Engum Hema Ethilum Hema
By Rajesh Kumar
()
About this ebook
திருமண கனவுகளோடு காத்திருக்கும் ஹேமா, தன் வேலை விஷயமாக ஒரு அரசியல்வாதியை காண செல்கிறாள்.அந்த கணத்திலிருந்து அவளின் வாழ்வின் போக்கே மாறுகிறது. மன்னிக்க முடியாத துரோகங்கள், குற்ற உணர்ச்சி, போலீஸ் விசாரணை, கொலை மிரட்டல்கள்,பழிவாங்கல் என பல கோணங்களில் கதை பயணிக்கிறது. படிப்பவர்களின் நெஞ்சம் அந்தந்த உணர்ச்சிகளில் பயணிக்கும்.
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...
Read more from Rajesh Kumar
Sorgam Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsOnly Vivek! Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Uravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Nadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5
Related to Engum Hema Ethilum Hema
Related ebooks
Cauvery Innum Kaainthu Vidavillai Rating: 0 out of 5 stars0 ratingsThanithiru Vizhithiru Rating: 0 out of 5 stars0 ratingsNenjellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsIrandil Ontru Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Vishame Vaa Rating: 3 out of 5 stars3/5Oru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsNil Kavani Kol Rating: 0 out of 5 stars0 ratingsMagizhampoo Thendral Rating: 5 out of 5 stars5/5Vanna Vanna Drogangal Rating: 0 out of 5 stars0 ratingsVaanaville Vaanamalla Rating: 0 out of 5 stars0 ratingsKarpizhantha Carbon Copygal Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Illatha Nanthavanam Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Kaadhal Rating: 5 out of 5 stars5/5Mella Varum Boogambam Rating: 0 out of 5 stars0 ratingsசொர்க்க வாசல்..! Rating: 0 out of 5 stars0 ratingsVilagi Nerungi Vilagi Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal-I Rating: 4 out of 5 stars4/5Aadatha Oonjalgal Rating: 0 out of 5 stars0 ratingsMiss India Missing Rating: 5 out of 5 stars5/5Kanmani Nillu Kaaranam Sollu Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Thorogam Rating: 0 out of 5 stars0 ratingsPuthithai... Oru Sathi Seivom Rating: 0 out of 5 stars0 ratingsMutham, Nizhal Mutham Rating: 5 out of 5 stars5/5Nilavum Varum Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsEverest Thottuvidum Uyaramthaan Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Naan Unnai… Rating: 5 out of 5 stars5/5Saathal Saamraajjiyam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Engum Hema Ethilum Hema
0 ratings0 reviews
Book preview
Engum Hema Ethilum Hema - Rajesh Kumar
https://www.pustaka.co.in
எங்கும் ஹேமா எதிலும் ஹேமா
Engum Hema Ethilum Hema
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
ஹேமா கலர் கலரான சந்தோஷங்களில் இருந்தாள்.
உடம்பின் சகல ரத்தக் குழாய்களிலும் பரவச ரத்தம் உற்சாகித்து ஓடியது. மருதாணி பூசிய விரல்களை ஒரு தாமரை மொக்காய் குவித்து எதிரே சுவற்றில் - ரோஜா மாலையின் நடுவே தெரிந்த அம்மாவின் போட்டோவை கண்கள் பனிக்கப் பார்த்தாள்.
அம்மா! உம் மகளுக்கு கல்யாணம் முடிவாயிடுச்சு... அடுத்த மாசம் இந்நேரம் நானும் அவரும் உம் போட்டோ முன்னாடி விழுவோம்...
என்னம்மா... போனவளோட போட்டோவையே வெறிச்சு பார்த்துட்டு நிக்கறே... சீக்கிரமா ரெடி பண்ணிட்டு கிளம்பம்மா... அந்த எம்.எல்.ஏ கார்மேகம் எங்கேயாச்சும் புறப்பட்டு போயிடப் போறான்...
ஹேமாவைப் பெற்ற தனுஷ்கோடி தோளில் போட்ட துண்டோடு உள்ளே வந்தார். ஐம்பது வயதின் ஆரம்பத்திலிருந்த தனுஷ்கோடி மனைவி சீதாவோட எதிர்பாராத சாவுக்குப்பின் வெகுவாய் தளர்ந்து போயிருந்தார். தலையின் பின்புறம் கணிசமாய் வழுக்கையை வாங்கியிருந்தார். நரைமீசையை கொத்தாய் வளர்த்து மேவாயை மழித்திருந்தார். விழுந்தவை போக எஞ்சியிருக்கிற பத்தொன்பது பற்களில் சிக்கனை சாப்பிட்டார். காமராஜ் இருந்தவரைக்கும் காங்கிரஸில் இருந்துவிட்டு, அவர் போனதும் கட்சியை விட்டுவிட்டு கதரை மட்டும் பிடித்துக்கொண்டார்.
