Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abusi - Thobasi Part 2
Abusi - Thobasi Part 2
Abusi - Thobasi Part 2
Ebook212 pages1 hour

Abusi - Thobasi Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். ‘செல்லப்பா தமிழ் டயரி’ என்ற இணையதளத்தின்மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580120902546
Abusi - Thobasi Part 2

Read more from Raya Chellappa

Related authors

Related to Abusi - Thobasi Part 2

Related ebooks

Related categories

Reviews for Abusi - Thobasi Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abusi - Thobasi Part 2 - Raya Chellappa

    http://www.pustaka.co.in

    அபுசி - தொபசி (தொகுதி 2)

    Abusi - Thobasi (Part 2)

    Author:

    இராய செல்லப்பா

    Raya Chellappa

    For more books

    http://www.pustaka.co.in/home/author/raya-chellappa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இராய செல்லப்பா - ஓர் அறிமுகம்

    என்னுரை

    1. பர்மா -சில தகவல்கள்

    2. வினா விடை கஸ்தூரி

    3. அசோகமித்திரனுக்கு ஆகிவந்த பூங்கா

    4. பாரதியாரின் இறுதி நாள் -விவரம்

    5. சென்னையை யாருக்கும் தரமாட்டோம்

    6. திரு வி க வுக்கு திருநீறு கொடுத்த பெரியார்

    7. நாடு தொலைத்தவனின் பயணக்குறிப்புக்கள்

    8. ஆணுறைகள் 999

    9. அறுபத்து மூவர் திருவிழாவில் அமிர்தம் சூர்யா

    10. நம்பியாருக்கு 600, எம்ஜியாருக்கு 200

    11. ஆஸ்கார் வென்ற படமா? தோல்வி உறுதி!

    12. நக்மாவுக்கு வந்த சோதனை

    13. வைரமுத்துவின் ஆங்கிலக் கவிதைகள்

    14. கி.மு.5114 ஜனவரி 10 இல் பிறந்தவர்

    15. பாத்திமாவின் கண்ணீர்க் கதை

    16. பாலகுமாரனின் 'காலடித் தாமரை'

    17. சகாயம் முதல் சாயிபாபா வரை

    18. கல்கியைப் பற்றி அசோகமித்திரன்

    இராய செல்லப்பா - ஓர் அறிமுகம்

    தமிழிலும் கணினித்துறையிலும் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர், இராய செல்லப்பா. பாரதியாரைப் பற்றிய இவரது கவியரங்கக் கவிதைகள் 'எட்டயபுரத்து மீசைக்காரன்' என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. தில்லிக் கவிஞர்களின் கவிதைகளைத் 'தலைநகரில் தமிழ்க் குயில்கள்' என்ற தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள் 'தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்' என்ற பெயரில் வெளியாகியுள்ளன, 'அகநாழிகை' மூலம்.

    பன்மொழி அறிந்தவர். அமெரிக்கா, கனடா, மத்தியக் கிழக்கு நாடுகளில் பயணித்தவர். பல்துறை சார்ந்த கட்டுரைகள்/தகவல்களைத் தனது வலைப்பதிவுகள் மூலம் தருவதில் வாசகர்களிடையே கவனம் பெற்றவர்.

    ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்து வளப்படுத்திய வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட திரு செல்லப்பா, இராணிப்பேட்டையிலும், தேன்கனிக்கோட்டையிலும் தன் பள்ளிப் படிப்பை முடித்தவர். (கணிதத்தில்) பட்டப்படிப்பை மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியிலும், பட்டமேற்படிப்பை சேலம் அரசு கலைக்கல்லூரியிலும் பயின்றவர். இடையில் சிறிது காலம் பள்ளி ஆசிரியராகவும் இருந்தவர். (கும்பகோணம்) சிட்டி யூனியன் வங்கியில் அதிகாரியாகச் சேர்ந்து, வங்கிப்பணியைத் தொடங்கியவர், பின்னர் விலகி, அரசுடைமை வங்கியான கார்ப்பொரேஷன் வங்கியில் சேர்ந்து பணியாற்றி, துணைப் பொது மேலாளராக ஓய்வு பெற்றவர்.

