Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iman Kurainthathean Kanmani
Iman Kurainthathean Kanmani
Iman Kurainthathean Kanmani
Ebook157 pages56 minutes

Iman Kurainthathean Kanmani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இஸ்லாமியர்கள் எந்த உணவை சாப்பிடலாம் எந்த உணவை ஒதுக்கலாம்? வியாபார தர்மத்தை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? மாட்டுக்கறி உண்பது இழிவான விஷயமா? தூக்கம் வர இஸ்லாமில் பிரார்த்தனைகள் உள்ளனவா? முஸ்லிம்கள் பிறமதத்தினருக்கு பிரியாணி கொடுத்து மயக்குகிறார்களா? ஹஜ் பயணம் வியாபார மயம் ஆகிவிட்டதா?இஃதிகாஃப் பெண்களுக்கு உண்டா? இறை வணக்கத்தை கண்காட்சி ஆக்கலாமா?குடும்பத்துக்குள் கோள் சொல்லிகளை அனுமதிக்கலாமா? முஸ்லிம் ஆண்கள் தங்கநகை அணியலாமா?- போன்ற பல கேள்விகளுக்கு இத்தொகுப்பு அழகிய முறையில் பதில் தருகிறது. அனைத்து மதத்தினரும் படிக்கலாம்.

Languageதமிழ்
Release dateMay 18, 2024
ISBN6580111011150
Iman Kurainthathean Kanmani

Read more from Arnika Nasser

Related to Iman Kurainthathean Kanmani

Related ebooks

Related categories

Reviews for Iman Kurainthathean Kanmani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iman Kurainthathean Kanmani - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஈமான் குறைந்ததேன் கண்மணி

    (இருபது இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுப்பு)

    தொகுதி 21

    Iman Kurainthathean Kanmani

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    01. பூசணிக்காயும் வங்கி நண்பரும்

    02. எடை

    03. மாட்டுக்கறி

    04. தூக்கம்

    05. பாய் வீட்டு பிரியாணி

    06. ஈமான் குறைந்ததேன் கண்மணி

    07. நிறம் மாறும் பூக்கள்

    08. உம்ராவுக்கு எளிய வழி

    09. தங்க மோதிரம்

    10. முஸ்லிம் பூசாரி

    11. நஸீபு

    12. தவக்குல்

    13. கோள் கேளற்க சொல்லற்க

    14. பூமியைச் சுருட்டி கக்கத்தில் வை

    15. தக்வா

    16. ஹஜ் போய் வாங்கத்தா

    17. பிறர் பார்க்கிறார்கள்

    18. இரத்தப் பணம்

    19. வட்டிப்பணம்

    20. சதக்கா உண்டியல்

    முன்னுரை

    உலகத்தில் 6900 மதங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று இஸ்லாம். இஸ்லாத்தை இருநூறு கோடிமக்கள் பின்பற்றுகின்றனர். நான் ஒரு இந்திய தமிழ் முஸ்லிம். மதத்தால் இந்து- முஸ்லிம் சகோதரர்கள் சண்டை இட்டுக்கொள்வது எனக்கு ஒவ்வாத விஷயம். ஒவ்வொரு மதத்தினனும் பிறமத விழுமியங்களை கோட்பாடுகளை அறிந்து பிற மதத்தினனை கண்ணியப்படுத்தவேண்டும். மதம் சாராத ஆத்திகனாக இருந்த நான் தினமலர் அந்துமணியின் கட்டளைக்கிணங்கி திருக்குர்ஆனை (தமிழ்பதிப்பு) படிக்க ஆரம்பித்தேன்.