அப்பா!
ஹேமா தன் பார்வையை போட்டோவினின்றும் பெயர்த்து தனுஷ்கோடியின் மேல் போட்டாள். கண்களில் சற்று முன்பு இருந்த சந்தோஷம் தற்காலிகமாய் காணாமல் போயிருந்தது.
என்னம்மா...!
அம்மா... இருந்தா இப்போ எத்தனை சந்தோஷப்படுவா...
சந்தோஷப்படுவாளா...? வயசை மறந்து இந்த தெரு பூராவும் ஓடி வீட்டுக்கு வீடு வாசப்படி ஏறி ஒருத்தர் விடாமே சொல்லிட்டு வருவாளேம்மா...! ஹேமா... உங்கம்மாக்காரி ரொம்பவும் துரதிர்ஷ்டம் பிடிச்சவம்மா... என் கூட வாழ்ந்த நாட்கள்ல பாதி நாள் வயித்து நோயாலேயே கஷ்டப்பட்டா... அவ சந்தோஷமா இருந்த நாட்களை இந்த பத்து விரல்ல எண்ணிடலாம்...
ஹேமாவின் விழியோரம் அவசர அவசரமாய் நீர் திரண்டு சத்தமில்லாமல் உருண்டு ‘ப்ளாச்’ என்று சிதறியது. அம்மாவோட ஏதோ சொல்ல வாயை அசைத்தாள்.
அதே விநாடி,
வாசலில் அந்த குரல் கேட்டது.
டேய்... தனுஷ்கோடி...!
அப்பா...! வக்கீல் மாமா வந்துட்டார்...
கண்களின் நீர்க்கசிவை சேலைத் தலைப்பால் ஒற்றிக் கொண்டே ஹேமா சொல்ல தனுஷ்கோடி வெளியே வந்தார்.
வாடா... அம்பலம்!
அம்பலம் என்று விளிக்கப்பட்ட பொன்னம்பலம் கறுப்புக்கவுனில் மக்கிப்போன கேஸ் கட்டுகளோடு நின்றிருந்தார். வாயில் தாம்பூலம் ரத்தமாய் சிவந்திருக்க சிரித்தார். தனுஷ்கோடியின் பால்யகால சிநேகிதங்களில் இவர் மட்டும் விடாப்பிடியாய் கூட வந்தார்.
என்னடா தனுஷ்கோடி... ஹேமாவுக்கு வரன் கூடிட்டது போலிருக்கே...?
உனக்கு யார்றா சொன்னா?
யார் சொல்லுவா...! கல்யாண புரோக்கர் உளறுவாயன் உமாபதிதான்... வீட்டுக்கு வந்து ரெண்டு டம்ளர் காப்பி சாப்பிட்டு, அரைக் கவுளி வெற்றிலையை மென்னுட்டு ஹேமாவோட விஷயத்தை சொல்லிட்டு போறான் மனசுக்கு ஜில்லுன்னு இருந்தது...
தனுஷ்கோடி புன்னகைத்தார். நானே கொஞ்ச நேரம் கழிச்சு உன்னோட வீட்டுக்கு வரலாமனு இருந்தேன்... அம்பலம்... அதுக்குள்ளே நீயே வந்துட்டே...!
மாப்பிள்ளை பையனுக்கு திருச்சியாமே?
ஆமா... பாய்லர் பேக்டரியில அஸிஸ்டண்ட் என்ஜினியரா இருக்கான். அடுத்த மாசம் பிரமோஷன் வருமாம்... பேமிலியும் குணமான பேமிலி... பையனுக்கு அப்பாவும் அம்மாவும் மரியாதை பட்டவங்களா தெரியறாங்க...
அப்புறமென்ன...முடிச்சுட வேண்டியதுதானே...?
முடிஞ்சமாதரிதான் அம்பலம்... வர்றமாசம் இருபத்தி மூணாந்தேதி முகூர்த்தத்தையும் பிக்ஸ் பண்ணியாச்சு... ஆனா முகூர்த்த தேதி வர்றதுக்குள்ளே இன்னொரு காரியத்தை நான் உடனடியா பண்ணியாகணும். அதுக்குத்தான் நான் இப்போ வெளியே புறப்பட்டுட்டிருக்கேன்...
பொன்னம்பலம் நிறைந்து போன தாம்பூலச் சாறு வாயோடு - வாசல் பக்கமாய் போய்-சாக்கடையல் ‘புளிச்’ என்று துப்பிவிட்டு மறுபடியும் தனுஷ் கோடியிடம் வந்தார்.
அப்படியென்னடா அது முக்கியமான காரியம்?
சொல்றேன்... அப்படி உட்ககாரு...
எதிரேயிருந்த நாற்காலியைக் காட்டிவிட்டு தானும் உட்கார்ந்தார் தனுஷ்கோடி. சமையலறை பக்கமாய்