    என்னுரை

    அபுசி-தொபசி என்ற பெயரில், எனது வலைத்தளமான செல்லப்பா தமிழ்டயரி யில் 2013 செப்டம்பர் முதல் 2014 செப்டம்பர் வரையான ஓராண்டில் எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் இரண்டு தொகுதிகளாக வெளியாகின்றன. இது இரண்டாவது தொகுதி.

    ஆரம்பித்த புதிதில், 'அபுசி -தொபசி என்ற இப்புதிய பகுதி வாரம் ஒருமுறை வெளியாகும் என்றும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்' என்றும் அறிவித்திருந்தேன். அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, வாரம் இருமுறையாக ஆக்கினேன். ஆனால், எல்லா வாரங்களும் எழுதினேன் என்று சொல்ல முடியாது. 52 வாரங்களில் 46 பதிவுகள் மட்டுமே எழுத முடிந்தது. குடும்பக் கடமைகளுக்கு முதலிடம் கொடுக்கவேண்டி வந்த போதெல்லாம் அபுசி-தொபசி தன்னைத் தாமதப்படுத்திக்கொண்டது. ஒரு நிலையில், கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று கவனம் மாறிவிட்டதால், அபுசி-தொபசி நின்றே போய்விட்டது.

    குமுதத்தில் அ-ர-சு கேள்வி பதில்கள் வருமே, அதுவும், தினமணியில் ஞாயிறுதோறும் கலாரசிகன் எழுதும் கட்டுரையுமே இத்தொடர் பதிவுகளுக்கான உந்துசக்தியாக இருந்தவை.

    அபுசி-தொபசி என்றால் சீன வார்த்தையோ என்று கருதியவர்கள் கூட, அடுத்த வாரமே புரிந்துகொண்டு விட்டார்கள்:

    என்றால் அரசியல் (அல்லது அனுபவம்);

    பு என்றால் புத்தகம்;

    சி என்றால் சினிமா;

    தொ என்றால் தொலைக்காட்சி;

    என்றால் பத்திரிகை;

    சி என்றால் சிரிப்பு (அல்லது சிந்தனை).

    அண்மையில் மேற்கொண்ட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது, மேற்சொன்ன பதிவுகளை மறு வாசிப்பு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சில நண்பர்களிடமும் தொகுப்பைப் படித்துப் பார்த்து கருத்து சொல்லுமாறு கேட்டேன். பயனுள்ள விஷயங்கள் இதில் உள்ளன என்றும் இணைய எழுத்தாளரின் பார்வையில் 2013-2014 க்கான இலக்கிய, வரலாற்று, தொலைக்காட்சிக்கான மினி-ஆவணமாக இதை எதிர்காலத்தில் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    காலம் சென்ற முரசொலி மாறன் அவர்கள் உருவாக்கிய சொல்தொடர் 'இன்றைய செய்தி, நாளைய வரலாறு' என்பது. இன்றைய செய்தி நாளைய வரலாறாகும்போது, நேற்றைய செய்தி, இன்றைய வரலாறு ஆகும்தானே!

    தமிழில் மின்-நூல்கள் குறைவு. புதிய படைப்புகளை மின்-நூல்களாக வெளியிடும் முயற்சிகள் இப்போது தொடங்கியுள்ளன. அச்சுப் புத்தகத்தை விட மின்புத்தகங்கள் விலை குறைவு என்பதாலும், இன்றைய இளைஞர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு இணையம் பழகிவிட்டதாலும், தமிழ்நாட்டுக்கு வெளியில் வாழும் தமிழர்கள் மின்புத்தகங்களையே விரும்பிப் படிக்கிறார்கள் என்பதாலும், இவ்விரு தொகுதிகளையும் மின்-நூலாக வெளியிடுவதே ஏற்புடையது என்று நண்பர்கள் கருதினார்கள்.

