Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Computing Journal - December 2023
Tamil Computing Journal - December 2023
Tamil Computing Journal - December 2023
Ebook1,079 pages6 hours

Tamil Computing Journal - December 2023

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் கம்ப்யூட்டிங் ஜர்னல் என்பது கல்வி தொழில்நுட்பங்கள் குறித்த கள ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இந்த பணியின் விளைவாகும். இது தமிழ் மக்களின் மொழி மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதாகும். பயனர்களுக்கிடையேயும் நிரலர்களுக்கிடேயேயும் தமிழுக்கானத் தனிப்பயனாக்கப்பட்ட கல்வித் தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வையும் தேவையையும் ஏற்படுத்துவதை இந்த இதழ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கல்வியியல் மாநாட்டுக் கஓவை என்னும் தமிழ்க் கணினி ஆராய்ச்சி இதழ் தமிழ் கம்ப்யூட்டிங் ஜர்னல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டு இதழ்களில், நான்காம் பன்னாட்டுக் கல்வியியல் மாநாட்டின் ஆய்வுக் கட்டுரையின் தொகுப்பாகும்.

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580154410623
Tamil Computing Journal - December 2023

Read more from Tamilunltd

Related to Tamil Computing Journal - December 2023

Related ebooks

Reviews for Tamil Computing Journal - December 2023

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Computing Journal - December 2023 - Tamilunltd

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நான்காவது பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு - டிசம்பர் 2023

    Tamil Computing Journal - December 2023

    Author:

    தமிழ் அநிதம்

    Tamilunltd

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilunltd

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    தமிழ் இலக்கணம் கற்பிக்க உதவும் மீம்ஸ்கள்

    இணையம் சாரா மொழி கற்பிக்கும் கருவிகள்

    கணினியில் பயன்படுத்தப்படும் பேச்சுசார் தொழில்நுட்பம்

    தமிழ் இலக்கியம் கற்க உதவும் குறுஞ்செயலிகள்

    Computing Tools for Tamil Language teaching and learning

    தமிழ்மொழி வளர்ச்சிக்கு மின் நூலகங்களின் பங்கு

    புகைப்படத்திலுள்ள எழுத்துக்களை வரிவடிவாக்கம் (IAMGE TO TAMIL TEXT) செய்வதில் கணினியின் பங்கு

    கணினி வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு

    இணைய நூலகங்கள்

    காப்புரிமைச் சிக்கல்கள்

    Development of Education in India from Ancient Period to Technological Learning

    A Study on Role of digital technology in education

    The Digital Age Revolution: Embracing E-Libraries for Knowledge Access

    A Review On Different Computer Approaches For Speech Recognition System

    தமிழ்ச் சொற்பொருளுறவும் மின் தமிழ்ச் சொற்றொகுதிகளும்

    நாட்டார் இலக்கியங்களின் எதிர்காலம் - கணினிப் பெட்டகம்

    நரம்பியல் நெட்வொர்க்கின் வளர்ச்சியும் அதனை வரிசைப்படுத்தலில் அவசியம்

    கணினியில் தமிழை கையாளுவதில் கூகுள் உள்ளீட்டுக் கருவியின் பங்கு

    கூகுள் உள்ளீட்டு கருவி

    தமிழ் மின்னூல் பதிவிறக்க தளங்கள்

    பிழைதிருத்தி

    A STUDY ON STUDENTS’ PERCEPTION OF TECHNOLOGY IN EDUCATION

    வலைத்தள காட்சி ஊடகத்தில்(Youtube) முறைசாரா வழி தமிழ் கற்பித்தல் முயற்சிகளும் அதன் தாக்கங்களும்

    தமிழில் தோன்றியுள்ள புதிய சிற்றிலக்கியம் கதைச் சொல்லிகள்

    காப்புரிமைப் பாதுகாப்பின் இன்றைய தேவை

    பேச்சு அங்கீகார அமைப்புகளும் அதன் வகைகளும்

    An Insight on Copyright Issues

    Effective ICT Tools for Tamil Research

    ICT-TOOLS FOR EFFECTIVE TAMIL LANGUAGE TEACHING & DEVELOPMENT

    இந்தியாவில் படைப்பாற்றலைப் பாதுகாப்பதற்கானப் பதிப்புரிமை

    வலைப்பதிவின் தேவையும் அமைப்பும்

    தமிழ் மின்னூலகங்கள்

    இணைய நூலகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பங்கு

    செயற்கை நுண்ணறிவின் வழி தமிழ்க்கற்பித்தல்

    இணைய தமிழ் நூலகங்கள்

    தமிழில் பயன்படுத்தப்படும் பேச்சு எழுத்து மாற்றிகள்

    Potential Software Needs For The Future Of Tamil Language Development

    இணையத்தில் தமிழின் வளர்ச்சி

    Handwritten Tamil Character Recognition using Convolutional Neural Network

    Internet Library

    கட்டற்ற வளங்களுக்கான காப்புரிமங்கள்

    தமிழ்மொழிக் கற்பித்தலுக்குக் கணினியின் தேவையும், பயன்பாடும்

    இணையதளத்தில் தமிழ் வலைப்பூக்களின் வளர்ச்சி

    கல்வி வளங்கள் நுகர்வும் காப்புரிமையின் தேவையும்

    Artificial Intelligence based Text to Speech generators for Tamil Language

    கோவிட் 19 சூழலில் தமிழ்ப் பேராசிரியர்களின் இணையவழிக் கற்றல் - கற்பித்தல் அனுபவங்கள்

    Digital Library

    Computer Aided-tools and its demand for Tamil Translation Services in government and private sector

    மின்நூலகம்

    A STUDY ON CUSTOMER SATISFACTION TOWARDS ATM SERVICES OFFERED IN TAMIL LANGUAGE WITH SPECIAL REFERENCE TO SBI BANK IN SIVAKASI

    கணினிசார் தொழில்நுட்பத்தில் தமிழ்

    Digitalization aids to recognize Tamil Palm leaf and Rock inspiration Manuscript

    Encryption using Tamil Language

    தமிழ் மொழி வளர்ச்சியில் இன்றைய வலையொளித்தடங்களின் பங்கு

    இணைய நூலகமும் தமிழ் வளர்ச்சியும்

    Tamil Computing – Techniques, Benefits and Challenges

    TAMIL LANGUAGE IN ONLINE SHOPPING – A STUDY ON SATISFACTION OF ONLINE SHOPPERS IN SIVAKASI

    கூகுள் மொழிபெயா்ப்பு பயன்பாடுகளும் இடா்பாடுகளும்

    யாப்பு இலக்கணம் கற்றல் - கற்பித்தலிலும், மரபுக்கவிதை உருவாக்குவதிலும் - யாப்பு உறுப்புக்களைக் கண்டறிவதிலும் - அவலோகிதம் மென்பொருள்

    எதிர்காலத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையான மென்பொருள்கள்

    தமிழ்வளர்ச்சியில் தமிழுக்கான மென்பொருளின் பங்கு தமிழ்வளர்ச்சியில் தமிழுக்கான மென்பொருளின் பங்கு

    DIGITAL LIBRARIES: CONTENTS & SERVICES

    Artificial Intelligence tools for Tamil Language

    தமிழ் வளர்ச்சியும் உலகத் தமிழ் இணைய இதழ்களும்

    எழுத்துருவும் மென்பொருளும்

    Tamil Renaissance and Emergence of Printing technology - Pioneer of Technical Education in Tamil

    தமிழ் கற்றல் கற்பித்தலில் கணினித் தொழில்நுட்பத்தின் பங்கு

    தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் இணையத்தின் பங்கு

    Technology in Education - A Boom or Bane

    Ezhil: A Tamil Programming Language

    செயற்கை நுண்ணறிவு மூலம் சங்க இலக்கியத்தில் உள்ள அறிவியல் சிந்தனைகள் கற்பித்தல்

    Marker Based Augmented Reality For Learning Tamil

    தமிழும் அறிவியலும்

    கணினியில் பயன்படுத்தப்படும் எழுத்துசார் தொழில்நுட்பம்

    மாணவர் கற்பித்தலுக்கான நுட்பவியல்கள்

    தமிழ் மருத்துவமும் செயற்கை நுண்ணறிவும்

    காப்புரிமைச் சிக்கல்கள்

    AN OVERVIEW ABOUT DIGITAL LIBRARY

    முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,

    தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.

    மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

    சைவபானு சத்திரிய கல்லூரி, தமிழ்த்துறை, அருப்புக்கோட்டை

    தமிழ்த்துறை, பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்

    கணித்தமிழ்ப் பேரவை, (தமிழ்த்துறை & கணினிப் பயன்பாட்டுத்துறை),

    ஜி.டி.என். கலைக்கல்லூரி (தன்னாட்சி), திண்டுக்கல்

    ஸ்ரீஎஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி(தன்னாட்சி), சாத்தூர்

    ஓயிஸ்கா, தமிழ்நாடு கிளை, இந்தியா

    தமிழ் அநிதம், அமெரிக்கா

    தமிழ்த் திறவூற்று மென்பொருள் குடும்பம், அமெரிக்கா

    பாரதி தமிழ்ச் சங்கம், பகரைன்

    நாகூர் தமிழ்ச்சங்கம், நாகூர்

    முத்துக்கமலம் மின்னிதழ்

    வல்லமை மின்னிதழ்

    தமிழ் அநிதம் அறக்கட்டளை, இந்தியா

    மாநாட்டுத் தலைவர்கள்

    மருத்துவர் வெங்கடேஷ், க. நாடார் M.D.

    பேராசிரியர்,

    சிக்கலான இரத்தநாடி செருகுகுழாய் சிகிச்சைக் குழு (அமெரிக்கா). இயக்குநர், CARE மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்(அமெரிக்கா).

    தமிழ் அநிதம் (அமெரிக்கா).

    தமிழ் அநிதம் அறநிறுவனம் (இந்தியா).

    திருமதி சுகந்தி நாடார்

    நிறுவனர்,தமிழ்அநிதம் (அமெரிக்கா).

    நிறுவனர், தமிழ் அநிதம் அற நிறுவனம் (இந்தியா).

    வழக்கறிஞர். பா.கு.சந்தோஷ் குமார்,

    செயலர், ஓயிஸ்கா சர்வதேச நிறுவனம்,

    தமிழ்நாடு கிளை.

    மாநாட்டு ஆலோசகர்கள்

    பேரா. அ. காமாட்சி, (ப.நி)

    மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப்பல்கலைக்கழகம், சிதம்பரம்.

    மேனாள் ஆய்வுத்தகைஞர், இராபர்ட் கால்டுவெல் ஆய்விருக்கை, தஞ்சாவூர்.

    தமிழ் அநிதம் (செயலர்)

    வழக்கறிஞர் த.சரவணன், தலைவர், தேசிய & சர்வ தேசிய வர்த்தக இசைவுத்தீர்வு குழுமம் (CNICA),

    திரு.எம்.ஜி.கே.ஹுசைன் மாலிம், நிறுவனர், நாகூர் தமிழ்ச் சங்கம்/பாரதி தமிழ்ச் சங்கம், பஃகரைன்.

    வழக்கறிஞர் சங்கீதா ராஜ்குமார் செயற்குழு உறுப்பினர், ஓயிஸ்கா கிளை(தமிழ்நாடு)

    மகளிர் அணித் தலைவர், சென்னை. பாரதி தமிழ்ச்சங்கம். பஃகரைன்

    பேராசிரியர் ஜெ.ஆர்.ஜெயசந்திரன், மேனாள் இயக்குனர், பதிப்பகத்துறை நெறியாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். நாகூர் தமிழ்ச்சங்கம்.

    முனைவர் T. மாலாநேரு, இணைப்பேராசிரியர்,

    அறிவியல் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.

    முனைவர் வ.தனலெட்சுமி, இணைப்பேராசிரியர், சுப்பிரமணியபாரதி தமிழ்மொழி மற்றும் இலக்கியப்பள்ளி, புதுவைப்பல்கலைக்கழகம், புதுவை

    முனைவர் இ.இனியநேரு, துணைத் தலைமை இயக்குநர், தேசியத் தகவலியல் மையம், விஜயவாடா.

    திரு.சொ.ஆனந்தன் B.E., உரிமையாளர், வள்ளி மென்பொருள் நிறுவனம், சென்னை.

    திரு. டேவிட் இராசாமணி, கணினி வல்லுநர், நிறுவனர், உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம், NJ (USA).

    முனைவர் கா.உமாராஜ், உதவிப்பேராசிரியர், மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

    திரு. பன்னீர்செல்வம் இராசமாணிக்கம், தரவு ஆய்வளர், தமிழ் ஆர்வலர், PA (USA).

    திரு. பா.பிரசன்னவெங்கடேஷ், மென்பொருள் பொறியாளர், NY (USA). திருமதி மது மயில்வாகனன் கணினிப் பொறியாளர், சிட்னி (ஆஸ்திரேலியா).

    முனைவர் அண்ணாகண்ணன், வல்லமை, மின்னிதழ் ஆசிரியர்.

    திரு. தேனி மு.சுப்பிரமணி, முத்துக்கமலம், மின்னிதழ் ஆசிரியர்.

    டாக்டர்.ஆர்.ரவீந்திரநாத் நேரு, மேனாள் பேராசிரியர், சுற்றுச்சூழலியல் துறை, ஷிபா பல்கலைக்கழகம், லிபியா

    மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்

    தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி) சிவகாசி

    டாக்டர் இரா.சுதாபெரியதாய், முதல்வர்.

    முனைவர் பா. பொன்னி, இணைப்பேராசிரியர்,முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறைத்தலைவர்.

    முனைவர் ர.விஜயப்ரியா, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை.

    செல்வி மா.ஜெயவீரலட்சுமி, முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு.

    செல்வி க.சத்தியகலா, முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு.

    மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

    முனைவர் ப.மங்கையற்கரசி, இணைப்பேராசிரியர், மொழியியல் துறைத்தலைவர்.

    முனைவர் மா.இரமேஷ்குமார், உதவிப்பேராசிரியர், மொழியியல்துறை.

    செல்வி ஆர்.கலையரசி, முனைவர் பட்ட ஆய்வாளர்.

    செல்வி எஸ்.மகாலக்ஷ்மி, முனைவர் பட்ட ஆய்வாளர்.

    சைவபானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை

    முனைவர் கெ.செல்லத்தாய், முதல்வர்.

    முனைவர் இரா.தனசுபா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறைத்தலைவர்.

    திருமதி.சி.விஜயலெட்சுமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை.

    செல்வி ம.ஜெய ஸ்ரீ, இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ்.

    செல்வன் மு.சதீஷ்குமார், இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ்.

    பார்வதீஸ் கலைஅறிவியல் கல்லூரி, திண்டுக்கல்

    முனைவர் சோ.சுகுமார், முதல்வர்

    திருமதி.இ.ஹேமமாலா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறைத்தலைவர்

    செல்வி.மு.மணிமேகலை, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை

    செல்வி அ.ஜனனி, இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ்

    செல்வன் பா.யமுனாதரன், இளங்கலை இரண்டாம் ஆண்டு தமிழ்

    ஜி.டி.என்.கலைக்கல்லூரி (தன்னாட்சி) திண்டுக்கல்

    முனைவர் பெ.பாலகுருசாமி, முதல்வர்.

    முனைவர் ச.மாசிலா தேவி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை

    திருமதி.ப. ஆர்த்தி, துறைத்தலைவர், கணினிப் பயன்பாட்டுத்துறை

    செல்வன் ஆர்.அஸ்பர் அலி, இளங்கலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டுத்துறை

    செல்வன்.எஸ்.சாதிக்பாட்ஷா, இளங்கலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டுத்துறை

    ஸ்ரீஎஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி(தன்னாட்சி), சாத்தூர்

    டாக்டர். எஸ். கணேஷ்ராம், முதல்வர்.

    முனைவர் கி. நாகேந்திரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை.

    திருமதி. அ.முருகலட்சுமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை.

    செல்வி. மு.கீர்த்தனா, முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு.

    செல்வன் ச.அருண்குமார், இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு.

    மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழு

    தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை ஆசிரியர்கள்

    முனைவர் மா.பத்மபிரியா, உதவிப்பேராசிரியர்

    முனைவர் ச.தனலட்சுமி, உதவிப்பேராசிரியர்

    முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர்

    முனைவர் வி.அன்னபாக்கியம், உதவிப்பேராசிரியர்

    முனைவர் ப.மீனாட்சி, உதவிப்பேராசிரியர்

    முனைவர் இரா.செண்பகவள்ளி, உதவிப்பேராசிரியர்

    முனைவர் நா.கவிதா, உதவிப்பேராசிரியர்

    முனைவர் வீ.முத்துலட்சுமி, உதவிப்பேராசிரியர்

    திருமதி மா.முத்துச்செல்வி, உதவிப்பேராசிரியர்

    திருமதி பெ.ஆனந்தி, உதவிப்பேராசிரியர்

    திருமதி மு.பூங்கோதை, உதவிப்பேராசிரியர்

    முனைவர் சி.தேவி, உதவிப்பேராசிரியர்

    திருமதி ச.மீனாட்சி, உதவிப்பேராசிரியர்

    முனைவர் கு.செல்வஈஸ்வரி, உதவிப்பேராசிரியர்

    திருமதி இர.கிருஷ்ணவேணி, உதவிப்பேராசிரியர்

    திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியர்

    செல்வி சா.ஜெயசத்யா, உதவிப்பேராசிரியர்

    திருமதி மா.முத்து காயத்ரி, உதவிப்பேராசிரியர்

    Message from Conference Chair

    Dr. Venkatesh.K Nadar M.D

    Tamilunltd

    10, Maybelle Court

    Mechanicsburg PA 17050

    USA 17050

    The 2024 international educational conference has to be marked as a significant milestone in Tamil computing. Since 2020, Tamilunltd has collaborated with esteemed educational institutions in Tamil Nadu, four international organizations, two online institutions, and one cultural organization to celebrate educational technology advancements in Tamil Nadu.

