Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

California Kaadhali!
California Kaadhali!
California Kaadhali!
Ebook107 pages36 minutes

California Kaadhali!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100404175
California Kaadhali!

Read more from Rajesh Kumar

Related to California Kaadhali!

Related ebooks

Related categories

Reviews for California Kaadhali!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    California Kaadhali! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கலிபோர்னியா காதலி!

    California Kaadhali!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    அமெரிக்கா கலிபோர்னியாவின் பத்து பெரிய நகரங்களில் ஒன்றான சான்பிரான்ஸிஸ்கோ ஆரஞ்சு வர்ணத்தோடும் பனிப்புகையோடும் ஒரு பூவைப் போல் விடிந்து கொண்டிருந்தது. பனிப்புகையில் உயரமான கட்டிடங்களின் உச்சிமுனைகள் மட்டும் தெரிய தொலைவில் தெரிந்த விமான நிலையத்தின் டவர் சிவப்பு விளக்கோடு சுழன்றது.

    நகரின் மையத்தில் இருந்த லேக்-பார்க் அவென்யூவில் இருந்த 401-வது அபார்ட்மெண்ட்டில் குளிர்காற்றோடு கலந்து தமிழ்க்குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

    டேய்... ஜாகீர்! இவ்வளவு காலையில் எந்திரிச்சு குளிச்சிட்டு அமர்க்களமாய் ட்ரஸ் பண்ணிட்டு எங்கடா கிளம்பிட்டே? கேள்வி கேட்ட செங்குட்டுவனை கண்ணாடி முன் நின்றிருந்த ஜாகீர் ஒரு புன்னகையோடு பார்த்தான். திரும்பிப் பார்க்காமல் கேட்டான்.

    இன்னிக்கு தேதி என்ன?

    பதினாலு

    இது என்ன மாசம்?

    பிப்ரவரி.

    பிப்ரவரி - 14ன்னு சொன்னதுமே உனக்கு என்ன ஞாபகம் வருது...?

    கம்பளியைப் போர்த்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்து இருந்த செங்குட்டுவன் சில விநாடிகள் யோசித்து விட்டு உதட்டைப் பிதுக்கி தலையாட்டினான்.

    ஒண்ணும் ஞாபகத்துக்கு வரலையே?

    ஜாகீர் முறைத்தான்.டேய் செங்கு...! நீ அண்ணா யூனிவர்ஸிடியில படிச்சு கோல்ட் மெடல் வாங்கினதும், இப்போ சான்பிரான்ஸிஸ்கோவுக்கு வந்து 'ஹெவன் கேட் சாஃப்ட்வேர் கம்பெனி'யில் டீம் லீடராய் வேலை பார்த்து மாசம் ரெண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கறதும் தண்டம்டா...! நீ உன்னோட ஜென்ரல் நாலேட்ஜை ரொம்பவும் இம்ப்ரூவ் பண்ணிக்கணும். இல்லேன்னா உன்னைக் கட்டிக்கப் போற பொண்ணு ரொம்பவும் கஷ்டப்படுவா...! ஏண்டா! உனக்கு உண்மையிலேயே பிப்ரவரி 14ன்னு சொன்னதும் எதுவுமே ஞாபகத்துக்கு வரலையா?

    வரலையே!

    அது 'காதலர்தினம்'டா... பாவி...!

    அப்படியா...?

    என்ன அப்படியா...? எந்தப் பொண்ணையாவது நீ நிமிர்ந்து பார்த்து இருந்தாத்தானே காதல் எப்படிப்பட்டதுன்னு தெரியும். எப்பப் பார்த்தாலும் லேப்-டாப்பைப் பார்த்துகிட்டும், தடித்தடியாய் புஸ்தகங்களைப் படிச்சுகிட்டும் இருந்தா எந்தப் பொண்ணு பக்கத்துல வருவா...?

    செங்குட்டுவன் சிரித்தான்.

    என்னடா சிரிப்பு...?

    எனக்கு இந்த காதல் என்கிற வார்த்தையில் ஒரு பர்சென்ட் கூட நம்பிக்கை கிடையாது. அது ஒரு மாய்மால வார்த்தை...!

    மாய்மால் வார்த்தையா...!

