Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நின்னையே ரதியென்று...
நின்னையே ரதியென்று...
நின்னையே ரதியென்று...
Ebook136 pages48 minutes

நின்னையே ரதியென்று...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

 

சேலம்!

பேரழகியான சம்யுக்தா முதுகலை கணிதம் படித்துக் கொண்டிருந்தாள்! இன்று தனது கடைசி தேர்வை எழுதிவிட்டு பெரும் மகிழ்வுடன் தன் பங்களாவிற்குள் நுழைந்தாள்!

அன்று என்றுமில்லாத அதிசயமாய்... தொழிற்சாலையிலிருந்து அண்ணன் அஸ்வினும், தந்தை சங்கரனும் நேரத்திலேயே வீடு வந்திருந்தனர்!

"டாடி..." என்ற கொஞ்சலோடு ஓடிப்போய் அவர் அருகில் அமர்ந்து... சிறு குழந்தையாய்... அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள், சம்யுக்தா!

"இன்னும் சின்னக் குழந்தைன்னு நினைப்பு டாடி, இவளுக்கு!" என்று அஸ்வின் சொல்லவும்...

"என் டாடிக்கு நான் சின்னக் குழந்தைதான்!" என்று சங்கரனின் முகம் பற்றிக் கொஞ்சினாள்!

தாய் மாதவி கொண்டு வந்த காபியை பருகி முடித்தாள்!

"சம்யுக்தாம்மா... உனக்கு படிப்பு முடிந்தாகி விட்டது! அப்புறம் என்னடா செய்யப் போகிறே...?"

"என்ன செய்யறதுன்னே தெரியலை, டாடி!"

"நீ எதுவும் செய்ய வேண்டாம்! டாடி... இவளுக்கொரு திருமணத்தை செய்து வையுங்க! கட்டிக்கொண்டு போய் குடும்பம் நடத்தட்டும்!" என அஸ்வின் கூறினான்!

"டாடி... எனக்கு திருமணம் நடந்தால்தான்... அவனுக்கொரு திருமணத்தை செய்வீங்கன்னு தெரிந்து கொண்டு... என்னை எவன் தலையிலாவது கட்டி வையுங்கன்னு உங்களை அவசரப்படுத்தறான்! என்மேல் உள்ள அக்கறையில் இந்த அண்ணன் இதைச் சொல்லவில்லை! சுயநலக்காரன்! தன் திருமணத்துக்காகதான் உங்களை உசுப்பிவிடறான்!" என்று சம்யுக்தா கூறவும்...

"ஏய்... ச்சீ... வாயை மூடு! படிப்பு முடிந்து விட்டது... இனி திருமணம் செய்து அனுப்பினால் காலா காலத்தில் கணவன், குழந்தைன்னு நீ வாழுவேங்கிற அக்கறையில் சொன்னால்... அதைப் புரிந்துகொள்ளாத முட்டாளா இருக்கிறீயே!" என அஸ்வின் சீறவும்...

"அண்ணன் சொல்வதில் தப்பில்லைடா! உன்மேல் உள்ள அக்கறையில்தான் சொல்கிறான்! சரி... நீ சொல்லு... உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும்...?" என சங்கரன் கேட்கவும்...

"நிறைய படிச்சவராக மாப்பிள்ளை இருக்கணும்!"

"அப்புறம்...?"

"நல்ல நிறத்தோட இருக்கணும்!"

"அப்புறம்...?"

"நல்ல உயரமும், உறுதியான உடற்கட்டோடும் இருக்கணும்!"

"அப்புறம்...?"

"நம்மைவிட பெரிய சிட்டியில் அந்த மாப்பிள்ளை இருக்கணும்!"

"சரி! அப்புறம்...?"

"பல தொழில்களை திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறவரா இருக்கணும்!"

"அப்புறம்...?"

"வீட்டுக்கு ஒரே பிள்ளையா இருக்கணும்!"

"மாமியார், மாமனார் இல்லாமல் இருந்தால் ரொம்ப பெட்டர்!"

"அடிப்பாவி... ஆனாலும் உனக்கு இவ்வளவு திமிர்த்தனம் ஆகாது! நம்ம அஸ்வினைக் கட்டிக்கப்போற பொண்ணு உன்னைப்போல நினைத்தால் நாங்க இரண்டு பேரும் எங்கே போறது?" என மாதவி இடைப் புகவும்...

"டாடி... பாருங்க இந்த மம்மியை!" என்று சம்யுக்தா சிணுங்கினாள்!