    With an aim to create self-sufficient sustainable entrepreneurs for Tamil Nadu. Approximately seventy papers will be presented at this conference, of which 90 percent are technical papers from the educational community. These research articles show the change in the attitude. Or Tamil educators

    Educators are no longer consumers of technology; they are actively involving themselves in academic research for Tamil computing.

    The Tamil department has teamed up with the computer department in order to provide better service. They are observing the trend in technology with educational technological needs in mind.

    I am honored to be part of such an innovative effort. I am proud to say our research journal will be published four times a year from 2024.For the year 2024 the conference proceedings are the second one. The revised name for the journal is Tamil computing journal. Online format is ISSN 06002767 and Print format is ISSN 2767-0597

    Once again, this enormous success is possible because of the team effort

    I thank all paper presenters, event organizers, and coordinators for their dedication to the Tamil language

    Many thanks

    Best,

    VKN

    வாழ்த்துரை

    தமிழ் மொழி வளர்ச்சியில் கணினிசார் தொழில்நுட்பமும் கல்வி வளங்களுக்கான காப்புரிமையும் என்கிற காலச் சூழலுக்கு ஏற்ப நடைபெறும் நான்காவது பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு இன்றைய கல்வி உலகிற்குப் பொருத்தமான, தேவையான ஒன்றாக அமைகிறது. பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றனவற்றிலிருந்து பேராசிரியப் பெருமக்களும் ஆய்வு மாணவர்களும் அறிஞர் பெருமக்களும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியதாகும். மேலும் ஆய்வுச்சுருக்கத்தையும், விரிவான ஆய்வுக் கட்டுரைகளையும் நூலாக்கம் செய்து வெளியிடுவதும் பாராட்டுக்குரியதாகும்.

    இன்றைய வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தில் பல்வேறு துறைகளும் வளர்ச்சி நிலையை அடைந்துள்ளதைப் போன்றே கல்வித்துறையும் அதனைச்சார்ந்த மொழியும் மிக உயரிய வளர்ச்சியை எய்தியுள்ளமையை அறிய முடிகிறது. மேலும் கணினித் தொழில்நுட்பத்தின் வாயிலாகப் பல்வேறு வித வளர்ச்சி நிலையினையும் பரவலாக்கத்தையும் தமிழ்மொழி பெற்று வளம்பெற்ற உயர்தனிச் செம்மொழியாகத் தமிழ் திகழ்றதெனில் அது சற்றும் மிகையாகாது.

    கட்டுரையாளர்கள் ஒவ்வொருவரும் கணினித் தொழில்நுட்பத்தின் வழியாகத் தமிழ்மொழியை வளர்த்தெடுப்பது குறித்து ஆராய்ந்து, எதிர்காலத் தேவையாக என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்வது பற்றி நுட்பமாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தியிருப்பது காலத்தின் தேவையை நிறைவு செய்வதாக அமைகிறது.

    அமெரிக்காவில் அமைந்துள்ள தமிழ் அனிதம், தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் மற்றும் மின்னிதழ்கள் இணைந்து நடத்தும் இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் புதியபாதையினை வகுத்துத்தரும் என்பது திண்ணம்.

    கருத்தரங்க அமைப்பாளர்களையும், கட்டுரை வழங்கிப் புதியச் சிந்தனைகளைப் பதிவு செய்திட்ட கட்டுரையாளர்களையும் வாழ்த்தி, இக்கருத்தரங்க நூலைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அனுப்பி வைப்பதில் பெருமிதமும் பேரானந்தமும் அடைகிறேன்;

    வாழ்த்துக்களுடன்

    (சி.தியாகராஜன்)

    உடல் மட்டுமே மூலதனம் என்ற கற்காலக் கலாசாரம் மாறி கணினி உலகில் காலெடுத்து வைத்துள்ளான் மனிதன். விண்ணையும் மண்ணையும் வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டான். இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில் நுட்பங்களில் நம்மை நல்வழிப்படுத்துவதற்குக் கணினியும் ஒரு கருதுகோலாக உள்ளது. அந்த வகையில் தமிழ்மொழி கணினியுடன் இணைந்து உலகளவில் உலாவர வேண்டும் என்ற நோக்கோடு தமிழ் அநிதம் (அமெரிக்கா) பல்வேறு நிறுவனங்களுடன் (கல்லூரி) இணைந்து பன்னாட்டுக் கல்வியியல் மாநாட்டினை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் நடத்தி வருகின்றது. தமிழ் மொழியின் வித்து விருட்சமாக வளர வேண்டும் என்ற நோக்கத்துடனும், கணினியுடன் இணைந்து தமிழ் மொழி உச்சத்தைத் தொட வேண்டும் என்ற குறிக்கோளுடனும,; தமிழை உலகறியச் செய்ய வேண்டும் என்ற உந்துதலோடும் இந்த நான்காவது மாநாட்டை நடத்த இருக்கும் தமிழ் அநிதம் (அமெரிக்கா) மற்றும் அதனோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற நிறுவனங்களையும் வாழ்த்துகின்றேன். மேன்மேலும் பல பன்னாட்டுக் கல்வியியல் மாநாட்டினைச் சீரும் சிறப்புமாக நடத்த வேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.

    சைவபானுசத்திரியகல்லூரி,

    அருப்புக்கோட்டை

    ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி) திண்டுக்கல்

    முனைவர் பெ.பாலகுருசாமி

    முதல்வர்

    வாழ்த்துரை

    தமிழ்மொழி மிக நீண்ட வரலாற்றையும் சிறந்த இலக்கண, இலக்கிய வளங்களையும் தன்னகத்தைக் கொண்டது. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டு ஓங்கி உயர்ந்து வளர்ந்து வரும் செம்மொழி. கணினி நுட்பங்களைத் தமிழில் கற்கும் வாய்ப்பு இன்று உருவாகியுள்ளது. தமிழ்மொழியின் வளர்ச்சியில் கணினித்; தொழில் நுட்பத்தின் பயன்பாட்டினை அனைவரும் அறிந்துகொண்டு தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டுமென்ற உயரpaநோக்கோடு தமிழ் அநிதம் (அமெரிக்கா) பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து பன்னாட்டு கல்வியியல் மாநாட்டினை நான்காவது முறையாக தமிழ் வளர்ச்சியில் கணினிசார் தொழில்நுட்பமும் கல்வி வளங்களுக்கான காப்Gரிமையும் என்னும் பொருண்மையில் 19.12.203 மற்றும் 20.12.2023 ஆகிய நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தப்பணியில் பல்வேறு நிறுவனங்களையும் கல்வி நிலையங்களையும் ஒன்றிணைத்து அவர்கள் மேற்கொண்டு வரும் தமிழ்ப்பணி மிகவும் பாரட்டத்தக்கது. இம்மாநாடானது தமிழார்வளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள், கணினிj; தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் கணினி சார் தொழில் நுட்பம் பற்றியும் காப்புரிமை பற்றியும் அறிந்து கொள்வதற்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை, தமிழ் கூறும் நல்லுலகிற்கு தமிழ் அநிதம் (அமெரிக்கா) நிறுவனத்தினர் ஆற்றும்பணி மேன்மேலும் சிறக்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

    முதல்வர்

    முனைவர் பெ. பாலகுருசாமி

    ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி)

    திண்டுக்கல்

    தமிழ் இலக்கணம் கற்பிக்க உதவும் மீம்ஸ்கள்

    முனைவர் இரா. அருணா

    மொழியியல் ஆய்வாளர்,

    8/1, காந்திபுரம் ரோடு,

    கள்ளிப்பட்டி,

    கோபிசெட்டிபாளையம் – 638452

    Research Summary

    Learning takes place using general concepts for thinking in general. Thinking is an internal process. We denote general ideas by words. Therefore, thinking can be done better only when the meaning of the words is well understood. Learning takes place through the use of symbols, models, plans, etc. along with language during thinking. This article explores the use of memes to facilitate learning in Tamil grammar. Using memes to teach grammar is explained here.

    Reference words

    Students, Thinking, Inner Pentacles, Psychology, Memes, Internet, Learning, Teaching.

