Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavar Mel 44 Kaadhal Kavithaigal! Irantha Pinnar Pettikkul 2000 Kavithaigal!!
Kanavar Mel 44 Kaadhal Kavithaigal! Irantha Pinnar Pettikkul 2000 Kavithaigal!!
Kanavar Mel 44 Kaadhal Kavithaigal! Irantha Pinnar Pettikkul 2000 Kavithaigal!!
Ebook208 pages1 hour

Kanavar Mel 44 Kaadhal Kavithaigal! Irantha Pinnar Pettikkul 2000 Kavithaigal!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்ற பாரதியாரின் அறிவுரை இன்றுவரை பின்பற்றப்படவில்லை. ஆயினும் பல எழுத்தாளர்களின் பெயர்கள் மட்டும் அவ்வப்போது 'சுவையான சம்பவங்கள்' காரணமாக அடிபடுவதுண்டு. இவர்கள் இயற்றிய நூல்களின் பெயர்களையாவது தமிழர்கள் அறிந்திருப்பது அவசியம்.

கணவர் மீது கவிதைகளை இயற்றிய காரிகை, பெட்டிக்குள் 2000 கவிதைகளை வைத்துவிட்டு இறந்த பெண்மணி, சிறை சென்ற எழுத்தாளர்கள், பெர்னாட்ஷா போன்றோர் கொடுத்த நகைச்சுவை பதில்கள் முதலியன இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. படித்து ரசியுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 3, 2022
ISBN6580153509015
Kanavar Mel 44 Kaadhal Kavithaigal! Irantha Pinnar Pettikkul 2000 Kavithaigal!!

Read more from London Swaminathan

Related to Kanavar Mel 44 Kaadhal Kavithaigal! Irantha Pinnar Pettikkul 2000 Kavithaigal!!

Related ebooks

Reviews for Kanavar Mel 44 Kaadhal Kavithaigal! Irantha Pinnar Pettikkul 2000 Kavithaigal!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavar Mel 44 Kaadhal Kavithaigal! Irantha Pinnar Pettikkul 2000 Kavithaigal!! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர் பெட்டிக்குள் 2000 கவிதைகள்!!

    Kanavar Mel 44 Kaadhal Kavithaigal! Irantha Pinnar Pettikkul 2000 Kavithaigal!!

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.இரண்டாயிரம் கவிதைகளை பெட்டிக்குள் வைத்துவிட்டு இறந்த அமெரிக்க பெண்மணி

    2.புகழ்மிக்க நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ்

    3.சோகக் கதை மன்னன் தாமஸ் ஹார்டி

    4.ஆங்கில கட்டுரையாளர், கவிஞர் சார்ல்ஸ் லாம்

    5.பூதம் உருவாக்கிய பயங்கர எழுத்தாளி மேரி ஷெல்லி

    6.எம்மா புகழ் அம்மணி ஜேன் ஆஸ்டின்

    7.ஆங்கில நாவல்களின் தந்தை டேனியல் டீஃபோ

    8.ஸ்பானிய நாவல் ஆசிரியர் மிகேல் டெ செர்வான்டிஸ்

    9.ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி

    10.ஆயிரம் முறை தோல்வியுற்ற எடிசன்!

    11.ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்

    12.நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும்

    13.மர்மக் கதை மன்னன்; உலகில் முதல் துப்பறியும் கதை எழுதிய ‘போ’

    14.ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் எழுதிய சர் ஆர்தர் கானன் டாய்ல்

    15.பேக்கர் ஸ்ட்ரீட் (BAKER STREET) என்னும் போலி முகவரி

    16.துப்பறியும் கதை நிபுணரை அசத்திய டாக்ஸி டிரைவர்!

    17.ஆங்கில எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விஃப்ட்

    18.மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது!

    19.உதவும் குணம், உதார குணம் பற்றிய சுவையான சம்பவங்கள், பொன்மொழிகள்

    20.இசை ஞானி ப்ராஹ்ம்ஸ் செய்த குசும்பு!

    21.நட்பின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்!

    22.ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் பட்டப்பெயர் THE LADY சீமாட்டி!

    23.யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க! - மில்டன்

    24.டாக்டர் வேலையை விட்டு, கவிதை எழுத வந்தவர் கீட்ஸ்!

