About this ebook
Read more from Vidhya Subramaniam
Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Kaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Oomathai Pookkal Rating: 4 out of 5 stars4/5Kaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsThunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Agayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsVaruvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Enthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5Anandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Cauvery Karaiyil Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsUppu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsPon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsYamuna Nadhi Rating: 4 out of 5 stars4/5Vittil Poochigal Rating: 5 out of 5 stars5/5Kopura Vasal Rating: 0 out of 5 stars0 ratingsRamar Paatham Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Kaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Malargale Malarungal Rating: 5 out of 5 stars5/5
Related to Mudhal Mazhai
Related ebooks
Kutty Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 5 out of 5 stars5/5Uravu Solli Kondu... Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavarven Rating: 5 out of 5 stars5/5Shyama Rating: 4 out of 5 stars4/5Kanagamparam Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsThirisangu Sorgam Rating: 5 out of 5 stars5/5Payirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Thai Pirakkattum Rating: 0 out of 5 stars0 ratingsMayiliragu Rating: 5 out of 5 stars5/5Marakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Ranga Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsPriyamanaval Rating: 0 out of 5 stars0 ratingsVetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsSonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Kadambavana Kaadhal Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Rating: 0 out of 5 stars0 ratingsVilaimagalin Vilaiyilla Kaditham Rating: 0 out of 5 stars0 ratingsMalargale Malarungal Rating: 5 out of 5 stars5/5Marupadiyumaa? Rating: 0 out of 5 stars0 ratingsKanavan Amaivathellam Rating: 0 out of 5 stars0 ratingsUnmai Oomaiyalla Rating: 0 out of 5 stars0 ratingsOru Kurangu Ammavagirathu Rating: 0 out of 5 stars0 ratingsMegala Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsVittil Poochigal Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Mudhal Mazhai
0 ratings0 reviews
Book preview
Mudhal Mazhai - Vidhya Subramaniam
https://www.pustaka.co.in
முதல் மழை
Mudhal Mazhai
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
1
அனல்காற்று தேகத்தை வாட்டியது. சூடான காற்றை சுவாசித்ததில் நாசி எரிந்தது. குதிரைகள் வெம்மை தாங்கமுடியாமல் சோர்ந்துபோய் நின்று நின்று ரதத்தை இழுத்தன. தேரோட்டி திரும்பி ரதத்தில் அமர்ந்திருந்த மன்னன் ரோமபாதனைப் பார்த்தான்.
குதிரைகள் மிகவும் சோர்ந்துவிட்டன மன்னா. இதற்குமேல் இவற்றை துன்புறுத்தினால் அவை உயிரை விட்டுவிடும். ஏற்கனவே தாகத்தில் தவிக்கின்றன.
ஏதேனும் கிணறு கண்டால் ரதத்தை நிறுத்து. குதிரையின் தாகத்தை தணித்துக்கொண்டு செல்வோம். நமது தோல்பையிலும் நீர் காலியாகிவிட்டது.
மன்னன் உத்தரவிட, தேரோட்டி எங்கேனும் கிணறு தென்படுகிறதா என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி ரதத்தை மெதுவாக செலுத்தினான். தூரத்தில் புள்ளியாய் மனிதர்கள் சிலர் வருவது தெரிய, அவர்களை நோக்கி குதிரையை நடத்தினான். தலையில் நீர்ப்பானைகளும், தோளில் தோல்பைகளிலும் நீர் சுமந்தபடி மூச்சிரைக்க, வெம்மை தாங்கமுடியாமல் முக்கலும் முனகலுமாக வந்துகொண்டிருந்த அந்த மனிதர்கள், ரதத்தைப் பார்த்ததும் வருவது யாரெனப் புரியாமல் தயங்கி ஒதுங்கி நின்றார்கள்.
தேரோட்டி ரதத்திலிருந்து குதித்து இறங்கினான். மன்னன் ரோமபாதனை சிரம் தாழ்த்தி வணங்குங்கள். அவருக்கும் அவருடைய குதிரைக்கும் நீர் தேவைப்படுகிறது. எவரேனும் நீர் கொடுத்து அவரது பாராட்டைப் பெறுங்கள்
அந்த மனிதர்களைப் பார்த்து சத்தமாய்க் கூறினான். அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தங்கள் தண்ணீர்ப் பானையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டனர்.