    முன்னுரை

    மாணவர்கள் தங்களின் தினசரி வாழ்நாளில் கிடைக்கப்படும் அனுபவத்தின் மூலம் அவர்களின் அறிவுநிலையில் ஏற்படும் மாற்றத்தினையும் விதிவருமுறை இலக்கண விதியினைக் கற்பிக்கும் போது கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகளுக்கு தொடர்புடைய மாணவர்கள் அறிந்த திரைப்படத்திலிருந்து உருவாக்கிய மீம்ஸ் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு கற்பிப்பதால் நன்கு கற்க முடிகிறது. அகத்திணைகளையும் புறத்திணைகளையும் விளக்குவதற்கு கணினி வழியாக (பனுவல்கள்(PPT), Word file, PDF) மீம்ஸ் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு கற்பிக்கும் முறையினை இவ்வாய்வுக் கட்டுரை மூலம் கீழே விளக்கப்படுவதை இனி காண்போம்.

    கற்பனைத் திறன் வளர்த்தலில் மீம்ஸ் வழி கற்றலின் பங்கு

    நாம் முன்னர் அனுபவித்த ஒரு நிகழ்ச்சியை மீண்டும் மனக் கண் முன் நிறுத்தி, அதனை உணர்தல் ஒருவகைக் கற்பனையாகும். இதனை நினைவு என்பர். பழைய புலன்காட்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றின் சாயல்களையும் அவற்றினின்றும் பெறப்படும் எண்ணங்களையும் புதிய முறையில் அமைத்தலே கற்பனையாகும். இப்புதிய முறையில் எண்ணங்களை அமைப்பதற்கு இங்கு மீம்ஸ்களை பயன்படுத்துகிறோம். எனவே, தமிழ் இலக்கணம் கற்பதில் மாணவர்கள் ஆர்வமுடன் கற்க ஏதுவாக அமைகிறது. இதற்குக் காரணம் மீம்ஸ்களின் வழி கற்கும் போது அக கற்பனைக் காட்சிகள் பிம்பம் போல் தோன்றுவது ஆகும். ஆதலால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்க முடிகிறது.

    (நற்றமிழ் கற்பிக்கும் முறைகள் – பேராசிரியர் வி. கணபதி – முதல் பதிப்பு-ஏப்ரல்2002 – சாந்தா பப்ளிஷர்ஸ், முத்துவிழா இல்லம், 13(5)ஸ்ரீபுரம் 2வது தெரு, இராயப்பேட்டை, சென்னை-6000014 - ப-9)

    தமிழ் இலக்கணம் கற்பித்தலில் மீம்ஸ்கள் பயன்படுதுவதின் உளவியல் காரணிகள்

    மாணவனின் நுண்ணறிவு, ஊக்கம், மனப்பான்மை, மனவெழுச்சி, அக்கறை, பற்று என்பன ஆளுமை வளர்ச்சிக்குக் காரணங்களாக அமைகின்றன. மாணவர்களுள் மெல்லக் கற்பவர்களும் இவ்வுலகில் பிறந்து வாழ்கின்றனர். ஆனால் அவர்களுடைய ஆளுமையில் தோன்றும் வேறுபாட்டிற்குக் காரணம் நுண்ணறிவேயாகும். அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டவர்கள் விரைவில் வெற்றியும், குறைந்த அளவில் ஊக்குவிக்கப்பட்டவர்கள் குறைவான வெற்றியும், பெறுகிறார்கள். அவர்களின் ஆளுமை வேறு பாட்டிற்குக் காரணம் குறைந்த அளவு ஊக்கமே ஆகும். எனவே மாணவர்களின் நுண்ணறிவைத் தூண்டும் வகையில் கணினியில் தமிழ் இலக்கணம் கற்றலின் பாடத்திட்டம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும் போது மாணவர்களுக்கு தமிழ் இலக்கணத்தின் மீது ஆர்வத்தை உண்டாக்குகிறது.

    கணினியில் தமிழ் இலக்கணம் கற்பதில் ஏற்படும் சிக்கல்களை அதாவது தமிழ் இலக்கணத்தைக் கற்பதில் ஆர்வமின்மை, கடினம், மனனம் செய்வதில் சிக்கல்களை தவிர்க்கவே மீம்ஸ்கள் எடுத்துக்காட்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் கற்பதில் மாற்றம் ஏற்பட்டு கற்கும் மாணவர்களிடையே மனமகிழ்வு, புதுமை, சிந்தனைத்திறன் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் இலக்கண அறிவை எளிமையாக பெறமுடிகிறது. தமிழ் இலக்கண அறிவைப்பெறுவதால் பிழையின்றி பேசவும் எழுதவும் முடிகிறது.

    மீம்ஸ் என்பது அறிவின் தன்மைக் கொண்டு மெய்பாடுக்ள மூலம் சிந்தித்தலே ஆகும்.

    மீம்ஸ்கள் உருவாக்கும் வழிமுறைகள்

    மீம்ஸ்களை உருவாக்க பயன்படுவதில் முக்கியப்பங்கு வகிப்பது செல்பேசி ஆகும். செல்பேசியில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் இடத்திற்குச் சென்று, மீம்ஸ் உருவாக்கும் செயலிகள் என்று பதிவிட்டால் மீம்ஸ் உருவாக்கும் செயலிகளை காண இயலும். இதிலிருந்து தேவையான செயலிகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.

    படி – 1

    * மீம்ஸ் உருவாக்குவதற்கு முதலில் அதற்கான Google play store – ல் meme creator app – என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

    * அதன் பின் வரிசையாக வரும் செயலிகளில் தமிழ் இலக்கணம் மீம்ஸ்கள் உருவாக்க தேவைப்படும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    படி – 2

    * Meme Templates, Meme Generator - என்ற இரண்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    படி – 3

    * முதலில் இலக்கண மீம்ஸ்களை உருவாக்க Meme Templates என்ற செயலியினுள் செல்ல வேண்டும்.

    * பாடத்திற்கு தேவையான மீம்ஸ் படங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    படி – 4

    * Meme Generator – செயலியினுள் சென்று custom meme – என்ற பொத்தானை அழுத்தி Meme Templates – என்ற செயலி மூலம் சேகரித்து வைத்துள்ள படங்களை பாடத்திற்கு ஏற்ப இங்கு உள்ளீடு செய்ய வேண்டும்.

    படி – 5

    * Meme Generator – ல் உள்ளீடு செய்த Meme Templates – ன் படங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது போல் காணமுடியும்.

    * நமக்குத் தேவையான பாடத்தலைப்பைத் தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்ய வேண்டும்.

    * தட்டச்சு செய்த பாடத்தலைப்பிற்கு ஏற்ற எழுத்தின் வடிவம், அளவு, வண்ணம் மாற்றிக் கொள்ள முடியும்.

    மீம்ஸ்கள் மூலம் ஐந்திணைகளின் விளக்கம்

    ஐந்திணைகளை கணினியில் கற்பிக்க மிகவும் எளிய வழி மீம்ஸ்களை பயன்படுத்துவது ஆகும். ஐவகை நிலங்களை கற்பிக்க முன்பு அந்நிலத்தின் படங்களை உபயோகித்து கற்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீம்ஸ்கள் வழி எளிமையான வழியில் கற்பித்தல் பற்றி இங்கு காண்போம்.

    1. குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடம்

    2. முல்லை – காடும் காடு சார்ந்த இடம்

    3. மருதம் – வயலும் வயல் சார்ந்த இடம்

    4. நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடம்

    5. பாலை – மணலும் மணல் சார்ந்த இடம்

    இவ்வாறு மீம்ஸ்கள் மூலம் கற்பிக்கும் போது எளிமையாக மாணவர்கள் கற்க இயலும் என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் உணர்த்துகிறது.

    முடிவுரை

    தமிழ் இலக்கணம் கற்பித்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கணினி வழியாக அகத்திணை இலக்கணம் கற்பித்தல் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் உளவியலுக்கு ஏற்ப தமிழ் இலக்கணம் எளிய முறையில் கணினி வழியாக மீம்ஸ் மூலம் கற்பித்தல் பற்றி இவ்வாய்வுக் கட்டுரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

    ஆய்வுக்கு பயன்படுத்திய நூல்கள்

    1. உளவியல் நோக்கில் கற்றலும் மனித மேம்பாடும் – பேராசிரியர் கி. நாகராஜன், தேவ. சீத்தாராமன் – முதல் பதிப்பு- செப்டம்பர்,2013 – ஸ்ரீராம் பதிப்பகம், 74B/1, விவேகானந்தர் தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை – 600093.

    2. சுப்பிரமணியன் ச.வே. - தொல்காப்பியம் முழுவதும் விளக்கவுரை, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-608001 - சூன் 2008.

    3. பொதுத் தமிழ் கற்பித்தல் – டாக்டர் இ.பா.வேணுகோபால், க. சாந்தகுமாரி – முதல் பதிப்பு-செம்டம்பர்2013 – சாரதா பதிப்பகம், சென்னை-600014.

    4. நற்றமிழ் கற்பிக்கும் முறைகள் – பேராசிரியர் வி. கணபதி – முதல் பதிப்பு-ஏப்ரல்2002 – சாந்தா பப்ளிஷர்ஸ், முத்துவிழா இல்லம், 13(5)ஸ்ரீபுரம் 2வது தெரு, இராயப்பேட்டை, சென்னை-6000014.