"நீ சும்மா இரு மாதவி! அவளுக்கு தோன்றுவதைச் சொல்லட்டும்!" என சங்கரன் கூறவும்...

"நம்மைவிட பல மடங்கு பணக்கார இடமா அந்த மாப்பிள்ளை இருக்கணும்! அரண்மனை போல அவர் வீடு இருக்கணும்! விதவிதமா அங்கே கார் இருக்கணும்! மொத்தத்துல அந்த மாப்பிள்ளை நல்ல பேரழகோடவும்... நம்மைவிட பல மடங்கு அந்தஸ்திலும் உயர்ந்து இருக்கணும்ப்பா!" என்று கண்கள் பளபளக்க சம்யுக்தா கூறி முடிக்கவும்...

மாதவியும், அஸ்வினும் ஒருவரை ஒருவர் அர்த்த புஷ்டியுடன் பார்த்துக் கொண்டனர்!

"உன் அழகுக்கும், அறிவுக்கும், நிறத்துக்கும், லட்சணத்துக்கும் நீ நினைக்கறதைவிட பெட்டரான மாப்பிள்ளையை நான் கொண்டு வந்து நிறுத்தறேன்டா, செல்லம்!" என சங்கரன் கொஞ்சியது அஸ்வினுக்கும், மாதவிக்கும் பிடிக்கவில்லை!

Languageதமிழ்
Release dateFeb 28, 2024
ISBN9798224851980
நின்னையே ரதியென்று...

Read more from R.Maheswari

Related to நின்னையே ரதியென்று...

Related ebooks

Reviews for நின்னையே ரதியென்று...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நின்னையே ரதியென்று... - R.Maheswari

    1

    தோப்பூர்!

    பெயருக்கு ஏற்றாற்போல மாந்தோட்டங்களும்... திராட்சைத் தோட்டங்களும்... தென்னை தோப்புகளும்... பாக்குத் தோப்புகளும் நிறைந்த வளமான பூமி அது!

    நெல் வயல்களும், கரும்பு தோட்டங்களும் என பச்சைப் பசேலென காட்சியளிக்கும்! போதாதற்கு ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம் போன்ற பூந்தோட்டங்களும் ஏக்கர் ஏக்கராய் விரிந்திருக்கும்! அந்த ஊரில் வீசும் தென்றல் காற்றில் மலர்களின் நறுமணமும் கலந்து தவழ்ந்து செல்லும்!

    சேலத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் சேர்வராயன் மலையின் அடிவாரத்தில் உள்ளது, தோப்பூர் கிராமம்!

    சக்திவேலுக்கு இருபத்தைந்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது!

    அதில் ஐந்து ஏக்கரில் மாந்தோட்டமும்... திராட்சைத் தோட்டம் ஐந்து ஏக்கரிலும்... பாக்கு தோப்பு ஐந்து ஏக்கரும்... இரண்டு ஏக்கரில் குண்டு மல்லிகையும், இரண்டு ஏக்கரில் ரோஜாவும்... மூன்று ஏக்கரில் நெல்லும்... மீதமுள்ள மூன்று ஏக்கரில் கரும்பும் பயிரிட்டு இருக்கிறான், சக்திவேல்!

    சக்திவேல் பனிரெண்டாம் வகுப்புவரை சேலம் ‘சக்தி கைலாஷ் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தான்! ஹாஸ்டலில் தங்கிதான் படித்தான்!

    பனிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாம் மதிப்பெண் பெற்றான்! தர்மலிங்கம் மகனை மருத்துவம், அல்லது பொறியியல் படிக்க வைக்க விரும்பினார்!

    ஆனால், சக்திவேல் பி.எஸ்ஸி. அக்ரி படிக்க விரும்பவும்... மகனின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை, தர்மலிங்கமும், லட்சுமி அம்மாளும்! விவசாய படிப்பு முடித்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கலெக்டராக வேண்டும் என்பது அவனின் முதல் குறிக்கோள்! அதில் முயற்சி செய்து முடியாமல் போனால் தந்தையோடு சேர்ந்து தன் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய விரும்பினான்!

    ‘கோவை வேளாண் கல்லூரி’யில் சேர்ந்து படித்து முடித்தான்!

    பின் சேலத்தில் உள்ள ‘விவேகானந்த ஐ.ஏ.எஸ். அகாடமி’யில் சேர்ந்தான்! முதல் முயற்சியில் தேர்வு பெற முடியவில்லை! ஆனாலும் சோர்ந்து போகாமல் இரண்டாவதாய் முயற்சி செய்து கொண்டிருந்தபோது... தர்மலிங்கம் திடீரென மாரடைப்பு வந்து இறந்து போனார்!