    ஆமாண்டா...! காதல் என்கிற வார்த்தைக்கு நீ நினைக்கிற மாதிரி எந்த ஒரு தெய்வீக உணர்வும் கிடையாது. உடம்புக்குள்ளே நடக்கிற எத்தனையோ ரசாயன மாற்றங்களில் இந்தக் காதலும் ஒண்ணு...! பதின்மூன்று வயது வரை தேமே'ன்னு சோம்பிக் கிடக்கும் ஹார்மோன்கள் அதுக்கப்புறம் வன்முறையில் ஈடுபட்டு கலாட்டா செய்யப்போக ஒரு டீன்ஏஜ் ஆண் மகனுக்கு எதிர்வீட்டு வேலைக்காரப் பெண் உலக அழகியாய் தெரிகிற கோமாளித்தனத்துக்குப் பெயர் தான் காதல். ஒரு பெண்ணுக்கும் அதே வயதில்தான் ஹார்மோன்களின் கலாட்டா ஆரம்பமாகி கண்ணாடி முன் நிறைய நேரம் நிற்க ஆரம்பித்து எதிர்வீட்டு குமாரைப் பார்த்ததும் ஒழுங்காய்ப் போட்டிருக்கிற தாவணியை சரிப்படுத்திக் கொள்கிற கிறுக்குத் தனத்துக்குப் பெயர்தான் காதல்.

    டேய்... செங்கு...! வேண்டாம்... இதுக்கு மேலே பேசாதே...!

    செங்குட்டுவன் சிரித்தான்.

    அப்படித்தாண்டா பேசுவேன்...! இன்னமும் காதலைப் பற்றி சொல்லட்டுமா...? காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்லுவாங்க. என்னைக் கேட்டா மூளையே இல்லைன்னு சொல்லுவேன்.

    செங்கு...! நான் கிளம்பறேன்... காதலோட அருமையைப் பற்றித் தெரியாமே நீ பேசிட்டு இருக்கே... உனக்கும் ஒரு நாள் காதல் வரும். அப்போ நீ பேசற வார்த்தைகளே வேறு விதமாய் இருக்கும். நான் இப்பவே கிளம்பிப் போனாத்தான் மெட்ரோ ட்ரெய்னை பிடிச்சு ஹட்டன் ஸ்ட்ரீட்ல இருக்கிற கோல்டன் கேட் போய்ச் சேர முடியும். லூசி எனக்காக வெயிட் பண்ணிட்டிருப்பா...

    செங்குட்டுவன் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டான்.

    லூசி எப்படியிருக்கா ஜாகீர்?

    உனக்குத்தான் காதல் பிடிக்காதே... எதுக்காக அவளைப் பத்தி கேட்கிறே...?

    எனக்கு காதல்தான் பிடிக்காது. பட் லூசியை எனக்குப் பிடிக்கும்...! வெரி இண்ட்டலிஜென்ட் கேர்ள்...

    நீ தான் அவளை மெச்சிக்கணும்.

    ஏண்டா...?

    அந்த இண்ட்டலிஜெண்ட் கேர்ள் என்ன பண்ணினா தெரியுமா?

    சொல்லு... என்ன பண்ணினா?

    சான் ஜோஸ் சாஃப்ட்வேர் கம்பெனியில் மாசம் ரெண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் ஒரு ராணி மாதிரி வேலை பார்த்துட்டு இருந்தா இல்லையா...?

    ஆமா...

    அந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டா.

    அட... ஏன்...?

    "கம்பெனியோட ஏ.வி.பி. இவளைப் பார்த்து ஜொள்ளு விடறானாம். தேவையில்லாமே தன்னோட அறைக்கு வரச்சொல்லிப் பேசறானாம். அவனைப் புத்திசாலித்தனமாய் அவாய்ட் பண்றதை விட்டுட்டு ரிசைன் பண்ணிட்டு வந்து நிக்கிறா...! ஒரு இண்ட்டலிஜெண்ட் கேர்ள் செய்யற வேலையா இது? இந்த சான்பிரான்சிஸ்கோவில் இருக்கிற எல்லா சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும் ஒரு ஜொள்ளு பார்ட்டி இருக்கத்தான் செய்வான். அதுக்கெல்லாம் பயந்தா

    Enjoying the preview?
    Page 1 of 1