    25.மோபி டிக்’ நாவல் எழுதிய ஹெர்மன் மெல்வில்

    26.உலகத்தைக் கவர்ந்து இழுக்கும் ஷேக்ஸ்பியர்!

    27.ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்!

    28.பெண்ணின் மனம்: ரிக் வேதம், ஷேக்ஸ்பியர், தமிழ் பாட்டு ஒப்பீடு

    29.ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய்

    30.என் தந்தையின் மொழிபெயர்ப்பு:அன்னா கரீனினா

    31.இதாலிய கவிஞர் டான்டே; ரஷ்ய நாடக ஆசிரியர் செகோவ்

    32.ஆர். கே. நாராயணனுக்கு உதவிய புகழ்மிகு ஆங்கில நாவல் ஆசிரியர் கிரஹாம் க்ரீன்

    33.ஆங்கிலத்தில் ‘பெயில்’ ஆன புகழ்பெற்ற கதாசிரியர் ஆர்.கே நாராய(ண)ன்

    34.ஆஸ்கர் பரிசு வென்ற நாவல் ஆசிரியை டில்லிக்காரி ஆர் பி ஜாப்வாலா

    35.கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங்

    36.மூன்று சகோதரிகள் ; மூவரும் நாவல் ஆசிரியை; 38 வயதுக்குள் இறந்தார்கள்!

    37.நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

    38.அழகிய பெண்+ பெர்னார்ட் ஷா = அழகான, புத்திசாலிப் பிள்ளை!

    39.பி.பி.சி. தமிழோசையில் பெர்னார்ட் ஷா நாடகம்

    40.சோம ரசம் பற்றி நாவல் எழுதிய ஆங்கில ஆசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லி

    41.சாகசம், விசித்திரம், கற்பனை கலந்த ஆங்கில

    42.பிரம்மா பற்றி பாடிய அமெரிக்க கவிஞர் எமர்சன்

    43.பிளாட்டோவும் என்னைப் போலவே அறிஞர்!

    44.உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!

    45.அமெரிக்க கவிஞர் டி .எஸ். எலியட்

    46.காலமெனும் மணலிற் காலடி ‘Footprints on the Sands of Time’ -Longfellow

    47.லாங்பெலோ கவிதை – வாழ்விசைப்பா

    48.நகைச்சுவை நாடக ஆசிரியர் ஷெரிடன்

    49.கூன் முதுகுக் கவிஞர் அலெக்சாண்டர் போப்

    50.பிரெஞ்ச் எழுத்தாளர் வால்டே(ய)ர்

    51.வேலைக்காரியை கட்டி அணைத்த அகராதி ‘பிடித்த’ வெப்ஸ்டர்!

    52.பாங்குப் பணத்தைத் திருடி சிறை சென்ற புகழ்பெற்ற சிறுகதை ஆசிரியர் ஓ ஹென்றி

    53.அகராதி பிடித்த சாமுவேல் ஜான்சன்

    54.லண்டனில் பூனைக்கு ஒரு சிலை! ஒரு எழுத்தாளனின் சுவையான வரலாறு!

    முன்னுரை

    ஐரோப்பாவில் ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலிய, ஸ்பானிய, ஜெர்மானிய மொழிகளில் எழுதிப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் நூற்றுக் கணக்கில் உள்ளனர். இவர்களைத் தவிர அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் இருந்து எழுதியோரும் மிகப் பலர். அவர்களில் பலர் இந்து மத செல்வாக்கைக் காட்டும் கவிதைகள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்கள். இவர்களைப் பற்றி தமிழர்களுக்கு அதிகம் தெரியாது. உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் நாடகங்களைக்கூட தமிழர்கள் வரிக்கு வரி முழுதும் மொழி பெயர்க்கவில்லை; 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தழுவி நம்மவர்கள் எழுதிய நாடகங்கள் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன. அவைகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற அனைத்தும் தழுவல்களே. ‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்ற பாரதியாரின் அறிவுரை இன்றுவரை பின்பற்றப்படவில்லை. ஆயினும் பல எழுத்தாளர்களின் பெயர்கள் மட்டும் அவ்வப்போது 'சுவையான சம்பவங்கள்' காரணமாக அடிபடுவதுண்டு. இவர்கள் இயற்றிய நூல்களின் பெயர்களையாவது தமிழர்கள் அறிந்திருப்பது அவசியம். அந்த முயற்சியில் 40, 50 எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள், கட்டுரையாளர்கள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பினையும் சில சுவையான சம்பவங்களையும் பத்து ஆண்டுகளாகத் தொகுத்தேன். எனது ‘பிளாக்’குகளிலும் அவற்றைக் கட்டுரைகளாக வெளியிட்டேன். அதன் முதல் பகுதிதான் உங்கள் கைகளில் தவழ்கிறது. கணவர் மீது கவிதைகளை இயற்றிய காரிகை, பெட்டிக்குள் 2000 கவிதைகளை வைத்துவிட்டு இறந்த பெண்மணி, சிறை சென்ற எழுத்தாளர்கள், பெர்னாட் ஷா போன்றோர் கொடுத்த நகைச் சுவை பதில்கள் முதலியன இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. படித்து ரசியுங்கள். உங்கள் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதுங்கள்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    ஆகஸ்ட் 2022, லண்டன்