    தந்தையின் இறப்புக்கு பின் அம்முயற்சியைக் கைவிட்டான்! கிராமம் வந்து முழுநேர விவசாயி ஆனான்! அவனின் அருகாமையால் லட்சுமி அம்மாள் கணவனின் இறப்பிலிருந்து கொஞ்ச கொஞ்சமாய் மீண்டது கண்டு அவனும் தெளிவானான்!

    தனது நிலத்தில் இயற்கை வேளாண் முறையைப் புகுத்தி விவசாயம் செய்ய அமோக விளைச்சல்! நல்ல வருமானம் ஈட்டினான்!

    அவன் விவசாயம் செய்த பாங்கைக் கண்ட... அவ்வூர் விவசாயிகளும் தங்கள் விளைநிலத்தில் இயற்கை முறையிலேயே விவசாயம் செய்தனர்!

    அவனைத் தங்கள் வழிகாட்டியாய் ஏற்றுக் கொண்டனர்!

    இயற்கை உரம் தயாரிப்பு, பூச்சிக் கொல்லி தயாரிப்பு என்று அவன் வகுப்புகள் நடத்தவும்... அடுத்த அடுத்த ஊர் விவசாய மக்களும் அங்கு வந்து பயின்று... இயற்கை விவசாயத்திற்கு மாறினர்!

    செயற்கை உரம், பூச்சுக் கொல்லியை விற்பனை செய்து அதிகம் வருமானம் ஈட்டிய கடைக்காரர்கள் எல்லோரும் அவனை எதிரியாய் பார்த்தனர்!

    சக்திவேல்... நல்ல உழைப்பாளி!

    சக்திவேல்... மிகுதியான சேவை உள்ளம் கொண்டவன்!

    வயலில் வேலை செய்ய நிறைய தொழிலாளிகள் இருந்தாலும்... வெள்ளை வேட்டி, சட்டையைக் களைந்துவிட்டு... ஒரு கலர் சட்டையையும், லுங்கியையும் அணிந்து... விவசாய தொழிலாளிகளோடு சேர்ந்து... சக்திவேலும் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு... வயலுக்கு நீர் பாய்ச்சுவான்! களைகளை கொத்துவான்! வரப்புகளை சீரமைப்பான்!

    அன்று காலையே எழுந்து குளித்துவிட்டு... வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து... புல்லட்டை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குக் கிளம்பினான், சக்திவேல்!

    திராட்சைத் தோட்டத்திற்கு வந்தான்!

    கருப்பு திராட்சை கொத்துக் கொத்தாய் காய்த்து கொடிகளில் தொங்கிக் கொண்டிருந்தது! பழுத்த திராட்சைக் கொத்துகளை ஆட்கள் அறுவடை செய்து கொண்டிருந்தனர்!

    சிமெண்ட் சீட் போட்ட பெரிய கொட்டகையில் பழங்களைக் கூடைக் கூடையாய் கொண்டு வந்து கொட்டினர்!

    அத் திராட்சைப் பழங்களில் பெட்டிகளில் பத்து கூலித் தொழிலாளிகள் அடுக்கி பார்சல் செய்து கொண்டிருந்தனர்!

    காலை பத்து மணிக்கு வேலை முடிய... அவனுக்கு சொந்தமான லாரியில் ஏற்றி சேலம் பழ மண்டிக்கு அனுப்பினான்!

    அன்றைய கூலியைத் தொழிலாளர்களுக்கு வழங்கிவிட்டு புல்லட்டைக் கிளப்பிக்கொண்டு வீடு வந்தான்!

    நல்ல பசி! சக்திவேல் முகம் கழுவிக்கொண்டு வந்தமர்ந்தான்! லட்சுமி மகனுக்கு இட்லியும், நாட்டுக்கோழி குருமாவும் பரிமாற வேக வேகமாய் உண்ண புரை ஏறியது! லட்சுமி பதறிப் போனார்! மகனின் தலையில் தட்டி... நெஞ்சை நீவிவிட்டு... தண்ணீரை எடுத்து சிறு குழந்தைக்கு புகட்டுவது போல புகட்டினார்!

    தண்ணீர் பருகியதும் புரையேற்றம் நின்றது!

    நெஞ்சை நீவிவிட்ட தாயின் கையைப் பற்றி ஆசையாசையாய் முத்தமிட்டான்! அக்கையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்!