    மேலும், உலகின் பல நாடுகளில் இருந்தும் நேரத்தையும் உழைப்பையும் நல்கி, இணையத்தில் வலைப்பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும் இன்னும் பலருக்கும் இது ஓர் உற்சாகமூட்டும் வழிகாட்டியாக அமையும் என்றும் அதன்மூலம், தமிழில் மின்-நூல்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

    அவர்கள் தந்த ஊக்கத்தின் விளைவே இந்நூல்.

    கூகுள் ப்ளாக்ஸ்பாட்டில் வெளியாகும் செல்லப்பா தமிழ் டயரி என்னும் எனது வலைப்பதிவிற்கு இது (2017) ஐந்தாவது ஆண்டாகும். கதை, கட்டுரை, குறுநாவல், நாட்டு நடப்பு என்று பல்வேறு செய்திகளை அவ்வப்பொழுது எழுதுகிறேன். சுமார் ஆயிரம் வாசகர்கள் உலகின் பல நாடுகளில் இருந்தும் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள் என்பது எனக்கு நிறைவைத் தருகிறது. இணையத்தைப் பொறுத்தவரையில், இன்று வாசிப்பவர்கள் நாளையும் வந்து வாசிப்பார்கள் என்று கூறமுடியாது. ஆனால் யாராவது வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது மேலும் எழுதுவதற்கான உற்சாகத்தை அளிக்கிறது. நீங்களும் வாருங்களேன்! (http://ChellappaTamilDiary.blogspot.com)

    வாசகர்களின் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன். எனது மின்னஞ்சல்: chellappay@gmail.com

    அன்புடன்,

    இராய செல்லப்பா

    சென்னை - மே 2017

    1. பர்மா -சில தகவல்கள்

    அபுசி தொபசி 25 (23/1/2014)

    நேற்று (புதன்கிழமை-"22-01-2014) 37-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியின் இறுதிநாள். ஏற்கெனவே இரண்டுமுறை போயிருந்தேன். முப்பது புத்தகங்கள் வாங்கியிருந்தேன். வங்கி இருப்பில் சில ஆயிரங்கள் குறைந்தது தெரிந்ததும், 'ஐந்து அலமாரிகளும் நிரம்பி வழிகிறதே, இன்னும் வாங்கத்தான் வேண்டுமா' என்ற (மறைமுகக்) கோபம் இல்லாளிடமிருந்து வெளிப்பட்டது. நேரிடையாக அல்ல, தன் மகளுடன் தொலைபேசும்போது. இருந்தாலும் நமது வழக்கத்தை மாற்றிக்கொள்ள முடிகிறதா? 'இன்று தான் கடைசி. இன்று விட்டால் இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டுமே' என்று (மெல்லிய குரலில், ஆனால் வீட்டிலுள்ளவர்களுக்குக் கேட்கும்படியாக) நானும் ஒரு நண்பருடன் தொலைபேசினேன். கூடவே, அன்று எங்கள் குடியிருப்பில் திடீர் மரணம் எய்திவிட்ட ஒரு நண்பரைப் பற்றிக் குறிப்பிட்டு, மனித வாழ்க்கையின் நிலையாமையை விவாதித்தேன். 'எனவே இன்று கட்டாயம் புத்தகக் காட்சிக்குப் போய்வந்து விடுவது நல்லதல்லவா?' என்றேன். பேசி முடித்ததும், வியப்பூட்டும் விதமாக, ஒரு திடீர் காப்பியுடன் எனக்கு உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைத்துவிட்டது! 'போய் வாருங்களேன், உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்?' என்றார் துணைவி.