    1.இரண்டாயிரம் கவிதைகளை பெட்டிக்குள் வைத்துவிட்டு இறந்த அமெரிக்க பெண்மணி

    Post No. 9832

    Date uploaded in London –9 JULY 2021

    எமிலி டிக்கின்ஸன் (EMILY DICKINSON) என்ற அமெரிக்கப் பெண் கவிஞரின் வாழ்வு மிகவும் மர்மம் மிக்கது. அவர் உயிருடன் இருந்த போது ஏழு கவிதைகள் மட்டுமே வெளியாகின. அவர் இறந்துபோன பின்னர் அவருடைய பெட்டி ஒன்றை சகோதரி திறந்து பார்த்து பிரமித்துப் போனாள் . அதில் 2000 கவிதைகள் இருந்தன.அவர் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அவை முழுதும் அச்சாகின.இன்று அவர் புகழ் அமெரிக்கா முழுதும் பரவி இருக்கிறது. ஆங்கிலக் கவிதை ரசிக்கப்படும் எல்லா இடங்களிலும் எமிலியின் கீர்த்தி பரவிவிட்டது .

    எமிலி திருமணம் செய்துகொள்ளவே இல்லை. எப்போதும் வெள்ளை உடையையே அணிந்தார். பல ஆண்டுகளுக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கி எவரையும் சந்திக்க மறுத்தார். ஆயினும் கடிதங்களை எழுதிக் குவித்தார். அவற்றின் மூலம் எல்லோரையும் தொடர்பு கொண்டார். மரணத்தைத் தனது நண்பன் என்றும் , அதைச் சந்திக்கத் தயார் என்றும் எழுதினார். பிற்காலத்தில் இவர் புகழ் பரவியபோது இவரது வாழ்வைத் சித்தரித்தோர் அவரை அமைதியான எரிமலை (Silent Volcano) என்றும். பிரஷர் குக்கர் (Pressure Cooker) என்றும் வருணித்துள்ளனர்

    பிறந்த தேதி – டிசம்பர் 10, 1830

    இறந்த தேதி – மே 15, 1886

    வாழ்ந்த ஆண்டுகள் – 55

    எமிலியின் வாழ்க்கை விந்தையானது; புதிரானது. ஒரு சன்யாசினிபோல ஏன் வாழ்ந்தார் என்பது எவருக்கும் விளங்கவில்லை ; இதுவரை புரிபடவும் இல்லை. எல்லா குடும்பங்களிலும் நடை பெறும் பிரச்சனைகள்தான் இவரது சகோதரி, சகோதரர் வாழ்விலும் இருந்தன. அம்மா மிகவும் கண்டிப்பானவர். அப்பா, வேலை நிமித்தம் வெளியூர் சென்றாலும் குழந்தைகளின் படிப்பில் நல்ல கவனம் செலுத்தினார். நல்ல வசதியான குடும்பம்தான் .