    கடந்த பதினாறு வருடங்களாக இஸ்லாமின் புனிதநூலை, நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை, விழுமியங்களை, கோட்பாடுகளை, வட்டார மொழி வழக்கை, உணவுபழக்க வழக்கத்தை, ஆடை உடுத்தும் நேர்த்தியை, மார்க்க கல்வியை, கல்வி-பணி-அதிகாரம் சார்ந்த பங்களிப்பை, இமாம்களின் வாழ்க்கை தரத்தை சிறு சிறு நீதிக்கதைகளாய் எழுதி வருகிறேன். நான் தெரிந்து கொண்டதை பிறருக்கு ஊட்டி விடுகிறேன்.

    இக்கதைகளுக்கான அழகிய முன் மாதிரி பைபிள் கதைகளும் திருக்குறள் கதைகளும் தான். நான் எழுதும் இஸ்லாமிய நீதிக்கதைகள் உலகிலேயே முதல்முயற்சி. இக்கதைகளின் முழுமுதல் நோக்கம் மதநல்லிணக்கமே. இதுவரை 500 இஸ்லாமிய நீதிக்கதைகள் எழுதியுள்ளேன். ஆயிரம் எழுதி முடிக்க இறைவன் உதவட்டும். இக்கதைகளில் கதைத்தன்மை அதிகம். மார்க்கக் கருத்துகள் இல்லாமல் சுவாரசியமான கதைகளாகவும் இவற்றை நீங்கள் வாசிக்கலாம். ஒவ்வொரு தொகுதியிலும் இருபது இஸ்லாமிய நீதிக்கதைகள் இருக்கும். வெளியிட்ட புஸ்தகாவுக்கு நன்றி.

    என்றென்றும் அன்புடன் ஆர்னிகா நாசர்

    கைபேசி எண் : 7358962913, 9442737404

    சமர்ப்பணம்

    என் மகன் ஆ.நிலாமகனுக்கு ஒன்றரை வருடம் பெண் தேடினோம். நீண்டநாள் தொடர்பின்மைக்கு பிறகு எனது ஒன்று விட்ட அண்ணன் ஜனாப். எம். சுல்தான் சையது இப்ராஹிம் போனில் பேசினார். அவரின் பரிந்துரைப்பால் டாக்டர். ஆர். பஹிமா ஆப்ரினை என் மகனுக்கு மனைவியாக்கினோம். ஓர் அற்புதமான மருமகளை எங்களுக்கு தந்த அண்ணனுக்கு நன்றி.

    இளங்கலை ரசாயனமும் இளங்கலை விவசாயமும் படித்த, 32 வருடங்கள் வங்கிப் பணி புரிந்த (யூனியன் பேங்க் ஆஃப் இண்டியாவில் வட்டார வளர்ச்சி அதிகாரி) தன்னை சுற்றி இருக்கும் அனைவருக்கும் அற்புதமான ஆலோசனைகள் வழங்கும் அண்ணன் ஜனாப் எம். சுல்தான் சையது இப்ராஹிம் அவர்களுக்கு ஈமான் குறைந்ததேன் கண்மணி தொகுதி 21ஐ பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

    என்றென்றும் அன்புடன் ஆர்னிகா நாசர்

    01. பூசணிக்காயும் வங்கி நண்பரும்

    காய்கறி அங்காடியிலிருந்து திரும்பினான் காதர்ஒலி. ஓட்டிவந்த ஸ்கூட்டி பெப்பை ஸ்டாண்டிட்டான்.

    இரு வயர்கூடைகள் நிறைய காய்கறிகள் வாங்கியிருந்தான்.

    கால் செருப்புகளை உதறினான்

    மனைவி அஸ்மத் ஒரு கோரைப்பாயை விரித்தாள். அதில் காதர் ஒலி தான் வாங்கி வந்த காய்கறிகளை கொட்டினாள்.

    பீர்க்கங்காய்

    வெள்ளை முள்ளங்கி

    சிவப்பு முள்ளங்கி

    உருளைக்கிழங்கு

    முட்டைக்கோஸ்

    காலிப்ளவர்

    தக்காளி

    பெரிய வெங்காயம்

    அகத்திக்கீரை

    புதினா கொத்தமல்லி கருவேப்பிலை

    கருணைக்கிழங்கு

    அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நூறு ரூபாய்க்கு வாங்கின காய்கறிகள் இப்ப ஆயிரம் ரூபாய்க்கு விக்குதுI சொன்னபடி ஒருபூசணிக்காயை உருட்டினான் காதர் ஒலி.

