Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nyabagam Varuthe... Nyabagam Varuthe...
Nyabagam Varuthe... Nyabagam Varuthe...
Nyabagam Varuthe... Nyabagam Varuthe...
Ebook223 pages1 hour

Nyabagam Varuthe... Nyabagam Varuthe...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளமையான, இனிமையான, ஞாபகங்கள் என்றுமே தித்திக்கும்... அந்த நாள் ஞாபகங்கள் ஆஹா!!! என அசை போட வைக்கும்.

அந்த கால மனிதர்கள், அந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள், அந்த கால பழக்க வழக்கம், சமையல், சாப்பாடு, என எல்லாமே நினைக்க, நினைக்க இனிமை தான். நாம் சென்று வந்த ஊர்களைப் பற்றி ஞாபகப்படுத்தி, பேசுவதும் சுகமே.... அப்படித்தான் பல மனிதர்களை, நிகழ்வுகளை ஊர்களைப், பற்றிய ஞாபகங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன் “வாருங்கள்.... என்னுடன் நாமும் ஞாபகங்களுடன் பயணிப்போம்”.

- ராதா நரசிம்மன்

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580134705660
Nyabagam Varuthe... Nyabagam Varuthe...

Related to Nyabagam Varuthe... Nyabagam Varuthe...

Related ebooks

Reviews for Nyabagam Varuthe... Nyabagam Varuthe...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nyabagam Varuthe... Nyabagam Varuthe... - Radha Narasimhan

    http://www.pustaka.co.in

    ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...

    Nyabagam Varuthe… Nyabagam Varuthe…

    Author:

    ராதா நரசிம்மன்

    Radha Narasimhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/radha-narasimhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    எங்களூரு பெங்களூரு!

    இது கதையல்ல நிஜம்

    கமர்கட்டும் காரபாயாசமும்!

    இனிய இல்லம் வேண்டுமா? ட்யூப்லெக்ஸ் வீடு கட்டுகிறீர்களா?

    மகளுக்கு ஒரு கடிதம்

    சந்தோஷத்தின் உருவமாக நான்...

    சித்தப்பா

    படு ஸ்மார்ட் அம்மாக்கள்

    பெண்ணைப் பெற்றவர்கள் படுத்தும் பாடு!

    நம்பிக்கை

    ‘கார்டு’ கடனாளி ஆக்குதடா தாண்டவக்கோனே!

    ஓ... இவரல்லவோ என் மாமியார்...

    தெய்வமாக வாழ்ந்த என் தாய்...

    மஞ்சக்காணி கொடுத்த மாமியார்

    சூடீதாரிணிகள்

    ‘காதல் புத்தகம்’ படுத்திய பாடு

    கல்யாண பெண்ணுக்கு அலங்காரம் செய்யும் போது கவனமா இருங்க...

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

    பார்த்துப் பேசுங்க!

    நாங்கள் சொர்க்கத்தில் வசிக்கிறோம்!

    புது மாப்பிள்ளைக்கு கட்டளைகள் 10

    எங்க பெங்களூரும் - அந்தக் கத்திரிக்காயும்

    கோபத்திலும் நீ பணக்காரி தான்! என்று கிண்டலடித்தார்

    என் தலைமுடி எனக்குச் செய்த உபகாரம்!

    என் வீட்டு டிக்ஷ்னரி

    கிடங்கா உங்கள் அறை?

    லேடி ஆஃப் ஹெல்த்

    வேட்டி, நைட்டியுடன் தீபாவளி ஓட்டம்

    கேட்டு செய்யுங்க

    தோழிகள் மனம்

    அம்மா பிள்ளை

    மருமகளே...! மாமியாரே!

    ஆட்டோகிராப்

    ஏனென்றால்... உன் பிறந்த நாள்!

    மைசூர் திருப்பதி

    ஆறிலிருந்து அறுபது!

    கல்யாணம்... கனவானதோ

    தீபாவளி ஒத்த வெடி

    கல்யாணப் பொண்ணு கடுகடுனு ஆனா...

    கல்யாணப் பெண்ணிற்கு B.P?

    ஞாயிற்றுக்கிழமை

    எதிரில் வந்தார்... வழிகாட்டினார்!

    வயதைத் தொலைத்தோம் வால் ஸ்ட்ரீட்டில்!

    எங்கள் ஸிம்பா படு சுத்தம்பா!

    ஒஹாயோகொசாய்மஸ்!

    சுந்தர காண்டம்

    ஹாப்பி பர்த்டே சிங்கபூர்

    பினாங்கில் சீன புத்தாண்டு

    நரகம் எப்படியிருக்கும்? இதோ இப்படித்தான் இருக்குமாம் சொல்கிறது தாய்லாந்து

    எங்களூரு பெங்களூரு!