    அமெரிக்காவின் மாசசூசட்ஸ் பகுதியில் ஆமர்ஸ்ட்(Amherst) என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய தந்தை வழக்கறிஞர்.. பள்ளிக் கல்வியை முடித்த எமிலி, ஒரே ஒரு ஆண்டு மட்டும் வீட்டை விட்டு வெளியே வாசித்தார். அது ஒரு பெண்கள் கல்லூரி ஹா ஸ்டல். வீட்டுக்குத் திரும்பியவுடன் அம்மாவுக்கு அடிக்கடி சுகவீனம் ஏற்பட்டதால் தங்கையுடன் சேர்ந்து குடும்பப் பொறுப்புகளை வகித்தார்.

    பகல் முழுதும் ரொட்டி சுடுதல், தையல் வேலை, தோட்ட வேலை, நாயை கூட்டிக்கொண்டு உலா வருதல்; இரவு முழுதும் எல்லோரும் உறங்கச் சென்ற பின்னர் படித்தல், கவிதை எழுதல் என்று தன வாழ்க்கையை வகுத்துக்கொண்டார். அன்பு, வாழ்க்கை, வலி, வேதனை, மரணம், இயற்கை என்று பல விஷயங்களை கவிதையில் வடித்தார்.

    கவிதையைக் காதலிக்கத் தொடங்கியதிலிருந்து மனிதர்களைச் சந்திக்க மறுத்தார். 40 வயது முதல் வீட்டை விட்டு வெளியேறியதே இல்லை. தோட்டத்தின் வேலிதான் அவருக்கு எல்லை. அதைத் தாண்டவுமில்லை. புது முகங்களை சந்தித்ததும் இல்லை. ஏன் இந்த மாறுதல்? இதுவரை எவருக்கும் புரிபடவில்லை. அவரும் எழுதி வைக்கவில்லை. அவர் எழுதிய ஏராளமான கடிதங்களையும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 2000 கவிதைகளையும் வைத்து ஊகிக்கத்தான் முடிகிறது. அப்போதும் புதிர் விடுபடவில்லை .

    அவர் வாழ்ந்தகாலத்தில் ஒரு சில கவிதைகளே வெளியிடப்பட்டன. அவைகளையும் சிலரே புரிந்து கொண்டனர். அவருடைய காலத்துக்குப் பொருந்தாத விஷ யங்கள்; பொருத்தமில்லாத சொற்கள் ; ; புதிய எண்ணங்கள்; ஆழ்ந்த பொருள் படைத்தவை. இவரைத் தவிர மற்ற கவிஞர்கள் வார்த்தைகளைக் கொண்டு இந்திரஜாலம் செய்த காலம் அது. சொல் வேட்டுவர்களுக்கு சுவை தரும் கவிதைகளை மற்றவர்கள் எழுதினர்.

    அவர் 55 வயதில் இறந்த பின்னர், அவனுடைய தங்கை ஒரு பெட்டியைத் திறந்துபார்த்தபோது சுமார் 2000 கவிதைகள் இருந்தன. 1955ம் ஆண்டு வாக்கில் அவை முழுதும் அச்சுக்கு வந்தன.

    இவ்வளவு கவிதைகளையும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடிதங்களையும் எழுதிவிட்டு சந்நியாசி போல வாழ்ந்ததால் இவரைப் பற்றி பல திரைப்படங்களும், புஸ்தகங்களும், டெலிவிஷன் தொடர்களும், வானொலி நிகழ்ச்சிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆமெர்ஸ்ட்(Amherst) என்னும் அமெரிக்க கிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தை அமெரிக்க அரசு தேசீய வரலாற்றுச் சின்னமாகஅறிவித்துள்ளது.

    எமிலி இறந்த பின்னர் வெளியான அவரது கவிதை நூல்கள் –

    1890 – POEMS BY EMILY DICKINSON

    1891 – POEMS SECOND SERIES

    1896 – POEMS THIRD SERIES

    1914 – THE SINGLE HOUND

    1955 – THE COMPLETE POEMS OF EMILY DICKINSON

    IN THREE VOLUMES

    1958 – THE LETTERS OF EMILY DICKINSON

    IN THREE VOLUMES

    1961 – FINAL HARVEST

    2.புகழ்மிக்க நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ்

    Post No. 9593

    Date uploaded in London – –11 May 2021

    CHARLES DICKENS

    1812 – 1870

    இங்கிலாந்தின் புகழ்மிக்க நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ். அவருடைய இளமைக் காலம் கசப்பானது. வறுமையில்

    Enjoying the preview?
    Page 1 of 1