    ஈஸிசேரில் படுத்திருந்த காதர்ஒலியின் அம்மா ஷாஜாதி பீவி பூசணிக்காயை பார்த்து விட்டாள் அலி என்ன காரியம் பண்ணிருக்க? பூசணிக்கா எதுக்கு வாங்கி வந்த? பூசணிக்காயை முஸ்லிம்கள் சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என உனக்கு தெரியாதா?

    இதன்னம்மா புதுக்கதை? காலை டிபனா மல்லிகைப்பூ இட்லி அவிச்சு பூசணிக்கா சாம்பார் ஊத்தி ஊற வச்சு தின்ன சூப்பரா இருக்கும்I

    தடை செய்யப்பட்ட விஷயம் உனக்கு சூப்பரா?

    பூசணிக்காய் சாப்பிடக்கூடாதுன்னு உனக்கு யார் சொன்னது?

    எங்கத்தா சொல்லி எங்க குடும்பத்ல யாருமே பூசணிக்காய் சாப்படமாட்டோம்…

    பூசணிக்காய் வெள்ளரிக் குடும்பத்தை சார்ந்தது. தாவரவியலின் படி பூசணி பழம் என்றாலும் பொது வெளியில் காய்கறியாகதான் கருதப்படுகிறது. பூசணியின் தாயகம் வடஅமெரிக்க. பூசணி ‘குக்கர்பிட்ட குடும்பத்தை சேரந்தது. பூசணி நான்கு வகைப்படும். குக்கர்விட்டா மேக்ஸிமா, குக்கர்ரவிட்டா மிக்ஸ்டா, குக்கர்விட்டா மிஸ்சாட்டா மற்றும் குக்கர்விட்டா பெப்போ. தமிழ்நாட்டில் இருபது வகையான பூசணிக்காய்கள் உள்ளன. மஞ்சள் பூசணியை பறங்கிக்காய் என்றும் அரசாணிக்காய் என்றும் அழைப்பர். கேரளாவில் வெள்ளைநிற பூசணிகள் விளையும். வைபம்பட்டி பூசணிகள் அளவில் பெரியவை. 18-30கிலோ எடை கொண்டவை. சிவப்பு பூசணி கரும்பச்சை பூசணி, வெளிர் பச்சை பூசணி, தலையணை பூசணி, சிவகாசி பூசணி, சாம்பல் பூசணி என பலவகைகள் உண்டு. பூசணிக்காய்ல வைட்டமின் ஏ,சி.ஈ, லியூடின், சாந்தன், கரோட்டின் சத்துகள் உள்ளன. அதிகம் பூசணி சாப்பிட்டால் வாயு தொல்லை வரும் என்பதே சிறு மைனஸ் பாயின்ட்...

    இந்த வீட்டில் நிறைய தடை செய்யப்பட்ட விஷயங்கள் நடக்கின்றன. நம் அல்லாஹ் தான காப்பாற்ற வேண்டும்I

    அப்படி என்ன தடை செய்யப்பட்ட விஷயங்களை கண்டுவிட்டாய் அம்மா?

    வீட்டில் பூசணிக்காய் சமைச்சு சாப்டுறீங்க. உனக்கு ஐஸிஐஸிஐ வங்கில வேலை பாக்ற நண்பன் ஒருவன் இருக்கிறான். மாற்றுமத சகோதரர்கள் உனக்கு வணக்கம் கூறினால் பதிலுக்கு வண்க்கம் கூறுகிறாய். உன் தம்பியை சார்ட்டட் அக்கவுண்ட் படிக்க வைக்கிறாய். தெய்வங்கள் படம் உள்ள டீக்கடையில் தினம் தினம் டீக்குடிக்கிறாய் உன் மாமனார் மாற்றுமத சகோதரர் கட்டிய திருமண மண்டபத்தில் மேனேஜரக பணிபுரிகிறார் கவிதைபுத்தகங்கள் காசு கொடுத்து வாங்குகிறாய் கவிதையும் கிறுக்குகிறாய்I

    புகார்பட்டியல் அவ்வளவுதானா, இன்னும் இருக்கா?