    5. தமிழ்-இலக்கியம் இலக்கணம் – பதிப்பாசிரியர்கள்- ஆ. விஜயராகவன், எ. பச்சையப்பன், டாக்டர்.கு.கண்ணன் – முதல் பதிப்பு-ஆகஸ்ட்2014 – பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014.

    6. தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் – முனைவர். தேவிரா(இரா. இராசேந்திரன்), பதிப்பாசிரியர்- முனைவர். திருமதி ச. கனலட்சுமி – முதல் பதிப்பு-2007 – நந்தினி பதிப்பகம்,38/16, முதல் தெரு, வெல்கம் காலனி, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், சென்னை-101.

    7. தொல்காப்பிய ஆய்வுத் தெளிவுகள் – பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு – முதல் பதிப்பு-ஆகஸ்ட்,2016 – மணிவாசகர் பதிப்பகம், 31,சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108.

    ஆய்வுக்கு பயன்படுத்திய செயலிகள்

    1. Meme Creator&Templates

    2. Meme Maker&Creator by Memeto

    3. Meme Generato

    இணையம் சாரா மொழி கற்பிக்கும் கருவிகள்

    க.சத்தியகலா,

    முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு,

    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்Y}ரி, சிவகாசி.

    Abstract

    In today’s computer world many technologies won’t work without internet. From Wikipedia to Google Classroom for all these aspects internet is mandatory. This article is about learning through offline teaching tools such as talking books and pens. And also a note about Mantra Lingua providing these offline teaching tools.

    குறிச்சொற்கள்

    மொழி கற்பிக்கும் கருவிகள், இருமொழி புத்தகங்கள், PENpal

    முன்னுரை

    மொழி கல்விக்கு வாசிப்பும் எழுத்தும் முக்கியமாகும். நம்மிடையே இன்று வாசிப்பு பழக்கமும் அருகி வருகிறது. குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும்போது இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் படிக்கும் புத்தகமும் எழுதும் பேனாவும் அவர்களுடன் பேசினால் பாடம் கற்கும் முறை எளிதாகிவிடும். இந்த இரண்டு மொழி கற்பிக்கும் கருவிகளையும் அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்தும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    மொழி கற்பிக்கும் கருவிகளும் பயன்களும்

    மொழி கற்பிக்கும் கருவிகளுள் குறிப்பிடத்தக்கவை பேசும் பேனாக்கள் (Talking Pens) மற்றும் (Talking books) ஆகும். இந்தியாவில் ஆதர்ஷ் நிறுவனமும்(Aadarsh Technosoft Pvt Ltd) இலண்டனில் மந்த்ரா லிங்குவா நிறுவனமும் (Mantra Lingua) இவற்றை வழங்குகின்றன. MPR எனப்படும் Multimedia Print Reader-ஐ ஆதர்ஷ் நிறுவனமும் PENpal-ஐ மந்த்ரா லிங்குவா நிறுவனமும் வழங்குகின்றன. இந்த வகை கருவிகளை பயன்படுத்தும்பொழுது கணினியிலோ பிற சாதனங்களிலோ நேரம் செலவிடுவதைத் தவிர்க்க முடிகிறது. நாமே கற்றுக் கொள்ளும் திறன்(Self learning) வளர்கிறது.

    பேசும் பேனாக்களும் புத்தகங்களும்

    கணினியில் மட்டும்தான் ஒலிப்பதிவு செய்து கேட்க முடியும் என்பதைக் கடந்து புத்தகத்திலும் ஒலிப்பதிவு செய்து கேட்க முடியும் என்பதை இந்நிறுவனங்கள் நிரூபனம் செய்கிறது. இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் புத்தகங்கள் அனைத்துமே மூன்று முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கானதாகும். மேலும் குழந்தகளுக்கானது என்பதால் அதிக அளவில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

    PEN pal செயல்படும் முறை

    PENpal எனும் பேசும் பேனாவை ஒலிப்பதிவு செய்யப்பட்ட புத்தகத்தின் மேல் வைத்தால் புத்தகத்தில் உள்ள தொடர்களை வாசிக்கும். இது இருமொழி புத்தகம் என்பதால் ஆங்கிலத்திலும் பதிவு செய்யப்பட்ட அறுபதிற்கும் மேற்பட்ட மொழிகளையும் வாசிக்கும்.

    PENpal எவ்வாறு செயல்படுகிறது என்றால் பார்கோட் ரீடரின்(Barcode Reader) செயலை போன்றதாகும். ஒவ்வொரு புத்தகத்தின் பக்கங்களிலும் Micro Barcodes அமைப்பு இருக்கும். PENpal-ஐ அதன்மீது வைக்கும்பொழுது அந்த பக்கத்திற்குரிய பார்கோடை அது கண்டறிந்ததும் முன்னமே பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவை ஒலிக்கச் செய்யும். மற்றுமொரு சிறப்பம்சம் எனில் இது ஒரு ஒலிவாங்கியும்( Microphone) ஆகும். 16GB நினைவகம் கொண்ட PENpalல் நாமே ஒலிப்பதிவு செய்தும் கொள்ளலாம்.

    PEN pal-ன் நன்மைகள்

    * வாசித்தலில் சிரமம் இருக்கும் ( Dyslexia) குழந்தைகளுக்கும்,

    * பார்வைத்திறன் குறைவுற்றவர்களுக்கும் ( Visually Impaired)

    * கற்றலில் சிரமப்படும் குழந்தைகளுக்கும் Special Educational Needs and Disability (SEN),

    * Modern Foreign Languages(MFL) தற்போது பேசப்படும் ஸ்பானிஷ், ஜெர்மன் போன்ற மொழிகள் பேசுபவர்களுக்கும்,

    * ஆங்கிலத்தை முதல் மொழியாக கொள்ளாதவர்களுக்கும் English as an Addtional Language(EAL),

    இந்த இருமொழி புத்தகங்களும், PENpal கருவியும் வழியாக சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்க முடியும்.

    இருமொழி புத்தகங்கள்

    * இருமொழி புத்தகம் (Bilingual or Dual language Book) என்பது இரண்டு மொழிகளில் எழுதப்பெற்றிருக்கும். புத்தகத்தின் ஒரு பக்கத்தில் ஒரு மொழியிலும் அடுத்த பக்கத்தில் மற்றொரு மொழியிலும் மொழிபெயர்த்து கொடுக்கப்பற்றிருக்கும். மந்த்ரா லிங்குவா நிறுவனம் ஆங்கில மொழியை அடிப்படையாக வைத்து கீழே குறிப்பிட்டுள்ள மொழிகளில் இருமொழி புத்தகங்களையும் தயாரித்து வெளியிடுகிறது.

    படைப்பாளர்களை வரவேற்கும் தளம்

    மந்த்ரா லிங்குவா நிறுவனம் தங்களின் புத்தகங்களுக்கு பல்வேறு பின்னணியில் உள்ள எழுத்தாளர்களை வரவேற்கிறார்கள். படைப்புகள் அன்றாட வாழ்வியலை எடுத்துரைக்க வேண்டும் என்றில்லை. கற்பனை படைப்பாக அமைதல் நன்று. இருபத்து நான்கு பக்க படப்புத்தகங்களுக்கு ஏற்றவாறு படைப்புகளை அவர்களின் info@mantralingua.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    முடிவுரை

    தமிழ்மொழியை உலகிலுள்ள அனைத்து வகுப்பறைகளுக்கும் எடுத்துச்செல்ல இருமொழி பதிப்பமகமான மந்த்ரா லிங்குவா நிறுவனம் உதவியாக இருப்பதையும் அவர்களின் பயிற்று முறையில் இருக்கும் பேசும் பேனாக்கள் வழி மொழியை எளிதில் புரிந்துகொள்ளும் தன்மையையும் அறிந்துகொள்ள முடிந்தது.

    கணினியில் பயன்படுத்தப்படும் பேச்சுசார் தொழில்நுட்பம்

    SPEECH TECHNOLOGY USED IN THE COMPUTER

    கா.செல்வகாமாட்சி

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை

    தியாகராசர் கல்லூரி, மதுரை

    SUMMARY

    Five hundred years ago no one would have believed if a man could speak to another man several miles away, live, in video mode. But now this has become possible. An instrument is fundamentally responsible for every progress of man. It has grown from ploughing in agriculture to computers today.

    The speech technology on the computer is also suitable for use by people who do not know how to type. The microphone and the Internet play a major role in speech technology. Our voice is received as input of speech technology and received as text as output.

    Many websites and apps perform such actions. Some of these are only active on websites. Such technology is located in different languages and some of these websites act as voice converters, translations, font converters. It is used to communicate on email and other social media, as well as to quickly run through voice instead of typing messages on multimedia messaging services. From punctuation to easy insertion, this technology has been developed.