    மெதுவாக சாப்பிடக் கூடாதா, சக்திப்பா? என லட்சுமி கேட்கவும்...

    ரொம்ப பசிம்மா! என்றான், சக்திவேல்.

    எட்டுமணி வாக்கில் புல்லட்டை எடுத்துக்கொண்டு வந்து சாப்பிட்டு விட்டுப் போயிருக்கலாமே, சக்திப்பா!

    வேலை சீக்கிரம் முடிந்து விடும்ன்னு நினைத்தேம்மா! அது பத்து மணி வரை நீடித்து விட்டது! தொழிலாளிங்க பசியோடு வேலை செய்யும்போது... நான் சுயநலத்தோடு வீடு வந்து சாப்பிட்டுவிட்டு திரும்ப போக என் மனசு இடம் தரவில்லைம்மா! என்ற மகனை பெருமையாய் பார்த்த லட்சுமி...

    என் தங்கம்... நீ நிற்க நேரமில்லாமல் கடுமையா உழைக்கிறேப்பா! உடம்பு கெட்டுவிடப் போகுதுப்பா! உழைப்போடு உன் உடம்பையும் நீ பார்த்துக்கணும், சக்திப்பா!

    நான் எங்கேம்மா கடுமையா உழைக்கறேன்? வேலையாட்களை மேற்பார்வை செய்வது மட்டும்தான் என் வேலை!

    பொய் சொல்லாதே, சக்தி! நீ வயலில் இறங்கி வேலையாட்களோடு வேலை செய்வதை நான் அங்கு வரும்போது பார்த்திருகிறேன்! எனவும்...

    சக தொழிலாளிகளோடு முதலாளி இறங்கி வேலை செய்வது அவங்களை மகிழ்விக்கவும்... சரியான முறையில் வேலை வாங்கவும்தாம்மா! அவர்கள் வேலை செய்யாமல் நம்மை ஏமாற்ற முடியாதும்மா! என்று சக்திவேல் கூறவும்... அவன் பேச்சால் லட்சுமியின் நெஞ்சம் பெருமையில் விம்மியது! மீண்டும் வயலுக்கு கிளம்பியவனிடம்...

    சக்தி... சக்திப்பா... என தயங்கவும்...

    என்னம்மா...? சொல்லுங்கம்மா...?

    சின்ன சேலத்தில் இருந்து உன் மாமாவும், அத்தையும் வந்தாங்கப்பா!

    அதான் இரவே சொன்னீங்களே!

    அவர்கள் வந்ததைச் சொன்னேன்! ஆனால், அவர்கள் வந்த விஷயத்தைச் சொல்லலே, சக்திப்பா?

    சரி... என்ன விஷயம்... சொல்லுங்க...?

    வித்யாவுக்கும், உனக்கும் போய் ஜாதகம் பார்த்தாராம்! பத்துக்கு பத்து பொருத்தமும் பொருந்தி இருக்காம்! என மகிழ்வோடு கூறவும்...

    அவள் வயசு என்னம்மா?

    பதினேழு முடிந்து பதினெட்டு ஆரம்பம்!

    என் வயசு என்ன?

    இருபத்தெட்டு!

    இரண்டு பேருக்கும் முதலில் வயசு பொருந்துதாம்மா...? சொல்லுங்க...? அவளுக்கும், எனக்கும் பத்து வயது வித்தியாசம்!

    உங்கப்பாவுக்கும், எனக்கும் பதினைந்து வயது வித்தியாசம்! நான் அவரைக் கட்டி இன்பமாக வாழலையா...? உன்னைப் பெற்று சீராட்டி வளர்க்கலையா...?

    "அது அந்த காலம்மா! இந்த காலத்துல நான்கு, ஐந்து வயசு வித்தியாசமுள்ள பெண்ணைதான் ஒரு ஆண் மணக்கிறான்! அடுத்ததா, அவள் இப்போதுதான் பனிரெண்டாம் வகுப்பை முடித்திருக்கிறாள்! அவளை உன் தம்பிகிட்ட சொல்லி மேலே படிக்க வைக்க சொல்லுங்க! படிக்கட்டும்! பெண்களுக்கு இந்தக் காலத்தில் சொத்து, சுகம் கொடுக்கலேன்னாலும் கட்டாயம் படிப்பைக் கொடுக்க வேண்டும்! அப்போதுதான் அவளால் பின்னாடி சுயமரியாதையோடு வாழ முடியும்! அவள் படித்து முடித்ததும், என்னைவிட

    Enjoying the preview?
    Page 1 of 1