    என் கண்களுக்கு பட்டது அவ்வளவுதான்I

    உன் சநதேகங்களை நான் தீர்த்து வைத்தால் சரியாக இருக்காது. நம்பள்ளி இமாமை நேரில் வரச் சொல்கிறேன் அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்போம்I

    கைபேசி எடுத்தான் காதர் ஒலி

    அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

    ஹஜ்ரதI எங்க வீட்டுக்கு ஒரு பத்துநிமிஷம் வந்து போக முடியுமா? மார்க்கம் சம்பந்தமான சில சந்தேகங்களை உங்களிடம் கேடு நிவர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது?

    அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அத்தர் நறுமணத்துடன் இமாம் வீட்டுக்குள் பிரவேசித்தார். வயது 35. ஆலிம் படிப்புடன் முதுகலை சரித்திரமும் அரசியல் விஞ்ஞானமும படித்தவர்

    அழகிய முகமன்கள் பரிமாற்றம்

    இருக்கையில் அமர்ந்தார். என்ன பிரச்சனை?

    ஷாஜாதி பீவி புகார்களை அடுக்கினாள்.

    சிரித்தார் இமாம். முதலில் பூசணிக்காய் பிரச்சனையை பார்ப்போம். பிறமத சகோதரர்கள் சாம்பல்நிற பூசணியை திருஷ்டி கழிக்க பயன்படுத்துவதால் பூசணியை தின்னக் கூடாது என சில முஸ்லிம் சகோதரர்கள் சொல்லக்கூடும். மாற்றுமத சகோதரர்கள் திருஷ்டிகழிக்க சுரைக்காயையும் பீர்க்கங்காயையும் பயன்படுத்தினால் நாம் அவற்றையும் தின்னக்ககூடாதா? உலகம் முழுக்க காய்கறிகளின் பயன்பாடு சமைத்து தின்னத்தான் யாராவது ஒரு பிரிவினர் ஒரு குறிபிட்ட காய்கறியை மாற்று உபயோகபடுத்தினால் அது அவர்கள் விருப்பம். ஆகவே பூசணிக்காயை முஸ்லிம் மக்கள் சாப்பிடலாம் சாப்பிடலாம் சாப்பிடலாம்… எனக்கு பூசணி அல்வா மிகவும் பிடிக்கும்...

    நன்றி இமாம்I

    அரைக்கண் மூடித் திறந்தாள் ஷாஜாதிபீவி.

    "இது உங்களின் இரண்டாவது புகார் உங்கள் மகனுக்கு ஒரு வங்கி நண்பர் இருப்பது உங்கள் கண்களை உறுத்துகிறது. இந்தியாவில் 33தனியார் வங்கிகளும் 12அரசுடமை வங்கிகளும் 34கூட்டுறவு வங்கிகளும் உள்ளன. மொத்தம் வங்கிகளில் இரண்டரை லட்சத்துக்கு மேல் ஒட்டுமொத்த இந்தியாவில் வங்கிகளில் 15 இலட்சம் வங்கி ஊழியர்கள் பணிபுரிக்கின்றனர். வங்கி ஊழியர்களாக இஸ்லாமியர்களும் பணிபுரிகின்றனர். வங்கிகளில் வட்டிவாங்கி வட்டி கொடுக்கும் பணி நடப்பதால் வங்கி பணியை ஹராம் என்கிறீர்கள். வங்கி ஊழியர் நண்பராக

    Enjoying the preview?
    Page 1 of 1