    பெங்களூரு...

    சாஃப்ட்வேர் சிட்டி... ரிடையர்டு ஆனவர்கள் செட்டிலாவதற்கு ஏற்ற கிளைமேட் உள்ள இடம்... ரோஜாக்கள் அதிகம் பயிராகும் மாநிலம்... என்று பெங்களூருவுக்குப் பல இன்ட்ரஸ்ட்டிங்கான முகங்கள் உண்டு. அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களும் படு இன்ட்ரஸ்ட்டிங்கானதுதான். உதாரணத்துக்கு, சில விஷயங்களைச் சொல்கிறேன்!

    மஞ்சள் பூசுமிடம்

    சுமங்கலிகள் காதின் கீழும் கன்னத்தின் இருபுறமும் மஞ்சள் கொள்வார்கள்.

    அவங்க ஊர் வரலட்சுமி விரதம்!

    பிள்ளையார் சதுர்த்தியின் முதல் நாள் வரும் 'கௌரி ஹப்பா’வை இந்த ஊரில் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள். ஒரு புது முறத்தில் குட்டி, குட்டி பிளாஸ்டிக் கவர்களில் எல்லாவித பருப்பு வகைகள், அரிசி, மைதா, கோதுமைமாவு, ரவை, வெல்ல அச்சு எல்லாம் போட்டுடன் இலையில் இரண்டு பருப்பு ஒப்பட்டு (போளி) வடை கோசுமல்லி பூ, தேங்காய், பழம், ரவிக்கைத் துணி, தட்சணை வைத்து அவைகளை மற்றொரு புது முறத்தால் மூடி, உறவினர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் கொடுக்கின்றனர். இதை ‘மொறா பாகனா’ என்றழைக்கிறார்கள். ஈச்ச ஓலையில் கருப்பு வளையல்ளை சுற்றி ‘பிச்சோலே' என கௌரிக்கு அணிவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு வருடமும் 'கௌரி பூஜை' செய்து 'மொறபாகனா' கொடுப்பது தொன்றுதொட்டு வரும் விரதமுறை நம்மூர் வரலக்ஷ்மி விரதம் போன்று இவர்களுக்கு 'கௌரிவிரதம்'

    நந்தி வழிபாடு

    'ஹசீகரகா’, (பச்சகரகா) 'ஊகரகா' (பூப்பல்லக்கு) என்கிற குலதெய்வ வழிபாடும் பசவனகுடி எனும் இடத்திலிருக்கும் மிகப் பெரிய நந்திக்குமுன் பல ஊர்களிலிருந்து மூட்டை மூட்டையாக பச்சை கடலைக்காய்களை குவித்து சேவிக்கும் ‘கள்ளேகாய் பரிக்ஷஷேயும் பெங்களூருவில் படு ஃபேமஸ்' ஃபெஸ்டிவல்ஸ். இப்படி ஒரு நந்தி வழிப்பாடு பெங்களூருவில் மட்டுமே நடக்கிறது.

    பெண் பார்க்கப்போகும் போது...

    பெண் பார்க்கப் போகும் சமயம், பெண் வீட்டில் பூ, பழம் வைத்துதான் தாம்பூலம் தருவார்கள். தேங்காய் கிடையாது. காய் தந்தால் பேச்சு காயாகுமாம்! பழமாகாதாம்!! தோடா!!!

    மசால்தோசை பிறந்த ஊர்!

    மசால் தோசை என்றால் அது பெங்களூருவில்தான் சாப்பிடணும். பெரிய சைஸ்தோசையை முக்கோணமாக்கி, உருகாத வெண்ணை வைத்து ஐந்து வித சட்னியுடன் பரிமாறுவாங்க பாருங்க, கண்ணுக்கும் அழகு வாய்க்கும் ருசியோ ருசி.

    தோசை போலவே அரிசியால் செய்யப்பட்ட அக்கி ரொட்டியும் இங்கே ரொம்பவும் ஃபேமஸ். காலை டிபனுக்கே அக்கி ரொட்டியை தகடு மாதிரி லேசாக தட்டுவார்கள். அதே போல் திருமணங்களில் 'சிரோட்டி’ தான் முதல் ஸ்வீட். விழாக்கள், திருமணங்களுக்குச் சென்று வந்தவர்களிடம் 'ஏன சிரோட்டி ஊட்டானா?' (என்ன சிரோட்டி சாப்பாடா) ‘ஒளிகே ஊட்டானா?’ (போளி சாப்பாடா?) என சிலாகித்து விசாரிப்பார்கள்.