    Using speech technology, deaf people can be made to see and understand what others are saying to become textual. For those who are less usable in their hands and are not skilled at typing, using such technology, speech technology plays a huge role in getting results within a certain period of time.

    Even a detailed paragraph can be easily and quickly typed. Plays an important role in time management The entire device can be run using applications such as cortana on a computer using speech technology. Such technology is used in various devices such as television, telephone, refrigerator, air conditioner, etc. In some devices, these processors remain normal.

    KEYWORDS:

    Microphones - Websites Voice – converters - Translations - Font converters - Social media - Multimedia messaging services.

    முன்னுரை:

    அறிவியல் கண்டுபிடிப்புகளில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது கணிப்பொறியாகும். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு மனிதன் பல மைல் தொலைவில் உள்ள மற்றொரு மனிதனுடன் காணொளி முறையில் நேரலையில் உரையாற்ற முடியுமென்றால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள் ஆனால், தற்போது எங்கும் கணினி எதிலும் கணினி என இந்த 21ம் நூற்றாண்டு திகழ்கிறது.

    கணினியில் பயன்படுத்தப்படும் பேச்சுசார் தொழில்நுட்பமானது பல்வேறு வகைகளை உள்ளடக்கியுள்ளன. இவற்றில் பேச்சு அங்கீகாரம், பேச்சு தொகுப்பு பற்றிய செய்திகளை ஆராய்வதாக இக்கட்டுரையானது அமையப்பெறுகிறது.

    பேச்சுசார் தொழில்நுட்பம்:

    உலக மக்களை ஒன்றிணைக்கக் கூடிய மிகப்பெரிய சக்தியாக கணினி அமையப்பெற்று வருகிறது. "இப்போதுள்ள நவீன கம்ப்யூட்டர்களுக்கு முன்னோடியாக விளங்குவது சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய கம்யூட்டர் தான்"¹ பேச்சுசார் தொழில்நுட்பம் என்பது மனிதனின் பேச்சை உரையாக (Text) அல்லது கேட்கக்கூடிய வடிவத்தில் செயலாக்குவதை உள்ளடக்கிய கணினிஅறிவியல் கணக்கீட்டு மொழியியல் முதலிய துறைகளைக் கொண்ட பரந்த தொழில்நுட்பம். பேச்சுசார் தொழில்நுட்பமானது பேச்சு அங்கீகாரம், பேச்சு தொகுப்பு, குரல் கம்ப்யூட்டிங் மற்றும் பல முக்கிய அம்சங்களை கொண்டு திகழ்கிறது.

    பேச்சு அங்கீகாரம் (Speech Recognition):

    பேச்சு அங்கீகாரமாது பேச்சின் ஒலியியல் அம்சங்களை பகுப்பாய்வு செய்து, அதனை சாத்தியமான வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களுடன் பொருத்தி உரையாக (Text message) மாற்றும் திறன் உடையவை.

    பேச்சு அங்கீகார அமைப்பின் வரலாறு:

    முதலில் கண்டறியப்பட்ட பேச்சு அங்கீகார அமைப்புகள் வார்த்தைகளில் கவனம் செலுத்தவில்லை மாறாக, எண்களில் கவனம் செலுத்தின. 1952 ஆம் ஆண்டு ஆட்ரி என்ற ஒரு வகை அமைப்பை பெல் ஆய்வகங்கள் வடிவமைத்தன. இது நாம் பேசும் குரல்களுக்கான விளக்கங்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்பட்டன.

    IBM ஆனது ஆங்கிலத்தில் பதினாறு வார்த்தைகளை புரிந்துக் கொண்டு பதில் அளிக்கும் shoe box ஐ அறிமுகப்படுத்தியது² மற்ற நாடுகளில் மற்றும் பேச்சை அடையாளம் காணக்கூடிய வன்பொருள்கள் உருவாக்கின. இந்த காலகட்டத்தில் பேச்சு அங்கீகாரம் ஆனது பல்வேறு மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை சந்தித்தது.

    21 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி:

    கூகுள் வரும் வரையில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. கூகுள் பயன்பாட்டு முறையை மில்லியன் கணக்கிலான மக்களிடம் பேச்சு அங்கீகார முறையை வழங்கியது.

    சிரி (Siri):

    2011 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் சிரி (Siri) என்ற அமைப்பை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து இந்த அமைப்பை பயன்படுத்துவதன் மூலம் பயன்பாட்டாளரின் தனிப்பட்ட மொழி பயன்பாடு தேடல்கள் விருப்ப தேர்வுகளுக்கு ஏற்ப தனிப்பட்ட முடிவுகளை தருகிறது.

    இந்த அமைப்பானது ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியனவாகும். SRI என்பது SRI இண்டர்நேஷனல் செயற்கை நுண்ணறிவு மையத்தால்  உருவாக்கப்பட்ட  திட்டத்தில்  இருந்து உருவான ஒரு ஸ்பின்-ஆஃப் ஆகும்³ ஆப்பிள் சாதனங்களில் இவை இயல்பு நிலையாகவே (Default) அமைந்திருக்கின்றன.

    அலெக்சா (Alexa):

    அமேசானின் அலெக்சா 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது கூகுள் ஹோம் மூலம் வாடிக்கையாளர்கள் மின் இயந்திரங்களுடன் பேசுவதற்கு வசதியாக உள்ளது. அலெக்சா செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உடையதாகும்.

    சோனிக்ஸ் (SONIX):

    2023 ஆம் ஆண்டின் சோனிக்ஸ் சிறந்த தானியங்கி டிரான்ஸ்கிரிப்ஷன் சேவையாகும். ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் சோனிக்ஸ் படியெடுத்து மொழிபெயர்க்கும் பணியில் உதவி புரிகிறது வேகமாக துல்லியமாக மற்றும் மலிவாக கிடைக்கக்கூடிய அமைப்பாக சோனிக்ஸ் திகழ்கிறது.

    இ மெயிலில் வாய்ஸ் மெயில்:

    இமெயிலில் வாய்ஸ் மெயில் அனுப்பும் வசதி 1980 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அளவிலான குரல் அஞ்சல் சேவையை அறிமுகப்படுத்த உருவாக்கப்பட்டது. இதில் தட்டச்சு பலகை உதவியின்றி வாய்ஸ் மெயிலாக அனுப்பும் வசதி உள்ளது. இந்த வசதியை ஹைதராபாத்தைச் சேர்ந்த now-pos என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது⁴ வெளிநாடுகளுக்கு கூடுதல் ஐஎஸ்டி கட்டணமின்றி தொடர்பு கொள்ள இச்சேவை உருவாக்கப்பட்டது.

    பேச்சு அங்கீகார செயலிகள், தளங்கள்:

    பேச்சு அங்கீகார அமைப்புகள் இணையதளங்கள், செயலிகளாகவும் உள்ளன. செயலிகள் உதவியுடன் நாம் பிற சமூக ஊடகங்களும் தட்டச்சு செய்வதற்கு பதிலாக நம் பேச்சின் மூலமாக கருத்துக்களை உரையாக மாற்ற இயலும்

    Gboard, Speech to text converter, Tamil voice Typing, Easy tamil voice keyboard app, Tamil keyboard என்று பல செயலிகள் தமிழுக்காக திகழ்கின்றன மேலும் பல மொழிகளிலும் இத்தகைய செயலிகள் உள்ளன.

    SpeechTyping.com, Typingguru, unicodefont.in, Speaktyping.com, speechnotes.com மற்றும் பல இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன இவற்றை அவற்றிற்கான இணையதளங்களில் மட்டுமே நேரடியாக பயன்படுத்த முடியும் உரையாக பெறப்பட்ட செய்திகளை எடுத்து நகல் (copy) செய்து பிற சமூக ஊடகங்களில் ஒட்டி (paste) பயன்படுத்திக்கொள்ளலாம். நேரடியாக பிற செயலிகளில் பயன்படுத்த இயலாது இவை ஒலிவாங்கி மூலமாக நமது குரலை உள்ளீடாக பெற்று உரையாக மாற்றி தருகின்றன.

    பேச்சு தொகுப்பு:

    உரை அல்லது பிற உள்ளீடுகளில் இருந்து செயற்கை முறையில் பேச்சை உருவாக்கும் திறனாகும். முதல் கணினி அடிப்படையிலான பேச்சுதொகுப்பு அமைப்புகளானது 1950ஆம் ஆண்டு தோன்றின.

    1968 ஆம் ஆண்டில் ஜப்பானில் உள்ள எலக்ட்ரோ டெக்னிக்கல் ஆய்வகத்தில் முதல் பொது ஆங்கில உரையிலிருந்து பேச்சு முறையை உருவாக்கினர்.

