Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhai Tharumo Megam
Mazhai Tharumo Megam
Mazhai Tharumo Megam
Ebook93 pages29 minutes

Mazhai Tharumo Megam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தென்றலாய்த் தழுவிச் செல்லும் காதல்..,

முதுமையில் தேடி வந்து தேனாய் இனித்திடும் காதல்..,

சமைக்கும் கலையால் முகிழ்த்த காதல்..,

மோகத்தில் மறைந்த காதல்..,

காலத்தால் நிறைந்த காதல்..,

பல் வகைக் காதலும் பல் சுவையில்..,

"மழை தருமோ மேகம்!"

Languageதமிழ்
Release dateMar 18, 2023
ISBN6580161709636
Mazhai Tharumo Megam

Read more from Bheeshma

Related to Mazhai Tharumo Megam

Related ebooks

Reviews for Mazhai Tharumo Megam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhai Tharumo Megam - Bheeshma

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மழை தருமோ மேகம்

    சிறுகதைகள்

    Mazhai Tharumo Megam

    Sirukathaigal

    Author:

    பீஷ்மா

    Bheeshma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bheeshma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மழை தருமோ மேகம்

    அத்தியாயம் - 01

    அத்தியாயம் - 02

    அத்தியாயம் - 03

    அத்தியாயம் - 04

    அத்தியாயம் - 05

    அத்தியாயம் - 06

    அத்தியாயம் - 07

    அத்தியாயம் - 08

    அத்தியாயம் - 09

    நிழல் தரும் மேகங்கள்

    அத்தியாயம் 01

    அத்தியாயம் - 02

    பொழிந்த மழை, நிமிர்ந்த பயிர்

    அத்தியாயம் - 01

    அத்தியாயம் - 02

    பாசத்தில் மறைந்த நேசம்

    உறவெனும் புதிய வானில்

    வசந்த காலக் கோலங்கள்

    வானில் மிதந்த கனவுகள்

    மாறுமோ மழை மேகம்

    நிறையுமோ ஆழி

    மேகம் கருக்காதோ

    தென்றலில் மிதந்த உறவுகள்

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02

    நில்லென நிற்குமோ மழை!

    புதினம் 01

    மழை தருமோ மேகம்

    அத்தியாயம் - 01

    ரவி பஸ்ஸிலிருந்து இறங்கி தன்னிடமிருந்த அழைப்பிதழின் அட்ரஸ் கார்டை அவனிடம் சவாரி கேட்டு வந்த ஆட்டோ டிரைவரிடம் காட்டி அந்த இடம் செல்வதற்கு எவ்வளவு ஆகுமென்று விசாரித்து ஆட்டோ டிரைவர் சொன்ன தொகையைக் கேட்டு மூச்சை இழுத்து விட்டான்.

    இந்த இடம் போறதுக்கு சுத்திகிட்டு போகணும் சாரே! ஏறி உக்காருங்க ஒரு பத்தே நிமிஷம்.

    ஏம்ப்பா, பத்து நிமிஷம் தூரத்துக்கு இவ்ளோ ரூபாயா!?

    நாக்கைக் கடித்து, கொஞ்சம் யோசித்து, பழக்க தோஷத்ல சொல்லிட்டேன் சாரே! வா. வந்து குந்து, டைம் ஆவுதுல.

    வேண்டாம்ம்பா. என் ஃப்ரண்ட வரச் சொல்லி அவனோடயே போயிடறேன்.

    நண்பனின் சகோதரி திருமண ரிசப்ஷன். பார்த்து ரொம்ப நாட்களாகி விட்ட வெளியூர் நண்பர்கள் எல்லாம் வருவதாகச் சொல்லி எல்லோரும் ஒன்றாக மேடையேறி போட்டோ எடுத்துக் கொள்வதாக ஒரு பிளான்.

    ரவி எங்கப்பா இருக்க!?

    நண்பனிடமிருந்து போன்.

    இதோ பஸ் ஸ்டாண்ட்ல தான் இருக்கேன். நம்ம ஆளுங்க யாராவது பைக் வச்சிருந்தா கொஞ்சம் அனுப்பி விடேன். ஆட்டோ ரொம்ப காசு கேக்கறாங்கடா.

    அடேய்., பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போசிட்லதான்டா நம்ம ரிசப்ஷன் ஹால். ரோடு கிராஸ் பண்ணி எதிர்ல இருக்கற சந்துல திரும்பினா நம்ம போர்டு இருக்கும் பாரு. நானும் வாசல்ல தான் இருக்கேன். இதுக்கு ஆட்டோவாம். சீக்கிரம் வந்து சேரு.

    எதிர்ல அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஆட்டோ டிரைவரிடம்,

    ஏம்ப்பா, இதோ ஆப்போசிட்ல இருக்கற இடத்துக்கு அவ்ளோ காசு கேக்கறியே? நியாயமா!?

    இன்னா சார், மூணு கிலோமீட்டர் சுத்திக் கிட்டுத் தான் அந்தப் பக்கத்துக்கே போக முடியும் தெரியுமா? இங்க எங்க கிராஸிங் இருக்கு காமி. உன்னால அந்தக் கம்பியைத் தாண்டிப் போக முடியுமா!? ஏறிக் குதிச்சுப் போ சார் ஆட்டோல்லாம் எகிறிக் குதிக்க முடியாது. ஒரு functionக்கு பந்தாவா ஆட்டோல போய் இறங்குவியா! நடந்து போய் அசிங்கமா நிப்பியா? உன்னோட இஷ்டம். வேணும்னா ஒரு அஞ்சு, பத்து குறைச்சுக் கொடு ஏறு. ஏறு சாரே!

    ஆட்டோல போய் பந்தாவா இறங்கணுமாம், நடந்து போனா அசிங்கமாம், எப்படியெல்லாம் கேன்வாஸ் பண்றாங்கப்பா!

    ஒரு வார்த்தையும் பதில் பேசாமல் ரோடைக் கிராஸ் பண்ற வழியைத் தேடினான் ரவி.

    அந்தப் பக்கத்துக்கு க்ராஸ் பண்றதுக்கான வழியே காணோம். ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர்ல வந்த ஒருவரைப் பிடித்துக் கேட்டான்.

    ரோட்டை எப்படிங்க க்ராஸ் பண்றது.

    இந்த சென்டர் மீடியனைத் தாண்டித்தான் குதிக்கணும்.

    டூவீலர்ல வர்றவங்க, நடந்து போறவங்க கிராஸ் பண்ணனும்னா எப்படிப் போக முடியும்!?

    "பஸ் ஸ்டாண்ட் தாண்டி ஒரு அஞ்சு

    Enjoying the preview?
    Page 1 of 1