    எல்லா கீரைகளையும் வேக வைத்து கடையும் பொரிக்கே சொப்பு சாரு ராகி களியும், பஸ்சாரும் (கீரை ரசம்) அவ்வளவு டேஸ்ட்டாக செய்வார்கள்.

    வெள்ளித்தம்ளரில் காபி தரும் ஹோட்டல்!

    எம்.டி.ஆர். என்கிற (மாவள்ளி டிபன் ரூம்) ஓட்டலில் நெய்யில் செய்த சுவையான டிபன் ஐட்டமும் சாப்பாடும் பெங்களூருவில் மிகப் பிரபலம். 86 வருட பழமை வாய்ந்த இந்த ஓட்டலில் இன்றுவரை வெள்ளி டம்ளரில்தான் காபி கொடுக்கிறார்கள்.

    ஹள்ளிமனே (கிராமத்து வீடு) என்கிற ஓட்டலில் "ராகி களி, கேழ்வரகு அடை, சோள ரொட்டி, பஸ்சாரு, மஸ்சொப்பு என விதவிதமான கர்நாடகாவின் கிராமத்து உணவுகளை அதே பாரம்பரிய ருசியுடன் பரிமாறுகின்றனர். மண்ணாலான ஓடு தட்டில் சாப்பாடு, மண்குவளையில் தண்ணீர் என ஓட்டலின் சுற்றுச் சூழலே ஒரு கிராமத்துக்குள் நுழைந்துவிட்ட ஃபீலிங்கை நமக்குக் கொடுத்துவிடும்.

    வெள்ளரிக்காய் பிரசாதம்

    பெங்களூருவில் வெள்ளரிக்காய் டேஸ்ட்டியாக இருக்கும். பல கோயில்களில் கண்டிப்பாக 'வெள்ளரிக்காய் கோசுமல்லி' பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    ஹேப்பி பர்த்டே

    நவம்பர் மாதம் முழுவதும் பெங்களூரு கோலாகலமாக காட்சியளிக்கும். ஏனென்றால் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதிதான் கர்நாடகாவின் 'ராஜோஸ்த்தவா' நாள், அதாவது பிறந்தநாள். ஒவ்வொரு ஏரியாவிலும் மஞ்சள் மற்றும் சிகப்பு நிறப்பூக்களால் நுழைவாயில், தோரணங்கள், இரவில் வண்ணவண்ண சீரியல் விளக்குகள், ஒயிலாட்டம், பாட்டு, கச்சேரி, தாரை, தம்பட்டம் என ஒரே கொண்டாட்டம்தான். அந்த மாதம் முழுக்க எல்லா தியேட்டர்களிலும் கன்னடப் படங்கள் தான் ஓடும். ஒலிபெருக்கிகளில் கன்னடப் பாட்டுக்கள் தூள் கிளப்பும். ஓடும் பேருந்துகள் அனைத்தும் பூ அலங்காரத்தில் 'மணப்பெண்' போல் காட்சியளிக்கும். இந்த மாதத்தில் கர்நாடகா தனி ராஜ்யமாக அறிவிக்கப்பட்டதை ஒட்டித்தான் இந்தக் கொண்டாட்டங்கள்.

    ஜில் ஊரின் பூக்கள்!

    தோட்டக்கலையில் ஆர்வமிக்கவர்கள் கன்னடர்கள். குட்டியூண்டு வீட்டிலும் பூந்தொட்டிகளில் ரோஜா, மல்லி, செம்பருத்தி என்று கட்டாயமாக பூச்செடிகளை வளர்ப்பார்கள்.

    அம்மாதான்... ஆனால் அவ்வா!

    கூட்டுக் குடும்பமாகவே இருக்க விரும்புவார்கள். அம்மாவை ‘அவ்வா’ என்றும் அப்பாவை 'அப்பாஜீ’ என்றும் மரியாதையாக அழைப்பார்கள்.

    ராஜ்குமார் பக்தர்கள்!

    இங்குள்ள பல கன்னடர்கள் நடிகர் ராஜ்குமார் பக்தர்கள். 'நம் அண்ணவரூ’ என பாசமாக அவரின் நினைவுகளை, படங்களை பற்றி பேசுவார்கள்.

    *****

    இது கதையல்ல நிஜம்

    மாலை ஆபீஸ் முடிந்து நானும் என் கணவரும் ஸ்கூட்டரில் வீடு வந்து சேர என் பெண்கள் மூவரும் ‘கேட்’டருகே நின்று வரவேற்றது அரிது ஆச்சர்யம், சரி, ஸ்கூல், காலேஜ் வேகமாக முடிந்திருக்கும், நாங்களும் வீட்டிலில்லை, சமையலறையில் புகுந்து எதையாவது கிண்டி ஒரு வழி பண்ணியிருப்பார்கள். அதை டேஸ்ட் செய்ய வாசலிலே எங்களுக்கு வரவேற்பு போல் உள்ளது என முதலில் நினைத்தேன்.