    பேச்சு தொகுப்பு அமைப்புகள்:

    உரையிலிருந்து பேச்சாக மாற்றக் கூடிய அமைப்புகளானது பேச்சு தொகுப்பு அமைப்புகள் எனப்படுகின்றன. இது டெஸ்ட் டு ஸ்பீச் (Text -to -speech) என்பதாகும் கணினி உரையை (Text) படிக்கும் திறனை இது குறிக்கிறது.

    TTS ஆனது எழுதப்பட்ட உரையை ஒலி எழுத்து பிரதிநிதித்துவமாக மாற்றுகிறது. பின்னர் ஒலி வடிவங்களை ஒலியாக வெளியிடக்கூடிய அலைவடிவங்களாக மாற்றி அமைக்கிறது.கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் பிற செயலிகளின் உதவிக் கொண்டு இத்தகைய சேவைகளை பயன்படுத்த இயலும்.

    ஒலி நூலின் சிறப்பம்சங்கள்:

    இணையம் வழியாக ஒரு குறிப்பிட்ட புத்தகம் நம் கையில் இல்லாவிட்டாலும் அதனை படிப்பதற்காக இணைய நூலகங்கள் பயன்படுகின்றன. இணையத்தின் வழியாக தமிழ் மொழிக் கல்வியை அறிமுகப்படுத்திய பெருமை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தையே சாரும்⁵ ஒலி புத்தகங்கள் (Audio Books) இதில் மேலும் சிறப்பம்சம் வகிக்கின்றன.

    பேச்சு தொகுப்பு அமைப்பின் மூலம் நூல்களை படிக்கும் முறை ஒலிநூல் எனப்படுகிறது. ஒலிநூல் என்பது அச்சு நூல்களை உருவாக்குவது போலப் படித்து ஒலி வடிவில் சேமித்து  வைத்த தகவல்களை திரும்பப் பெறுவது ஆகும்⁶m கண் பார்வை திறனில் குறைபாடு உள்ளவர்கள், வயதானவர்கள், வேலை செய்து கொண்டே ஒலிவடிவில் இத்தகைய நூல்களை கேட்டு பயன்பெறலாம்.

    ஒலி நூல்கள் Talking Books என்றும் அழைக்கப்படுகின்றன.தமிழுக்கென்று சிறப்பாக.Aidible.in, storytel, kuku.FM, kadhai osai, spotify, Tamil audio books.com போன்ற தளங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    கோர்டானாவின்(Cortana) செயல்பாடுகள்:

    கோர்டானா என்பது மைக்ரோசாப்டின் தனிப்பட்ட உற்பத்தி திறன் உதவியாளராகும்⁷ நமது நேரத்தை சேமிக்க இது உதவுகிறது. அட்டவணை புதுப்பித்தல்,மைக்ரோசாஃப்ட் குழுக்களில் மீட்டிங்கில் சேர, அடுத்த சந்திப்பு பட்டியலை நினைவூட்ட, பட்டியலை நிர்வகிக்க, தகவல்களை உண்மையாக கண்டறிய, ஒரு பொருள் பற்றிய வரையறையை அறிய பயன்படுகிறது. குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே கோர்டானா பயன்பாடு கிடைக்கப்பெறுகிறது.

    சிறந்த பேச்சுசார் தொழில்நுட்ப செயலிகள்:

    Lifewire என்ற இணையதள பக்கமானது 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த குரல் உரை செயலிகளை பட்டியலிட்டு வரையறை செய்துள்ளது.

    அந்தப் பட்டியல் பின்வருமாறு,

    "சிறந்த செயலி (ஒட்டுமொத்தமாக) - டிராகன் எனி வேர் ( Dragon anywhere)

    சிறந்த உதவியாளர் - கூகுள் உதவியாளர் (Google Assistant)

    சிறந்த டிரான்ஸ்கிரிப்சன் - பிரான்ஸ் கிரிப்ட் (Transcribe)

    நீண்ட பதிவுகளுக்கு சிறந்தது - பேச்சுகுறிப்புகள் ( Speech Notes)

    குறிப்புகளுக்கு சிறந்தது - குரல் குறிப்புகள் (Voice Notes)

    செய்திகளுக்கு சிறந்தது – ஸ்பீச்டெக்ஸ்டர் (Speech Texter)

    மொழிபெயர்ப்புக்கு சிறந்தது - ஐ ட்ரான்ஸ்லேட் உரையாடல் (i translate conversation)

    முக்கிய தொழில் விதிமுறைகளுக்கு சிறந்தது – பிரெய்னா (Braina)⁸

    என்று இந்த இணையதளப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இவை நமது பல மணி நேர வேலையை எளிதாக செய்ய பேருதவி ஆற்றுகின்றன.

    பேச்சுசார் தொழில்நுட்பத்தின் பயன்கள்:

    பேச்சுசார் தொழில்நுட்பமானது அனைவரும் பயன்படுத்த மிகவும் எளிதாக அமையப்பெற்றுள்ளது தொழில் வல்லுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. பேச்சு அங்கீகார அமைப்பின் மூலமாக காது கேளாத நபர்களுக்கு மற்றவர்கள் சொல்லக்கூடிய செய்தியை உரையாக பார்த்து புரிந்து கொள்ளச் செய்ய இயலும்.

    பேச்சு தொகுப்பு அமைப்பில் ஒலிநூல்கள் வாயிலாக கண் பார்வை அற்றவர்கள் கண் குறைபாடு உடையவர்கள் தாங்கள் நினைக்கும் புத்தகங்களை படித்து அறிந்து கொள்ள முடியும். ஒலிநூல்கள் போன்ற தலங்கள் எழுத்தறிவில்லாத பாமர மக்களும் எளிதாக ஒரு புத்தகத்தைப் பற்றிய செய்தியைப் பெற உதவி புரிகின்றது.

    உரையை பேச்சொலியாகவும் பேச்சொலியை உரையாகவும் மாற்றும் இத்தகைய தொழில்நுட்பங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி நேர மேலாண்மைக்கு பெரும் பங்காற்றுகின்றன துல்லியம் மற்றும் மலிவாக கிடைப்பதால் அனைவரும் பயன்படுத்த எளிதாக அமைகின்றன.

    நிறைவுரை:

    கணினியில் பயன்படுத்தப்படும் பேச்சுசார் தொழில்நுட்பம் என்பது பல அம்சங்களைக் கொண்டது இதில் பேச்சு அங்கீகாரமானது பேச்சின் ஒலியியல் அம்சங்களை பகுப்பாய்வு செய்து, அதனை சாத்தியமான வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களுடன் பொருத்தி உரையாக மாற்றும் பணியை செயல்படுத்துகின்றன.

    பேச்சுஅங்கீகார தொழில்நுட்பம் இருபதாம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியை நிலையை எட்டியது. கூகுள் பயன்பாட்டு முறை மில்லியன் கணக்கிலான மக்களிடம் பேச்சு அங்கீகார அமைப்பை கொண்டு சேர்த்தது சிரி, அலெக்சா, சோனிக்ஸ் போன்ற அமைப்புகள் பெரிதும் வரவேற்பை பெற்றனர்.

    மைக்ரோசாப்டின் கோர்டானா-வை பயன்படுத்தி அட்டவணை புதுப்பித்தல், மீட்டிங்கில் சேரல், அடுத்த சந்திப்பு பட்டியலை நினைவூட்டல், தகவல்களின் உண்மையை கண்டறிதல் என பல்வேறு வேலைகளை எளிதாக செய்ய முடியும். பேச்சுஅங்கீகார செயலிகள் இணையதளங்களாகவும் உள்ளன. ஒலிவாங்கி உதவியுடன் எளிதாக பயன்படுத்தி நேரத்தை நாம் சேமிக்கலாம்

    பேச்சு தொகுப்பு என்பது பிற உள்ளீடுகளிலிருந்து செயற்கை முறையில் பேச்சை உருவாக்கும் திறனாகும். 1968ஆம் ஆண்டில் ஜப்பானிலுள்ள எலக்ட்ரோ டெக்னிக்கல் ஆய்வகத்தில் முதல் பொது ஆங்கில உரையிலிருந்து பேச்சு முறையை உருவாக்கியது.

    இவை டெக்ஸ்ட் டு ஸ்பீச் (Text-to-speech) அமைப்பு என்று அழைக்கப்படுகின்றன. கூகுள் அசிஸ்டன்ட் போன்ற செயலிகள் கொண்டு இத்தகைய சேவைகளை பயன்படுத்தலாம்.

    ஒலி நூல்கள் முறையானது ஒரு குறிப்பிட்ட நூல் நம் கையில் இல்லாவிட்டாலும் அதனைப் படித்து அறிந்துகொள்ள உதவுகிறது.

    அடிக்குறிப்புகள்:

    1. சுரத்.(2001). கம்யூட்டர் உலகம் (9) தெய்வானை நிலையம்

    2.https://en.m.wikipedia.org/wiki/Speech_recognition#:~:text=Speech%20recognition%20is%20an%20interdisciplinary,language%20into%20text%20by%20computers.