"மன்னிக்கவேண்டும். பல காதங்கள் இந்த வறண்ட பூமியில் கால்கள் கொப்புளிக்க நடந்துசென்று இந்த நீரைச்சுமந்து வருகிறோம். இந்த ஒரு பானை நீருக்காக எங்கள் குடும்பங்கள் தாகத்தோடு காத்திருக்கின்றன. மன்னன் என்ற பதவியைக் காட்டி இதனைக் கேட்டுப்பெறுவது சரியல்ல. இயற்கைக்கு மன்னரென்றும் சாதாரண மனிதரென்றும் பாரபட்சமில்லை. எங்களை துன்புறுத்தாது நீங்களும் நீர் தேடிச்சென்று உங்கள் முயற்சியால் அதனை அடைவதுதான் முறை!"
மன்னரை அவமதிக்கிறாயா...? என்ன துணிச்சல்!
தேரோட்டி தன் சவுக்கை கழற்றி, பேசிய அந்த மனிதனை அடிக்கச்செல்ல மன்னன் ரோமபாதன் நிறுத்து
என்று கர்ஜித்தான். தேரோட்டி பின்வாங்கினான்.
நீங்கள் செல்லலாம்
மன்னன் மக்களைப் பார்த்து கூறினான். மன்னிக்கவேண்டும் மன்னா. உங்களுக்கு நீர் கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ளும் ஆசை எங்களுக்கிருந்தாலும் எங்கள் தேகத்தின் வலி, அதனை நிராகரிக்கச் சொல்லுகிறது. இந்த ஒரு பானை நீருக்காக அத்தனை சிரமப்பட்டிருக்கிறோம். எது ஒன்று பூமியில் குறைந்துகொண்டு வருகிறதோ அது விலைமதிப்பற்றதாகவும், மற்றவருக்கு தர இயலாததாகவும் ஆகிறது. அங்கநாட்டு மக்களுக்கு இப்போது தண்ணீர் அப்படியொரு விலைமதிப்பற்ற விஷயமாகிப் போனதற்கு காரணம் என்னவென்பதைக் கண்டறிந்து, இந்த கடும் வறட்சியைத் தீர்க்கவேண்டியது அரசனின் கடமை.
அதிகப்பிரசங்கி...! அரசனுக்கே அறிவுரை சொல்ல வந்துவிட்டாயா?
தேரோட்டி மீண்டும் சாட்டையை சொடுக்கியபடி பாய, மன்னன் தன் சிவந்த விழிகளால் அவனை அடக்கினான்.
சென்று வாருங்கள்
பானை சுமந்திருந்த மக்களுக்கு விடைகொடுத்தான்.
தலையில் கனமிருப்பதால் பணிய முடியவில்லை. மன்னிக்கவேண்டும் மன்னா
அவர்கள் நிமிர்ந்து நடந்துசென்றார்கள்.
வருத்தமாக உள்ளது அரசே அங்கநாட்டின் மண்ணில்தான் ஈரம் குறைந்துவிட்டதென்று பார்த்தால் மக்கள் மனதிலுமல்லவா ஈரம் வற்றிவிட்டது. இல்லையென்றால் நாடாளும் மன்னனுக்கே தாகத்திற்கு தண்ணீர் தர மறுப்பார்களா?
தவறு நம்முடையதுதான் தேரோட்டி! நாட்டு மக்களின் இந்த தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க நான் என்ன வழிவகைகள் செய்தேன்…? ஒன்றுமில்லையே! பிறகெப்படி அவர்கள் என்னை மதிப்பார்கள்.
ஏன் செய்யாமல்...? நீங்களும் அங்கநாடு முழுக்க ஆங்காங்கு கிணறு குழிக்க ஏற்பாடு செய்யவில்லையா என்ன…? ஆனால் பூமியில் ஊற்று இருந்தால்தானே நீர் கிடைக்க? அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்.