    'பரவாயில்லையே குழந்தைகள்' என நீங்கள் நினைப்பது புரிகிறது, அவர்களின் சமையல் வேலை எனக்கல்லவா தெரியும். பத்து ரூபாய் கொடுத்து ரெடிமேட் 'பாப்கார்ன்' வாங்கிக் குக்கரில் போட்டுப் படபடவென வெடித்த பாப்கார்னை ப்ளேட்டில் வைத்து எங்களுக்குக் கொடுத்து மூவரும் முகம் மலர்ந்து, சமையலில் சகலகலா வல்லிகள் போல் எங்களைப் பார்ப்பார்கள். நானும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு கிச்சனைப் பார்ப்பேன். க்ளீன் செய்பவள் நான் அல்லவா?

    என் கணவர், தூள்டா, சூப்பரா இருக்கு, இப்படித் தான் ஒவ்வொரு வேலையாகக் கத்துக்கணும் எனக் கூறி அவர்களை உற்சாகப்படுத்துவார். நான் காலையில் கிச்சனில் ஒண்டியாய் கஷ்டப்படும் பொழுது, இந்த மூன்று 'வாலு'களும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.

    இந்த வெங்காயத் தோலை புழக்கடை 'டஸ்ட் பின்’னில் போடுடா செல்லம் என என் வேலைக்கு நடுவே சின்னவளைக் கெஞ்சினால்,

    மம்மி காலேஜ் புறப்படும் பொழுது டிஸ்ட்டர்ப் செய்யாதே. உனக்கு எப்பவும் கிச்சனில் வேலைதான் எனக் கூறி கண்ணாடி முன் அரைமணி நேரம் நிற்பாள். இது இப்படி இருக்க எதுக்கு இன்னிக்கு இந்த கேட் வரவேற்பு என யோசனையுடன், சிறிது பயத்துடன் உள்ளே நுழைந்தேன்.

    என்னம்மா காலேஜ், ஸ்கூல் முடிஞ்சாச்சா, எல்லோரும் சாப்பிட்டீங்களா? டியூஷன் புறப்படலையா?

    மம்மீ, உனக்கு ஒரு கிஃப்ட் தரப் போறோம் என்றது சின்ன வாண்டு.

    கிஃப்டா, எனக்கா? இந்த மாசம் பர்த்டேயுமில்லை, மேரேஜ்டேயுமில்லை, எதுக்குடி கிஃப்ட்? பெரியவளையும், அதற்கடுத்தவளையும் சந்தேகத்தோடு பார்த்தேன். பல முறை எங்களின் 'மேரேஜ் டே' என்று இதுகள் மூன்றும் சுடிதார் வாங்கித் தரச் சொல்லி தைத்துப் போட்டுக் கொண்டு அவர்களின் 'ப்ரெண்டு'களுக்கு பார்ட்டி கொடுத்து, பணம் செலவழிப்பது போன்ற கதை நிறைய நடக்கும். எங்களுக்கு 'கிஃப்ட்' கொடுக்கிறேன் பேர்வழி என்று எங்களிடமே பணம் கறந்து தங்களுக்கு உபயோகமான, தேவையான பொருட்கள் வாங்கி பேக் செய்து எங்களுக்கு 'கிஃப்ட்' கொடுத்துப் பிறகு தாங்களே அதை உபயோகிக்கும் சாமர்த்தியசாலிகள் என் பெண்கள்.

    கண்ணை மூடிக்கச் சொல்லி டண்ட்ட்டய் என கோரஸாகக் கத்தி பிறகு ஒரு பிளாஸ்டிக் டப்பை என்னிடம் காண்பிக்க...

    என்னடி இது?

    திறந்துதான் பாரேம்மா

    இதுகள் பிளாஸ்டிக் 'பல்லி'யை என் தோளில் வைத்து நான் பயந்துக் குதித்ததை ரசித்த செல்ல ராட்சஸிகள், அந்த நாளை மறக்க முடியாது.

    ஒரு குட்டி சாக்குப் பையை நான்காக மடித்துப் போட்டு அதன் மேல் ஒரு ஹாண்ட் டவல் போர்த்தியிருந்ததை மெல்ல திறந்து பயத்துடன் பார்த்தேன், சட்டெனக் கையை எடுத்துக் கத்தினேன்.

    என்னடி இது எலிக்குட்டியா?

    Enjoying the preview?
    Page 1 of 1