbu - Suganthi Nadar

    https://www.pustaka.co.in

    அன்பு

    Anbu

    Author:

    சுகந்தி நாடார்

    Suganthi Nadar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/suganthi-nadar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அன்பு

    அம்மா எங்கே?

    அன்பின் தேடல்

    புதிய நட்பு

    அன்பும் வேங்கையும்

    மாயாவின் குடும்பம்

    மாயாவின் வீட்டிற்கு அன்பின் பயணம்.

    குடும்பத்தில் ஒருவன்

    போதாத காலம்

    என்ன செய்வது?

    அன்பின் உறவுகள்

    ஆசிரியர் குறிப்பு

    சில நேரங்களில் சில விடயங்கள் நடக்கும் காரணங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் அந்த நிகழ்ச்சி நடந்த பிறகு, நமக்குக் கிடைக்க கூடிய வாழ்க்கைப் பாடம் நிகழ்ச்சியின் காரணத்தைப் பற்றியத் தெளிவை நமக்குத் தரும். அப்படிப் பட்ட ஒரு கதை தான் இது. உண்மையில் ஒரு சிறு நாய் குட்டியின் வாழ்க்கையே கதையாக இங்குச் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றது, நாய்க்குட்டியின் வாழ்க்கை எம் குடும்பத்தில் பலருக்கு அன்பு என்றப் பாடத்தைப் புகட்டியது. இங்கு கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளனவே தவிர அந்த நாய்க்குட்டியின் வாழ்க்கை அனுபவம், நமக்கெல்லாம் அன்பைப் பற்றிய ஒரு பாடமாக அமைகிறது. அன்பின் சோகமான வாழ்க்கையை விட அதன் வாழ்க்கை எங்கள் குடும்பத்திற்குக் கற்றுக் கொடுத்தப் பாடம் மிகப் பெரியது.

    செல்லப்பிராணிகளாக வீட்டில் மிருகங்களையும் பறவைகலையும் நாம் வளர்க்கும் போது, அவற்றிற்கு அன்பு செலுத்துவதாய் நாம் நினைக்கின்றோம். ஆனால் அவர்களுடைய இயற்கையான வாழ்க்கைச் சூழலில் வாழத் தெரியாத தெரியாதா நாய்களையும் பூனைகளையும் தான் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம் என்பது தான் உண்மை.

    வல்லவன் ஆட்டின பம்பரம் மணலிலும் ஆடும் என்றும் வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்றும் ஒரு உயிர் தான் வாழும் சூழலில் வலுமை கொண்டதாக இருக்க வேண்டியது இயற்கையின் நியதி. ஆனால் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் அவர்களுக்கான சூழலைப்பற்றிக்கொஞ்சம் கூட உணர்வில்லாமல் நம்முடைய விளையாட்டு பொம்மைகளாகிவிட்டன.

    இந்தச்செல்லப்பிராணிகள் ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போன்றவை, தான் அண்டியிருக்கும் மனிதர்களின் அன்பிற்காகவும் மகவனிப்பிற்காகவும் ஏக்ன்கித் தவிக்கின்றன.

    உண்ண உடவும் இருக்க இடமும் கொடுத்தால் மட்டும் போதாது. அவற்றை ஒரு கைக்குழந்தையாக கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கான பொறுமையும் நேரமும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் அனைவருக்கும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. தெருவில் போகும் நாய்களுக்கு பயந்து வீட்டுக்குள் வந்து ஒரு செல்லப்பிராணியிடம் பாசம் காட்டுவது எவ்வளவு கடினம்.

    முக்கியமாக குழந்தைகள் ஒரு செல்லப்பிராணியை வளர்க்கும் பொறுப்புப் பற்றித் தெரியாமல் செல்லப்பிராணிகளை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகநாமும் அவர்களின் ஆசைக்கும் பிடிவாத த்திற்கும் விட்டுக் கொடுக்கின்றோம்.

    பெற்றோர்களாக நாம் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பிராணி வளர்ப்பில் ஈடுபடக்கூடாது. அப்படியே ஈடுபட்டாலும் அந்த பிராணி நமது நண்பனாக, தோழனாக பிள்ளையாக மட்டும் வளர்க்காமல். அந்தச்சின்ன உயிரின் தனித்துவத்தை, இயற்கை குணநலன்களை மதித்து, அதற்கான சூழலை அமைத்துக் கொடுத்து அவை அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டும்.

    அன்பு

    ஏழு வண்ண இறக்கைகள் விசிறியாய் விரிய, வைடூரியமே விழியாய், விண்ணுலகை வான வில்லாய் வர்ணம் தீட்டிய படி பறவைகள் பறந்து கொண்டிருக்க ஏலம், கருப்பூரம், சந்தனம் ஆகியவை தேனோடும் பன்னீரோடும் கலந்து நறுமணம் வீச அன்றில் பறவைகளும் வானம்பாடிகளும் குழலிசைக்க வானுயர்ந்த மரங்களும் மயில்களோடு போட்டிப்போட்டு ஆட பொன்னும் மணியும் பழங்களாய் உதிர பெருங்கடலோ என்று வியக்கும் வண்ணம் பரந்து விரிந்த ஏரிகளில் இளஞ்சிவப்பு தாமரை மலர்கள் ஒளி வீசி நிற்க, அந்த ஒளியில் நீர்பரப்போ நீலக்கல் குவியலில் கலந்த மரகதங்களாய் மின்ன. அதில் வண்ண ஒளிச்சிதறல்களாய் துள்ளிக்குதித்து விளையாடும் வண்ண வண்ண மீன்களின் வால் அடித்து கிளம்பிய நுரையோ முத்துக் குவியலோடு போட்டிப் போட,ஒளிமயமான அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1