உண்மைதான், ஆனால் அதேநேரம் அவர்கள் சொல்வதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. இதே அங்கநாடு, ஐந்தாறு ஆண்டுகட்கு முன்பு எவ்வளவு செழுமையாக இருந்தது! நீருக்கு குறைச்சலா? நெல்லுக்குக் குறைச்சலா? பசியோடு ஒரு புழுபூச்சிகூட இருந்ததில்லையே! எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேலென்று மரங்களும், செடிகளும், வயல்வெளிகளும் சலசலவென்று நதிகளும் வாய்க்கால்களுமாய் எவ்வளவு அழகாக இருந்தது தாசிப்பெண்களின் மினுமினுப்பான செழுமையான தேகம்போல இருந்த அந்த அழகு இப்போது எங்கே போயிற்று? கிழ உடலைப்போல தோல் சுருங்கி, வறட்சியும் மூப்பும் ஏன் அடைந்துவிட்டது? அதற்கான காரணத்தைக் கண்டறிந்து பரிகாரம் தேடுவது ஒரு அரசனின் கடமைதானே? அதைத்தானே அவர்கள் சொல்லிச்சென்றார்கள் சரி புறப்படுவோம். நம்மிடம் மிச்சமிருக்கும் நீரை குதிரைக்குக் கொடு
தேரோட்டி, மன்னனின் ஆணைக்குக் கட்டுப்பட்டான். குதிரையின் தாகத்திற்கு அந்த துளி நீர் போதுமானதாயில்லை என்றாலும் கொஞ்சம் புத்துணர்ச்சி கிடைக்க குதிரை சற்று வேகமாய் ரதமிழுத்தது. அனல்காற்று அக்னியாய் முகத்தில் மோதியது. பாளம் பாளமாய் பூமி வெடித்திருந்தது. பயிர்கள் கருகிப்போயிருந்தன. மரங்கள் எல்லாம் இலையுதிர்த்திருந்தன. உழவு மாடுகளும், பறவைகளும் வழிநெடுக ஆங்காங்கே இறந்துகிடந்தன. சின்னஞ்சிறு சிசுவும் ஒரு வயதான மூதாட்டியும்கூட பஞ்சத்தால் உயிர்விட்டிருந்தனர். உறவுகள் சுற்றி நின்று கதறிக்கொண்டிருந்தன.
ரோமபாதன் கண்களை மூடிக்கொண்டான். வழிநெடுகக் கண்ட காட்சிகளில் அவன் மனம் கலங்கிப்போயிருந்தது.
சரியாகுமா...? எல்லாம் சரியாகுமா? மழை பெய்யுமா? மழை பெய்ய நான் என்ன செய்யவேண்டும்…? யார் சொல்வார்கள்? என் நாடும் மக்களும் பிழைக்க மன்னனான நான் என்ன செய்யவேண்டும்…? என் குருதி மண்ணில் வீழ்ந்தால் வானம் பெய்யுமா...? நான் தயார். எதற்கும் தயார்…! என் நாடு மீண்டும் பசுமையும் செழுமையும் பெற என் உயிரையும் கொடுக்கத் தயார்.
ரோமபாதன் உள்ளுக்குள் கதறினான். யார் காலில் போய் விழுவதென்று புரியாமல் தவித்தான். ரதம் சம்பாபுரியை அடைந்து அரண்மனையில் நின்றது. பஞ்சமும், வறட்சியும் அரண்மனையையும் விட்டுவைக்கவில்லை. நந்தவனத்தின் மலர்ச்செடிகளும் கொடிகளும் நீரின்றி வாடி வதங்கியிருந்தன. நீரூற்றுக்கள் நீரின்றிக் காய்ந்து போயிருந்தன. அரண்மனை காரியங்களுக்கான தண்ணீரே பல நூறு காதங்களுக்கப்பாலிருந்து வீரர்கள் அரண்மனை வண்டிகளில் மாற்றி மாற்றி தண்ணீர்கொண்டு வந்துகொண்டிருந்தனர். அத்யாவசியத் தேவைகளுக்கே அந்நீர் போதுமானதாக இருந்ததால் அலங்காரத் தேவைகள் எதற்கும் உபயோகிக்க முடியவில்லை. முக்கியமாய் நந்தவனம்! பூக்களில்லாத நந்தவனம் அங்கநாட்டின் வறட்சிக்கு சான்றாக விளங்கியது. இன்னும் நூறு ஆட்களை அனுப்பி, தண்ணீர்கொண்டு வரச்செய்தால் நந்தவனத்தையும் கவனிக்கலாம் அல்லவா?
மனைவி கேட்டபோது ரோமபாதன் மறுத்துவிட்டான்.
"குடிமக்கள் அனைவரது தாகத்தையும் தணிக்கவேண்டிய கடமை நமக்குள்ளது. ஆயினும் அங்கநாட்டின் வறட்சி என் சக்திக்கு மீறிய விஷயமாகிவிட்டதால் என்னால் ஒன்றும் செய்யமுடியாமல் அனைவரது கஷ்டங்களையும் மெளனமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பசுக்களும், பட்சிகளும் கூட்டம் கூட்டமாய் மரிக்கின்றன. மனிதர்களும்கூட மரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலை இதுபோலவே நீடித்தால் அங்கநாடு மயானமாகும் நாள் விரைவில் வந்துவிடும். புல் பூண்டுகூட உயிர்வாழத் தகுதியற்ற நிலமாய் நம் அங்கதேசம் மாறிவிடும். ஒரு நாட்டின் மன்னன் அம்மக்களுக்கு தெய்வத்திற்கு சமானமென்கின்றன தர்மநூல்கள். ஆனால் நானோ சக்தியிழந்த தெய்வமாய் நிற்கிறேன். இந்நிலையில் நாம்