    3. https://en.m.wikipedia.org/wiki/Siri

    4.மருதநாயகம்.இரா.(2015).இருபத்தோராம் நூற்றாண்டில் மக்கள் தகவல் தொடர்பியல்.(112) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

    5. திராவிடமணி.பொ, இந்திராகாந்தி.பு.(2016)அறிவியலும் இலக்கியமும்(120)

    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

    6. மேகலா.இரா.கணினித்தமிழ்(106) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

    7.https://support.microsoft.com/en-us/topic/what-is-cortana-953e648d-5668-e017-1341- 7f26f7d0f825

    8.https://www.lifewire.com/best-voice-to-text-apps-4583053#:~:text=Available%20for%20Android%20and%20iOS,there%20are%20no%20word%20limits

    தமிழ் இலக்கியம் கற்க உதவும் குறுஞ்செயலிகள்

    பா. வீரலட்சுமி

    அ.மோகன சங்கரி

    இரண்டாமாண்டு கணிதம்

    சைவபானு சத்திரிய கல்லூரி

    அருப்புக்கோட்டை 626101

    Abstract

    Many Tamil activists are making many efforts to take the pride of our motherland Tamil language to the world level and to protect the language. In today’s era of growing information technology, it is very necessary to innovate in language. In this way many technical experts are volunteering with interest in computer Tamil development. It is because of their rare efforts that we got the Tamil Apps. Tamil literature, grammar and many other rare information in Tamil are created and made available to us for free on Google Play Store. Among them, this article is a study of Apps which helps in learning Tamil literature.

    Key Words

    Google Play Store, Apps

    முன்னுரை

    தமிழ் மொழியில் பல குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோரில் நாம் அவற்றை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. வகுப்பறைகளில் தமிழ்ப் பாடவேளையில் நாம் அனைத்து இலக்கிங்களையும் முழுமையாகப் படித்துவிட முடியாது. தமிழ் இலக்கியங்களின் மீது ஆர்வம் உள்ளவர்கள் அவற்றைப் படிக்க வேண்டுமானால் நூலகங்களுக்குச் சென்று அங்கு புத்தகங்களைத் தேடியலைந்து படிக்க வேண்டிய நிலையை இந்தக் குறுங்செயலிகள் மாற்றிவிட்டன எனலாம். நமக்குத் தேவையான இலக்கியங்களுக்கென உள்ள குறுஞ்செயலிகளை நம் திறன்பேசிகளில் தரவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம். நாங்கள் பயன்படுத்திய தமிழ் இலக்கியக் குறுஞ்செயலிகள் பற்றியும் அதை உருவாக்கியவர்கள் பற்றியும் இக்கட்டுளையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    இலக்கியம் பதினெண்கீழ்க்கணக்கு

    இந்தக் குறுஞ்செயலியை உருவாக்கியவர் கே.ஆர்.ஜவஹர்லால் ஆவார். 11 ஜூலை 2019 அன்று வெளியிடப்பட்டது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளோரின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆவர். இதன் பதிப்பு 1.1 ஆகும். இதன் பதிவிறக்க அளவு 2.85MB ஆகும்.

    இந்தக் குறுஞ்செயலியைப் பற்றி, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நான்கு நூல்களை இந்த மென்பொருளில் தந்துள்ளோம். பள்ளியில் இருக்கும் போது இவைகளை படிக்க நேரமில்லை. மேலும் இவைகளைப் பற்றி அறிந்ததை விட அறியாதது அதிகமாகும். நிதியமைச்சர் பட்ஜெட் பேச்சில் தமிழ் இலக்கியத்திலிருந்து பாடலை குறிக்கோள் காட்டியது தமிழின் உயர்வினையும் அது தற்காலத்துக்கும் பொருந்தும் என்பதை நிரூபிக்கிறது. ஆனால் தற்சமயம் இளைய தமிழ்ச்சமுதாயம் தமிழை சிறிது சிறிதாக புறக்கணித்து வருகிறது. வெளி மாநிலத்தினர் தமிழ் பாடலை ஓதி பொருள் விளங்க வைப்பதும் தமிழ் இளைஞர்கள் வார்த்தைகளை படிக்க முடியாமல் திணறுவதும் நாம் எங்கே போகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.( இலக்கியம் பதினெண்கீழ்க்கணக்கு, கூகுள் பிளே ஸ்டோர்)

    இலக்கியம் நீதிநெறி நூல்கள்

    இந்தக் குறுஞ்செயலியையும் கே.ஆர்.ஜவஹர்லால் என்பவரே உருவாக்கியுள்ளார்.

    இந்தக் குறுஞ்செயலியைப் பற்றி, ‘ஔவையார்’ என்னும் மெல்லியலார் அருளிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்பனவாகிய நூல்களும் அதிவீரராம பாண்டியரால் இயற்றப்பட்ட வெற்றி வேற்கை எனும் நறுந்தொகை, சித்தாந்த சைவ மதத்தைச் சார்ந்த குமரகுருபரர் அடிகளார் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நீதிநெறி விளக்கம், உலகநாதன் இயற்றிய உலகநீதி மற்றும் முனிசீப் வேதநாயகம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல் ஆகிய நூல்கள் உள்ளன. இவைகளை சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியோர்க்கும் தினசரி வாழ்வில் மிகவும் பயனுள்ள நூல்களாகும். பெரியோர் தங்கள் பேரன் பேத்திகளுக்கு இவைகளை போதிக்கலாம். இதனால் குழந்தைகள் இதனைப் பின்பற்றி வருங்காலத்தில் இதையொட்டி வாழ்க்கையை அனுபவிக்கலாம். என்று குறிப்பிடப் பட்டுள்ளது.( இலக்கியம் நீதிநெறி நூல்கள், கூகுள் பிளே ஸ்டோர்)

    இந்தச் செயலி 25 செப்டம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்துள்ளோரின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆவர். இதன் பதிப்பு 1.0 ஆகும். இந்த செயலியின் பதிவிறக்க அளவு 3.19 MB ஆகும்.

    திருமந்திரம்

    இச்செயலியை Free Tamil Ebook.com என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதை உருவாக்கியவர் ரய் என்பவராவார். நரேன் என்பவர் மின்னூலாக்கம் செய்துள்ளார்.

    இந்தச் செயலி குறித்து, "திருமூலர் யோகப் பயிற்சி தரும் விதம் சுவாரசியமான நடை. அவை வெறும் சூத்திரங்களாக இல்லாமல், படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக அதன் பலன்களையும் சேர்த்தே சொல்கிறார். உதாரணத்திற்கு பிராணாயாமம் பற்றிய பாடல்களில், இதைச் செய்தால் மனம் லேசாகும், கள்ளில்லாமலேயே போதை உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும் என்று ஒரு உத்வேகத்தை கலந்தே தருகிறார்.

    வேதியர்கள் சத்தமாக மந்திரம் சொல்லும் விதத்தை மெலிதாக கிண்டல் செய்து உரையாசிரியர்களுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறார் திருமூலர். சிவபுராணத்தில் சொல்லப்படும் தக்கன் வேள்வியைப் பற்றி அவர் சொல்வது, இப்போது உள்ள நவீன குருமார்கள் கூட தொடத் தயங்கும் விஷயம். தக்கன் வேள்வி எனச் சொல்லப்படுவது ஆண், பெண் உறவு என்கிறார் திருமூலர். அந்த உறவு சிவனை நினைத்து இருக்க வேண்டும் என்கிறது அவரது உபதேசம். இது பற்றி பேசுவதற்கு முன்னால் பிறர் மனையை பார்க்கக் கூடாது, பொது மகளிரிடம் செல்லக்கூடாது போன்ற இயமங்கள் உண்டு. தாம்பத்திய உறவு என்பது காமமில்லாமல் கடவுளை நினைத்து இருந்தால் அதுவும் ஒரு யோகமே என்பது திருமூலரின் உபதேசச் சுருக்கம்.

    இந்த முதல் தொகுதியில் திருமந்திரத்தின் முதல் நூற்று ஐம்பது பாடல்கள், விளக்கவுரையுடன் உள்ளன. மிக உயர்ந்த விஷயங்களும், மறைபொருட்களும் கொண்ட ஒரு ஆகம நூலுக்கு உரை எழுதும் தகுதி எனக்கு இல்லை. திருமூலரின் பாடல்கள் தரும் வியப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மின்னூலின் நோக்கம், நண்பர்களிடையே திருமந்திரப் பாடல்களின் மேல் ஒரு ஆர்வத்தை தூண்டுவதே ஆகும். இதில் உள்ள விளக்கவுரைகள், பாடல்களை புரிந்து கொள்வதற்கான ஒரு சின்ன வழிகாட்டி மட்டுமே. நண்பர்கள் பாடல் புரிந்த பிறகு, விளக்கவுரையை விட்டு விட்டு பாடலை மட்டும் மீண்டும் படித்துப்

    Enjoying the preview?
    Page 1 of 1