    இப்படி திடீர் அனுமதி கிடைத்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது என்னைப்போன்ற சராசரிக் கணவர்களுக்குத் தெரியாதா என்ன? 'நீ வந்தால் தான் போவேன், இல்லையென்றால் வேண்டாம். ஏற்கெனவே நிறைய வாங்கியாகிவிட்டதே' என்றேன் தயக்கத்துடன். 'நான் வரவில்லை' என்றார். எனக்குப் பகீரென்றது. 'ஏன், வந்தால் என்ன? நீயில்லாமல் நான் எங்கும் போவதில்லையே! கோபமா?' என்றேன். (எந்தச் சூழ்நிலையில் எம்மாதிரி பேசவேண்டும் என்பது சராசரிக் கணவர்களுக்குத் தெரியாத விஷயமா?) 'நான் இன்று இரவு கடலூர் போகிறேனே' என்றார் முகமெல்லாம் மலர. அவர் தந்தையின் ஊராயிற்றே! ஓ, அதுதான் காரணமா? மேற்கொண்டு ஏதும் பேசாமல் உடனே நடையைக் கட்டினேன், புத்தகப் பொருட்காட்சிக்கு.

    ***

    கடைசி தினம்-மாலைநேரம் என்பதால் புத்தகக் காண்காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரை போல் இங்கும் தகரப் பெட்டியில் 'மாங்காய் சுண்டல்', கைமுறுக்கு, வேர்க்கடலை ஏந்திக்கொண்டு வியாபாரிகள்-பெரும்பாலும் சிறுவர்களே- திரிந்தவண்ணம் இருந்தனர்.

    ஒரு சுண்டல் சிறுவன், இன்னொரு சுண்டல் சிறுவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான், 'இன்னும் பத்து ரூபாய் சேர்ந்துவிட்டால் போதும், 'முத்து காமிக்ஸ்' புத்தகம் வாங்குவேன்' என்று. (பளபளா தாளில் முத்து காமிக்ஸ் இப்போதெல்லாம் அறுபதுமுதல் நூறு ரூபாய்.) பீட்சா வாங்க நினைக்காமல் புத்தகம் வாங்க நினைத்தாயே, தம்பி, நீ வாழ்க! உனக்காத்தானடா இந்தப் புத்தகக் கண்காட்சி!

    ***

    புத்தகக் கடை வைத்திருந்தவர்கள் எல்லாரும் பதின்மூன்று நாள் உழைப்பில் களைத்துப் போயிருந்தனர். என் பதிப்பாளர், பொன்.வாசுதேவன், பாவம், இளைத்தும் போயிருந்தார், சரியான சாப்பாடும் தூக்கமும் இல்லாமல் போனதால். (அவருடைய கடையும் இளைத்துப் போயிருந்ததாகத் தோன்றியது. நிறைய விற்பனை ஆகியிருக்கக்கூடும்.)

    இன்று எல்லா வரிசைகளையும் ஒருதரம் பார்த்துவிடுவது என்ற முடிவோடு விரைந்து நடந்தேன். திடீரென்று கண்ணில் பட்டது, 'தமிழ்ப்பணி' அரங்கு. அங்கு அதிர்ஷ்டவசமாக எனக்குக் காட்சிதந்தார்,பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்அவர்கள். பட்டுப்போன்ற வெண் மீசை. உலகில் எங்கிருந்தாலும் அவரை எடுத்துக்காட்டும் 'டிரேட் மார்க்' அது. மூக்கின் இருபுறமும் சமமாக நீண்டு, அதன் முடிவில் அகன்று விரிந்து கீழ்நோக்கி நிலம்பார்க்கும் மீசை. எண்பதைத் தொடும் பிராயத்தினர். இருபத்தைந்து ஆண்டுகளாக எனக்குத் தெரிந்தவர். அருமை மனைவியைச் சில ஆண்டுகள்முன்பு இழந்துவிட்ட சோகம் இன்னும் கண்களில் தெரிகிறது.

    உலகக் கவிஞர்கள் மாநாடு எங்கு நடந்தாலும் தவறாமல் இவரைப் பார்க்கலாம். திரும்பி

    Enjoying the preview?
    Page 1 of 1